உஜிலா தேவிக்கு உய்யலாலா!

Posted on

வடிவேலு ” நல்லாத்தானே போயிட்டிருந்தது”ம்பாரே அந்த நிலைமை நமக்கும் வந்துருச்சுங்கண்ணா. உஜிலாதேவியை அப்பப்போ கண்டுக்கறது வழக்கம். ஆனால் என்ன ஆச்சோ ஏதாச்சோ தெரியலை இந்த கழுகு மூக்குக்கு பா.ஜ.க வாசம்லாம் வீச ஆரம்பிச்சது. நாமும் ஒன்னு ரெண்டு தபா கவுரதையா சொல்லி பார்த்தோம் கேட்கிறாப்ல இல்லை.

கேட்காட்டி ஓஞ்சுபோவட்டும் . நாம போடற பதிவை எடுத்து சொந்த ப்ளாக்ல வச்சு ஜல் ஜக் பார்ட்டிங்களை விட்டு வையறதெல்லாம் கூட நடந்தது. நாம பட்ட பாட்டுக்கு மானம்,ஈனம் ,சூடு,சுரணை எல்லாத்தையுமே விட்டுத்தொலைச்சுட்டு ..

ஆத்தா எதுனா கிடைச்சா அதை உன் பிரசாதமா ஏத்துக்கறேன். (செருப்படியானாலும் சரி) எதுனா பூட்சா உனக்கான காணிக்கைனு நினைச்சுக்கறேன்னுட்டு காலத்தை ஓட்டிக்கினு கீறோம்.

நம்ம பாய்ண்டு ஒன்னுதான். எல்லா உசுருக்கும் ஆதி அமீபா. ஒரே உசுரு. அந்த ஒரு உசுருலருந்துதான் அல்லாரும் வந்தோம்.

எல்லா உசுரும் மறுபடி ஒன்னு சேரத்தான் துடிக்குது. அதுக்கு இந்த உடம்பு தான் தடைனு மயங்கி “கொல்ல அ கொல்லப்பட துடிக்குது. (சைக்காலஜியே ஒத்துக்கிட்ட சமாசாரம் இது) இது செக்ஸ்ல டெம்ப்ரரியாவாச்சும் சாத்தியம். தியானத்துல பர்மணன்டாவே சாத்தியம்னு பெரியவுக சொல்றாய்ங்க.

மன்சன் இந்த படைப்புக்கு தன்னை மையமா வச்சு பார்க்கிறதாலதான் இத்தனை சிக்கல். நம்ம உஜிலா தேவி தன்னை மையமா வச்சு எழுதிக்குவிச்சாலும் பரவால்லை. நாலு பேரோட எழுத்தைப்போல கிடக்குது போன்னு விட்டுரலாம்.

ஆனால் பாவம் இந்து மதத்தை மையமா வச்சு உலகமதங்களையெல்லாம் பார்க்கிறாரு. தன்னை மையமா வச்சு வாழற டஃபேதார் கூட ட்யூட்டி நேரத்துல “ஐயாவை” உலகத்தின் மையமா வச்சு பிஹேவ் பண்றான்.

அந்த இங்கிதம் கூட உஜிலாதேவிக்கு இல்லை. நை நைன்னு மதங்களை ஒப்பிடறதே வேலையா போச்சு. ஊசி ஊசிதான் .கடப்பாறை கடப்பாறைதான். ஊசியால ஆகிற வேலை கடப்பாறையால ஆகுமா? ( நான் இந்துமதத்தை சொல்லலிங்கண்ணா-அவிக தானே பாபர் மசூதியை இடிக்க கூட்டமா கொண்டு போனாய்ங்க). இந்த ஒப்பீடுல்லாம் வேண்டாத வேலையில்லையா?

நாம தண்ணிங்கறோம் தெலுங்குக்காரன் நீள்ளுங்கறான், இந்திக்காரன் பானிங்கறான். ( நன்றி:ராமகிருஷ்ண பரமஹம்சர்) தாளி இதுல ஒப்பீடு என்ன வேண்டி கிடக்கு.

ஒரு பதிவுல காந்தி இந்து சிறுவனை பகவத் கீதை படிக்கசொன்னாருன்னு சொல்றாரு. இன்னொரு பதிவுல இந்து சிறுவர்கள் பைபிள் படிக்கனும்னு இவரு சொல்றாரு. கீதையோட லட்சணம் என்னனு ஒரு தொடரே எழுதி கிழி கிழினு கிழிச்சு தொங்கவிட்டாச்சு. முடிஞ்சா அதை தைக்கப்பார்க்கனும்.

நம்முதே நாறுது. இதுல அடுத்தவன் கட்கத்தை மோந்து பார்க்கவேண்டிய அவசியம் என்ன? ஒரு தாட்டி ஏழை பணக்காரனாயிட்டா உலகமே இயங்காதுன்னு உளறிக்கொட்டினாரு.

இன்னொரு நாள் ஆத்திகம் – நாத்திகம்னு ஆரம்பிக்கிறாரு. நாத்திகர்கள் எல்லாம் அபிஷ்டுக்கள் போலவும் -நாஸ்திகர்கள் பெரிய மனசுக்காரர்கள் போலவும் //ஆத்திகர்கள் நாத்திகத்தை வெறுத்துயிருந்தால் இவைகளை பதிவு செய்யாமலே விட்டுயிருக்கலாம்.//ங்கறாரு.

அடங்கொய்யால நாத்திகனை விடு. வைணவம் -சைவம்னு கொலைவெறியோட திரிஞ்ச காலம்லாம் என்ன ஆச்சு? பௌத்தர்களையும்,ஜெயினர்களையும் ஒரு பாடா படுத்தினிங்க. உசுரோட வச்சு எரிச்ச சம்பவம்லாம் உண்டே. இந்த இழவை எல்லாம் கூட கண்டும் காணாம இருந்துட்டன்.

இன்னைக்குதீர்ப்பு நாளுக்கு போயிட்டாரு.

//ஆனால் இந்த விஷயத்தில் இஸ்லாம் கிறிஸ்தவ சமய கொள்கைகள் அறிவு பூர்வமானது என்று சொல்லி விட முடியாது. //

அறிவுப்பூர்வமானதானு ஒரு ஸ்கேன் ஓடவிட்டா இந்துமதத்துல ஒரு துணுக்கு கூட தேறாதுங்கோ. அறிவுக்கு அப்பாற்பட்டதை சொல்றதுதான் மதம்.

//அல்லாவை ஏற்றவனுக்கு கல்லறை சுகமானது. ஏற்காதவனுக்கு துக்கமானது என்றால் பிறந்து மூன்று வருடத்தில் அல்லாவையோ ஏசுவையோ ஏன் சிவபெருமானையே கூட யார் என்று தெரியாமல் தான் எதற்காக பிறந்தோம் என்று உணராமரல் செத்து போகும் குழந்தை இறுதி தீர்ப்பு நாள் வரை கல்லறைக்குள் எப்படியிருக்கும்?//

அடடா.. இந்த நாலணா லாஜிக்கை பதிணென் புராணங்களுக்கு அப்ளை பண்ணி பார்க்கவேண்டியதுதானே.

//மறுபிறப்பை நிறுபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லையே தவிர புணர் ஜென்மம் என்பதை அனுபவபூர்வமாக நம்ப கூடியதாக இருக்கிறது.//

அது சரி மாமியார் உடைச்சா மண்குடம். மருமக உடைச்சா பொன் குடம் தானே

// மறு பிறப்பிற்க்கு எப்படி ஆதாரம் இல்லையோ அதே போல இறுதி தீர்ப்பு நாளை நம்புவதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.//

இந்து மதத்துல பிரளயம்னு சொல்றிங்க. இஸ்லாம்ல கியாமத் நாள்னு சொல்றாய்ங்க. பவிஷ்ய புராணத்துல சொல்லப்பட்டுள்ள பிரளயகால லட்சணங்களும் – கியாமத் நாளுக்கான லட்சணங்களா இஸ்லாம் சொல்ற லட்சணங்களும் அக்கா தங்கச்சி மாதிரி ஒரே சாடையில இருக்கு. அல்லாஹ்விற்கு பொறுமை இருந்து அவர் தீர்ப்பு சொன்ன சொல்லிட்டு போவட்டுமே உங்களுக்கு எங்கே வலிக்குது.

உங்க ( நம்ம) சாமியெல்லாம் டாஸ்மாக் கடையில குடிமகன்கள் மாதிரி சோமரசம் அடிச்சுக்கிட்டு ரம்பா,ஊர்வசி மேனகாவோட அஜால் குஜால் பண்ணிக்கிட்டு ஜல்சாவா இருந்துருவாய்ங்க போல.

ஆகிற வேலைய பாருங்க குருஜி.. மொதல்ல நம்ம வீட்டை சுத்தம் பண்ணுவம். இதான் கடேசி மறுப்பு. இதுக்கு மேலயும் மாற்றம் வரலைன்னா ஏமாற்றம் எனக்கில்லை. எதையோ எதிர்பார்த்து அலப்பறை பண்ற உங்களுக்குத்தேன் ஏமாற்றம்.

அப்பாறம் உங்க இஷ்டம். ரெம்ப கஷ்டம். எனக்கில்லை ஒரு நஷ்டம்.

Advertisements

57 thoughts on “உஜிலா தேவிக்கு உய்யலாலா!

  yoghi said:
  May 1, 2011 at 9:54 pm

  பொதுவா எல்லா மனிதர்கலுக்குமெ தான் பிரந்த பின்பர்ருகிர மதம் தான் உன்மையானது பிர மதங்கள் டூப்பு, வேஷ்ட் என்ர மனனிலை உல்லூர இருக்கும் (எனக்கும் இருந்தது)

  தன்னைத்தானெ மகான் என்று நினைப்பவர்கள் ஓரலவு விள்க்கம் பெற்றவர்கள்,இரையை உனர்ந்த்தவர்கள்ுக்கு எல்லா மதஙகலும் நன்மையை நாடி தீமைஐ வில்க்குகின்ரன என்ர உன்மையையும் புரிந்துகொன்ட விடுவாரகல்

  பிரகு மத துவேசம் அடுத்த மத்தவர்கலை இழிவு படுத்துவது போன்ர செயல்கலில் ஆர்வம் இருக்கது

  ராமானந்த்த்குருஜியின் எழுத்துக்கலுக்கு நான் ரசிகன் என்ரமுரையில் சிலதடவை பின்னூட்டங்கள் வழியாக குரிப்பிட முயச்சிதுள்ளேன்

  ஆனால் என்னுடைய பின்னூட்டங்கள் நிராகரிக்கப்பட்டுவிடும் தப்பிதவரி பிரசுரம் ஆகிவிட்டால் அனானிமச் என்ட்ர பெயரில் பதில் விமர்சனம் போட்டூ பின்னிடுவாங்க‌

  அதனால நான் பெரும்பாலும் அந்த்த பேட்டைக்கு போரதை தவிர்த்துக்கொன்டேன்

  குருஜி இன்னும் பக்குவப்படனும்////

  suppersyed said:
  May 1, 2011 at 10:11 pm

  இந்த மேட்டர் சம்பந்தமா ஒரு நபிகல் நாயகம் வரலாரு இருக்கு

  தல சரின்னு சொன்னா நாலைக்கு போடுரென்

   S Murugesan said:
   May 2, 2011 at 6:39 am

   சூப்பர் சையத்,
   தாராளமா போடுங்க..

  டவுசர் பாண்டி said:
  May 2, 2011 at 2:13 am

  ஹலோ மைக் டெஸ்ட்டிங் ஹலோ,
  உசிலான்னே, இங்கருந்து மைக்ல பேசுனா ஒங்களுக்கு கேக்குமான்னே. என்னமோ போங்க.

  உசிலா பார்ட்டிக்கு நாலு நல்லது பொல்லது சொல்லி அர்ச்சனை தட்டோட கமென்ட் போட்டா பேமானி பப்ளிஷ் பண்ண மாட்டுக்காறு. அவ்ருக்கு நல்லா சால்ரா போட்டா மட்டுந்தேன் பப்ளிஷ் பண்றாரு. ஒன்லி ஜால்ரா கோஷ்டீஸ் ஆர் அல்லோட்.

  ஒன்ன மாறி நல்லது கெட்டதுகள ஜீரணிக்கிற பக்குவம் அவ்ருக்கு இல்ல. எதுனாச்சி உண்மைய சொன்னாக்கா அவிகலே அந்நியனா (அனானிமஸ்) மாறி பேசுவாகலாம். நமக்கு ஒன்னுன்தெரியாதாம். நம்ம வாய்ல வெரல வச்சிக்கினு கமென்ட் போட்டுக்கினு இருக்கோம்னு அவிக பீல் பண்றாக.

  யோகின்னு (நம்ம யோகி இல்லீங்கோ) பேர முன்னக்கட்டி சேத்துக்குறவன் மொதல்ல யோக்கியனா இருக்கணும். பக்கம் பக்கமா கத எழுதுறது பெருசு கடியாது. சொல்ல வந்த மேட்டர போட்டு ஒடைக்கணும் மாமு. அதுக்கெல்லாம் தில்லு வேணும். போன் நம்பர் குடுக்குறது பெருசு கடியாது. அடிச்சி பேசுனா பதிலுக்கு பதில் பேசணும். இல்லாங்காட்டி இந்த மாறி மதம் மேட்டருக்குள்ள எண்டராக கூடாது உசிலான்னே.

  டவுசர் பாண்டி said:
  May 2, 2011 at 2:23 am

  இதே மாறி இன்னொரு பார்ட்டி போன வருசத்துல ஒருதாட்டி நடந்தது. அவிக பேரு சோக்காருக்கும். ஸ்வாமி ஓம்கார். இந்த நைனா அதுக்கு மேல. சரி போய்த்தொலையட்டும். காவிய கேட்டும்போழுதே மனுஷனுக்கு அம்புட்டு ஆசா பாசங்கள்ளருந்து ரிலீப் ஆகணும். ஆனா இந்த பேமானிங்க இன்னாடான்னா நல்லா சோக்கா நித்யானந்தன்னே மாறி போஸ் குடுத்துக்குனு ஓவரா டகால்டி வேல காட்ராங்கோ. இவிகல்லாம் வவுத்துக்கு என்ன சாப்புடுராங்கன்னு தெரிஞ்சிக்க ஆசயாகீது. மண்டைல ஒரு பு…………..யும் (புதையலும்நு சொன்னேன்) இல்ல.

  swami said:
  May 2, 2011 at 2:41 am

  உஜிலதேவிக்கு போனா ஒரு விட்டலச்சர்யா படம் பார்த்த உணர்வு எனக்கு ஏற்படும். இவருக்கு அதீதமான கற்பனைகள், நிறைவேறாத ஆசைகள் எல்லாம் இருக்கு. அதோட வடிக்கால் தான் இந்த ப்ளாக்.

  டவுசர் பாண்டி said:
  May 2, 2011 at 2:55 am

  இந்த மாறி தேனா ஊனாக்கள் (தே for தேவி, ஊ for உசிலா) காவியை உடுத்த ஆரம்பித்திருப்பதால்தான் மதம் இவுனுக வாயில சிக்கி சீரழிஞ்சி சின்னா பின்னமாயட்டு இருக்கு. கெட்டுறது காவி, பண்றது புல்லா காவாளித்தனம். காவிக்குள்ள அம்புட்டு ஆசாபாசங்களையும் மூடி வெச்சிக்கினு பிலிம் காட்டிட்டு அலைரானுகோ. இதெல்லாம் ஒரு பொயப்பு. இதுக்கு பேசாம………….?

  selvam said:
  May 2, 2011 at 3:48 am

  ஹலோ அனுபவ ஜோதிடர் நீங்கள் கிறிஸ்துவர அல்லது முஸ்லிமா என்று பகிரங்கமாவே சொல்லுங்கள் உங்கள் மதத்தை பற்றியும் நான் கூறுவது இந்துமதத்தை மட்டும் அவர் என்றுமே குறை கூறியது கிடையாது அப்படி என்றால் தாங்கள் செய்துவரும் ஜோதிடமும் முட்டாள் தனமானது தானே? இதுவும் இந்து மதத்தை சார்ந்தது தானே அப்படி என்றால் நீங்கள் இதுவரை ஜோதிட ரீதியான பதிவு எழுதிவருகிர்கள் அப்படி என்றால் அனைத்து பதிவுகளும் முட்டாள் தனமான பதிவுதனா ? பதில் வரும் என்று நினைக்கிறேன்

   chittoor.S.Murugesan said:
   May 2, 2011 at 8:48 pm

   செல்வம்,
   தெலுங்குல மதம்ங்கற வார்த்தைக்கு கொள்கைன்னு கூட ஒரு அர்த்தம் இருக்கு. எனி ஹவ் நீங்க கேட்ட கேள்விக்கு பதில் என் தாயும் தந்தையும் இந்துக்களாக அமைந்துவிட்டதால் நானும் இந்து என்று சமூகம் நினைத்தது. ஆனால் நான் என் சாதனைகளின் பலனாய் நவ இந்துவாக பிறந்தேன். (த்விஜ)

  Mani said:
  May 2, 2011 at 4:47 am

  வாங்க டவுசரு, உஜிலாதேவி தளம் கற்பனையோ, மதம்பற்றியதோ எப்படியோ இருந்துட்டு போவுது. மதம் பற்றிய அவருடைய கருத்துகளை அவருடைய தளத்தில் வெளியிடுவது தவறு என்று நாம் ஏன் சொல்ல வேண்டும்.

  நாம் நமது தளத்தில் ஜோதிடம், குண்டலினி பத்தியெல்லாம் கதைவிடுறதா யாராச்சும் சொன்னா நீ சும்மாயிருப்பியா. டவுசர தூக்கி மாட்டிகிட்டு கொதறிடமாட்ட.

  அவருகிட்ட கமெண்ட் போட்டா பதில் இல்லன்னு சவுண்ட் உடுறியே உன்கிட்ட நான் சில விஷயங்களை கேட்டு கமென்ட் போட்டப்ப ஸ்பீக்கர ஆப் பன்னி வச்சிட்டு வாயே தொறக்கல. முதல்ல நம்ம முதுகுல இருக்குற அழுக்கு போறதுக்கு வழிய பார்ப்போம் அப்புறம் அங்க நாத்தம் இங்க நாத்தம்ன்னு சொல்லலாம்.

   கிருமி said:
   May 2, 2011 at 5:13 am

   //உஜிலாதேவி தளம் கற்பனையோ, மதம்பற்றியதோ எப்படியோ இருந்துட்டு போவுது. மதம் பற்றிய அவருடைய கருத்துகளை அவருடைய தளத்தில் வெளியிடுவது தவறு என்று நாம் ஏன் சொல்ல வேண்டும்.//

   கரெக்ட்.

  முருகேசன் சார் வணக்கம்,
  யோகி மற்றும் டவுசர் பாண்டி தோழர்களுக்கும் வணக்கம் …

  நீங்கள் எல்லாம் தொலைக்காட்சியே பார்ப்பதில்லையா ? இன்று நாட்டில்
  100 சேனல்கள் இருக்கின்றன என்றால் அதில் 25 சேனல்கள் கிருத்துவத்தையும், முகலாயத்தையும் பரப்புவதாகத் தானே இருக்கின்றன …

  நம்மை அழிக்க வருபவர்களிடத்திலிருந்து நம்மை நாம் தற்காத்துக்
  கொள்வது ஒன்றும் தவறில்லையே ?

  என் தாயை என் தாய் என்று சொல்லவும், என் தேசத்தை என் தேசம் என்று சொல்லவும் எப்படி நமக்கு உரிமையும் உணர்வும் இருக்க வேண்டுமோ ?
  அதுபோல நாம் பின்பற்றும் மதத்தை ( உண்மையில் சமய ஒழுக்கங்களை ) போற்றவும் வேண்டும் …

  அதற்காக நான் பிற மதத்தை தூற்றுங்கள் என்றோ விமரிசியுங்கள்
  என்றோ சொல்லவில்லை …

  அதே சமயம் நமது மதத்தை ( நமது தாய் போன்ற ) தூற்றுபவர்களுக்கு அல்லது விமரிசிப்பவர்களுக்கு பதில் ( பதிலடி ) சொல்லக் கூடியவர்கள் ஒரு சிலரே இருக்கிறார்கள் – ( பல மடாதிபதிகள் வாயே திறப்பதில்லை )

  அந்த வகையில் உஜிலாதேவி ( குருஜி ) தனது பணியை செய்கிறது ..
  அதில் ஒன்றும் தவறில்லையே ?

  இந்து மதம் தன்னகத்தே எல்லா மதங்களையும் உள்ளடக்கியுள்ளது…
  அது யாரையும் எதிர்ப்பததில்லை ( ஆனால் எல்லா மதங்களும் இந்து
  மதத்தையே காயப்படுத்துகிறது )

  இந்தியாவிலே ஒரு கிருத்துவ சகோதரருக்கோ அல்லது முகலாய சகோதரருக்கோ தரப்பட்டுள்ள உரிமைகள் + சலுகைகள் ( ஆட்சியில் பங்கு )
  போல அரபு நாடுகளிலோ வேறு எங்கேனுமோ காட்ட முடியுமா ?

  மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்பினால் எப்படி இருக்குமோ ?
  அப்படித்தான் இருக்கிறது … இந்த பதிவு…

  உஜிலாதேவியில் சொல்லப்படும் கருத்துகள் உண்மைக்கு விரோதமானவை என்றால் யாவரும் விமரிசிக்கலாம் ( நானும் பலமுறை தவறுகளை சுட்டிக் காட்டியுள்ளேன் ) இல்லையேல் அவரை பாராட்டாவிட்டாலும் உதாசீனப் படுத்தக் கூடாது என்பது எனது கருத்து.

  உங்களுக்கு தெரியாதது இல்லை …
  கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் படியுங்கள்…
  மேலும் இந்து மதமும் இன்னபிற மதங்களும் தோன்றிய கால ஆராய்ச்சியை படியுங்கள் … உண்மை விளங்கும்.

  என் கருத்துகள் உங்களை காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும் தோழர்களே.

  நன்றி.. அன்பே சிவம் !

   Mani said:
   May 2, 2011 at 6:05 am

   திரு. சிவ. சி. மா. ஜானகிராமன் மிகச் சரியாக சொன்னீர்கள். இந்து மதத்தில் மட்டும்தான் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அந்த சுதந்திரத்தை இந்து மதம் நமக்கும் பிற மதத்தவர்க்கும் வழங்கியுள்ளது. இல்லையில்லை இந்துக்கள் தங்களுக்குள் ஒற்றுமையில்லாதவர்களாக இருப்பதால் தான் இவ்வாறு தரம் தாழ்ந்து போகின்றனர். மற்ற மதத்தவர்கள் அப்படி இருப்பதில்லை. தங்கள் மதத்தை பற்றி மற்றவர்கள் பேசினால் காயடித்துவிடுவார்கள். அவர்களது ஒற்றுமை அப்படி இங்குள்ள சில அல்லகைகள் நம்மை நம் மதத்தை சீர்செய்வதை விடுத்து நம்மை நாமே இழிவாக பேசுவதன் மூலம் தங்கள் பகுத்தறிவு திறமையை காட்டுகின்றனர். இவர்களுக்கு வீரம் இருந்தால் எங்கே மற்ற மதத்தை தொடர்ந்து விமச்சிக்கட்டும் பார்க்கலாம் எப்போதாவது பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு நானும் சொன்னேன் என்று கதைவிடுவார்கள்.

   இந்து மதத்தைப் பற்றி உயர்வாக பேசினால் அவன் பா.ஜ.க வாம் ஏன் பா.ஜ.க பேசுவதால் தான் நாம் ஓரளவேனும் விழிப்புடன் இருக்க முடிகிறது. இதுவும் கூடாது என்று காங்கிரஸ் போன்று குழிபறிப்பதால் தான் இன்று நம் சொந்த நாட்டில் பிறமதத்தவருக்கு விருந்து வைத்துவிட்டு சலுகைகளை கொடுத்துவிட்டு நாம் பட்டினிகிடக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது.

   மற்ற நாட்டில் போய் இவர்கள் உரிமை அது இது என்று வாயை திறக்க முடியுமா. முதலில் நம் மதத்தில் குறைகள் என்றால் என்ன செய்ய வேண்டும். நம்மை நாம் சீர்படுத்திக்கொள்ள வேண்டும் இயலாதவர்களுக்கு ஒடுக்கப்பட்டவர்களுக்கு இவர்கள் என்ன செய்துவிட்டார்கள். இந்து மதத்தை ஒருங்கிணைக்க என்ன படியளந்துள்ளார்கள் என்று எண்ணி பார்க்க வேண்டும். அதை விடுத்துவிட்டு குற்றம் சொல்வது என்பது யாரும் எளிது. இன்னும் வரும்.

   S Murugesan said:
   May 2, 2011 at 7:31 am

   அண்ணே அல்லாருக்கும் வணக்கம்ணே,
   இந்த சாந்தி காலத்துலயே தாளி ஏழை பாழைங்க ஒரு நாளை ஓட்டறதுக்குள்ள டங்குவார் அறுந்து போகுது.

   இதுல இந்த வில்லங்கம்லாம் எதுக்குன்னுட்டு நாம கேட்டோம்.

   நம்ம அக்கறைய -சின்சியாரிட்டிய புரிஞ்சிக்கிட்டவங்களுக்கு நன்றி.

   மொதல்ல நான் என் ஊட்டு கக்கூஸை கழுவி சுத்தமா வச்சிக்கனும். அதைத்தேன் பகவத்கீதை ஒரு உட்டாலக்கடினு தொடராவே போட்டிருக்கேன்.

   அதை படிச்சுட்டு அப்பாறமும் கேள்வி கீள்வி இருந்தா கேட்கலாம்.

   ஆஸ்திகம் – நாஸ்திகமே ஒன்னுதான்னு டிக்ளேர் பண்ண மறை கழன்ற கேஸு நாம .

   இவிக என்னடான்னா இன்னமும் அந்த கால குமுதம் வாசகர்கள் மாதிரி மதங்களுக்கிடையிலான ஆறு வித்யாசங்களை வச்சு ஜல்லியடிச்சுட்டிருக்காய்ங்க.

   ப.கீ.உ தொடருக்கான தொடுப்பு கீழே :

   http://kavithai07.blogspot.com/2010/08/blog-post_25.html

  //நாம தண்ணிங்கறோம் தெலுங்குக்காரன் நீள்ளுங்கறான், இந்திக்காரன் பானிங்கறான். ( நன்றி:ராமகிருஷ்ண பரமஹம்சர்) தாளி இதுல ஒப்பீடு என்ன வேண்டி கிடக்கு.//

  🙂

  //நம்முதே நாறுது. இதுல அடுத்தவன் கட்கத்தை மோந்து பார்க்கவேண்டிய அவசியம் என்ன? ஒரு தாட்டி ஏழை பணக்காரனாயிட்டா உலகமே இயங்காதுன்னு உளறிக்கொட்டினாரு.//

  🙂

  தல…மதம் பற்றிய ஒப்பிட்டுக்கு இதை விட வேறு சரியான உதாரணம் காட்ட முடியாது….

  பகவத் கீதை யின் சார அம்சம் என்ன ? [பகவத் கீதை இந்து மதத்திற்கு சொந்தம் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல ]

  எது அழிவில்லாததோ அது தான் நீ 🙂

  உலக அழகி என்பதால் அவர்கள் மலம் ஒன்றும் மணப்பதில்லை….

  தன் மதம் அழகு என்பதும் ஏறக்குறைய இது போல தான் 🙂

  அழியாதது ….நிலையானது …சாஸ்வதமானது எதுவோ …அதுதான் நீயும் நானும் 🙂
  மதம் …கடவுள் அனைவரும் ஒருநாள் அழிவர் 🙂

  Name said:
  May 2, 2011 at 7:52 am

  கூட்டு வன்புணர்வின் போதும், கல்லால் அடித்துக் கொல்லும் போதும், கழுத்தை அறுத்துக் கொல்லும் போதும் அல்லாஹு அக்பர் என்று கத்துகிறார்களே அதன் வரலாறு.. வேண்டாம் அர்த்தம் மட்டும் என்ன என்று சூப்பர் சயீத் அண்ணன் சொல்ல வேண்டும்.

   S Murugesan said:
   May 2, 2011 at 8:52 am

   Name !
   உங்க அஜெண்டாதான் என்ன? உஜிலாதேவிய கேட்டு சொல்லுங்க. இன்னொரு தாட்டி ரோசனை பண்ணி சொல்லுங்க உங்க கமெண்டை பப்ளிஷ் பண்ணவா? முதுகு தாங்குமா?

    Name said:
    May 2, 2011 at 3:00 pm

    நம்முளுது சாதாரண கேள்வி முருகேசண்ணே. ஒரு 5 வயசு பையன் கேக்கறதா வச்சிக்குங்க. நம்ம வீட்டு சாக்கடைய குத்தலன்றதுக்காக பொண்டாட்டி கைய வெட்டுன்னு உங்க உடன்பிறப்பும் பக்கத்துக்கு வீட்டுகாரனும் சொன்னா என்ன செய்வீங்க? அப்புறம் இந்த மாதிரி கத்தறது பின்னால இருக்கற உளவியல் எல்லாம் உங்கள மாதிரி இருக்கற பெரியவங்க ரோசன பண்ணி ஒரு பதிவு போட்டுட்டா நாங்க பதில் பேசவா போறோம். அஜெண்டா உஜிலான்னு பெரிய வார்த்தை எல்லாம் எதுக்குன்னா?

    S Murugesan said:
    May 2, 2011 at 3:16 pm

    Name!
    முதல்ல உங்க நேம் என்னன்னு சொல்லாம கமெண்ட் போடற நிலைமை ஏன் வந்ததுன்னு ரோசிச்சு பார்த்திங்களா?
    நீங்க சொல்லப்போற மேட்டர் நியாயமானதுல்லனு உங்க மனசுக்கே புரியுது.

    நீங்க என்ன காரணம் சொன்னாலும் நம்முது நாறிக்கிடக்கறப்ப அடுத்தவனோடதை நோண்டற வேலை வீண்வேலைங்கறதுதான் என் கருத்து.

    அட கிறிஸ்தவத்துல எதுனா இருந்தா கிறிஸ்தவன் பார்த்துக்கட்டும் . இஸ்லாம்ல எதுனா இருந்தா முஸ்லீம் பார்த்துக்கட்டும். ந(உ)மக்கெதுக்கு

    கிருமி said:
    May 2, 2011 at 3:35 pm

    நம்மது நாறுதோ, சார்லி செண்ட் வாசனை அடிக்குதோ அது வேற விஷயம். நம்மதை மோந்து பாக்க கண்ட நாய் எல்லாம் மூக்கை நுழைக்குதே? மூக்கை நுழைக்கிறது மட்டுமில்லாம, அவன் நாத்தத்தை மறைக்க, பெரிய மயிரு மாதிரி கருத்து வேற சொல்லுதே? அந்த மூக்கையெல்லாம் பின்ன எப்டி அறுக்கறது.

    Name said:
    May 2, 2011 at 5:52 pm

    பேரில்லியான்னா விஷயம் மட்டும்தான் நிக்கும். அதான் காரணம். பக்கத்துக்கு வூட்டுக்காரன் மலத்தை கொண்டு வந்து நடு வீட்டுல வீசுனா நம்ம வூடு ஏன் நாறுதுன்னு பொண்டாட்டிகிட்ட சண்டைக்கு போவீங்களா.
    //அட கிறிஸ்தவத்துல எதுனா இருந்தா கிறிஸ்தவன் பார்த்துக்கட்டும் . இஸ்லாம்ல எதுனா இருந்தா முஸ்லீம் பார்த்துக்கட்டும். ந(உ)மக்கெதுக்கு// இத அப்படியே அங்கன சொல்வீங்களா. இல்ல அவுக அப்படிதான் இருக்காங்களா. ஒரே தமாசு போங்க.

    S Murugesan said:
    May 2, 2011 at 7:34 pm

    Oh Mr. Name !
    ஓ அவிக விக்கிரக ஆராதனை இத்யாதிய கண்டிச்சு பண்ற மத பிரச்சாரத்தை சொல்றிங்களோ? அவிகளுக்கு அப்படி செய்ய சொல்ல்ப்பட்டிருக்கு. இங்கன சொல்லப்படலையே. மேலும் இங்கே அல்லாமே சீக்ரெட்டுதானே. நம்ம ஆளே சூத்திரனா இருந்து வேதம் அவன் காதுல விழுந்துட்டா ஈயத்தை காய்ச்சி ஊத்த சொன்னவுக தானே இங்கன இருக்காய்ங்க.

  Name said:
  May 2, 2011 at 9:31 am

  //மதம் …கடவுள் அனைவரும் ஒருநாள் அழிவர்//

  மதம் அழியும்.. கடவுள் அழிவாரா ?

  தோழரே சிந்தியுங்கள் ..

  //மதம் …கடவுள் அனைவரும் ஒருநாள் அழிவர்//

  மதம் அழியும்.. கடவுள் அழிவாரா ?

  தோழரே சிந்தியுங்கள் ..

  – இது எமது கருத்து … அவசரத்தில் என்ட்டர் தட்டிட்டேன் ( எல்லாம் கரண்ட் பிராப்ளம்தாம்ப்பா )

   //ப.கீ.உ தொடருக்கான தொடுப்பு கீழே ://

   தலை இப்போ படிக்க நேரமில்லே .. படிச்சுட்டு வரேன்…

  suppersyed said:
  May 2, 2011 at 10:25 am

  நபிகள் நாயகம் அவர்களுக்கு வேதம் இறங்கி கொன்டிருந்த காலம் மெக்கா நகரில் நிறைய பேர் இஸ்லாமை ஏற்றுக்கொண்டும் பாதிபேர் இறை மறுப்பாளர்களாகவும் இருந்தனர்
  நபிகள் நாயகத்தின் தந்தையின் சகோதரரும் ( சித்தப்பா) இறை மறுப்பாளராக இருந்தார்.

  நபிகளும் தினமும் அவரை பார்த்து சத்தியமார்கத்துக்கு வந்துவிடுமாறும் இறைவனை ஏற்றுக்கொள்ளுமாறும் பல முறை கூறி வந்தார். ஆனால் அவர் (சித்தப்பா) கண்டுகொள்வதாயில்லை. ஒரு கட்டத்தில் நபிகள் மிகவும் மனவேதனையடைந்தார்.

  நமக்கு தெளிவாக தெரிகிறது மற்றும் ஊரில் உள்ள அனைத்து மக்களும் நம் இறை கொள்கையை ஏற்று சத்திய மார்க்கத்துக்கு வர்ராஙக ஆனா நமக்கு மிகவும் பாசமான பிரியமுள்ள சிற்றப்பா நம் பேச்சை கேட்டு திருந்த மாட்டேங்கறாரேனு வேதனைப்பட்டார்

  அப்போது இறைவனிடமிருந்து இருந்து ஒரு வேத வசனம் இறக்கியருளப்பட்டது. அது வருமாறு:

  நபியே ! உம்மை நான் சத்தியத்தை எடுத்துரைக்கும் எனது தூதராக மட்டுமே அனுப்பி உள்ளேன் நீர் நினைத்த மாத்திரத்தில் யாரையும் நேர்வழிக்கு திருப்ப முடியாது. நான் யாரை நாடுகிறேனோ அவர்களைத்தான் நீர் நேர்வழிப்படுதத முடியும்

  இதுல நாம புரிஞ்சுக்கவேண்டியது “யாரும் யாரையும் திருத்த முடியாது. அவிகளுக்கு கடவுள் கிருபை செய்யனும். அப்பத்தான் நாம சொல்லவர்ர மேட்டரே அவிகளுக்கு புரியும்

  பிறருக்கு நல்லதை எடுத்து சொல்றது நம்ம கடமை . அவிக திருந்தறதும் – திருந்தாததும் கடவுள் கையிலே

  வேற என்னத்த சொல்ல,,,,,,,,,,,,?

   puratchimani said:
   May 3, 2011 at 10:06 am

   //யாரும் யாரையும் திருத்த முடியாது. அவிகளுக்கு கடவுள் கிருபை செய்யனும்//
   சரியாக சொன்னீர்கள் சையத், இதை மட்டும் அனைவரும் மனதில் வைத்து அமைதியாக இருந்தால் யாருக்கும் எந்த பிரச்னையும் வராது.

  அரை வேக்காடு said:
  May 2, 2011 at 11:19 am

  //மதம் அழியும்.. கடவுள் அழிவாரா ?

  தோழரே சிந்தியுங்கள் .//

  தோழரே ….

  பிரம்மா ,விஷ்ணு ,சிவா ,இயேசு, அல்லா ,புத்தா ..இப்படி இந்த பூமியில் சொல்ல படும் அணைத்து கடவுளும் அழிவர் 🙂

  மனித மனதின் கற்பிதம் தான் கடவுள் பிம்பம்…
  கடவுள் பிம்பம் அழியும்….

  என் பொம்மை
  என் மனைவி
  என் காதலி
  என் நண்பன்
  என் வைப்பாட்டி
  என் மதம்

  என்பது போல தான் என் கடவுள் என கடவுளை தன்னுடையது என சொல்லுவது

  உண்மையில் கடவுள் பிறக்கவும் இல்லை …இறக்கவும் இல்லை …அழியவும் இல்லை…..

  தமாசு தமாசு 🙂

  – அரை வேக்காடு (எ) தனி காட்டு ராஜா

  பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி – படித்தேன் …

  ஒரு பக்கம் அவன்-அவள்-அது எழுதுகிறீர்கள் ..
  ஒரு பக்கம் நாத்திகவாதி போல இப்படி ஒரு பதிப்பு …

  இறுதியில் என்ன சொல்வது என்று தெரியவில்லை .. அதை விட சொல்வதால் பயன் ஏதும் விளையப் போவதில்லை என்பதை தங்களது ஒரு வரி
  உணர்த்துகிறது, அது,

  //ஆஸ்திகம் – நாஸ்திகமே ஒன்னுதான்னு டிக்ளேர் பண்ண
  மறை கழன்ற கேஸு நாம .//

  ஆக என்ன சொல்வது ? எழுத்து உங்க சுதந்திரம் .. ஆனா எழுத்து என்பது பதிவாகக் கூடிய விசயம் .. சோ எழுதறதுக்கு முன்னாடி யோசிங்க ..

  அவ்வளவில் அவன் மகிழ்க .. என்னும் சித்தாந்தத்தை நினைவு கூர்ந்து அமைதியாகிறேன்,

  நல்லது .. நன்றி ..

   யாரோ said:
   May 2, 2011 at 2:33 pm

   வேண்டுதல் வேண்டாமை இலன் அடி சேர்ந்தார்க்கு
   யாண்டும் இடும்பை இல

   – திருக்குறள்

   வேண்டுதல் – ஆதிக்கம்
   வேண்டாமை – நாத்திகம்

   இரண்டிற்கும் அப்பாற்பட்டவன் தான் இறைவன்

   இரண்டையும் விட்டவன் தான் அவனை (அடியை) சேர முடியும்

   அதை விட்டு விட்டு தத்துவ சிக்கல்களில் சிக்கி பெருமை இழந்து அவன் அடியை விட்டு விட வேண்டாம்

    S Murugesan said:
    May 2, 2011 at 3:21 pm

    ஜா.ராமன்!
    வேண்டுதல் வேண்டாமை எல்லாம் விட்டு தொலைங்கன்னு தானே உஜிலாவுக்கு சொன்னேன். ஓகோ இது அவருக்கான கமெண்டா .. ஓகே

  கிருமி said:
  May 2, 2011 at 12:49 pm

  ஜானகிராமன், மணி ஆகியோரின் கருத்தை ஆமோதிக்கிறேன்.
  இந்துக்களை மட்டந்தட்டி பேசறதுக்கு சில பொறம்போக்குகளும் அவங்களுக்கு ஜால்ரா அடிக்க நாத்திக போர்வைல ஒரு சில பன்னாடைகளும் இருக்காங்க. அவங்களை யாரும் கேக்கறதில்ல. கேட்டா எப்டி பதில் வரும்னு தெரியும். இந்து சமயம் பத்தி என்ன எழுதினாலும் இப்டி கன்னா பின்னான்னு எதிர்ப்பு தெரிவிச்சா எப்டி? புடிக்கலைன்னா அந்தப் பக்கம் போகாம இருக்கலாமே?

  Mani said:
  May 2, 2011 at 4:42 pm

  அண்ணே வணக்கம்ணே! முருகேசு அண்ணே! நாமல்லாம் ஒரே குருப்ன்ணே! நம்ம வேலையும் சோளியும் வேறங்கண்ணே! இதுநாள்வரை உங்க எழுத்துகளை படிச்சவங்களுக்கு உங்க எழுத்துகள் மூலமா நீங்க புரியவைக்கிறது என்னன்னு நான் புரிஞ்சுகிட்டேன்ணே! உங்க நோக்கம் புனிதமானதன்ணே! அது எங்க எல்லாருக்கும் புரியுதுண்ணே! உங்களுக்குத் தெரியாத புது விஷயமில்லை நான் சொல்லி நீங்க புரிந்து கொள்ள வேண்டிய வயதும் இல்லண்ணே! அதையெல்லாம் கடந்தவர் நீங்கள் என்று எங்களுக்கு தெரியும்ணே!.

  அண்ணே! நீங்க ஜோதிடத்தில் ஆழ்ந்த புலமையும், திறமையும் பெற்றவர் அண்ணே!. அதவிட முக்கியமா ஆன்மீகத்தில் சில பல நிலைகளை அடைந்தவர் அண்ணே!. அப்படின்னு உங்க எழுத்துகள் மூலமா நாங்க தெரிஞ்சுகிட்டோம்ணே!. ஆன்மீத்தில் உயர்நிலை அடைந்தவர்களுக்கு எல்லாமாதமும் ஒன்னுதானே அண்ணே!. ராமகிருஷ்ண பரமஹம்சர் எல்லா மதத்திலேயும் புகுந்து வெளியோ வந்து சொன்னதெல்லாம் என்னன்ணே! சிவன், ஏசு, அல்லா எல்லா கடவுளும் ஒருவரே. அததான்ணே நீங்க தண்ணிக்கு பேர தெலுங்கு இந்தில சொல்றாப்பல எல்லாரும் சொல்றாங்கண்ணே!.

  இதுல அந்த குருஜி, ஓம்காரு எல்லாம் அவங்க பேர மட்டும் சொல்லிகிட்டு திரியறாங்க. நாம எல்லாம் உண்மையை சொல்லாம உனக்கு தெரிஞ்சத மட்டும் சொல்லிகிட்டு ஊரை ஏமாத்தாத அப்படின்னு கோவப்படறோம்.

  அண்ணே! நீங்க இறைவனில் இரண்டற கலந்தவர்ண்ணே! அதனால உங்களுக்கு விஷயம் லீக்காயிடுச்சு அவங்க இன்னும் பக்குவப்படல பாதிவழி வந்ததும் அதை வைத்து வியாபாரம், விளம்பரம்ன்னு போய்கிட்டு இருக்காங்க. ஆனால் அடுத்த பிறவியில அவங்க உண்மையை தெரிஞ்சுக்குவாங்க இல்லாட்டி வந்த வழியே பின்னோக்கி போயி விலங்கா பிறக்க போறாங்க நமக்கெதுக்கன்ணே! அவங்க மேல பொல்லாப்பு.

  அண்ணே! ஆன்மீகம்ங்கறது மனிதனை அறிவில் உயர்த்தறது. எந்த நிலையிலும் கோபம் கொள்ளாமல் பொறுமையிழக்காமல் இருக்கிறது. தெரியாதவங்களுக்கு வழிகாட்டறது உதவறது. தன்னையும் இறைவனையும் உணர்ந்து இறைவனில் இரண்டற கலக்கறது. அது தான் ஆன்மீகத்தின் நோக்கமும் வழிமுறையும்ன்னு என் சிற்றறிவுக்கு எட்டியதுண்ணே!

  முதிர்ந்த ஆன்மீகவாதிக்கு இலக்கணம் மேல நான் சொன்னதும் ஒரு பாயிண்ட் தான்ணே!. நாம அத எட்டிட்டோம்னா இந்த குருஜி, ஓம்கார் எல்லாம் ஒரு விஷயமே இல்லை. அத எட்டலன்னா இன்னும் நாம ஆன்மீகத்தில் முதிர்ச்சி அடையலை. இன்னும் நாம போக வேண்டிய தூரம் நிறைய இருக்குண்ணே!.

  அதனால நான் கடைசியா உங்கள கெஞ்சி கேட்டுகிறதெல்லாம் நாம் நம்ம வேலையைப் பார்போம்ணே!. முதல்ல நாம முதிர்ச்சிஅடைவோம்ணே! பின்னர் அவங்களுக்கு எல்லாம் வழிகாட்டுவோம்ணே!. இனிமேல் நம்மை தாக்கறவங்களுக்கும், வேகாத மரமண்டைகளுக்கும் நாம புத்தி சொல்லி நம்ம நேரத்தை வீணடிக்க வேண்டாம்ணே!.

  அட வாங்கண்ணே! நாம நம்ம வழியில் (ஜோதிடம், ஆன்மீகம், பொதுத்தொண்டுன்னு) போலாம்!!

   yoghi said:
   May 2, 2011 at 6:41 pm

   திரு மனி அவர்களுடைய கருத்துக்கல மிகவும் அருமை யோசிக்க வேன்டியது

   அவர் சொன்னா மாதிரி நம்ம துரையே வேரதான்
   எதுக்கு வெலியில போர ஓனான எடுதது வேட்டிக்குல்ல விடுவானே

   நம்ம வேலைய நம்ம பார்ப்போம் தலைவா உஙகிட்ட நாங்க இன்னும் நெரைய கத்துக்கனும்
   சட்டுனு அடுத்த பதிவுக்கு வாஙக‌

   S Murugesan said:
   May 2, 2011 at 8:26 pm

   மணி !
   மணி மணியா அள்ளி கோர்த்துக்கிட்டே வந்து படக்குனு கொட்டைப்பாக்கு மாதிரி ஒரு வரிய //அண்ணே! நீங்க இறைவனில் இரண்டற கலந்தவர்ண்ணே! //போட்டுட்டிங்களே. நாம ஏதோ பக்கத்து வீட்டுக்கு போற கேபிள் ஒயர்ல குண்டூசி குத்தின கணக்கா சர்வர் டவுன் ஆன நெட் கனெக்சன் கணக்கா கதை பண்ணிக்கினு கீறோம்.

   நாம இந்த மேட்டர்ல இறங்கினது அவிகளை திருத்த இல்லிங்கண்ணா. சனத்தை திருந்தவே விடமாட்டாய்ங்களோங்கற ஆதங்கத்துலதான்.

   இன்னொரு சீக்ரெட் என்ன தெரியுமா இதுமாதிரியெல்லாம் உளறிக்கொட்டறது அவிகளுக்கே நல்லதில்லை. எப்படியும் மே3 வரை லீவுனு சொல்லியிருந்தேன்.

   லீவுல “கெட்ட ஆட்டம் ” போட்டாப்ல எடுத்துக்கங்க. லீவு முடிஞ்சுபோச்சு இனி ட்யூட்டி தேன்.ஓகேவா

    Mani said:
    May 2, 2011 at 10:30 pm

    ரொம்ப ரொம்ப நன்றிங்கண்ணே! எங்களயும் மனுசங்கன்னு மதிச்சு எங்க கோரிக்கையை ஏத்துகிட்டதுக்கு ரொம்ப நன்றிகங்ணே!

  டவுசர் பாண்டி said:
  May 2, 2011 at 5:04 pm

  உசிலான்னே எதுன்னாலும் தில்லா – நேர பேசுனீங்னா நல்லாருக்கும். 

  அடங்கொய்யால ஆர்ரா அது நமக்கு மெயிலனுப்புனது. அந்த தேனா உனாட்டருந்துதேன் வந்ததுன்னு தெரியும். டவுசர் மாட்டிக்குனுகீரதால ரவுசு உட்டு பார்க்கிறியளா? ரப்சர் ஆயிரும் ஆமா சொல்ட்டேன்

   டவுசர் பாண்டி said:
   May 3, 2011 at 2:39 am

   இன்னாங்கடா அதிசியமா கீது. நான் ரசினி தம்பியோட ஒபெநிங் சாங் மாறி கம்போஸ் பண்ணிருந்தேன். தனுஷ் சாங் மாறி ரெக்கார்ட் ஆய்ட்டு. எடைல வேற மானே தேனே பொன்மானேன்னு சந்துல சொருகி வெச்சிருந்தேன். பூதக்கன்னாடில தெரியாதுன்னு நென்ச்சேன். அம்புட்டையும் காணும். சரி இங்கருந்து சித்தூருக்கு போறதுக்குள்ள எடைல பாதி மேட்டரு பறந்திடுச்சி போல. அது வேற ஒண்ணுமில்ல. கீபோர்டுல கைய வெச்ச ஒடனே அருவி மாறி கொட்டிட்டு. மத்தபடி எனக்கும் அதுக்கும் சம்மந்தமில்லீங்கோ.

  puratchimani said:
  May 2, 2011 at 5:28 pm

  மதத்தையும் செக்ஸையும் அவனவன் வீட்டோட வச்சிக்கணும்..அதான் எல்லாருக்கும் நல்லது. இதுல என்துதான் பெருசு அவனது சின்னது அப்படின்னு சொல்ல கூடாது.. பரிசோதிச்சு பாத்தா எல்லோருக்கும் அசிங்கம்தேன்.(…. அட மதத்த பத்திதான்பா சொல்றேன்)

   S Murugesan said:
   May 2, 2011 at 7:49 pm

   புரட்சிமணி,
   நீங்க எவ்வளவோ மேலு நம்ம கொள்கை என்னன்னா மதம்ங்கறது இயற்கை கடன் மாதிரி அதை ரகசியமா -படு ரகசியமா தீர்த்துக்கனும். அதை தீர்க்காம வெளிய வர்ர சனத்தோட பேச்சு அபான வாயுவை விட மோசமா நாறும்.

    puratchimani said:
    May 3, 2011 at 10:01 am

    எல்லாருமே அப்படி நினைச்சிட்டா பிரச்சினையே இல்ல பாஸ்

  டவுசர் பாண்டி said:
  May 2, 2011 at 5:48 pm

  இன்னாங்கடா இது, ஆளாலுக்கு மதம் மதம்னு மதம் புடிச்சி அலைரீங்கோ. ஒவ்வொரு கட்கத்துலயும் ஒவ்வொரு நாத்தம் இருக்கதான் இருக்கும். அதை ஏன் மோந்துக்கிட்டு

  suppersyed said:
  May 2, 2011 at 6:20 pm

  ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு ண்ரது ரொம்ப சரியாதன் இருக்கு
  இங்கு திரு முருகேசன் அவர்கள்ோ வெரு யாருமொ இந்துக்கலையோ இந்து மதத்தையோ விமர்சிக்கவில்லை
  குருஜியின் பிர மத துவேசத்தைதான் நாகரிகமான முரையில் சுட்டிகாட்டினார்

  இதுக்கு ஏன் இவ்வாரு குதிக்கிரீர் தோழர்கலே

  இரைவன் உஙகளை நேர்வழிப்படுததட்டும்

  திரு பேரில்லாத நேம் குரிப்பிட்டதுபோல கூட்டக வன்புனர்வை இந்துக்கோயில்கலில் வேன்டுமானால் பார்திருக்கலம் மசூதியிலோ சர்ச்சிலோ அவ்வரு இல்லை
  ஒருவேலை முஷ்லிம்கல் கூட்டாக அவ்வரு செஇய்வதுபோல் கனவு கன்டுவிட்டு உலருகிராரொ என்னவோ

  ஆனா நாம மததின் பெரால் சன்டை போட தயாராக இல்லை ஏன் என்ட்ரால் நான் என் மத்த்தின் காவலன் அல்ல எல்லாம் வல்ல இரைவனே அதர்க்கு பொருப்பானவன்

  அவன் நாட்டம் இல்லாமல் எதுவும் அசையாது

  டவுசர் பாண்டி said:
  May 3, 2011 at 2:26 am

  நட்சத்திர மணி 020:12:12
  சூரியன் 018.18
  சந்திரன் 015.08
  செவ்வா 359.48
  ராகு 240.06
  குரு 358.50
  சனி 167வக்கிரம் 51
  புதன் 352.31
  கேது 240.06+180.00
  சுக்கிரன் 350.24
  இது கெரக நெல.

  நம்ம நெல செவ்வா ஆட்சி. அது போக இன்னிக்கி செவ்வா கெழம. ரத்தத்த சுன்டுற மாறி பதிவு போட்டுறாதே நைனா. மே மூணு அமாஸ வரிக்கி தானே லீவு. அமாஸ மதியம் ஒன்னு ஒன்ற வரதானே. டேட்டாவ ஏத்து நைனா.

  டவுசர் பாண்டி said:
  May 3, 2011 at 3:48 am

  இந்த பாட்ட http://www.youtube.com/watch?v=cjoYk3DUTXI&feature=related ஓயாம கேட்டு வெறுத்து போயிட்டு. சீக்கிரம் அடுத்த பதிவ அவுத்து விடு நைனா

  அரை வேக்காடு said:
  May 3, 2011 at 5:53 am

  //வேகாத மரமண்டைகளுக்கும் நாம புத்தி சொல்லி நம்ம நேரத்தை வீணடிக்க வேண்டாம்ணே!. //

  🙂

  டவுசர் பாண்டி said:
  May 3, 2011 at 7:39 am

  இன்னாங்கடா எழவு உழுந்த வூடு மாறி வெரிச்சினு கீது. சரி. ஒரு எழவு மேட்டர அவுத்து உட வேண்டியது தேன். ஒருத்தன் ஏன் அல்பாயுசுல போறான்? போன சென்மத்துல என்ன பாவம் பண்ணானோ? அப்டின்னு சொல்லுவீங்கோ. சரி அப்டின்னா இந்த பெறவில உள்ள அம்புட்டு வெறும் பாவிகளா? அப்டின்னெல்லாம் கேக்கப்படாது. சரி கதைக்கு வர்றேன்.

  ஒரு ஊருல ஒரு டவுசர் போட்ட மகராசன் இருந்தான். அவென் தன்னோட சாதகத்த தூக்கிக்கினு ஒரு சோசியக்காரன்ட்ட போனான். தன்னோட சாதகத்தா காட்டி நாநு எப்ப பணக்காரன் ஆவேன்னு கொஞ்சம் பாத்து சொல்லுங்கன்னு கேட்டான். அவனோட சாதகத்த பாத்தா சொசியக்காரரோ “இன்னும் மூணு மணி நேரத்தில் நீ இறக்கப் போகிறாய்” உனக்கு ஏன் இந்த விபரீத ஆசை? பேசாம வூடு போய் சேர் என்றார். ஒடனே டவுசர் போட்ட மகராசன் வூட்டுக்கு போய்ட்டான்.

  வூட்டுக்கு போய்க்கினு இருக்கும் போது திடீர்னு மழ பெய்ய ஆரம்பிச்சிட்டு (இத்தினுக்கும் அது வெயில் காலம்!). மின்னல் வேற அவன பளிச் பளிச்சுன்னு வளச்சி வளச்சி போட்டா எடுத்துக்கினு, பொறவு அந்த போட்டாக் காப்பிய எமதர்ம ராசாவுக்கு பேக்ஸ் பண்ணிக்கினு இருந்திச்சி. பொறவு கொஞ்ச காண்டு இடி சத்தம் கேட்டது. பொறவு காத்து சத்தம் வேற அவன் காதுக்கு ஊன்னு சங்கு ஊதுரமாரி பேதியாக்கிக்கினு இருந்திச்சி. பயத்துலயே செத்துருவோமொன்னு பயந்துக்கினு இருந்தான். இன்னா பன்னன்னு கால் போன போக்குல போய்க்கினு இருக்கச்சில அங்கன உள்ள சிவன் கோயில் ஞாபகம் வந்த ஒடனே, அங்கன போயி ஒதுங்கி நின்னுக்கிட்டான்.

  அவன் அந்தக்கோயிளுக்குள் நுழைந்த மாத்திரத்திலேயே அவனது நெஞ்சத்தில் குமுறல் ஏற்பட்டது. கண்களில் கண்ணீர் பெருகியது. ஏன்? இந்த உலகையே கட்டிக்காக்கும் ஈசனான அந்த சிவபெருமான் உறைகின்ற அந்த திருக்கோயில் யாரும் கேட்பாரற்ற நிலையில், பாழடைந்த நிலையில், முட்புதர்களும், வொவால்களும் நிறைந்திருந்தன. எந்த நேரத்துல இடிஞ்சி வுலுமோன்குற கண்டிசன்ல இருந்திச்சி. பொறவு அவனே அம்புட்டையும் கிளீன் பண்ணி புதுசாக்குற மாறி மானசீகமா கனவு கண்டுக்கினு இருந்தான். பொறவு அங்கன இருந்த சிவலிங்கத்துக்கு அபிசேகம் பண்ற மாறி தீர்க்கமா மானசீக பூஜை நடத்துனான். இதெல்லாம் சோசியக்காரன் சொன்ன மூணு மணி நேரக்கெடுவுலையே முடிஞ்சிட்டு. பொறவு கற்பனை கலைஞ்சி கண்ணத்தொறந்து பாத்தான். திடீர்னு உள்ளார இருந்து ஒரு கருநாகப்பாம்பு இவனப்பாத்து வேகமா வந்திச்சி. ஐயோ பாம்பு பாம்புன்னு அலறிக்கினு ஓடி வந்தான். அவன் வெளிய வந்த ஸ்பாட்டுலையே அந்த பாழடஞ்ச கட்டடம் இடிஞ்சி விழுந்தது. விதியை வென்றான். இன்னும் ஒரு நிமிஷம் உள்ளார இருந்திருந்தான்னா உள்ளாரையே இறந்திருப்பான். இவனோட சாவு கோயில்ல முடியனும்னு விதி. ஆனா தப்பிச்சிட்டான்.

  ஆனால் கோயில் இடிஞ்சி உளுரதுக்கு முன்னாடியே அவன வெளிய வேரட்டுனது ஆரு? அந்த சூரிய கிரகத்துக்குடைய சிவன் அல்லவா? (அவனுக்கு அஞ்சில சூரியன் ராகுவா? ) அவர் ஏன் வந்தார்? எதற்காக வந்தார்? அவனது விதியை ஏன் மாற்றினார்? தனக்கு மரணம் வரப்போகிறது என்று தெரிந்தும் கூட அதை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் அவனது சிந்தனைகள் அந்தக் கோயிலைப்பற்றியே இருந்தது. உள்ளம் உருகி, அந்த ஆண்டவன் உறையும் கோயிலுக்கு அவன் மானசீக திருப்பணி செய்தான். இப்படிப்பட்ட் நல்லேன்னாம், உண்மையான பக்தி, இறை தொண்டு யாருக்கு வரும்? ஒங்களுக்கு வருமா? தெரில! எனக்கு? வரும் ஆனா வராது!

  எண்ணத்தால் அவன் உயர்ந்து நின்றான். அதனால்தான் ஆண்டவன் உள்ளம் நெகிழ்ந்து எமனிடமிருந்து அவனைக் காப்பாற்றினான். விதியை மாற்றி எழுதினான்.

  என் கதையை படித்த அதாவது என்னோட கற்பனையில் (சும்மாங்காட்டி) உருவான கதையை சரி வாணாம். என்னோட எழுத்தின் மேல் தங்களுடைய தீர்க்கமான பார்வையை ஓடவிட்டமைக்கு நன்றிகள்.

  டவுசர் பாண்டி said:
  May 3, 2011 at 8:24 am

  ஒரு நாட்டு முதல்வன் ஒருத்தன் தனது ஆஸ்தான ஜோதிடரை அழைத்து “இன்று நாள் எப்படி?” என்று கேட்டான். ஜோதிடரோ “இன்றோடு உனது மகனின் ஆயுள் முடிவடைகிறது. நாளை சூரிய உதயத்துக்குள் உனது மகன் இறந்து விடுவான்!” என்று கூறினார். உடனே முதல்வனோ ஆத்திரத்தோடு “எப்படி இறப்பான்?” என்று கேட்டான். அதற்கு ஜோதிடரோ, “காட்டுப்பன்றியின் கொம்புகள் நெஞ்சிலே பாய்ந்து மரிப்பான்!” என்று கூறினார்.

  உடனே முதல்வனுக்கு ஆத்திரம் வந்தது. “கேவலம்! வீரமே இல்லாத காட்டுப் பண்றியா எனது மகனைக் கொள்ள முடியும். நெவெர்(!). கணிதத்திலே பழுது ஏற்பட்டு விட்டது. நீர் இனி இந்த ஏரியா பக்கமே தல வெச்சி படுத்துராதீர். இல்லாங்காட்டி ஒடம்புல தல இருக்காது பாத்துக்கோரும். என்று கூறியவுடன் ஜோதிடர் மவுனமாக வெளியேறினார். என்றாலும் முதல்வனுக்கு உள்ளூரப் பயம் வந்தது. தன் புள்ளைட்டையும் பொஞ்சாதி யிடமும் விஷயத்தை சொல்லாமல் சேக்காளிகளுடன் பக்கத்துல உள்ள காட்டுக்கு போனான். அங்கிருந்த அனைத்து காட்டுப்பன்றிகளையும் கொன்று குமிச்சான். ஒன்னு கூட மிஞ்சல. அம்புட்டும் வல்லுசா க்ளோசு.

  பிறகு கோட்டைக்கு திரும்பிய முதல்வன், கோட்டையை சுற்றிலும் செக்கியூரிட்டியை பலப்படுத்துனான். தனது புள்ளியை வீட்டின் மேல் தளத்தில் உள்ள ரூமில் சேப்பா தங்க வைத்தான். ரூம சுத்தியும் செக்கியூரிட்டி.

  பொழுது விடிந்தது. கதவு தெரந்தது. முதல்வனின் புள்ளையோ ரத்த வெள்ளத்தில் கிடந்தான். அவன் நெஞ்சிலே ஒரு பெரிய பாறாங்கல் கிடந்தது. அதை தூக்கி பார்க்க, மகனின் மார்பிலே இரண்டு ஆழமான ஓட்டைகள் இருந்தன. அதிலிருந்து ரத்தம் பீறிட்டெழுந்தது. அந்தக் கல்லிலிருந்த ரத்தத்தை கைகளால் துடைத்து விட்டு அந்தக் கல்லை ஊன்றிக் கவனித்தான். அது கல் அல்ல. காட்டுப் பன்றியின் சிற்பம்.

  அந்த ரூம்ல ஒசரத்துல அழகுக்காக வெச்சிருந்த காட்டுப் பன்னியின் சிற்பமானது கழன்று கீழே விழுந்த போது அதிலிருந்த கொம்புகள் மார்பிலே குத்தி மகன் இறந்து விட்டான். இப்போது தான் விதி வலியது என்பதை உணர்ந்தான்.

  ஜோதிடரின் வீட்டிற்கு சென்று அவரிடம் மன்னிப்பு கேட்டான் முதல்வன். ஜோதிடரின் புலமையை மெச்சினான். அந்த ஜோதிடர்தான் பிற்காலத்தில் புகழ் பெற்ற வராஹமிஹிரர் ஆனார். வராஹம் என்றால் பன்றி என்பது உங்களுக்கு தெரிந்ததே. நமது வாழ்க்கை நமது கையில் இல்லை. நமது உடலில் வளரும் மசுரு ஒன்றையே நம்மால் மாற்றி அமைக்க முடியாது. அது தானாகவே தோன்றுகிறது. கடவுளே அல்லாத்துக்கும் காரணகர்த்தா! கெரகங்கள் அவனுடைய ஏஜென்ட்!

  என்ன கதைய படிச்சீயளா! தூக்கலா! இல்லாங்காட்டி ஊத்தலா!

  டவுசர் பாண்டி said:
  May 3, 2011 at 8:50 am

  நீங்க ஆரையும் ஏசும் போது தப்பித்தவறி சண்டாளப்பாவின்னு மட்டும் எசாதீன்கப்பு. அந்த வேர்டுல சனி கிரகம் உள்ளார மறந்சிகிநு இருக்கு. தாழ்த்தப்பட்ட மக்களை குறிக்கும் வேர்டு. ஒங்க வாயில இருந்து அவசரத்துக்கு தப்பித்தவறி வெளாட்டுக்கு கூட வரக்கூடாது. வந்துட்டா ஒங்களுக்கு ஏழரை ஆரம்பிச்சிட்டுன்னு அர்த்தம்.

  சூரியனுக்கும் சாயா தேவிக்கும் மகனாக பிறந்தார் சனி பகவான். இவர் பிறந்த உடன் இவரை பார்ப்பதற்காகவே தந்தையாகிய சூரியன் ஓடோடி வந்தார். சனியின் எதிரில் சூரியன் வந்து நின்றவுடன் அவரை ஏறெடுத்து பார்த்தார் சனி பகவான்.

  சனியின் பார்வை பட்டவுடன் சூரியன் தரையில் மயங்கி விழுந்தார். அவர் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்ததால் உலகெங்கும் இருள் சூழ்ந்தது. எங்கும் ஒளி இல்லை. சூரிய ஒளி இல்லாததால் செடி கொடிகள் உணவை தயாரிக்க வழியின்றி வாடின.

  சூரியனைக் காணாமல் தவித்த தேர்கள் அனைவரும் சூரியனுக்கு என்ன ஆயிற்று, என்று தெரியாமல் பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர். பிரம்மாவோ சிவனிடம் இது குறித்து முறையிட்டார். உடனே சிவபெருமான் சூரியன் மயங்கிக்கிடந்த இடத்திற்கு வந்தார். நடந்த சம்பவம் என்ன என்பதை அறிந்து கொண்டார். சனியின் பார்வை எவ்வளவு பலம் கொண்டது எம்பதை தெரிந்து தந்தையையும் மகனையும் பிரித்து வைப்பதென்ற முடிவுக்கு வந்தவராய் சூரியனை தட்டி எழுப்பினார்.

  சிவன் சூரியனை நோக்கி, “உனது மைந்தன் சனியின் பார்வை பட்டதால் நீ தரையில் சாய்ந்து விழுந்து சங்கடத்திற்கு உள்ளாயினாய். பன்னேடுன்காலம் நீங்கள் இருவரும் ஒரே இடத்தில் இருந்தால் இந்த உலகம் என்னாவது? ஆகவே இன்று முதல் தந்தையும் மகனுமாகிய நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பரம எதிரிகள் ஆனீர்கள்.

  ஒரு சாதகத்துல நீங்க ரெண்டு வெறும் ஒரே வூட்டுக்குள்ளார இருந்தாலோ இல்லாங்காட்டி பாத்துக்கினு இருந்தாலோ அப்பம்புள்ள சண்ட வருமப்பு. அப்பனுக்கு புல்லையாலே இம்சதேன் என்றார்.

  அதன் பின்னர் தந்தையான சூரியனும் மகனான சனியும் பிரிந்து விட்டனர். சனியின் ராசியான மகரம், கும்பத்தில் சூரியன் பகை பெறுவதும், சூரியனின் ராசியான சிம்மத்தில் சனி பகை பெறுவதும் இதனால்தான்! (நான் சொல்லலீங்கோ!)

   puratchimani said:
   May 3, 2011 at 9:43 am

   முத்தான மூன்று கதைகள்….மிக்க நன்றி பாண்டி

   kandhan said:
   May 3, 2011 at 10:31 am

   பாண்டி அண்ணெ, என்ன சொந்த கதைகள் இப்பொ ஸ்டாக் இல்லனு கருத்து கதைகளா? கதைகள் நல்லா இருக்கு.

   சூரியன்= ஆண்மா சாயா தேவி = மாய்யை. ரேண்டும் சேர்ந்தா? ஈகோ. ஈகோ=கர்ம பலன் (த.க.ராஜா இப்பொ முளிச்சிருபார்). கர்ம பலன தயவு தாக்சின்யம் பாக்காம கரெக்டா பைசல் பண்றது யாரு?

   Mani said:
   May 3, 2011 at 11:15 am

   என்னப்பா பாண்டி ஆயுள எப்படி கணிகறதுன்னு பதிவு போடச்சொன்னா நீ நிலாச்சோறு ஊட்ற கதையெல்லாம் சொல்லி எங்கள ஏம்ப்பா தூங்க வைக்கிற. ஜோசியம் தெரிஞ்சவுகளுக்கு இந்த கதையெல்லாம் தெரியாமலா ஜோசியம் பார்க்க வராங்க. ஏதாச்சும் கொஞ்சம் அன்வாஸ்சா சொல்லுப்பா கேட்டுகிறோம். அத விட்டுட்டு தாலாட்டு பாட்டெல்லாம் எதுக்கு.

    kandhan said:
    May 3, 2011 at 11:21 am

    மணி அண்ணெ, ஏதாவது சொல்லுவாறு. அதுல நீங்க எதுனா டவுட்டு கேட்ட youtube லிங்க் குடுபாறு. தேவையா? 🙂 🙂 🙂

    Mani said:
    May 3, 2011 at 4:22 pm

    ஆமா கந்தன் சரியா சொன்னீங்க. டவுசர் பாண்டிய பத்தி நீங்க நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க நான்தான் வெளுத்ததெல்லாம் பால்ன்னு நம்பி மோசம் போய்கிட்டிருக்கேன். ஆமா அந்த லிங்க்க விட்டா பாண்டிக்கு வேற எதுவுமே கடிக்காதா. பாவம் ரீல் ஓடி ஓடி தேஞ்சும் போலிருக்கு.

  அரை வேக்காடு said:
  May 3, 2011 at 9:27 am

  //நமது வாழ்க்கை நமது கையில் இல்லை. நமது உடலில் வளரும் மசுரு ஒன்றையே நம்மால் மாற்றி அமைக்க முடியாது. அது தானாகவே தோன்றுகிறது. கடவுளே அல்லாத்துக்கும் காரணகர்த்தா! கெரகங்கள் அவனுடைய ஏஜென்ட்!

  என்ன கதைய படிச்சீயளா! தூக்கலா! இல்லாங்காட்டி ஊத்தலா! //

  டவுசர் பாண்டி அண்ணே நீங்க எங்கயோ போய்டீங்க…
  நம்ம டவுசர் பாண்டி அண்ணனுக்கு ஒரு ஓ போடு…

   Mani said:
   May 3, 2011 at 4:25 pm

   பாண்டி அண்ணணுக்கு ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ போதுமா. நாங்கெல்லாம் ஓ-வும் போடுவேம் ஓ-வுக்கப்றம் ஔ-வும் போடுவோம்ல. பாக்கறீங்களா. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்………

  //சூரியன்= ஆண்மா சாயா தேவி = மாய்யை. ரேண்டும் சேர்ந்தா? ஈகோ. ஈகோ=கர்ம பலன் (த.க.ராஜா இப்பொ முளிச்சிருபார்).//

  ஹி…ஹி… 🙂

  //மணி அண்ணெ, ஏதாவது சொல்லுவாறு. அதுல நீங்க எதுனா டவுட்டு கேட்ட youtube லிங்க் குடுபாறு. தேவையா?//

  டவுசர் பாண்டி அண்ணன் …எங்கே எப்போ என்ன சொல்லுவாருனு அவருக்கே தெரியாது …ஆனா சொல்ல வேண்டியத கரெக்டா சொல்லுவாரு 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s