மெய்ஞானமும் ,பொய்ஞானமும் -ஷக்திய சீலன்

Posted on

அன்பிற்குரிய வலைதள நண்பர்களுக்கும்,அண்ணன் சித்தூர் முருகேசன் அவர்களுக்கும் வணக்கம்.

நண்பர்களே உலகம் எப்போதும் ஒன்று போலவே சிந்திக்கிறது ,யாராவது ஒருவர் ஒரு பக்கம் சாய்ந்தால் எல்லோரும் அதே பக்கம் சாய துடிக்கிறார்கள் ,தங்களுக்கு தேவையோ இல்லையோ ஏதோ ஒன்றோடு இணைத்து தங்களை அடையாளப்படுத்த துடிக்கிறர்கள்.

விளைவு களவாணிகளும் ,காமுகர்களும் ஆன்மீகவாதிகளாகிவிடுகிறார்கள்,நம்ம ஊரில் குளிர்பானங்கள் விற்பது கூட அப்பிடித்தான் ,உண்மையில் இந்த குளிர்பானங்கள் அவுரி வேர் கஷாயம் ,கண்டங்கத்திரி கஷாயம் ,போல தான் இருக்கிறது ,இவற்றில் பெரிதாக ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை ,ஆனாலும் நம் மக்கள் இதை குடிப்பதை கௌரவமாக நினைக்கிறார்கள் ,ஏனென்றால் மேட்டுக்குடி மனிதர்களும் ,மேலைநாட்டினரும் இதை குடிப்பதால் ,இதைக்குடித்து தாங்களும் அதே போல ஒரு நிலையை அடைந்து விட்டதாக மயங்குகிறார்கள் .சரி விஷயத்திற்கு வருவோம் .

நண்பர்களே!
உண்மையான ஆன்மீகத்திற்கு சரியான அடையாளம் இருக்கிறது .நம் மெய்ஞானிகள் அதை எடுத்துவைத்திருக்கிறார்கள் ,நாம் அதை உணர்ந்தால் யாரும் நம்மை ஏமாற்ற முடியாது .இந்த பதிவின் நோக்கமே அதை உணரவைப்பதுதான்.

தன்னை சுற்றியுள்ளவர்கள் எங்காவது ஒரு ஆன்மீகவாதியிடம் போய் சேர்ந்தால் எல்லோரும் அங்கு போய் விழுகிறார்கள் ,ஆனால் அந்த ஆன்மீகவாதியோ வேறு எங்காவது விழுந்து கிடக்கிறார்,”புலன் ஐந்தும் வெலவதே உண்மை வீரமே.

நம்ம ஆத்திசூடி பாட்டி சொன்னது.பெண்மை உட்பட எங்கேயும் மண்டியிடாதவனே சுத்த வீரன் ,மெய்ஞானி . இதை எப்போதும் நாம் மறக்ககூடாது .இப்போது உண்மையான மெய்ஞானிக்கான அடையாளங்கள் :

மரணத்துக்கு பின்:

ஆணாக இருந்தால் சுக்கிலமும் ,பெண்ணாக இருந்தால் சுரோணிதமும் இறுதி நேரத்தில் வெளியேறாது உள்ளுக்குளேயே அடங்கும் .

தேகம் பசு மஞ்சள் நிறத்தில் மாறும் ,அதாவது பொன்னிறத்திற்கு.

உடம்பில் நெட்டி முறியும் ,அதாவது சொடக்கு எடுக்க முடியும் .

தேகம் விறைத்து போகாது, துவளும் .

இறைவணக்க பாடல்களை பாடினால் தேகத்தில் வியர்வை வழியும் .

எத்துனை நாட்கள் ஆனாலும் தேகத்தை மண் தீண்டாது .

அடக்கம் செய்யாமல் நாற்ப்பது நாட்கள் தேகத்தை வெளியே போட்டு வைத்தாலும் ,எந்த நாற்றமும் வராது

குருவானவர் நீர் தந்தால் அது நம் தொண்டையில் இறங்கும் ஆச்சிரியமும் நிகழும் .

மேற்கண்ட அடையாளங்களை யாரால் உங்களுக்கு ,உங்களின் இறுதி நேரத்தில் தர முடிகிறதோ அவரே உண்மையான மெய்ஞானி ,அவரை சரணடையுங்கள் .

நண்பர்களே!
மேற்கண்ட வற்றில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம் ,இது வரை வந்த எல்லா மெய்ஞானிகள் மீதும் ஆணையிட்டு சொல்லுகிறேன் இது பரிபூரண உண்மை ,எனக்கு தெரிந்து இப்போது இதை தருவபவர்கள் யாரும் இல்லை.

ஆனால் நாற்பதாண்டுகளுக்கு முன்னால் ஒருவர் இருந்தார் ,அவருடைய சீடர்களுக்கு இந்த அடையாளங்கள் உண்டானது ,உண்டாகிகொண்டிருக்கிறது

உங்களுக்கு தெரிந்து யாரேனும் தற்போது இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள் .

Advertisements

20 thoughts on “மெய்ஞானமும் ,பொய்ஞானமும் -ஷக்திய சீலன்

  வினோத் said:
  April 28, 2011 at 12:08 pm

  அண்ணன் ஷக்திய சீலன் அவர்களே…
  மற்றும் சகோதரர்களே.. தாய் மார்களே.. எல்லாருக்கும் முதற்கண் வணக்கம்…
  ஷக்திய சீலன் ஐயா… நீங்க சொல்வது சரி தான். மெய் ஞானி இறந்த பிறகு கிடைக்கும் அடையாளம்… அனா அது கிடைத்து என்ன செய்ய… அவர்கிட்ட எப்படி டவுட்டு கேட்க முடியும் ?

  உயிருடன் இருக்கும்போது எப்படி இருப்பர்கிறதை சொன்னா .. பல போலி ஞானிகளை விட்டு விலக முடியும்.. கோச்சுகாதிங்க.. எனக்கு தோன்றியதை சொன்னேன்..

   S Murugesan said:
   April 28, 2011 at 1:21 pm

   வினோத் ஜீ,
   ஷக்தியோட பதிவை போஸ்ட் பண்ணும்போதே இந்த கேள்வி என் மைண்டுல வந்தது. ஆனா கேட்கலை (ஹி ஹி நீங்க கேட்டு பேர் வாங்கனும்னு ஒரு நல்ல எண்ணம்)

    Shakthi said:
    April 28, 2011 at 2:04 pm

    வணக்கம் தலைவா ,
    என்னுடைய பதிவை சிறப்பாக வெளியிட்டமைக்கு நன்றி ,நான் சொன்னது என்னவென்றால் ,இந்த அடையாளங்களை தரக்கூடிய குரு அல்லது அவர் சத்சங்கம் போனாலே போதும் ,மௌனமாக அங்கு ஐக்கியமானலே நாம் கரை சேரலாம் …

    நன்றி …..

  தனி காட்டு ராஜா said:
  April 28, 2011 at 12:27 pm

  உண்மைதான்….நானும் யோகியின் சுய சரிதம் புத்தகத்தில் படித்து உள்ளேன்…
  அனேகமா அடுத்து அந்த உண்மையான மெய் ஞானி நானாகவோ அல்லது நீங்களாகவோ இருக்களாம்….ஹி ஹி 🙂

  puratchimani said:
  April 28, 2011 at 1:30 pm

  Hmm very interesting

  Name RASU said:
  April 28, 2011 at 1:36 pm

  Message இப்பவும் இது போலே ஆன்மிக அன்பர்கள் வாழ்ந்து நம்மையே வலி நடத்தி கொண்டு இருக்கிறாகள்
  மேலும் விவரங்களுக்கு
  மெய்வழி சாலை ஆண்டவர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

  http://en.wikipedia.org/wiki/Meivazhi

   kandhan said:
   April 29, 2011 at 4:54 am

   ராசு அவர்களெ, லிங்க குடுத்ததுக்கு நன்றி.

   Shakthi said:
   April 30, 2011 at 8:56 am

   நண்பர் ராசு அவர்களே மிகச்சரியாக சொல்லியுள்ளிர்கள் ,நான் குறிப்பிட்டதும் அவரைத்தான் …

  Shakthi said:
  April 28, 2011 at 1:37 pm

  நண்பா வினோத் ,
  நீங்கள் இறந்தவரிடம் கேட்க வேண்டாம் ,இறந்தவருக்கு உபதேசம் தந்த குருவிடம் அல்லது அவரோடு உபதேசம் பெற்றவரிடம் கேட்டால் கூட உங்களுக்கு தேவையான விவரங்கள் கிடைக்கும்,மற்றபடி நான் எதையும் தவறாக என்ன மாட்டேன் ,நீங்கள் இதுதொடர்பாக எது வேண்டுமானாலும் கேட்கலாம்

  Shakthi said:
  April 28, 2011 at 1:42 pm

  Thanks puratchimani…

  Shakthi said:
  April 28, 2011 at 1:50 pm

  நண்பரே தனிக்கட்டுராஜா ,
  தீவிரமான முயற்சி இருந்தால் யார் வேண்டுமானாலும் அந்த இலக்கை அடையலாம் ….

  வணக்கம் சத்தியசீலன்,

  புதிய செய்திகளாக இருக்கிறது .. இதற்கான ஆதாரங்கள் எங்குள்ளன ?

   Shakthi said:
   April 30, 2011 at 8:58 am

   நண்பரே, ராசு அவர்களுக்கு நான் சொல்லியுள்ள மறுமொழியை பாருங்கள்

  Mani said:
  April 28, 2011 at 5:03 pm

  தங்களுடைய செய்தி புதியதாக உள்ளது யோகியைப்பற்றி நான் அறிந்திருக்கவில்லை.

  ///ஆனால் நாற்பதாண்டுகளுக்கு முன்னால் ஒருவர் இருந்தார் ,அவருடைய சீடர்களுக்கு இந்த அடையாளங்கள் உண்டானது ,உண்டாகிகொண்டிருக்கிறது///

  நாற்பது ஆண்டுகளுக்கு முன் இருந்தது யார் யோகியா! அவரது சீடர்கள் இப்போதும் அவர்வழியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா. அவர்களுக்கு நீங்கள் சொன்ன அறிகுறிகள் ஏற்படுகின்றனவா என்ற ஐயம் எனக்கு எழுகின்றது.

  அத்தகைய ஆற்றல் மிக்க குரு யார். எங்கு இருக்கிறார். அவர் நம்மையும் சீடராக ஏற்றுக்கொண்டு வழிநடத்துவாரா என்று விளக்கவும்.

  தாங்கள் எழுதிய விஷயம் நன்றாக உள்ளது மறைபொருளாக எழுதாமல் நேரடியாக எழுதினால் அனைவருக்கும் நல்லதொரு வழிகாட்டியாக இருக்கும் என்பது எனது கருத்து.

   Shakthi said:
   April 30, 2011 at 9:04 am

   நண்பரே நான் என் பதிவில் குறிப்பிட்ட படி இப்போது இந்த உபதேசம் தர எனக்கு தெரிந்து யாரும் இல்லை .நான் குறிப்பிட நபர் மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் .நண்பர் ராசு சொன்னது போல …

    Mani said:
    April 30, 2011 at 5:00 pm

    திரு. Shakthi அவர்களுக்கு தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி நன்பர் ராசு கொடுத்த லிங்க் சென்று பார்த்து மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் பற்றி அறிந்துகொண்டேன். அவர்களைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளது. அவர்பற்றிய நூல்கள் ஏதாகினும் இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள்.

    நன்றி.

    NameRasu said:
    May 2, 2011 at 2:11 pm

    சக்தி சொல்வது முற்றிலும் சத்யம் …மெய்வழி ஆண்டவரிடம் தீர்த்தம் பெற்றவர் உடலில் எந்த மாற்றமும் ஏற்படாது

    சாதரணமாக உள்ள மனிதருக்கு உடலின் ஒன்பது ஓட்டையிலும் உள்ள உள் தாட்பால் திறந்து கொள்ளும் ..உங்கள் உயிர் பிரிந்த உடன் …

    மூக்கு ஒழுகும் ..மலம் வெளியேறும் ..மிச்ச விந்து ஒழுகும் .கண்ணில் பூழை தள்ளும் ..அதனால் தான் எல்லா ஓட்டையிலும் பஞ்சை வைத்து அடைகிறரர்கள்

    ஆனால் ஆண்டவரிடம் தீர்த்தம் பெற்ற ஒருவருக்கு இறந்த அறிகுறியே இருக்காது உடலில் …

    இன்றும் இந்த அதிசயம் நடந்து கொண்டு இருக்கிறதாம்

    ஆண்டவரின் கிரந்தம் மெய்வழி சாலையில் கிடைக்கிறது

    ஒரு சமயம் பெரியாரின் தொண்டர்கள் இவரி பற்றி சொல்லி ” எல்லா சாமியாரையும் எதிர்த்து போராட்டம் செய்கிர்கள்..இந்த புதுகோட்டையில் ஒரு சாமியார் எல்லாருக்கும் தீர்த்தம் கொடுத்து கொண்டு இருக்கிறார் .அவரையும் எதிர்த்து போரடல்மே என்று சொல்லி இருக்கிறாகள் ..அதற்க்கு பெரியார் சொன்னது ” டேய் நான் எதிர்த்து பிரச்சரம் பன்றது எல்லாம் அட்டை புலிடா ..நீங்க சொல்றது நிஜ புலி ” ..

    பெரியார் பற்றி தவறான புரிதல் மட்டுமே மக்கள் மனதில் உள்ளது ..அந்த புரிதல் தகர்க்க பட வேண்டும் ..என்னை பொறுத்த வரை அவர் ஒரு சீர் திருத்த ‘சித்தர்’

    S Murugesan said:
    May 2, 2011 at 3:24 pm

    //பெரியார் பற்றி தவறான புரிதல் மட்டுமே மக்கள் மனதில் உள்ளது ..அந்த புரிதல் தகர்க்க பட வேண்டும் ..என்னை பொறுத்த வரை அவர் ஒரு சீர் திருத்த ‘சித்தர்’//

    நீங்களாச்சும் சீர் திருத்த “சித்தர்”ங்கறிங்க. நான் அவரை ஒரு சித்த புருஷராவே உணர்ரேன்.

  சாமீ அழகப்பன் said:
  May 29, 2011 at 5:01 pm

  சக்தி சொன்னது///,நான் சொன்னது என்னவென்றால் ,இந்த அடையாளங்களை தரக்கூடிய குரு அல்லது அவர் சத்சங்கம் போனாலே போதும் ,மௌனமாக அங்கு ஐக்கியமானலே நாம் கரை சேரலாம்///
  அப்படி ஓர் இடம் பாண்டியூர் என்ற இடத்தில் மச்ச முனிவரின் சித்த ஞான சபை என்ற பெயரில் இயங்கி வருகிறது.எனது தள முகவரியில் பிற விவரங்கள் காணலாம். http://machamuni.blogspot.com/
  மணி சொன்னது///அத்தகைய ஆற்றல் மிக்க குரு யார். எங்கு இருக்கிறார். அவர் நம்மையும் சீடராக ஏற்றுக்கொண்டு வழிநடத்துவாரா என்று விளக்கவும்///
  மேலும் இதே உபதேசத்தை மெய் வழிச்சாலை,ராஜகம்பீரம் தவநெறிக் கோட்டம்,தேனி திருவிண்ணத்துப் பாலம் உலக சமாதான ஆலயம்,கன்னியாகுமரி சிவ செல்வராஜ் ஆகிய இடங்களில் இதே உபதேசம் பெறலாம்.

  இது சம்பந்தமான நூல்கள் மெய்வழிச்சாலை கஜனா அனந்தர் எழுதிய மதி வளரும் பூ வனம் என்ற நூலில் நிறைய ஆன்மீக விடயங்கள் நிறைந்துள்ளன.திருச்சி வீர உலகநாதனின் நூல்களும் நிறைய ஞான விடயங்கள் பட்டவர்த்தமாக தெரிவிக்கப்பட்டுள்ளன.கன்னியாகுமரி சிவ செல்வராஜ்,எழுதிய கண்மணி மாலையிலும் நிறைய ஆன்மீக விடயங்கள் யோக சாதன வழிகளையும் குறிப்பிட்டுள்ளார்கள்.
  சந்தர்ப்பத்துக்கு மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமி அழகப்பன்

  சாலை தயாளன் said:
  June 28, 2011 at 7:43 am

  சத்திய சீலனுக்கு வணக்கம்,
  இந்த வலை பக்கத்திற்கு வரும் நண்பர்களுக்கும் வணக்கத்தை தெரிவிக்கிறேன்,

  மரணத்துக்கு பின்:

  ஆணாக இருந்தால் சுக்கிலமும் ,பெண்ணாக இருந்தால் சுரோணிதமும் இறுதி நேரத்தில் வெளியேறாது உள்ளுக்குளேயே அடங்கும் .

  தேகம் பசு மஞ்சள் நிறத்தில் மாறும் ,அதாவது பொன்னிறத்திற்கு.

  உடம்பில் நெட்டி முறியும் ,அதாவது சொடக்கு எடுக்க முடியும் .

  தேகம் விறைத்து போகாது, துவளும் .

  இறைவணக்க பாடல்களை பாடினால் தேகத்தில் வியர்வை வழியும் .

  எத்துனை நாட்கள் ஆனாலும் தேகத்தை மண் தீண்டாது .

  அடக்கம் செய்யாமல் நாற்ப்பது நாட்கள் தேகத்தை வெளியே போட்டு வைத்தாலும் ,எந்த நாற்றமும் வராது

  குருவானவர் நீர் தந்தால் அது நம் தொண்டையில் இறங்கும் ஆச்சிரியமும் நிகழும் .

  இந்த அடையாளங்கள் அனைத்தும் நியாமான மரணத்திற்க்குறியது.மெய்வழி சாலையில் சேர்ந்த அனைவருக்கும் இது கிடைத்திருக்கிறது,கிடைத்துகொன்டிருக்கிறது இனிமேலும் கிடைகும் என்பதை ஆனித்தனமாக சொல்கிறேன்.இதை நான் பலமுறை நேரடியாக பார்த்திருக்கிறேன்.இதை படிக்கும் அனைவரும் மெய்வழி சாலையில் சேர்ந்து பயனடையுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s