Planets Care the Human_ஜாதகம் இல்லாதவனையும் கிரகங்கள் பாதிக்கிறது… உண்மையா?

Posted on

ஜாதகம் இல்லாதவனையும் கிரகங்கள் பாதிக்கிறது… உண்மையா?

குழு என்றொரு அமைப்பு நம் வாழ்வில் எப்பொழுதும் நடந்துகொண்டிருக்கும்… தனித்து என்பது நீ பிறக்கும் பொழுதும் கிடைப்பதில்லை, இறக்கும் பொழுதும் கிடைப்பதில்லை… நான் தனியாகத்தானே இறக்கிறேன் என்று என்னிடம் கேட்பாயானால், எனக்கு அந்த அனுபவம் கிடைக்கவில்லை என்பதால் பதிலில்லை. அப்படியே தெரிந்து சொல்லமுற்பட்டாலும், நீயும் நானும் அங்கே சந்திப்போமா என்பதும் எனக்குத்தெரியாது.

வாழ்வில் எல்லா நல்ல விசயங்களும் மூடிமறைத்துத்தான் இருக்கின்றன. தெரிகிறது என்பதற்கும், பார்க்கிறேன் என்பதற்கும் உள்ள வித்தியாசங்கள் போல, பார்த்தல் மட்டுமே கிடைக்கக்கூடும். சில மரை கழண்டதுதான் எல்லாமே எனக்குத்தான் தெரியும் என்பதாக குதிக்கின்றன. பதில்  சொல்லும் முட்டாளைவிட, கேள்விகேட்கும் அறிவாளிகள் தான் மிகுந்திருக்கிறார்கள்.

இங்கே நீ மரத்திலிருந்து இறங்குவதற்கு எது விழுது, எது பாம்பு என்று சுட்டிகாட்டுவதுதான் உண்மையாளர்கள் வேலை. ஆனால் நீ எதைப்பிடித்தாலும் அது உன்னைச்சார்ந்தது…

ஆனால் விழுது பிடித்து விழுந்தாலும் கூட சாவு வரலாம் அல்லவா? எனவே அது உன் சமர்த்து…

இதெல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால், நீ எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் உனக்கென்று ஒரு வரி எப்பொழுதும் அறியக்காணலாம் என்பது எழுதப்படாத உண்மை.

ஜாதகம் என்பது எழுதுவதும், எழுதப்படாமலிருப்பதும் பொதுவானது… உன் பிறப்பு எத்தகைய நிச்சயமான உண்மையோ, அது போலவே அந்த கிரகங்களின் ஆற்றலுக்குள் நீ கிடப்பதும்.

குழு (MASS) என்பதற்கு உதாரணமாக…

வாழ்வு, ஒரு பயணம், சாலையில் பச்சைக்கு காத்திருத்தல், இப்படி நிறைய இருக்கிறது… இது ச்சும்மா, நாம் ஏற்படுத்திக்கொண்டவைகள்…

ஆனால் இந்த பிரபஞ்சத்தில்….?

எல்லாமே ஒரு ஒழுங்கில் தான் அமைந்திருக்கின்றன. உனக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் கூட.

உனக்கான ஜாதகம் ஒரு வழிகாட்டி… போகிற ஊருக்கு செல்லும் வழிப்பாதைகள் சொல்லும் ஒரு வரைபடம். அதில் சாதக, பாதகம் இருப்பது பொது. இறங்கினால் சிரிப்பதும், ஏறினால் அழுவதும் நீதான். ஆனால் கிரகங்களை பொறுத்தவரை எல்லாம் ஒன்றுதான்.

ஒரு உண்மை பார்க்கலாமா? நீ ஒரு கேப்சூல் (Capsule) என்றால் உனக்குள் கிரகங்கள் ஒரு பொதுவான தன்மையை பதிந்து வைக்கின்றன… அது உன் வளர்ச்சியோடு கலந்து பரிணமளிக்கிறது என்பதுதான் அந்த உண்மை.

நீ எங்கிருந்து, எப்படி விலக்குவாய் அல்லது விலகுவாய்?

ஆனால் அவைகள், அந்த கிரகங்கள் உன்னைப்போலவே பல்லாயிரம் கோடி உயிரினங்களை பார்த்தாகிவிட்டது. நீ விரல் ஆட்டுவது குறித்து அது ஒன்றும் ஆட்சேபனை சொல்லப்போவதில்லை. அது பிரமாண்டத்தின் பிரமாண்டம்…

என் வழக்கமான ஒரு வார்த்தை…. அது இதுதான்…

“கிரகங்கள் ஆளுமை செய்வதில்லை, தூண்டுகின்றன அவ்வளவே”

உன்னோடு உனக்கு ஒரு நாளாவது பிணக்கு ஏற்பட்டதுண்டா? இல்லையல்லவா? அதுபோலவே, கிரகங்கள் உனக்கானதுதான்… அந்த கிரகங்களை நீ நேசித்ததுண்டா?

நேசித்துப்பார்த்தால் என்ன ஆகும்?

உன் பயணத்தில் உன் முயற்சியின்றி வாழ்வின் கடன் முடிக்கலாம்…

என்ன? வாழ்வின் கடன் என்னவா? விடிய விடிய கதை கேட்டுட்டு ராமன் சீதைக்கு சித்தப்பனான்னு கேட்டாப்ல இருக்கே?

அன்பன் சுகுமார்ஜி

7 thoughts on “Planets Care the Human_ஜாதகம் இல்லாதவனையும் கிரகங்கள் பாதிக்கிறது… உண்மையா?

  //ஜாதகம் என்பது எழுதுவதும், எழுதப்படாமலிருப்பதும் பொதுவானது… உன் பிறப்பு எத்தகைய நிச்சயமான உண்மையோ, அது போலவே அந்த கிரகங்களின் ஆற்றலுக்குள் நீ கிடப்பதும்//

  உண்மைதான் விதித்தது விதித்தபடி நடக்கும்…
  நல்ல செய்திகள் சுகுமார்ஜி…

  S Murugesan said:
  April 28, 2011 at 3:40 pm

  //“கிரகங்கள் ஆளுமை செய்வதில்லை, தூண்டுகின்றன அவ்வளவே”// இதைத்தான் நானும் தலை தலைனு அடிச்சிக்கிட்டே இருக்கேன். பரிகாரம்னேன், விடுதலைன்னேன்.

  அட லிஃப்கோ பப்ளிகேஷன்ஸோட “குடும்ப ஜோதிடம்”புஸ்தவத்துல அய்யர் மாரு “Fools obey the planets but the clever controls them”னு சொல்லியிருக்காய்ங்கப்பா.

  இந்த சூத்திரன் சொல்றதை நம்பலைன்னாலும் அய்யரு சொன்னதையாச்சும் நம்புங்கப்பு.

  கிரகத்தை கட்டுப்படுத்தனும்னா உடம்பு,மனசு,புத்தி,ஆத்மா இயற்கையோட பேர்லலா போகனும்யா அவ்ளதான்.

  எப்போத்தான் இந்த சனம் பாய்ண்டை பிடிக்குமோ தெரியலை.

  சூப்பர் பதிவு சுகுமார்ஜி வாழ்த்துக்கள். வாரத்துக்கொரு பதிவாச்சும் போடலாம்ல

  Mani said:
  April 28, 2011 at 4:52 pm

  //“கிரகங்கள் ஆளுமை செய்வதில்லை, தூண்டுகின்றன அவ்வளவே”//

  சுகுமார்ஜீ! சூப்பர். அருமையான வரிகள் இவை. இந்த உண்மை பிரபஞ்ச ரகசியம் கூட. கிரகங்கள் நம்மை ஆளுமை செய்வதில்லை, நம்மை செயல்களை செய்ய தூண்டுகின்றன. நம் செயல்களின் மூலம் நாம் நமக்கான வாழ்க்கையைப் பெறுகிறோம். கிரகங்களின் நிலையை அறிந்தவன் ஜோதிடன் அவற்றின் நிலைக்கு ஏற்றவாறு வாழ்க்கையை தமக்கும், பிறருக்கும் அமைத்துக் கொள்ள வழிகாட்டியாக இருப்பவனே ஜோதிடன்.

  இந்த மனித பிறவியானது ஏன் பிறந்தோம் என்ன செய்ய வேண்டும், எங்கே பயணிக்க வேண்டும் என்பது தெரியாமல் பலரும் ஏதோ பிறந்தோம் ஏதோ ஒரு பேருந்தில் பயணித்தோம் எங்கோ போகிறோம் என்ற வகையில் வாழ்ந்து வருகின்றனர்.

  ஆனால் ஜோதிடன் ஒருவனே தனது விதியமைப்பினை தெரிந்து கொள்ளும் வாய்ப்பினை தனது அறிவால் உணர்ந்து கொண்டு அதற்கேற்றவாறு தனது வாழ்க்கையமைப்பினை அமைத்துக் கொண்டு பிறருக்கும் வாழ வழிகாட்டி உதவுகிறான். சரியாக சொன்னால் எந்த பேருந்தில் எங்கு ஏறினால் எங்கு செல்லலாம் என்று சொல்லத் தெரிந்து அதில் சரியாகப் பயணிப்பவனும் ஜோதிடனே ஆவான்.

  நன்றி.

  puratchimani said:
  April 28, 2011 at 6:17 pm

  நீங்கள் அன்பே சிவம் என்று சொல்வது என் காதில் விழுகிறது பதிவாளரே.

  தனி காட்டு ராஜா said:
  April 29, 2011 at 5:12 am

  சும்மா தத்துவமா பொளந்து கட்டுறீங்களே….ஜி 🙂

   sugumarje said:
   April 29, 2011 at 6:04 am

   அடடா… இதெல்லாம் வாழ்க்கை வழிகள்தான். தத்துவம் உதிர்க்கும் அளவிற்கு என் அனுபவங்களில்லை… நான் அனுபவங்களை அன்பவித்துக்கொண்டிருக்கிறேன் என்பது மட்டுமே உண்மை.

  PERUMALSHIVAN.S said:
  April 29, 2011 at 6:50 am

  உன்னோடு உனக்கு ஒரு நாளாவது பிணக்கு ஏற்பட்டதுண்டா? இல்லையல்லவா? அதுபோலவே, கிரகங்கள் உனக்கானதுதான்… அந்த கிரகங்களை நீ நேசித்ததுண்டா?

  நேசித்துப்பார்த்தால் என்ன ஆகும்?

  உன் பயணத்தில் உன் முயற்சியின்றி வாழ்வின் கடன் முடிக்கலாம்…

  entha varigal enakku romba pidikkuthunga boss.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s