புற்று நோயும் – மகான்களும் -கே. கந்தன்

Posted on

முன்னுரை: ( ஹி ஹி முருகேசன் ஸ்பீக்கிங்)

டாடிக்கே அட்வைஸ் பண்ண கந்தன் ஜி பேரை வச்சிருக்கிறதாலயோ என்னமோ கந்தன் சாரு கச்சா முச்சானு ட்ராக் மாறி பெரீ பெரீ மேட்டரை எல்லாம் ப்ளாஸ்ட் பண்ணிக்கினு கீறாரு. புற்று நோய் பத்தின நம்ம கருத்தை சொல்லிட்டு சைடு வாங்கிக்கறோம்.

புற்று நோய் என்பது என்ன? தேவையற்ற செல்களின் வளர்ச்சி. உயிர்களுக்கு இயற்கை இட்டுள்ள முக்கிய ஆணை பல்கி பெருகுதல். உலகமெங்கும் பரவல் . இதற்குள்ள உடனடி குறுக்கு வழி செக்ஸ். அதனாலதான் செக்ஸ் உறுப்புகள் மிக குறுகிய காலத்தில் அதீதமாய் வளர்ச்சி அடைகின்றன. மேற்சொன்ன தேவையற்ற செல்களின் வளர்ச்சியும் இந்த செக்ஸ் உறுப்புகளிலேயே அதிகம் வருவது யதேச்சையல்ல.பெண்களில் கருவாய், கருப்பை,மார்பகம் பாதிக்கப்படுகின்றன. ஆண்களில் ப்ரோடஸ்டட்.

ஒவ்வொரு மனிதனும் பல்கி பரவிடவே விரும்புகிறான். செக்ஸ் அவன் இனத்தை பரப்பினால் – பணம்,பதவி,அதிகாரம் ஆகியன அவனை பரப்புகின்றன. மனிதன் செக்ஸ் – அது கிட்டாத போதோ – அல்லது அது கிட்டிடவோ பணம் பதவி என்று அலைபாய்கிறான்.

பரவிட வாய்ப்பே இல்லாத மனிதன் – பல்கி பரவும் கமாண்டை தன் ஆழ் மனதில் மட்டும் வைத்துள்ள மனிதன் விஷயத்தில் பல்கி பெருகும் எண்ணத்தை/கட்டளைய அவன் மனம் ஏற்றுக்கொண்டுவிடுகிறதோ என்றொரு சம்சயம் எனக்குண்டு.

மேற்சொன்ன பல்கி பெருகுதலுக்கு செக்ஸ் அல்லாது அடுத்தபடியாக உள்ள ஆறு வழி சாலை தியானம் – யோகம். ஒரு ஆண் அ பெண் செக்ஸை விட்டு இயல்பான வயதில் இயல்பாக தாண்டி – யோக வழியில் செல்லும்போது கான்சர் இத்யாதி தொல்லை தராதோ என்றும் ஒரு ஊகம் எனக்குள் உண்டு.என் சம்சயங்கள்,ஊகங்களுக்கு உயிரூட்டுவது போல் அமைந்துள்ளது கந்தனின் கட்டுரை .

எச்சரிக்கை:
கான்சருக்கு காரணமா அவர் காட்டியிருக்கிற காரணங்கள் விஷயத்தில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டுங்கோ.

இனி ஓவர் டு கே.கந்தன் :

சாய் பாபா புற்றுநோயினால் இறந்து இருக்ககூடும்னு தல ஒரு தகவல் சொன்னாரு. ரமண மஹரிஷி, ராமகிருஷ்ண பரமஹம்ஸ்ர் மற்றும் நிஸர்க தத்தா மஹாராஜ்(Nisargadatta Maharaj), இந்த மூன்று மகான்களும் இந்த நோயினால் தான் பூத உடலை நீத்தாங்க.

இதுல சில கேள்விகள் முளைக்குது . பெரிய மகான்களுக்கு எப்டி இந்த மாதிரி நோய் வருது? அவங்களாள தங்கள சரி பண்ணிக்க முடியாதா?

ஜோதிட ரீதியா பாத்தா புற்றுநோய்க்கு காரகம் குருவும் ராகுவும். குருதான் உடம்புல செல் வளர்ச்சிக்கு காரகன். ராகு திடீர் மாற்றத்திற்கு காரகர்.

புற்றுநோயில் இரண்டு வகை. ஒன்னு வெறும் கட்டிகள்: குருவினால் ஏற்படுவது. இன்னொன்னு உயிர்கொல்லி: ராகுவினால் ஏற்படுவது. இது ஜஸ்டு அறிமுகம்.

மகான்கள் விஷயத்துல கிரகங்களோட சக்தி கம்மி. (கொசுறு: கோள்னு சொல்றத விட‌ கிரகம்னு தான் சொல்லனும். ஏன்னு யாரச்சும் சொன்னா அவுங்களுக்கு பரிசு நம்ம தல தருவாரு). அகம் இருக்கிற வரைக்கும் தேன் கிரக ஆட்சி. மகான்கள் அதை ஓவர் கம் செய்தாச்சு.

மகான்கள் ப‌ல‌ ஜென்ம‌ங்களில் செய்த‌ தவத்தின் காரணமாக‌ அவுங்களோட கடைசி ஜென்ம‌த்துல‌ மோக்ஷம் கிடைக்கும்.

இப்போ தவம் என்னனு ஜோதிட ரீதியா பாத்தா நமக்கு சேர வேண்டியதை கூட வேண்டாம்னு தள்ளி வைக்கிறது.
எப்பிடி/? : பட்டினி கிடக்குறது, பிரம்மச்சர்யம், சுக போகங்கள விட்டுர்ரது. இதெல்லாம் செய்ய செய்ய அவுங்களோட பாவம் ஒவ்வொரு ஜென்மத்துலயும் கம்மியாகி புன்ணியத்தோட அளவு கூடி கிட்டே வருது.

புண்ணியம் கூடுனா நல்லது தானே ? இல்ல. புண்ணிய‌மும் க‌ர்ம‌ ப‌ல‌ன் தான். க‌ர்ம‌ ப‌ல‌ன் கரைந்தால் தான் முக்தி. அப்போ அந்த‌ புண்ணிய‌த்தை என்ன‌ ப‌ண்ற‌து?

ம‌கான்க‌ள் கிட்ட‌ ந‌ம்மளோட‌ பாவ‌த்த‌ ஏத்துக்கிட்டு தங்களோட புண்ணியத்தை நமக்கு குடுக்கிற‌ ச‌க்தி இருக்கு. பாவம். பொழைக்க தெரியாத ஜென்மங்கள், அப்டிதான? அதுனால தான், மகான் த‌ரிச‌ன‌ம் கிடைச்சா நோய் ச‌ரியாறது, வாழ்க்கைல‌ மேம்பாடு எல்லாம் சாத்தியமாகுது.

நாம அவுங்கள தரிசனம் பண்ணும்போது ந‌ம்ம‌ பாவ‌த்த‌ அவிக வாங்கிட்டு அவுங்களோட‌ புண்னிய‌த்த‌ நம்மகிட்ட‌ குடுக்க ஆரம்பிச்சிர்ராங்க. இது ஒரு தன்னிச்சையான செயல். அவுங்களுக்கு தான் விருப்பு, வெறுப்பு கிடையாதே. ம‌கான்க‌ளை தரிசிக்கிற எல்லோருக்கும் இந்த‌ மாதிரி ஆயிறாது. அதுக்குன்னு க‌ர்ம விதிக‌ள் இருக்கு. இந்த‌ ச‌ப்ஜ‌க்ட் பெரிய‌ க‌ட‌ல்.

தரிசனம் பெருகும் போது புண்ணிய அக்க‌வுன்ட‌ல‌ பால‌ன்ஸ் க‌ம்மி ஆகி ந‌ம்மலோ பாவ‌ங்க‌ள் அவுங்க‌ அக்கவுண்ட்ல சேருது. இத‌ த‌ங்க‌ளோட‌ த‌வ‌ வ‌லிமைனால‌ க‌ரைக்க‌ அவிகளால முடியும். தங்களோட ஆயுள பொருத்து சில காலம் அப்படி க‌ரைச்சுக்கிறாஙங்க. ஆனா ஆயுள் முடியற நேர‌ம் வ‌ர்ர‌ப்ப‌ இப்டி செய்யாம‌ பாவ‌ங்க‌ள‌ அப்படியே சேர‌ விட்டுர்ராங்க‌. அதுதான் புற்றுநோயா அவுங்க‌ உட‌ல்ல‌ பரிணமிக்குது.

Advertisements

25 thoughts on “புற்று நோயும் – மகான்களும் -கே. கந்தன்

  Mani said:
  April 28, 2011 at 7:19 pm

  ////////த‌ங்க‌ளோட‌ த‌வ‌ வ‌லிமைனால‌ க‌ரைக்க‌ அவிகளால முடியும். தங்களோட ஆயுள பொருத்து சில காலம் அப்படி க‌ரைச்சுக்கிறாஙங்க. ஆனா ஆயுள் முடியற நேர‌ம் வ‌ர்ர‌ப்ப‌ இப்டி செய்யாம‌ பாவ‌ங்க‌ள‌ அப்படியே சேர‌ விட்டுர்ராங்க‌. அதுதான் புற்றுநோயா அவுங்க‌ உட‌ல்ல‌ பரிணமிக்குது////////////

  உதாரணம் சாயிபாபா, ரமணர் etc.,

  yoghi said:
  April 28, 2011 at 7:55 pm

  புர்ருனோய் ))))செல்களில் ஏர்ப்படும் continues irritation ி அல்லது செல்லில் ஏர்ப்படும் வழக்கத்துக்கு மாட்ரமான தூன்டுதல் போன்ரவர்ரால் ஏர்ப்படலம்

  யோகிகள் மகான்கள் சாதாரன மனித இயல்புக்கு மாட்ரமாக தங்கள் மூலை சிந்தனை என்னம் அனைத்தையும் இரைவனை நோக்கி ஒரெ நேர்க்கோட்டில் நிருததுவதால் அவர்கலுடைய உடல் செல்கல் மேர்க்குரிப்பிட்ட இரன்டு டார்ச்சருக்குமே ஆலாக நேரிடலாம் அதன் காரனமாக புர்ரு ஏர்ப்பட வாய்ப்புகல் இருக்கிரது

   kandhan said:
   April 29, 2011 at 5:00 am

   யோகி அய்யா(பேரெ அமர்களம இருக்கு),‍ விரிவா ஒரு பதிவா போடலாமெ.

  Mohamed Ismail said:
  April 29, 2011 at 4:48 am

  //கோள்னு சொல்றத விட‌ கிரகம்னு தான் சொல்லனும். ஏன்னு யாரச்சும் சொன்னா அவுங்களுக்கு பரிசு நம்ம தல தருவாரு//

  கோள் என்பது கோளம் உருளை என்பதை குறிக்கும்.
  கிரகம் என்றால் சமஸ்கிருதத்தில் இல்லம் என்பதை குறிக்கும். இல்லத்தின் அமைப்பை பொருத்து வீட்டில் இருப்பவர்களின் மனநிலை அமையும்.
  //நாம அவுங்கள தரிசனம் பண்ணும்போது ந‌ம்ம‌ பாவ‌த்த‌ அவிக வாங்கிட்டு அவுங்களோட‌ புண்னிய‌த்த‌ நம்மகிட்ட‌ குடுக்க ஆரம்பிச்சிர்ராங்க//

  அதாவது மகான்கள் ஆசீர்வாதம் அல்லது தீட்சை என்பது நமது ஆன்மா அளவில் ஆசீர்வாதம் செய்வது. அதாவது நமது Astral body எனப்படும் சூட்சும உடலை அவர்களின் சூட்சும உடல் விரிந்து தழுவி ஆசீர்வாதம் செய்து நமது சூட்சும உடலின் அழுக்கை (பிரச்சினைகளை) எடுப்பார்கள். இயல்பாக நமது பாவங்கள் அவர்களின் சூட்சும உடலில் பற்றி படர்தல் நடக்கும். முறையாக தொடர்ந்து பயிற்சி தியானம் செய்து தங்களின் அழுக்கை தாங்களாகவே நீக்கி கொள்ள முடியும்.

   Mani said:
   April 29, 2011 at 8:22 am

   ////கோள் என்பது கோளம் உருளை என்பதை குறிக்கும்.
   கிரகம் என்றால் சமஸ்கிருதத்தில் இல்லம் என்பதை குறிக்கும். இல்லத்தின் அமைப்பை பொருத்து வீட்டில் இருப்பவர்களின் மனநிலை அமையும்./////

   தங்களின் இந்த விளக்கம் மிகவும் பொருத்தமாகவும் அழகாகவும் உள்ளது. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி இஸ்மாயில்.

  //புண்ணியம் கூடுனா நல்லது தானே ? இல்ல. புண்ணிய‌மும் க‌ர்ம‌ ப‌ல‌ன் தான். க‌ர்ம‌ ப‌ல‌ன் கரைந்தால் தான் முக்தி. அப்போ அந்த‌ புண்ணிய‌த்தை என்ன‌ ப‌ண்ற‌து?//

  புண்ணியம் சேர்ந்தாலும் அதையும் அனுபவித்து தான் கழிக்க நேரிடும் .. எனவேதான் அருளாளர்கள் தமது இறுதி காலத்தில் நோய்வாய்ப்பட்டால் அதை அனுபவித்து கழித்து விட வேண்டும் என்பதனாலேயே அமைதியாக இருந்துவிடுகிறார்கள் ,, நோயினால் ஏற்படும் துன்பத்தை தவிர்க்க நினைத்தால் மீளவும் ஒருமுறை பிறக்க நேரிடும் என்பதே அதற்கு காரணம்.

  நல்ல பதிவு கந்தன் சார்…

  தனி காட்டு ராஜா said:
  April 29, 2011 at 5:28 am

  இந்த மாதிரி கருத்தை தான் நெறைய பேர் சொல்லி கொண்டு உள்ளார்கள்…..

  மாகான்கள் ஒன்றும் வானத்தில் இருந்து டொய்ங் என்று குதித்து விடுவதில்லை….
  உடல் என்பது எல்லோருக்கும் பொதுவானது தான்….
  மாகான் என்றால் மலம் .சிறு நீர் கழிப்பதில்லையா ??

  ரமணர்,ராம கிருஷ்ணர் போன்றோர் உடலில் கவனம் செலுத்தாமல்….உடலின் நார்மலான இயக்கம் பற்றி கவலை படாமல்….நெறைய நேரம் தியானத்தில் இருப்பர்…..
  இதனால் உடலின் நார்மலான இயக்கம் தடை படுகிறது….
  உடலில் இயக்க மாறுதல் தாறு மாறாக நடை பெரும் போது…செல்களின் வளர்ச்சியும் தாறு மாறாக இருக்கும்….
  எனவே புற்று நோய் ஏற்படுகிறது….
  இது ஓஷோ சொன்னது..

  தவறான கருத்துகளை பரப்ப வேண்டாம் நண்பரே 🙂

  swami said:
  April 29, 2011 at 5:38 am

  கந்தன் சார் , மகான்கள் தவிர மற்றவருக்கு வரும் புற்றுநோயை எப்படி விளக்குவீர்கள்? நம்ம மனசை சமாதானபடுத்த நாம் விதம் விதமா விளக்கம் கொடுக்கறோம். நோய் என்பது மனம்,உடல், பாரம்பரியம் ஆகியவற்றில் இருந்து தோன்றுகிறது. போலி சாமிகளுக்கு அவர்களுடைய குற்ற உணர்ச்சி வியாதிகளை கொடுக்கிறது. நல்லவருக்கு தவறான உணவு, முதுமை, பரம்பரை காரணமாக நோய்கள் வரக்கூடும். தன்னுடைய மரண நேரத்தை முன்கூட்டியே அறிந்து ஜீவ சமாதியை அடைபவனே உண்மையான யோகியாய் இருக்க முடியும். தன்னிலை மறந்து உயிரை விடுபவன் எப்படி யோகியாக இருக்க முடியும்?

   kandhan said:
   April 29, 2011 at 6:03 am

   ஸ்வாமி அய்யா, மனிதனுக்கு வருகிர எல்லா இன்ப துன்பங்ளுக்கும் அவன் தான் காரணம். அதாவது அவுனுடைய பூர்வஜென்ம கர்மங்கள். நோயும் இப்படிதான். இன்னும் சொல்லப்போன உடம்பெ வியாதினுதான் வேதாந்திகள் சொல்றாங்க.

   நீங்க தற்கால காரணங்களை சொல்றீங்க. உணவு, பாரம்பரியம்னு சொல்றீங்க. நோய் இல்லாத நாடு அ. பாரம்பரியம் இருந்துச்சா இல்ல இப்பொ இருக்குதா?

   ஜோதிடரீதியா இதுக்கு காரணத்த பதிவுல லேச சொல்லி இருக்கு. இதுல இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு.

   “தன்னுடைய மரண நேரத்தை முன்கூட்டியே அறிந்து ஜீவ சமாதியை அடைபவனே உண்மையான யோகியாய் இருக்க முடியும்.தன்னிலை மறந்து உயிரை விடுபவன் எப்படி யோகியாக இருக்க முடியும்?” ரொம்ப சரி.

  தனி காட்டு ராஜா said:
  April 29, 2011 at 6:33 am

  //அதாவது அவுனுடைய பூர்வஜென்ம கர்மங்கள். நோயும் இப்படிதான்//

  சும்மா சும்மா எதற்கு எடுத்தாலும் கர்மா ..கர்மா என்று சொல்லி கொண்டே இருந்தால்…கடைசி வரை செக்கு மாட்டு வாழக்கை தான் வாழ வேண்டி இருக்கும்…..

  Fools obey the planet ….Clever Rules the planet…..
  -சொன்னது யாரோ…..

   S Murugesan said:
   April 29, 2011 at 7:59 am

   த.கா.ராசா,
   லிஃப்கோ பப்ளிகேஷன்ஸ் வெளியீடான குடும்ப ஜோதிடம் நூலின் முன்னுரையில் இதை ப(பி)டித்தேன்.

    kandhan said:
    April 29, 2011 at 8:07 am

    🙂 🙂

  PERUMALSHIVAN.S said:
  April 29, 2011 at 6:42 am

  (கொசுறு: கோள்னு சொல்றத விட‌ கிரகம்னு தான் சொல்லனும். ஏன்னு யாரச்சும் சொன்னா அவுங்களுக்கு பரிசு நம்ம தல தருவாரு).
  “KHOL” nnaa urundaiyaanathu nilayaanathu “GIRAGAM”nnaa athu peyarchi aagakkudiyathu giragiththukkollakkudiyathu ..appadinu naan ninaikkiran .

   kandhan said:
   April 29, 2011 at 8:04 am

   “giragiththukkollakkudiyathu” என்ன தல, நம்ம பெருமாள் சாருக்கு பரிச குடுத்திரலாமா?

    puratchimani said:
    April 29, 2011 at 8:43 am

    கோளாறு பதிகம்னு பட்டு எழுதினவரே கோள்னு தான் சொல்றாரு….நீங்க ஏன் இப்படி சொல்றீங்க

    kandhan said:
    May 1, 2011 at 5:45 am

    புரட்சிமணி அண்ணெ, சூரியன கொள்னு சொல்லனுமா இல்ல நட்சத்திரம்னு சொல்லனுமா? எது சரி?

    puratchimani said:
    May 1, 2011 at 6:06 am

    அண்ணா, சத்தியமா நமக்கு தெரியாதுன்னா…சில பெரியவங்க கோள்னு சொல்றாங்க…அது நல்ல தமிழா இருக்கிறதனால அது எனக்கு புடிச்சிருக்கு அவ்வளவுதான்…

  puratchimani said:
  April 29, 2011 at 8:50 am

  தோழர்களே, ஊர்ல கூட்டம் கூட்டுகிறவன் எல்லாம் உண்மையான ஆன்மீகவாதி அல்ல….. வியாபாரிகள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்

  Thirumalaisamy said:
  April 30, 2011 at 6:58 am

  அண்ணே வணக்கம்
  நல்ல தகவல் …
  சித்தர்கள் / யோகிகள் ,மகான்கள் , ஞானிகள் , ரிஷிகள் – இவர்களே இறைவன் என்றால் ஏன் உடலை துறக்காமல் இருந்து மக்களை வழி நடத்தகூடாது ( அனைவரையும் அல்ல ) – விளக்கம் தர வேண்டுமாய் அண்ணனுக்கு விண்ணப்பம் .

   kandhan said:
   May 1, 2011 at 5:44 am

   திருமல அண்ணெ, நீங்க கேட்ட மாதிரி தல இதுக்கு விளக்கம் குடுபாருனு எதிர்பார்போம். அதுக்குமுன்னாடி இதுக்கு ஒரு சின்ன உவமை. சித்தர்கள் பெய்டு சான்னல் மாதிரி. அல்லாருக்கும் தெரியாது. ஆனா அதுக்குகாக அவுக இல்லனு அர்த்தம் இல்ல. உடல் ஜஸ்டு பஞ்ஜபூதங்களோட சேர்க்கை அவ்ளவுதான். அவுகளுக்கு இது அவசியம் இல்ல. இது ஒனக்கு எப்டிடா தெரியும்னு கேக்குரீகளா. டிஷ் டீவி வச்சு இருக்கிரவுக சொல்ரத கேட்டு வச்சுதென்.

  டவுசர் பாண்டி said:
  May 1, 2011 at 2:40 am

  சித்தர்கள் போற்றி மந்திரமாலையை நூத்தி எட்டு தட சொன்னா அவிக தொடர்பு கெடைக்கும்னு வீரமநின்னு ஒருத்தர் எழுதுன பொச்தத்துல படிச்சதா ஞாபகம். காலங்காத்தால நாலு மணிக்கு மேல சித்தர்கள் தரிசனம் கெடைக்கும்னு சொல்றாங்கோ. எப்டின்னா அந்த நேரத்துல ஏதாவது மல்லிப்பூ அல்லது பீடி வாட அடிக்குமாம். ஒடனே நாம ஓம் சிங் ரங் அங் சிங் சத்குரு நாதனே சரணம் அப்டின்னு சொல்லி அவிகளுக்கு நன்றி சொல்லி அவிகளை அனுப்பி அப்பப்ப நமக்கு எதுனாச்சி உதவனும்னு வேண்டி அவிகல அனுப்பி வைக்கனும்னு சொல்றார். இது நெசமான்னு தெர்ல.

   kandhan said:
   May 1, 2011 at 5:35 am

   பாண்டி அண்ணெ, சூப்ர் விஷயம் சொல்லி இருகீங்க. நம்மளுக்கு ஒரெ பிரச்சசனை என்னநா காலைல நாலுமணிக்கு மல்லிப்பூ வாசம் அடிச்சா பேதி ஆயிரும். :). அந்த பொஸ்தகம் எங்கன கெடைக்கும். ஸ்கென் பண்ணி குடுதீகனா நல்ல இருக்கு.

    டவுசர் பாண்டி said:
    May 1, 2011 at 6:06 am

    நானும் மிந்தி சின்ன வயசில ஒருதாட்டி இந்த மந்திரமாலய கண்ண மூடி ரெண்டுதாட்டி சொல்லி முச்ச ஒடனே பீடி வாட அடிச்சது. நா அந்த மந்தரத்த சொள்ளச்சிலையே நாய் மாறி மோப்பம் பிடிச்சிட்டேதான் சொல்லிட்டு இருந்தேன். கவனம் பூரா சுத்துப்பொரத்துலதேன் இருந்திச்சி. ஐ புகையிலை சித்தர் ஆராச்சும் வந்துட்டாங்களான்னு கண்ண தொறக்காம அந்த வாடா மோப்பம் புச்சிக்கினே இருந்தேன். இருந்தாலும் சின்னதா ஒரு குன்சு. கன்னத்தொரந்துட்டு சித்தர் ஆராச்சும் எய்த்தாப்புல நிக்காங்கலான்னு தேடிப்பாத்தா ஒரு செகண்டு அரண்டுட்டேன். பக்கத்து வூட்டு பேமானி காலங்காத்தால பீடிய ஊத்திக்கினு இருந்தான். அடச்சே. இன்னும் கொஞ்ச நேரம் நாம கண்ண தொறக்காம பீடி வாடைய மோப்பம் புச்சிக்கினு இருந்தா நம்மள கேன்சர் பேசண்டால்லா ஆய்ருப்போம்னு நொந்துட்டேன்.

  kandhan said:
  May 1, 2011 at 6:36 am

  பு.மணி அண்ணெ, இந்த தமிழ் சமஸ்கிரதம் வாததுக்கு நா வரல. ஆங்கிலத்துல ஜொதிடத்தின் கிரகத்த planetநு மொழிபெயர்த்து உபயோகிக்ரதுனால பல குழப்பங்கள். சூரியன், ராகு கேது planet கிடையாதெ. ஜோசியம் எல்லாம் டுபாகூர்னு தொலைக்காட்சி காரவுக சொல்லிகிட்டு இருகாக. பாவம் அவுகளுக்கு பொழப்பு. அரைமணி நெரத்த நெரப்புரதுகாக பல ஆயிரம் வருஷம் இருக்குரத பொய்னு சொல்ராக. அப்புறும் அவுகளெ பிரபல ஜோதிடர்கள கூப்பிட்டு பேட்டி எடுத்து அத தனி ப்ரொகிராம போடுவாக.

  Grihiya – to seize —> graha – planet
  —-> gruha – home
  —-> grahan – eclipse
  —-> gruhan – digest, understand, assimilate

  Varshen said:
  June 17, 2011 at 1:34 pm

  கர்ம விணை பதிவிணை ஏற்றுகொண்டு,அதை அனுபவிக்கும் மனபான்மை மஹா பெரியவர்களுக்கு உண்டு, மறு பிறப்பு அடையாமல் இறை நிலை அடைவது ஆகும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s