சோதிட திலகம், கலை மாமணி விருதுகள் வேண்டுமா ?

Posted on

வணக்கம் அண்ணே….
எனக்கு ஒரு ஆசை அதான் இந்த பதிவு…

என் கைவசம் ஒரு சாதகம் இருக்கு…அதை போடுறேன்…சாதகத்தை பார்த்து …சாதகர பத்தி சொல்லுங்கோ.. சரியா சொன்னா சோதிட திலகம், கலை மாமணி.. போன்ற அரிய பெரிய பட்டங்களை வெல்லும் அரிய வாய்ப்பு கிடைக்கும்…

மேலும் ஒரு கில்மா மேட்டரை முருகேசன் அண்ணனுக்கு அனுப்பியுள்ளேன்…
அண்ணனின் அனுமதியுடன்.. அந்த மேட்டருக்கான லிங்கும் கிடைக்கும்…

முழுமையான சாதகத்துக்கன லிங்க்…
https://rapidshare.com/files/459576827/Pannirselvam.pdf

Advertisements

20 thoughts on “சோதிட திலகம், கலை மாமணி விருதுகள் வேண்டுமா ?

  Mani said:
  April 28, 2011 at 11:32 am

  இந்த சாதகரைப் பத்தி என்னய்யா சொல்லனும்

  Mani said:
  April 28, 2011 at 11:36 am

  ஜாதகத்தை கொடுத்து பிறப்பு முதல் இறப்பு வரையெல்லாம் கேட்கக்கூடாதுன்னு உங்களுக்கு தெரியாதா. எந்த பிரச்சனை பற்றி கேட்க வேண்டுமோ அதை மட்டும் கேட்கவும்.

   வினோத் said:
   April 28, 2011 at 12:11 pm

   மணி சார் .. காரணமில்லாமல் ஒரு சாதகத்தை அப்லோட் செய்வமா? கண்டுபிடியுங்க… பட்டம் வாங்குங்க… அட்வான்சுடு கில்மா மேட்டர் லிங்க் இருக்கு அனுப்பறேன்…காரணமா தான்..

   இதுமாதிரி .. 200 சாதகம் சேர்த்து வைத்து இருக்கேன்…

  ஜாதகன் படிப்பில் கெட்டி என்றாலும் ,தற்சமயம் ராகு திசை சுக்கிர புத்தி நடப்பதால்,காதல் ,வெண்டைக்காய் போன்றவற்றால் கொஞ்சம் சிக்கல் ஏற்படலாம் என்றாலும் ஜாதகன் அதையெல்லாம் சமாளித்து வெளி வந்து விடுவான்.

  பொறியியல் துறையை தேர்ந்தெடுத்து….குறிப்பாக கணிபொறி அறிவியல் படிக்கலாம்.

  எதிர் காலம் சிறப்பாக உள்ளது.
  திருமண வாழ்வு மிக சிறப்பாக இருக்கும்.

  (வலது) கண் தொடர்பான வியாதி ஏதேனும் இருக்கலாம்.

   Vinoth said:
   April 28, 2011 at 12:21 pm

   நன்றி அரை வேக்காடு சோதிடன் அவர்களே…
   கணிப்புக்கு நன்றி.. ஆனால் .. பிளிஸ் வெயிட் தல என்ன சொல்றர் பார்போம்..

   Mani said:
   April 28, 2011 at 5:57 pm

   ய்யோவ் அரைவேக்காடு! சரியாதான எழுதியிக்க அப்புறம் ஏன் பேருமட்டும் அப்படி வச்சிருக்க டவுசர் பாண்டிக்கு தம்பியா இருப்பியோ. என்னா டவுசரு நான் சொல்றது சரிதானே இது உன் வேலைதான்னு நினைக்கிறேன். ஆனாலும் நீ ரொம்ப ரிசர்வ்டு டைப்பா இருக்கியேப்பா.

   எல்லாம் தெரிஞ்சிகிட்டு தெரியாத மாதிரி ஆக்ட் வுடறது எல்லாம் நம்பகிட்ட நடக்காது நைனா என்னா பாம்பின் கால் பாம்பறிம்ன்னு சொல்றாங்களே கேள்விபட்ருக்கியா.

  வினோத் said:
  April 28, 2011 at 12:09 pm

  மணி சார் .. காரணமில்லாமல் ஒரு சாதகத்தை அப்லோட் செய்வமா? கண்டுபிடியுங்க… பட்டம் வாங்குங்க… அட்வான்சுடு கில்மா மேட்டர் லிங்க் இருக்கு அனுப்பறேன்…

  Arun said:
  April 28, 2011 at 12:33 pm

  Number 8 patri oru pathivu podungalen.

   S Murugesan said:
   April 28, 2011 at 1:20 pm

   அருண்,
   நிச்சயமா போடுவம். என் டேட் ஆஃப் பர்த்ல கூட எட்டு வருது 7/8/1967 மொத்தம் கூட்டினா 38 வரும். எங்க ஒய்.எஸ்.ஆர் 8/7/1949 கூட்டுத்தொகை 38

  வினோத் said:
  April 28, 2011 at 1:29 pm

  கேது பற்றி பதிவு போடறதா சொன்னீங்க தல… போடுங்க பிளீஸ்..

  kandhan said:
  April 28, 2011 at 1:45 pm

  பிறந்த இடம்? else lat/long?

  கிருமி said:
  April 28, 2011 at 2:45 pm

  இந்த சாதகர் ஆணா பெண்ணா அலியா?

  yoghi said:
  April 28, 2011 at 3:58 pm

  இது ஒரு பென் ஜாதகமாதான் இருக்கனும்

  கலப்பு திருமன வாய்ப்பு இர்க்கு

  கிருமி said:
  April 28, 2011 at 4:43 pm

  இப்போது தான் முழு சாதகத்துக்கான இணைப்பை பார்த்தேன். ஆனால் பதிவிறக்க முடியவில்லை. பன்னீர்செல்வம் என்று பெயர் இணைப்பில் இருக்கிறது, இருந்தாலும் பாலினத்தை தெளிவுபடுத்தவும்.

  Mani said:
  April 28, 2011 at 5:44 pm

  சாதகரைப்பற்றி குறிப்பாக எதுவும் கேட்கவில்லை பொதுவாக கேட்டுள்ளதால் நான் சிலவற்றை சொல்கிறேன்.

  1. லக்னத்தில் 6, 8க்குரிய கிரகங்கள் இணைந்து உள்ளது. மேலும் 3, 8-க்குரிய சுக்கிரன் உச்சம் பெற்று வக்கிரமடைகிறார். எனவே சாதகருக்கு உடலில் நிச்சயம் எதாவது குறைபாடுகள் இருக்கும். நோயால் அவதியுறுவார். லக்னத்தில் சுக்கிரன் உச்ச வக்கிரம் பெறுவதால் மேலும் 3க்குரியவராகவும் வருகிறார். எனவே சாதகர் பெண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிகமாக தவறுகள் செய்து அதன் மூலம் பல து்ன்பங்களை அனுபவிப்பார். தீய ஆதிபத்யம் பெற்ற கிரகங்கள் லக்னம் வந்தால் வாழ்வில் போராட்டம் அதிகம் இருக்கும்.

  ஆனாலும் என்னதான் மோசமான நிலையில் இருந்தாலும் தன் வீட்டைப் பார்க்கும் கிரகங்கள் அந்த வீட்டின் பலன்களை ஓரளவேனும் தந்துவிடும். அந்த வகையில் லக்னாதிபதியான குருவானவர் சந்திரனுடன் இணைந்து லக்னத்தைப் பார்ப்பதால் இவரது குறைபாடுகள் அவ்வளவாக வெளியில் தெரியாமல் இருக்கும். சாதகர் பெரிய மனித தோற்றத்துடன் அதிக நண்பர்கள் புடைசூழ வலம் வருவார். பெண் நண்பிகள் அதிகம் உண்டு.

  சாதகருக்கு 18 வயது நடைபெற்று வருவதால் இன்னும் மாணவராக இருக்க வாய்ப்புகள் உண்டு. வித்யா காரகனும் 4, 7க்கும் உடையவரான புதன் 12ல் சனியுடன் சேர்ந்து மறைவு பெற்றுள்ளதால் கல்வியில் பெரிய முன்னேற்றம் எதுவும் இருக்காது. ஆனால் 5க்குடையவர் குருவுடன் இணைந்து லக்னத்தை பார்ப்பதால் புத்திசாலியான அறிவாற்றல் மிக்கவராக இருப்பார். படிப்பில் தான் அதிக கவனமின்றி சோம்பலுடன் இருப்பார்.

  லக்னாதிபதியே 10க்குடையவராகவும் வந்து கேந்திராதிபதியாகவும், கேந்திரத்தில் அமர்ந்தும் லக்னத்தை பார்வை செய்வதால் எதோ பெயரளவிற்கு ஒரு உத்யோகத்தை தருவார். இங்கு குரு வானவர் நன்மையான பலன்களை வாரி வழங்க இயலாத நிலை ஏற்படுகிறது.

  5க்குடைய சந்திரன் 7ல் அமர்ந்து குருவுடன் இணைவு பெற்றுள்ளதால் காதல் திருமணம் பெற்றோர்களின் அனுமதியுடன் நடைபெறும்.

  9ல் ராகு அமர்ந்து தனது தசாவை நடத்துகிறார். 9க்குடைய செவ்வாய் 9க்கு 8மிடமான 4ல் உள்ளார். எனவே ஜாதகரின் தந்தைக்கு பிரச்சனைகள் ஏற்படும். பெரும்பாலும் தந்தை எதாவது ஒருவகையில் ஜாதரிடமிருந்து பிரிந்திருக்கின்ற வாய்ப்பு அல்லது இல்லாமல் கூட போகலாம்.

  தற்போது ராகு தசையில் சுக்கிரன் புக்தி காலம் நடைபெறுகிறது. ராகு விருச்சிகத்தில் நீசம் பெற்று புதனின் சாரத்தில் அமர்ந்துள்ளார். புதன் 7ம் அதிபதி மற்றும் 12ல் உள்ளார். எனவே சாதகரின் வாழ்க்கையில் இந்த காலகட்டத்தில் பெண்கள் விஷயத்தில் எதாவது பிரச்சனைகள் செய்து மாட்டிக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. படிப்பில் கவனம் சிதறும் மற்றும் எங்கும் ஊர் சுற்றியவாறு இருப்பார்.

  என்ன வினோத் எதாவது புரிந்ததா. இதற்கு மேல் என் வாயை கிளறாதீர்கள். இந்த ஜாதகத்தில் பெரிதாக சொல்லிக்கொள்ளதக்க விஷயங்கள் ஏதும் இல்லை. உருப்படாத ஜாதகத்தை இங்கு வந்து போட்டு எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம். சரியா. ஹா! ஹா!.

  அப்புறம் அந்த விருதை நீங்களே போட்டுக்கொள்ளுங்கள்.

  Mani said:
  April 28, 2011 at 5:49 pm

  நான் நினைக்கிறேன் இது வினோத் சாதகமாக கூட இருக்கலாம். அல்லது அவரது நண்பராக இருக்கலாம். என்ன வினோத் மாட்டிய பிகர் மடங்குமான்னு ஜோசியம் கேட்கிறீங்களா. உங்க எண்ணம் நினைவேறும். போதுமா. போட்டு தள்ளு என்ஜாய் மாமே அல்லது என்ஜாய் பண்ண சொல்லுங்கள் உங்கள் நண்பரை. என்க்கு நேரமாகிவிட்டது வரட்டுமா. பை பை

  Thevar said:
  April 28, 2011 at 7:28 pm

  A Hetro sex.
  poor guy.
  my prayers.

  தனி காட்டு ராஜா said:
  April 29, 2011 at 5:52 am

  //ய்யோவ் அரைவேக்காடு! சரியாதான எழுதியிக்க அப்புறம் ஏன் பேருமட்டும் அப்படி வச்சிருக்க டவுசர் பாண்டிக்கு தம்பியா இருப்பியோ. என்னா டவுசரு நான் சொல்றது சரிதானே இது உன் வேலைதான்னு நினைக்கிறேன். ஆனாலும் நீ ரொம்ப ரிசர்வ்டு டைப்பா இருக்கியேப்பா.//

  தலைவரே ….
  டவுசர் பாண்டிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை …ஹி ..ஹி 🙂
  டவுசர் பாண்டி அளவுக்கு எல்லாம் நமக்கு டவுசர் போட தெரியாது ஹி ..ஹி ….இன்னும் சட்டி கூட சரியா போட தெரியாது 🙂

  இப்போதான் நான் ஜோதிடம் கொஞ்சம் கொஞ்சம் கத்துகிட்டு இருக்கேன்….
  என் ஜாதக பலன் சொல்லலில் எனக்கே முழு நம்பிக்கை இல்லை ஹி ..ஹி
  அதானால் தான் புனை பெயரில் பலனை சொன்னேன்..

  அப்புறம் ஒரு கால சர்ப்ப தோசத்திற்கு உதாரண சாதகம் ஓன்று …அட என்னோடது தான் ….
  பொழுது இருந்தா ஆராய்ச்சி பண்ணி பலன சொல்லுங்க ..

  Name:Gopala krishnan P
  Date of birth:12-07-1983 1.17 am [early morning,tuesday]
  Place of birth:Erode

  குண்டலினி எழும்புமா…எழும்பாதா ?
  தற்போதைய தொழிலை விட்டால் அடுத்து என்ன தொழில் செய்யாலாம் ?
  திருமணம் பற்றி சொல்லவும் ..
  .

  நான் எவ்வளவு வெளிப்படையா என் ஜாதகத்த சொல்லுறேன்…இதை வச்சி ஆரய்ச்சி பண்ணி ஒரு தனி பதிவே கூட போடுங்க …..

  ஒரு வேலை சாதாரண ஜாதகத்த எல்லாம் ஆராய்ச்சி பண்ண மாடீங்களோ?

   Mani said:
   April 29, 2011 at 2:04 pm

   கோபால கிருஷ்ணன் உங்கள் விபரங்களைப் பார்த்தேன் உங்க சாதகத்தை ஆராய்ச்சி பன்றதெல்லாம் பெரிய வேலையே இல்லை. ஆனால் பலன்களை வெளிப்படையாக வேண்டாமே. மின்னஞ்சல் முகவரி இருந்தால் அனுப்பிவைக்கிறேன்.

   அப்புறம் ஒரு விஷயம். இந்த வயசிலேயே குண்டலினி எழுப்பற வேலையெல்லாம் உட்ருங்க. இந்த வயசில் எது செய்யனுமோ அதை செய்தால் போதும்.

   வாழ்க்கையில் நன்றான ஆண்டு அனுபவித்துவிட்டு நிறைவான யாருக்கும் துன்பமில்லாத வாழ்க்கையாக வாழ்ந்து பூர்த்தி செய்தால் அதுவே இறைவனின் அருளை பெற போதுமானது.

   எங்கு எந்த நிலையில் இருந்தாலும் உங்கள் கடமைகளை தட்டிக்கழிக்காமல் மன நிறைவோடு செய்யுங்கள். முடிந்தவரை பிறர் துன்பம் போக்க உதவுங்கள் அதுவே மேலான கர்ம யோகம் ஆகும். கர்ம யோகமே இறைவனை எஅடையும் வழியாகும்.

  டவுசர் பாண்டி said:
  May 1, 2011 at 2:44 am

  சூப்பரான போட்டி. அல்லாருமே பின்றாங்கப்பா. ஆணா பொண்ணா திருனங்கயான்னு கண்டுபுடிக்கிரதெல்லாம் மேட்டரே கடியாது. பெர்த் டைம் ரெக்டிபிகேசன்படி கண்டுபுச்சிர்லாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s