திருமணவாழ்வில் சிக்கலா?

Posted on

அண்ணே வணக்கம்ணே,
அவன் அவள் அதுன்னுட்டு பெருசா ஆரம்பிச்சு டீல்ல விட்டாச்சு. இடையில ஒரு தாரம் ரெண்டு தாரம் 3 தாரம்னு மண வாழ்வில் சிக்கல்களை பத்தி எழுத ஆரம்பிச்சிட்டன்.

ரெண்டுத்துக்கும் என்னா சம்பந்தம்? ஆத்தா எதுக்கு இப்படி நம்மை டைவர்ட் பண்றாள்னு ரோசிச்சன். நான் பந்தாவா அல்லா தாய்குலமும் சக்தியோட அம்சம் – ரஜினி ரசிகன்ல ஏதோ ஒரு ஆங்கிள்ள ரஜினி தெரிஞ்சுர்ராப்ல ஒவ்வொரு பெண்ணிலும் ஏதோ ஒரு ஆங்கிள்ள ஆத்தாவை பார்க்க முடியுது.

காதலன் – காதலி, கணவன் – மனைவி ரிலேஷன்ல ஸ்தூலமா பார்த்தா அந்த உறவு அஞ்சு நிமிச உறவாத்தான் தோணும்.

ஆனால் ஒவ்வொரு காதலனும் – ஒவ்வொரு கணவனும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல காதலியை – மனைவியை அம்மாவா ஃபீல் பண்றான்.

இன்னைக்கு குட்டிங்கல்லாம் லவரை டா போட்டுத்தான் பேசுதாம். “டா” போடறான்னா அவள் இவனை தன் மகனா ஏதோ ஒரு அணுவுல உணர்ராள். இவன் அதை கேட்டுக்கறான்னா இவன் அவளை ஏதோ ஒரு அணுவுல தாயா உணர்ரான்.

“சக்தி இருந்தா செய். இல்லைன்னா சிவனேனு கிட”ங்கற பாய்ண்டை ஆல்ரெடி சொல்லியிருக்கேன். (உபயம்: வாரியார்) . சக்தி இருந்தாதான் சிவன் செயல்பட ஆரம்பிக்கிறார். சக்தியை (பெண்ணை) எதிர்பார்த்துத்தான் ஆணோட கல்வி, வேலை தேடல், எல்.ஐ.சி,சீட்டு எல்லாமே நடக்குது. சக்தியின் வரவுல சந்தேகம் ஏற்படறச்ச அந்த பயத்துல தான் பான்,பீடா,ஜரிதா,குட்கா,கஞ்சா,தண்ணின்னு ஆண் டைவர்ட் ஆகறான்.

ஒரு ஆண் எத்தனாம் பெரிய மேதையா, விஞ்ஞானியா, வித்வான், வெல்வெட்டா இருந்தாலும் அவன் வாழ்க்கையோட மையப்புள்ளி பெண். அவள் சக்தியின் வடிவம். ஒரு பெண் அவள் என்னதான் அடங்கா பிடாரியா, பஜாரியா, நாலணா தேவடியாளா இருந்தாலும் அவளுக்குள்ள சக்தியின் அம்சம் இருக்கு.

ஆண் சிவனோட அம்சம். இவன் செயல்படனும்னா தாளி சக்தி 32 வயசு தூரத்துலயாவது இருக்கனும். இல்லாட்டி உலக இயக்கமே தடை பட்டு போயிரும்.

இன்னைக்கு திருமண வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் ஆன்,பெண் உறவையே – திருமண அமைப்பையே சந்தேக கண் கொண்டு பார்க்க வச்சிருது. உள்ளே இருக்கிறவன்லாம் “செமர்த்தியா மாட்டிக்கிட்டோமோ?”னு சந்தேகப்படறான். வெளிய உள்ளவன் விவரமில்லாம ” உள்ளாற எக்ஸ்ட்ரா சேர்னா கிடைக்காதா? ” ன்னு தவிக்கிறான். இவனை உள்ளே விட்டா இவனும் கலைஞரின் இளைஞன் படத்தை பார்த்து அரண்டு போன மாதிரி எப்படா கேட் திறக்கும்னு தவிக்க ஆரம்பிச்சுர்ரான்.

கடவுள் சச்சிதானந்த ஸ்வரூபன். அவனோட நேரடி வாரிசு ஆண்.பெண்கள். புலிக்கு பிறந்தது பூனையாகுமா? அதனாலதான் ஆண் பெண்கள் ஆனந்தத்தை தேடறாய்ங்க. சத்+சித்+ஆனந்தம்

“சத்” என்றால் நல்ல /மஷ்டு நீங்கிய – தமோ ,ரஜோ வரிசையில் வர்ர சத்வ குணம்
“சித்’ என்றால் மனம்
“ஆனந்தம்”னா ஐங்கரன் இன்டர் நேஷ்னல்ஸ் தயாரிச்ச படம்

மனதில் உள்ள மஷ்டு நீங்கனும்னா அவை எல்லாம் வெளிபப்டுத்தப்படனும். மனித மனதில் உள்ள தமோ,ரஜோ குணங்கள் நீங்கனும்னா அவை முழுகக் முழுக்க எக்ஸாஸ்ட் ஆகனும். அப்பாறம் தேன் சத்வ குணம் வெளிப்படும்.

அதுக்கு மவனே உன் ஈகோ ஆத்தா காலடியில ராட்சசன் கணக்கா நசுங்கனும் – உன் ஈகோவை உயிரினும் மேலா போற்றி பாதுகாக்கிற நீ .அதுமேல ஈ எறும்பு உட்கார்ந்தா கூட பதறிப்போயிடற கேஸு. அடுத்தவன் வந்து உன் ஈகோவை சீண்டினா பராசக்தியில சிவாஜி மாதிரி பக்கம் பக்கமா வசனம் பேச ஆரம்பிச்சுருவ.
மனோகரால சிவாஜி மாதிரி பொங்கி எழுந்துருவ – உனக்குள்ள இருக்கிற மிருகத்துக்கு கட்டப்பட்டிருக்கிற சங்கிலியெல்லாம் தெறிச்சு விழுந்து அதகளமாக்கிருவ.

முக்கியமா ஆண் . ஆண் மனதில் உள்ள மஷ்டு ,மிருகத்தன்மை எல்லாம் எக்சாஸ்ட் ஆகனும் அவன் மனம் பளிங்கு கணக்கா ஆகனும்னா அவன் மனசு க்றிஸ்டல் க்ளியரா ஆகனும்னா அவன் செயல்படனும். உலகத்தை,சமூகத்தை எதிர்கொள்ளனும். அதுக்கு இவன் படிக்கனும்,வேலை தேடனும். இதுக்கெல்லாம் ஒரு ஊக்கப்பரிசா “சக்தி’ எட்ட நின்னுட்டு வாவானுட்டு ஊக்கப்படுத்திக்கிட்டே இருப்பா.

அவளை அடைய நீ மேற்கொள்ற முயற்சியிலயே உன் ஈகோ 2011 தேர்தல்ல திமுக மாதிரி ஒடுங்கி போயிரனும். அப்போ மிச்சம் மீதி இருக்கிறதை பொஞ்சாதி வந்து ஒழிச்சு கட்டறப்ப வலிக்காது.

பூர்வ புண்ணியம் காரணமாவோ/பாவம் காரணமாவோ – அப்பா அம்மாவோட மெனக்கெடலாலயோ சக்தியை வரவேற்பதற்கான தயாரிப்புல உன் ஈகோ டேம்ஜ் ஆகலைன்னு வை . அது இந்தியாவொட உலகவங்கி கடன் மாதிரி பெருகிப்போயிட்டே இருக்குனு வை . அந்த சந்தர்ப்பத்துல சக்தியோட திருவிளையாடல்ல ( தாம்பத்யம்) ஈகோ மரண அடி வாங்கும்போது ரெம்ப வலிக்கும்.

( திருமண அமைப்பால ஒரு பெண் மனம் என்னென்ன மாற்றங்களுக்கு உள்ளாகுதுங்கற மேட்டர் தேவைங்கறிங்களா? நம்ம ப்ளாக் சைட்டு எதையும் தாய்குலம் அண்டறதில்லேனு அலெக்ஸா சைட் ஆடிட் சொல்லுதுங்கண்ணா? இருந்தாலும் நீங்க தேவைனு சொன்னா ஒரு சுப முகூர்த்தத்துல போட்டுருவமில்லை )

ஒவ்வொரு மனித உயிரும் ஆனந்தத்தை அடையனும்னா ஈகோ ஒழியனும், தமோ ரஜோ குணங்கள் எக்ஸாஸ்ட் ஆகனும்.இது தாம்பத்யத்துலதான் சாத்தியம். இதை சக்தியின் பிரதி நிதியா இருந்து மனைவி செய்யறாள். இந்த ப்ராசசோட நோக்கம் உங்க மனசுல உள்ள மஷ்டுவை எல்லாம் சுத்தமாக்கறதுதான் .

அப்போ உங்க மனசு ஈகோ இல்லாம அடைப்பில்லாம ப்ளெசண்டா இருக்கும். அந்த மாதிரி ஒரு நிலைதான் ஆன்மீகபயணத்துக்கான ஸ்டார்ட்டிங் பாய்ண்ட். இரும்பை காச்சி எடுக்கிறது அதுக்கு ஒரு ஷேப்பை தரத்தான்.இதை செய்யறது திருமதி. இந்தவகையில நெஜமாலுமே திருமதி ஆத்தா கொடுத்த வெகுமதிதேன்.

ஆனால் சாமானியன் இந்த ப்ராசசை எதிர்கொள்ளும் இது எனக்கு மட்டும் நடக்குது . இது அ நியாயம் அக்கிரமம்.. செத்துப்போயிருவன் போலிருக்கே அது இதுனு டென்ஷன் ஆயிர்ரார்ன். இதுக்கெல்லாம் காரண காரியம் இருக்கு.(இந்த பதிவுல சர்ப்பதோஷம் பத்தி சொல்லியிருக்கன்.) ப்ராசஸ்ல எதிர்படற இம்சைய ஓரளவுக்காவது குறைச்சுக்க பரிகாரம்லாம் இருக்குண்ணே. இந்த பதிவுல சர்ப்பதோஷத்துக்கான பரிகாரங்களை தந்திருக்கேன்.

சர்ப்பதோஷம் என்ற பெயரை எல்லோரும் ஏதோ ஒரு தடவையாவது கேள்வி பட்டிருப்போம். பாம்பை கொன்றுவிட்டதாலோ,பாம்பு புற்றை கலைத்துவிட்டதாலோ தோஷம் ஏற்பட்டிருக்கும், எனவே பாம்பு கடித்து மரணம் ஏற்படும் என்ற ஒரு எண்ணம் நம்மையும் அறியாமல் மூளையில் மின்னும்.

ஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்தால் இதே போல் தோஷம் உள்ளவரையே மணக்க வேண்டும் இல்லாவிட்டால் மரணம் ஏற்படும் என்றும் ஜோதிடர்கள் அறுதியிட்டு கூறுகிறார்கள்.

என்னைப்பொறுத்தவரை 1987 முதல் எத்தனையோ சர்ப்ப தோஷ ஜாதகங்களை பார்த்திருக்கிறேன்.அவர்கள் பிரச்சினைகளை கேட்டறிந்திருக்கிறேன். சம்பிரதாய பரிகாரங்களையும், எனது நவீன பரிகாரங்களையும் பரிந்துரைத்திருக்கிறேன். அவர்களுக்கு கிடைத்த பலனையும் பார்த்திருக்கிறேன்.
( நல்லது நடந்தா சொல்றதில்லிங்கண்ணா)

முதலில் கிரகங்கள் குறித்த புராண கதைகள் பற்றி சில வரிகள்:

இவற்றை பிரபஞ்ச ரகசியங்களை பொதிந்து வைத்திருக்கும் உருவக கதைகளாக மட்டுமே புரிந்து கொண்டால் பிரச்சினையில்லை. நவகிரகதோஷங்களுக்கான சம்பிரதாய பரிகாரங்களுக்கு பின்னணியில் உள்ள விஞ்ஞான கண்ணோட்டத்தை ,பிராமணர்களின் காசாசை நாசப்படுத்திவிடுகிறது. சர்ப்ப தோஷத்துக்கு நாக தேவதையை,ராகு,கேதுக்களை வழிபடுவதும் ஒரு பரிகாரமே. ஆனால் இதற்குள்ள காரண காரியங்களை அறியாத பிராமணர்கள் இதை தம் வியாபாரத்துக்கு உபயோகிப்பது சகிக்க முடியாததாய் உள்ளது.

காளாஸ்திரி சர்ப்பதோஷ பரிகாரம்:

காளாஸ்திரியில் சர்ப்பதோஷ பரிகாரம் செய்து கொண்ட உடனே தோஷத்தை காக்காய் எடுத்துக் கொண்டு போய்விடும் என்று கதை விடுகிறார்கள். மக்களும் அதை நம்பி “இந்த ஜாதகத்துல சர்ப்ப தோஷம் இருக்குங்க ” என்று ஆரம்பித்த நொடியிலேயே ” ஆங்.. அதெல்லாம் ஒன்னுமில்ல சாமி! காளாஸ்திரியில பரிகாரம் செய்தாச்சு” என்று கூறுகிறார்கள்.

தோஷம் போகவே போகாது:

அம்மா கேமிரா மாதிரி, குழந்தை பிலிம் மாதிரி ஷட்டர் ஓப்பனாகி எதிரில் உள்ள காட்சி பதிவாகிவிட்டால் பிறகு அதை மாற்றவே முடியாது. கிரக நிலை கூட அவ்வளவுதான்.பச்சை மண்ணான குழந்தை சகல பாதுகாப்புகளுடன் தானிருந்த கருப்பையை விட்டு வெளிவந்ததுமே கிரகங்கள் தமது முத்திரையை ஆழ பதித்து விடுகின்றன. ஒரு ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் இருந்தால் அது அந்த ஜாதக‌ரை என்ன செய்யுமோ (இது இந்த பார்ப்பன வியாபாரிகளுக்கு தெரியவே தெரியாது) அதை செய்தே தீரும். காளாஸ்திரி போனாலும் இதே நிலைதான். காலிஃபோர்னியா போய் செய்தாலும் இதே நிலை தான்.

பின்னே சர்ப்பதோஷம் என்ற பெயர் எதற்கு:

பாம்பு விஷத்துக்கான குறியீடு மட்டுமே. பாம்பு யோகத்தும்,யோக சக்தியான குண்டலிக்கும்,செக்ஸுக்கும் கூட குறியீடாக உள்ளது. மனித உடலில் எத்தனையோ விதமான விஷங்கள் கலக்கின்றன. (கூல்ட்ரிங்ஸில் பூச்சி மருந்து,ஏர்கூலரிலிருந்து மீத்தேன்,காய்கறிகள் மீது தெளிக்கப்பட்ட புச்சிமருந்து,வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்ட யூரியா இப்படி அநேகம்.)

இவற்றை உடலில் வைத்துக்கொண்டும் உயிர்வாழும் சக்தியோ,அல்லது இவற்றை முறிக்கும் சக்தியோ மனித உடலுக்கு இருந்தாலன்றி மனிதன் தொடர்ந்து உயிர்வாழமுடியாது என்பது உண்மை தானே. இந்த விஷத்தை முறிக்கும்,சமாளிக்கும் சக்தி சர்ப்பதோஷ ஜாதகர்களின் உடலில் குறைவாக இருக்கும். இதுதான் அசலான சங்கதி.

சர்ப்பம் யோகத்துக்கும் அறிகுறி:

ஆம். பாம்பு யோகத்துக்கும் அறிகுறியாக உள்ளது. குண்டலிசக்தி கூடஒரு பாம்பு வடிவத்தில் உறக்க நிலையில் இருப்பதாய் யோக நூல்கள் கூறுகின்றன. யோகத்தின் மீதான ஆவல்,முயற்சி நல்லதே. இதற்கும் ராகு,கேதுக்கள் நல்ல நிலையில் இருக்கவேண்டும். அப்படியிருந்தால் தான் யோகத்தில் வெற்றி கிடைக்கும். இல்லாவிட்டால் விழிப்பு நிலைக்கேகிய‌ குண்டலியின் தாக்கத்தை தாங்க முடியாது பித்தாவதோ, அல்லது வெறுமனே கஞ்சா குடிக்கும் சன்யாசியாவதோ நிகழ்ந்துவிடும். இதுவும் சர்ப்பதோஷத்தின் விளைவே.

சர்ப்பம் செக்ஸுக்கு அறிகுறி:

சர்ப்பம் செக்ஸுக்கும் அறிகுறியாக உள்ளது. சர்ப்ப தோஷ ஜாதகர்கள் செக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு கொண்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ரகசிய உறவுகள்,கள்ளக்காதல்களுக்கும் சித்தமாகிவிடுவார்கள்.

பாம்புக்குரிய குணநலன்கள் :
பாம்புக்கு ம‌னித‌ர்க‌ள் மீது ப‌ய‌ம். ம‌னித‌ர்க‌ளுக்கு பாம்பு மீது ப‌ய‌ம். என‌வே பாம்பு ம‌றைந்து வாழ்கிற‌து. ம‌னித‌ன் க‌ண்ணில் ப‌ட்டால் அடிப்ப‌ட்டு சாகிற‌து. அல்ல‌து ம‌னித‌னை கொத்தி கொன்று விடுகிற‌து. வ‌ளைந்து வ‌ளைந்து செல்கிற‌து. இரையெடுத்த‌ பின் அசையாம‌ல் கிட‌க்கிற‌து. பாம்புக்கு சிறுநீர்,ம‌ல‌ம் க‌ழிக்க விந்துவை வெளியேற்ற தனித் த‌னி துவார‌ங்க‌ள் கிடையாது. அனைத்துக்கும் பொதுவாக‌ க்ளோய‌கா என்ற‌ துவார‌ம் தான் உண்டு.

ச‌ர்ப்ப‌ தோஷ‌ம் கொண்ட‌வ‌ர் நிலை:
ஜாத‌க‌த்தில் ச‌ர்ப்ப‌ தோஷ‌ம் கொண்ட‌வ‌ர் நிலையும் ஏற‌க்குறைய‌ இப்ப‌டித்தான். எப்படி என்பதை கொஞ்ச‌ம் முக்கி யோசியுங்க‌ள். அடுத்த‌ ப‌திவில் ச‌ந்திப்போம்.

சர்ப்பத்தின் குணம் சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. அனைவர் மீதும் சந்தேகம், உதவாத விஷய‌ங்களை கூட ரகசியமாக செய்வது,உண்டவுடன் சுருண்டு படுத்துக்கொள்வது, நேரிடை வழி,சிந்தனைகளை விடுத்து குறுக்கு சால் ஓட்டுவது,உடலுறவில் மிகுந்த ஈடுபாடு காட்டுவது,வலிப்பு தொடர்பான நோய்கள்,நரம்பு கோளாறுகள்,இனம் புரியாத வலி ஏற்பட்டு பாம்பை போல் நெளிவது, மெடிக்கல் ரியாக்ஷனுக்கு இலக்காவது,(ஆங்கில மருந்துகள் யாவுமே ட்ரட் எனப்படும் விசங்களே.அவை அமுதம் என்று நினைப்பது தவறு, மாறுபட்ட விளைவை ஏற்படுத்தும் அவ்வளவே. வயிற்றுப்போக்கு இருக்கும்போது மலத்தை கட்டச்செய்வது போன்று). நடக்கும்போது கூட சாலையில் வளைந்து வளைந்து நடப்பது போன்ற விளைவுகளும் ஏற்படுகின்றன,

மேலும் அலர்ஜி (சாதரண பொருட்களை விஷமாக எண்ணி உடல் எதிர்ப்பது) .மறைத்து பேசுவது,கிசுகிசுப்பது,வாய் திக்குவது,விசம் உண்டு தற்கொலைக்கு முயல்வது,உடலில் ஆச்சரிய குறி போன்று மச்சம் தோன்றுவது, ஜாதகர் கழற்றி வைத்த உடை மீது (முக்கியமாய் சர்ப்ப தோஷ பெண்கள் அணிந்த விலக்கான உடைமீது)பாம்பு ஊர்ந்து செல்வது, அடிக்கடி அபார்ஷன்,கனவில் சர்ப்பங்கள் தொடர்ந்து வருவது,பூச்சி,பொட்டு,தேள் கடிக்கு இலக்காவது, தோஷம் உள்ளவர் ,இல்லாதவரை மணந்தால் தோஷம் இல்லாதவரின் உடல் வலிமை,முகக்களை,கவர்ச்சி யாவும் ஒன்னரை வருடங்களில் பாதியாகிவிடுவதை காணமுடிகிறது. ராகு,கேதுக்கள் நிழல் கிரகங்கள் என்பதால் ப்ளாக் ஹோல் போன்றும் செயல்படுகின்றன.(சக்தியை உறிஞ்சுதல்),

உட‌ல‌மைப்பிலும் வித்யாச‌ம் இருக்கிற‌து. ஒன்று ஊளைச்ச‌தை,அல்ல‌து வ‌ய‌துக்கேற்ற‌ வ‌ள‌ர்ச்சி இன்மை காண‌ப்ப‌டுகிற‌து. சதிகள் செய்வது,ச‌திக்கு இல‌க்காவ‌து,ர‌க‌சிய‌ எதிரிக‌ள்,இர‌வில்,இருளில் செய்யும் வேலைக‌ளில் ஈடுபாடு.(சினிமா,போட்டோகிர‌ஃபி)ச‌ட்ட‌ விரோத‌ செய‌ல்க‌ள்,க‌ட‌த்த‌ல்,டூப்ளிகேட் த‌யாரித்த‌ல்,க‌ள்ள‌ கையெழுத்து,சூதாட்டம் ,ஸ்பெகுலேஷனில் ஈடுபாடும் தோன்றுகிறது.

1-7 ல் ராகு கேது;
கணவன் மனைவி ரெண்டு பேருக்கும் இதே அமைப்பு இருந்தா ஓகேன்னு சிலர் சொல்றாய்ங்க. இது சுத்தஜாதகர்கள் இந்த மாதிரி சிண்டிகேட்ல மாட்டி சீரழியாம இருக்க உதவுமே தவிர தோஷ ஜாதகர்களுக்கு இதனால உபயோகம் கிடையாது.
வேணம்னா “ஏன் இவர்/இவள் இப்படி இருக்கா(ர்)” ன்னு சிண்டை பிச்சுக்காம இருக்கலாம். ஒரு புரிதல் இருக்க வாய்ப்பிருக்கு. ஆனால் கணவன் மனைவி ரெண்டு பேருமே சதி,கிரைம்,சட்டவிரோத செய்ல்களில் ஈடுபடவும் வாய்ப்பிருக்குங்கோ..
இதன் க்ளைமேக்ஸ். கணவன்/மனைவி (ரெண்டு பேருக்கும் தோஷமிருந்தா தம்பதி ) தம்மவரை பிரிஞ்சு தனிமரமாகி,இருட்டில,இன்செக்யூரிட்டில வாழறதுதேன்வேண்டியதுதான் . ஆயுள் ஸ்தானம் வீக்கா இருந்தா இன்னம் ரிஸ்கு. இந்த அழகுல திருமண வாழ்வு எப்படி சிறக்கும்? குடும்ப மானம் தேன் பறக்கும்.
லட்சணங்கள்:
அளவுக்கு மீறி இளைத்த சரீரம், அல்லது ஊளை சதை கொண்டவராக இருக்கலாம் அல்லது சந்தேக புத்தி அல்லது அனைவரையும் நம்பி மோசம் போவதும் இருக்கலாம். ஈஸி மணி மீது கவர்ச்சி இருக்கலாம். நண்பர்கள், பங்குதாரர்கள், காதலியாலும், மனைவியாலும் தேவையற்ற பிரச்சினைகளில் மாட்டலாம். அ அவர் நோயாளியாகவோ, தங்களை விமர்சிப்பவராகவோ இருக்கலாம். உடலில் ஆச்சரிய குறி போன்ற மச்சம் இருக்கலாம் (கோட்டின் கீழ் புள்ளி இருக்க தேவையில்லை)
தங்கள் மனதில் எப்போதும் ஏதோ கெட்டது நடக்க போகிறது என்ற எண்ணம் பதைப்பு இருந்து கொண்டே இருக்கலாம். தேவையற்ற விசயங்களில் கூட ரகசியம் காப்பவராய் இருந்து இதரரின் சந்தேகத்திற்கும் ஆளாவீர்கள்.புதிதாக அறிமுகமாகும் நபர்கள் ,வெளி நாட்டினர், வெளி நாட்டு தொடர்புள்ளவர்கள், கரிய நிறம் கொண்டவர்கள், ஓரப்பார்வை பார்ப்பவர்கள், பூனைக்கண் கொண்டவர்களால் பிரச்சினையில் மாட்டலாம்.
பரிகாரம்:
பரிகாரம்; கூட்டு வியாபாரம் கூடாது. இதர மதத்தவர், இதர மொழியினரிடம் எச்சரிக்கை தேவை. லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது. இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது. மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. ரியாக்ஷன் நடக்கலாம். ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம். உடலில் இனம் புரியாத பலவீனம், வைத்தியர்களால் அறுதியிடமுடியாத பிரச்சினைகள் இருக்கலாம். எனவே துர்கை கணபதியை வழிபடவும்.பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.

2ல் கேது 8ல் ராகு:

தெலுங்குல ஒரு பழமொழி ” நோரு மஞ்சிதைதே ஊரு மஞ்சிதி” அதாவது நம்ம வாய்மொழி நல்லதா இருந்தா எந்த ஊரும் நல்ல ஊராவே தோணும்.

2ங்கறது வாக்கு ஸ்தானம். இங்கன ராகு உட்கார்ந்தா பீலா விடறது, ரீல் விடறது,எதிராளி பாடில பாம்பு கொத்தினா பாய்சன் ஏறிர்ராப்ல விசம் தோய்ந்த பேச்சுக்களை வாரி விடறது நடக்கலாம்.

இந்த சோடி பிரியாது/ மஹிளா ஸ்டேஷன்/ஃபேமிலி கோர்ட்டு போகாதுன்னு எப்படி சொல்றது?

ரெண்டுங்கறது நீங்க சாப்பிடற சாப்பாட்டை காட்டுது. கேது,ராகுன்னா தெரியுமில்லே .விஷம். ஒன்னு நீங்க பட்டினி துயர் தாங்காம விஷம் சாப்பிட்டுரனும் அ நீங்க சாப்பிடற சாப்பாடு விஷமா இறங்கனும். அதான் தலையெழுத்து.
பெண் ஜாதகத்தில் இது மாங்கல்ய தோஷம் எனப்படுகிறது. கணவன் ஜாதகத்தில் ஆயுள் பங்கமிருந்தால் அவர் உயிரே கூட போகலாம் என்பது இதன் பொருள். ஆயுள் பலம் உள்ள கணவர் அமைந்தால் மரணத்துக்கு ஒப்பான வறுமை வாட்டுவதை அனுபவத்தில் பார்க்க முடிகிறது.
இவருக்கு பேச்சு,வாய், கண்கள் வகையில் சில பிரச்சினைகள் வரலாம்.ஒவ்வொரு விஷயத்துக்கும் எதிர்த்து பேசுதல் அ பதில் பேச்சே இல்லாது மனதில் வைத்து குமைதல் ஆகிய குணமிருக்கலாம். குடும்பத்திற்கு பண நஷ்டம், கடன் ஏற்படலாம். பிக் பாக்கெட் போகலாம், கொள்ளை போகலாம், எவருக்கேனும் கொடுத்து ஏமாறலாம் குடும்பத்தில் கலகம் ஏற்படலாம்.
பரிகாரம்:
இதர மதத்தவர், இதர மொழியினர்,புதிதாக அறிமுகமாவோரிடம் எச்சரிக்கை தேவை. லாட்டரி, சினிமா , சாராய தொழில்கள் கூடாது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் கூடாது. இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை கூடாது.விஷ பூச்சிகள் உள்ள இடங்களில் தங்குதல் கூடாது. மெடிசின் எடுத்துக்கொள்ளும்போது ரொம்ப எச்சரிக்கை தேவை. ரியாக்ஷன் நடக்கலாம். ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம். உடலில் இனம் புரியாத பலவீனம், வைத்தியர்களால் அறுதியிடமுடியாத பிரச்சினைகள் இருக்கலாம். கொடுக்கல் வாங்கலை தவிர்க்கவும். (வட்டிக்கு ஆசைப்பட்டு) கழுத்தில் ஒரு புறம் துர்கை மறுபுறம் கணபதி உள்ள டாலரை அணிந்து இவர்களை வழிபடவும்.பாம்பு வடிவ மோதிரம் அணியவும். வேப்பந்துளிர் சாப்பிடவும், அருகம்புல் ஜூஸ் குடிக்கவும்.
( இன்ன பிற சர்ப்ப தோஷங்கள்/இதர தோஷங்கள் -பரிகாரங்கள் அடுத்த வாரம் – அதாவது 2011, மே 3 ஆம் தேதி முதல் வெளிவரும். அதுவரைக்கும் ? கந்தன்,வினோத்,டவுசர் பாண்டி இப்படி சிறப்பு விருந்தினர்கள் விருந்து படைப்பாய்ங்க)

10 thoughts on “திருமணவாழ்வில் சிக்கலா?

  puratchimani said:
  April 27, 2011 at 8:38 am

  நல்ல பதிவு…இது பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

  sugumarje said:
  April 27, 2011 at 8:42 am

  நல்ல அலசல்…. என்ன ஒரு விசேசம்னா… கேட்கும் பொழுது கிடைக்காதது, தானாகவே சுரக்கிறது… உங்க அறிவிலிருந்து தான் 🙂

  பொதுவான வலிமையான கிரகம் ராகு என்பதும் உண்மை தான்… அதன் ஆற்றல் அத்தகையது…

  //தோஷம் போகவே போகாது://
  அனுபவிக்க வேண்டியதை எப்படி விலக்க முடியும்?. எனது கருத்தும் அதேதான்.

   S Murugesan said:
   April 27, 2011 at 10:14 am

   வாங்க சுகுமார்ஜீ,
   அனுபவிக்க வேண்டியதை விலக்க முடியாது. அதை எப்படி அனுபவிக்கிறதுன்னு நாம ஆப்ட் பண்ணிக்கமுடியும். (பாதிப்பு துவங்கறதுக்கு முந்தியேன்னா ரெம்ப ஈசி. அப்பாறம்னா கொஞ்சம் கஷ்டம்)

   ஆமா பதிவு ஏதும் போடற மாதிரி இல்லியா? உங்களையெல்லாம் நம்பித்தேன் மே3 வரை தற்காலிக ஓய்வு அறிவிச்சிருக்கேன்

  வணக்கம். தலைப்புச்செய்திகள்.
  பிரபலமாகாத ஜோதிடரான திரு. டவுசர் பாண்டி அவர்கள் துப்பாக்கி சூட்டில் கருகி சாவு.

  விரிவான செய்தி.
  பலருடைய ஆயுளை துல்லியமாக கணித்துக் கூறி சாவடித்த கருநாக்கு ஜோதிடரான திரு.டவுசர் பாண்டி அவர்கள், கடந்த வாரத்தில் ஆந்திர மாநிலத்திலுள்ள புட்டப்பர்த்தி சத்ய சாய்பாபா என்ற மகானின் ஜாதகத்தை துல்லியமாக கணித்து “வருகின்ற ஏப்ரல் இருபத்தி ஐந்தாம் தேதிக்கு மேல் பாபா ஜீவசமாதி அடைவார்” என்று முன்கூட்டியே அறிவித்து பத்திரிகை* உலகில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

  இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் டாக்டர்.கலைஞர் அவர்கள் முக்தி(?) அடையும் நேரத்தை கணித்து வைத்திருந்த கட்டுரைத்தொகுப்புக்களை சென்னையிலுள்ள முன்னணி பத்திரிகை அலுவலகத்தில் சமர்ப்பிக்க சென்றார்.

  பலரின் தயக்கத்திற்கு பிறகு, ஒரு வளர்ந்து வரும் பத்திரிகை நிறுவனம் இதனை பிரசுரிப்பதாக தெரிவித்திருந்தது. இந்த விஷயம் கலைஞரின் உடன்பிறப்புக்களுக்கு தெரியவந்து அந்த பத்திரிகை நிறுவனத்தை நள்ளிரவில் சூறையாடினர். பின்னர் அந்த கும்பலின் வெறி அடங்காமல், டவுசர் பாண்டி அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குள் புகுந்து அவரது டவுசரை உருவி ஓட ஓட விரட்டி சுட்டுக் கொன்றனர்.

  தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ஜோதிடரின் சடலத்தை ஆய்வு செய்ததில் இந்த வீடியோ http://www.youtube.com/watch?v=Dl2XyXBjSZo திரும்பத்திரும்ப ஓடிக்கொண்டிருந்தது. இந்த சம்பவம் ஜோதிடர்களின் வயிற்றில் புளியை மட்டுமல்லாது இஞ்சியையும் கரைத்துள்ளது.

  ஜோதிடரின் பூதஉடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நான்கு நாட்கள் சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் 27 குண்டுகள் முழங்க உடல் தகனம் செய்யப்படும். தமிழகமே துக்கத்தில் மூழ்கியிருக்கிறது.

  டவுசர் பாண்டி said:
  April 27, 2011 at 5:10 pm

  இன்னாங்கடா இது. அதிசியமாகீது. இங்கன இம்புட்டு நேரம் உசுரோட இருந்த தலப்பு செய்தி திடீர்னு மாயமாய்ட்டு. கத்திரிக்கோல தூக்க ஆரம்பிச்சிட்டாய்ங்களா. 

  ஐ! இம்புட்டு நாளா நம்ம பேரு சந்துலதேன் இர்ந்திச்சி. இப்ப சந்தில தூக்கி வெச்சிட்டாய்ங்களே. ரொம்ப டேங்சு நைனா.

   S Murugesan said:
   April 27, 2011 at 5:32 pm

   பாண்டி,
   வோர்ட் ப்ரஸ்ல கமெண்ட் பப்ளிஷ் ஆக ஏதோ நிபந்தனை இருக்கு போல. இத்தீனி கமெண்ட் இத்தீனி நாளைக்குள்ள பப்ளிஷ் ஆகியிருக்கனும்னோ என்ன இழவோ/

   உங்க கமெண்ட் வோர்ட் ப்ரஸ்ஸை ஏமாத்தி பப்ளிஷ் ஆயிருச்சு போல. இப்ப நான் லாக் இன் ஆன்ப்ப வெய்ட்டிங்ல இருந்தது சந்திக்கு தள்ளி விட்டேன்.

  டவுசர் பாண்டி said:
  April 27, 2011 at 5:21 pm

  மே 3 வர எங்க சான்ஸா? நாங்களும் பட்டைய கெளப்புவோமுல்ல. அதுவரிக்கி கத்திரிக்கோலயும் எங்க கைல குடுத்தீங்கன்னா புண்ணியமாப்போவும். 

  Thevar said:
  April 27, 2011 at 7:54 pm

  எனக்குத் தெரிந்து, வால்ட்டர் தேவாரம்
  பொம்பளப் புள்ளேங்களா பொறுக்கி-
  அந்த நாதத்த நக்கி- வாழ்க்கை முழுதும்
  கேவலாமாக அலைகின்றார்.அவருக்கு என்ன தோஷம்?
  கேது கீழேயும்- இராகு நாக்குலேயும் குடியிருக்குமோ?
  கேதுவைக் கட் பண்ணனுமா- அல்லது இராகுவையா?

  வினோத் said:
  April 28, 2011 at 4:41 am

  தல … மே 3 வரை விடுமுறை சரி, நாங்க பதிவு போட்ட, கமேண்ட் , பதில்.. போடுவீங்களா?

   S Murugesan said:
   April 28, 2011 at 7:31 am

   வினோத் ஜீ,
   பாடின வாயும் -ஆடின காலும் சொம்மா இருக்குமா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s