ஆடி மாசம்+ கில்மா = ?

Posted on

என்னதான் வர்ர அமாவாசை வரைக்கும் லீவுனு அனவுன்ஸ் பண்ணிட்டாலும் மனசு கேட்குதா. அதான் தூள் பக்கோடா மாதிரி இந்த பதிவு.

ஆடி மாதம் என்றால் சூரியன் கடகத்தில் இருப்பார். சிம்மம் இவர் சொந்த வீடு. நீங்க ஷிஃப்ட் முடிஞ்சு வீட்டுக்கு வர்ரச்ச உங்க தெருமுனையில எந்த மாதிரி மூட்ல இருப்பிங்களோ அந்த மூட்ல சூரியன் இருப்பார்.

இவர் ஈகோவுக்கு காரகர். தீர்ந்து போற நிலையில உள்ள பேட்டரி சீக்கிரம் எக்ஸாஸ்ட் ஆயிரும்.அப்படி சனங்க ஈகோ எல்லாம் தலைவிரிச்சாடற மாசம் ஆடிமாசம்.

ஒரு நல்ல காரியம் நடக்கனும்னா நாலு பேரு ஈகோவை கழட்டி வச்சுட்டு இறங்கினா தான் நல்லபடியா நடக்கும்.

ஆளாளுக்கு முறுக்கிக்கினு கிடந்தா நடக்குமா? மனக்கஷ்டம் தான் மிச்சமாகும்.அதுலயும் கில்மாங்கறது “மானம் ஈனம் சூடு சுரணை “எல்லாத்தையும் கழட்டி வச்சா மட்டுமே கிடைக்கிற சமாசாரம். தப்பித்தவறி கிடைக்குதுனு வைங்க. எப்படி கிடைச்சிருக்கும்?

அதட்டியோ ,மிரட்டியோ கிடைச்சிருக்கும். அந்த மாதிரி மன நிலையில குழந்தை உருவானா அதனோட கேரக்டர் எப்படி இருக்கும்/ மேலும் ஆடியில் சூல் கொண்டா சித்திரையில் குழந்தை பிறக்கும்ங்கறது கணக்கு.

சித்திரை மாதம் குழந்தை பிறந்தா அதனோட ஜாதகத்துல சூரியன் உச்சத்துல இருப்பாரு. சூரியன் என்பவர் அகந்தையை தருபவர். சூரியன் கிரகக்கூட்டத்தின் தலைவர் என்பதால் அவர் உச்சம் பெற்ற ஜாதகத்தில் பிறந்த குழந்தை அதி விரைவில் அக்குடும்பத்தின் தலைவனாகும் நிலை வரலாம்.(அதாவது அப்பா காலி – பெரிய அண்ணன் காலி ) சூரியன் யோக காரகனா உள்ள லக்னத்துல பிறந்தாலே இதான் நிலைமை. இதுல பாவியாகி அ இருக்ககூடாத இடத்துல நின்னா இன்னா கதி?

பிராமணர்கள் நம்மை கூடாது என்று தடுத்து அவர்கள் மட்டும் ஆடியில் திருமணம் செய்ய காரணம் “எங்களால் புலன்களை கட்டுப்படுத்த முடியும்” என்ற அவர்களின் நம்பிக்கையே

தூள் பக்கோடா மாதிரி சில மேட்டரு பின்னால வருது பாருங்க.

1.மாசத்துக்கு 27 நாளா?
ஆமாம்னு ஒரு அய்யரு டிக்ளேர் பண்ணாரு. நம்ம புட்டபர்த்திக்காரர் என்னைக்கோ வாய் தவறி 96 வயசு வரை வாழ்வேனுட்டாரு. பாவம் அல்பாயுசுல (அவர் கணக்குப்படி) பூட்டாரு. “உறங்குவது போலும் சாக்காடு -உறங்கி விழிப்பது போலும் பிறப்பு”

மொத்தம் 27 நட்சத்திரம் தேன். சந்திரன் ஒரு ரவுண்டு முடிச்சா ஒரு மாசம் முடிஞ்ச மாதிரி தேனுட்டு கணக்கு காட்டி பாபா வாக்கு பொய்க்கலைனு சொல்றாரு. நீங்க இன்னா சொல்றிங்க?
.
2.ரஜினி மேல் காப்பிரைட் வழக்கு:

ரஜினி காந்தோட பாபா சினிமா ஞா இருக்கா? (ஏன் நைனா பயமுறுத்தறேனு அலுத்துக்காதிங்க) அதுல வானத்துல பறக்கிற காற்றாடி தன் கைக்கு வரணும்னு ரஜினி மந்திரம் ஜெபிப்பாரு. காத்தாடி புதுககாதலி மாதிரி வளைஞ்சு நெளிஞ்சு ரஜினி கைக்கு வரும்.

இந்த மேட்டர் ” ஆட்டோ பயாக்ரஃபி ஆஃப் எ யோகி” புஸ்தவத்துல இருந்து உருவப்பட்டிருக்கு. எழுதினவர்: பரமஹம்ச யோகானந்தா

இத்தனைக்கும் மேற்படி புத்தகம் பக்கா காப்பிரைட் ரிசர்வ்டு கேட்டகிரில இருக்கு. ஆராச்சும் ஒரு கார்டு எழுதிப்போடுங்கப்பா. ரஜினி மேல வழக்கு வந்தா நாலு பதிவு சூடா எழுதலாம்ல.

3. கலைஞர் செய்திகள் : ( மே 27,2011 )

2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான சார்ஜ் ஷீட்டில் முன்னாள் முதல்வர் கருணா நிதியின் பெயர் சேர்க்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து திமுக உயர்மட்ட செயற்குழு அண்ணா அறிவாலயத்தில் கூடி முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியது.

இதையடுத்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய தமிழக முன்னாள் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் இது யு பி ஏ கூட்டணியின் ஒற்றுமையை குலைக்க நீண்ட நாளாய் நடக்கும் சதியின் ஒரு அங்கமே என்றும் இதற்காக திமுக மத்திய அரசுக்கு தந்துவரும் ஆதரவை வாபஸ் பெறாது என்றும் தெரிவித்தார்.

( சத்தியமா இது காமெடிக்காக எழுதினதுங்கண்ணா மானங்கெட்டு போய் இதை கூட நெஜமாக்கிரப்போறாய்ங்க)

3. சின்னதா 2 கவிதைகள் :

நீ என்னை தொட்டு ஆந்திர அரசாய் இலவச மின்சாரம் வழங்கும்போது
தமிழக அரசாகி உன் கன்னங்களுக்கு சத்துணவு போட துடிக்கிறது மனசு

* * *
எறும்பு ஊர கல்லும் குழியும்.
என் கரங்கள் ஊர குழிந்ததுதான் உன் தொப்புளா?
.

Advertisements

11 thoughts on “ஆடி மாசம்+ கில்மா = ?

  puratchimani said:
  April 27, 2011 at 7:19 pm

  ஒ இதுக்கு இப்படி ஒரு காரணம் இருக்கா….புது செய்தி ரொம்ப நன்றி பாஸ்….ஆமா பிறக்கும் போதே கடகத்துல சூரியன் இருந்தா?
  நீங்க நம்ம வலைப்பூவில் கட்சி தருவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது பாஸ்.

   வினோத் said:
   April 28, 2011 at 5:19 am

   பிறக்கும்போது கடகத்தில் சூரியன் இருந்தா….
   ஓன்னு நிச்சயம்.. அதாவது …
   ஜீலை 15க்கு அப்புரம் பிறந்த நாள் கொண்ட்டுவாங்க…
   ஜாதக பலன்ன
   1) சூரியன் சொந்த வீட்டுக்கு 12ல் இருப்பதால் …சூரியன் சம்ந்த பட்ட உறுப்புகள் பலவீன்ம் இருக்கலாம் ..சூரியன் சம்பதப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு.. அரசாங்கம் சம்பந்தப்ட்ட பணிகளில் கவனம் தேவை. தந்தை, தந்தை வழி உறவு இல்லாமல் போக .. அல்லாது அவர்களால் இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு… ஆனா இரவில் பிறந்த குழந்தைக்கு சனி தந்தைக்கு காரகன்ன்னு தலை சொல்றார்..அப்போ இது சரியா வருமான்னு தெரியல. மேலும் லக்னம் நவாம்சம், பரல் எல்லாதையும் வச்சு இது மாறலாம்…

    puratchimani said:
    April 28, 2011 at 6:38 am

    தங்களுடைய பதிலுக்கு நன்றி வினோத்

  தனி காட்டு ராஜா said:
  April 28, 2011 at 5:45 am

  //சூரியன் என்பவர் அகந்தையை தருபவர். சூரியன் கிரகக்கூட்டத்தின் தலைவர்//

  அகந்தையை மட்டுமா சூரியன் தருகிறார் ….

  ஒரு விதத்தில் பார்த்தால் சூரியன் இல்லையேல் பூமியும் இல்லை …..முருகேசும் இல்லை …..தனி காட்டு ராஜாவும் இல்லை…

  சும்மா சும்மா …சூரியனை குறை சொல்லிட்டே இருக்க படாது தல 🙂

  சூரியன் உச்சம் பெற்றவன் தனிதன்மை உள்ளவனாய் இருப்பான்…..ஞானம் பெறவும் சரி ….தலைமை பதவி பெறவும் சரி சூரிய பலம் முக்கியம் தானே

  சின்ன குறையை பெரிது படுத்தாமல் …..சுரியனால் வரும் நல்ல பல பலன்களை சொல்லலாமே தல 🙂

   S Murugesan said:
   April 28, 2011 at 7:36 am

   த.கா.ராசா,
   மத்தவுகளை விட நாம தாழ்ந்துட்டா பிரச்சினை இல்லை. உசந்துட்டா பயங்கர நாஸ்தி. சூரியன் உச்சத்துல உள்ளவுக நிலையும் அதான். சூரியனே இல்லை. எந்த ஒரு கிரகம் உச்சமானாலும் இதான் பொசிஷன். அதுலயும் அவிக மணவாழ்வு ரெம்ப பரிதாபமா இருக்கும்.

  Arun said:
  April 28, 2011 at 9:58 am

  ஆடி மாதத்தில் பிறப்பது, நல்லதா (அல்லது) கேட்டதா . நான் பிறந்தது ஆடி மாதம்.

   S Murugesan said:
   April 28, 2011 at 10:12 am

   அருண் சார்,
   நீங்க பிறந்த நேரத்தை டிசைட் பண்ணது நீங்கதேன். அப்போ உங்க நோக்கம் முக்தி.

   நீங்க ஆடியில பிறந்தது உங்க முக்திக்கு நல்லது. உலக வாழ்க்கையில சில சிக்கல்கள் ஏற்படலாம்.

   தேவை ஒரு சின்ன புரிதல். சூரிய நமஸ்காரம் -காயத்ரி மந்திர ஜெபம் -ஆதித்ய ஹ்ருதயம் படித்தல் இத்யாதி செய்தா ரிலீஃப் கிடைக்கும்.

    Vinoth said:
    April 28, 2011 at 10:14 am

    நார்மல் டெலிவரிக்கு சரி..
    சிசேரியனுக்கு …? பிறக்கும் நேரத்தை எப்படி குழந்தை முடிவுசெய்யும் ?

    S Murugesan said:
    April 28, 2011 at 10:17 am

    வினோத் ஜி,
    நானும் பல சிசேரியனுக்கு டைம் வச்சு கொடுத்திருக்கேன். ஒரே ஒரு குழந்தை கூட நான் வச்சுக்கொடுத்த நேரத்துல பிறக்கலை. அதை வச்சுத்தான் சொல்றேன்.

    அதது ஒரு நேரத்தை டிசைட் பண்ணுது. அந்த நேரத்தை பொருத்து சிசேரியனா நார்மலானு டிசைட் ஆகுது பாஸ்!

  ஆடி மாதத்தில் ஏன் தம்பதியரை பிரித்து வைக்கிறாங்க என்பதற்கு அற்புதமான பதில் சார் இந்த பதிவு ..

  அப்புறம் கவிதை கவிதை அருவி மாதிரி கொட்டுதோ ? நல்லா இருக்கு சார்.

  டவுசர் பாண்டி said:
  May 1, 2011 at 2:48 am

  நானும் ஆடிமாசக்கடேசில பொறந்தேன். கெரகனம் இருந்த நேரத்துல. ரொம்ப கஷ்டந்தேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s