ம(ன)ண முறிவுகள் – ஜோதிட ஆய்வு

Posted on

ஹி ஹி ஒரு தாரம் ! 2 தாரம் ! 3 தாரம் ! : இரண்டாம் பகுதியை தான் இந்த தலைப்புல போட்டிருக்கேன்.

கடந்த பதிவுல விவாகரத்து -மறுமண யோசனைக்கான காரண காரியங்களை சொல்லியிருந்தேன். பரிகாரங்களை நாளைக்கு சொல்றேனு ச்சூ காட்டிட்டன். ஆக்சுவலா இன்னைக்கு பதிவே கூடாது ஐ மீன் கை கூடாதுன்னுட்டு சத்யசாய்பாபாவுக்கு கேன்சர்?ங்கற பதிவை போட்டுட்டு கழண்டுகிட்ட நொடி படக்குனு பாடி ரெஃப்ரஷ் ஆயிருச்சு.

உங்கள்ள யாரோ நமக்கு க்ளூக்கோஸ் கணக்கா எண்ண அலைகளை அனுப்பறாப்ல இருக்கு. நன்றி. உலகம் என்னை ஜஸ்ட் ஒரு ஜோதிடனாவே பார்க்குது ( என்ன ஒரு சோகம்?) பேசிக்கலா நான் ஒரு சத்யான்வேஷி. சத்தியத்துக்கான தேடல்ல , பாலைப்பயணத்துல கிடைச்ச ஒயாசிஸ் ஜோதிடம்.

என் தேடல்ல கிடைச்ச சகலத்தையும் என் சகபயணிகளுக்கான உங்களுக்கு அள்ளித்தந்துரனுங்கறதுதான் என் நோக்கம். நமக்கு கடவுள் பட்டமும் வேணா ஷுகர் வந்ததா? கேன்சர் வந்ததா? எலும்பு முறிஞ்சதா? மயக்கமருந்து தராய்ங்களா? அதனால கிட்னி,கல்லீரல் பல்பு வாங்கிருச்சானு கூட வெளி உலகத்துக்கு தெரியாத -தெரியக்கூடாத ஹிப்பாக்ரடிக் வாழ்க்கையோ என் தலைக்கு பின்னாடி பிரபையோ நமக்கு தேவையில்லை நைனா!

நம்ம முருகேசு இன்னா ப்ராண்டு தம் போடறாருனு கண்டுக்கினு தாளி ஒரு நாள் ஒரு பாயிட்டு சிகரட்டோட போய் நி………ம்……………மதியா அடிச்சுட்டு வரணும்யாங்கற எண்ணம் உங்களுக்குள்ள வந்தா போதும் நான் ஜெயிச்சுட்டேன்னு அர்த்தம்.

நிற்க. புருசன் பொஞ்சாதி மத்தியில பிரச்சினை வர்ரதுக்கு மஸ்தா ரீசன்ஸ் இருக்குங்கண்ணா. இதையெல்லாம் பெரிய லிஸ்டா போட்டு மோகம் 30 நாள் ஆசை அறுபது நாள் தானா?ங்கற தலைப்புல தொடர்பதிவே போட்டிருக்கன்.

தேவை உள்ளவுக படிச்சுருங்க. உங்களை சுத்தி உள்ளவுகளுக்கு தேவைன்னு பட்டா இந்த தொடர்பதிவை பத்தி போட்டுக்கொடுங்க. அண்ணாத்தை! குடும்பம் குடும்பங்கற மேட்டர் சுமுகமா போனாலே பாதி பிரச்சினை ஓவர்.

லஞ்சம் – ஊழல் – வன்முறை- பணத்தாசை -பதவி வெறி இப்படி பல பிரச்சினைகள் தீர்ந்து போயிரும். வீட்டை கோட்டை விட்டுருவமோங்கற சந்தேகத்துல – வீட்டை கெட்டியா பிடிச்சு வச்சுக்கனுங்கர துடிப்பாலயே நாட்டை கொள்ளையடிச்சுர்ராய்ங்கப்பா.

சூட்சுமத்துல மோட்சம் இருக்க நாயா பேயா அலைஞ்சு வீட்டை நாட்டை நரகமாக்கிர்ராய்ங்கப்பா. எத்தீனி தற்கொலை – எத்தீனி கொலை – எத்தீனி கிரைம்?

பொஞ்சாதியை வெறுக்கறவன், கழட்டி விட்டுரனும்னு நினைக்கிறவன், போட்டுத்தள்ளிரனும்னு நினைக்கிறவனை கேட்கிறேன்..

ங்கொய்யால நீ யாரு – இங்கன எதுக்கு வந்தே ..ஆக்சுவலா உனக்கென்ன வேணம்ங்கற மேட்டரே தெரியாத கிராக்கி உன்னை மாதிரியே இன்னொரு கிராக்கியை பிடிச்சு கட்டிக்கிட்டு அப்படியில்லை இப்படியில்லை நீ ஏமாத்திட்ட எட்செட்ரா எட்செட்ரா . டயலாக் எல்லாம் விடறயே..

அவளுக்குள்ளயாச்சும் ஒரு பூமிக்கடியில நீரோட்டம் மாதிரி ஒரு பாச இழை ஓடுது. நீ யாரு? ஜஸ்ட் ஒரு மிருகம். வேற ஏதாச்சும் உத்தமமான காரணம் இல்லாம தனித்து வாழற ஆணை பாருங்க. அவனோட வாழ்க்கைய பாருங்க. நாய் பிழைப்பு மேலுனு தோணிரும். .

சரிப்பா சரிப்பா கோச்சுக்கிடாதிங்க. பரிகாரமேட்டருக்கு வந்துர்ரன். இந்த தகராலுக்கெல்லாம் காரணம்னு சில மேட்டரை லிஸ்ட் அவுட் பண்ணியிருந்தேன். அதுக்கெல்லாம் பரிகாரம் இங்கே:

லக்னாதிபதியே பல்பு வாங்கறது:
ஜாதகம் ஒரு வீடுன்னா லக்னம் – லக்னாதிபதி கடைக்கால் மாதிரி . இவரே 6,8,12 ல மாட்டியோ அ இந்த அதிபதிகளோட சேர்ந்தோ -பார்க்கப்பட்டோ இருந்தா ஒரு பொஞ்சாதி மேட்டர் மட்டுமில்லை. எல்லா மேட்டருமே ஏறுமாறாதான் இருக்கும்.

லக்னாதிபதி 12ல் இருந்தா:
சர்வ காலம் தங்கள் முயற்சியில் பிறர் வேலைகள் எல்லாம் முடியுமே தவிர சொந்த வேலை முடியாது. ஞாபக சக்தி குறைவு, சொந்த கருத்து ,புத்தி இன்மை, எடுப்பார் கைப்பிள்ளையாக இருத்தல் தாழ்வு மனப்பான்மை அ எதிராளிகளை கிள்ளுகீரையாக பாவிப்பது, ஸ்திரமான அபிப்ராயம் இல்லாது போதல் போன்ற குணங்கள் ஏற்படும். அல்லல் அலைச்சல் தூக்கமின்மை , அ அதி நித்திரை ட்விரயமான பிரயாணங்கள்,இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படுவது போன்ற பலனும் ஏற்படும். சேல்ஸ் லைனில் இருந்தால் மட்டுமே சாதனைகள் செய்யலாம். தாங்கள் உற்பத்தி/சேவை துறைகளில் இருப்பதைவிட விற்பனை துறைக்கு மாறுவது பெட்டர்.
பரிகாரம்:
உங்க லைஃபே ஷாமியானா மேல நடந்த கதையா இருக்கும். இதுல ரோட் ரோலர் எல்லாம் ஓட்டப்பார்த்தா நாஸ்தி தேன். உங்க லக்னாதிபதியோட நிறம் எதுன்னு பார்த்து பெட் ரூம், பில்லோ கவர்,பெட் ஸ்ப்ரெட் (பெட் கவர்) , நைட் லேம்ப் எல்லாம் லக்னாதிபதியோட நிறத்துல இருக்கிறாப்ல அரேஞ்ச் பண்ணிக்கங்க. கில்மாங்கறது வாழ்க்கையில ஒரு பாகம் தேன். கில்மாவே லைஃபுனு நினைச்சா நாஸ்தி.

கிரகங்களின் நிறங்கள்:

சூரியன் -ஆரஞ்சு ,சந்திரன் – வெள்ளை (சாதா) , செவ் – மெருன் ,குரு -மஞ்சள் , சனி – நீலம், புதன் -பச்சை ,சுக்கிரன் -வெண் பட்டு ( வசதியில்லாதவுக பூ,பழம்லாம் ப்ரிண்ட் ஆன பில்லோ/பெட் கவர் உபயோகிக்கலாம்.

லக்னாதிபதி 6 ல இருந்தா:
ஜாதகர் மோசமான விமர்சகராக குறை சொல்பவராக இருப்பார். வாழ் நாள் முழுக்க எத்தனை தான் நல்ல நேரம் வந்தாலும் ஓரளவாவது நோய்,கடன்,சத்ரு தொல்லைகள் இருக்கும். மல்ட்டிபிள் பர்சனாலிட்டி ,ட்யூயல் காம்ப்ளெக்ஸ் போன்ற மன வியாதிகள் கூட வரலாம். (தன்னையே தான் விமர்சிப்பது -நொந்து கொள்வது – தன் மீதே தனக்கு ஆதங்கம்).
பரிகாரம்:
கையில பணம் இருந்தாலும் ஒவ்வொரு நாளையும் ஒரு ரூபாயாச்சும் கடன் வாங்கி ஆரம்பிக்கவும். இவிக செய்ற தொழில் எப்படி இருக்கனும்னா நோயாளிகள்,கடன் காரர்கள் , வழக்கு விவகாரங்கள் உள்ளவர்கள் தான் இவிக க்ளையண்ட்ஸா இருக்கனும். உ.ம் கேண்டீன் வச்சா வங்கியருகில், ஆஸ்பத்திரியருகில்,கோர்ட் அருகில் சின்ன சின்ன நோய்கள் வந்தால் சிகிச்சை கூடாது (பெரிய பிரச்சினைக்கான அடையாளமாக/ஆரம்பமாக இல்லாத பட்சத்தில்) .புனைப்பெயர் வச்சிக்கிட்டு சமூக கேடுகளை விமர்சிச்சு ஆசிரியர் கடிதம் போடுங்க. நோய் இல்லன்னா கூட சொம்மா அப்படி போய் ஜெனரல் செக்கப் பண்ணிக்கிட்டு வாங்க. ( மாசத்துக்கு ஒரு தரம்)
லக்னாதிபதி 8 ல் இருந்தா:
சாவு வீடு மாதிரி முகத்தை தூக்கி வச்சுக்கிட்டே இருப்பிங்க.உங்களை கெடுக்க யாரும் தேவையில்லை. நீங்களே போதும். எல்லாரையும் எதிரியா நினைப்பிங்க. உங்க மைண்ட் பஞ்சரான லாரி ட்யூப் மாதிரி. எந்த மோட்டிவேட்டரும் உங்களை மோட்டிவேட் பண்ண முடியாது. பாடி காட்பாடியா இருக்கலாம்.
மரணம் தொடர்பான தொழில்கள் உ.ம் ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, இறுதி சடங்கு காண்ட் ராக்ட்.. ,எல்.ஐ சி, நஷ்ட ஈடு பெற்றுதரும் ஏஜென்சி ஆகியவற்றில் பார்ட் டைமாகவேனும் ஈடுபடவும்

(இதர அம்சங்களை அடுத்த பதிவில் பார்ப்போம். ஆத்தா! வந்துட்டன்)

Advertisements

10 thoughts on “ம(ன)ண முறிவுகள் – ஜோதிட ஆய்வு

  puratchimani said:
  April 26, 2011 at 8:04 am

  பதிவு நல்லா இருக்கு பாஸ்,
  ஆமா உங்க பார்வயில சேர்க்கைனா ஏன்னா? ஒரே ராசியா இல்ல அதுல டிகிரி கிகிரீ பாபிங்களா

   S Murugesan said:
   April 26, 2011 at 1:53 pm

   புரட்சிமணி,
   இடம் பொருள் ஏவலை பொருத்து எல்லாமே பார்ப்போம்.

    puratchimani said:
    April 26, 2011 at 4:47 pm

    பாஸ், இதுதான் தன் வினை தன்னைசுடுங்க்றதா?

  superrsyed said:
  April 26, 2011 at 10:35 am

  பதிவு போடாட்டி டெலிபதி முரையில டார்ச்சர் பன்னுவோம்ல”‘

  சார் பதிவு நல்லா இருக்கு …கலர் பத்தி பேசியிருக்கீக ?

  நாங்க கேட்ட மாரகாதிபதி + கலர் பத்தின பதிவு எப்பதான் போடுவீக ?

  காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி … பாட ஆரம்பிச்சுடுவேன் .. ஆமாம்

   S Murugesan said:
   April 26, 2011 at 3:54 pm

   ஜானகி ராமன்,
   நீங்க ஒரு சிகப்பு ரோஜாவை சிகப்புன்னு எப்படி ஐடென்டிஃபை பண்றிங்க? சூரிய கதிர்ல உள்ள 7 நிறங்களில் சிவப்பு நிறம் அந்த ரோஜாமேல விழுந்து சிதறிப்போகுது.

   அதனாலதான் அது சிகப்பு ரோஜான்னு நீங்க அறிய முடியுது.

   பசியில இருக்கிறவன் என்ன ஏதுன்னு பார்க்காம லபக்கு லபக்குனு அள்ளி திணிச்சுக்கறாப்ல மாரகர்கள், பாவிகளுக்குரிய நிறங்களை ஜாதகர் உடல் க்ராஸ்ப் பண்ணிக்கும்.

   இதை தவிர்க்க அதே கிரகத்துக்குரிய கற்களை ப்ரிஸ்க்ரைப் பண்றோம்.

   ஒரு சில கேஸ்ல ஒரு கிரகம் உச்சமானதாலயே ப்ராப்ளம் வரும்.
   உ.ம் ஆயுள் ஸ்தானாதிபதி

   அப்போ அந்த கிரகத்துக்குரிய கல்லை ரெக்கமண்ட் பண்றோம்.

   சூரிய கதிரிலான 7 நிறங்கள்ள உங்க ஜாதகத்துக்கு வேண்டாத நிறங்களை தவிர்க்க ஒரே வழி அந்த நிற ஆடை அணிகலனைஅதிகம் யூஸ் பண்றதுதேன்.

   மன்சுலாயி?

  டவுசர் பாண்டி said:
  April 27, 2011 at 4:09 pm

  சூப்பர் நைனா. மேட்டரு டக்கராகீது

  mohanraj said:
  April 30, 2011 at 5:28 pm

  dear sir
  how about lagnathipathi in 3rd place.. this one also and hidden( maraivu ) place know?

   S Murugesan said:
   April 30, 2011 at 9:14 pm

   மோகன் ராஜ்,
   லக்னாதிபதி 3 ல உட்கார்ரது மணவாழ்வுக்கு நல்லதில்லை. இவிக லைஃப்ல ப்ரதர்ஸ்,ஜர்னீஸ் முக்கிய இடம் பெற்றிருக்கும். ரிஸ்க் இவிகளுக்கு ரஸ்கு சாப்பிடற மாதிரி. ஓடிக்கிட்டே இருப்பாய்ங்க. சவால் – சேலஞ்ச்னு வாழ்க்கைய வீணடிப்பாய்ங்க.

   தாய்குலம் வீக்கர் செக்ஸ் – மேலும் அவிக டிஃபென்ஸ் விளையாட்டைத்தான் விரும்புவாய்ங்க- அடிச்சு விளையாடறதெல்லாம் வேஸ்டுனு நினைப்பாய்ங்க.

   பெண்ணுக்கு அவள் பெற்றோர் -உறவு -வீடு இதான் முக்கியம். லக்னாதிபதி 3ல உள்ளவர் ஊரெல்லாம் சுத்தி எம்பேரு முத்தினு அலைஞ்சுக்கிட்டிருப்பாரு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s