ஒரு தாரம் ! 2 தாரம் ! 3 தாரம் !

Posted on

ஏலம் விடறப்பதேன் ஒரு தரம் ரெண்டு தரம் 3 தரம்பாய்ங்க. ஏதோ ஏலத்தை பத்தி எழுத வந்த பாஸுக்கு கை தவறி ஒரு கால் தவறி விழுந்துட்டாப்ல இருக்குனு நினைச்சுராதிங்க.

நான் எழுத வந்தது தாரத்தை பத்தித்தேன். அதாவது சம்சாரம்/பொஞ்சாதி/பெண்டாட்டி/பெட்டர் ஹாஃப்/இல்லத்தரசியை பத்தித்தேன்.

ஆராச்சும் எதுலனா தோத்துட்டா ‘ பெட்டர் லக் நெக்ஸ் டைம்! ‘ னுட்டு சொல்லுவம். போட்டி,தேர்தல்னு எல்லாத்துக்குமே பெட்டர் லக் நெக்ஸ்டைம் உண்டும். இவ்ள ஏன் மரணத்துடனான போராட்டத்துல தோத்துப்போயிட்டாலும் மறுபிறவினு ஒரு சான்ஸ் இருக்கு (அட்லீஸ் இருக்கிறதா நம்பலாம்) ஆனால் மனைவிங்கற விஷயத்துல பெரும் சிக்கல் இருக்கு.

அது என்னனு இந்த பதிவுல பார்ப்போம். பூர்வ கருமம் எந்த மேட்டர்ல வேணம்னா வேலை செய்யாம போயிரலாம். ஆனால் மிசஸ் விஷயத்துல மட்டும் மிஸ்ஸே ஆவறதில்லை . ( ஹிஹி ஒரு பேச்சுக்குத்தேன் – நாம ஒரு சப்ஜெக்டை டீல் பண்றச்ச மத்த சப்ஜெக்டையெல்லாம் அவுட் ஆஃப் ஃபோக்கஸுக்கு கொண்டு பொயிருவம் – நீங்க கண்டுக்கிடாதிங்க)

இந்த கல்யாண மேட்டர்ல மெட்டீரியல் மேட்டரை எல்லாம் விட்டுட்டு (அதை எழுத நிறைய சனம் இருக்கப்பு) ஜோதிடம் -ஆன்மீகம்-மனோதத்துவம் என்ற கோணத்துல மட்டும் இந்த பதிவை கொண்டுபோக உத்தேசம்.

எவனெல்லாம் பொஞ்சாதியால சுகப்படனும்னு எழுதியிருக்கோ அவனுக்கு காதல், கண்ணாலம் பண்ணனுங்கற எண்ணமோ ஆசையே கூட வராம போயிரலாம்.அட . கண்ணாலமே நடக்காம கூட போயிரலாம். ( எவளோ ஒருத்தி பொஞ்சாதிகணக்கா சுகத்தை கொடுத்துக்கிட்டு இருக்கவும் -இவன் அன் மேரீடாவே இருந்துரவும் கூட வாய்ப்பிருக்கு)

ஆனா தாளி எவனெல்லாம் பொஞ்சாதியால இம்சை படனும், அவள் கிட்டே மத்தடி வாங்கனும்னு இருக்கோ அவனுக்கு மட்டும் எவளோ ஒரு சாடிஸ்ட் மனசுக்குள்ள உட்கார்ந்து மணி அடிச்சுர்ரா. காதல்ல வெற்றியும் கிடைச்சு நெத்தியடியா கண்ணாலம் நடக்குதுப்பா.

எவள் இவனுக்கு ராஜசுகம் கொடுக்க பிறந்திருக்காளோ அவளை பார்த்தா இவனுக்கு லீவு நாள்ள போஸ்ட் பாக்ஸ் மாதிரி தோணும். எவள் இவனுக்கு நரகத்தை பரிசளிக்கனுமோ அவளை பார்த்தா தேவதை மாதிரி தோணும்.

இந்த குழப்பத்துக்கு காரணம் என்னனா நம்மை வழி நடத்தறது நம்ம ஈகோ. மனித மனம் தான் இயற்கையின் பிரிக்க முடியாத பாகம்ங்கற உண்மையை மறந்து தன்னை மையப்புள்ளியா ஊகிச்சுக்கிட்டு இயற்கையிலிருந்து விலக விலக அதுக்குள்ள நுழையற வைரஸ் தான் ஈகோ.

இந்த ஈகோ காரணமாத்தான் மன்சன் சுஸ்தாயிட்டு தப்பான ஆளை செலக்ட் பண்ணிர்ரான். அப்பால மேட்டரை புரிஞ்சுக்கிட்டு அதுலருந்து விடுதலைக்கு தவிக்கிறான். இன்னொரு லைஃப் கிடைக்காதானு ஏங்கறான்.

மனைவியால் சுகப்படும் தலை எழுத்து இருந்தால் ஒரு மனைவியாலயே சுகப்பட்டிருக்கலாம்,. அந்த தலை எழுத்து இல்லாமத்தேன் இந்த நிலை. மறுமணம் செய்தாலும் இந்த இழவு தாங்கற சத்தியம் அவனுக்கு புரியமாட்டேங்குது..

தெரியாத பிசாசை விட தெரிஞ்ச பேயே மேலுனு சொல்வாய்ங்க. நல்ல தெரிஞ்ச – ஸ்டடி பண்ண ஒரு பார்ட்டியையே டீல் பண்ண முடியாத பார்ட்டி மறுமணம் செய்துக்கிட்டு என்னத்தை சாதிக்க முடியும் ?

ஒரு பத்து ரூபாயை கொடுத்து சில்லறை கேட்கறோம். கடைக்காரருக்கு எட்டு இடமும் குளிர்ந்திருந்தா சில்லறை கொடுப்பாரு. எவ்ள கொடுப்பாரு பத்து ரூபாதான் கொடுப்பாரு. ஒடனே நாம டிஸ் அப்பாய்ண்ட் ஆகி அடுத்த கடைய பார்ப்போமா/ அப்படியே பார்த்தாலும் அந்த கடைகாரர் பதினோரு ரூபாயா தாப்போறாரு. ஊஹூம்.

இரு தாரம்ங்கறது ஒரு யோகமில்லேனு சனத்துக்கு புரியமாட்டேங்குது. இது ஒரு சாபம். ஏழேழு தலை முறையா தலை முறை தலைமுறையாய் தொடர்ந்து வர்ர சாபம். பாட்டன் பூட்டன் பண்ண பாவம் தேன் நம்ம தலையில விடிஞ்சுதேன் தாரம் சரியில்லாம மறு தாரம் பத்தி சிந்திக்கவேண்டிய நிலைம வந்துருச்சுன்னு புரிஞ்சிக்கிடனும். அதை விட்டுட்டு பிடிவாதமா இன்னொரு விஷ பரீட்சைக்கு தயாரானா
ஏழேழு தலை முறைக்கு தலை முறை தலைமுறையாய் மண வாழ்வில் சிக்கல் மற்றும் மறுமணம் தொடரும்.

நீங்க தில்லு துரையா இருந்து “அதெல்லாம் நான் பார்த்துக்கிடறேன்”னு கோதாவுல இறங்கப்போறிங்கன்னா சின்ன மேட்டர் உங்க பாவம் – . ஆண் வாரிசுகள் தலையில விடிஞ்சாலும் பரவால்லை பெண் குழந்தைகளுக்கு நடந்தா? ரோசிச்சு பாருங்கண்ணா.

ஒரு ஆம்பள மறுதாரத்துக்கு திட்டம் போட்டா இதெல்லாம் நடக்கும் சரி.அவனுக்கு நரகத்தை காட்டி மறுதாரம் பத்தி நினைக்கிற ரேஞ்சுக்கு விரட்டின பொம்பளைக்கு எந்த தண்டனையும் இல்லேனு கேப்பிக. சொல்றேன்.

உங்களுக்கு விதிக்கப்படாதது உங்களுக்கு நடக்கவே நடக்காது. அவிகனால டார்ச்சர் அனுபவிக்கனும்னு உங்க தலையில எழுதியிருந்தால் தவிர அவிக உங்களை டார்ச்சர் பண்ண முடியுமா? ரோசிச்சு பாருங்க.

இன்னொரு பாய்ண்ட் ஜன்மத்துல உள்ள கிரகங்கள் ஏழை பார்க்கும் -ஏழுல உள்ள கிரகங்கள் ஜன்மத்தை பார்க்கும்.

அதாவது அவிக ஜாதகம் உங்களை – உங்க ஜாதகம் அவிகளை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும். உங்க மனைவி எப்படியிருக்கனுங்கறதை நீங்களும் ( உங்க ஜாதகம் பாஸ்) சேர்ந்துதான் முடிவு பண்றிங்க. இதுக்கு அவிகளை மட்டும் எப்படி குறை சொல்லமுடியும்?

மேலும் என் அனுபவம் தியரி என்னன்னா ஒவ்வொரு பொம்பளைக்குள்ளும் ரெண்டு பொம்பளை இருக்கா. ஒருத்தி இப்போ நீங்க நான் பார்க்கிற பொம்பளை. இன்னொருத்தி அன்புமயமா -அன்பை தவிர வேறு எதையும் எதிர்பார்க்காத இயற்கையின் பிரதியா ( காப்பி), நிதியா (ட்ரஷர்) ,பிரதி நிதியா (ரெப்) இருக்கிற பொம்பளை.

கம்ப்யூட்டர்ல அட்மின் – யூசர்னு பைபாஸ் ஆகிறோமே அப்படித்தேன். சரி என்னத்தான் நான் சொன்னாலும் இந்த டார்ச்சர் தாங்க முடியலைனு இன்னொரு லைஃபுக்கு ஆசைப்பட்டா அதுக்கும் கட்டைய போடறிங்களே. சரி ஓஞ்சு போவட்டும் இந்த இம்சை குறைய – விவாகரத்து இத்யாதி வரை கதை போயிராம மினிமம் கியாரண்டியோட குடும்பவாழ்க்கைய ஓட்ட எதுனா பரிகாரம் சொல்லுங்கனு கேப்பிக சொல்றேன்.

இந்த ரூட்டுக்கு தறி கெட்டு ஓடற ஜாதகங்கள்ள உள்ள எஃபெக்ட்ஸை நாலஞ்சு பாய்ண்ட்ல அடக்கிரலாம். லக்னாதிபதியே பல்பு வாங்கறது , ஏழாமிடத்ததிபதி ஆய் பையனாகிர்ரது , செவ் தோஷம்,சர்ப்பதோஷம்,
குரு கெடறது ,சுக்கிரன் கெடறது. இதுக்கெல்லாம் நம்ம ஸ்டைல்ல பரிகாரம் தரேன். ஆனால் நாளைக்கு.

33 thoughts on “ஒரு தாரம் ! 2 தாரம் ! 3 தாரம் !

    superrsyed said:
    April 24, 2011 at 7:49 pm

    தல பதிவுல முக்கியமான மேட்டர கம்மிங் சூன் போட்டுட்டு நாலைக்கு வேர மேட்டருக்கு த்வ்விடாதிங்க‌
    அப்புரம் ரொம்ப பெஜாரா ஆயிடும் நாலைக்கு தயவுசெய்து கன்டிப்பா சொல்லிடுஙக

      S Murugesan said:
      April 24, 2011 at 8:03 pm

      சையத் பாய்,
      கவலையே படாதிங்க. நாளைக்கு நிச்சயம் போட்டுர்ரன்

    superrsyed said:
    April 24, 2011 at 8:22 pm

    சரி.அவனுக்கு நரகத்தை காட்டி மறுதாரம் பத்தி நினைக்கிற ரேஞ்சுக்கு விரட்டின பொம்பளைக்கு எந்த தண்டனையும் இல்லேனு கேப்பிக. சொல்றேன்.

    இதபதியும் சொல்லுஙகு

      S Murugesan said:
      April 25, 2011 at 5:05 am

      சையத் பாய்,
      ஏற்கெனவே சொல்லியிருக்கன்.அவிக செயலுக்கு உங்க ஜாதகமும் 50 சதவீதம் பொறுப்பு. மேலும் உங்க ஜாதகத்துல 7 ஆவது இடத்தை லக்னமா வச்சு அனலைஸ் பண்ணா அவிக ஜாதகம் வரும்.அவிக ஜாதகத்துல 7 ஆவது இடத்தை லக்னமா வச்சுப்பார்த்தா உங்க ஜாதகம் வரும்.

      மேலும் பெண் என்பவள் பாதிக்கப்பட்டு பாதிக்கப்பட்டு ( ஜீன்ஸ்,பெற்றோர்,என்விரான்மென்ட், உறவுகள்) பாதிக்கற நிலைக்கு வர்ரா. துக்கத்துல உள்ள மனம் துக்கப்படுத்தி பார்க்க ஆரம்பிச்சுரும்.

      இந்த விஷயம் ஆணுக்கும் பொருந்தும் தான்.ஆனால் இவன் நினைச்சா (வில்) அதை திருப்பியடிச்சு தாளி.. நீ என்னை துக்கப்படுத்தினாலும் – நான் துக்கப்படுத்தறவனா மாறமாட்டேன்னு உறுதியா நிக்கலாம்.

      ஆனால் பெண் நீல லிட்மஸ் காகிதம் மாதிரி. ஒடனே மாற்றத்துக்குள்ளாயிர்ரா

    சார் 4-5 நாளா ஊரிலே இல்லே … அதான் வரமுடியலே…

    மிக வித்தியாசமான அனுகுமுறை …

    //மனைவியால் சுகப்படும் தலை எழுத்து இருந்தால் ஒரு மனைவியாலயே சுகப்பட்டிருக்கலாம்,. அந்த தலை எழுத்து இல்லாமத்தேன் இந்த நிலை. மறுமணம் செய்தாலும் இந்த இழவு தாங்கற சத்தியம் அவனுக்கு புரியமாட்டேங்குது..//

    மிகமிக சரியான வார்த்தை …

    வாரியார் சுவாமிகள் கூட நகைச்சுவையா சொல்வாரு … நான் ஒரு காலத்திலே இரண்டாம் திருமணம் பண்றவங்களை தடுத்தேன் .. அப்புறம் அனுமதிக்க ஆரம்பிச்சுட்டேன் … ஏன் தெரியுமா ? அவன் இங்கேயே நரகத்தை அனுபவிச்சிடுவான் .. அப்புறம் அங்கே அதைப் பத்தி அவன் கவலைப் படத்தேவையில்லை பாருங்க ….

    என்று அற்புதமாக சொல்வார் … இக் கருத்தையே நீங்களும் உங்க பாணியிலே சொல்லியிருக்கீக .. SUPER

    ஒரு நாட்டு (?) மன்னர் ஒருவர் ஜோதிடக்கலையில் வல்லவராயிருந்தார். அவருக்கு ஒரு மகன் பிறந்தவுடன் அவனது ஜாதகத்தைக் கணித்துப் பார்த்த மன்னர் அவனது ஆயுளை 90 வயது என நிர்ணயித்தார்.

    ஆனால், அவரது அரசவையில் இருந்த ஆஸ்தான ஜோதிடரோ அவனது ஆயுளை 12 வயது மட்டுமே என்று கணித்தார்.

    இதைக் கேட்ட மன்னரோ கொதித்தெழுந்தார். கோபத்தில் அந்த ஜோதிடரை நாட்டை விட்டே வெளியேறும்படி ஆணைஇட்டார். ஜோதிடரும் வெளியேறினார்.

    ஆனால், வெளியேறிய ஜோதிடரின் கணிப்புப்படி பன்னிரண்டு வயதில் மகன் மரணமுற்றான். மன்னரால் மகனின் மரணத்தை தாங்க முடியவில்லை. அவருக்கு ஜோதிடத்தின் மீது அதிக வெறுப்பு ஏற்பட்டது.

    அந்த வெறுப்பில், தான் அதுவரை பயின்ற ஜோதிட புத்தகங்களை எல்லாம் ஒரு பெரிய மூட்டையாகக் கட்டி தனது மகன் எரிந்து கொண்டிருந்த சிதையில் தூக்கி எறியப் போனார்.

    அப்போது ஒரு கை அவரை அச்செயலைச் செய்யவிடாமல் தடுத்தது. யாரென்று திரும்பிப் பார்த்தார் மன்னர். அது பழைய ஜோதிடரின் கை.

    “மன்னா! ஜோதிடத்தின் மீது ஏன் இந்த வெறுப்பு?” என்றார் ஜோதிடர்

    “ஜோதிடம் பொய்; கோள்கள் பொய்; கடவுள் பொய்; எல்லாமே பொய்; பொய்யான ஜோதிட நூல்களைப் படிப்போது மடமை; மடமை;” என்று கத்தினார்; கதறினார் மன்னர்.

    “மன்னா! ஜோதிட சாஸ்திரம் என்ன தவறு செய்தது? தவறு செய்தது நீதானே!” என்றார் ஜோதிடர்.

    “நான் என்ன தவறு செய்தேன்?” என்றார் மன்னர்.

    “உனது மகனுக்கு வயது தொண்ணூறு என்று எப்படி தீர்மானித்தாய்?” என்றார் ஜோதிடர்.

    “லக்னத்தை குரு பார்ப்பதால் அப்படி தீர்மானித்தேன்” என்றார் மன்னர்.

    “உறங்கிக்கொண்டிருக்கும் குரு லக்னத்தை எப்படிப் பார்ப்பார்?” என்று கேட்டார் ஜோதிடர்

    “குரு உறங்கிக் கொண்டிருக்கிறாரா? எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லையே! என்று ஆச்சரியத்துடன் கூறினார் மன்னர்.

    “கிரகங்களுக்கு சமயம் என்ற ஒரு கணிதம் உண்டே! அக்கணிதத்தை நீ ஏன் போடவில்லை. அதன்படி பார். குரு உறங்கிக்கொண்டிருக்கிறார்” என்றார் ஜோதிடர்

    அதன் பிறகுதான் மன்னரின் புத்தியில் தான் செய்த தவறு உரைத்தது. கிரக சமய கணிதம் போட்டுப் பார்த்த போது குரு உணங்கிக்கொண்டிருப்பது மன்னருக்கு தெரிய வந்தது.

    உறங்கிக்கொண்டிருக்கும் குருவால் எப்படி பார்க்க முடியும்? குரு உறங்காது இருந்திருந்தால் லக்னத்தின் மீது அவரது பார்வை பட்டு அவன் தொண்ணூறு வயது வரை வாழ்ந்திருக்க முடியும்.

    இதை உணர்ந்த மன்னர் அந்த இடத்திலே ஜோதிடரின் காலில் விழுந்து அவரது ஜோதிட ஞானத்துக்கு அடிமையானார். அதன் பின்னர் ஜோதிடக்கலையின் பல நுட்பங்களையும் தெரிந்து கொண்டு ஜோதிட விற்பன்னரானார்.

    கிரக சமய கணிதத்திற்கு எவ்வளவு சக்தி உண்டு என்பதையும், அதற்கு ஜோதிடத்தில் எவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதை இந்த ஸ்டோரி உங்களுக்கு ஏதும் உணர்த்துகிறதா? இல்லையா! சரி. கதை கதைதான். ஜோதிடம் ஜோதிடம்தான்.

    சரியப்பா. எதற்காக இந்தக்கதை? என்று நீங்கள் கேட்கலாம். நியாயமான கேள்விதான்! நான் கடந்த மாதம் ஒரு ஜோதிட இதழுக்கு “சாய்பாபாவின் மரணம்” என்ற தலைப்பில் பகீரங்கமான ஜோதிடக்கட்டுரையை கிரக ரீதியான ஆதாரங்களுடன் விளக்கி அனுப்பி இருந்தேன். இது வரையில் எந்தவிதமான ரெச்பான்சும் இல்லை. திருப்பியும் அனுப்பவில்லை. நான் அந்தக் கட்டுரையில் பாபா ஏப்ரல் இருபத்தி ஐந்தாம் தேதிக்கு மேல் உயிரோடு இருக்க மாட்டார் என்று குறிப்பிட்டு இருந்தேன். அதற்குள் பாபாவும் போய் சேர்ந்து விட்டார். சரி நல்லா இருக்கட்டும் அந்த பதிப்பாசிரியர். நான் தற்சமயம் தமிழக முதல்வரான மாண்புமிகு. கருணாநிதி அவர்களின் மரணத்தை கணித்து வைத்திருக்கிறேன். இதை இணையதளத்தில் வெளியிட விரும்புகிறேன். தங்களது அனுமதி கிடைக்குமா? ஏதேனும் எதிர்ப்புகள் வருமா?

      Thirumalaisamy said:
      April 25, 2011 at 5:11 am

      சூப்பர்…மரணம் என்பது நிச்சயம் கருணாநிதிக்கு உண்டு , அது அனைவருக்கும் தெரிந்தது . ஆனால் அது எப்போது என்பதை கணித்து சொல்வது எவளவு பெரிய விஷயம் , அதுவும் எவளவு பெரிய தில்லா லங்கடி !!!. அது சரி என்ன புதுசா இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்டுட்டு !!! ச்சே ச்சே ! (( கொல்லப்பட்டால் சரி நு ..கெளப்புற ஆளாச்சே நீங்க !!! ) ..விடுங்க ஜூட் …ஆத்தா இருக்கும்போது எவன பத்தி என்ன பயம் ….

      வினோத் said:
      April 25, 2011 at 5:47 am

      கண்டிப்ப பதிவு போடுங்க மேலும் மரணத்தை கணிப்பது எப்படின்னு பதிவு போடுங்க….
      சோதிடம் படிக்குற எங்களுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும்
      நன்றி…

      kandhan said:
      April 25, 2011 at 7:01 am

      Graha Avastha, Kota Chakra பத்தி கேள்விபட்டு இருக்கென். பதவ போடுங்களென்.

        S Murugesan said:
        April 25, 2011 at 7:48 am

        கந்தன்,
        பிறந்த குழந்தை ரெம்ப வீக்கா இருக்கும் ( ஐ மீன் நம்மோட ஒப்பிடறப்ப) அதனால உள்ள சக்தியையாவது எக்ஸாஸ்ட் ஆகாம பார்த்துக்கனுமில்லையா? அதனாலதேன் கட்டைவிரலை மடக்கி மத்த நாலு விரலால மூடி வச்சிருக்கும்.

        இதுக்கும் ஏதாச்சும் பேர் இருக்கும். நமக்கு ஞா இல்லை

        S Murugesan said:
        April 25, 2011 at 7:50 am

        கந்தன்,
        கிரஹ அவஸ்தா என்றால் அந்த கிரகத்தின் நிலைனு அர்த்தம். உ.ம் நித்ராவஸ்தான்னா தூக்கத்துல இருக்கு.

        சீக்கிரமே போட்டுருவம். சரக்கு நிறைய இருக்கு. நேரம்தான் இல்லே

        kandhan said:
        April 25, 2011 at 8:00 am

        தல, அத தான் இந்த கதைல குறிப்பிட்டு இருக்காங்கறது தான் என் சந்தேகம். நம்ம ஆளூங்க முக்கால் வாசி பேர் ஷட்பல்(Shadbal) கூட பாக்றது இல்ல. ((பி.கு: நம்மளோட் கட்டம் விஷயம்….? அவசரம் ஒன்னும் இல்ல. ஆனா, ஈமேல் கிடைச்சிருச்சானு மாத்ரம் கன்பரம் பன்னீடீங்கனா..)

        S Murugesan said:
        April 25, 2011 at 9:48 am

        கந்தன் !
        கதையில வர்ரது அதே பாய்ண்டுதேன். உங்க டர்ன் புதன் கிழமை வந்துரும். அப்பாறம் இமெயில் மழைதான்.குடை கிடை ரெடி பண்ணிக்கங்க. கடேசில கம்ப்ளீட் எடிஷன் அனுப்பிர்ரன்

      puratchimani said:
      April 25, 2011 at 7:58 am

      கண்டிப்பாக பதிவு போடுங்கள் இல்ல என்ன்டுடைய மின்னஞ்சலுக்கு அனுப்புங்க…அப்படியே குரு எப்ப தூங்குவார் தூங்க மாட்டார்னு சொல்லுங்க….
      நீங்க ஓகே சொன்னா மின்னஞ்சல் தருகிறேன்

    Thirumalaisamy said:
    April 25, 2011 at 4:57 am

    ரொம்ப சந்தோசம் …உங்களோட நாளைய பதிவுக்கு நிச்சயம் பல பேர் வைடிங் நு தோணுது ….நல்லது நடந்த சரி ..அண்ணே கட்டண சேவை பத்தி சில தகவல் வேணும் (பேசணும் ). கைபேசி நம்பர் கிடைக்குமா ?

    Thirumalaisamy said:
    April 25, 2011 at 5:16 am

    அண்ணே வணக்கம் நே ….
    சின்ன விண்ணப்பம் ..உங்களுக்கு நம்ம கட்டத்தை அனுப்பி15 நாள் ஆச்சு …உங்க ஜோதிடத்தை அறிய ஆவல் அதிகமாய் இருப்பதன் காரணமே இந்த கமென்ட் …தவறா கேட்டிருந்தா மன்னிக்கவும் .

      S Murugesan said:
      April 25, 2011 at 6:31 am

      திருமலை சாமி அவர்களே,
      நீங்க எந்த மெயில் ஐடிலருந்து எந்த மெயில் ஐடிக்கு அனுப்பிட்டிங்கனு தெரியலை. அல்லா மெயில்லயும் சர்ச் பார்த்தாலும் சிக்கமாட்டேங்குது ப்ளீஸ் ரீ சென்ட் இட்.

      முந்தியெல்லாம் பதிலை சைட்லதானே போடுவேனு இருந்தன். இப்பல்லாம் உடனடி லாட்டரி மாதிரி மெயில் மூலமாவே பதில் தந்துர்ரன்.

    வினோத் said:
    April 25, 2011 at 5:50 am

    அண்ணன் முருகேசன் என்ன பதில் போடுவார்ன்னு பார்க்க நானும் 2 நாளா ஆவல இருக்கேன் கண்டுக்க மாட்டேங்கிறாறே…சோதிடத்தையே டச் பண்ணாம அரசியல் பதிவு போட்டது தப்பாய்டுதோ? அப்புரம் பொது நலன் , நாட்டு முன்னேற்றம் எல்லாம் சேர்த்து எழுதுனா பரிசு தர்ரதா சொன்னிங்களே.. இந்த பதிவுக்கு பரிசுன் உண்டா தல…?

    http://anubavajothidam.com/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-vs-%E0%AE%87/

      S Murugesan said:
      April 25, 2011 at 6:26 am

      வினோத் ஜீ,
      உங்களுக்கு பரிசு உண்டோ இல்லையோ அதை கடவுள் தான் டிசைட் பண்ணனும். ஆனா உங்க பதிவு எனக்கு ஒரு பரிசு மட்டுமில்லே. இன்ப அதிர்ச்சி.

    Mani said:
    April 25, 2011 at 6:27 am

    திரு. பிரபலமாகாத ஜோதிடர் அவர்களுக்கு தங்களது பின்னூட்டம் மிகவும் அருமையாக இருந்தது. நீங்கள் எழுதிய குரு பார்வை பற்றிய சமய கணிதம் என்பது புதிய விஷயமாக உள்ளது. அதை பற்றி மேலும் விபரமாக அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது. தாங்கள் விளக்க முடியுமா. தாங்கள் பிரபலங்களின் மரணத்தை கணித்து எழுதியுள்ளதாக உள்ளது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. தங்களது வலைதள முகவரி அல்லது மின்னஞ்சல் விபரம் தெரியப்படுத்தினால் தங்களைப்பற்றி அறிந்துகொள்ள மிகவும் உபயோகமாக இருக்கும். மிக்க நன்றி.

    Mani said:
    April 25, 2011 at 6:36 am

    எனது கணிப்பின் படி கலைஞர் ஜாதக்தில் அவருக்கு சுக்கிரதசையில் செவ்வாய் புத்தி காலத்தில் மரணம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. அக்காலம் டிசம்பர் 2011 வாக்கில் வருகிறது. ஜோதிடத்தில் எதையும் உறுதியாக கூறமுடியாது எனவே பொருத்திருந்து பார்ப்போம்.

    அந்த பிரபலமாகாத எழவு சோசியக்காரன்(!) நாந்தேன்.

    பரவால்லப்பா, சனங்க எழவு ஸ்டோரிய இம்புட்டு ஆர்வமா படிப்பாகன்னு நான் நெனச்சி கூட பாக்கலே. மக்க மனுசாளுக்கு நன்றி. குறிப்பா என்னோட எளவெடுத்த ஸ்டோரிய எடிட் பண்ணாம போட்டதுக்கு முர்கேஸ் நைனாவுக்கும் நன்றிய தெரிவிச்சிக்கிடுறேன். அந்த “பரதேசி” (?) மாத இதழுக்கு அனுப்புன கடுதாசி வெவரத்த கேக்க, ஏறுனா ரயிலு எறங்குனா ஆப்பாயிலுன்னு ஒரு தில்லோட ட்ரெயின் ஏறுனதாள இங்க ஆப்சென்ட் ஆகவேண்டியதாச்சி. என்னோட அறிக்கைய வெளியிடாத அந்த அரிப்பெடுத்த கை சாரி அறிக்கைய எடுத்த கை நல்லா (!) இருக்கட்டும். நமக்கு சாதகத்துள குரு (கன்ன தொரந்துட்டுதேன்) ஒண்ணா நம்பர் வூட்டோட டீலிங் வச்சிக்கினு இருக்குறதால நம்மள தக்க சமயத்துல காப்பாத்த வந்துருவாகன்னு ஒரு நப்பாசைலதேன் இந்த மாரி வேலையில உசுர கைல புடிச்சிக்கினு தில்லோட எறங்கிர்றது.

    இன்னாங்கடா இது டவுசரு மேட்டர சொல்லாம ஓவரா பிலிம் காட்டிக்கினு இருக்கான்னு கோச்சுக்காதீங்க. வெயிட் அண்ட் ஸீ.

    இன்னொரு இண்டர்வீ இருக்கு கலிஞறு மேட்டருக்கு. அத்த முச்சிட்டு வந்துர்றேன். அல்லாத்தையும் கரீட்டான நேரத்துல போட்டாத்தேன் சோசியம் எடுபடும். இல்லாங்காட்டி அல்லாரும் கபால்னு மர்ந்துருவாக.

    நமக்கு சாவு சோசியர்னு முத்தர குத்திராதீன்கப்பு. நம்ம நாக்குல நல்ல மேட்டரும் வரும். செயலலிதா தாயி வேற தொழிலாளர் தெனத்த கொண்டாட போறது இல்லியாம்.. இன்னாத்துக்குன்னா தேர்தல் கமிசனு உத்தரவாம். அவாள் செயிச்ச பொரவுதேன் பட்டய கெலப்புவாகலாம்.

    அது சரி. இந்த மேட்டர இப்ப ஏன் சம்மந்தம் இல்லாம ஒளர்றே. சம்மந்தம் இருக்கே?

    ஆராச்சும் கோச்சிக்கினு இருந்தீன்கொன்னா இங்கன ஒருதாட்டி வந்துட்டு போங்கோ. http://www.youtube.com/watch?v=Dl2XyXBjSZo

    டவுசர் பாண்டி said:
    April 25, 2011 at 3:26 pm

    நைனா நீ இப்ப அடிக்கடி கேப் போட்டுக்குனு ஆன்மீக மேட்டரா அவுத்து வுடுறியா, அதேன் ஒனக்கு வயசாயிட்டுன்னு தப்பா நெனச்சிட்டோம்பா. http://img862.imageshack.us/i/oldmurgesu.jpg/

    ஆனா மறுபடியும் ஒனக்கு மறுபடியும் இளமை திரும்புதுங்குறது இந்த பதிவ படிச்சதுக்கப்புரந்தேன் தெரிஞ்சது கண்ணு.
    http://img862.imageshack.us/i/youthmurgesu.png/

      kandhan said:
      April 26, 2011 at 5:26 am

      என்ன இருந்தாலும் ஒல்டு இஸ் கோல்டு. 🙂

    Mani said:
    April 25, 2011 at 5:18 pm

    என்னது அந்த பிரபலமாகாத ஜோதிடர் நம்ப டவுசர் பாண்டியா! நம்பவே முடியல. டவுசரு! சும்மா சொல்லக்கூடாது நெசமாலுமே நீ பெரிய ஆளுதாம்பா! இவ்வளவு விஷயம் எழுதறீங்க அப்புறம் ஏன் அந்த மெட்ராஸ் பாஷய பேசிகிட்டு சகிக்கலை, அது கூட பரவாயில்ல எழவு ஜோசியர்ன்னு அமங்கலமான பேர்லாம் என்ன ஆச்சு பாண்டி உங்களுக்கு.

    உங்களிடம் கலைமகள் குடிகொண்டிருக்கிறாள் அதனால்தான் நீங்கள் இவ்வளவு அற்புதமான விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. எனவே அபசகுணமாக எல்லாம் எழுத வேண்டாமே ப்ளீஸ். நல்லதை நினைப்போம், நல்லதை பேசுவோம், நல்லதே நடக்கும்.

    அப்புறம் கலைஞர் ஜாதக விவகாரம் பத்தி நான் எனது கணிப்பை எழுதியிருந்ததை படித்தீர்களா! நான் சரியாக எழுதியிருந்தேனா என்று கூறவும்.

    டவுசரு! ஒரு சின்ன விண்ணப்பம் அது என்னப்பா குரு பார்வை பற்றிய சமய கணிதம் அது பற்றி சீக்கிரம் எழுதப்பா! சஸ்பென்ஸ் தாங்கமுடியலை.

    இந்த பின்னூட்டத்திற்கு பதில் வரலைன்னா முருகேசன்ஜீ தான் டவுசர் பேருல குழப்பறார்ன்னு எல்லாருக்கும் டவுட் வந்துடும். சீக்கிரம். ம்ம்…… தேங்ஸ்.

      S Murugesan said:
      April 26, 2011 at 5:20 am

      மணி !
      //நல்லதை நினைப்போம், நல்லதை பேசுவோம், நல்லதே நடக்கும்.// – இந்த தியரி தப்பு. எனக்கு வாக்குஸ்தானத்துல சனி (கோசாரம்) இந்த சமயம் உங்க தியரியை நான் ஃபாலோ பண்ணா நான் காலி.
      அவிகவிக இயல்புபடி விடுங்க – ஆருக்கு எது நல்லதுனு அவிக நாக்குல (வாடகை தராம) குடியிருக்கிற கலைவாணிக்கு தெரியும்.

      என்ன டவுசரு .. நான் சொல்றது கரீட்டு தானே

        kandhan said:
        April 26, 2011 at 5:37 am

        தல
        ஆயுள் கணிப்ப ஜாதகர்கிட்ட நேரடியா சொல்ரது சரியா?

        S Murugesan said:
        April 26, 2011 at 5:52 am

        கந்தன்,
        ஆயுளை கணிக்கிறதே நாஸ்திகம்ங்கறது நம்ம கொள்கை. வரக்கூடிய ஹெல்த் ப்ராப்ஸ், ஆபத்துக்களை அடக்கி வாசிச்சு -பரிகாரம் சொல்லி விட்டுரவேண்டியதுதேன். அவன் பொஞ்சாதி தாலி பலமோ , பையன் ஜாதகத்துல பாக்யபாவமோ நல்லாருந்தா எஸ்கேப் ஆகட்டுமே

    வினோத் said:
    April 26, 2011 at 3:48 am

    ஓ…தல . முருகேசன் தான் பல அவதாரம் எடுக்கிறாரா?
    டவுசர், பிரபலமாகத சோசியர்ன்னு….
    வெரி குட்…

      S Murugesan said:
      April 26, 2011 at 6:31 am

      vinothji !
      அம்பேல். டவுசரு நான் தான் பிரபலமாகாத ஜோசியருன்னு ஒத்துக்கிட்டாரே..மேட்டர் தெரியாதா?

        ராஜா said:
        April 26, 2011 at 11:48 am

        தல,
        எங்களுக்கு பைத்தியம் பிடித்துவிடும் போல் இருக்கிறது. தயவுசெய்து குழப்பாதீங்க.. நீங்கதானே டவுசர் பாண்டி.

        S Murugesan said:
        April 26, 2011 at 1:48 pm

        ராஜா சார்,
        டவுசர் பாண்டியே அனவுன்ஸ் பண்ணியாச்சு. பிரபலமாகாத ஜோதிடர் தான் தானு அப்பாறம் குழப்பம் ஏன்?

        டவுசர் பாண்டி said:
        April 27, 2011 at 3:58 pm

        கிழிஞ்சது டவுசரு. இன்னாங்கடா இது புது கொயப்பமா கீது. முர்கேஸ் நைனாவுக்கு ஆருப்பா டவுசர மாட்டி விடுறது. அவருக்கு எம்புட்டு வயசாது தெரிமா. அவரு டவுசரு போடுற வயசா இது.

        சைடுல உள்ள நாடகமேடைல உள்ள நடிகர பாருங்கோ. அவ்ரு டவுசர் போடுற ஆள்மாறியா கீறாரு. அந்த வயசெல்லாம் தாண்டி வந்துட்டாருங்கோ.

        நானே டவுசர ஒரு கைல புடிச்சிக்குனு கஷ்டப்பட்டு மேட்டர எழுதிக்கினு கீறேன் . ஆளாளுக்கு புச்சா ஏதாவது கெளப்பிராதீங்கப்பூ. அப்பால நா அம்பேல்.

Leave a reply to Mani Cancel reply