யாருக்கு ஆன்மீக அனுபவம் ஏற்படும் ?

Posted on

இன்றைய நிலையில் பல பேர் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டுள்ளனர். அனைவருக்கும் ஆன்மீக அனுபவம் ஏற்படுமா?.யாருக்கு ஏற்படும் என்று சுட்டிக்காட்டுவதே இந்த பதிவின் நோக்கம்.

முதலில் யாரால் ஆன்மீக அனுபவம் ஏற்ப்படும் என்று பார்ப்போம்.

ஒன்று. ஆன்மீகத்திற்கு முக்கியமான கோள் கேது – ஏன் எனில் இவனே குண்டலினிக்கு காரகன்.

இரண்டு. ஐந்தாம் வீடு.- ஏன் எனில் இந்த வீடே தியானத்தை குறிக்கும்.
மூன்று. ஐந்தாம் வீட்டின் அதிபதி.
நான்கு. குரு – இவன் சிவனை குறிப்பவன். ஆன்மீகத்திற்கு முக்கியமானவன்.(சிவனின்றி ஏது தியானம்)
ஐந்து – ஐந்தாம் வீட்டில் அமர்ந்த கோள்கள் மற்றும் அதிபதியுடன் சேர்ந்த கோள்கள்.

இன்னும் சொல்லிக்கொண்டு போகலாம்.
ஆன்மீகத்திற்கு உகந்த சில முக்கிய கோள் நிலைகள் கீழே:

௧.லக்னத்தில் குரு இருப்பத்து மிக சிறப்பு. ஏன் எனில் இங்கே இருக்கும் குரு ஐந்தாம் வீட்டை பார்க்கிறான் மற்றும் குருவிற்குரிய ஒன்பதாம் வீட்டை பார்கிறான். அதுமட்டுமல்ல அவன் ஐந்து, ஒன்பது மற்றும் பதினொன்றாம் வீடுகளில் இருப்பதும் சிறப்பே ஆகும். ஏன் எனில் இங்கிருந்தும் அவன் ஐந்தாம் வீட்டை பார்க்கிறான். இங்கே இருக்கும் குரு கேது மற்றும் ஐந்தாம் வீட்டு அதிபதியை பார்த்தல் இன்னும் நலம்.

௨. கேது ஐந்தாம் வீட்டில் இருத்தல், ஐந்தாம் வீட்டு அதிபதியின் நட்சத்திரத்தில் இருத்தல் அல்லது குருவின் நட்சத்திரத்தில் இருத்தல், ஐந்தாம் வீடு அதிபதியுடன் இணைந்த்திருத்தல், குருவின் பார்வை பெற்றிருத்தல்.

௩. ஐந்தாம் அதிபதி- குரு, கேது ஆகியவைகளுடன், சேர்க்கை அல்லது பார்வை அல்லது நட்சத்திர தொடர்பு கொண்டிருத்தல்.
(இன்னும் நிறைய சொல்லலாம்)

சுருக்கமாக சொல்ல வேண்டும் எனில்
யாருடைய ஜாதகத்தில் கேது,ஐந்தாம் வீடு, ஐந்தாம் வீட்டின் அதிபதி மற்றும் குரு – இவர்களுக்குள் சம்பந்தம் இருக்கிறதோ இவர்களுக்கு “தியான”ஆன்மீக அனுபவம் ஏற்ப்பட வாய்ப்புகள் மிக மிக அதிகம்.
இங்கே சம்பந்தம் என்பது இணைவு, பார்வை, நட்சத்திர அமர்வு ஆகியவற்றை குறிக்கும். (பரிவர்த்தனை கூட இருக்கலாம்…வேறு ஏதேனும் சம்பந்தம் இருந்தாலும் சேர்த்துக்குங்க)

இதுவே என்னுடைய “குட்டி” ஆய்வின் முடிவு.

Advertisements

28 thoughts on “யாருக்கு ஆன்மீக அனுபவம் ஏற்படும் ?

  kandhan said:
  April 24, 2011 at 10:40 am

  தல, ரொம்ப ஸ்வாரஸ்யமான விஷயம் சொல்லி இருகீங்க‌. ஆன்மீக அனுபவம் செரி. இப்ப, மோட்சம் அடையரதுக்கு 12வது வீடு + அது கூட கேது லிங்க் வேணும் இல்லியா. சோ, அதையும் இத்தோட சேத்துகலாமெ? ஏன்னா ஆன்மீக அனுபவம் இல்லம மோட்சம் கிடையாதெ.

   puratchimani said:
   April 24, 2011 at 11:35 am

   வாங்க கந்தன், இது தலையோட பதிவுன்னு நினைசிகிட்டு ஸ்வாரஸ்யமா இருக்குனு சொல்லிட்டீங்க. இதுவும் நல்லதுக்கு தான்.
   மோட்சம் ஆன்மீக அனுபவம் இருந்தாலும் கிடைக்கும் இல்லாவிட்டாலும் கிடைக்கும்.
   நீங்க சொன்ன 12வது வீடு + அது கூட கேது லிங்க், இது பற்றி தெரிந்தால் நீங்கள் சொல்லுங்கள், இல்ல நேரம் கிடைக்கிறப்ப இன்னும் ஒரு குட்டி ஆய்வு செய்துவிடுகிறேன். மோட்சத்த பற்றி ஏற்க்கனவே ஒரு குட்டி பதிவு போட்டிருக்கேன் அதுக்கான உரலி கீழே
   http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2011/04/blog-post_11.html

   http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2011/04/blog-post_24.html

  puratchimani said:
  April 24, 2011 at 11:41 am

  பாசு,உங்க கருத்துக்காக ஆவலோட வெய்ட் பண்றேன். நீங்க ஒன்னும் சொல்ல மட்டேங்க்ரிங்க, பிசியா இல்ல நம்மள கேட்காம போட்டனநேனு கோவமா..

   S Murugesan said:
   April 24, 2011 at 1:42 pm

   புரட்சிமணி,
   ஏதோ நாலு வரியை கடமைக்கு சொல்ற கருத்து கந்தசாமி நானில்லை. ஆன்மீக முயற்சிக்கும் – ஜாதக சக்கரத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது உண்மைதான். ஆனால் ………. “இறைவனிடம் கையேந்துங்கள் .அவன் இல்லையென்று சொல்லுவதில்லை பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை”ங்கறது நம்ம கொள்கை.

    puratchimani said:
    April 24, 2011 at 2:28 pm

    நீங்க சொல்றது சரிதான் பாஸ்.
    “நீ கடவுளை நோக்கி ஒரு படி அடி வைத்தால் அவன் உன்னை நோக்கின் நூறு படி இறங்கி வருவான் ”

    “தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் “

    S Murugesan said:
    April 24, 2011 at 6:21 pm

    இதைதான் நாம சொல்லனும் – தொட்டனைத்தூறும் மணற்கேணிங்கறது உலக வாழ்க்கைக்கு வேணம்னா பொருந்தாம போயிரலாம் .ஆனால் ஆன்மீகத்துல இது 100 சதம் சத்தியம் சாத்தியம்

    kandhan said:
    April 24, 2011 at 6:21 pm

    “ஏதோ நாலு வரியை கடமைக்கு சொல்ற கருத்து கந்தசாமி நானில்லை” – இதுல ஏதொ உள்குத்து இருக்கும் போல இருக்கெ. 🙂 🙂

    S Murugesan said:
    April 24, 2011 at 6:48 pm

    கந்தன்!
    பேரை கீரை மாத்திகிட்டிங்களா? யாருக்கோ குத்திக்கிட்டா அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? நமக்கு உள்குத்து என்ன குத்து மேல கூட நம்பிக்கை கிடையாது. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுதேன். உஜிலாதேவி மேட்டர் பாத்திங்கல்ல

    kandhan said:
    April 25, 2011 at 4:36 am

    தல, உஜிலாதேவி மேட்டர் தெரியாதெ . website பார்தேன். பீலாதேவி மாதிரி இருக்கு. 🙂 லிங்க் இருக்கா?

    S Murugesan said:
    April 25, 2011 at 4:59 am

    கந்தன்,
    நாம தனிப்பதிவு போட்டு கண்டிச்சோம். அதை தன் ப்ளாக்ல கமெண்டா போட்டு அனானி கமெண்ட் மூலமா திட்டி எழுதியிருக்காய்ங்க பாருங்க. அவனவனுத அவனவன் கழுவிக்கட்டும்னு சொன்னேன். இல்லை அடுத்தவனோடதை நோண்டித்தான் பார்ப்போம்ங்கறாய்ங்க .( நான் தொப்புளை சொன்னேங்க)

    http://ujiladevi.blogspot.com/2011/04/blog-post_24.html

    covaisiva said:
    April 25, 2011 at 5:45 am

    தல நான் ஒரு ரகசியம் சொல்றேன். சென்ற மாதம் உஜ்ஜிலதேவில வந்த ஒரு சில கருத்திற்கு காவி வலைமனை மக்களிடமிருந்து hayyram போன்றோரிடமிருந்து வாங்கி கட்டிக்கொண்டார். இந்து மதத்தை விமர்சனம் கூட பண்ணவில்லை. இஸ்லாமிய மதத்தை பற்றி ஒரு சின்ன பாராட்டு தெரிவித்ததற்கு அவ்வளவு ஆர்ப்பாட்டம். முடிவில் ஒரு பதிவில் மறைமுகமாக மன்னிப்பு கேட்டு கொண்டு இப்படி கிறிஸ்தவ மதத்தை அதகளம் பண்ணி நல்ல பெயர் வாங்க முயற்சிக்கிறார்.

    selam said:
    April 25, 2011 at 6:09 am

    தயவு செய்து உஜிலாதேவி தளத்தை தாப்பா நினைக்காதிங்க பெரிய ஜோதிடர் என்ற பட்டம் வைத்துள்ள S Murugesan அவர்கள் குருஜி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு என்னும் பதில் தரவில்லை இவருடைய தளம் பிரபலம் ஆகா வேண்டும் என்ற நோக்கில் லூசு தனமாக இவரே பதிவு எழுதி உள்ளார்

    S Murugesan said:
    April 25, 2011 at 6:43 am

    selem அவர்களே,
    கேள்விகளா? லிங்க் ப்ளீஸ். இன்னொரு ஓம்காரா? சனத்துக்கு நல்லாவே பொழுது போவும். அர்ஜெண்ட்

    S Murugesan said:
    April 25, 2011 at 6:28 am

    covaisiva அவர்களே,
    இதானா மேட்டரு. நெஜமாலுமே இது நமக்கு செய்தி தேன்.

    covaisiva said:
    April 25, 2011 at 12:12 pm
    S Murugesan said:
    April 26, 2011 at 5:24 am

    covaisiva !
    பார்த்தேன். ரசித்தேன். கமல் ஏதோ படத்துல சாணிய மிதிச்சுட்டு படற அவஸ்தை ஞா வந்துருச்சு. சாமியாருக்கும் வாக்குஸ்தானத்துல சனி போல.

  Mani said:
  April 24, 2011 at 3:03 pm

  புரட்சிமணி பதிவு நன்றாக உள்ளது. ஒரு சிறிய நெருடல் பதிவில் குரு பகவானை அவன் என்று ஒருமையில் எழுதியுள்ளீர்கள். பொதுவாக நவக்கிரக நாயகர்களை ஒருமையில் எழுதுவதை தவிர்க்கவும். ஜாதகப்பலன்கள் கூறும்போதும் அவ்வாறு விளிக்க வேண்டாம் என்பதும் எனது கருத்து.

   puratchimani said:
   April 25, 2011 at 7:21 am

   தங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி மணி அவர்களே. அது என்னமோ தெரியல இவன் அவன் என்றுதான் எல்லாரையும் சொல்கிறேன். மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறேன்.

  வினோத் said:
  April 25, 2011 at 5:56 am

  நீங்க சொல்வது உண்மை தான் தல…. எல்லா மதத்திலையும் மதப்படி நடக்காதவ்ங்க உண்டு..

  வினோத் said:
  April 25, 2011 at 6:13 am

  ஆன்மிக அனுபவத்தில் ஜோதியில் கலத்தல் உண்டு தான … அவங்க சாதகம் எப்படி இருக்கும் ?
  http://www.mail-archive.com/thatha_patty@googlegroups.com/msg00856.html

   S Murugesan said:
   April 25, 2011 at 6:48 am

   வினோத் ஜீ,
   நீங்க கொடுத்த தொடுப்பை ( கெட்ட வார்த்தையில்லிங்கண்ணா லிங்க்) பார்த்தேன். ஓஷோ ஒரு பிரமிடுக்குள்ள சில ஆய்வாளர்கள் போய் வந்த அனுபவத்தை சொல்றச்ச அங்கே கும்மிருட்டு. ஆனால் ஒரு தீப்பந்தம் ஏத்தின அடையாளம் கூட இல்லை. வெளிச்சமில்லாம போக முடியாது.பின்னே எப்படி போனாய்ங்கனு கேள்வி எழுப்பி அவிக உடம்பின் ஒளியை கொண்டு தான் போயிருக்க முடியும்னு முடிப்பாரு.

   நெருப்பில்லாம ஒளியேது. நெருப்பை தூண்டிவிட்டா ..ஜோதியில் கலக்குறதெல்லாம் ஜுஜுபி.

  Thevar said:
  April 25, 2011 at 7:47 pm

  உங்க ஆய்வை நான் பாராட்டுகின்றேன்.
  எனது இலக்கினம் சிம்மம்.
  கேது தனுசில்.
  குரு மேஷத்தில்.
  இது போதும் என்று நினைக்கின்றேன்.
  ஆன்மீகத்திற்கும் எனக்கும் எந்தவிதத்தில் தொடர்பு இருக்கும்.?

   S Murugesan said:
   April 26, 2011 at 5:17 am

   தேவர்!
   கணபதி அ இதர மதம் உபதேசிக்கும் கடவுள் அ அம்மதத்தை சேர்ந்த யோகியை தியானம் செய்யவும் ( அ – அல்லது)

   குறிப்பு: சுலோசனா சம்பத் பற்றிய மறுமொழியை பார்த்தேன் – பெரிய இடத்து தாய்குலம்லாம் இப்படித்தானோனு ஒரு சம்சயம் – இன்னம் டீட்டெய்ல்டா ஒரு பதிவா எழுதுங்க – கவிதை07லயே வெளியிடுவம்.

    Thevar said:
    April 26, 2011 at 7:40 pm

    நன்றி-
    கன்னியாகுமரியில் இருந்து காசி வரை-(இலாகாபாத்)
    திரிவேநிசங்கமம்- அதாவது முக்கடலில் இருந்து மூன்று
    நதிகள் சங்கமிக்கும் இடம் வரைக்கும்- கோவில்கள்-
    சாதுக்கள், தீர்த்தங்கள்………..கும்பிட, சந்திக்க, குளிக்க-
    அலஞ்சு திரிஞ்சு கடைசியில் “தேடுங்கள் கண்டடைவீர்கள்”
    என்ற ஏசுபிரானின் வாய்மொழி இரகசியத்தை புரிந்து கொண்டேன்.
    ஒரு “U ” வளைவு – அவ்வளவுதான்- உள் நோக்கி பயணம்.
    இன்னும் முடிவடையவில்லை.
    அலைநீளத்தை அடிப்படையாகக் கொண்ட ஒளியை உடலில் கண்டுபிடித்து
    (“நீங்கள் இந்த உலகத்துக்கு ஒளியாய் இருக்கின்றீர்கள்”-இயேசு.)
    ஒளிவருடங்கள் தொலைவில் இருக்கும் ஐந்தாவது- ஆறாவது பரிணாமத்தில்
    எப்படி கலப்பது? இதற்க்கெல்லாம்- ஒளியே உருவான தேவ தூதர்கள் உதவி செய்வார்கள்.
    “கேளுங்கள் தரப்படும்” என்பதும் புரிகின்றது.
    “தட்டுங்கள் திறக்கப் படும்” ……எதைத் தட்டுவது!
    இன்றைக்கு தட்டினேன்- கண்களில் கண்ணீர்-
    முன்னே பின்னே தெரியாத ஒரு சகோதரி – கயானா தேசத்தை சேர்ந்தவள்
    தொலைபேசியில் கிட்டத்தட்ட முப்பது நிமிடங்கள்-
    சற்று விரைவான ஆங்கிலத்தில் இந்த ஒளியைப் பற்றி பேசினாள்.
    அதைப் பற்றி இன்னும் ஒரு நாள் -உங்களோடு விரிவாக பகிர்ந்து கொள்ள்கின்றேன்.

   puratchimani said:
   April 26, 2011 at 6:43 am

   வாங்க தேவரே , தங்களுடைய பாராட்டுக்கு நன்றி
   கண்டிப்பாக இது போதும்…

   கண்டிப்பாக உங்களுக்கு குண்டலினி எழும். அது என்ன மாதிரி அனுபவம்னு நீங்க தான் சொல்லானும்….அது ஒளி சம்பந்தப்பட்டதாக இருக்க வாய்ப்புகள் உண்டு.
   //ஆன்மீகத்திற்கும் எனக்கும் எந்தவிதத்தில் தொடர்பு இருக்கும்.?//
   நீங்க வேற ஆன்மிகம் வேற இல்லைங்கோ.
   நம்ம பாஸ் “கணபதி அ இதர மதம் உபதேசிக்கும் கடவுள் அ அம்மதத்தை சேர்ந்த யோகியை தியானம் செய்யவும்” அப்படின்னு சொல்றாரு அது அவருடைய ஆராய்ச்சி மற்றும் அனுபவத்துல சொல்றது (உங்க ஜாதகத்தை வைத்தும் சொல்லலாம்). நீங்க யாரையும் தியானம் செய்ய வில்லை என்றாலும் கூட…அது நடக்கலாம்.

    Thevar said:
    April 26, 2011 at 7:43 pm

    நிச்சயமாக எனது நிர்வாண உண்மைகளைப் பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டும்.
    விரைவில்-

  டவுசர் பாண்டி said:
  April 27, 2011 at 4:13 pm

  புரட்சி மணியண்ணே, நல்லாருக்குனே. குட்டி ஆய்வு பண்ணி மேட்டர கெட்டியா புடிச்சிட்டீங்கன்னே. பின்றீங்க.

   puratchimani said:
   April 27, 2011 at 5:03 pm

   தங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி டவுசரு அண்ணே. எல்லாம் அவனுக்கு சொந்தம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s