அவன் அவள் அது :10

Posted on

ஒரு மனிதத்தாய். அவளோட குட்டிப்பையனோ அ குட்டிப்பெண்ணோ சின்னதா டூர் போறான்/போறாள்னு வைங்க அவனுக்குன்னுட்டு ஒரு பேஸ்கெட்டை ரெடி பண்றாள். அதுல தயிர் சோறு, புளியோதரை ,சப்பாத்தின்னுட்டு பிரிச்சு பிரிச்சு பேக் பண்றாள்.கண்ணா மொதல்ல தயிர் சோறு சாப்டுரு -அப்பாறம் புளி சோறு -கடைசியில சப்பாத்தி சாப்புடுன்னுட்டு சொல்றாள்.

அதுமட்டுமில்லை டூர்ல பையன்/பெண்ணுக்கு என்னெல்லாம் தேவைப்படுமோ அதையெல்லாம் நறுவிசா பேக் பண்ணி எது .எதை .எதுக்கு ..எப்போ உபயோக்கிக்கிறதுன்னு பன்னி பன்னி சொல்றா. பையனோ பெண்ணோ மம்மி சொல்றதையெல்லாம் கேட்டுக்கறாய்ங்க.சில பேர் மட்டும் ஞா வச்சுக்கிட்டு ஃபாலோ பண்றாய்ங்க. சில பேர் ஆரம்பத்துல மறந்துட்டாலும் பல்பு வாங்கின பின்னாடி ஞா வந்துருது. ஃபாலோ பண்ண ஆரம்பிச்சுர்ராய்ங்க.பலர் எத்தீனி தபா பல்பு வாங்கினாலும் ஊஹூம்.

ஆஃப்டர் ஆல் ஒரு மனிதத்தாயே இம்மாந்தூரம் எக்ஸ்பெக்ட் பண்ணி ப்ளான் பண்ணி பேக் பண்ணி கொடுத்துவிடறாள்னா அந்த மகோதரி ( மகா+உதரம் -வயிறு கொண்டவள் – இத்தீனி குட்டிகளை போட்ட வவுரு சின்னதாவா இருக்கும்?) நம்மை இந்த உலகம்ங்கற சுற்றுலாத்தலத்துக்கு அனுப்பியிருக்காளே போய் தொலைங்கன்னுட்டா அனுப்பியிருப்பா? நோ நெவர்.

நமக்கு தேவையானதெல்லாம் நமக்குள்ளயே பேக் பண்ணப்பட்டிருக்கு. சமய சந்தர்ப்பம் வரப்ப ஒரு தேடல் ஆரம்பிக்குது. தேடலின் விளைவா தேடினது கிடைக்குது. நான் ஜோதிடம் கத்துக்கிட்டது 1989 மே மாசத்துக்கு பிறகு.

ஆனால் 1987லயே சுஜாதாவோட வசந்த் இன்ஸ்பிரேஷன்ல குட்டிகளுக்கு நியூமராலஜி சொல்லியிருக்கேன். நான் என்னவோ பீலா தான் விட்டேன். அப்பாறம் பார்த்தா நான் விட்டதெல்லாம் பீலா இல்லே. நியூமராலஜியோட சாரம்னு அப்பாறம்தேன் தெரிஞ்சுக்கிட்டேன்.

முந்தா நேத்து “பாபம் பசிவாடு”னு ஒரு சினிமாவ பத்தி சொன்னேன். (அஞ்சுவயசுல பார்த்து பேதியான படம்) . எனக்கான மெசேஜ் அந்த படத்துலயே இருந்திருக்கு. அது முந்தா நேத்துதேன் நமக்கு உறைச்சது. கடந்த 40 வருஷமா மி.மீ மி. மீ ஆ நகர்ந்த தேடல் – அதன் இலக்கு எல்லாமே மேற்படி படத்துல இருந்திருக்கு. நமக்குத்தேன் ஸ்பார்க் ஆகலை.

படத்தோட கதை ரெம்ப சிம்பிள் ஒரு சின்னப் பையன் அம்மாவை பிரிஞ்சுர்ரான் – கடேசியில அம்மாவை ரீச் ஆகிறான்.

பையனுக்கு சின்னதா டி.பி. ட்ரீட்மென்டுக்காக அவனோட மாமா ஃப்ளைட்ல கூப்டுக்குனு போறாரு. கூடவே இவனோட செல்ல நாய். வான் வெளியில பறக்கறச்ச மத்தியில மாமாவுக்கு ஹார்ட் அட்டாக் வருது. ஃப்ளைட்டை எமெர்ஜென்சியா லேண்ட் பண்ண வேண்டி வந்துருது. மாமா கண்ட் ரோல் ரூமை தொடர்பு கொள்ள ட்ரை பண்றாரு .அதுக்குள்ள செத்துப்போயிர்ராரு.

உடனே கண்ட் ரோல்ரூம் காரவுக விமானத்துல உள்ள ரேடியோ மூலமா காண்டாக்ட் பண்றாய்ங்க. பையனுக்கு தைரியம் சொல்றாய்ங்க. அதுக்குள்ள இருட்டிப்போகுது. கழுதைப்புலி அட்டாக் பண்ண வருது. பையன் ரேடியோ மூலமா கதர்ரான். அவிக ஃப்ளைட்ல பின்னாடி ஃப்யூயல் இருக்கும். அதை கொஞ்சமா ஊத்தி எரி ஓட்டிப்போயிரும்ங்கறாய்ங்க. பையனும் ஒரு தாட்டி ரெண்டு தாட்டி செய்யறான். இடையில களைப்பு காரணமா தூங்கிர்ரான். கழுதை புலி வெகு சமீபத்துல வந்துருது. அவசரத்துல ஃப்யூயல் மானாவாரியா கொட்டிப்போயி, இவன் நெருப்பு வச்சதும் பத்திக்கிட்டு ஃப்ளைட்டே எரிஞ்சுபோயிருது. இன்னம் ரெண்டு மணி நேர கதையிருக்கு அதெல்லாம் இன்னைய க்ளாஸுக்கு தேவையில்லை. பையனோட அப்பா பையனை தேட என்னென்னவோ அவஸ்தை படறாரு. பையனும் நாயடி பட்டு தன்னை காப்பாத்திக்கிட்டு எப்படி எப்படியோ அம்மாவை ரீச் ஆயிர்ரான்.

இந்த கதையை வெறுமனே கதையா பார்த்தா கதை . ஆனால் நமக்கென்னவோ இதுல லௌகீக ஆன்மீக புதையலுக்கான மேப்பே இருக்கிறதா பட்டுது. இந்த ஃப்யூயல் ஊத்தி கழுதைப்புலியை விரட்டற காட்சியையே எடுத்துக்கங்க.

விமானம்ங்கறது நம்ம வாழ்க்கை. அதுல ஃப்யூயலை வச்சிருக்கிறது விமானத்துல உள்ளது தீர்ந்து போன பிற்பாடு ஊத்தி பயணத்தை தொடர்ரதுக்குதேன். ஆனா பாருங்க எமெர்ஜென்சியா லேண்ட் ஆகவேண்டி வந்துருச்சு.( எக்கனாமிக்கல் பேக்வேர்ட்னெஸ்) ஃப்யூயல்ங்கறது. காசு பணம்.இந்த சமுதாயம் தேன் கழுதைப்புலி.

இது மேல விழுந்து குதறினா காயப்படப்போறது நம்ம ஈகோ . சமுதாயம்ங்கற கழுதைப்புலி நம்மை தாக்க வர்ரப்ப கொஞ்சம் போல காசு பணத்தை காட்டினா போதும். அது ஓடிப்போயிரும். கிடைக்கிற கேப்ல நாம செய்ய வேண்டியது என்ன? விமானத்தை ஓட்ட முயற்சி பண்றதுதேன். விமானம் டேக் ஆஃப் ஆகி சரியாகி பறக்க ஆரம்பிச்சுட்டா கழுதைப்புலி எல்லாம் ஜுஜுபி.

ஆனா நாம பயத்துல விமானத்துல உள்ள ஃப்யூயலை எல்லாம் கொட்டி தீ வைக்க வாழ்க்கையே எரிஞ்சு போயிருது. இது லௌகீக படிப்பினை.

இதையே ஆன்மீக கண்ணோட்டத்தோட பாருங்க. ஃப்யூயல்ங்கறது செக்ஸ் பவர். கழுதைப்புலிங்கறது காமம். நம்ம பவரோட ஃபைனல் டார்கெட் ஆன்மீக (விமான) பயணம் மூலமா அம்மாவை ஐ மீன் ஆத்தாளை அடையறதுதேன். காமம்ங்கற கழுதைப்புலியை விரட்ட அது தூரத்துல இருக்கும்போதே விழிப்பா இருந்து அப்பப்போ கொஞ்சம் போல சக்தியை செலவழிச்சுக்கிட்டே விமானத்தை இயக்க ,டேக் ஆஃப் ஆக முயற்சி பண்ணனும்.

ஆனா நாம என்ன பண்றோம் ? ஒரு தடவை விரட்டியாச்சுன்னுட்டு தூங்கிப்போயிர்ரம். காமம்ங்கற கழுதைப்புலியை க்ளோசப்ல பார்த்துட்டு இருக்கிற ஃப்யூயலை எல்லாம் செலவழிச்சுர்ரோம். விமானமே எரிஞ்சுபோகுது. அம்மாவை சந்திக்கவே முடியாத நிலை ஏற்பட்டுருது.

Advertisements

10 thoughts on “அவன் அவள் அது :10

  விஷமி said:
  April 24, 2011 at 7:10 am

  ஐயா, 
  சோனியா அவர்களுக்கு இப்பொழுது எட்டாவது (சனி) ரவுண்டில் மூனாவது வருஷம் தானே. அப்படியானால் 8க்கு மூனு நட்புதானே. தயவுசெய்து விளக்கவும்.

   S Murugesan said:
   April 24, 2011 at 7:26 am

   விஷமி சார்,
   இது வேற கணக்கு. சோனியாவோட உயிர் எண் 9.(செவ்) இவர் தன்னோட எட்டாவது ரவுண்டுல (ஐ மீன் 63 முதல் 72 வயதுவரை) என்ன செய்வாருங்கறது தான் மேட்டர்.

   சனி செவ் எந்த ரூபத்துல லிங்க் ஆனாலும் லிங்க் கட்டாயிருங்கறது பதிவோட சாரம்

  superrsyed said:
  April 24, 2011 at 9:56 am

  குருவெ

  உஙகலுடைய இந்த பதிவில் ஆன்மிக வழ்வுக்கு மட்டும் இல்லாமல் உலக வழ்க்கையிலும் புரிந்து கொல்ல வேன்டிய பல விசயங்கல் சூட்சம வடிவில் இருக்கிரது பதிவை மக்கல் அனைவரும் படிதது பயன் பெர்ரால் நன்ட்ராக இருக்கும்

  உஙகல் கருத்துக்கலும் எழுதுக்கலும் தொடரட்டும்

  thanks for sharing

  Thirumalaisamy said:
  April 25, 2011 at 4:39 am

  அண்ணே வணக்கம் நே ….
  குறிப்பா அந்த படத்த மட்டும் சொல்றீங்கனா சம்திங் இருக்கும் போல …பாப்போம் .
  ஆனா எல்லா விசயத்தையும் தெளிவா பாத்தா, நிச்சயம் அது நமக்கு எதோ சொல்லுது நு தோணுது …சரியா ? ( நிமித்தம் பத்தி கேட்குறேன் )

   S Murugesan said:
   April 25, 2011 at 4:54 am

   திருமலைசாமி,
   கதை,திரைக்கதை,டேக்கிங்,செட் எல்லாமே டுபுக்கு. படம் பார்த்து புஸ்ஸுனு ஆயிர போறிங்க. ஆனா விசயம் அதில்லை. பையன் தாயை பிரியறதும் அவதிப்படறதும்தேன். அம்மாங்கிற கான்செப்டை ஆத்தான்னு வச்சுக்கிட்டு பார்த்தா போதும். படத்தோட பேரு papam pasivadu. நீங்க பேசாம ஆங்கில படத்தையே ட்ரை பண்ணுங்க. பேரு ‘lost in desert’

  வினோத் said:
  April 25, 2011 at 6:04 am

  தல நீங்க சொல்லுற படத்தை நானும் பார்த்தேன்.. அதுவும் ஒரு 8- 10 வயசு இருக்கும்போது…
  அந்த படத்தில் குறிப்பிட்ட மணிக்கு ஒருமுறை அந்த பையன் மருந்து சாப்பிட அலாரம் இருக்கும்.
  விமானம் எரிஞ்சதும் பாலைவன பாம்பு கடிச்சு பார்வை போய்டும்.. அப்புரம் பாலை வன மக்களின் இயற்கை மருத்துவத்தில் திரும்பவரும் … பார்த்தது இப்பொ ஞாபகம் வருது தல…

  சரி ..
  அண்ணன் முருகேசன் என்ன பதில் போடுவார்ன்னு பார்க்க நானும் 2 நாளா ஆவல இருக்கேன் கண்டுக்க மாட்டேங்கிறாறே…சோதிடத்தையே டச் பண்ணாம அரசியல் பதிவு போட்டது தப்பாய்டுதோ? அப்புரம் பொது நலன் , நாட்டு முன்னேற்றம் எல்லாம் சேர்த்து எழுதுனா பரிசு தர்ரதா சொன்னிங்களே.. இந்த பதிவுக்கு பரிசுன் உண்டா தல…?

  http://tinyurl.com/3vurfp7

   S Murugesan said:
   April 25, 2011 at 6:21 am

   வினோத் ஜீ,
   பதிவை படிச்சேன். குறையிருந்தால் ஒடனே சொல்லியிருப்பேனே. நான் என்னைக்குமே மாற்றத்துக்கு ஆதரவானவன்.சனம் என்ன சொல்றாய்ங்கங்கறதுதான் முக்கியம்

   kandhan said:
   April 25, 2011 at 6:30 am

   கடுப்ப ஏன் கெளப்புரீங்க வினோத். ஏதோ பலான முத்ரா(Mudras) ஒன்னு சொல்றென்னாரு.

    S Murugesan said:
    April 25, 2011 at 6:39 am

    கந்தன்!
    பலான முத்ரா தானே. பிறந்த குழந்தை தன் கையை எப்படி வச்சிருக்குனு பாருங்க. ஃபாலோ இட். பை தி பை கால் கட்டைவிரல்களை ஒன்னோட ஒன்னு பின்னி இருக்கிறாப்ல வச்சுக்கங்க. ஆனால் இந்த முத்ரா பெண் மேல் முறையில் தான் பாசிபிள்

    kandhan said:
    April 25, 2011 at 7:04 am

    புரியலை தல. கட்ட விரலுக்கு மேல் மித்த விரல்களை இறுக்கமா வச்சுகனுமா? இதுக்கு பெரு என்ன முத்ரா.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s