கந்தன் சார் தேர்தல்கள் vs இடுப்பழகி யார் அனுஷ்காவா திரிஷாவா ?

Posted on

என்னை பொறுத்தவரை தேர்தல் அவுட் ஆப் டேட் மாடல்.

நேற்று வாசிங்டன், ஏமன் பல உலக நாடு ரோட்டரி சங்க பிரதிநிதிகளீன் சந்திப்பு நடந்தது.
என்ன செலவு ஆகியிருக்கும்னு நினைக்கிறீங்க? இந்த சந்திப்புக்கக 10 பைசா கூட செலவு இல்லை. ஏன்னா அவங்கவங்க அங்கங்கயெ இருக்க ஆன்லைனில் நடந்த சந்திப்பு.

இதேபோல் பாரளுமன்றாத்தில் மக்கள் கருத்தை ஆன்லைனில் கேட்டு மக்கள் ஓட்டளிப்பு நடத்தி சட்டங்களை போட்ட எப்படி இருக்கும் ? இதோ நாம் எழுதற இந்த பிளாகுக்கு பதில் நாம் நேரா சட்டமன்றம் நாடாளூமன்றத்தில் நம் கருத்தை பதிவு செய்யலாம். இங்க இடுப்பழகி அனுஷ்காவா vs திரிஷாவா ங்கிறதுக்கு வாக்களிக்கறதுக்கு பதில் நேர சட்ட மசோதாவுக்கு வாக்களிக்கலாம். அதேபோல் நம் கருத்தையும் , அதுக்கு எதிர் கருத்தையும் ஆதரவையும் எதிர்ப்பையும் கண்கூடா பார்க்கலாம். இந்த மாதிரி மக்கள் நேரடியா பங்கேற்க முடியும்ன மக்கள் பிரதிநிதிகளை எதுக்கு?
கந்தன் சார் பதிவுக்கு எதிர் பதிவு மாதிரி… நம் கருத்தை நாடாளூமன்றாத்தில் பதிவு செய்யலாம்.

இதெல்லாம் தேறாது சர்வர் எப்பவும் டவுன் தானு நம்ம முருகேசன் அண்ணன் சொல்லலாம்.
இதுக்கும் பதில் இருக்கு.. சர்வர் வேலை செய்யலைன்ன சர்வருக்கு பொறுப்பான அமைச்சகம் மற்றும் அதிகாரிகளூக்கு தூக்கு தண்டனைனு அறிவிச்சுட்டா ?

இதை செய்யணும்னாலும் .. இல்லை தேர்தல் தான் வேணும்னாலும்…
100% கட்டாய வாக்களிப்பை கொண்டு வரணும். அதுதான் முதலில் முக்கியம்.
அதைவிட முக்கியம் சரியான வாக்காளர் பட்டியல் தயார் செய்யபடணும்.
இப்போ தேர்தல் ஆணயம் மத்திய அமைப்பு, தேர்தலின் போது மத்திய மானில அரசுகளின் உட்கட்டமைப்பை( அதிகாரிகள், வாகனங்கள்) பயன் படுத்துது.

இதுக்கு பதில் குடியுரிமைதுறைன்னு ஒண்ணு வைச்சு எல்லா வார்டு அளவில் கட்டாயமக எல்லாருடைய பெயரிலிருந்த்து எல்லா விபரத்தையும் பதிவு செய்ய வைக்கலாம். பிறப்பிலேயே பதிவு ஆரம்பிக்கும்.

இப்போ இருக்கும் மக்கள் தொகை கணக்கில் சிக்கல் இருக்கு. அது என்னானா மக்கள் பற்றிய கணக்கு. அரசாங்கத்தால் மிக மட்டரகமாக பராமரிக்கபடும் கணக்குன்ன அது மக்கள் தொகை. பற்றிய கணக்கு தான். மக்கள் தொகை கணக்கு படி தமிழக மக்கள் தொகை 5 கோடி, ஆன பொது வினையோக (ரேசன் கார்டு ) கணக்குபடி 7.5 கோடி…

அந்த 1 சரியா இருந்தா வாக்களர் பட்டியல்,மேலவைக்கான பட்டதாரி வாக்காளர் பட்டியல், பொது வினையோக (ரேசன் கார்டு), டிரைவிங் லைசென்சு பேன் கார்டு, ஐடி கார்டு,, பாஸ்போர்ட்ன்னு மக்கள் பராமரிக்க வேண்டியது இல்லை. அரசாங்கமும் ஒவ்வொரு துறைக்கும் தனி தனி தகவல் சேகரிப்பு வைக்கவேண்டியது இல்லை.அரசாங்கமும் மத்திய மானில அலுவலகங்களில் அன்றைய நடப்பை பற்றி மட்டும் பதிவு வைச்ச போதும்.

சரியான மக்கள் தொகை பட்டியல் இருந்ததுன்னு வைங்க. ஒரு குழந்தை பிறந்தவுடன்
பிறப்பு விவரத்தை பதிவு செய்தா .. குழந்தைக்கான எண் ஒதுக்கிடு பண்ணிடலாம், 1 மாதம் போலியோ சொட்டு மருந்து போடனுமா, அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கம்ப்யுட்டரை தட்டினால்
இன்ன்றைக்கு தேதிக்கு எத்தனை குழந்தைக்கு 1 மாசம் ஆச்சுன்னு பட்டியல் எடுத்து பார்த்து சுகாதார அலுவலர்கிட்ட கொடுத்து சொட்டு கொட்டுக்க செய்யலாம் .மருந்து போட்டவுடன் குழந்தை எண், மருத்துவ பணியாளார் எண், கொடுக்கபட்ட மருந்துக்கான பேட்ச் எண் எல்லாதையும் அன்றன்றைக்கு பதியணும். 1 வாரத்துக்குள் பட்டியால் உள்ள 100% குழந்தகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கலைன்னா வீட்டுக்கு போக வேண்டியது தான்னு சொன்ன.. போலியோ இந்தியாவில் இருக்குமா?

ஒருவேளை குடும்பத்தோடவெளியூர் போய்ட்ட என்ன செய்யுரது கேட்பீங்க… நீங்க போற இடத்தில் அரசு மருத்துவமனை இருக்கும் தானே.. அங்க போடனும். அப்படி1 வாரத்தில் போடலைன்ன குழந்தையோட தாய், தந்தை ரெண்டுபேரின் குடியுரிமையும் தற்காலிக ரத்து பண்ணி அடுத்த வாரத்தில் இருந்து ரேசன், டிரைவிங் லைசென்சு, பேங்க் அக்கவுண்டு செல்போன், எதுவும் வேலை செய்யாதுன்னு கொண்டு வந்தா … 100% போலியோ ஒழிப்பு சத்தியாமா இல்லையா ?

குழந்தை பள்ளிக்கு போகும்போது குழந்தைன் எண் கொடுத்தா அப்பா அம்மா, தாத்தா பாட்டி முதல் எல்லா தகவலும் கிடைக்கும் என்னும்போது பிறப்பு சான்றிதல் சாதி சான்றிதள் எல்லாம் எதுக்கு ? நேரா பள்ளிக்கு போய் வகுப்பில் உட்கார வேண்டியது தான்.

அதேபோல் 100% கட்டாய இலவச கல்விக்கு.. அந்ததந்த பகுதி குழந்தைகள் பள்ளிக்கு வரணும் இல்லைன அரசுப்பள்ளி வாத்தியார்களின் பொறுப்புன்ன.. கல்வியறிவு இல்லாதவர்கள் இருப்பஙகளா ? இப்பவே ஒவ்வொறு பள்ளியிலும் சென்சஸ் தகவல் இருக்கு. 10, +12 , BSC, BA, MBA, ME , PHD , ன்னு என்ன படித்தாலும் தனி சர்டிபிக்கட் எல்லாம் கிடையாது எல்லாம் சென்சஸ் கணக்கில் கொண்டு வந்தா போதும்னா…. சர்ட்டிபிகட், போலி சர்டிபிகட் அட்டஸ்டேட்சன் .. ஜெராக்சு.. எதுக்கும் தேவையில்லை.

BSC படிச்சாபுரம் IAS வேலைக்கு முயற்சி பண்ணனும்னா… நேரா UPSC Websiteக்கு போய் IAS எக்சாம் வெயிட்டிங் லிஸ்ட்டில் பிறந்தப்ப கொடுத்த எண்ணை சேர்த்திடா போதும் , ஏக்சாம் தேதி போட்டு ஈ மேயில் வரும் . தேதியில் நேர எக்சாம் ஹால் போனா போதும்..

பேங்க் அக்கவுண்ட் வேணுமா? பிறந்தப்ப கொடுத்த எண் + பணம் எடுத்து போன போதும் மத்தெல்லம் முகவரி உட்பட சென்சஸ் சர்வரில் இருக்கும்…

இப்படி சரியான பட்டியல் இருந்தா.. மக்கள் நேரிடியாக பாராளூமறத்தில் கலந்துகொண்டா.. யார் யார் எந்த சட்டதை பற்றி என்ன பேசின்னானு எத்தனை வருஷம் கழித்தும் எடுத்து பார்க்கலாம்.

இப்படி ஒரு லிஸ்ட் மெயின்டெயின் பண்ணினா 100% ஓட்டு ஒரு பெரிய விஷயமா ?
நான் ஓட்டு போடலைன்னு கந்தன் சார் 1 வாரம் கழித்து பதிவு போட முடியாது …
ஓட்டு போடலைன்ன அடுத்த நாள் ஈமெயில் பேங்க் அக்கவுண்ட் உட்பட எதுவும் வேலை செய்யாது…

இப்படி ஒரு லிஸ்ட் சாத்தியமான்னு கேட்கலாம்.. இது இப்பவே நடைமுறையில் இருக்குற விஷயம் தான். State Bank, ICICI Bank, போன்ற பேங்க் அக்கவுண் வச்சா 12 -13 இல்லக்க நம்பர் தர்ரங்களே.. இந்தியா முழுக்க அந்த நம்பரில் வேறு அக்கவுண்ட் கிடையாது . அந்த ஒரு அக்கவூன்ட் நம்பர் இருந்தா அந்த நபரின் அட்ரஸ், பேன் கார்டு, மற்றும் பேங்க் சம்ந்தபட்ட அத்தனை தகவல்களையும் பெறலாம். இப்படி கோடிக்கணக்கான அக்கவுன்ட் ஸ்டேட் பேங்கில் மட்டும் உள்ளது..

கிரிடிட் கார்டுக்கு பேங்க்குகள் மட்டும் பார்க்கும்படி இப்படி ஒரு பட்டியல் உண்டு, ஒரு பேங்கில் கிரிடிட் கார்டு வாங்கி பணம் கட்டலைன்ன அப்புரம் எந்த இந்தியா அளவில் பேங்கிலும் கார்டு வாங்க முடியாது…

இப்ப என்ன செய்வீங்க… இப்ப என்ன செய்வீங்க… (ரஜினி மாடரேசனில் வாசிக்கவும்…)

இப்போ இருக்கும் மட்டரகமான பட்டியலை அரசு நினைச்ச எப்படி பயன்படுத்தலாம்கிறதுக்கு ஒரு எடுத்துகாட்டு தருகிறேன். சமிபத்தில் நடந்த சம்பவம்..

திரூப்பூர் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்… 10000 கோடி அண்ணிய செலாவாணி ஈட்டி தரும் ஏற்றூமதி நகரம். ஜனவரி 28ல திருப்பூரில் சாயகழிவு நீரை முழுமையா சுத்தபடுத்தாத டையிங் யூனிட்கள் செயல் பட கூடாதுன்னு ஹை கோர்ட் உத்தரவு போட்டுடுச்சு.டையிங் இல்லைன துணிகளுக்கு சாயம் போடமுடியாது ஏற்றுமதி பாதிக்கும். இது 10 வருஷத்துக்கு மேல் இருக்கும் பிரச்சனை. சாயகழிவால் நொய்யல் – காவிரியின் துணை ஆறு சாக்கடையாகி ஆயிரக்கணக்கான ஏக்கர் தரிசாய்டுது.. விவசாயிகள் கோர்ட்டுகு போக ..இப்படி உத்திரவு…வந்தது…

சாயகழிவு நீரை முழுமையாய் சுத்தபடுத்த தொழில் நுட்பம் கிடையாது. கடல் நீர் அளவுக்கு சுத்தபடுத்தி கடலில் கலக்கலாம் ஆனா அதுக்கு 1000 கோடி வேணும். அதையும் ஆராய்ந்தாங்க.
ஆனா சாய ஆலை அதிபர்களீன் ஒற்றுமையின்மையால் ஒண்ணூம் செய்யமுடியலை.

மேலும் இது எதிர் கட்சி எம்.எல்.ஏ, எம்பி (ஆதிமுக, கம்யூனிஸ்டு) இருக்கும் தொகுதி. இங்க பிரச்சனையை தீர்த்து எதிர்கட்சிக்கு உதவ ஆளூம் கட்சிக்கு விருப்பம் இல்லை.

ஏற்றுமதி நல்ல வருமானம் தரும் தொழில் .. ஒரு காலத்தில் சிறு தொழிலாக இருந்தது .. இப்போ பெரிய தொழிலகம் தான் நிலைக்கமுடியும்கிற நிலை..

தடையுத்திரவு வந்தவுடன்…பெரிய தொழிலஅதிபகள் கழிவுநீரை சுத்திகரிக்கும் செலவை அரசு ஏற்கணும்னு கேட்டு முதல்வரை பார்க்க போனாங்க.. முதல்வர் .. எனக்கு நேரமில்லை தலைமை செயலரை பாருங்கன்னுட்டர். தலைமை செயலரை பார்க்க போன தலைமை செயலர் அலுவலகத்தில் சுற்றிலும் தொழிலதிபர்களின் வெளிநாட்டு இறக்குமதி கார்களால் முற்றுகைஇட்டு இருக்காங்க்.. தலைமை செயலர் வரும் வழியில் இவங்க கார்களை பார்த்து என்ன விஷயம்னு விசாரிச்சு இருக்கார்.

விபரத்தை கேட்டுட்டு , இவர்களின் கார் எண்னை கொண்டு இவர்கள் பற்றிய விபரத்தை 1/2 மணியில் எடுக்க சொல்லிட்டு இவர்களை 1/2 மணி நேரம் கழித்து சந்தித்தார். தொழிலதிபரிகள் நாங்க ரொம்ப கஷ்டபடுரோம் அரசு உதவனும்ன உடன்… உங்களில் யார் யார் பெயரில் எங்கேங்கெ என்னனென்ன சொத்து,நிறுவனம், லாபம் நட்ட ம் வரி, பேங்க் கடன் கிரிடிட் கார்டு, . இருக்குங்குற பட்டியல் இதோ இருக்கு. .. தொழில் நல்லா நடந்த காலத்தில் நீங்க என்ன பொது காரியம் செஞ்சீங்க.? நீங்க செஞ்சு இருந்தா .இப்போ அரசிடம் கேட்கலாம்னார். தொழிலதிபர்கள் அமைதியா திரும்பீட்டங்க..

இப்போ சொல்லுங்க.. இந்த பட்டியலை சரிபண்ணி சரியான பட்டியல் தருவது முடியும்மா, முடியாதா? 100% வாக்களிப்பு முடியுமா முடியாதா? தேர்தலே இல்லாத மக்களின் நேரடி பாராளூமன்றம் முடியுமா முடியாதா?

Advertisements

8 thoughts on “கந்தன் சார் தேர்தல்கள் vs இடுப்பழகி யார் அனுஷ்காவா திரிஷாவா ?

  kandhan said:
  April 23, 2011 at 7:11 am

  என்னங்க வினோத், இவ்ளவு புரட்சிகரமான கருத்துகள வச்சிகிட்டு ஏன் பேசாம இருந்தீங்க? சரி, உங்கள பேச வச்சதுக்கு நான் ஒரு சின்ன காரணமா ஆகிவிட்டென் ங்கரத நெனச்சா சந்தொஷமா இருக்கு.

   வினோத் said:
   April 25, 2011 at 4:13 am

   வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி கந்தன் சார்.

  syed said:
  April 23, 2011 at 7:59 pm

  congrats vinoth nalla thinking vachirukkinga
  pesaama india 20000 project onnu redi pannungalen

   வினோத் said:
   April 25, 2011 at 5:06 am

   சையத் சார் ,
   யோசிச்சு பார்த்தா ..முருகேசன் அண்ணன் ஒரு பதிவில் சொல்லியிருப்பர்…ஒரு விஷய்ம் நடக்க பல காரணங்கள் காரியங்கள் இருக்கு…ஒருத்தன் கை கால் வராம கிடந்தா அதுவே அவனுக்கு பெட்டர் சாய்சுன்னு…
   அந்த மாதிரி… ஆட்சியா மக்களான்ன மக்கள் தான் முக்கியம் ஆனா மக்கள் எந்த அளவுக்கு இருக்காங்களொ அதுக்கு தகுந்த ஆட்சி தான் கிடைக்கும். ஆட்சியின் விளைவை எல்லாரும் அனுபவித்து தான் ஆகனும்.

   சின்ன நிகழ்கால உதாரணம் சொல்றேன் பாருங்க…
   ஒருத்தார் குழந்தைக்கு கதை சொல்ல ஆரம்பித்தார் (bet time story)
   “ஒரு ஊரில் ஒரு ராஜா….”
   உடனே குழந்தை குறுக்கிட்டு …” எனக்கு 2ஜி ஊழல் பற்றி எல்லாம் தெரியும்.. நானே தூங்கிகறேன்..”

   இவ்வளவுக்கு பிரபலமான ஊழலின் விளைவு என்ன ?

   எர் டெல் நிறுவனம் செல் போனில் ரூ.99 க்கு 2 ஜிபி (2048 எம்பி) இன்டெர் நெட் வழங்கிவருகிறது.ஆனால் .இப்போ இருக்கும் அதிவேக 3ஜி கணக்சன் வேண்டும் என்றால் கனக்சன் என்னவோ 99 தான் ஆனால் அளவு 100 எம்பி. அதாவது அதிவேக இன்டர் நெட்டுக்கு தன் விலையை 20 மடங்கு உயர்த்தியுள்ளது. ஏன் இந்த உயர்வு ? வழக்கமாக எல்லா கம்ப்யூட்டர் செல் போன், கால் ரேட், கனக்சன் ரேட் குறைவது தான் இயல்பு, ?

   குறைந்த கட்டணத்திலேயே லாபம் கிடைக்கும் தான். ஆனால் ஊழலில் அரசியல் வாதிகளுக்கு லஞ்சமாக கொடுத்த1 லட்சத்து 76000 கோடியை, 10 பை சா 25 பைசாண்ணு வட்டியுடன் வசூல் செய்யணும், அதுக்கு மேல் லாபம் பார்க்கணும்..அதான் இந்த விலை உயர்வு. எது நடந்தாலும் கண்டுக்காமல் இருக்கும் மக்கள் பாக்கெட்டில் இருந்து ஊழலில் மறைமுகமாக எப்படி பணம் பிடுங்கபடுகிறது பார்த்தீர்களா?

   இதே முறையில் தான் பெட்ரொல் விலை, மளிகை பொருட்கள் விலை காய்கறி விலைன்னு . யார் எங்கே என்ன ஊழல் செய்தாலும் பணம் தரபோவது மக்கள் தான். ஆனா அவர்களுக்கு தங்களை பற்றியோ இல்லை தங்கள் சந்திதியின் எதிர்காலம் பற்றிபோ, அக்கறை இல்லை, யார் கையை காலை பிடிதாவது 500 -1000 லஞ்சம் அழுதாவது தன் வேலை முடிஞ்சா போதும்ங்கிற பொது புத்தி.. 10 மேல் தான் டாஸ்மாக் திறக்குமான்னு கவலை படுற குடிமகன்கள்/சில குடி மகள்கள் ,
   மற்ற பெரும்பான்மை குடிமகன்கள் எந்த தியேட்டரில் படம் ரிலிஸ்னு கவலை படுறாங்க..குடிமகள் .. சீரியல் நேரத்தில் பவர் கட் வர கூடாதுன்னு கவலைபடுறாங்க…
   பாரதியார் சொன்னதுபோல் கஞ்சி குடிப்பதற்கில்லர் ..அதன் காரணம் இன்னதெறரிவும் இல்லர்.

   இவங்க இப்படி இருக்கும்போது .. அண்ணன் முருகேசன் சொல்வது போல் இதுவே பெட்டர் சாய்ஸ் தான். எதோ யோசிக்க தெரிஞ்சவங்க 12 சேனல் 1,70,000 கோடி சொத்துன்னு வாழ்றாங்க..அங்களாவது நல்லா இருக்கட்டும்… நாம வேண்ணா அவங்ககூட கூட்டணீ போட்டு.. 2-3 சேனல் 1000 2000 கோடின்னு தெருவோரம உட்காந்து பிழைக்கறது தான் புத்திசாலி தனம் போல…

  ஓகே யெஸ் said:
  April 24, 2011 at 5:22 am

  நிச்சயம் என்றாவதொரு நாள் நடக்கும் வினோத்.

   வினோத் said:
   April 25, 2011 at 5:09 am

   நடந்தா நல்லது தான். நன்றி ஓகே யெஸ்

  வினோத் said:
  April 25, 2011 at 5:10 am

  அண்ணன் முருகேசன் என்ன பதில் போடுவார்ன்னு பார்க்க நானும் 2 நாளா ஆவல இருக்கேன் கண்டுக்க மாட்டேங்கிறாறே…

  வினோத் said:
  April 25, 2011 at 5:11 am

  சோதிடத்தையே டச் பண்ணாம அரசியல் பதிவு போட்டது தப்பாய்டுதோ? அப்புரம் பொது நலன் , நாட்டு முன்னேற்றம் எல்லாம் சேர்த்து எழுதுனா பரிசு தர்ரதா சொன்னிங்களே.. இந்த பதிவுக்கு பரிசுன் உண்டா தல…?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s