தேறுதல் தராத தேர்தல்கள் : கந்தன்

Posted on

நேற்று இன்று நாளை படத்துல டைட்டில் சாங்ல மாறுதல் வரும் – தேருதல் வரும் -தேறுதல் தரும்னு கவிஞர் வார்த்தையில விளையாடியிருப்பாரு. நெஜமாலுமே நம்ம தேர்தல் சனத்துக்கு தேறுதல் தருமான்னுட்டு மெனக்கெட்டு நிறைய ஆராய்ச்சி செய்து -டேட்டா கலெக்ட் பண்ணி நம்ம கந்தன் சார் ஒரு பதிவை போட்டிருக்காரு. நம்மை பொருத்தவரைக்கும் ஹிட்டு, கமெண்டு , ஓட்டு இதெல்லாத்தையும் கடந்து வந்துட்டம். ஆனால் கந்தன் சாரு ஊருக்கு புதுசு. அதனால சிரமம் பார்க்காம் இதெல்லாம் கொடுத்து ஊக்குவிக்கும்படியா கேட்டுக்குறேன், என்ன பதிவுக்கு போயிரலாமா? உடுங்க ஜூட்

கந்தன் ஸ்பீக்கிங்: 
படிக்கிற காலத்தல் இருந்து யொசிச்சு வச்ச ஒரு விஷயத்த இப்ப சொல்றேங்க.
அதுக்கு முன்னாடி தலைவலி மாத்திரை , அப்பறம் தைலம் எல்லாம் பக்கத்துல வச்சி கிட்டு  நான் கீழ கொடுத்திருக்கிற சில புள்ளி விவ‌ர‌ங்க‌ளை கொஞ்சம் பாருங்க.

 

இதெல்லாம் தேர்வுஆணையத்தோட் இனைய‌த‌ள‌த்துல‌ இருந்து சேகரிச்சது தான்.
கவனிக்க வேண்டிய விஷயம் ரெண்டுதாங்க. நம்ம ஜனத்தல பாதி பேரு தான் வோட்டு போடபோறாங்க.
(நான் போகாத ஜாதி). மொத்த ஜனத்துல சராசரியா 20 விழுக்காடு  எந்த கட்சிக்கு  வோட்டு  போட்றாங்களோ அந்த கட்சிதாங்க ஆட்சி அமைக்குது. சமீபகாலமா நடந்துகிட்டு இருக்கிற கூட்டணி கலாசாரத்துலயும் இழவுதான். சின்ன வித்யாசம் என்ன்னா அப்போ கட்சி – இப்போ கூட்டணி.
இதுக்கு காரணம் என்ன?   நம்ம தேர்தல் விதிமுறைகள் தான்.

எப்படி? அதாவது இப்ப இருக்கிற விதிமுறை ஓட்டபந்தயம் மாதிரி. யாரு கோட்ட மொதல்ல தொட்டாங்களோ அவுங்க தான் ஜெயிப்பாங்க. . First-Past-the-Post-Systme னு இதுக்கு பேரு. இதுல என்ன தப்புனு கேக்குறிங்க.
 
இப்போ நீங்க ஒரு வேட்பாளரா இருந்தா இந்த மாதிரி ஒரு தேர்தல அமைப்புல‌ என்ன பண்ணுவீங்க?
 
: “துட்டு போட்டு சீட்டு வாங்கியாச்சு. போட்ட காச ஜெய்ச்சதுக்கு அப்புறம் தொழிலதிபர்களுக்கு கான்ட்ராக்ட்/சர்ட்டிபிக்கேட் வாங்கி கொடுத்தோ இல்ல நாமே நம்ம தொழில வளர்ககறதுக்கு இந்த பதவிய யூஸ் பண்ணியோ தான் எடுக்க முடியும்.
ஆனா வோட்டை மக்கள் கிட்டஇல்ல வாங்கனும். 
இந்த தொகுதில என்னோட ஜாதிக்காரங்க/மத காரங்க 30 விழுக்காடு. அவுங்க‌ எனக்கு தான் போடுவாங்க. அத நம்பி தானே காசு குடுத்து சீட்டு வாங்கியிருக்கேன். ஆனா இந்த மிச்சம் இருக்குற 70 விழுக்காடு?
அவுங்க வோட்டு எந்த பக்கம்? அவுங்கதான் வேற வேற ஜாதி/மதத்துல பிரிஞ்ச்சு கிடக்காங்களே
அவுங்க வாக்கு உடைஞ்சா ( பிரிஞ்சா) எனக்கு தான் வெற்றி. அப்ப வோட்ட பிரிப்போம். என் ஜாதி/மத காரவுகளுக்கு மட்டும் சலுகைகள்/வசதிகள் கிடைக்கும்னு தேர்தல் வாக்குறுதி தந்துர்ரன்.
வேற எப்பிடி எப்பிடி முடியுமோ அப்பிடியெல்லாம் பிரிக்கிறேன்.எப்படியும் வெற்றி நமதே. வெற்றிக்கு பிறகு ஊர் சொத்தெல்லாமும் நமதே”
கிராஸ் டாக்:( சித்தூர்.முருகேசன்)
இதுவரை நல்லபடியா அனலைஸ் பண்ணிக்கிட்டே வந்த கந்தன் படக்குனு மொத்த வாக்குல 50 சதவீதம் வாங்கினாதான் வெற்றின்னு திருத்தம் கொண்டுவரச்சொல்றாரு.
அவர் கொடுத்திருக்கிற டேட்டாப்படி மொத்த வாக்குகள்ள 20 முதல் 24 சதம் ஓட்டுவாங்கின கட்சி பெரும்பான்மை சீட்டுகளைபெற்று ஆட்சி அமைச்சிருக்கு. அதாவது 80 முதல் 76 சதம் வரை ஆதரிக்காத கட்சி – உடைச்சி சொன்னா எதிர்த்த கட்சி ஆட்சி அமைக்குது. இது எங்கத்தி நியாயம்?
கந்தன் சார் சொல்ற திருத்தத்தை கொண்டுவந்தாலும் 50 சதம் ஓட்டர்கள் எதிர்க்கும் கட்சியோட வேட்பாளர்தானே ஜெயிப்பார்
இதுக்கு நான் தர்ர சொல்யூஷன் என்னன்னா.. (ஏற்கெனவே சொன்னதுதான்) மொத்த வாக்குகளில் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்கு சதவீதத்திற்கிணங்க சட்ட/பாராளுமன்றத்தில் அந்த கட்சிக்கு சீட்டுகள் வழங்க வேண்டும். ( இவிக ப்ரப்போஸ்ட் கேண்டிடெட்ஸ் லிஸ்டை தேர்தலுக்கு முந்தியே தந்திருப்பாய்ங்க)
அகெய்ன் கந்தன் ஸ்பீக்கிங்;
சரி. என்னை மாதிரி சோம்பேறிகளையெல்லாம் எப்டி வோட்டு போட வைக்கிறது?
நாங்க வோட்டு போடாம இருக்கிறதுக்கு காரணம்  சோம்பேறித்தனம் மட்டும் இல்ல. யாருக்கு போட்டாலும் நம்மளுக்கு தான் நஷ்டம். இதுக்கு எதுக்கு வெய்யில்ல, வரிசைல நின்னு வோட்டு போடனும். சுதந்திரம் கிடைச்சப்ப ஜனதொகை 30 கொடி. இப்ப நூத்து இருபதா?
பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை ரெட்டிப்பா ஆக்குங்க. கூடுதல் சீட்ட தேசீய கட்சிகளுக்கு அவுங்களூக்கு கிடைக்கிற வோட்டு சதவீதப்படி பங்கிட்டு குடுங்க. அப்ப நாங்களும் எங்களுக்கு பிடிச்ச கட்சிக்கு வாக்களிக்க வருவோமில்லை?
என்ன பிரச்சினைன்னா  இதை எல்லாம் ஆரு செய்யனும்? அரசியல் வாதிங்கதான் செய்யனும். அவிக மைண்ட் வாய்ஸ்:
 : “இதெல்லாம் பண்ணி எங்க வயித்துல நாங்களே அடிச்சுக்க நாங்க என்ன மு.கூங்களா? அ கூ.முங்களா?
கிராஸ் டாக்:
கந்தன்சாரு ஏன் இந்த ப்ரப்போசலை முன் வைக்கிறாரு புரியலை. சட்டமன்றத்துல தேசிய கட்சிக்கு என்ன வேலை? மானில கட்சி உறுப்பினர்கள் கிழிக்காததை தே.கட்சி உறுப்பினர்கள் மட்டும் எப்படி கழட்டிருவாய்ங்க?

 

Advertisements

4 thoughts on “தேறுதல் தராத தேர்தல்கள் : கந்தன்

  PERUMALSHIVAN.S said:
  April 23, 2011 at 5:16 am

  kanthan sir eppa eallaa jaathikkum thanithani katchi erukku .eallaa katchikkum oru kurippitta alavu vhottu erukku . eppallaam pothumakkal endra vhottu % kuraivu . athunga kooda eathaavathu namakku kidaikkuma (suyanalam) ex: elavasangal .
  appadithaan vhottu poduraanga . eni varum kaalangalil electione thevai erukkaathu eaththanai jaathi/matham -ngal eantha pakkam athigama serthirukko athuthaan vetripperum . naan eanna solla varenna valuvaana koottani amainthuvittaal piracharam enriye vetripperum nilaigal vanthuvidum . aanaal nilaiyaana aatchi ???????? unmaiyaana ………… ada phonga sir……………

   kandhan said:
   April 23, 2011 at 6:37 am

   அண்ணே, நீங்க சொல்ரதுக்கு பேரு Vote Bank Politics . அதுக்கான காரணதைதான் இங்க சொல்லி இருக்கென். தேர்தல் சட்டங்கள்ள நல்ல மாற்றத்தை கொண்டுவந்துட்டா கூட்டணிகளுக்கு(கூட்டுகளவானிகள்?) அவசியமே இல்லாம் போயிரும்.

  kandhan said:
  April 23, 2011 at 6:45 am

  தல, ஒரு உதாரனதுக்கு 50 சதவிகிதனு சொனென். சிறுக சிறுக அடிச்சாதான் மலைய நகத்தலாம்.

  “மொத்த வாக்குகளில் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்கு சதவீதத்திற்கிணங்க சட்ட/பாராளுமன்றத்தில் அந்த கட்சிக்கு சீட்டுகள் வழங்க வேண்டும்.” : இதுக்கு மொதல்ல மக்கள் கிட்ட அரசியல் விழிப்புனர்வு உறுவாகனும். நம்ம ஆளுங்க காந்தி பேர கேட்டா, அந்த தாத்தாவ மனசுல வச்சுக்கிட்டு வோட்ட போட்டுர்ராங்க். இந்த சிக்கல தவிர்கதான் பாதி சீட்டுகளை தொகுதிவாரியாவும், மிச்ச பாதியை சீட்டுகளை வாக்கு சதவிகிதவாரியாகவும் குடுக்கலாம்னு சொன்னென்.

  Vinoth said:
  April 23, 2011 at 6:48 am

  கந்தன் சார் நான் பேசாம தன் இருந்தேன்.. உங்களால தான் தனி பதிவுபோட வேண்டியதாய்டுது…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s