அவன்-அவள்-அது: 9

Posted on

அண்ணே வணக்கம்ணே,
இன்னைக்கு கந்தன் சார் “தேறுதல் தராத தேர்தல்கள்’னுட்டு தனிப்பதிவு போட்டிருக்காரு. அதையும் இங்கே அழுத்தி படிச்சுருங்க. இப்ப டைரக்டா தொடருக்கு போயிருவமா/

இந்த அவன்-அவள்-அது தொடரை படிச்சுட்டு சமைத்துப்பார் புஸ்தவம் மாதிரி ஆன்மீக முன்னேற்றத்துக்கான டூஸ் அண்ட் டோன்ட்ஸை பத்தி ஒரு பதிவு போட்டா என்னன்னு மஸ்தா பேரு கேட்டுக்கிட்டே இருக்காய்ங்க. (ஹி ஹி ஒரே ஒரு பார்ட்டிதேன்.அதுவும் ஒரே ஒரு தாட்டித்தேன்)

என்னை நான் ஆன்மீக விஞ்ஞானின்னெல்லாம் சொல்லிக்கிட்டு வரைஞ்சு தள்ள ஆரம்பிச்சா அது கேணத்தனமாயிரும். நமக்கு நடந்ததெல்லாம் ஜஸ்ட் ஆக்சிடென்டல்.

ரேடியோ மெக்கானிக்குங்க தீர்ந்துபோன பேட்டரிகளை குப்பையில போட்டுருவாய்ங்க. அதை சின்ன வயசுல பொறுக்கிக்கினு வந்து, சீரியல் செட் பல்பு ஒன்னை பீராய்ஞ்சு , ஒரு துண்டு ஒயரை தேடி ஊக்குப்பின்னை எர்த்தா வச்சு அதுல ஒயரோட ஒரு முனையை முறுக்கி மறுமுனையை பல்போட பக்கவாட்ல டச் பண்ணா பக்குனு ஒரு செகண்டு எரியுமே அந்த மாதிரிதேன் நம்ம சாதனையில் கிராஸ் ஆன அனுபவங்களும்.

இதுல என்னாத்த டிப்ஸ் தர்ரது. ஆனால் ஒன்னு ஆப்பரேஷன் எல்லாம் நடந்து பேஷண்டோட கதை முடிஞ்சப்பாறம் மார்ச்சுவரில எப்படி செத்தான்னு கண்டுபிடிப்பாய்ங்களே அப்படி வேணம்னா ஒரு போஸ்ட் மார்ட்டம் பண்ணி பார்க்கலாம்.

முதற்கண் நம்ம ஹெரிடெட்டரி. அப்பா வழில ஒரு பூட்டன் (பாட்டனுக்கு பாட்டனை இப்படித்தானே சொல்வாய்ங்க) இந்த ரூட்ல இருந்ததா கேள்வி. பேரு கூட கிரி கிரி ராஜகோபாலோ என்னமோ? அப்பா ஏதோ சின்ன உத்யோகஸ்தரா இருந்தவரை போக்குவரத்தெல்லாம் இருந்ததா ஞா.

அப்பாறம் தாத்தா . பேரு முனிசாமி. ( நம்மை மாதிரியே 6 மாசத்துக்கு ஒரு தொழில்). எங்கப்பா கொஞ்சம் வசதி வந்த பிறவு தன்னோட டேட் ஆஃப் பர்த்துக்காக தாத்தா பெட்டிய பீராய்ஞ்சப்ப 1931 ஆம் வருச பஞ்சாங்கம்லாம் கிடைச்சதுங்கண்ணா. அதுலதேன் மிதுனத்துக்கு கெட்டகாரியத்துல உள்ள ஆண் பெண் உருவத்தை பார்த்தேன்.

அந்த குப்பையில ஒரு சிகரட் அட்டையில அப்பாவோட ஜாதகச்சக்கரத்தை தாத்தா அசால்ட்டா போட்டு ஜன்ம தசையில நிலுவையை கிறுக்கி வச்சுருந்தாரு ( செகண்ட் காப்பி இல்லிங்கண்ணா)

இனி அப்பாவ பத்தி சொல்லனும்னா என்னதான் பிற்காலத்துல ப்யூராக்ரெட் லட்சணங்கள் வந்து சேர்ந்து ஒரு டுப்புக்கு வாஸ்து பண்டிதரை கட்டி அழுதும், அவன் கொடுத்த தைரியத்துல நைருதில பாய்லர் வச்சு, மேற்கு திசை கிணறை மூடாம வச்சிருந்தாலும் ஆரம்பகாலத்துல ரெம்ப சின்சியரான தேடல் எல்லாம் இருந்திருக்கு.

மச்சானுக்கு பிள்ளையில்லைன்னு ஒரு சாமியாரை பிடிச்சு ஆசி கூறவச்சிருக்காரு.பிள்ளை பிறக்க அந்த சாமியார் சொன்ன பரிகாரம் என்ன தெரியுமா? வெய்யில் காலத்துல தண்ணீர் பந்தல் போட்டு சனத்துக்கு பானகம் கொடுக்கிறது.

மச்சானுக்கு ( ஐ மீன் அவரோட சம்சாரத்துக்கு – ஏங்க நான் கரீட்டா எழுதறேனா? ) வரிசையா ஒரு பெண் ,இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்ததும் உண்டு. போதாக்குறைக்கு அப்பா கண் மூடித்தனமான முருக பக்தர். ( அவருதும் கடகலக்னம் தேன். புத்ரஸ்தானாதிபதி செவ்வாய் – மொதல் ரெண்டு வாரிசும் நடுவயசுலயே காலி -செவ்வாய்க்குரிய கடவுள் முருகன் )

நமக்கும் சின்ன அண்ணனுக்கு பத்துவயசு வித்யாசம். ரெண்டோட நிறுத்தியிருந்த பார்ட்டி பத்துவருசத்துக்கப்பாறம் ஏன் களத்துல இறங்கனும்?

அப்பம் வேலூர் டாக்டர் .இரா .கண்ணப்பரோட சகவாசம் – மூலிகை மணி வாசிப்புல்லாம் மாட்டிக்கினாப்ல இருக்கு. ஏதோ கணக்கு போட்டு என்னமோ தகிடுதத்தம் செய்ய நாம அடிக்கடி பந்தாவா சொல்லிக்கிற யோக ஜாதக அமைப்புல நாம வந்து பிறந்தோம்.

நம்ம வீட்டுக்கு வடகிழக்குல தெருக்குத்து உண்டு. வடக்கு பார்த்த தலைவாசல். அம்மா அந்த கால தமிழ் சினிமா மாதிரி தியாக திருவிளக்கு. இந்த பின்புலமில்லாம நமக்கு ஆன்மீகத்துல பிரவேசம் லாட்டரி தனமான பரவசம்லாம் கிடைச்சிருக்கும்னு நம்பறிங்களா?

பத்து வயசுல ( நாலாங்கிளாஸ்ல) ஒரு கொலிக் எட்டணா செக்ஸ் புத்தகத்தை இண்டோலியா ஸ்டில் பெட்டில வச்சு ஸ்கூலுக்கு கொண்டுவர அதை படிச்சுட்டு மறு நாளே செக்ஸ் புஸ்தவம் வாங்க பஸ்ஸ்டாண்ட் பக்கம் போன பிஞ்சுல பழுத்த கேஸு.

ஆனால் இண்டர் முதல் வருசம் லீவ் வர்ரவரை உடல் ரீதியான எந்த இழப்பும் கிடையாது. ( அந்த சமயம் நமக்கு வயசு 17)

ஜஸ்ட் ஒரே ஒரு ரெண்டு வருசம் காசனோவால்லாம் பிச்சையெடுக்கனும். நாம அந்த காலத்துல பண்ண சில்மிஷங்களை இன்னமும் தமிழ் சினிமாக்காரவுக பயந்துபயந்து ஒவ்வொன்னாதான் காட்டிக்கிட்டிருக்காய்ங்க. காட்டாதது இன்னம் மஸ்தா கீது நைனா.

1986லயே நமக்குள்ள தேடல் ஆரம்பமாயிருச்சு. ஆஞ்சனேயர் -ராம நாமம் அண்ட் ஆல் தட். 1989ல செக்ஸை ஜெயிக்கனும்னா கண்ணாலம்தேன் தர்ம நியாயமான வழின்னு ரியலைஸ் பண்ணியாச்சு. அதுக்கு ஊருசனம் ஆப்பு வச்சு சீரழிச்சாலும் 1991 ல நாம பர்ஃபெக்ட் ஜென்டில்மேன் ஆயிட்டம்.

1987ல செக்சன் ரைட்டரா வேலை செய்யறச்சயே நான் உடலோட இதர அவயங்களையும் அதுகளோட செயல்பாடுகளையும் கவனிக்க ,உணர ஆரம்பிச்சுட்டன். நம்ம அனுபவத்துல உடம்புங்கறது ஒரு கருவி. அது எந்த தொல்லையும் தராம ஒரு அரைமணி ஒரே போஸ்சர்ல இருக்க அனுமதிக்கிற அளவு ஹெல்த்தியா இருந்தா போதும் .எலிமினேஷன்,அசிமிலேஷன் பக்காவா நடக்கனும். பாடில வாட்டர் கன்டென்ட் எக்காரணத்தை கொண்டும் குறையக்கூடாது. உப்போட சதவீதம் கூடவே கூடாதுங்கற உண்மைய தெரிஞ்சிக்க பல காலம் பிடிச்சாலும் நம்ம பரிசொதனைகள் மேற்சொன்ன 1987லயே ஆரம்பிச்சிருச்சு.

மொதல்ல நம்ம பரிசோதனைகள் தறிகெட்டு ஓடினாலும் ஒரு கட்டத்துல ரூட்டை பிடிச்சாச்சு. நம்ம பாடி நம்ம பேச்சை கேட்க ஆரம்பிச்சுருச்சு. எது ஒன்னும் வேணம்னா வேணும் .வேணாம்னா வேணா ரேஞ்சுக்கு கொண்டுவந்தாச்சு.

இதெல்லாம் ஒரு பக்கம்னா எண்ணம். திருப்பதி கணக்கா சொல்ட்டேன். எண்ணம் மீன்ஸ் எல்லா எண்ணங்களுக்கும் ஆதியாரம்பமான எண்ணம் கரீட்டா அமைஞ்சுருச்சு. 1986லயே கன்க்ளூட ஆயிட்டன்.. மன்சங்கல்லாம் ஜஸ்ட் ஜந்துக்கள்.இவிகளுக்குள்ளாற பேய் இருக்கு. முக்கியமா யூத்.இவிகளுக்கெல்லாம் வேலை கொடுத்தே ஆகனும். அதுவும் எப்படியா கொத்த வேலை ந்ரம்பு கழள்ற வேலை. இவிகளுக்கு வேலை கொடுக்கனுங்கற ஒரே காரணத்தால தேன் ………… பெரியவேலையா தேடிக்கிட்டிருந்தப்பதேன் நதிகளின் இணைப்பு கான்செப்ட் கிடைச்சது. தேவையானது தேவையான சமயத்தில் தரப்பட என் திட்டத்த்துக்காக உழைக்கிறதுதேன் முக்கிய நோக்கம். அந்த நோக்கத்தின் நோக்கம்………

தாளி .. மனித பிறவியே கேடு கெட்ட பிறவி. எப்டியோ பொறந்து தொலைச்சுட்டோம். இன்னொரு தபா இந்த பிறவிகூடவே கூடாது. சுய நல பூர்வமான கருமங்கள் தொடர் பிறவிகளை தந்து தாலியறுக்கும். அதுக்காக ” நாளும் பொழுதும் தெருக்கலா” இருக்க நம்மால முடியாது. செத்துப்போயிருவம் அ பைத்தியமாயிருவம்.

இதையெல்லாம் அவாய்ட் பண்ண ஒரே வழி பொது நலம்ங்கற கன்க்ளூஷனுக்கு எப்பயோ வந்தாச்சு. மன்சங்க எதை செய்தாலும் அதுக்கு அவிகளை இன்சிஸ்ட் பண்றது ரெண்டே இச்சை. ஒன்னு கொல்றது அடுத்தது கொல்லப்படறது.

கொன்னா கருமம் கூடும் பிறவிகள் நிச்சயம். கொல்லப்பட்டா கருமம் தொலையும். பிறவி கிடையாதுங்கற பாய்ண்டை பிடிச்சேன். வரப்பு தகராறு -வாய்க்கா தகராறுலல்லாம் செத்தா இந்த தியரி டுபுக்காயிரும்.

தாளி ஒரு பப்ளிக் அஜெண்டாவுக்காக சாகனும்னு டிசைட் பண்ணியாச்சு. அதனாலதேன் டேக்ஸி அனுப்பற மாதிரி ,ஆளனுப்பி போட்டுத்தள்ளிர்ர மாதிரி மேட்டருங்களையே பேச ஆரம்பிச்சம்.எழுத ஆரம்பிச்சம். “செய்வன திருந்தச்செய்”ங்கற மாதிரி சாகிறதுக்குன்னே செய்யாம. பக்காவா செய்வோம் காரியம் ஜெயமானா சந்தோசம். எவனாச்சும் போட்டுத்தள்ளிட்டா பரமானந்தம்னு ஒரு முடிவுல இருக்கம்.

இப்படி ஒரு வெடிமருந்தை கெட்டிச்சு வச்சிருந்ததாலத்தேன் ஹ்ரீம்ங்கற ஒரு பொறி பட்டதுமே ப்ளாஸ்ட் ஆயிருச்சு.

ஃபைண்ட் தி வில் தி வில் ஃபைண்ட்ஸ் தி வே – அந்த வில்லை கொடுத்ததும் குன்றை வில்லாக்கின குன்றவில்லியான மிஸ்டர் ஷிவாதான். ( ஷிவாவுக்கு ஷிவானிக்கும் வித்யாசமே கிடையாது தெரியும்ல – ரெண்டு பேரும் பேர்பாதி ங்கறாங்கன்னா)

அம்மனுக்கான துதியில ஒன்னு “மார்க்கண்டேய வரப்ரதாயை நமஹ” ங்கொய்யால மார்கண்டேயனுக்கு வரம் கொடுத்தது சிவனார்தானேன்னு வாதம் பண்ணாதிங்க. இது தனி வேதம். இங்கன சிவனுக்கு சிவானிக்கும் இல்லை ஒரு பேதம்.

ஆக இந்த உபதேச மஞ்சரியோட சாரம் : ப்ரே ஃபார் எ வில் – தி வில் ஃபைண்ட்ஸ் தி வே – தாளி சீன நெடுஞ்சுவருக்கு இணையா குறுக்கால சுவர் இருந்தாலும் உங்க வில் மோதினா அது வீல் வீல்னு அலறனும்ல.

Advertisements

12 thoughts on “அவன்-அவள்-அது: 9

  swami said:
  April 23, 2011 at 3:13 am

  அதெல்லாம் சரி. பாபம் பசிவாடு என்னாச்சு?

   S Murugesan said:
   April 23, 2011 at 5:12 am

   ஸ்வாமி,
   வரும் -வரும்

  PERUMALSHIVAN.S said:
  April 23, 2011 at 5:18 am

  murugesanne ! kaalai vanakkam !

  kandhan said:
  April 23, 2011 at 6:32 am

  தல, சுய நல பூர்வமான கருமங்கள் மட்டும் இல்ல, பொது நொக்கு கொண்ட கருமங்களும் பிறவியை குடுக்கும். ஏன்னா, பூலோகமோ அல்லது நரகலோகமோ இல்லாம, வேர ரீசார்ட்(Resort) மாதிரியான லோகத்துக்கு டிக்கட் கிடைக்கும். அவ்ளவுதான். கர்மம்னு இருந்தா அதோட மனசு கண்டிப்பா identify பண்ணும். அந்த ‘I’dentification இருக்கிர வரைக்கும் கடல்ல அல்லாடனும்.
  பிறவி பெருங்கடல கடக்கனும்னா நீந்த கூடாது. காத்து, அலை கொண்டுபோற போக்குல் போகணும். இதுதான் என்னோட கருத்து.

   S Murugesan said:
   April 23, 2011 at 6:48 am

   கந்தன்!
   சுய நல காரியங்கள்ள மனசு ச்சொம்மா ஃபெவிக்கால் போட்ட மாதிரி ஒட்டிக்கினு பிறவிகளை தருது.

   பொது நல காரியங்கள்ள என்னதான் நாம “உத்தம புத்திரன் “ரேஞ்ச்சுல பில்டப் கொடுத்துக்கிட்டாலும் “தேங்கா மூடி கேசு”ங்கற எண்ணம் இருக்கும்.

   மேலும் நம்ம சக்திக்கு பல லட்சம் மடங்கு அதிகமான பொது காரியத்துக்கு கமிட் ஆகறச்ச நம்ம மனசு ,ஈகோ எல்லாமே உ.பி.ஆ.கு மாதிரி சுருங்கி போயிரும்ங்கறது என் கருத்து.

   வாழ்க்கைங்கற ஆறுல ஆத்தோட போனா அது யோகம்.
   பிறவிப்பெருங்கடல்ல கடலோட போனா 84 லட்சம்X84லட்சம் பிறவிகள் தேன்

  R.Puratchimani said:
  April 23, 2011 at 8:28 am

  பாசு நீங்கள் விரும்பினால்
  உங்களுடைய பிறந்த தேதி, நேரம், இடம் கொடுங்க….கூடவே உங்களுக்கு தியானம் மூலம் முதல் ஆன்மீக அனுபவம் என்னைக்கு ஏற்ப்பட்டதுன்னு சொல்லுங்க….ஒரு சின்ன ஆராய்ச்சிக்கு இது உதவும்.

  //அதுலதேன் மிதுனத்துக்கு கெட்டகாரியத்துல உள்ள ஆண் பெண் உருவத்தை பார்த்தேன்//

  இது புரியலையே

   S Murugesan said:
   April 23, 2011 at 12:01 pm

   புரட்சிமணி,
   நம்ம வாழ்க்கை நெஜமாலுமே திறந்த புத்தகம். என் டேட் ஆஃப் பர்த் 7/8/1967 நேரம்; காலை 6.10 ஊர்:சித்தூர் ஆந்திர பிரதேசம்.

   முதல் அனுபவ தேதியெல்லாம் இல்லிங்கண்ணா .வேணம்னா 1/1/1986 ஆம் தேதிய சொல்லலாம்.

   பெண்ணில் இன்னொரு கோணமும் இருக்குங்கறதை உணர்ந்து -அவளை வெறும் மாமிசமா பார்க்காம இருக்க ஆஞ்சனேயரை மனம் நாடின தேதி இது.

   நேரம் ? சரியா நினைவில்லையே!

    R.Puratchimani said:
    April 23, 2011 at 4:21 pm

    நன்றி பாஸ்

  ak said:
  April 23, 2011 at 10:45 am

  Purium Tamil -il ezhuthi irukalaam.difficult to understand for me.

  Thevar said:
  April 26, 2011 at 5:45 pm

  ஏலே ஒன்னோட எழுத்துல ஒரு உள்நோக்கம் தெரியுது.
  சரி அது கெடந்துட்டு போகுது.
  என்னோமோ நூல அறுக்குறமாதிரி பெறவிய அறுக்கனும்னு
  நெனைகிறையா? அதுக்கெல்லாம் ஒரே வழிதாம்லே.
  நெசமாவே நீ தெரிஞ்சுக்கணும்னு நெனச்சா ஒரு வரி எழுதிப்போடு.
  நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.
  நல்ல மனுஷனுக்கு ஒரு சொல்லு.
  என்தம்பி மாதிரி நெனச்சு சொல்றேன்- அந்த பொம்பள விஷயம்……
  அதுதான்- அதேதான்- என்ன செய்யப் போற.?

   S Murugesan said:
   April 26, 2011 at 7:45 pm

   தேவரண்ணே,
   //நெசமாவே நீ தெரிஞ்சுக்கணும்னு நெனச்சா ஒரு வரி எழுதிப்போடு.// நாம எழுதிப்போட்டும் ஆச்சு. பதிலும் கிடைச்சாச்சு. உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. அந்த பொம்பள மேட்டர் விடப்போறதில்லிங்கண்ணா..

   குறைஞ்ச பட்சம் ஒரு டஜன் பார்ட்டிகளாவது என்னாட்டம் சிண்டை பிச்சுக்கவேணா? நிச்சயம் தொடரும். ( அவன் அவள் அது தொடரை தானே சொல்றிங்க)

    Thevar said:
    April 26, 2011 at 8:01 pm

    எனது வார்த்தைகள் ஏதாவது புண்படுத்தினால் – மன்னிக்கவும்.
    உங்கள் எழுத்தின் நோக்கம் சுவைபட சொல்தல் என்பது விளங்குகின்றது.
    மொத்தத்தில் நேற்றைக்கு உங்கள் தளத்தைப் பார்வையிட்டு – உடனே நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்.
    உங்களுடைய அறிவு யாருக்கெல்லாம் தேவை என்பதை நான் அறிந்துகொண்டேன்.
    அதனை நீங்கள் தெரிந்துகொள்ளும் நாளில்-“யானை தன் வலி அறிதல்”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s