அவன்-அவள்-அது :8

Posted on

அண்ணே வணக்கம்ணே,

ஆத்தா நமக்கு கொடுத்த ஜெட் கேட்டகிரி செக்யூரிட்டி பத்தி சொல்லிர்ரன்.பிள்ளை டாஸ்மாக்லயே குடியிருப்பான் ஆனா அம்மாக்காரி ” ஊர் உலகத்துல எவன் குடிக்கலை.. ஏதோ எம் புள்ளை உடம்பு வலிக்கு கொஞ்சமா குடிப்பான் போல”ன்னுதான் சொல்வா.

புள்ளை கிட்டே மட்டும் ” டேய் பாவி கேட்கிறவுகளுக்கு பதில் சொல்ல முடியலடா .கண்ட நாயி உன்னை கண்ட படி பேச .பெத்தவயிறு பத்தி எரியுதுடா.. அந்த குடியை விட்டுத்தொலைக்கக்கூடாதாடா’னு புலம்புவாள்.

என்னதான் ஜகத்ஜனனி, லோக மாதான்னாலும் பேசிக்கலா அம்மாதானே. அதனால என்னதான் நமக்குள்ளே குப்பைகள் நிறைஞ்சிருந்தாலும், பெரிய்ய டுபாக்கூர் பார்ட்டியா இருந்தாலும் அடுத்தவன் வந்து ந்ம்மை சீண்டி பார்க்க விட்டதே இல்லை.

இந்த பீஜாக்ஷர தியானம் ஆரம்பிச்ச காலத்துல அப்பா, அப்பா சொத்து,அம்மா எல்லாரும் காலி. அண்ணன் தம்பி இருந்தும் இல்லாதது போலத்தேன். பொஞ்சாதி ஜஸ்ட் பொஞ்சாதிதேன். என்ன ஒரு ப்ளஸ்ஸுன்னா மார்க்கெட் செலவுக்கு பணமில்லேன்னா “சமைக்கிற வேலை மிச்சம்”னு நினைக்கிற கேசு. மகளுக்கு அப்போ எட்டு வயசு. அந்த எட்டுவயசுக்கே ஸ்ரீராமனுக்கு ஆஞ்சனேயர் கணக்கா நமக்கு உதவியா இருப்பாள்.

இந்த கேடு கெட்ட காலத்துல கூட ரொட்டீன் ஜோசியரா நாலு காசு பார்ப்போம்னு நினைச்சதே கிடையாது. இதுல திடீர் திடீர்னு குற்ற உணர்ச்சி வந்துரும். தாளி .படிப்பிருந்து,உழைக்கிற வலிமை இருந்து .வேலை வெட்டி பார்க்காம இதென்னா கிழவாடி மாதிரின்னு ஒரு ஃபீலிங் வந்துரும். ஒடனே ஒரு வேலை . அப்பாறம் இல்லாத பொல்லாத யுகத்துக்கொவ்வாத உணர்வுகள் காரணமா விட்டுர்ரது.

இதையெல்லாம் சொல்லவந்தது நம்மை சந்தையில நிக்கவச்சு கோவணத்தை உருவிட்டா கூட கேட்க ஆளில்லேங்கறதை சொல்லத்தேன். ஆனால் மந்திர உச்சாடனம் ஆரம்பிச்ச நாள்ளருந்து நமக்குன்னு ஒரு ரெப்புட்டேஷன், ஒரு அங்கீகாரம் உருவாக ஆரம்பிச்சது.

மொதல்ல ஒரு கவுன்சிலரோட கணவர் தன் காம்ப்ளெக்ஸ்ல சின்ன ரூமை வாடகையில்லாம கொடுத்து பிள்ளையார் சுழி போட்டார். ஒரு ஆறுமாசத்துல நாமே முன் வந்து வாடகை தர ஆரம்பிச்சுட்டோம்னா பார்த்துக்கங்க.

மழை விட்டு தூவானம் விடலைங்கற கதையா – நம்ம பக்தி சிறுத்தப்பவோ – அல்லது நம்ம விசுவாசம் வீக்கானப்பயோ – அல்லது ஆத்தா அருள் பாலிக்கனும்னு டிசைட் ஆனப்பயோ ஒரு பிக்காலி திடீர்னு சீன்ல என்டர் ஆவான். ஏதோ ஒரு சில்மிஷம் பண்ணுவான். 500 சிசி வண்டில ஹெவி ஸ்பீட்ல போறச்ச ஒரு பூச்சி கண்ணிலடிச்சாப்ல ஆயிரும்.

இதெல்லாம் ஆறு மாசத்துக்கொரு தரம் நிச்சயம் நடக்கும். வண்டியை ஓரங்கட்டிட்டு கண்ணை கழ்வி,முகத்தை துடைச்சிக்கிட்டு அப்பாறம் வண்டிய ஸ்டார்ட் பண்ணிக்கிட்டு போவோம். இது நம்ம பாய்ண்ட் ஆஃப் வியூல ஜஸ்ட் லைக் தட் நடக்கிற விஷயம்.

ஆனால் சீன்ல என்டர் ஆன பார்ட்டிகளோட கதை ? அய்யோ அய்யோ.. அதை சொன்னா இளகின நெஞ்சம் படைச்சவுக பதறிப்போயிருவிக .

ஒரு பார்ட்டி அவன் கடை படியில உட்கார்ந்த பாவத்துக்கு ஃபுட் மேட்டை உதற்ப்போடச்சொன்னான். அவன் கதி என்னாச்சுங்கறிங்க? இன்னை வரைக்கும் ஐ மீன் 11 வருஷமா பிச்சை தேன். இத்தனைக்கும் அவனோட அண்ணங்காரவுகல்லாம் பயங்கர சவுண்ட் பார்ட்டிங்க. அஷ்டமத்துல சனி செவ் சேர்ந்திருக்கிற மகராசிய கல்யாணம் கட்டி ( ஃபுட் மேட்டை உதறச்சொன்ன ஒரு வாரத்துல ஓடிப்போய் கண்ணாலம்)
அம்மாக்காரி தனக்கு கைச்செலவுக்கு கிடைக்கிற பணத்தை சீக்ரெட்டா கொடுத்துவிட்டா 25 கிலோ அரிசி வாங்கிக்கிட்டு போறான்.

நானும் எத்தினியோ தாட்டி “ஆத்தா ஏதோ தெரியாத பண்ணிட்டான். போவட்டும் ஆத்தா விட்டுருன்னு” ரிவ்யூபெட்டிஷன் போட்டுப்பார்த்தாச்சு. ஊஹூம் கேட்கிற மாதிரியே இல்லை.

இன்னைய தேதிக்கு மந்திர உச்சாடனம் ஆரம்பிச்சு 10 years, 3 months, and 28 days ஆகுது. இன்னைக்கு ஒரு விசேஷம். 1972ல ரிலீசான ஒரு படத்தை இன்னிக்கு டிவில பார்த்தேன். லாஸ்ட் இன் தி டெசர்ட்ங்கற ஆப்ரிக்க படத்தோட ரீமேக். அந்த படம் ரிலீசானப்ப நமக்கு அஞ்சு வயசு. ஏதோ ஒரு சுபயோக சுபதினத்துல அந்த படத்தை பார்த்தாச்சு.

சின்ன அண்ணன் ( நம்மை விட பத்து வயசு பெரியவன்) ஆனா கக்கூஸுல கூட கதவைதாள் போடாமத்தேன் உட்காருவான் ( தைரியத்தின் பிறப்பிடம்) நாம அந்த காலத்துலயே தில்லு துரை முரட்டு சேவல், அடாவடி நாய்க்கெல்லாம் கூட பயப்படமாட்டோம்னு கேள்வி. ஆனால் சின்ன அண்ணனுக்கு நம்மை பயமுறுத்தி பார்க்க மேற்படி படம் ரெம்ப ஹெல்ப் ஃபுல்லா இருந்துச்சுங்கண்ணா. அவன் ராத்திரி நேரத்துல “டேய் வெள்ளை ! பாபம் பசிவாடு”ன்னா போதும் ஒடனே துக்கம் பொங்கும் – உடம்பு பயத்துல நடுங்கும்.

அந்த படத்தை தேன் இன்னைக்கு பார்த்தேன்.. என் வாழ் நாளுக்குண்டான செய்தி – என் வாழ் நாள் முழுக்க நான் மேற்கொண்ட தேடலுக்கான விடையோட சாரம் அந்த படத்துல இருக்கிறதை தெரிஞ்சுக்கிட்டேன். அதை அடுத்த பதிவுல நிச்சயம் ஷேர் பண்ணிக்கிறேன்.

நேத்து போட்ட பதிவை படிச்சு நொந்துக்கிட்டிங்களோ என்னமோ? என்ன பண்றது பாஸ்.. சனம் என்னமோ சோசியம் பார்த்துக்கிட்டு அதுக்கு ஃபீஸாதான் பணம் தர்ராய்ங்க. நமக்கு அதை வெறுமனே ஃபீஸா நினைச்சு வாங்கி வவுத்த கழுவிக்கினு போக மனசு வரமாட்டேங்குதே.

ஜெயேந்திரர் போன தேர்தலுக்குனு எடுத்து விட்ட கணிப்பு அம்மா காதுக்கு போகாத இருந்திருக்காது. ஆனாலும் மன்சாளுக்கு மறதி சாஸ்தியாச்சே. நடந்ததை ஜெயேந்திரரும் மறந்திருப்பாரு. அம்மாவும் மறந்திருக்கலாம்.

இதை அர்ஜென்டா ஞா படுத்தலின்னா ஜெயேந்திரர் போய் கோர்த்துக்க எம்மா நேரம் பிடிக்குங்கறிங்க. ஏதோ நம்மால முடிஞ்சது. கொளுத்திப்போட்டுட்டம். இதெல்லாம் செஞ்சோற்று கடன் மாதிரி. அங்கன தமிழ் நாடு அரசு மருத்துவமனைக்கு ஸ்பாட் வச்ச மாதிரி இங்கன திருப்பதி ஸ்விம்ஸுக்கும் ஸ்பாட் வைக்க பார்த்த பார்ட்டிங்கோ. ஏதோ இங்கன ஒய்.எஸ்.ஆர் இருந்தாரு . கண்டம் தப்பிச்சுது. அங்கன ?

வரி ஏய்ப்பு தெரியாத அப்பாவி ஏழை சனத்தோட வரிப்பணத்துல நடக்கிற அரசு மருத்துவமனையில பிறந்து அரசு பள்ளி,கல்லூரிகள்ள படிச்சு, ரெண்டு வருசம் அரசுத்துறையில குப்பை கொட்டி 1989 லருந்து சனத்தோட படியளப்புலதேன் வாழ்க்கை ஓடுது .நம்மால முடிஞ்ச நன்னி விசுவாசத்தை காட்டலைன்னா எப்படிங்கண்ணா.

நாம என்ன கல்கி பத்திரிக்கையா? இந்த கணிணியுகத்துல கூட பழைய ஞாபகத்துல விசுவாசமா வாங்கிப்படிக்கிற சனங்களுக்கு உபயோகமா எத்தனை எழுதலாம். தாளி.. விக்கிலீக்ஸ் காரரு “மன்மோகன் சிங் ஊழலை மூடிமறைக்கறாரு”னு சொன்னதை விமர்சிச்சு தலையங்கம் எழுதியிருக்காய்ங்க.அப்போ மன்மோகனார் ஊழலை எல்லாம் வெட்ட வெளிச்சமாக்கற பார்ட்டியா? கல்கியை கேட்டுச்சொல்லுங்கண்ணா.

Advertisements

7 thoughts on “அவன்-அவள்-அது :8

  swami said:
  April 22, 2011 at 5:37 am

  அண்ணே,
  வருணுக்கு நீங்கள் கொடுத்த பதில் ரொம்ப நல்லா இருந்தது. பக்குவப்பட்ட மனம் உங்களுக்கு. ஆனா இனிமே யாராச்சும் புரியாம இந்த மாதிரி ஜோசியத்துக்கு எதிரா பதிவு போடும்போது, அவங்களை கண்டுக்காம இருக்கறது நல்லது. .யோகம். சித்த மருத்துவம், ஜோதிஷம் எல்லாம் நம்ம நாட்டோட
  பொக்கிஷம், அதை உணரதவனுக்கு நீங்க பதில் சொல்ல தேவை இல்லை.

   S Murugesan said:
   April 22, 2011 at 8:05 am

   ஸ்வாமி,
   ரெண்டு கை சேர்ந்தாதா சத்தம். மனிதமற்ற ஆத்திகத்தால நாத்திகத்துக்கு முக்கியத்துவம். கண்மூடித்தனமான நாத்திகத்தால ஆத்திகத்துக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.

   ஜோதிடம் குறித்த புதிய பார்வைஏற்படலைன்னா விமர்சகர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். கண்மூடித்தனமா கல்லெறிஞ்சா ஜோதிடத்துக்கு முக்கியத்துவம் ஏற்படும்.

   ஜகன் நாடகத்துல ந்வரசமும் இருந்தாத்தேன் பார்க்க சகிக்கும். அல்லாருமே ஜாதக நோட்டை கக்கத்துல வச்சிக்கிட்டு அலைஞ்சா பார்க்க முடியுமா?

  வினோத் said:
  April 22, 2011 at 8:39 am

  தல… ரொம்ப யோசனயோட தான் பதில் போடறேன். ஏன்னா என்ன பத்தியா ஏடாகூடம கேள்வி கேட்குறான்னு நீங்க இல்லனா ஆத்தா கோவிச்சா நான் என்ன பண்ண ?

  //….என்னதான் ஜகத்ஜனனி, லோக மாதான்னாலும் பேசிக்கலா அம்மாதானே. அதனால என்னதான் நமக்குள்ளே குப்பைகள் நிறைஞ்சிருந்தாலும், பெரிய்ய டுபாக்கூர் பார்ட்டியா இருந்தாலும் அடுத்தவன் வந்து ந்ம்மை சீண்டி பார்க்க விட்டதே இல்லை.

  அம்மாக்காரி தனக்கு கைச்செலவுக்கு கிடைக்கிற பணத்தை சீக்ரெட்டா கொடுத்துவிட்டா 25 கிலோ அரிசி வாங்கிக்கிட்டு போறான்….//

  லோகமாதான்னா அந்த பார்ட்டிக்கும் ஆத்தா அம்மா தானே… நீங்க மந்திரம் உச்சடனம் பண்ணி அம்மா ன்னு கூப்பிட்டுருக்கீங்க அந்த பார்ட்டி கூப்பிடலை .. இதான வித்தியாசம் ? சாதாரண அம்மான்னா இது நான் பெத்த மகன் , இது வேற யாரோன்னு சொல்லலாம் ஆன லோகமாதா அப்படி சொல்ல முடியாததே. பிறந்த பிறக்கும் பிறக்கபோகும் எல்லா உயிருக்கும் தாய்.. ஒரு சின்ன சம்பவத்துக்காக அதுவும் நீங்க போதும் விட்டுடுன்னு சொன்னாலும் ..அதுவும் தன் மகன் தானே..அந்த பார்ட்டி வாழ்க்கையில் விளையாடுவாளா?

  அந்த பார்ட்டியின் ஜாதக பலன் என்ன ஆகும் ? நல்ல திசை இருக்காதோ? ஒருவேளை நல்ல திசை இருந்து உங்க கூட மோதிட்ட ஜாதக பலன் என்ன ஆகும் ?

  அஷ்டமத்துல சனி செவ் சேர்ந்திருக்கிற மகராசிய கல்யாணம் கட்டி ( ஃபுட் மேட்டை உதறச்சொன்ன ஒரு வாரத்துல ஓடிப்போய் கண்ணாலம்)

  இதுக்கு என்ன பலன் இருக்கும் ?

  சனி செவ்வாய் சேர்க்கை பற்றி எழுதுங்க சபிக்க பட்ட வம்சகளில் படிச்ச ஞாபகம்.. தல classroomல வாத்தியார் சொல்ல மாட்டேன்டார். நெட்டுல தேடிபார்த்தா . இங்கிலிஷில் இருக்கு. அதுவும் சேர்க்கை எந்த ராசி, நட்சதிரம் பாதம்.. சனி செவ்வாய் சேர்கையில் உச்ச நீச்சம்.. யார் முன்னால் யார் பின்னால் .. இதை பொறுத்து மாறும்னு இருக்கு.

  அப்புரம் எங்களுக்காகவும் ஆத்தா கிட்ட கொஞ்சம் ரெக்கமண்ட் பண்ணுங்க…

   S Murugesan said:
   April 22, 2011 at 11:15 am

   வினோத்ஜி,
   தெய்வம் கலைஞருக்கு கூட நல்லதை பண்ணத்தான் ட்ரை பண்ணுது தெய்வத்தோட ரூட்டு பாவங்களுக்கான தண்டனையை அனுபவிக்கவச்சு ப்யூர் ஆக்கிறது. ரியலைஸ் ஆக உதவறது. அதன் மூலம் ஞானம் பெற செய்யறது.
   (உ.ம்; கலைஞர் இப்போ தோத்தாருனு வைங்க ஜெ போடப்போற போடுக்கு கலைஞரோட ஏழேழு ஜென்மத்து பாவமும் பரிகாரமாயிரும்)

   நான் சொன்ன பார்ட்டிக்கும் ஆத்தாதான் ஆத்தா. அவளோட நோக்கம் அவனை ரியலைஸ் ஆக வைக்கிறது. ஞானத்தை நோக்கி துரத்தறது.

   இன்னொரு மேட்டர் இங்கன ஒரு மேட்டர் நடக்குதுன்னா அதுக்கு செவரல் ஃபேக்டர்ஸ் காரணமா இருக்கும். ஒவ்வொருத்தரும் தன்னாலதேன் தன்னாலதேன் க்ளெய்ம் பண்ணிப்பாய்ங்க முட்டாப்பசங்க( நானும் ஒரு முட்டாள் தானே)

   சனி செவ் பற்றி தனிப்பதிவே போட்டிருக்கேங்கண்ணா

   http://kavithai07.blogspot.com/2010/05/blog-post_3213.html

   ரெக்கமண்ட் பண்ற ரேஞ்சுக்கு நாம வளரலிங்கண்ணா..
   ( நம்ம ரெக்கமண்டேஷன்ஸ் தான் ஒர்க் அவுட் ஆறதில்லைனு ஏற்கெனவே சொல்லியிருக்கேனே பாஸ். ஆனாலும் ஐ வில் பி ப்ரேயிங்க் ஆல்வேஸ் ஃபார் ஆல் ஹூ டு குட், திங்க் குட் அட்லீஸ் நாட் திங்கிங் ஆர் டூயிங் பேட் டு தி மேன் கைண்ட்

    R.Puratchimani said:
    April 22, 2011 at 5:33 pm

    வணக்கம் பாஸ்,
    நல்ல இருக்கீங்களா? பேசி ரொம்ப நாளாச்சு.
    ராசிப்படி சனி செவ்வாய் சேர்க்கை இரண்டில் இருந்து பாவத்தில் மூன்றில் இருந்தால் எதை எடுத்து கொள்ள வேண்டும்?
    உங்களுக்கு உண்மையிலேயே தொலைபேசியில் தொல்லை தரலாமா?
    நன்றி

    S Murugesan said:
    April 22, 2011 at 7:16 pm

    வாங்க புரட்சிமணி,
    அதான் சனி செவ் சேர்க்கை பத்து படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சிருக்கேனே. ரெண்டாம் பாவம் நாசமாகியிருந்தா ராசியை எடுத்துக்கங்க. மூன்றாம் பாவம் நாசமாகியிருந்தா பாவத்தை எடுத்துக்கங்க.

    ஃபோன் தானே மதியம் 11 முதல் 12 க்குள்ள கூப்டுங்க.

    லேண்ட்லைன்ல கூப்டுங்க.
    08572 – 234275

    R.Puratchimani said:
    April 23, 2011 at 8:08 am

    நன்றி பாஸ்..

    ஆயிருந்தா சரி…மத்தவங்க ஜாதகத்துல எது ஆவும்னு எப்படி கண்டுபிக்கிறது….

    //ஃபோன் தானே மதியம் 11 முதல் 12 க்குள்ள கூப்டுங்க.///

    நல்லா சொன்னீங்க போங்க நான் என்திர்கிரதே அனந்த டைம் தான்.
    நும்பெர்க்கு நன்றி…சீக்கிரமா கூப்பிட முயற்சி பண்றேன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s