நாடியை நாடி :2

Posted on

முன்னுரை:
அண்ணே வணக்கம்ணே,
நம்ம கந்தன் சாரு நம்மையெல்லாம் டீல்ல விட்டுட்டாருனு நினைச்சிருந்தமா? நான் அப்படியா கொத்த கேரக்டர் கிடையாதுன்னுட்டு ” நாடியை நாடி” தொடர் பதிவோட ரெண்டாவது ஐட்டத்தை அனுப்பிட்டாரு.

கந்தன் சாரோட அனுமதியோட ஒரு சொந்த அறிவிப்பு:
கச்சா முச்சான்னு ஜாதகங்கள் வந்து குவிஞ்சிட்டதால ஏப்ரல்21 வரை புது ஜாதகம் அனுப்பாதிங்கனு ஹவுஸ் ஃபுல் போர்டு மாட்டியிருந்தேன்.

அப்படியும் ஏப் 21க்கு மேலே ப்ரிடிக்சன் அனுப்பினா போதும்னு சிலர் அனுப்பிட்டாய்ங்க. அவிகளை தவிர ஒரே ஆளா பத்து சாதகம் அனுப்பிட்ட ஆர்வலர் தவிர எல்லா ஜாதகமும் பைசல் பண்ணியாச்சு. அதனால ஹவுஸ் ஃபுல் போர்டை தூக்கியாச்சு.

ஒரு வேண்டு கோள்:
ஆளுக்கு ஒரு ஜாதகம் மட்டும் அனுப்புங்கண்ணா.. ஒருத்தரே டஜன் கணக்கா அனுப்பிர்ரதால அவிகளுக்கு நான் மாஞ்சு மாஞ்சு பலன் அனுப்பிக்கிட்டிருக்கிறச்ச மத்தவுக “இந்தாளு என்னதான் பண்றான்”னு திட்டிக்கிறது நல்லாவே கேட்குதுங்கண்ணா..அதுக்குத்தேன் இந்த வேண்டு கோள்.

நாடியை நாடி: 2
போன பகுதில சாப்பாடு மூலமா கபம் வாதம் பித்தம் இந்த மூன்றையும் எப்படி சம நிலைக்கு கொண்டு வரலாம்னு பாத்தோம்.

இப்போ அதே மாதிரி சில மூலிகை மற்றும் முத்ரா(Mudra) மூல‌ம் மேற்படி நாடிகளை எப்படி கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரலாம்னு பாப்போம்.

நெல்லிகாய் பொடி ‍ பித்தம் கட்டுப்படும்.

கடுக்காய் பொடி : வாதம் கட்டுப்படும்.

தான்றிக்காய் பொடி: கபம் கட்டுப்படும்.

முத்ரா (Mudra):

கைல ஒவ்வொரு விரலும் பஞ்ச பூதங்களை குறிக்குது:
க‌ட்டை விர‌ல்: அக்னி
ஆள்காட்டி விரல்: வாயு
ந‌டுவிர‌ல் : ஆகாச‌ம்
மோதிர‌ விர‌ல்: பூமி
சுன்டு விர‌ல்: நீர்

இத‌ ஆதார‌மா வ‌ச்சு தாங்க‌ முத்ரா.

முத்ரா அப்டினா ந‌ம்ம‌ கை விர‌ல்க‌ளை ஒவ்வொரு வித‌மா வ‌ச்சிகிறதுக்கு பேரு தான்.
(உம்) வ‌ண‌க்க‌ம் சொல்ரோமே. அதுக்கு பேரு ப்ரணாம முத்ரா.

தியானம் பண்ணும் பொழுது ஆள்காட்டி விரல கட்ட விரலோட சேத்து வச்சிருக்கோமே அதுக்கு பேரு ஞான முத்ரா.

வாதம் கட்டுப்பட ஆள்காட்டி + நடுவிரலை உள்ளங்கைகுள் மடக்கி அது மேல் கட்டவிரலால தொடனும். இப்படி ஒர் அரை மணி நேரம் வச்சிருக்கனும்.

பித்தம் கட்டுப் பட சுண்டு விரல்+ மோதிர விரலை மடக்கி அது மேல் கட்டவிரலால தொடனும்.

பித்தத்தை கட்டுப் படுத்த நமக்கு தெரிஞ்ச வரைக்கும் தனி முத்ரா கிடையாதுங்க. இந்த முத்ரா விஷயத்துல் இன்னம் நிறைய இருக்கு. ஹார்ட் அட்டாக்கை கூட‌ ஒரு முத்ராவால் ச‌ரி பண்ணிராலாம்ங்றாய்ங்க.

துணுக்கு :

1 இர‌வு பால் அருந்தும் போது அதுல‌ குங்கும‌ப்பூ சேர்க‌னும். இது உங்க‌ க‌ல‌ர‌ ஏத்துர‌துக்கு இல்ல‌. ம‌னித‌ உட‌ம்புல‌ 7/8 வ‌ய‌சு வ‌ரைக்கும் தான் பால் சுல‌ப‌மா செரிமானம் ப‌ண்ண கூடிய‌ சாறுக‌ள் வ‌யித்துல‌ சுர‌க்கும். அதுக்க‌புற‌ம் கிடையாது. குங்குமபூ சேத்தா செரிமானம் சுல‌ப‌மா இருக்கும்.

2 தேன் உடல் ஆரொக்யத்துக்கு ரொம்ப ந‌ல்ல‌துன்னு எல்லார்க்கும் தெரியும். ஆனா தேன் தொட‌ர்ந்து சாப்பிட‌கூடாது. ரெண்டு மூனு மாச‌த்துக்கு ம‌த்தீல ஒரு மாச‌ம் கேப் விட‌னும். தேன சூடு ப‌ண்ணி சாப்டா அது உடம்புக்கு ந‌ச்சு.

கொசுறு:

தேவி கவசம்: சூரிய நாடி, மஹா ம்ருத்யூஞ்ஜய மந்திரம்: சந்திர நாடி

ஞான மார்க்கம் : சூரிய நாடி , பக்தி மார்க்கம்: சந்திர நாடி

சித்தூர் முருகேசன் சரக்கு:

சூரிய நாடி ஓடும் போது ஐ மீன் ஆண்களுக்கு வலது நாசியில மூச்சு நடக்கும்போது அறிவுப்பூர்வமா சிந்திக்கமுடியும். எடுத்த வேலை முடியும். ( அதுக்குன்னு நமீதாவுக்கு மிஸ்ட்கால் கொடுக்காதிக)

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ரேஞ்சுல யோசிப்போம்.

சந்திர நாடி ஓடும்போது :
மூச்சா வரும் – தாகம் எடுக்கும் – கில்மா நினைவுகள் வேகம் பிடிக்கும். தூக்கம் வரும்.

விந்து வெளியாவதை தடுக்கவும் ஒரு முத்ரா இருக்குதுங்கோ.. அது என்னன்னா .. அஸ்கு புஸ்கு கந்தன் சார் அடுத்த அத்யாயத்தை அனுப்பினா அதுல சேர்த்துத்தான் தருவம்..

4 thoughts on “நாடியை நாடி :2

  P.A.Kumar said:
  April 19, 2011 at 4:17 pm

  கந்தனுக்கும் முருகனுக்கும்,
  இதையெல்லாம் ஒரு குரு வழிகாட்டுதலோட செய்யணும்.
  ஆர்வத்த தூண்டுறதுக்கும், அறிந்துகொள்வதற்கு மட்டும்-ன்னு குறிப்பு போடுங்க.
  என்னமாதிரி விவரம் இல்லாதவங்களும் படிக்கிறாங்க.

   kandhan said:
   April 19, 2011 at 5:08 pm

   Your Guru is within you. தமிழ்ழ‌ இதுக்கு இனையா தெரியல.

   S Murugesan said:
   April 19, 2011 at 5:58 pm

   குமார் அண்ணே,
   ப்ளாகரா இருந்தப்பயே நிர்வாண உண்மைகள்னு பேரை வச்சு கில்மா,பலான ஜோக்கு ,உடலுறவு நிலைகள்னு சனத்தை அண்டவிடாம பண்ண என்னெல்லாம் பண்ணனுமோ மொத்தம் பண்ணியாச்சு.

   அதையும் மீறி இன்னம் நம்மை படிக்கிறாய்ங்கன்னா ‘விட்ட குறை தொட்ட குறையா” ஏதோ தொடருதுன்னு அர்த்தம்.

   ஆன்மீகம்னா ஆஃபீஸ் போய்ட்டுவந்து ஆராமா பண்ணிட்டு மறு நா ஆஃபீஸ் போற சமாசாரம் இல்லிங்கண்ணா.

   நானெல்லாம் ஷீர்டி,திருவண்ணாமலைனு ஆராச்சு கூப்டா ” த பாருப்பா ..எனக்கு ஸ்க்ரூ லூசாகி அங்கனயே நின்னுட்டா என் குடும்பத்துக்கு நீதான் வில்லனாயிருவ”னு சொல்வது வழக்கம்.

   குருவை நாம தேடி – கிடைச்சாலும் அவரை ஐடென்டிஃபை பண்ற ரேஞ்சில நாம இருந்தா குருவே நம்மை தேடிவருவாரு.

   ஆன்மீக பயிர் வளர்க்க நம்ம உயிருதான் உரம்.
   குரு இல்லேன்னு காத்திருந்தா 84 லட்சம் X84 லட்சம் பிறவிகள் எடுக்க வேண்டியதுதேன்.

   காத்துல ஆக்சிஜன்,ஹைட்ரஜன் இத்யாதி மட்டும் இல்லிங்கண்ணா கோடானுகோடி சித்தர்கள் – பாபாக்கள் சூட்சும ரூபத்துல இருக்காய்ங்க.

   நாம காமா சோமான்னு எதையாச்சும் செய்ய ஆரம்பிச்சுட்டா கருணை உந்த அவிகளே வந்து “பார்த்துபோட்டுக்கறாய்ங்க” இது நம்ம அனுபவம்.

  viji said:
  July 4, 2011 at 3:13 pm

  itharkku guru thayvai illai.”health in your hands” yanra book pothum. yoga saium pothu yangavathu vallikkalam athai neekka guru thayvai. guruvin thoduthal illamal thiyanam saithaal palan kidaikka neenda naal agum. kasu kaykaatha guru yanga boss irukkaan.vaythathiri magarishi avarathan pala vishaynkala kandu pidichaar.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s