கலைஞரை வீழ்த்தினா 'ஜெ'வும் ஆத்தாதான்.

Posted on

அண்ணே வணக்கம்ணே,

ஆத்தா எனக்குள்ள ஜனிச்சா, சித்தாடை கட்டி சலங்கை ஒலிக்க நடை போட்டா , ஜெட் கேட்டகிரி ரேஞ்சுல என்னை தொடர்ந்தாள்னு சொல்லியிருந்தேன். நம்பறவா நம்பட்டும். நம்பாதவாளை பத்தி நமக்கு அக்கறையில்லே.

நாம தங்க குச்சி கொண்டான்னுட்டு நாக்குல பீஜத்தை கீறி, காதுல உபதேசிச்சுட்டு குச்சியை எடுத்து பீரோவுல வச்சிக்கப்போறதில்லை. நம்ம கான்செப்ட் “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” தட்ஸால்.

ஆத்தா கூட ஆரம்பத்துல இந்த சீக்ரெட்டையெல்லாம் வெளிய சொல்லாம இருக்கும்படி நம்மை நிறையவே ரெஸ்ட்ரிக்ட் பண்ண பார்த்ததுண்டு. அப்பாறம் இந்த அராத்து மாறவே மாட்டான்னுட்டு ரூட்டை மாத்தி சனத்தை அண்டவிடாம பண்ண ஆரம்பிச்சா.

சமீபகாலமா பாவம் கலி முத்திப்போயி பக்தாள் நெம்பரு ஏகத்துக்கும் குறைஞ்சு போச்சா ஆத்தாளுக்கும் எலக்சன்ல நிக்க ஆசை வந்துருச்சா என்னனு தெரியலை.. கொஞ்சம் போல சனத்தை நெருங்க விட்டு என் பேச்சை கேட்க வைக்கிறா. அதுல ஒரு சின்ன பார்ட்டுதேன் இந்த சைட்டும் -அவன் அவள் அது தொடரும்.

நான் பேசிக்கலா கவிஞன். எனக்கு என் மக்கள் தான் முக்கியம். ஆத்தான்னா கருவறையில இருக்கிற சிலைமட்டும் ஆத்தா இல்லே. ஒவ்வொரு பெண்ணும் ஆத்தாதான். பாரதமாதாவும் ஆத்தாதான். தமிழன்னை, தெலுங்குத்தாயும் ஆத்தாதான். ஏன் இந்த பூமித்தாயும் ஆத்தாதான்.

அந்தா ராம மயம்ங்கறாப்ல “அந்தா சக்தி மயம்”.

கருணா நிதியை வீழ்த்தினா ஜெயலலிதாவும் ஆத்தாதான். அம்மாவுக்கு துணையா இருக்கிறதால சசிகலாவும் ஆத்தாதான். நாளைக்கு ஜெயா ஆட்சியிலயும் இலங்கை ராணுவத்தால மீனவர்கள் சுடப்பட்டு இறந்தா ஜெ அண்ட் கோ அடக்கி வாசிக்க கனி மொழி தர்ணாவுல இறங்கி அரெஸ்ட் ஆனா கனிமொழியும் ஆத்தாதான்.

சின்ன புள்ளைத்தனத்துக்கும், குழந்தைத்தனத்துக்கும், குழந்தையா மாறுவதற்கும் நிறைய வித்யாசம் இருக்கு. ஞானம்னா மறுபடி குழந்தையா மாறுவதுதான்னு ஓஷோ சொல்றாரு. நீங்க ஒரு குழந்தையா மாறினா அவள் தாயா மாறி மடியில ஏந்திக்குவா. மார்போட அணைச்சு ஞானப்பாலும் தருவா. உங்க பல்லு பட்டாலும் செல்லமா தலையில ஒரு தட்டு தட்டுவாளே தவிர தூக்கி எறிஞ்சுரமாட்டா. உடுங்க ஜூட்.

நமக்கு ஜஸ்ட் ஒரு பீஜம் இந்தளவுக்கு ஒர்க் அவுட் ஆக காரணம் அந்த காலகட்டத்துல நாம இருந்த நிலை .

ராம நாம ஜபம் அது செய்த அற்புதங்கள் ,தந்தை நம்பிக்கைகள் எல்லாம் காலப்போக்குல பழகிப்போச்சு. பழகப்பழக பாலும் புளிக்குமாம் அது மாதிரி ஒரு நிலை.

யத்பாவம் தத்பவதிங்கற மாதிரி நானே ஒரு ராமனா மாறிப்போயிருந்தேன். நம்ம லட்சியம் ராம ராஜ்ய ஸ்தாபனம். அதுக்குதேன் ஆப்பரேஷன் இந்தியா2000. வசதியில்லாத காரணத்தால கலைஞர் மாதிரி கடிதம் எழுதிக்கிட்டிருந்தோம்.

ஆனால் சாதிக்கனுங்கற வெறி – சாதிக்க தேவையான சக்தி இருந்தாலும் (அப்படி ஒரு நினைப்பு அப்போ இருந்தது பாஸ்) ஜஸ்ட் பணம் இல்லாத காரணத்தால ஒரு ல………..ம் சாதிக்கமுடியலியேங்கற கடுப்பு.
பணத்தை வச்சு முயற்சி பண்ணா என்னங்கற ஆங்காரம்.

எல்லாம் சேர்ந்து மனம்,புத்தி,ஆத்மா எல்லாமே ஒரு புள்ளியில கான்சன்ட்ரேட் ஆச்சு. ( இன்னைக்கு அந்த சீன் எல்லாம் அசம்பவம்- ஏதோ ஃபிக்சர் டிப்பாசிட் மேல வர்ர வட்டிய திங்கற மாதிரி தான் காலம் ஓடுது. )

சீனத்துல உளவாளிகளை வாய் திறக்க வைக்க ஒரு ட்ரீட்மெண்ட் உண்டு. ஒரு பானைக்குள்ள ஒரு எலியை விட்டு எலியோட உளவாளி வவுத்துல கவுத்து வச்சிர வேண்டியது . பானைய லேசா சூடுபடுத்தவேண்டியது.

எலி மொதல்ல பானைய கடிச்சு வெளியேறி தப்பிக்க பார்க்கும், அப்பாறம் வவுத்தை துளைச்சிக்கிட்டு உள்ளாற போகுமாம்.

அப்படியாக என் சிந்தனை வெளியுலகை நோக்கி சிதறாம வறுமைங்கற பானை என் மேல கவிழ்க்கப்பட்டிருந்தது.

சமூகத்தின் ஏளன்ம், நக்கல்,நையாண்டி எல்லாம் பானையை சூடுபடுத்த உள்ளாற மாட்டின எலி மாதிரி என் சுயம் ( செல்ஃப்)

அதுவும் என்ன பண்ணும் வறுமைங்கற பானையை அதனால ஒன்னும் செய்யமுடியலை . அதனால வழி தேடி என்னையே குதற ஆரம்பிச்சது.

எதையெல்லாம் நானுன்னு நினைச்சு ஏமாந்திருந்தேனோ அதெல்லாம் விலகிப்போயிரவே பஜ்னு இருந்த புரிதல் பளிச்சுனு ஆயிருச்சு.

சாரிங்கண்ணா மேட்டருக்கு வரவொட்டாம ஆத்தா ரெஸ்ட் ரிக்ட் பண்றாப்ல இருக்கு. இன்னைக்கு பேசிட்டு நாளைக்கு வரேன்.

எச்சரிக்கை:

செப் 27 க்குள்ள இந்திய நகரங்கள் இருட்டில் மூழ்கும்செப்ட் 27க்குள் ஒரு திகீர் சம்பவம் – இன்று முதல்கவுண்ட் டவுன்
அது இதுன்னுட்டு இஷ்டாத்துக்கு திகிலை கிளப்பியிருந்தேன்.

நேத்து மாலைமலர்ல ஒரு செய்தி வெளியாகியிருக்கு. தலைப்பு மும்பை கடலோரம் ஆயுதங்கள் நிறைந்த மர்மக்கப்பல் – நல்ல காலம் போலீஸ் பிடிச்சு விசாரிச்சிட்டிருக்காய்ங்க.

இன்னம் என்னெல்லாம் நடக்கப்போவுதோ? இப்பவே கண்ணை கட்டுது..

Advertisements

5 thoughts on “கலைஞரை வீழ்த்தினா 'ஜெ'வும் ஆத்தாதான்.

  தனி காட்டு ராஜா said:
  April 20, 2011 at 5:17 am

  //ஒவ்வொரு பெண்ணும் ஆத்தாதான். பாரதமாதாவும் ஆத்தாதான். தமிழன்னை, தெலுங்குத்தாயும் ஆத்தாதான். ஏன் இந்த பூமித்தாயும் ஆத்தாதான்.//

  அப்ப நமிதா செல்லமும் ஆத்தாவா தல …ஹி…ஹி 🙂
  நமிதா, ஹனசிகா,அனுஷ்கா இவுங்க எல்லாம் சக்தினா….நாம சிவா….நீ பாதி …நான் பாதி ….அட நாம எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு …ஹி …ஹி 🙂

   S Murugesan said:
   April 20, 2011 at 6:13 pm

   ராசா,
   நமீதா மட்டுமா ஆத்தா நம்ம பாடியில லெஃப்ட்லயும் கீறாப்பா ஆத்தா ( இதை வச்சுத்தேன் ஆத்தாளை சந்திரமண்டல வாசினிங்கறாய்ங்க)

  ராஜா said:
  April 20, 2011 at 5:34 am

  போற போக்குல கடைசியா ஒரு குண்ட வீசிடிங்களே, நீங்க ஒரு கவிஞன், ஒரு அண்ணன் மாதிரி அப்டின்றதால நாம எழுதுன ஒரு படைப்ப (கவிதைன்னு சொல்ல முடியல, அதான்) உங்களாண்ட ஷேர் பண்றேன், நாம எழுத்த பப்ளிசிட்டி பண்றதில்ல, தெரிஞ்சவுங்ககிட்ட மட்டும் காமிக்ரதோட சரி தலைவா..

  கடவுள்

  இருளென்று கண்டேன்,
  இருள் சூழ்ந்தது

  பகலென்று கண்டேன்,
  ஒளி பிறந்தது

  முடியாது என்றிருந்தேன்,
  முடியாமல் போனது

  முடியும் என நினைத்தேன்,
  எல்லாம் முடிந்தது

  நினைத்தது எல்லாம் நடக்கிறதே,
  “கடவுள் செயல்” என்றிருந்தேன்

  ஒரு குரல் கேட்டது..

  “முட்டாளே,
  உனக்குள் நானிருக்கிறேன்

  உன்னை உணர்,
  என்னை உணர்வாய்

  நீஎங்கிலும் நானாகி இருக்கிறேன்,
  அதை உணர்ந்தால்
  நீ நீயாவாய்”

  படிச்சுட்டு, பாத்து திட்டுங்க

   S Murugesan said:
   April 20, 2011 at 6:11 pm

   ராசா,
   நீ எங்கயோ போயிட்டே.. மேகங்கள் உன் தலை முடியை கோதிவிடற ரேஞ்சுக்கு போயிட்டே.. இந்த உணர்வு அல்லாத்துக்கும் வந்துட்டா அப்பாறம் சிக்கலே இல்லே நைனா ( மலச்சிக்கல் முதல் மனச்சிக்கல்வரை)

  தனி காட்டு ராஜா said:
  April 20, 2011 at 6:17 am

  //நீஎங்கிலும் நானாகி இருக்கிறேன்,
  அதை உணர்ந்தால்
  நீ நீயாவாய்”//

  இது கவிதை மட்டுமா…
  இல்லை உணர்ந்த உணர்வா 🙂
  நானும் கவிஞன் தான்…..ஹி…ஹி 🙂

  http://thanikaatturaja.blogspot.com/2010/10/blog-post.html

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s