சலங்கை ஒலி

Posted on

வெறுமனே ஒருபீஜத்தை ஜெபிச்சதுக்கே இத்தீனி அற்புதம் நடந்ததானு சில ஆன்மீகர்களும் பல விஞ்ஞானிகள் கேட்கலாம். என் பதில் : பெரிய எழுத்துல ஆமாம்.

ஹ்ரீம் ஆச்சும் பீஜம். ராமாங்கற ரெண்டெழுத்து என்னெல்லாம் அற்புதம் செய்ததுன்னு ஆரம்பிச்சு எல்லாத்தயும் சொல்லப்போறதில்லை. ஒன்னே ஒன்னு சொல்றேன்.

நம்முது லவ் மேரேஜுனு ஏற்கெனவே சொல்ட்டேன்னு நினைக்கிறேன். அப்பா பாவம் சின்னவயசுலருந்து நாம பண்ண அழும்பையெல்லாம் சகிச்சுக்கிட்டு எப்டியெல்லாமோ அண்ணன் தம்பியை கன்வின்ஸ் பண்ணிக்கினு தான் வந்தாரு. 1989ல ஒரு காதல்கல்யாணம். அதையும் ஊர் கூடி கும்மியச்சுட்டாய்ங்க. அதையும் மண்ணடிச்சு அப்பா அஜீஸ் பண்டாரு.

19991லரெண்டாவது தாட்டியும் அதே “தப்பை”பண்ண பிறவு ரெண்டு கையையும் தூக்கிட்டாரு. அதுக்கப்பாறம் தான் நாம தனிக்கட்சி ஆரம்பிச்சு உருப்பட ஆரம்பிச்சோம்ங்கறது வேற கதை. நவம்பர் டு மார்ச் 3 மாசம் சுத்தமா கழட்டிவிட்டுட்டாரு. அப்பாறம் வாக்காளருக்கு பணம் கொடுத்த கதையா ரூம் போட்டு யோசிச்சு உதவி பண்ண ஆரம்பிச்சுட்டாரு. 1994 செத்துப்போயிட்டாரு.

நம்ம அண்ணன் தம்பிங்கல்லாம் ரத்ததுல இருந்த டீன் ஏஜ் சூடெல்லாம் ஆறி அவலா போயி பாவம் உருப்படற ரூட்ல இருந்தாய்ங்களா நாம தேன் எங்கம்மா நாலு பெத்தா 3 குடும்பத்துக்கு நாம நாட்டுக்குனு பஞ்ச் டயலாக் அடிச்சிக்கிட்டு இருந்தோம்.

19X64ல ஒரு வீடு டபுள் ஸ்டேர். அப்பாவோட மரணத்துக்கப்பாறம் அந்த வீடு மேட்டரை “உட்கார்ந்து’பேச ஆரம்பிச்சாய்ங்க. நாம பஞ்சாயத்து ஸ்பெஷலிஸ்டாச்சே. ரிலையபிளா நாலஞ்சு பிரப்போசல்ஸ் .கொடுத்தேன்.

1.ஒரு போர்ஷ்ன்ல நானும் குடும்பமும் குடியிருக்கிறது
2.நான் வெளிய வாடகை வீட்ல இருக்க இவிக வாடகை செட்டில் பண்றது
3.மொத்த வீட்டையும் வாடகைக்கு விட்டா என்ன வருமோ அதுல நால்ல ஒரு பங்கை நமக்கு செட்டில் பண்றது

வீட்லயே நாமதேன் ஒரு குறிப்பிடத்தக்க பர்சனாலிட்டி ( மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்ஸ்) அம்மா,அப்பா ரெண்டு பேத்துக்கும் நம்ம மேல ஒரு தனி இது. அம்மான்னா அதிர்ஷ்ட சாலி . 1984லயே நம்ம வளர்பிறை காலத்துலயே போய் சேர்ந்துட்டாய்ங்க. அப்பா தேய்பிறை காலத்துல கூட “அல்லாத்தையும்” சகிச்சுக்கிட்டு
உடன் பிறப்புகளோட ” அப்ஜெக்ஷன்ஸை” மீறி நம்மை தாங்கு தாங்குனு தாங்கிக்கிட்டிருந்தாரு.

அடுத்தவுகளை விட நாம தாழ்ந்துட்டா பிரச்சினை இல்லை.போனசா ஆறுதல் கூட கிடைக்கும்.உசந்துட்டா? அவிகளோட ஹிட் லிஸ்ட்ல நம்ம பேர் ஏறிரும். ஏதோ அப்பன் இருந்தவரை காலம் ஓடிப்போச்சு. காபந்தா இருந்த அப்பன் போனதும் , நம்மை கால்பந்தா அடிச்சு விளையாட சனம் முடிவு பண்ணிட்டாப்ல இருக்கு.

படக்குனு என் தம்பிக்காரன் தன் தொடைய தட்டி “வீட்டை விக்கிறப்பத்தேன் விக்க முடியும்.. வித்தபிறவுதான் எது ஒன்னும். அதுவரைக்கும் நீ என்னவேணா பண்ணிக்க .. பேச்சு வார்த்தைல்லாம் இன்னைக்கு தான் கடைசி ஓடிப்போயிரு”ன்னான்.

உலகவங்கி உதவிலயே காலம் கழிச்ச வளரும் நாடு மாதிரி அப்பன் மாச மாசம் தர்ர சப்சிடிலயே சேஃபா வாழ்ந்துட்டு இருந்த நமக்கு இது எப்படியா கொத்த க்ரைசிஸ்.

எப்படி பார்த்தாலும அவிக ஸ்ட்ராங்கு நாம வீக்கு. நமக்கு துணை தெய்வந்தேன்.தெய்வத்தை நம்பித்தேன் பேச்சு வார்த்தைக்கு வந்தோம். ( 1991 டு 1994 நாம அவுட் ஆஃப் ஸ்டேஷன் -சொசைட்டியோட என்னத்தை கம்யூனிகேஷன் இருக்கும் ) ஒன்னுமே புரியலை.

தம்பியோட தொடையையே ஒரு செகண்டு பார்த்தேன் மூலாதார சக்கரத்துலருந்து கிளம்பின ஹூங்காரம் அதை தொடர்ந்து ” ரா…மா” அவ்ளதேன் ஷாட் கட்டு.

அடுத்த சிட்டிங்குல இன்னா சீனுங்கறிங்க? சாயம் போன லுங்கியும், முறிஞ்ச தொடை எலும்பும் – அதுக்கு நிறைவா ஒரு பேண்டேஜுமா காலை டீப்பாய் மேல வச்சிக்கிட்டு தம்பிக்காரரு.

அன்னைக்குத்தேன் ராமாங்கற நாமத்துல படுபயங்கர அழிவு சக்தியும் இருக்கிறதை உணர்ந்துக்கிட்டேன். பயங்கர டர்ராகிட்டேன்.

சரிங்கண்ணா உபகதை போதும். மெயின் லைனுக்கு வந்துருவம். சங்கல்பத்துல இருந்த சின்ன மிஸ்டேக்கால பிச்சையாவே கிடைச்சதையும் பிட்சாந்தேஹிங்கற வார்த்தையை தூக்கிட்டு வரப்ரசாதம் தேஹினு மாத்தின பிறவு நிலைமை மாறினதையும் சொல்லி நிறுத்தினேன்.

சங்கல்பத்தை சொல்லவேண்டியது – அப்பாறம் பீஜத்தை ஜெபிக்க வேண்டியது. இதுதான் அசலான வேலை. சித்தம் போக்கு சிவன் போக்குங்கற மாதிரி போஸ்சரை மாத்திக்கிறது. பத்மாசனம் – கால் வலிச்சா அர்த்த பத்மாசனம் – அப்பாறம் சுகாசனம் – இடுப்பு வலிச்சா சவாசனம்.

பழைய புராண் சினிமா பிரபாவத்தால கை கட்டைவிரல்களோட நுனி -ஆட்காட்டி விரல் நுனிகளை தொட்டுக்கிட்டு இருக்கிறாப்ல வச்சிருக்கிறதுதான் நம்ம ஸ்டைல்.

இந்த மேட்டர்ல ஏதோ சூட்சுமம் இருக்கிறதா ஒரு பார்ட்டி சொல்லிச்சு.

கை கட்டை விரல் இருக்கில்லை. அதுவும் கையும் இணையற ரேகை இருக்குல்ல .ஆட்காட்டி விரலை அங்கன வச்சுக்கிட்டா ஒரு எஃபெக்ட் முதல் அங்குலஸ்தாயில வச்சிக்கிட்டா ஒரு எஃபெக்ட் கிடைக்கும். அதுக்கப்பாறம் தேன் மேற்சொன்ன போஸ்ச்சர்னு சொல்லவே அதையும் ஃபாலோ பண்ணிக்கிட்டிருந்தேன்.

ஒரு நா ஏதோ ஸ்பார்க் ஆச்சு. ஹ்ரீம்ங்கறது சக்தியோட அம்சம். சக்தி மூலாதாரத்துல இருக்குங்கறாய்ங்க. ஓம்ங்கறது சதாசிவனோட அம்சம். (குண்டலி சக்கரங்களை காட்டற படத்துல பார்த்தா உச்சந்தலையில ஓம் பிரகாசிக்கும்) சக்தி சிவனோட சேர்ந்தாதானே முக்திங்கறாப்ல ஒரு ஹஞ்ச் கிடைச்சது.

ஒடனே ஓம் ஹ்ரீம் ரெண்டையும் சேர்த்து ஜெபிக்க ஆரம்பிச்சேன். ஓம் ஜெபிக்கிற போது சஹஸ்ராரத்துல உள்ள சதாசிவர் சக்திக்காக காத்திருக்கிறாபல கற்பனை பண்றது. ஹ்ரீம் ஜெபிக்கிறப்ப மூலாதாரத்துல உள்ள சக்தி சலனம் பெற்று சதாசிவனை நோக்கி பயணிக்கிற மாதிரி கற்பனை பண்றதுமா இருந்தேன்.

இடையிடையில என்னென்னமோ க்ளூ, ஹன்ச், குன்ஸ் . அதையெல்லாம் வச்சு சாதனையில சின்ன சின்ன மாற்றங்கள் செஞ்சுக்கிட்டே இருந்தேன். அவுட்லைன் என்னமோ சங்கல்ப்பம் – பீஜ ஜெபம் தட்ஸால்.

ஜெபம் -அஜபம் – தியானம்னு 1 , 2, 3னு மாறும் கொஞ்ச நாழிக்கு பிறகு 3, 2, 1 ன்னு மாறும். பாடியோட ரெஸ்பான்ஸ் வித விதமா இருக்கும். அங்கங்கள் துடிக்கிறது – முதுகெலும்பு ரிஜிட் ஆயிட்டாப்ல ஃபீலிங், புது புது வாசனைகள் , திடீர்னு கோவில் மணி சத்தம் கேட்கிறது. முதுகெலும்பை ஒரு நீளமான டெஸ்ட் ட்யூபா கற்பனை பண்ணிக்கிட்டா அதுல உள்ள திரவத்துல ஒரு குமிழி மேல் நோக்கி ஊர்ந்து போறாப்ல ஒரு ஃபீலிங். திடீர்னு உடம்பெல்லாம் சொல்ல முடியாத அளவு வெப்பம். ஒவ்வொரு நாளும் இன்னைக்கு ஒன்னில்லை ஒன்னு தீர்த்துரனும்னு இறங்குவேன். ஆனால் ஏமாத்தத்துல முடிஞ்சதா நினைச்சுக்கிட்டு பால்காரன் வர்ர சமயம் தூங்கிப்போயிருவன்.

என் சாதனை ஏமாற்றத்துல முடியலை – சின்ன சின்ன மாற்றங்களோட ஒரு மிஸ்டிக் பாத்ல தொடர்ந்துக்கிட்டே தான் இருந்ததுன்னு அப்பால தேன் உறைச்சது.

சில மாதங்களுக்கு பிற்பாடு ட்ரான்ஸ்ல இருக்கிறச்ச பிறந்த குழந்தையோட குவா குவா சத்தம் கேட்கும்.
ஆரம்பத்துல அடடா மறுபடி பிறக்கறதுன்னா இதாம்போலனு நினைச்சேன். அப்பாறம் ஒரு நா இதுக்கான விடை கிடைச்சது.ஆத்தா இந்த அராத்துக்குள்ள ஜனனமாயிட்டா. இன்னம் ஒன்னு ரெண்டு மாசம் கழிச்சு சலங்கை சத்தம் கேட்க ஆரம்பிச்சது.

அது முதல் நாம சிட்டிங் போட்ட அஞ்சு பத்து நிமிசத்துக்கு ( அப்பத்துக்கே நேரம் ராத்திரி 12 ஐ நெருங்கியிருக்கும் -சனம் ஆழ்ந்த உறக்கத்துல இருப்பாய்ங்க) அக்கம்பக்கத்துல எதுன பெரிய ஜாமான் செட்டு எதுனா கீழெ விழுந்து உருளும்.

எனக்குள்ள ஜனிச்ச ஆத்தா தன் சின்னப்பாதங்கள் நோக நோக என்னையே ஃபாலோ பண்ணிக்கிட்டிருந்ததையும் கருப்பு பூனை படைகணக்கா காப்பாத்த நானிருக்கேண்டானு உணர வச்ச சம்பவங்களையும் அடுத்தடுத்த பதிவுகள்ள பகிர்ந்துக்கறேன்.

Advertisements

18 thoughts on “சலங்கை ஒலி

  வணக்கம் சார் … உங்க பர்சனல் அனுபவங்களை நல்லா சொல்லியிருக்கீக ..
  காசு பணத்துக்கு முன்னாடி – அண்ணன் என்ன ? தம்பி என்ன ? என்ற உண்மையை நீங்களும் அனுபவிச்சிருக்கீக போல..

  சரி அது போகட்டும் …

  ஒடனே ஓம் ஹ்ரீம் ரெண்டையும் சேர்த்து ஜெபிக்க ஆரம்பிச்சேன் – னு சொல்லியிருக்கீகளே எந்த மந்திரத்தோட இந்த இரண்டையும் இணைச்சு ஜெபிக்க ஆரம்பிச்சீக ?

  கொஞ்சம் சரியா புரியலே .. உங்க பர்சனல் லைப் பேசுன ஏரியா புரிஞ்ச அளவு சலங்கை ஒலிக்கான ஏரியா புரியலே .. கிட்டத்தட்ட அவன் அவள் அது உட்பட
  ( நம்பளதுலே கொஞ்சம் மண் ஜாஸ்திப்பா ) இன்னும் கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுனும் னு நினைக்கிறேன்

  ( இல்லே நான் சரியாக உள்வாங்கவில்லையோ என்னமோ ? )

  இதுபோன்ற விசயங்களை ஒருமுறை படிச்சா பத்தாது .. பலமுறை படிக்கவேண்டும் என்பதும் எனது கருத்து .. ஆனாலும் பலமுறை படிக்கத் தக்க வகையிலே ( பலமுறை சொல்லியாச்சு மன்னிச்சுக்குங்க ) இன்னும் தமிழ்லே மாற்றம் வரனும்…

  ( மாறிக்கிட்டு இருக்கீக .. ஆனா இந்த வேகம் பத்தலே )

  ஏதாச்சும் தப்பா சொல்லியிருந்தா .. சொல்லியதை சொல்லிக்கிட்டிருந்தா
  பொறுத்துக்குங்க …

  அப்புறம் இன்னைக்கு உஜிலாதேவி படிச்சு பாருங்க .. குருஜி நல்லா எழுதியிருக்கார்.

  நன்றி…

   S Murugesan said:
   April 19, 2011 at 4:50 am

   ஜானகிராமன்!
   நமக்கு உபதேசம் கொடுத்த பார்ட்டிதும் குருவில்லாத வித்தை – நம்முதும் அந்த அழகுல தானே கிடக்கும். அவர் உபதேசிச்சது பீஜ்ங்களோட ஊர்வலம் அதைத்தேன் நானும் மந்திரம்னு நினைச்சு சான்ட் பண்ணிக்கிட்டிருந்தேன்

   ரீடர்ஸுக்கு புரியணுங்கறதுக்காக மந்திரம்/பீஜம் வார்த்தைகள் ஒன்னுக்கொன்னு ஆல்ட்டர்னேட்டிவ் மாதிரி உபயோகிச்சுக்கிட்டிருக்கேன்.

   நான் ஜெபிச்ச பீஜ்ங்களோட ஊர்வலம்:
   ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் வவ்ஷட் வவ்ஷட் வவ்ஷட்
   ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் வஷக் வஷக் வஷக்
   ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் குரு குரு ஃபட் ஸ்வாஹா

    kandhan said:
    April 19, 2011 at 6:18 am

    “அப்புறம் இன்னைக்கு உஜிலாதேவி படிச்சு பாருங்க .. குருஜி நல்லா எழுதியிருக்கார்.” -ஜ‌.ராமன்–‍ லிங்கு குடுங்களேன்

    PERUMALSHIVAN.S said:
    April 19, 2011 at 7:01 am

    goole -le ujiladevi -nu adinga baasu avaru nallaathan ezhuthuvaaru .

    kandhan said:
    April 19, 2011 at 7:07 am

    நன்றிங்க.

    S Murugesan said:
    April 19, 2011 at 7:16 am

    ஹும் நம்ம மூக்குல ஏதோ பிரச்சினை போல . பா.ஜ.க வாசம்லாம் வந்துருது -உஜிலா தேவிய சொன்னேன்

  kandhan said:
  April 19, 2011 at 6:17 am

  “தம்பியோட தொடையையே ஒரு செகண்டு பார்த்தேன் மூலாதார சக்கரத்துலருந்து கிளம்பின ஹூங்காரம் அதை தொடர்ந்து ” ரா…மா” அவ்ளதேன் ஷாட் கட்டு. ……………….அன்னைக்குத்தேன் ராமாங்கற நாமத்துல படுபயங்கர அழிவு சக்தியும் இருக்கிறதை உணர்ந்துக்கிட்டேன். பயங்கர டர்ராகிட்டேன்.” –

  தல, நம்மளுக்கும் ஜா.ராமனுக்கு இருக்ர பிரச்சனை தான். தயவு செஞ்ஜி கொஞ்ஜம் விளக்குங்க.

   S Murugesan said:
   April 19, 2011 at 7:18 am

   கந்தன்!
   சொல்,பொருள்,விளக்கம்லாம் ஒன்னுதேன் ரா………………மா…………….ங்கற ரெண்டு எழுத்து

  PERUMALSHIVAN.S said:
  April 19, 2011 at 7:04 am

  murugesanne !

  eppa nallaathaane erukkinga ?( porulaatharathil khetkkiren)

   S Murugesan said:
   April 19, 2011 at 7:14 am

   பெருமாள் சிவன்!
   எப்பவுமே நான் பணக்காரன் தேன். ( லட்சியம் -கொள்கைய பொருத்தவரை) ஆனால் சனம் அப்போ ஒத்துக்கிடலை. (அவிக நினைக்கிற அளவுக்கு எனக்கு காசு வந்து போறதில்லைனு)

   இப்போ ஒத்துக்கிடறாய்ங்க ( காசு தாராளமா வந்து போறதால)

    kandhan said:
    April 19, 2011 at 11:53 am

    அப்ப என்ன, பாரதியார், காந்தி இவங்க எல்லாம் ஸ்விஸ் பாங்கல அகவுன்ட் வச்சிருந்தனால தான் நாங்க அவர் கொள்கைகள ஏத்துகிட்டோமா? அதுஅதுக்கு ஒரு நேரம் வர்னுமில்ல. கோள் செய்யாதத வேற ஏதொ செய்யும்பாங்களெ

    S Murugesan said:
    April 19, 2011 at 1:17 pm

    கந்தன்!
    ஒரு மன்சன் உண்மையிலயே சமுதாயத்துக்கு பயன்படனும்னா அவன் ஜாதகத்துல 6,8,12 அதிபதிகளுக்கிடையில தொடர்பு இருக்கனும் போல- அவனுக்கு சாகிற நேரம் வந்துரனும் போல. அப்பத்தேன்
    கொள்கை லட்சியம்னு மனசு அரேபியன் ஹார்ஸ் மாதிரி பாயுமோனு ஒரு சந்தேகம்.

    அவனுக்கு நல்ல நேரம் வ்ந்த பிறவு மேற்படி கொள்கை லட்சியம்லாம் ஜகா வாங்கிக்கும் போல . நம்முது ஏதோ கடகலக்னம் – குரு உச்சம்ங்கறதால மேற்படி ரெண்டு ஐட்டத்தை விடாம பினாத்திக்கிட்டிருக்கம்.

    கொள்கை – லட்சியம் ரெண்டுலயும் மொத எழுத்தை எடுத்து ஒட்டினா கொ -ல /

  Thirumalaisamy said:
  April 19, 2011 at 11:28 am

  அண்ணே இந்த பதிவு என்ன என்னமோ பண்ணுது ..ஆனா என்னனு தாளி ஒன்னும் விளங்கல ….பரவா இல்ல விடுங்க .
  யோகா , காயகல்பம் , தியானம் அப்படின்னு என்னமோ பண்றேன் … சின்ன சின்ன எபக்ட் தெரியுது …
  அண்ணன் கிட்ட இந்த ஆத்மாவோட வேண்டுகோள் — சிம்ப்ளா எல்லார்க்கும் புரியற மாதிரி தியானம் பண்ற வழி முறை சொல்லணும் …அதுக்கு முன்னாடி என்னென்ன பாலோ பண்ணனும் நு சொல்லுங்க …

   S Murugesan said:
   April 19, 2011 at 1:12 pm

   திருமலை சாமி,
   புரியுது. நீ கெட்டதில்லாம அல்லாரையும் கெடுத்துருங்கறிங்க.. அதான் நமக்கு கை வந்த கலையாச்சே. உடுங்க ஜூட்

  Thirumalaisamy said:
  April 19, 2011 at 11:35 am

  நாடக மேடை …ரைட் .
  விக்ரம் மாதிரி போஸ் (கெட்டப்பு) ? ? ? ஒ ஆக்டர்ஸ் …ஓகே ஓகே ….

  சும்மா தமாசு நே …சிலைடு ஷோ பார்த்தனா அதான் ….

  ராஜா said:
  April 20, 2011 at 5:01 am

  பட்டய கேளப்புரிங்க பதிவுக்கு பதிவு, கொஞ்சூண்டு பயத்தயும்தான். போட்டோஸ் பாத்தேன், கொஞ்சம் வித்யாசமா சிலதுல போஸ் கொடுத்துரிகிங்களே, சரிங்க குன்ஸ் அப்டின்ன என்ன?

   S Murugesan said:
   April 20, 2011 at 5:24 am

   ராஜா!
   குன்ஸ் = குத்து மதிப்பா ,உள்ளுணர்வு படி

   S Murugesan said:
   April 20, 2011 at 6:20 pm

   ராசா,
   எந்த உணர்வானாலும் அதன் உச்சத்துக்கு போகும்போது மரணத்தை ஞா படுத்திருமாம்.

   “அய்யோ சிரிச்சு சிரிச்சு உசுரே போயிருச்சுப்பா”
   “என்னங்க .. இப்படியே இந்த நிமிஷமே செத்துப்பொயிரனும்போல தோணுதுங்க”
   “யப்பா என்னா மாதிரி பதிவுங்கறே ..கொன்னுட்டான் போயேன்”

   ஒரு தாட்டி காளி என்ன காளி நாமதான் தில்லு துரையாச்சேன்னு மெடிட்டேட் பண்ணிக்கிட்டிருந்தேன் மனத்திரையில காளி உருவம்.

   கழுத்துல கபால மாலை. ரத்தம் சொட்டற நாக்கு . என்னதான் உள்ளுக்குள்ள பீதிய கிளப்பினாலும் சமாளிச்சுக்கிட்டு தரிசனத்தை தொடர்ந்தேன்.

   நம்ம கற்பனை தான்னாலும் திடீர்னு அது சுதந்திரம் பெற்று படக்குனு ஆத்தாளோட ரத்தம் வழியற அந்த நாக்கு வந்து என் ஆக்னாவை தீண்டிச்சு பாரு நைனா..

   முனி அடிக்கிறது – மோகினி மிதிக்கிறதுன்னெல்லாம் கேள்விப்பட்டிருப்பிக . ஆனால் அதெல்லாம் ஜுஜுபி பாஸு.

   நாடி நரம்பெல்லாம் திகில் திகிலை தவிர வேறில்லை. மொகத்துல பழைய தேஜஸ் ரிட்டர்ன் ஆக மாசக்கணக்குல ஆயிருச்சு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s