பாம்பு விடறான்யா!

Posted on

தமிழ்ல PA , BA ரெண்டுத்துக்கும் ஒரே “பா” தான். தலைப்பில் உள்ள மேற்படி வார்த்தைக்கு ஒன்னு வில்லங்கமான அர்த்தம். அடுத்தது அசூயையான அர்த்தம். வில்லங்கம்னு சொன்னேனே தவிர செக்ஸுக்கும் பாம்புக்கும் நிறைய சம்பந்தமிருக்கு. கில்மா குறித்த கற்பனைகள் உள்ளவுகளுக்கு பாம்புகள் கனவுல வரும். ஜோதிடத்துல ரெண்டு பாம்பு இருக்கு. ஒன்னு கரும்பாம்பு (ராகு) அடுத்தது செம்பாம்பு (கேது) பாம்பு கனவுல வந்தா கில்மாதான்னு அர்த்தமில்லை. தேடல் -தியானம்-யோகம்னு பித்துப்பிடிச்சு அலையறவுக கனவுல கூட பாம்புகள் வரும். (அது சேப்பா இருக்குமா ?)

அசூயையான அர்த்தம்னு சொன்னேன்.ஆனால் அந்த அசூயையான “வாயு”வெளியேறலைன்னா வவுத்த வலிக்கும்,முதுகுல வலிக்கும், நெஞ்சுல வலிக்கும் . டூ வீலர்ல ஏர் ஃபில்டர் வச்சாப்ல கடவுளும் வச்சிருந்தா பெட்டரா இருந்திருக்கும்.

வாயு உருவாக சில பல காரணங்கள் இருக்கு. உணவு சமயத்துல செரிக்காம இருந்தா / உண்ட உணவே வாயு குணம் கொண்டதா இருந்தா /ச்சொம்மா குந்தி தின்னுட்டிருந்தா/தின்னும் போது பேசிக்கிட்டே தின்னா . நான் மேற்படி தலைப்பை வச்சது பீலா விடறான்யாங்கற அர்த்தத்துலதான்.

சரண் சார் சொன்னாப்ல ஒக்காபிலரி மாறிக்கிட்டே வருது. பொய்ங்கற ஒரு வார்த்தைக்கு குண்டு,ரீலு,பிட்டு,பீலா,பாம்புன்னெல்லாம் மாறிட்டே வருது. அவன் அவள் அது தொடர்பதிவுல மாயா பீஜத்தை சான்ட் பண்ணிக்கிட்டிருந்த சமயம் பாம்பு வந்துருச்சுன்னு சொன்னேன். அதை படிச்சுட்டு மஸ்தா பேரு பாம்பு விடறான்யானு நினைச்சிருக்கலாம்.

ஒரு காலத்துல பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான் நாம. ஆனால் ஒரு கட்டத்துல “ங்கொய்யால எவனுக்கோ பயந்து நாம ஏன் இப்படி பீலா விட்டு எதை விட்டோம்னு ஞா வச்சுக்கிட்டு சாகனும். இந்த சொசைட்டியே பொய் – இந்த மனிதர்களே பொய் -இவிக நம்மை பார்த்து டர்ராகனும்னா தாளி உண்மைய சொல்றதுதான் வழிங்கற முடிவுக்கு வந்துட்டு சொல்ல ஆரம்பிச்சுட்டேன்.

அட அட அட.. சத்யமேவஜெயதேன்னு சொன்னவுக எந்த அர்த்தத்துல சொன்னாய்ங்களோ சனத்தை விரட்டறதுல மட்டும் ஜெயம் தேன். ஆரம்ப காலத்துல (1987) எப்படியும் தமிழை காப்பத்தியே தீர்ரதுங்கற சங்கல்பத்துல எழுத ஆரம்பிச்சப்ப எவனும் மாட்டமாட்டானான்னு (தனிய) காத்திருந்தது ஒரு காலம்.( நம்ம எழுத்தை அறிமுகம் செய்யவேணாவா பாஸ்) .அப்பாறம் 1989ல ஜோதிட ஆராய்ச்சிக்கு எலி,முயல் கணக்கா உபயோகிக்க பார்ட்டிய தேடி காத்திருந்தது ஒரு காலம்.

ஒரு கட்டத்துல வாழ்க்கையோட யதார்த்தம் – சமூகம் -நட்பு -உறவுகளோட நிஜ சொரூபம்லாம் தெரிஞ்ச பிறவு – அது தெரியாம அல்லாடற சனத்துக்கு சாக்ரடீஸ் கணக்கா ஞானம் புகட்ட முயன்றது ஒரு காலம்.

நல்ல வேளை வறுமை என்னை தனிமைப்படுத்தி இனிமைப்படுத்தியது. கூட்டத்துல காணாம போயிராம காப்பாத்திருச்சு. வெறும்பயலாகிராம பெரும்புயலாக்கியது என் வறுமை தான். வறுமைய போக்க துணிஞ்சது கூட நமக்காக இல்லிங்கண்ணா..சனங்க மேல கருணை காரணமாத்தான். இவிக என்னை ஏத்துக்கனும்னா நான் இவிக இவிக ரேஞ்சுக்கு என்னை ஏத்துக்கற ரேஞ்சுல இருக்கனும்.

என்னைவிட பல கோடி மடங்கு “சரக்கு” உள்ள பார்ட்டி குப்பை தொட்டி பக்கத்துல துண்டு பீடி பொறுக்கி அடிச்சிக்கிட்டுப்பான். ஆனால் சனம் அவனை சீண்டாது. சனம் நம்மை அணுகின மாத்திரத்துல நாம புலினு நினைச்சுரக்கூடாது. அவனை இவிக அணுகாத மாத்திரத்துல அவன் செத்த எலினு தூக்கிப்போட்டுர கூடாது.

மனித வாழ்க்கையில எல்லாமே ஆக்சிடென்டல் தேன். எவனுக்கும் -எவளுக்கும் – எதுக்கும் கியாரண்டி கிடையாது. மியூசிக்கல் சேர்ல சேர் கிடைச்ச மாதிரி தேன்.மியூசிக் ஸ்டார்ட் ஆனா மறுபடி ஓடனும். சேர் கிடைக்கும்ங்கற கியாரண்டி கிடையாது.

அரிது அரிது மானிடராதல் அரிதுன்னு ஒரு கிழவி பினாத்தி வச்சிருக்கு. தாளி இந்த இயற்கையிலயே இயற்கையோட தொடர்பை முற்றிலும் இழந்த அனாதைபயல் ஆருன்னா மன்சன் தேன். மன்சங்களோட டீலிங் இருக்கிற வரை மகேசனோட லேண்ட் நெம்பர் கூட கிடைக்காது.

இவிக விரட்டனும். பராசக்தியில கல்யாணி கணக்கா நாம ஓடனும். அப்பத்தேன் சத்தியம் எதுனு குன்சாவாச்சும் புரியும். சனம் என் ஏழ்மை கண்டு என்னை விரட்ட – நான் இவிக மடமை கண்டு பொய்மை கண்டு இவிகளை விரட்ட..

நம்ம வாழ்க்கைங்கற நாடக மேடையே காலியாயிருச்சு. நம்ம தனிமைக்கு ஏழ்மையே வேலியாயிருச்சு. நமக்குள்ள இருந்த உலகம் காலியாயிருச்சு. TO LET போர்டு மாட்டிக்கிட்டு தேன் பீஜத்தை ஜெபிக்க ஆரம்பிச்சோம்.

இருக்கிறது ஒரு கக்கூஸு.அதுக்குள்ள எவனோ உட்கார்ந்திருக்கான்னு வைங்க. நம்ம நிலைமை என்ன?
உள்ளாற நுழைய முடியுமா? அப்படித்தேன் தெய்வம் நமக்குள்ள இருக்கிற உலகத்தை பார்த்து தயங்கி தயங்கி அடுத்த கக்கூஸை தேடிப்போயிருது.

நாம மாயா பீஜ தியானத்துல இருந்தப்ப பாம்பு வந்தது நிஜம். சனம் அலறியடிச்சு ஓடினது நிஜம். (கோ டெனன்ட்ஸ் தேன்.) அவிக என்ன நினைச்சிருப்பாய்ங்கங்கறது நமக்கு சம்பந்தமில்லாத மேட்டர். நம்ம கான்செப்ட் என்ன ? வீரமணி பாடல்கள்ள ஒரு வரி வரும்.

“சக்தியின் வடிவம் பாம்பு
இதை . சத்தியமாய் நீ நம்பு”

இதான் நம்ம கான்செப்ட். அப்பாறம் முக்கியமான மேட்டர் சொல்ல மறந்துட்டன். மேற்படி மந்திரத்தை சொல்றதுக்கு மிந்தி சொல்லியாகனும்னு ஒரு பத்திய அந்த நண்பர் தந்திருந்தார். அதை சொல்லி முடிச்சு ஒரு அரைமணி கழிந்த பிறகுதான் பாடில ரெஸ்பான்ஸ் ஆரம்பமாகும். இது ஒரு கட்டம். அதை இங்கே தந்திருக்கேன் பாருங்க. மேட்டர் கடைசி வார்த்தையிலதான் இருக்கு.

ஹ்ரீங்கார பீஜாக்ஷரி ஹ்ரீம் மயீ தேவி அபய வரத ஹஸ்தினி பாசாங்குச தாரிணி
ஸ்ரீ சக்ரவாசினி, பால பீட அதிரோஹிணி
மாதா மாத்ருமயீ,அம்ருதமயீ, ஆனந்த மயீ அனந்த மயீ
மாதா காலகரணி தேஹீ தக்ஷணம் அஷ்ட ஐஸ்வர்யம்
மாதா தேஹீ தக்ஷணம் த்ரிகால க்னானம்
மாதா தேஹீ தக்ஷணம் யத்ன கார்ய சித்தி
மாதா தேஹீ தேஹீ வர ப்ரசாதம் தேஹி

//தேஹீ தேஹீ வர ப்ரசாதம் தேஹி// இது நாமளா பார்த்து எடிட் பண்ணிக்கிட்ட வார்த்தை. அவிக சொன்ன பத்தியில பிக்ஷாந்தேஹினு வருது. ஆத்தா இந்த ஒரு வரியை மட்டும் கேட்ச் பண்ணிக்கிட்டு பிச்சை கணக்காவே செட்டில்மென்ட் பண்ணிக்கிட்டிருந்தாளா ஒரு நா ஸ்பார்க் ஆச்சு.

தாளி..நான் பண்றது தவம். நீ தர்ரது வரம். இதுல பிச்சையென்ன பிச்சைன்னு கடுப்பாகி வார்த்தைய மாத்திட்டேன். அதுக்கப்பாறம் தேன் எல்லாமே ஒரு ரூட்டுக்கு வந்தது.

பாடி ரெஸ்பாண்ட் ஆக ஆரம்பிக்கும்னு திருப்பதியா சொல்லியிருக்கேன்.அடுத்த பதிவுல இதை விலாவாரியா பார்ப்போம்.

Advertisements

10 thoughts on “பாம்பு விடறான்யா!

  sugumarje said:
  April 18, 2011 at 8:16 am

  ஹ்ம்ம்ம்… என்னென்னெமோ சொல்லவறீங்க:)
  //இருக்கிறது ஒரு கக்கூஸு.அதுக்குள்ள எவனோ உட்கார்ந்திருக்கான்னு வைங்க. நம்ம நிலைமை என்ன?
  உள்ளாற நுழைய முடியுமா? அப்படித்தேன் தெய்வம் நமக்குள்ள இருக்கிற உலகத்தை பார்த்து தயங்கி தயங்கி அடுத்த கக்கூஸை தேடிப்போயிருது.//
  உதாரண வள்ளல்னு பட்டம் தரலாமான்னு யோசிக்கிறேன் அய்யா !
  மொத்தத்தில் தூள்…

   S Murugesan said:
   April 18, 2011 at 8:24 am

   நன்றி சுகுமார் ஜி,
   //அடுத்தடுத்த கக்கூஸை தேடிப்போயிருது//ங்கற வரில இன்னொரு அர்த்தம் கூட இருக்கு. இங்கே அல்லா மனமும் அப்படித்தேன் நாறிட்டிருக்கு.

   மேற்படி வரியை இன்னம் கொஞ்சம் ஷார்ப்பாக்கலாம்.

   அடுத்தடுத்த கக்கூஸை தேடி போயிட்டே இருக்கு..

  kandhan said:
  April 18, 2011 at 9:16 am

  “மனித வாழ்க்கையில எல்லாமே ஆக்சிடென்டல் தேன். ”

  தல “அவனின்றி அணுவும் அசையாது” ங்கராங்கலெ.

   P.A.Kumar said:
   April 18, 2011 at 1:07 pm

   ரெண்டு விஷயம். ஒண்ணு எல்லாம் தீர்மானம் ஆகிப்போச்சி, நான் இதுக்கு முன்னால எதையெல்லாம் சேர்த்து வச்சிருக்கேன்கிறத பொறுத்து. ரெண்டு இனிமேல என்னவெல்லாம் சேர்க்கப்போறேன்கிறத பொறுத்து.

   நண்பன் ஒருத்தன் சொன்னான், லைப் இஸ் permutation and combination of …..ன்னு. இந்த ……..தான் உதைக்குது.

    வினோத் said:
    April 18, 2011 at 1:15 pm

    உங்க நன்பர் குரு புதன் , சுக்ரன் சனி, இந்த மாதிரி நீளமான ஒரே மாதிரி போகும் தசையில் இருப்பர் போல , ராகும், சனி, கேது , சூரியன், சந்திரன்னு தலைக்குமேல் தூக்கி கிழபோடுர , கையில் எல்லாம் இருந்த்தும் ஒன்னும் பண்ன முடியாத தசை பார்த்து இருந்தார்னா,
    பெர்முடேசன் காம்பினேசன் இல்லை. ஆக்சிடென்ட்பார்.

    kandhan said:
    April 18, 2011 at 1:40 pm

    அப்டி பொதுவா சொல்லமுடியுங்களா வினொத். லால் பஹாதூர் சாஸ்த்ரிக்கு ராகு திசா தான் தூக்கி விட்டதுனு படிச்ச மாதிரி ஞாபகம். சூரியன், சந்திரன் லக்னாதிபதியா இருந்து நல்ல இடத்துல இருந்தா. குரு திசைல அல்லோல் கல்லோல் பட்டர எத்தனயோ பெரு இருகாங்க.

   S Murugesan said:
   April 18, 2011 at 1:38 pm

   கந்தன் !
   அவன் -அவள்-அதுனு ஏன் அந்த பார்ட்டியை இழுக்கறிங்க. மனித வாழ்வில் ஒவ்வொரு செகண்டும் ஒரு ஜங்ஷன் பாய்ண்ட். இந்த செகண்ட் என்ன பண்றோங்கற விஷயம் தான் அடுத்து வரவுள்ள நம்மை லைஃபை கமாண்ட் பண்ணுது

   அவர் ஆண்டவர் ( கடந்த காலம்) இப்ப ஆள்றது நம்ம பூர்வஜென்ம வாசம் (நாற்றம்?)

    kandhan said:
    April 18, 2011 at 1:45 pm

    தல, மூனு தடவை படிச்சதுக்கு அப்புரம் தான் உங்க வலி புருஞ்ஜுது. Classic கடக லக்னம், சிம்ம ராசி 🙂

  P.A.Kumar said:
  April 18, 2011 at 2:44 pm

  //மாதா மாத்ருமயீ,அம்ருதமயீ, ஆனந்த மயீ அனந்த மயீ//

  தாய்மை, நிரந்தரம், மகிழ்ச்சி, எல்லாம் முடிவில்லாமல்.

  Thirumalaisamy said:
  April 19, 2011 at 11:04 am

  தாளி, இந்த பயித்திய காரனுக்கு வேற வேலையே இல்லையா பா ??? எப்போ பாரு கில்மா , ராகு, கேது , மந்த்ரம் , ஜோதிடம் , கிளி , பாம்பு நு மனுசன போட்டு தாலுசுட்டே இருக்காரு ….

  உண்மைய சொன்னா கேட்கருதுக்கு நாங்க என்ன கேன பயலா ???
  ————————————————————————————————
  அண்ணே , அந்த பத்திய காபி பேஸ்ட் பண்ணி பத்திர மா வெச்சாச்சு …மறக்காம மந்திரத்த சொல்லிடுங்க …ஹி ஹி ஹி .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s