பொய் பொய் தவிர வேறில்லை

Posted on

அண்ணே வணக்கம்ணே,
ஒஷோ சொல்வாரு ( கேட்டதில்லிங்கண்ணா ..படிச்சதுதேன்). என் பேச்சை நீங்கள் கேட்பது போலவே நானும் கேட்கிறேன். இப்ப நானும் சொல்றேன் (அதாங்க எழுதறேன்) என் எழுத்தை நீங்கள் படிப்பது போலவே நானும் படிக்கிறேன். நமக்கு இந்த மேல் பூச்செல்லாம் பிடிக்காது. கொத்தா பிடிச்சு புடுங்கிரனும். (பிரச்சினையோட ஆணிவேரை சொன்னேங்கண்ணா)

இங்கே ஐ மீன் உலகத்துல எல்லாமே பொய். தாளி சாவறது ஒன்னுதேன் நிஜம். காந்தியும் செத்தாகனும்.கோட்ஸேவும் செத்தாகனும். பணக்காரனும் செத்துத்தான் ஆகனும்.ஏழையும் செத்துத்தான் ஆகனும். இடையில உள்ளதெல்லாம் பொய். அப்பன்,ஆயி,அண்ணன் ,தம்பி,கொள்கை ,லட்சியம் எல்லாமே பொய்.

மரணத்தால அழிக்கமுடியாதது நினைவுகளைத்தேன். ஹ்யுமன் பாடி ஒரு கம்ப்யூட்டர்னா நினைவுகள் (ஆத்மானு கூட வச்சிக்கங்க) ஒரு ஹார்ட் டிஸ்க் . அது எத்தீனி கம்ப்யூட்டர் மாறினாலும் அதுல இருக்கிற ஓ.எஸ் ஒன்னுதேன். என்ன ஒரு பிரச்சினைன்னா புது புது கம்ப்யூட்டர்ல போடப்படும் போது ஃபார்மெட் அடிக்கப்பட்டு தான் போடப்படுது.

ஃபார்மெட்டட் டிஸ்க்லருந்து கூட ஃபைல் ரிக்கவரி பண்ற சாஃப்ட்வேர்ஸ் இருக்கு. அப்படி ஒரு சில “நேக்” மூலமா ஓல்ட் ஃபைல்ஸை ரிக்கவரி பண்ணலாம். பாறை நிலத்துல 99 அடியில கிணறு நோண்டினது கூட தப்பா இல்லாம இருக்கலாம். தாளி மறு நாள் இன்னொரு பாய்ண்ட்ல புதுசா கிணறு வெட்ட ஆரம்பிக்கிறது கேணத்தனம் இல்லியா?

ஒவ்வொரு பிறவியிலயும் அடியை புடிடா பரதப்பட்டான்னு ஆரம்பிச்சா நண்பர் ஜானகி ராமன் கோட் பண்ண மாதிரி 84 லட்சம் பிறவிகள் எடுக்கவேண்டியதுதேன்.

ஒவ்வொரு கம்ப்யூட்டர்லயும் யு.எஸ்.பி போர்ட்டல் இருக்கு. அதுல நெட் கேபிளை செருகினா இன்டர் நெட் உலகம் கண் முன்னே விரியும். ஆனா . நாம என்ன பண்றோம் கண்ட கண்ட பென் ட்ரைவை அதுல செருகி கண்ட வைரஸையும் உள்ளாற விட்டுக்கறம்.

அதே போல நம்ம மைண்டுக்கும் இந்த விஸ்வத்துக்கும் தொடர்பை ஏற்படுத்திக்கமுடியும். ஆனால் நாம என்ன பண்றோம் ஆரோ ப்ரவுஸ் பண்ணி சேவ் பண்ணி வச்ச ஒன்னு ரெண்டு ஹெச் டி எம் எல் ஃபைல்ஸை ஸ்டோர் பண்ண பென் ட்ரைவ்களை செருகி இதாண்டா இன்டர் நெட் உலகம்னு மதி மயங்கி போயிர்ரம்.

ஹயூமன் மைண்டுங்கற கம்ப்யூட்டர்ல ஈகோங்கற வைரஸ் புகுந்துக்கிட்டு கெட்ட ஆட்டம் போடுது. இதுல பென் ட்ரைவை செருகினாலே ஐடென்டிஃபை பண்றதுக்கு மாமாங்கமாகும். இதுல நெட் கேபிளை எங்கன செருகறது?

ஹ்யூமன் பாடியொட டெம்பரேச்சர் 98.4 டிகிரிஸ் இருக்கனுங்கறாய்ங்க. ஒரு அஞ்சு டிகிரி குறைஞ்சாலோ – ஏறினாலோ போதும் எருமை மாட்டு காலடி சத்தம்லாம் கேட்க ஆரம்பிச்சுரும்.

அட நாலு தடவை வயித்துபோக்கு வந்தா – பாடில உள்ள வாட்டர் கன்டென்ட் குறைஞ்சா அஸ்திவாரமே ஆடிப்போயிருது.

இந்த மயித்துல என்னத்த ஈகோ? என்னத்துக்கு ஈகோ? ஈகோங்கறது இயற்கையிலருந்து நம்மை எலிமினேட் பண்ணிருது. இயற்கையுடனான ஒத்திசைவு டிஸ்டர்ப் ஆயிருது. அப்பால நல்லதுக்கு நடக்கறதெல்லாம் கெட்டதுக்கு போல கெட்டதுக்கு நடக்கிறதெல்லாம் நல்லதுக்கு போல தெரியுது.

லேட்டஸ்டா கலைஞர் டிவில (?) அகாலத்துல அன் எக்ஸ்பெக்டடா ஒரு இங்க்லீஷ் படத்தை அஞ்சு நிமிஷம் பார்த்தேன் ( ஹிஸ்டரி ரிக்கார்ட்) வில்லனோட உருவம் கண்ணுக்கு தெரியாது. அதனால அவன் மேல தண்ணி கொட்ட ஏற்பாடு பண்ணி மேனேஜ் பண்றாய்ங்க.இன் தி சேம் வே உங்க மைண்ட் ஈகோ இல்லாம இருந்தா அது இருக்கிற இடமே தெரியாது.

அதும் மேல ஈகோங்கற தண்ணியை கேலன் கேலனா ஊத்தி உள்ளாற இருக்கிற எந்த மாற்றத்துக்கும் உட்படாத வெற்றிடத்தை விட்டுட்டு மேலோட்டமா கவர் ஆகியிருக்கிற தண்ணிய வச்சு ( ஐ மீன் ஈகோ) அதை அசெஸ் பண்ண பார்க்கறிங்க.

இன்னைக்கு சரண் சார் சந்தோஷம்ங்கறாய்ங்களே இதுல ஏன் தோஷம்ங்கற வருது. இதுல எதுனா உள் குத்து இருக்குமோன்னு கேட்டாரு. நாமதான் கௌன் பனேகா கரோர்பதில கம்ப்யூட்டஜி மாதிரியாச்சே.

வாதம்,பித்தம்,சிலேத்துமம்னு சொல்றாய்ங்க.இதெல்லாமே பேலன்ஸ்டா இருந்தா எந்த நோயும் வராது. எதுனா கூடினாலோ குறைஞ்சாலோதான் நோய் வரும்.

பேலன்ஸ் தவறி ஏத்தக்குறைச்சலாகி நோய் வந்தப்ப இது கப தோஷம், பித்த தோஷம்ங்கறாய்ங்க. இன் தி சேம் வே ஹ்யூமன் மைண்ட் பேலன்ஸ்டா இருந்தா துக்கமுமில்லே. சந்தோஷமுமில்லே.

பேலன்ஸ் தவறினாத்தான் சந்தோஷத்தையே உணர முடியும்.அதனாலதான் சந்தோஷங்கற வார்த்தையில தோஷம் சேர்ந்து வருதுன்னு விளக்கம் சொன்னேன். (யாருப்பா அங்கன கைதட்டறது – இதெல்லாம் அ.வெ.அ.பா.அமுதம் – நமக்கு எந்த ரைட்டும் கிடையாது)

நினைவுகள் நினைவுகளாவே இருந்தா அது ஜஸ்ட் டேட்டா அதனால எந்த பிரச்சினையும் கிடையாது. அதுல ஈகோ கலக்கும்போது தான் நாஸ்தியாயிருது.

ஒரு நாயை ஒரு பையன் கல்லால அடிச்சிட்டான்னு வைங்க. ஒடனே அந்த நாய் அடிப்பட்ட காலை தூக்கிக்கிட்டு ஊளையிட்டுக்கிட்டே பாதுகாப்பான இடத்தை நோக்கி பறக்குது. பையன் ரெம்ப பொடிசா இருந்து – கையில இன்னம் கல்லேதுமில்லைனு தெரிஞ்சா வலியை பொருத்துக்கிட்டு தொடைகறிய பதம்பார்த்துருது.

ஆனால் நாம ? எவனோ ஒரு பன்னாடை பரதேசி ஏதோ ஒரு வார்த்தை சொல்ட்டா நினைவு தெரிந்த நாள் முதலாய் எந்தெந்த பிக்காலி எந்தெந்த சந்தர்ப்பத்துல நம்மை எத்தீனி வார்த்தை சொன்னான்னு கணக்குப்பிள்ளை வேலையில இறங்கிர்ரம்.

இதுக்கு காரணம் என்ன ஈகோ. ஈகோதான் பேனை ஜூம் போட்டு பெருமாளா காட்டுது. ஒரிஜினல் டீட்டெய்ல்ஸ் மிஸ் ஆயிருது. கரப்டட் மெமரிய வச்சுக்கிட்டு என்னாத்த பண்ணமுடியும். வாழ்க்கையை தொலைச்சு நாம சேமிக்கிறதே நினைவுகளைத்தேன். அதுவும் கரப்டட்னா இது என்னாத்த யாவாரம்.

ஒவ்வொரு இதயத்துக்குள்ளயும் ஒரு ஆறாத ரணமிருக்கு. இதுக்கும் நம்ம ஈகோ தான் காரணம். மன்சனை பிரச்சினையை விட “இந்த பிரச்சினை .. எனக்குமா வந்துருச்சு”ங்கற ஃபீலிங் தான் நெறய ஃபீல் பண்ண வைக்குது. நீ என்ன பிஸ்தாவா?

வரக்கூடாத பிரச்சினை வந்துருச்சுங்கற ஃபீலிங்லதான் இதயம் ரணமாகுது. ஒருத்தருக்கொருத்தர் உன்னை விட என் ரணம் சின்னதுதேனு காட்டிக்க எதிராளியோட ரணத்தை வார்த்தைகளால கீறிக்கிட்டுத்தான் இருக்கம்.

இதைவிட உன் ரணத்தை விட என் ரணம் பெருசு ஆனால் அலட்டிக்கலை பாருனு அளந்துவிடறது ப்டுபயங்கர ஈகோ. இது எதிராளியோட ரணத்தை இன்னம் ஆழமா கீறிரும்.

உலக மக்கள் எல்லாமே துக்கத்துல தான் இருக்காய்ங்க. துக்கத்துல உள்ளவன் அடுத்தவனை துக்கப்படுத்தித்தேன் பார்ப்பான். இது நார்மல் .

நீ இந்த சொசைட்டிக்குள்ள வர்ரப்பயே அந்த ரணத்தை பக்காவா கவர் பண்ணிக்கினு வரனும். கவர் பண்ணாதது உன் தப்பு.

நினைவை நினைவாவே ஸ்டோர் பண்ணு. ஈகோவை கலக்காதே.சம்பவத்தை சம்பவமாவே பாரு. ஈகோவை கலக்காதே.

கண்ணதாசன் கூட “நான் நிரந்தரமானவன்”னுட்டு கவிதைல்லாம் எழுதினாரு. கண்ணதாசன் ஆருனு தெரியாத ஒரு தலைமுறை வந்தாச்சு . கண்ணதாசனுக்கே இந்த நிலை. இப்ப உள்ள வார்த்தை வியாபாரிகளோட நிலை என்னவோ?

இங்கே பிரச்சினை நினைவு கூட அல்ல. நினைவில் கலந்த ஈகோ. ஈகோவை அண்டவிடாம வாழ முடிஞ்சா துக்கமுமில்லே சந் “தோஷ” மும் இல்லை. நினைவுகள் நினைவுகளாவே இருக்கும். அடுத்த பிறவி வரை காத்திருக்க தேவையில்லை. இப்பவே ஆனந்தம் தேன்.

கம்ப்யூட்டர் மாறலாம் , ஹார்ட் டிஸ்க் மாறாதுங்கோ.

Advertisements

23 thoughts on “பொய் பொய் தவிர வேறில்லை

  P.A.Kumar said:
  April 17, 2011 at 12:07 am

  முருகேசன் வெடி போட்டா அது எவனுக்கோன்னு க்கை தட்ட,

  ஜாதகம் அனுப்பிச்சா நமக்கே வெடி போடுறாரு.

  ஈகோ வந்திச்சா அவர திட்டி மறுமொழி சொல்லியச்சி. ஈகோ கொஞ்சம் திருப்தியாச்சி.

  P.A.Kumar said:
  April 17, 2011 at 12:17 am

  தல, ஈகோ இல்லேன்னா இங்க ஒண்ணும் மூவ் ஆகாதுங்கிறது என்னோட தாழ்மையான அபிப்ராயம்.

  புத்தன் கூட ஆசைபடக்கூடாது என்று ஆசைப்பட்டார்

  ஈகோ இல்லேன்னா எங்க தலையும் (முருகேசன்) இல்லேன்னு ஆயிடும்.

   S Murugesan said:
   April 17, 2011 at 3:40 am

   P.A.குமார்,
   //ஈகோ இல்லேன்னா இங்க
   ஒண்ணும் மூவ் ஆகாது//

   மேலோட்டமா பார்த்தா நீங்க சொல்றது கரீட்டு போல தோணும்.
   ஆனா கொஞ்சமே போல டீப்ல போனா இது ராங்கு.

   ஆஃப்டர் ஆல் கவர்மிட்டு ஆஃபீஸ்ல ஒரு அட்டெண்டருக்கு இருக்கிற ஈகோ அமெரிக்க ஜனாதிபதிக்கு கூட இருக்காது.

   அந்த ஒரே ஒரு பார்ட்டியால உத்யோகஸ்தன்லருந்து பப்ளிக் வரை இன்னா மாரி அவஸ்தை படறாய்ங்கனு தெரீமா துரை?

   //புத்தன் கூட ஆசையே கூடாதுன்னு ஆசைப்பட்டாரு//
   லாஜிக்கலான பாய்ண்ட். ஈகோ உள்ள மைண்ட்ல கருணை,கடமை,கற்பனை இப்படி எல்லாமே இழவெடுத்துரும்.

   ஆனால் ஈகோ இல்லாத மைண்ட்ல வர்ர ஆசை கூட அழகானது. அவனுக்கு,சமூகத்துக்கு,ஏன் இந்த படைப்புக்கே அழகை தரக்கூடியது.

   புத்தர் ஆசையே கூடாதுன்னு ஆசைப்படலை. உபதேசிச்சாரு ஈகோ நிறைஞ்ச மனசுல ஆசைங்கறது கான்சர் மாதிரின்னு புரிஞ்சிக்கிட்டு ஈகோ நிறைந்த உலகத்தினருக்கு ஆசை கூடாதுன்னு உபதேசிச்சாரு.

   ஈகோ இல்லைன்னா எதுவும் மூவ் ஆகாதுன்னு நீங்க நினைக்கிறதும் ஒரு வகையில கரீட்டுதான்.

   இருக்கிறதை விட்டு இல்லாததுக்கு மூவ் பண்ண வைக்கிறதே ஈகோதான்.
   ஆனால் அதெல்லாம் அன் நெசஸரி மூவ்.

   ஈகோ போயிருச்சுன்னா நெசஸரிமூவ்ஸ் மட்டுமே நடக்கும்.அது சர்வைவலை அடிப்படையா கொண்டிருக்கும்

   நீங்க இப்ப என்னெல்லாம் செய்யறிங்களோ அதையெல்லாம் ஈகோவோட செய்யாம ஜஸ்ட் லைக் தட் செய்ங்கனு நான் சொன்னதோட நோக்கம் இங்கன மூவ் குறையனும்னு தேன்.

   அல்லாரும் ஈகோ காரணமா தங்கத்தை நோக்கி ஓட அதன் விலை ஆகாயத்தை நோக்கி பறக்குது

    P.A.Kumar said:
    April 17, 2011 at 1:50 pm

    மனப்பதிவுகளில் நல்லது கெட்டது எல்லாத்தையும் அழிச்சிட்டு நின்னாஆனந்தம்தான். வாய்க்கனுமே எல்லாருக்கும்.

    S Murugesan said:
    April 17, 2011 at 3:32 pm

    குமார் சார்,
    “நல்லது கெட்டதுனு பிரிச்சு பார்க்க காரணமே நம்ம ஈகோ தேன். ஈகோ கலக்காத பதிவுகள் எல்லாமே புனிதமானவைதான்

  டவுசர் பாண்டி said:
  April 17, 2011 at 3:43 am

  சூப்பர் நைனா. அருமையான டாபிக். சித்ரா பவுர்ணமி அதுமா ஆன்மீக மேட்டர போட்டு அசத்திட்டீங்கோ.

   S Murugesan said:
   April 17, 2011 at 5:19 am

   பாண்டி,
   நமக்கு நாளாவது நட்சத்திரமாவது..(வேலை பெண்டு கழண்டுக்கிட்டு இருக்கு) ஏதோ தோணுச்சு போட்டேன்.

  டவுசர் பாண்டி said:
  April 17, 2011 at 4:37 am

  மெனக்கிட்டு குந்திக்கினு டிசைன் பண்ணேன். இன்னிக்கி நல்ல நாளாச்சா அதேன் இங்கன வச்சேன்.
   S Murugesan said:
   April 17, 2011 at 5:17 am

   பாண்டி,
   http://www.tinyurl.com போய் லிங்கை ஷார்ட்டா போடலாமே

   PERUMALSHIVAN.S said:
   April 18, 2011 at 10:00 am

   hello en boss sivaperumaanai eanga ? kaanum ?
   ealla kadavulukkum kodaa avarthanbaa boss avara mothulla invate pannunga – G
   ellanaa naan unga phesi kaay .

  kandhan said:
  April 17, 2011 at 5:24 am

  என்ன தல, அண்ணாமலை பல்கலைகழகத்துல MCA(Correspondence) சேர்ந்துடிங்களா?

  “ஒவ்வொரு கம்ப்யூட்டர்லயும் யு.எஸ்.பி போர்ட்டல் இருக்கு. அதுல நெட் கேபிளை செருகினா இன்டர் நெட் உலகம் கண் முன்னே விரியும். ஆனா . நாம என்ன பண்றோம் கண்ட கண்ட பென் ட்ரைவை அதுல செருகி கண்ட வைரஸையும் உள்ளாற விட்டுக்கறம்.” 🙂 🙂

   S Murugesan said:
   April 17, 2011 at 8:01 am

   கந்தன்,
   அறிவுங்கறதே அறிஞ்ச் விஷயத்தை வச்சு அறியாத விஷயத்தை அறிஞ்சுக்கறதுதேன். உங்களுக்கு தெரிஞ்ச மேட்டரை வச்சு தெரியாத (?) மேட்டரை விளக்க முயற்சி பண்ணேன் பாஸ்!

  டவுசர் பாண்டி said:
  April 17, 2011 at 5:33 am

  நைனா ஒனக்கு ஓஷோன்னா அம்புட்டு உசுரா. ஆ….வூன்னா ஓஷோ சொன்னாருன்னு சொல்றியே அதான் கேட்டேன். ரசினி தம்பியும் ஓஷோ பொஸ்தத்த வச்சி போஸ் குடுத்துக்கிட்டு இருப்பாரு.

   S Murugesan said:
   April 17, 2011 at 7:59 am

   பாண்டி,
   சரியான ஆளு தப்பான வழியில போனாலும் சரியான இலக்கை ரீச் ஆயிர்ரான்.
   தப்பான ஆளு சரியான வழியில போனாலும் இலக்கை தவற விட்டுர்ரான்.
   -இதுவும் ஓஷோ சொன்னதுதேன்

   மீசை தேவாரத்துக்கும் உண்டு, வீரப்பனுக்கும் உண்டு, கரப்பாம்பூச்சிக்கும் உண்டு. எல்லாம் ஒன்னாயிருமா தலை?

  ராஜா said:
  April 17, 2011 at 6:02 am

  அருமையான பதிவு, ego வ go ன்னு சொல்லிடிங்க, ஜோதி + திடம் உள்ளவரே.

  நீங்க சொல்லிருக்றது அருமையான விசயம், ஆனா அத்த பாலோவ் பண்றது பெரும்பாலானோருக்கு செரமமான விஷயம், ஆனா கஷ்டப்பட்டு பண்ணிட்டா நாமலும் நல்லாருப்போம், சுத்தி இருக்கவனுங்களும் நல்லருப்பானுங்க.

  ஒரே ஒரு டௌப்ட்டு, எதனா வெவகாரமான விஷயம் பின்னாடி இருக்கும்ன்னு நெனைக்றேன் இந்த பதிவுக்கு பின்னாடி, கரீக்டா தலைவா?

   S Murugesan said:
   April 17, 2011 at 7:57 am

   ராஜா,
   வெளிப்புற விஷயங்கள் நம்மை பாதிக்க முக்கிய காரணம் நம்ம ஈகோ தான். சமூகம், நண்பர்கள்,உறவினர்கள் இப்படி எல்லாருமே நம்ம ஈகோவை சேட்டிஸ்ஃபை செய்து நம்மை உபயோகிச்சுக்குவாய்ங்க. உபயோகிச்சிக்கிட்ட பிறவு தங்களோட ஈகோவை சேட்டிஸ்ஃபை பண்ணிக்க நம்மையே மொக்கை பண்ணுவாய்ங்க.

   இங்கே செயல்கள் சின்னதா பெருசாங்கறது, முக்கியமே இல்லை. ஈகோ சேட்டிஸ்ஃபை ஆகுதா சந்”தோஷம். ஈகோ அடிபடுதா துக்கம். தட்ஸால். மனதின் இயல்பு நிலையில் ரெண்டுமே இல்லை. சந்தோஷம்,துக்கம் ரெண்டுமே நடு நிலை தவறுதலால் தான் ஏற்படுது

  P.A.Kumar said:
  April 17, 2011 at 1:45 pm

  தல,
  நானும் செய்யறது இல்ல, அடுத்தவன் செஞ்சாலும் அடுக்காது, குறை தேடுவன்.அப்படியே அவன் தோத்துப் போகும்போது வர்ற சந்தோசம் இருக்கே, அலாதி. முக்கால்வாசி தமிழன்க வீணாப் போறது இப்படித்தானே, தல.
  எனக்கும் இராஜா மாதிரி டவுட். எதுக்கு இந்த முஸ்தீபு.

  டவுசர் பாண்டி said:
  April 17, 2011 at 5:02 pm

  அந்தா இந்தான்னு ஈகோ மேட்டரு அ.ஜோ. க்குள்ள மிக்சாயிட்டுபா. நீ கவ்னிக்கலயா?இருந்தாலும் டேச்சுட்டாத்தேன் இருக்கு நைனா.

  kandhan said:
  April 18, 2011 at 5:23 am

  தல, இலவச ஜோதிடம் கணிக்ற ஸாப்ட்டுவெர் மேட்டர இங்கன போட்டுர்ரேன்.

  ஜகன்னாத ஹோரா நு சொல்லிட்டு ஒரு நல்ல இலவச ஜாதகம் கணிக்கிற‌ ஸாப்ட்வெர் இங்க இருக்குங்க: http://www.vedicastrologer.org/jh/index.htm. இலவசம்.
  என்ன விஷெசம்னா சின்ன சின்ன ஊரோட lattitude longitude இதுல இருக்கு.
  தேடிகிட்டு இருக்க வேனாம்.

  கீழ குடுத்திருக்கர மூனு ஐடெமும் டவுன்லோடு பன்னனும்ங்க‌:
  http://www.vedicastrologer.org/jh/jh_base_install.zip
  http://www.vedicastrologer.org/jh/jh_ephem_install.zip
  http://www.vedicastrologer.org/jh/jh_atlas_install.zip

  இத உருவாகுனவரும் நம்ம தல மாதிரி சக்தி உபாசகர். அவரோட புஸ்தகத்த
  படிக்கனும்னா இதாங்க லிங்க்: http://www.vedicastrologer.org/articles/vedic_wisdom_1.pdf

  PERUMALSHIVAN.S said:
  April 18, 2011 at 10:15 am

  murugesanne ! ethukku munnaadiye ego-vai patri naraiya ezhuthittinganu ninaikkuran .
  eanna nirvaana unmaigalla padicha maathiri erukkuthunne !.

  ORUTHTHAN EGO ELLAMA VAAZHANUMNA AVANUKKU RHAGU ALLATHU KHETHU PHONDRA THEEYA GIRGA THISAI KADANTHIRUKKANUMNU NAAN NINAKKIRAN .
  eanna athuthaan oruthanai pinni pedaleduthu …………………………….

   S Murugesan said:
   April 18, 2011 at 1:34 pm

   பெருமாள் ஷிவா,
   ஈகோவை விட்டொழிக்கனும்னா ராகு/கேது அ பின்னி பெடலெடுக்கும் தீய கிரகத்தின் தசைய கடந்து வந்திருக்கனும்னு சொல்றிங்க. சாரி..

   அஷ்டம சனில சொந்தம்,பந்தம்,ராப்பிச்சையிலருந்து நாலணா தே.யா வரை ஆப்படிச்சிருந்தாலும் மன்சனுக்கு மறதி சாஸ்தி..

   ஸ்மசான வைராக்கியம்னு கேள்விப்பட்டிருக்கிங்களா? அதேதான். நாம ரெம்ப சென்சிட்டிவ்ங்கறதால சின்ன சின்ன மேட்டர் கூட பெருசா உறைக்குதா அதனாலதேன் இத்தனை ஆராய்ச்சி.

  ak said:
  April 18, 2011 at 10:40 am

  what is ego [exactly]

   S Murugesan said:
   April 18, 2011 at 1:28 pm

   ஏ.கே. அவர்களே!
   ஈகோ என்ற வார்த்தைக்கு நாம் அன்றாட வாழ்க்கையில் உபயோகிக்கும் அர்த்தம் அகங்காரம் -அகந்தை .

   உண்மையில் ஈகோ என்பது இயற்கையிலிருந்து தன்னை வேறுபடுத்தி பார்ப்பது. படைப்புக்கு தன்னை மையமாக்கி யோசிப்பது.

   உ.ம் நேத்து பயங்கர மழை .நல்லவேளையா நான் வெளிய போகவே இல்லை.
   என்னமோம்மா நான் வடாம் போட்டாலே வெயில் வராது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s