சத்ய சாயிபாபாவை கொல்ல 2 வருட சதி

Posted on

புலிவாலை பிடிச்ச நாயர் கதை தெரீமா தலை.. நம்ம சத்ய சாயி கதை கூட அதே தான்.சத்ய சாயி கதையில இன்னா ஆச்சுன்னா அவர் கையில ஃபெவிக்காலை பூசி உட்டுட்டானுங்கோ. பாபாவே எடுக்கலாம் ,எடுத்துரலாம்னு பார்த்தா கூட முடியலை.

இன்னைக்கு முன்னாள் தி தி தே சேர்மன் + பாபா ட்ரஸ்ட் மெம்பர் + பாபா பக்தர்+ முன்னாள் எம்.பி டி.கே .ஆதிகேசவுலு ஒரு தவுசண்ட் வாலாவை கொளுத்திவிட்டுட்டாரு. மேட்டர் (தொலைக்காட்சி செய்திகளின் சாரம்)

” பாபாவை கொல்ல 2 வருசமாவே சதி நடந்துக்கிட்டிருக்கு. நான் இந்த மேட்டரை அன்றைய முதல்வர் ஒய்.எஸ்.ஆர் காதுல கூட போட்டேன்.ஆனால் அவரு கண்டுக்கலை.பாபாவோட உதவியாளனா இருக்கும் சத்யஜித் பாபாவுக்கு சரியா சோறு போடாம, உடல் நலம் கெட்டா வைத்தியம் பார்க்காம கஞ்சியில தூக்கமாத்திரை கலந்து கொடுத்துக்கிட்டிருந்தான் . கடந்த நாலஞ்சு மாசமாவே பாபாவை வெளியாளுங்க ஆரும் பார்க்க ஒட்டாம தடுத்து வச்சிருந்தாய்ங்க.

இப்பம் பாபாவை வச்சிருக்கிற ஆஸ்பத்திரில கூட கேட்டை பூட்டிர்ராய்ங்க. லிஃப்டை பூட்டிர்ராய்ங்க. ஆரையும் உள்ள விடறதில்லை. சத்யஜித் மட்டும்தேன் உள்ளாற இருக்கான். பாபாவுக்கு ட்ரீட் பண்ற டாக்டர் அய்யர் டாக்டரே கிடையாது. அந்தாளு ஒரு மந்திரவாதி.

பாபா உடல் நலனை பத்தி டாக்டர்ஸ் கொடுக்கிற அறிக்கை எல்லாம் போகஸ். சிகிச்சை சிகிச்சைங்கறாய்ங்க. எல்லாமே மர்மமா இருக்கு. இதெல்லாம் ட்ரஸ் உறுப்பினர்களுக்கும் தெரியும், அரசாங்கத்துக்கும் தெரியும். ஆனால் யாரும் நடவடிக்கை எடுக்கமாட்டேங்கறாய்ங்க .உடனே நடவடிக்கை எடுக்கனும்”

இந்த தவுசண்ட் வாலா ஒரு பக்கம்னா பெனுகொண்டா கோர்ட்ல ஆட்கொணர்வு பெட்டிஷன் ஒன்னு போட்டிருக்காய்ங்க.

இது போறாதுன்னு மானில மனித உரிமைகள் கமிஷனுக்கு புகாரும் போயிருக்கு, ஏதோ நான் கடவுளோட பி.ஏ ன்னு சொல்லிக்கிட்டிருந்தாலும் பரவால்லை, நான் தான் கடவுள்னு சொல்லிக்கிட்ட பாபாவோட நிலைமைய பாருங்க.

டிவிகாரன் நீட்டின மைக் முன்னாடி ஒரு பக்தர் சொல்றாரு. ” பாபாவோட நோய் கூட அவரோடலீலைதான்”

அடங்கொய்யால .. சத்யசாயி ஒரு மன்சன்யா. கிழவாடிய்யா. மொதல்ல அந்தாளுக்கு நல்ல ட்ரீட்மெண்ட் கிடைக்கனும்னு சொல்லுங்கடா..

15 thoughts on “சத்ய சாயிபாபாவை கொல்ல 2 வருட சதி

  வினோத் said:
  April 15, 2011 at 9:06 am

  பாபா எப்படி செத்தாலும் லீலைன்னு சொல்லுவாங்களோ?

   S Murugesan said:
   April 15, 2011 at 10:52 am

   பாஸ்!
   சொன்னாலும் சொல்வாய்ங்க. மூளைய கழட்டி வச்சுட்டா இதைத்தான் சொல்லனும்னு சீலிங் ஏது?
   பாபா தன் அடுத்த ஷோவுக்கு ஆல்ரெடி ஒரு ஷெட்யூலை அறிவிச்சிருக்காராமே ? அது தெரியுமா?

  டவுசர் பாண்டி said:
  April 15, 2011 at 10:30 am

  பாபா நல்ல மனிதர்.

   S Murugesan said:
   April 15, 2011 at 10:49 am

   டவுசர் பாண்டி,
   ஜாதகம் ஓகே. டேட் ஆஃப் பர்த் இல்லியே ? November 23rd 1926 ஆ? October 4th 1929? ஆனுட்டு வெட்டுப்பழி குத்துப்பழியா கீறாய்ங்களே நைனா/

    வினோத் said:
    April 15, 2011 at 11:35 am

    அவரின் வாழ்க்கை வரலாற்றுக்கு எந்த தேதி பொருந்துதுன்னு பாருங்க.

    S Murugesan said:
    April 15, 2011 at 12:16 pm

    வினோத் ஜி,
    ஜெயா,கலைஞர்,சோனியா,ராகுல், அங்கன இருந்து ஸ்டாலின்,அழகிரி, ஏன் ரஜினி விஜய்காந்த் வரை இறங்கியாச்சு.ஏன்னா இவிக தலை எழுத்து தமிழர்கள் தலையெழுத்தோட லின்க் ஆகியிருக்குதேங்கற ஆதங்கம். பாபா கதைக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லையே நம்ம சிக்ஸ்த் சென்ஸ் மேட்டர் முடிஞ்சு போச்சோ இவிக சொம்மா சீன் போடறாய்ங்களோன்னு கூட பீதிய கிளப்புது .பாவம்! என்னதான் நான் கடவுள்னு சொல்லிக்கிட்டாலும் அவரும் ஒரு சகமனிதர் தானே .அதுலயும் வயசாளி..

    என்னமோ போங்க மனசு கேட்க மாட்டேங்குது

    டவுசர் பாண்டி said:
    April 15, 2011 at 11:56 am

    ராசிக்கட்டத்துக்குள்ளார உள்ள தேதி கடியாதா?

    S Murugesan said:
    April 15, 2011 at 12:21 pm

    டவுசரு,
    டோட்டலா ரெண்டு தேதி கொடுத்து குழப்பறாய்ங்க, நமக்கெதுக்கு வீண் வேலை.

    டவுசர் பாண்டி said:
    April 15, 2011 at 2:17 pm

    நைனா நீ சொன்னா கரீட்டுதான்.


  PERUMALSHIVAN.S said:
  April 15, 2011 at 11:40 am

  athigama avarai patri theriyaathu konjam nenjam kooda negative -vaga thaan khelvippattirukken .

   S Murugesan said:
   April 15, 2011 at 12:20 pm

   பெருமாள் சிவன்!
   மனிதன் என்பவன் தெய்வமாகலாம். இது ஒரு ஆப்டிமிசம் அவ்ளதான். ஆனால் ஆயிட்டேன்னு டிக்ளேர் பண்றது சாரி கொஞ்சமில்லை நிறைய ஓவர்.

   இப்ப பாருங்க கடவுள் பாபாவா? பேஸ் மேக்கரா? பாபாவா? வென்டிலேட்டரா?ன்னு பட்டிமன்றம் நடக்குது. நாம கொஞ்சமா கிழிக்கலை .. ஆனாலும் இப்ப மனசு கரையுது..

  kandhan said:
  April 15, 2011 at 11:53 am

  மொதல்ல ரொம்ப சித்து வேலை காட்னதாவும் சமீபகாலமா அத கம்மி பண்ணீட்டு சமூக சேவை பண்றதாவும் எங்கயோ படிச்சேன்.

   S Murugesan said:
   April 15, 2011 at 12:18 pm

   கந்தன்!
   தொட்டில்பழக்கம் சுடுகாடு மட்டில்னு ஒரு பழமொழி இருக்கு. உங்க முதல்வர் வீட்டுக்கு வந்தப்ப கூட ஒரு தங்க மோதிரம் தருவிச்சாரே .. நியூஸ்ல பார்க்கலியா?

  ராஜா said:
  April 15, 2011 at 12:17 pm

  // சத்யசாயி ஒரு மன்சன்யா. கிழவாடிய்யாசத்யசாயி ஒரு மன்சன்யா. கிழவாடிய்யா //
  உண்மை சொல்லிடிங்க, என்னதான் கடவுள்ன்னு சொல்லிகிட்டாலும் அவரும் ரத்தம் சதை உள்ள ஒரு மனுசந்தான

  //அடங்கொய்யால .. சத்யசாயி ஒரு மன்சன்யா. கிழவாடிய்யா. மொதல்ல அந்தாளுக்கு நல்ல ட்ரீட்மெண்ட் கிடைக்கனும்னு சொல்லுங்கடா..//

  சத்தியமான உண்மை சார் … எந்த ஒரு மனிதனும் கடவுளாக ஆக முடியாது..
  அவர் ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெரும் சோதி…

  வேண்டுமானால் சத்யசாயி அவர்களை கடவுளின் அருள் பெற்றவர்களின் வரிசையில் வைத்துக் கொள்ளலாம் …

  எது எப்படி இருப்பினும் அவர் மனிதர் அதிலும் ஒரு சமூக சேவகர் .. எனவே அவர் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் ..

  இனியும் அரசு மௌனம் சாதிப்பது தவறு …
  ( ஒருவேளை அரசு துட்டு கேட்டு சாய்பாபா தரலையோ என்னமோ ? )

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s