நாடியை நாடி : கந்தன்

Posted on

அண்ணே வணக்கம்ணே,
கேட்டவர் எல்லாம் பாடலாம்ங்கற மாதிரி படித்தவர் எல்லாம் எழுதலாம்னு அறிவிச்சதுக்கு ரெஸ்பான்ஸ் நெல்லாவே கீது. இப்ப லேட்டஸ்டா நம்ம கந்தன். ஒரு தொடர்பதிவுக்கான முஸ்தீபுல இறங்கி முதல் அத்யாயத்தை அனுப்பியிருக்காரு.தலைப்பு . நம்ம கைங்கரியம்.

நாடித்துடிப்புன்னா தெரியுமில்லையா? தமிழ் சினிமால காதல் தோத்துப்போயிருச்சுன்னு ஹீரோவோ ஹீரோயினோ மணிக்கட்டுக்கு பின்புறம் உள்ள ரத்தக்குழாயை அறுத்துக்குவாங்களே அதன் பேரு தமனி. இதயத்துலருந்து ரத்தம் பம்ப் ஆகிறதை இதை தொட்டுப்ப்பார்த்து தெரிஞ்சிக்கிடலாம்.இரத்தக்குழாயில் பாயும் ரத்த்தத்தின் வேகத்தை நாடிங்கறாய்ங்க. (பார்க்க: தமிழ் நண்பர்கள்)

இதுல 3 கேட்டகிரி. கபம் வாதம் பித்தம். இது மூனும் எப்பவும் சம அளவுல -பேலன்ஸ்டா இருக்கணும்.இந்த பேலன்ஸ் மிஸ் ஆகிறதுதான் எல்லா நோய்களுக்கும் காரணம். உடம்பில இந்த மூணுல ஏதாவது ஒன்னு அதிகரிச்சா அது சம்பந்த பட்ட நோய் ஏற்படும்.

கிரகங்களை நாடி அடிப்படையில 3 க்ரூப்பா பிரிச்சிருக்காய்ங்க.
1 வாத கிரகம் : சனி, புதன், ராகு
2 பித்த கிரகம் : சூரியன், செவ்வாய், புதன், கேது
3 கப கிரகம் : சந்திரன், சுக்ரன், குரு, புதன்
(புதன் பொதுவா வாதம் சம்பந்த பட்டது. ஆனா இது மூன்றையும் குறிக்கிறதா ஒரு கருத்து இருக்கு).
நட்சத்ரங்களையும் இதே மாதிரி மூணு க்ரூப்பா பிரிச்சிருக்காய்ங்க. ஒரு கிரகத்துக்கு 3 நட்சத்திரங்கண்ணா. 9X3=27 நட்சத்திரம்ங்கண்ணா. கணக்கு சரியாப்போச்சா

இந்து மூணு நாடியும் பஞ்ச பூதங்களால் உருவானது :

கபம் : நீர் + நிலம்
பித்தம் : நீர் + அக்னி
வாதம் : வாயு + ஆகாசம்

பஞ்ச பூதங்களை அடிப்படையா கொண்டு ராசிகளை நாலு விதமா பிரிச்சிருக்கு( நீர், நிலம்,அக்னி,வாயு).

ஒரு ஜாதகத்துல கிரகங்கள் நின்ற ராசி, நின்ற நட்சத்திரம் (சாரம்) + பஞ்ச பூதங்கள், நாடிகளை பொருத்தவரை அந்த கிரகத்தோட கேட்டகிரி இத எல்லாம் பாத்து ஒருத்தர் எந்த வகையை சேர்ந்தவர்னு கணிக்கலாம். இதன் மூலம் அந்த ஜாதகரோட உடல் வாகு – மனசு – பார்ட்டிக்கு எந்த மாதிரியான் நோய் ஏற்படும்னும் கணிக்கலாம்.

சரி. இப்போ முக்கியமான விஷயத்துக்கு வருவோம். இந்த மூணையும் நாம உணவை வச்சே கட்டுப் படுத்தலாம். ஐ மீன் அவை சம நிலை இழக்கும்போது – ஏதோ ஒரு நாடி டவுன் ஆகும்போது அ ரெய்ஸ் ஆகும்போது ரெய்ஸ் ஆனதை டவுன் பண்ணியோ டவுன் ஆனதை ரெய்ஸ் பண்ணியோ மீண்டும் சம நிலைப்படுத்தலாம்.

உணவுல மொத்தம் ஆறு சுவை. ஒவ்வொரு சுவையும் ஒவ்வொரு விதமான எஃபெக்டை தருது.

1 இனிப்பு – வாதம் பித்தம் கட்டு படும். கபம் கூடும்.
2 உப்பு – வாதம் கட்டு படும். கபம் பித்தம் கூடும்.
3 புளிப்பு – வாதம் கட்டு படும். பித்தம் கபம் கூடும். (ஆமாங்க, ரிபீட்டு)
4 துவர்ப்பு – பித்தம் கபம் கட்டு படும் வாதம் கூடும் (மாவடு சுவை)
5 காரம் – கபம் கட்டு படும் பித்தம் வாதம் கூடும்
6 கசப்பு – பித்தம் கபம் கட்டு படும் வாதம் கூடும்

உணவுல இந்த ஆறு சுவையும் இருந்தா நோய் வர்றது கம்மி ஆயிரும். உடம்பு மனசு எப்பவும் ஆரோக்யமா இருக்கும்.

துணுக்கு :
சாப்பாட்டுக்கு அரை மணி நேரம் முன் அல்லது பின் உள்ள நேரத்துக்குள்ள அல்லது சாப்பிடும் போது தண்ணி ( தண்+ நீர் = தண்ணீர் அதாவது குளிர்ந்த நீர்) குடிச்சா சரும வியாதி வருவதற்கான வாய்ப்பு கூடும். வேணம்னா அரை டம்ளர் சுடு தண்ணி குடிக்கலாம்.

எச்சரிக்கை:
பிராணயாமம் ,குண்டலி யோகா இத்யாதில சொல்ற இடகலை பிங்கலை சுழுமுனைக்கும் இந்த 3 நாடிகளுக்கும் உள்ள தொடர்பை சித்தர் டாட் காம் சொல்லுது .

தமிழ் களஞ்சியம் மேற்படி 3 நாடியையும் யமுனை கங்கை சரஸ்வதிக்கு ஒப்பிடறதை பார்த்தா உங்களுக்கு என்ன தோணுது ?

Advertisements

15 thoughts on “நாடியை நாடி : கந்தன்

  PERUMALSHIVAN.S said:
  April 16, 2011 at 3:47 am

  ungalukku eallaam aruvu eangiranthu kottuthune therila aaluaalukku pinringa phonga !
  namma murugesanna solra maathiri ANDAVELIYIN AGANRA PAATHTHIRATHILIRUNTHU MONDU OOTHTHURINGALA !

  naan kooda oru title vachirukkan AARIL RAAGU EATHIRIYAI VELVAAN-nu title mattumthaan erukkugna ennum script ready pannala !

  enakku lagnathula sani -gna athanaala naan konjam methuvaave varan .neenga phonga .!

  pathivu and matter super !

  kandhan said:
  April 16, 2011 at 4:46 am

  “தமிழ் களஞ்சியம் மேற்படி 3 நாடியையும் யமுனை கங்கை சரஸ்வதிக்கு ஒப்பிடறதை பார்த்தா உங்களுக்கு என்ன தோணுது ?” – அதுதான் மெட்டரெ தல. சங்கமத்தல குளிச்சா நல்லதுனா அதுக்கு அர்த்தம் இதுதான்.

   S Murugesan said:
   April 16, 2011 at 7:59 am

   கந்தன்,
   இன்னம் ஒரு க்ளூ தரேன் சரஸ்வதிக்கும் சுழுமுனை நாடிக்கும் என்ன ஒற்றுமை?

    kandhan said:
    April 16, 2011 at 9:21 am

    இது நம்மளுக்கு தெரியாது தல. சும்மா பட்டம் விட்டு பாக்றென். சரஸ்வதி கண்னுக்கு தெரியாது. அன்டர்கிரவுன்ட ஓடிகிடிருக்கு. சூக்சமம். இதுக்கு மேல் ஒன்னும் தோனல. நீங்களெ சொல்லீருங்க.

    S Murugesan said:
    April 16, 2011 at 12:03 pm

    கந்தன்!
    தூள்மா.. பாய்ண்டை பிடிச்சிங்க. வெரி குட். கீப் இட் அப்.

  டவுசர் பாண்டி said:
  April 16, 2011 at 5:04 am

  கந்தன்னே டக்கரான பதிவுனே. நைனா டைட்டில வேற சோக்கா பின்னிட்டாரு.

  veera said:
  April 16, 2011 at 5:07 am

  உங்க அழகான தமிழ படிக்க வந்த என்ன இப்பிடி எமாத்திடீங்களே கந்தன். முருகேசன் அவரு ஸ்டைல்ல மாத்திடாரே :).

  மத்தபடி விஷயம்லாம் அருமையா இருக்கு.

   kandhan said:
   April 16, 2011 at 5:23 am

   எழுத்து பிழையெல்லாம் வேற தல திருத்தீட்டாரு பாஸு. என்ன கொடும சார்?

  டவுசர் பாண்டி said:
  April 16, 2011 at 6:42 am

  …..ஸ்ஸ்ஸப்பா இந்த வெட்டு என்னிக்கித்தான் கட்டாகுமோ தெர்ல. நைனா வேற “விரைவில் இந்திய நகரம் இருட்டுக்குள மூழ்கும்னு” சொல்லிக்கினு இருக்குறதால கொஞ்சம் பீலிங்காத்தேன் இருக்கு.

  சரிப்பா. இந்த நாடின்னு சொன்ன ஒடனே நமக்கு ஒன்னு தோணிச்சி. இன்னான்னா இத பத்தி அகத்தியர் ஜீவனாடில ஒன்னு சொன்னது,

  அதாவ்து நம்ம சாதகத்துல செவ்+பாம்பு இவிக ரெண்டு பேரும் கட்டி பிடிச்சிக்கினு மேசத்துல இருந்தாகன்னா தலைல ஆப்பரேஷன் பண்ணவேண்டி இருக்குமாம்.

  ரிஷபத்துல இந்த கூட்டணி இருந்திச்சின்னா மூஞ்சிலயும், மிதுனத்துலன்னா கைலயும், கடகத்லன்னா ஹார்ட்லயும், சிம்மத்லன்னா வவுத்துலயும், கன்னிலன்னா கிட்டினி ஏரியாளையும்,

  துலாத்லன்னா “அதுலயும்”, விருச்சிகத்துலன்னா கு……லயும் (ஸ்ஸ்ஸ்…. காதக்கொண்டாங்க நைனா குண்டின்னு சொல்லக்கூடாதுன்னு சொன்னது ஞா இருக்குல்லா), தனுலன்னா கு……என்ட்ரன்ஸ்லயும்,

  மகரத்துலன்னா கால் முட்டுலயும், கும்பத்துலன்னா கால்லயும், மீனத்துலன்னா உள்ளங்காள்ளையும் ஆப்பரேஷன் பண்ண வேண்டி இருக்குமாம்ப்பா. நான் சொல்லல மிந்தியே ஒரு ரிஷி (சப்தரிஷில ஒருத்தரு சொல்லிருக்காரு)

   kandhan said:
   April 16, 2011 at 6:56 am

   ஆமாங்க பாண்டி. மருத்துவ ஜொதிடத்ல அத கால புருஷரொட ஜாதகம் அப்டிம்பாங்க. அதெ கான்செப்ட எல்லா ஜாதகத்லயும் உபயொகிக்கலாம். அதாவது லக்னத்த மெஷமா பாவிச்சி பாக்கனும்.

   (பி.கு‍‍ அ.அ.அ. பகுதி 5 ல‌ மிட்னைட் மெட்டர் ஒன்னு கேட்ருந்தெனெ 🙂 )

    டவுசர் பாண்டி said:
    April 16, 2011 at 8:38 am

    ரிஷின்னு சொன்ன ஒடனே ஒன்னு டிஸ்ப்ளே ஆச்சி. இன்னான்னா நம்ம நாடி சோசியத்துல குருதேன் மெய்நுன்னு ஒங்களுக்கு தெரியும். அவருதேன் அல்லாத்துக்கும் லக்னாதிபதின்னு கரீட்டா சொல்லிருவீங்க. சரி. இந்த இந்த குருவோட லுக்கு ராகு மேல விழிந்திச்சின்னா ஆவிகளுக்கு பதினெட்டு சித்தர்கள் தொடர்பு கெடைக்குமாம். லுக்கு கேது மேல விழிந்திச்சின்னா சப்த ரிஷிகள் டீலிங் கெடைக்குமாம். அந்த டீலிங் மேட்டர் வந்து அவிக நெலமைய பொறுத்தது. குருவோட லுக்கு விசயகாந்து தம்பி லுக்கு மாறி இருந்திச்சினா கொஞ்சம் தள்ளாடும். அம்புட்டுதேன். நம்ம நாடி சோசியத்துல போன சென்மத்த கூட பாத்து சொல்லலாம்னு சாமி சொல்லுது. மெய்யாலுமே டவுட்டுதேன். எப்புடி கரீட்டுன்னு கண்டுபுடிக்கனும்னா ஆவிகளுக்கு வுட்ட கொற தொட்ட கொற இந்த பெறவில இருக்குமாம். எப்டி சொல்றாங்கோன்னா, நம்ம சாதகத்துல உள்ள குருவ பின்னாடி லவட்டி வச்சி பாக்கணுமாம். என்னமோ சொல்றாங்கப்பா. நமக்கு தெரிஞ்சது அம்புட்டுதேன்.

    டவுசர் பாண்டி said:
    April 16, 2011 at 9:30 am

    குரு+சனி+ராகு= 18 சித்தர்கள்
    குரு+சனி+கேது= சப்த ரிஷிகள் இத எப்டி எப்டி கற்பன பண்ணணுமோ அப்டி அப்டி பண்ணிக்கோங்க. அதாவது லுக்கு விடுரதா வச்சோ, கூட்டனிய வச்சோ பண்ணிக்கனுமாம்.

   S Murugesan said:
   April 16, 2011 at 7:58 am

   பாண்டி,
   உங்களுக்கு புண்ணியமா போவட்டும். கமெண்ட்ல பேரா பிரிங்க. என்னாட்டம் கிழவாடிகளும் படிக்கனும்ல

    டவுசர் பாண்டி said:
    April 16, 2011 at 8:27 am

    நம்ம ரைட்டிங் ஸ்டைலு மின்வெட்டுக்கு பயந்து அப்டி ஆயிச்சி நைனா. சாரிப்பா.

  டவுசர் பாண்டி said:
  April 16, 2011 at 9:03 am

  நம்மாள்க சோசியத்துல, ஒண்ணா நம்பர் வூட்டுக்காரனும், ராசிக்காரனும், பத்தா நம்பர் வூட்டுக்காரனும் ஒரே ராசிக்குள இருந்தாகன்னா பார்ட்டிக்காரன் சித்தன் மாறி பிலிம் காட்டிட்டு இருப்பான். மத்தபடி வூட்டுக்காரங்க நெலமைய பொறுத்து பார்ட்டிக்காரன் மெய்யாலுமே சித்தனான்னு கண்டுபுடிச்சிர்லாம். அதே மாறி ஒண்ணா நம்பர் வூட்டுக்காரனும், எட்டா நம்பர் வூட்டுக்காரனும் ஒரே வூட்டுக்குள்ள குந்திக்கினு, தொணைக்கு செவ்வாய வச்சிருந்தாலோ, அல்லது ரெண்டு வேரையும் செவ்வா சைட் அடிச்சிக்கினு இருந்தாலும் (அவிக குந்திக்கினு இருந்த எடம் மோசமான எடமா இருந்தாலும்) அந்த பார்ட்டிக்காரன் எட்சனி, மோகினி வசியம் மாதிரி பலான மேட்டருல எறங்கி சூனிய வித்தையெல்லாம் பழகிக்கினு மனிதர்களை சீரழிப்பானாம் (நான் இல்லீங்க). பொறவு நாலா நம்பர் வூட்டுக்காரனும், ஏழா நம்பர் வூட்டுக்காரனும், தொணைக்கு நம்ம ராசிக்காரனும் நல்ல பையனா இருந்து, மூணு டிக்கெட்டும் சேந்து ஒண்ணா நம்பர் வூட்டுக்குள்ள இருந்தாலோ, அல்லது ஒன்ன நம்பர் வூட்ட லுக்கு விட்டாலும் பார்ட்டிக்காரன் மாந்திரீக வித்தைகள படிச்சிக்கினு பில்லி, சூனியத்த எல்லாம் கில்லி விலாண்டுருவானாம் (அதாம்பா இந்த பில்லி சூனியத்த எடுப்பாங்கல்லா)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s