கல்வி முறையும் ,அடிமைத்தனமும் -சத்திய சீலன்

Posted on

முன்னுரை:

அண்ணே வணக்கம்ணே,
நம்ம வலை தளத்துக்கு இன்னொரு ஆத்தர் கிடைச்சிருக்காரு. நண்பர் சக்தி சீலன் தன்னோட “கல்வி முறையும் ,அடிமைத்தனமும்.”ங்கற பதிவோட வந்திருக்காரு. நம்ம கல்வி முறை ரெண்டு ரகம். ஒன்னு ப்ரிட்டீஷ் காரவுக வர்ரதுக்கு மிந்தினது ( புராணம்,இதிகாசம், திருவாசகம், கூட்டல், கழித்தல் மாதிரி அம்புலிமாமாத்தனமான படிப்பு)

அடுத்தது பிரிட்டீஷ் காரவுக அமல் செய்த லோகாயத படிப்பு. இதுல என்னடா வில்லங்கம்னா கம்ப்யூட்டர்ல யூசர் அக்கவுண்ட் மாதிரி லிமிட்டட் நாலெட்ஜுதேன். எங்களுக்கு விசுவாசமா நாங்க சொல்றத செய்தா போதும். அதுக்கு தேவையான படிப்பை மட்டும் தரோம்னு தந்தாய்ங்க.

நம்மாளுங்களோட கல்வி என்னதான் சப்பையா இருந்தாலும் கொஞ்சமாச்சும் சொந்தமா ரோசிக்க வாய்ப்பு தரக்கூடிய கல்வி. ஆனால் பிரிட்டீஷ்காரவுக தந்த படிப்பு.. மன்சனை ஒரு ஐபாட் ரேஞ்சுக்கு தயாராக்கிருச்சு.

இப்போ லேட்டஸ்ட் படிப்புங்கறிங்களா? இவிக படிச்சுட்டு வெளிய வர்ரதுக்குள்ளயே அவுட் டேட்டட் ஆயிருது. (இவன் படிக்கறதே அவுட் டேட்டட்னும் சொல்றாய்ங்க. இந்த அழகுல ஒரு கட்சி பட்டதாரிகளுக்கு மட்டும் சீட்டு கொடுத்திருக்காய்ங்க.

ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவுமா என்ன? பாட அறிவும் -பட்டறிவும் சேரும்போதுதான் அது டீ கப்பு மாதிரி . இல்லைன்னா வோர்ல்ட் கப் மாதிரி .பட்டறிவை தரோம்னு சொம்மா நாலு ஃபேக்டரிக்கு பிக்னிக் மாதிரி கூட்டுபோய் கதை பண்ணிர்ராய்ங்களாம். அரசு கல்வி நிறுவனங்கள் சரியில்லைன்னோ பத்தலைன்னோ ப்ரைவேட் காரவுகளுக்கு பப்பரக்கானு இரு கதவை திறந்துவிட்டாய்ங்க. அவிக நிலைமை ரெம்ப மோசம். நிறுவனர் எதிர்கட்சியாயிட்டா சீல் வைக்கறது ச்சோ ஈஸி.அவிக தரம் அம்புட்டுதேங்.

என்ங்கடா இது முன்னுரையே பதிவு கணக்கா நீளுதுன்னு பேஜாராயிராத கண்ணா பதிவுக்கு போயிரலாமா?

அன்பிற்குரிய சித்தூர் .முருகேசன் அண்ணா அவர்களுக்கும் ,வலைப்பூ நண்பர்களுக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .

நான் உங்களோடு பகிர்ந்து கொள்ளப்போவது நம்முடைய கல்விமுறை பற்றியும் ,ஆங்கிலேயரின் தந்திரம் பற்றியுமே.ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது சமூகத்தின் எல்லா தளங்களிலும் நிறைந்து இருக்க வேண்டும்.ஏதோ ஒரு துறை மட்டும் வளர்வது வளர்ச்சி அல்ல,நம் உடம்பில் கை மட்டும் பெரிதாக இருந்தால் ,நாம் அதை வீக்கம் என்று தான் சொல்லுவோம்,அது புற்று நோயாக கூட இருக்கலாம்.

இந்தியா தற்போது அடைந்திருப்பதும் அந்த நிலை தான்.நல்ல வளர்ச்சி சமூகத்தின் எல்லா தளங்களிலும் இருக்க நம்முடைய கல்வி முறை சுயத்தை பெறுவது அவசியம் ,ஆனால் நம்மிடம் இருப்பதோ இரவல் அறிவு ,நான் மெக்காலே கல்விமுறையை தான் இப்படி சொல்லுகிறேன்

நண்பர்களே குறிப்பிட சில ஆண்டுகளுக்கு முன்னால் தினமணி நாளிதழில் வந்த ஒரு கட்டுரையில் மெக்காலே ஆங்கில அரசுக்கு அனுப்பிய கல்விமுறை பற்றிய பரிந்துரை கடிதத்தின் தமிழாக்கம் கீழே :

“நான் பாரதத்தின் எல்லா பகுதிகளுக்கும் பயணம் செய்துள்ளேன் .இந்த நாட்டில் ஒருவர் கூட பிச்சைக்காரர் இல்லை ,ஒருவர் கூட திருடர் இல்லை ,இந்த அளவு செல்வ வளமும் ,மேலான பண்புகளும் கொண்ட மனிதர்களை நான் இதுவரை கண்டதில்லை.
இந்த தேசத்தின் முதுகெலும்பை முறிக்காமல் ,நாம் இந்த தேசத்தை வெற்றி கொள்ள முடியாது .இந்த தேசத்தின் முதுகெலும்பாக இருப்பது இதன் ஆன்மிகமும் ,பண்பாட்டு பாரம்பரியமுமே .எனவே இவர்களது பாரம்பரிய கல்வி முறையை நாம் மாற்ற வேண்டும்.

இதன் காரணமாக ஆங்கிலேயருடையதாய் உள்ள எதுவும் மேலானது ,அதுவே நன்று. ,தம்முடையதை விட சிறந்தது என்று நினைப்பான் ,தன்னுடைய சுய பண்பாட்டை இழப்பான் .தேசம் உண்மையில் நாம் ஆதிக்கத்துக்கு வரும் .”

மேற்கண்ட இந்த கடிதம் 1835 ஆம் ஆண்டு ஆங்கில அரசுக்கு அனுப்பப்பட்டது ,1837 ஆம் ஆண்டு கல்வி முறை நடைமுறைக்கு வந்தது .அறிவியலை பொறுத்த மட்டில் நாம் எப்போதும் அவர்களுக்கு அடிமையே ,நாம் எல்லாம் பள்ளியில் படிக்கும் போது கோள்களின் எண்ணிக்கை ஒன்பது ,இப்போது எட்டு புளுட்டோ நீக்கபட்டிருக்கிறது.

மேற்க்கத்திய நாடுகள் எட்டு என்று அறிவித்தவுடன் நாம் அதை அப்படியே ஏற்று கொள்ளுகிறோம் ஒன்பது என்ற சொன்னபோதும் நாம் ஏற்று கொண்டோம் .

நாளை அவன் வேறு ஏதாவது சொன்னாலும் ஏற்றுக்கொள்வோம் . அப்டேஷன் நல்லதுதான். ஆனால் அதுக்கு நம்ம ஆராய்ச்சி காரணமா இருக்கனுமே தவிர எவனோ சொன்னா போதும்னு நினைக்கிறது அடிமைத்தனம்.

நாம் நம்முடைய சுயத்தில் நிற்பதுதான் வளர்ச்சிக்கான வித்து ,சிந்திப்பீர் நண்பர்களே ……

11 thoughts on “கல்வி முறையும் ,அடிமைத்தனமும் -சத்திய சீலன்

  வினோத் said:
  April 14, 2011 at 10:25 am

  டவுசரு….

  super syed said:
  April 14, 2011 at 11:05 am

  நீங்க சொல்ர மேட்டர் 100% சரிதான் இதுவரைக்கும் எனக்கு கூட சின்த்தனைக்கு
  எட்டலை இப்போதான் புரியுது
  எங்க நம்ம நாட்டுலதான் கடமைய செய்யுரதுக்கே லஞ்சம் கேக்குரானே
  அது பத்தாதுக்கு ஆயிரத்தெட்டு ஜாதி ஓட்டு வாங்குரதுக்கு ம்த துவேசம், இத்தனையும் தான்டி எப்போ நம்ம புதுசா சிந்திக்கபோரோமொ

  திரு முருகேசன் ஐய்யா தான் இந்தியாவுடைய ஜாதகத்த நல்லா அலசி ஆராய்ந்து இந்தியா எப்போ புதுசா யோசிக்கும்னு சொல்லனும்

  வினோத் said:
  April 14, 2011 at 12:34 pm

  அப்பரேசன் இந்தியா 2000 இல்ல 20000 சரியா வரும் போல..

   S Murugesan said:
   April 14, 2011 at 4:25 pm

   வினோத் ஜீ ,
   ஏன் என் மேல இருக்கிற லவ்வுல 20 ஆயிரம்னிட்டிங்க. தாளி நாடு போற போக்கை பார்த்தா 20 கோடி வருசம் போனாலும் கூண்டோட சமாதியாக சனம் சன்னத்தமா இருக்கே தவிர ஒன்னும் பேராது போல

    Mani said:
    April 14, 2011 at 5:07 pm

    அப்பாடா இப்பதான் உங்களுக்கு சனத்த பத்தி புரிஞ்சுதா. விடுங்கண்னே குவாட்டருக்கும் பிரியாணிக்கும் தான் இங்க மதிப்பு. நீரளவே ஆகுமாம் ஆம்பல், ஆளும் தலைவர்களை போலவே வாழும் மக்கள். தானாக அடிபட்டு உதைபட்டு திருந்திக்கும் இந்த சமுதாயம். நாம நம்ப வேலையைப் பார்ப்போம். ஏதாவது ஜோதிட ஆராய்ச்சி பத்தி புதுசா எழுதுங்கண்னே. இல்லாட்டி கிருமியை எழுதச் சொல்லுங்கண்னே படிச்சு ரெம்ப நாளாச்சு.

  டவுசர் பாண்டி said:
  April 14, 2011 at 5:07 pm

  நைனா என்க்கும் இந்தியாவ சிசேரியன் சாரி ஆப்பரேசன் பண்ன ஆசதேன். அதுக்கு இன்னாத்த கைல எடுக்கனும். 

  Mani said:
  April 14, 2011 at 5:28 pm

  டவுசரு இப்படி ஏன் ஆளாளுக்கு கொளவெறி புடிச்சு அலயுறீங்க. எல்லாரும் ஆப்ரேசன் பன்ன கெம்பிட்டா ஆப்புறம் ஆப்ரேசன் பன்றதுக்கு ஆள் கிடைக்காம போயிடபோகுது.

  கிருமி said:
  April 14, 2011 at 6:00 pm

  இந்த விசயத்துல கிழி கிழின்னு கிழிச்சிருக்கலாமே? மெக்காலே சொன்னதுக்கு அப்றமா நாலே வரில கருத்தை மட்டும் சொல்லியிருக்கீங்க.
  இன்னும் விரிவா எடுத்து சொல்லியிருந்திருக்கலாமே.

  Thirumurgan said:
  April 15, 2011 at 6:23 am

  I am not sure lord Macaulay said exactly u said, that is still debatable, no clear evidence to prove that, but context is correct, he to break us he wanted to teach us like English and English culture is better than any other culture in world, only way to rule us is the make us inferior about English, that’s what they did

  MatureDurai said:
  November 11, 2011 at 7:18 pm

  எனது எண்ணத்தினை அப்படியே பிரதிபலிக்கும் மிகச்சிறந்த கட்டுரை!
  “History is written by the victors” என்ற ஆங்கிலப்பழமொழி என் ஞாபகத்திற்கு
  வந்தது!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s