அவன் -அவள்-அது :5

Posted on

ஹ்ரீம் என்ற பீஜத்துக்குரியவளான புவனேசியின் அந்தப்புறம் வரை முன் அனுமதி இன்றி சென்று வரும் சுகரின் (கிளி உருவம் படைத்த ரிஷி) மறு உருவான கிளி நம்ம ஊட்டுக்குள்ள வந்து பூஜை ஸ்டாண்ட்ல கேம்ப் அடிச்சுருச்சுனு சொல்லி நிறுத்தியிருந்தேன். அது ஏன் வந்தது? சிறகு சரிவர முளைக்காத ,பறக்க பழகாத குஞ்சா ? தான் போக வேண்டிய தி சைய கூகுல் மேப்ஸ்ல வெரிஃபை பண்ணிக்க முடியாத சந்தர்ப்பத்துல லேண்ட் ஆச்சான்னெல்லாம் நமக்கு தெரியாதுண்ணே. கிளி வந்தது நெஜம். ஏதோ ஒரு வாரம் போல நம்ம உபசாரத்தையெல்லாம் ஏற்று கன்டின்யூ பண்ணது நெஜம்.

மன்சனை தவிர மத்த எல்லா ஜீவராசிக்கும் இயற்கையோட நல்ல ஒத்திசைவு இருக்கு. ஆராச்சும் நல்ல காரியம் செய்ய ஆரம்பிச்சா ஒரு விதமா கெட்ட காரியத்தை ஆரம்பிச்சா இன்னொரு விதமா ரெஸ்பாண்ட் ஆகுதுங்க. உ.ம் கவுளி சொல்றது, ஆந்தை அலறுவது . அதுகளுக்கு தெரிஞ்சது மன்சாளுக்கு தெரியாம போக காரணம் இன்னாடான்னா ஈகோ.

நம்ம சாதனை தொடருது. சாதனைன்னா என்ன சாதனை மேற்படி மந்திரத்தை ஜெபிக்கிறதுதேன். என்னென்னமோ குருட்டு கணக்கெல்லாம் போட்டு (அறிவுப்பூர்வமா செயல்படறதுங்கற நினைப்புல) வித விதமான ஆசனங்கள்ள உட்கார்ந்து ஜெபிக்கிறது. பத்மாசனத்துல உட்கார்ந்து கூப்பின கைய அனாஹத சக்கரத்தண்டை வைச்சு, பின்னாடி விசுத்தி, அடுத்து ஆக்னா அடுத்து சஹஸ்ராரத்துல ஒட்டி வச்சு ஜெபிக்கிறதுண்டு.

இதுக்கெல்லாம் காரணம் தெரியாது. முந்தா நாள் மின் நூலா கிடைச்ச க்ரியா யோகத்துல சிபாரிசு செய்யப்படும் சூரிய நமஸ்காரத்துல இந்த ஸ்டெப்ஸ் எல்லாம் வருதுங்கண்ணா.ஆனா அன்றைய தேதிக்கு நமக்கு இதெல்லாம் தெரியவே தெரியாது.

பத்மாசனத்துல உட்கார்ந்து ஜெபிக்கிறச்ச முதுகெலும்பு அப்படியே முறுக்கு கம்பி கணக்கா ஆயிட்டாப்ல வலிக்கும் – அப்ப அப்படியே தரையில சாஞ்சு (கால்கள் மட்டும் பத்மாசனத்துலயே ) மந்திர ஜெபத்தை கன்டினியூ பண்றதுண்டு. ( இந்த ஸ்டெப்பையும் மேற்படி மின் நூல்ல படிச்சேன்) கழுத்துவரை தனிமை கிடைக்கும்போது கழுத்துவரை தண்ணியில உட்கார்ந்தும் ஜெபிக்கிறது உண்டு.

எனக்கு ரெம்ப பிடிச்சது சவாசனம்.( டெட் பாடி கணக்கா மல்லாந்து படுத்துர்ரது) இந்த போஸ்சர்ல நடு நெற்றியில் ஆட்டோ மெட்டிக்கா ஒரு அழுத்தம் ஏற்படும். அங்கன நினைவை நிறுத்தறது ஈஸி. இப்படித்தேன் கண்டமேனிக்கு விடியல் 3 வரையோ நாலு வரையோ மிட் நைட் மசாலா கணக்கா புகுந்து விளையாடிட்டு படுக்கறேன். உறக்கம் (களைச்சுப்போன பாடிக்கு) விழிப்பு ( நினைவுக்கு) கலந்த நிலை.

திடீர்னு வலது காதுல “விஜயவாடா நித்யானந்தம்”னு ஒரு பெண்குரல் கேட்டுது.ரா முழுக்க தூங்காததால தூக்கம் கேட்டு உள்ளுக்கு இழுக்கிற கண்களை பலவந்தமா திறந்து சுத்தும்முத்தும் பார்த்துட்டு மறுபடி ஜெபத்தை தொடர்ரேன். மறுபடி உறக்கம் (களைச்சுப்போன பாடிக்கு) விழிப்பு ( நினைவுக்கு) கலந்த நிலை.மறுபடி இடது காதுல “விஜயவாடா நித்யானந்தம்”னு ஒரு பெண்குரல்.

அதுக்கு மேல பேட்டரி லோ ஆகி ஆஃப் ஆயிருச்சு. பெரியார் உரையெல்லாம் ஞா படுத்திக்கிட்டு தாளி இதேதோ ஆடிட்டரி ஹெலூசினேஷனுங்கற வியாதி பேசாம தூங்கிருவம்னு தூங்கிட்டன். மறு நாள் மேற்படி மந்திர பேட்சோட பேட்டைக்கு போனேன். அந்த பேட்ச் மெம்பர் ஒருத்தரு (அதுவரை நமக்கு அறிமுகமில்லே) அவர் விஜயவாடா போய் துர்கையை தரிசிச்சுட்டு கழுத்துல டாலர் துலங்க வந்திருந்தார்.

அப்பத்தேன் ஒரு முடிச்சு அவிழ்ந்தது. இந்த பேட்ச் டோட்டலா வேற ஒரு பார்ட்டியோட க்ரூப்புன்னு தெரிய வந்தது. .இடையில அந்த பார்ட்டி வேற ஒரு ரூட்ல போயிருச்சு . ( அதாவது சாதனைக்கெல்லாம் டாட்டா சொல்லிட்டு குருவேடம் தரிக்க ஆரம்பிச்சுருச்சு) – இந்த பேட்ச் கழண்டுக்கிச்சு.

இந்த பேட்ச் கழண்டுக்கிட்டது ஆருக்கிட்டேருந்துன்னு பார்த்தா அந்த ஆசாமியோட ஜாதகத்தை நாம 1990 வாக்குலயே பார்த்திருக்கம்.ஜாதகத்தை கையில கொடுத்து எனக்கு முக்தி கிடைக்குமான்னு கேட்ட மொதல் க்ளையண்டு அந்தாளுதேன்.

அப்பமே ” நைனா .. உனக்கு இன்னம் கில்மா மேல கவர்ச்சி குறையல, குறையாது ,பேசாம கண்ணாலம் கட்டிக்க தங்க விக்கிரகம் மாதிரி ஒரு பெண் குழந்தை பிறக்கும். அதுக்கப்பால முக்திக்கு ட்ரை பண்ணா கிடைக்கும்”னு சொன்னேன்.

ஆனா அந்தாளு கேட்டுக்கலை. தன்னோட கோக்கு மாக்கான சாதனைகள் மூலம் கிடைச்ச காலணா அரையணா ஷக்திய கூட விரயம் பண்ணி லோ பேட்டரி ஆகி இன்னம் ஒரு வாரத்துல டிக்கெட் வாங்கிரப்போறாருங்கற சமயத்துல நம்மை வேடிக்கை பார்க்க வந்து போற ஒரு சோடாபுட்டி கிராக்கி நாம அந்த காலத்துல சொல்லிட்டிருந்த செவ்வாய்க்குரிய நவீன பரிகாரத்தை மேற்படி ஆசாமிக்கு ஊத அந்தாளு அப்படியே அப்ளை பண்ண கூத்தெல்லாம் நடந்தது.

இதற்கிடையில அந்தாளோட தம்பி நமக்கு டச் ஆனான். ( விஜய்காந்த் டைப் ஜாதகம்) ” உங்க அண்ணன் சாக பிழைக்க கிடக்கானாமே ஒரு தாட்டி கூட்டிட்டு போ “ன்னு தலைபாடா அடிச்சிக்கிட்டேன். இன்னைக்கு நாளைக்குன்னு வாயிதா போட்டுக்கிட்டே போக ஒரு நா அந்தாளு செத்தே போயிட்டான்.

அன்னைக்கு ராத்திரி மனசு ரெம்ப சங்கடமா இருந்தது. செத்தவனுக்கு இன்னா வயசுங்கறிங்க ? 30+ தட்ஸால். அடங்கொய்யால என்னடா இது லைஃபு. அப்படி என்னதான் சாதனை செய்துட்டு இருந்தே? என்னத்தை தான் தேடினே? அல்பாயுசுல பூட்டியே நைனா.. உனக்கு என் மேல நம்பிக்கையிருந்தா அந்த ரூட் மேப்பை எனக்கு கொடு. உன் சார்பா உன் பிரதி நிதியா அதை நான் கன்டின்யூ பண்றேன். தாளி உன் ஆத்மாவுக்கும் சாந்தி கிடைக்கும்னு கண்டமேனிக்கு மனசுக்குள்ள புலம்பிக்கிட்டே இருந்தேன். அந்தாளு செய்துட்டிருந்தது துர்கைக்கு சம்பந்தப்பட்ட சாதனைன்னு அப்பால தெரிஞ்சிக்கிட்டேன்.

அன்னைக்கிருந்த ப்ரெட் ஹன்டிங் லைஃப்ல உணர்வுகள் கூர்மையா இருந்ததே தவிர கன்டின்யுட்டிங்கறது துர்லபம்.ஸ்தூல பிரச்சினைகள் சுனாமி மாதிரி ஒரு ரவுண்டு வந்துபோனா மேற்படி உணர்வு வழி முடிவுகள் ,சபதங்கள்,ஆஃபர்ஸ் எல்லாம் சுத்தமாயிரும்.

சரி எப்படியோ குருவை காட்டும் ஒன்பதாமிடத்து சனி ( பிரேதாத்மா) தன் வேலையை செய்துட்டாரு. செத்துப்போனவன் போட்ட ரூட்டுல சொம்மா அப்படி தள்ளி விட்டுட்டாரு போலன்னு அனலைஸ் பண்ணிக்கிட்டேன்.

ஒரு தாட்டி தியானம் பண்ணிக்கிட்டிருந்தப்ப ஏழு அடி பாம்பு வந்துருச்சுங்கண்ணா( சொம்மா ஒரு பில்டப்புக்காக ..அதென்னவோ மெனோஃபஸை எட்டின ஆன்டியோட கூந்தல் சைஸுக்குத்தேன் இருந்ததா நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்)

( அடுத்த பதிவில் தொடரும்)

Advertisements

24 thoughts on “அவன் -அவள்-அது :5

  \ஒரு தாட்டி தியானம் பண்ணிக்கிட்டிருந்தப்ப ஏழு அடி பாம்பு வந்துருச்சுங்கண்ண//

  ஆகா … அப்புறம் ?

  அவன் அவள் அது … ஓ அந்த அது – இது தானோ ?

   S Murugesan said:
   April 15, 2011 at 4:52 am

   ஜானகி ராமன்!
   அதையெல்லாம் கமெண்ட்ல சொல்வமா என்ன? அஸ்கு புஸ்கு அடுத்த பதிவு போடறவரை வெய்ட் பண்ணுங்க ராசா..

  முருகேசன் சார் சிவயசிவ பிளாகர் பார்த்துட்டு கமெண்ட் பண்ணினதுக்கு ரொம்ப நன்றி …

  நீங்க உங்க அனுபவங்களை எழுதறீக .. நாங்க அருளாளர்களோட அனுபவங்களை சொல்லி இருக்கிறோம் ..

  இன்னொன்னு நாம சொன்னா யாரு னா ? எஏத்துக்கிறா ? அதனாலே அவங்க சொன்னதை சொல்லிக்கிட்டே எங்க கருத்துக்களை அதுலே கலந்துடறோம் .. அவ்வளவே .. ரொம்ப நன்றி தங்கள் பின் ஊட்டத்திற்கு,

   S Murugesan said:
   April 15, 2011 at 4:50 am

   ஜானகி ராமன்!
   அருளாளர்களோட அனுபவங்கள் அந்நியமாக தோன்றும்.உங்க அனுபவங்களை நீங்க சொன்னா அடடே ஜானகி ராமனுக்கு நடந்தது எனக்கும் நடக்கும்போல இருக்கேன்னு சனம் சீக்கிரம் களத்துல குதிப்பாய்ங்க.

  டவுசர் பாண்டி said:
  April 15, 2011 at 5:00 am

  நைனா சூப்பர்.
  த்ரில்லிங்+சஸ்பென்ஸ் பதிவு. துர்கைன்னு சொன்ன ஒடனே என்க்கு மண்டைல ஒன்னு டிஸ்ப்ளே ஆச்சி.

  இன்னான்னா, இது தில்லு துரைகளுக்கு மட்டுந்தேன். மத்தவுக குறிப்பா புள்ளக்குட்டிக்காரவுக கண்டிப்பாக செய்யாதீங்கோ. விருச்சிக ராசிக்காரவுக கவனம்பா.

  அப்பால நம்ம கைல சண்டைக்கு வந்துராதீங்கோ. சண்ட போடுறதுக்கும் நம்மள்ட்ட தெம்பு கடியாது. அடி வாங்கித்தேன் பழக்கம். ஒங்க சாதகத்த ஒருதாட்டி நல்லா பாத்துட்டு அப்பால ஆரம்பிங்கோ. வெற்றி ஒங்களுக்குத்தேன். அதுல சந்தேகம் கடியாது. மந்திரத்தை மொதல்ல சொல்லிர்றேன்.

  ” ஓம் ஹ்ரீம் பகவதி உச்சிஷ்ட சாமுண்டி வீரமாகாளி பைரவ ரம்ரம் டம்டம் ணம் ணம் மாராய் மராய் உச்சாடை உச்சாடா ஹரீம் ஹும்பட் ஸ்வாஹா ”

  இதுதேன் அந்த பலான மந்திரம் (கரீட்டா ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழிதிருக்கேன்). இந்த மந்திரத்த சூரியனும் சந்திரனும் ஒரே வூட்டுக்குள இருக்குற நேரம் ஆரம்பிச்சீங்கன்னா நல்லாருக்கும்.

  இத ஏழு நாள் ஆயிரத்தெட்டு தட உச்சரிச்சி உரு ஏத்தணும். உரு ஏறுதா எறங்குதான்னு பாக்காதீக. ஆட்டமேட்டிக்கா அம்புட்டு வேலையும் நடக்கும். நான் கேரண்டி.

  பாக்கப்போன இத சுடுகாட்டுல குந்திக்கினு, ஒரு மண்ட ஒட்ட கழுவி அதுக்கு பயபக்தியோட பூச பண்ணி அப்புறந்தேன் சொல்லணும்நு ஒரு சாமி சொன்னாக.

  நமக்கு சுடுகாடு, மண்ட ஓடுன்னா பயம். அதன் வூட்டு மொட்டமாடில குந்திக்குனு, ருத்ராட்ச மாலய (ஒரிஜினல் கடியாது, கோயில்ல வாங்குனதுதேன்) வெளிய தல்லாம (ஆசாபாசங்கள தொரக்குரவுகதேன் வெளிய) உள்ள இழுத்து கவுண்டிங் ஸ்டார்ட் பண்ணுவேன். மொத்தம் ஏழு நாளு. இது மிட்நைட் சமாச்சாரங்க்ரதால ஒரே மாதிரியே அதாவது இன்னிக்கு பன்னெண்டு மணின்னா நாளைக்கும் அதே டைம்ல ஆரம்பிக்கணும்.

  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேக் ரவுண்ட் மீசிக் கேக்கும். டிடிஎஸ் சவுண்டுல்லாம் கேட்டா, ஆருடா இந்நேரத்துல மீசிக் கம்போஸ் பன்றாகன்னு கண்ண தொரந்துராதீக. ஒங்க வேலை தொடர்ச்சியா இருக்கணும். மனசுல போகப்போக வேகம் ஆட்டமேட்டிக்கா (கரண்ட் சாக் அடிச்சவங்கனக்கா) ஏறும்.

  கண்ட்ரோல் பண்ணிக்கணும். கவனம் மந்திரத்துல மட்டுந்தேன் இருக்கணும். இதனோட பலன வெறும் உயிரெழுத்து மெய்யேளுத்துல அடக்கிற முடியாது. அப்புறம் பாருங்க வெளாட்ட. தயவுசெஞ்சி தப்பான வேலைக்கு யூஸ் பன்னான்தீன்கப்பா. இத நீங்க சொல்லனும்னு நெனச்சீங்கன்ன, மொதல்ல ஒங்களுக்கு நெரிய தடைகள் வரும்.

  வாழ்வா சாவான்னு நெஞ்சுல ஒரு தில்லோட (கடைசிவர இருக்கோணும்) ஆரம்பிங்க. நமக்கு ஏழு நாள்ளாம் தாங்காதுன்னு சொன்னீங்கன்னா ஒரே நாள்ல சொல்றது இருக்கு அது கந்த சஷ்டி மாதிரி ரொம்ப நீளமா இருக்கும். அதும் பவர்புல்தான். எல்லாமே பவர்புல்தான்.(நீங்களுந்தேன்). சரிப்பா,

  கரண்டு கட்டுக்கு பயந்து சட்டுன்னு முச்சிர்றேன்.

   kandhan said:
   April 15, 2011 at 5:20 am

   “விருச்சிக ராசிக்காரவுக கவனம்பா.” என்ன இப்பிடி சொல்லிடீங்க பாண்டி. நம்மளுக்கு அதுதான். ஆனா அஞ்சுல ராஹுனால துர்கைய வழிபட்டா நல்லதுன்னு நினைச்சேன். ஏப்ரல் 21 குக்கு அப்பறம் நம்ம ஜாதகததான் தல கிட்ட மொதல்ல காட்டனும்போல.

    டவுசர் பாண்டி said:
    April 15, 2011 at 5:31 am

    ஆஹா, என்க்கு சோசிய ஞானம் கொஞ்சகாண்டுதேன் . ஒங்களுக்கு எதுனாச்சி டவுட்டு இருந்திச்சின்னா நைனாட்ட கேட்டுக்கோங்க. நா அம்பேல். எந்த ராசிக்காரவுகநாளும் செயங்கோ (இதுன்னுள்ள எதுன்னாலும்). சாமியத்தான பாக்கப்போரீக, அதுக்கெதுக்கு ராசி, கீசி ஒங்க முக ராசிக்கி எல்லாம் கைராசிதேன்.

    kandhan said:
    April 15, 2011 at 5:59 am

    பாண்டி, அந்த ஒரே நாள்ல சொல்ற நீளாமான மந்திரம் கொஞ்சம் நம்ம emailலுக்கு அனுப்ப முடியுமா? kandhan.t@gmail.com. ஒரு நாள்ல சொல்றது எத்தனை தடவை சொல்லணும்?

    S Murugesan said:
    April 15, 2011 at 7:44 am

    கந்தன்,
    ஒரு மந்திரத்தை ஒரு லட்சம் தடவை சொன்னாத்தான் மந்திர சித்தி அதாவது மந்திரத்தை சொல்ற தகுதி ஏற்படும்னு ஒரு விதி இருக்கு.

    இத்தீனி தபா சொல்றச்ச ஒரு தபாவாச்சும் மனசு
    ‘ நிக்காதா” ” நின்னுராதா”ங்கற நம்பிக்கையில தான் இந்த விதி ஏற்படுத்தப்பட்டிருக்கு.

    ஆனாலும் நீங்க இவ்ளோ சுரு(குறு)க்கு வழியெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது.

    டவுசர் பாண்டி said:
    April 15, 2011 at 10:25 am

    கந்தண்ணா,
    இன்னாங்ணா இப்புடி புசுக்குன்னு கேட்டுட்டீங்கோ. நம்ம பேட்டைல ரிஸ்க்கு எடுக்குறத ரஸ்க்கு மாறி நெனைக்குரவுகலுக்குத்தேன் அட்மிசனுங்ணா. நா கொஞ்சம் சாதாரணமா “அடத்தூ இம்புட்டுதானா” அப்டின்னு சொல்ற மாறி கிறுக்கிட்டேங்க்ணா. அதேன் ஒங்களுக்கு இந்த மாறி டவுட்டு வந்துட்டுணா. நீங்க கேட்டதுல தப்பில்லீங்க்ணா. கொஞ்சம் பில்டப்போட கிறுக்கிருந்தேன்ணா நீங்க இப்புடி கேட்ருக்க மாட்டீங்க்னா. உள்ளார எறங்கி பாருங்ணா. ஏழாவ்து நாளு ஈரக்கொல நடுங்குற மாறி நெரிய பூச்சாண்டி வேலைலாம் நடக்குன்னு சொன்னா ஆராச்சும் நம்ம பேட்டைக்கு வருவாகளா? அதேன் மொதல்லையே தில்லுதுரைகளுக்கு மட்டும்னு சொல்லிருக்கேனுங்க்ணா. இந்த மந்திரம் சாபநிவர்த்தி பெற்றதுங்க்ணா. நேரங்கெடச்சா இங்கன http://www.youtube.com/watch?v=3o7-r20Mgqs ஒருதாட்டி வந்துட்டு போங்ணா.

    S Murugesan said:
    April 15, 2011 at 7:49 am

    கந்தன் !
    அஞ்சுல ராகு இருக்கும்போது துர்கைய வழிபட்டா போதாது. அஞ்சுன்னா புத்தி. ராகுன்னா துர்கை. உங்க புத்தியில துர்கையை ” நிக்க ” வைக்கனும். ஐ மீன் தியானம் (உருவத்தை கற்பனை செய்தா போதுங்கோ)

    kandhan said:
    April 15, 2011 at 11:21 am

    “http://www.youtube.com/watch?v=3o7-r20Mgqs ” 🙂 🙂 எப்படி நம்ம ஜம்பு?

    “டவுட்டு வந்துட்டுணா”- டவுட்டு இல்லிங்க பாண்டி. நாமளும் 5 -6 மாசமா நமக்கு தெரிஞ்சத முனுமுனுத்துகிட்டு இருக்கோம். டிவி சீரியல் மாதிரி ஓடிக்கிட்டு இருக்கு. நீங்க DTS ரேஞ்சுக்கு இருக்கும்னு சொன்னதுனால கொஞ்சம் சபலம் தட்டிரிச்சு. பேய் படமா? வாணாம். ஏதாவது Super Good Films மாதிரி இருந்த சொல்லுங்க.

    டவுசர் பாண்டி said:
    April 15, 2011 at 1:36 pm

    கந்தன்நே, இன்னாங்க்ணா, இதுக்கெல்லாம் ஜகா வாங்கலாமாணா? இதெல்லாம் நமக்கு யூசாகனும்னுதேன் சித்தர்களும் முனிவர்களும் அந்த காலத்லையே கிறுக்கி வச்சிட்டு போயிட்டாங்ணா.. இதமாரி நெரிய கொட்டிக் கெடக்குங்ணா. நாம பொறுக்க வேண்டியதாங்ணா பாக்கி. மத்தவங்க சொல்லறாங்க, அதனால நானும் சொல்றேன்னு (மந்திரத்தை) சொல்லாதீன்ங்ணா. ஒங்களால நிச்சயம் முடியுங்க்ணா. அப்புறம் ஒங்க இஷ்டங்க்ணா. சும்மா இருந்தீங்ணா இங்கன http://www.youtube.com/watch?v=-RnKHzUbkQQ வந்துட்டு போங்ணா.

    kandhan said:
    April 15, 2011 at 3:07 pm

    “http://www.youtube.com/watch?v=-RnKHzUbkQQ ” பான்டி, ஊக்கதிற்க்கு நன்றி. விதிமுறைகள் ஏதும்?

    அந்த நெலா நெலா சோரு பத்தி ஒரு விஷயம். வெள்ளகாரன் 50 வருஷமா மண்டைய ஒடச்சி ராக்கெட் விட்டு நெலால தண்ணி இருக்குங்ற விஷயத்த கண்டுபிடுச்சிட்டதா பேத்திகிரானெ அத நம்ம ரிஷிமுனி கண்ண மூடிகிட்டெ சொல்லிடாங்களெ:http://www.youtube.com/watch?v=hKE38CBc3rs

  kandhan said:
  April 15, 2011 at 5:23 am

  இதை படிச்சதும் ஒன்னு தான் தோணிச்சு: “There’s a divinity that shapes our ends/Rough hew them how we will- Shakespeare “.

  ராஜா said:
  April 15, 2011 at 12:18 pm

  ஒவ்வொரு பகுதியிலையும்(1 – 5 ) விறுவிறுப்பு கூடுதுங்கோ

  ஏம்ப்பா டவுசர் பாண்டி .. ஆனாலும் உனக்கு ரொம்ப லொள்ளுப்பா … உன் மூஞ்சி தெரியலேனாலும் அந்த சத்யராஜாவே உன்னை உருவகிச்சிட்டேன் போ…

  நானும் நீ சொன்ன யூ ட்யூப் போய் பார்த்தா… டவுசர் கழண்டுடிச்சி ..
  கந்தன் அண்ணாச்சி எப்படி மண்டை காஞ்சாரோ ?

  ஆனா நீ தேர்ந்தெடுத்த பஞ்ச் சூப்பருப்பா…

  இதனாலேதான் தமிழ்நாட்டை பார்த்து வேர்ல்டே நடுங்குது .. உண்மைதாம்ப்பா

  அப்புறம் , இன்னொன்னு சொல்லியிருக்கியேபா,

  //முடியும் நினைச்சதாலே தான் தாமஸ் ஆல்வா எடிசன் கரண்ட் கண்டுபிடிச்சாருன்னு .. ‘//

  பாவம்ப்பா எடிசன் இருந்திருந்தார்னா … நம்ப தமிழ்நாட்டை பார்த்து நாண்டுக்கிட்டிருப்பாரு…

  சத்தியமானா இந்த கமெண்ட் ஐ – 3 தடவை எழுதி பப்ளிஷ் பண்றதுக்குள்ளே 3 தடவை கரண்ட் போயிடுச்சுப்பா ..

  டவுசர் சார்,

  ” ஓம் ஹ்ரீம் பகவதி உச்சிஷ்ட சாமுண்டி வீரமாகாளி பைரவ ரம்ரம் டம்டம் ணம் ணம் மாராய் மராய் உச்சாடை உச்சாடா ஹரீம் ஹும்பட் ஸ்வாஹா ”

  இது பற்றிய விபரத்தை இன்னும் தெளிவாக சொல்லியிருந்தால், அதவாது இதனால் எந்தவகையான இலாபம் னு தெரிஞ்சா நாங்க பின்பற்றலாமா ? வேண்டாமான்னு முடிவு பண்ணலாமே ?

  சொல்றீகளா ?

   kandhan said:
   April 15, 2011 at 3:12 pm

   ஆமாங்க பாண்டி. விதிமுறைகள் ஏதும் இருக்கானு ஏற்கனவெ கேட்ருகென்.

    டவுசர் பாண்டி said:
    April 15, 2011 at 3:36 pm

    நம்ம அம்மாவ பாக்க என்ன விதிமுற வேண்டிக்கெடக்கு. கோயிலுக்கு அம்மாவ தரிசனம் பண்ண போச்சில எப்டி இருப்பீகளோ அதே போதும். அதுக்கு மின்னாடி மூச்சு பயிற்சி செஞ்சிட்டு பொறவு கும்பக பயிற்சி (நல்லா சர்வீஸ் ஆனவுக மட்டுந்தேன்) செய்ங்கோ. நவத்துவாரமும் கவா கவாங்கும். கடைசில கு……….வ (நைனா குண்டின்னு சொல்லக்கூடாதுன்னு சொல்லிருக்காக. சொன்னா சாமி கண்ண குத்துமாம்.அதேன் சார்ட்டா சொல்லிருக்கேன்.) குதிகாலால அடைச்சிட்டு ரெண்டு கட்ட வெரலால காதையும், ஆள்காட்டி வெரலால ரெண்டு கண்ணையும், அடுத்த வெரலால மூக்கு, அடுத்து வாய் இப்படி மூடிட்டு உள்ள கேக்குற சவுண்ட கேட்டுக்கிட்டு இருங்கோ. இந்த பாட்ட http://www.youtube.com/watch?v=U_AO9YS8-_E&feature=related நல்லா ஒரு தடைக்கு ரெண்டு தட கேட்டு மனச ரிலாக்ஸா வச்சிட்டு ஆரம்பிங்கோ.

   டவுசர் பாண்டி said:
   April 15, 2011 at 3:43 pm

   மொதல்ல ஒடம்பு சுத்தம் (குளியல்), பொறவு உள்ளுறுப்புகள் சுத்தம் (பிராணயாமா), பொறவு தியானம் (மன அமைதி). அப்புறம் கவுண்டிங் ஸ்டார்ட்.

    kandhan said:
    April 15, 2011 at 3:49 pm

    ஏங்க பாண்டி இத நள்ளிரவுல தான் பண்ணனுமா. இல்ல, தெனைக்கும் ஒரெ நெரத்தல் பண்ணனும் ங்றதுகாக் அப்டி சொன்னிகளா.

    டவுசர் பாண்டி said:
    April 16, 2011 at 7:15 am

    ஆமாங்க்ணா இது நல்லிரவுதானுங்கோ செய்யோணும். ஏன்னா இந்த மாறி வேலைலாம் நைட்டுதாங்கோ செய்யனும். அதும் இந்த சாமின்னா டவுட்டே வரகூடாது. நோ பகல் ஒன்லி மிட்னைட். நைட்டு இந்த மாறி வேல பண்றதே தனி டேஸ்ட்டு. ஊரே அடங்கி போயிருக்கும். இல்லே நா பகல்லேதேன் செய்வேன்னு அடம்புடிக்காதீங்க்னா. ஒரு சுடுகாட்டுல குந்திக்கினு செபம் பண்ற மாறி பீலிங்கோட செய்யணும். அதுக்குதேன் அந்த அம்மன் பாட்ட நல்லா கேட்டுட்டு போதை (அந்த போதை இல்லீங்க்ணா) ஏத்திக்கிட்டு ஆரம்பிக்கோணும். இது தில்லு துரைகளுக்கு மட்டுந்தேன்.

    kandhan said:
    April 16, 2011 at 7:26 am

    ரொம்ப‌ ந‌ன்றி பா.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s