அவன்-அவள்-அது :4

Posted on

அவன் என்றாலும், அவள் என்றாலும் ,அது என்றாலும் மூன்று வார்த்தையும் ஒரே கேரக்டரைத்தான் குறிக்குது. ஒவ்வொரு ரஜினி ரசிகனோட பாடி லேங்குவேஜ், பார்வை, பிஹேவியர்ல ஒரு சதவீதமாவது ரஜினியோட ஜாடை தெரியறாப்ல நம்ம எல்லாருக்குள்ளயும் அந்த கேரக்டர் கொஞ்சம் போல தெரியுது.

நான் மொதல்ல அவள்னு தான் இந்த தொடர்பதிவுக்கு டைட்டில் வச்சேன். அது என் ஆண்மனத்தோட எஃபெக்ட். எல்லாமே ஒன்னுதானு புரிஞ்சாலும் அவள்னு சொல்றதுலதான் ஒரு குஜிலி. கடந்த பதிவுல எங்கன விட்டேன்?

ஆங்.. மந்திரம் -உச்சாடனம். ஓஷோ சொல்வாரு.. ஒரு மனிதன் ஞானம் எய்தினால் அவனோட வாழ்க்கையில எடிட்டர் டேபிள்ள துண்டு பிலிம் மாதிரி தொடர்பற்று கிடந்த எல்லா மேட்டரும் எடிட்டட் ஃபிலிம் மாதிரி ஆயிருமாம். நம்ம லைஃப்லயும் அப்படித்தான் ஆச்சு. மந்திரத்தை ஜெபிக்க ஜெபிக்க அம்மன் பிசினஸ்ல சின்னவயசுலருந்து என்னெல்லாம் கேள்விப்பட்டிருப்பமோ மொத்தம் ஞா வந்துர ஆரம்பிச்சிருச்சு. ஞாபகம் வந்ததையெல்லாம் அப்ளை பண்ற வாய்ப்பும் ஏற்பட ஆரம்பிச்சது.

அப்போ நாம குடியிருந்த வீடு தெற்கு பார்த்த வீடு. வடக்கே ஆறு. (ஆக்யுரேட்டா சொன்னா ட்ரெய்னேஜ்) வீட்டுலருந்து வெளிய வந்து நின்னா லாங் ஷாட்ல சூலம் தெரியும். நம்ம போர்ஷனுக்குள்ள ஒரு தண்ணி தொட்டி. ஏரியா டவுனை விட்டு கொஞ்சம் தள்ளி இருந்ததால வழியில பச்சை தெரியும். சாலையின் ஒரு பக்கத்திலயாவது மரம் தெரியும்.

பழைய மேட்டர் எல்லாம் ஞா வந்ததுனு சொன்னேனே ..அதை எல்லாம் அப்ளை பண்ண ஆரம்பிச்சென். மொதல் ஆட் ஆன். மஞ்ச தண்ணி . ஒரு மாசம் ஏதும் பிரச்சினை இல்லை. அப்பாறம் ஆரம்பிச்சது ஆத்தாளோட லீலைகள். ம.த வைக்க தாமதமானாலோ அ வைக்க மறந்துட்டாலோ பயங்கர பல்பு வாங்க வேண்டி வந்துரும்.

இன்னைக்கு ஒரு ஆயிரம் ரூபா தேறிரும்னு புறப்பட்டா கடைசி பீடி கூட செலவழிஞ்சு வீடு திரும்பவேண்டி வந்துரும்.பயங்கர கோவம் வரும். ரத்த காயம் ஏற்படும். நெருக்கத்துல கத்திக்குத்தெல்லாம் பார்க்க வேண்டி வந்துரும்.

எப்படியோ ஒரு நாள் பொறி தட்டி நாம வெளிய வரணும்னா நெத்தியில சந்தனபொட்டு கியாரண்டி இருக்கனும். அதனால ஆத்தாளுக்கு வைக்கிற (புது) மஞ்ச தண்ணிய விட்டுத்தான் சந்தனம் குழைக்கிறதுன்னு ஒரு புது விதியை ஏற்படுத்திக்கிட்டேன். ( வீட்டம்மா ரெம்ப சுறுசுறுப்புங்கோ)

அப்பாறம் கோவம்,ரத்தக்களறி எல்லாம் அவாய்ட் ஆயிருச்சு. கொஞ்ச நாள் கழிச்சு வீட்டு சமையல்ல பயங்கர காரம். நம்ம சாதி மொதலியார் சாதியா இருந்தாலும் உணவுப்பழக்கம்லாம் அய்யர் வீடு மாதிரி தான் இருக்கும் (மனைவி மகள் தவிர) . மேலும் பொஞ்சாதி மேலுக்காச்சும் நமக்கு பயந்து நடக்கிற சாதி. ஒரு நாள் திட்டு.மறு நாள் பயங்கர அர்ச்சனை. ஒரு நா தட்டு வீச்சு எல்லாம் நடந்தும் காரத்துல மட்டும் குறைவில்லை.

நம்முதுதான் கடக லக்னமாச்சே சந்திரன் நல்லாருந்தா நாள்ள படக்குனு ஸ்பார்க் ஆச்சு. ஆத்தாளுக்கு வச்ச மஞ்ச தண்ணிய ஒரு துளி வாய்ல விட்டு பார்த்தேன். தாளி காரம் மண்டைக்கேறுது.அடடா இதானா மேட்டருன்னு மஞ்சள் தூளை பொட்டலமா வாங்காம சாஷேல வாங்க ஆரம்பிச்சோம். ( மொளகா அரைச்ச மெஷின்ல அப்படியே மஞ்சளை போட்டு அரைச்சிருக்கானுவ)

மந்திர உச்சாடனம் மட்டும் நிக்கலை. அதுபாட்டுக்கு ஒரு ட்ராக்ல ஓடிக்கிட்டே இருக்கு. கூடவே தினசரி வேப்பிலைய கிள்ளி பையில வச்சுக்கறது, வெள்ளிக்கிழமையான ரெண்டு எலுமிச்சம்பழம் வாங்கி பையில போட்டு வச்சிக்கிறது. இப்படி சாங்கியங்களோட நெம்பர் ஏறிட்டே போகுது.

இந்த பதிவுல மந்திரம் மந்திரம்னு திருப்பதி கணக்கா சொல்லிட்டிருக்கேன். பேட்டைக்கு புதுசா வந்தவுக திணறுவிங்க. அந்த மந்திரம் வருமாறு: ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் வஷக் வஷக் வஷக். இதுல ஹ்ரீம்ங்கறது புவனேஸ்வரி பீஜம். இவிகளை மதர் ஆஃப் காட்ஸ்னு சொல்றாய்ங்க.

வயசு 16. வாலைச்சிறுமி போன்ற தோற்றம். ரெசிடன்ஸ் : மணி த்வீபம் (தீவு) – பாலபீடத்துல -ஸ்ரீசக்கரத்து மையத்துல இருப்பாய்ங்கனு கேள்வி.

தேவிபாகவதம்னு ஒரு தலையணை சைஸ் புஸ்தவம். அதுல இன்னம் கவைக்குதவாத நிறைய மேட்டர்லாம் கொடுத்திருந்தாய்ங்க. நாம தான் அன்னப்பறவையோட கசின் ப்ரதராச்சே. நமக்கு தேவையானதை மட்டும் எடுத்துக்கிட்டம்.

அதுல ஒரு பாய்ண்ட் ரெம்ப பிடிச்சிருந்தது. அதாவது மேற்படி புவனேசிய தவிர மத்த தேவர்கள், மூவர்கள் ஆரும் நிரந்தரமில்லை. ஒவ்வொரு யுகம் முடியும்போதும் புவனேசி அல்லாரையும் ஒழிச்சு கட்டிட்டு புதுசா படைப்பாய்ங்க. அம்மாவோட அந்தப்புரத்துக்கு போகனும்னா சிவனாரே தகவல் சொல்லி அனுமதி கிடைச்சாத்தான் போகமுடியும்னா பார்த்துக்கங்க.

ஆனா முன் அனுமதி இல்லாம நினைச்ச நேரத்துல அம்மாக்கிட்டே போய் பேசிட்டி வர்ர அதிகாரம் ரெண்டே பேருக்குத்தேன் உண்டு. அதுல ஒருத்தரு சுகர் ( கிளி மூக்கோட ஒரு ரிஷி – நாடி ஜோசிய விளம்பரங்கள்ள பார்த்திருப்பிங்க) இன்னொருத்தரு…டட்டடாய்ங்க்.. வேற யாரு நம்ம பாஸ்தான்.ஆஞ்சனேயரு.

மத்தபடி பெருசா பீத்திக்கிற துர்கை,சண்டி,பார்வதினு உள்ள அம்மனுக்கெல்லாம் என்ன ரோல்னு கேளுங்க. அவிகல்லாம் புவனேசியோட தோழிகளாம். அப்பாறம் உங்க ஊரு ஆத்தா,எங்க ஊரு ஆத்தால்லாம் வேணா சொன்னா அடிக்க வருவிக. புஸ்தவத்துல உள்ளதை சொன்னேன்.அம்புட்டுதேன்.

மேலும் சில மாசம் கழிஞ்ச பிற்பாடு வீட்லருந்து போறச்ச, திரும்பி வரச்ச மரத்துல உள்ள கிளிகள் ( நெஜமாலுமே இருந்துச்சுப்பா -இப்ப இருக்கோ இல்லியோ -காக்காயையே காணோம் -கிளிங்க எங்க இருக்கப்போவ்து) வரான் பாரு வரான் பாரு – போறான் பாரு போறான் பாருன்னு ஒன்னுக்கொண்ணு கம்யூனிக்கேட் பண்ணிக்கறாப்ல கத்த ஆரம்பிச்சுரும்.

நாமதான் பெரியார் சிஷ்யனாச்சே.அப்படியே ஓரங்கட்டிக்கிட்டு வேற ஆருனா போறச்ச கூட கத்துதான்னு நிதானிச்சு பார்ப்பேன்..பே பே..

அப்படியே சிலிர்த்துப்போயிரும். அடடா.. ஆத்தாளோட அந்தப்புறத்துக்குள்ள முன் அனுமதியில்லாத நுழையற சுக மகரிஷியோட மறு உருவங்கள் ரெஸ்பாண்ட் ஆறதுன்னு தமாசான்னுட்டு பொங்கிப்போயிருவன். ஈது இப்படியிருக்க ஒரு நா ஒரு கிளி நம்ம பூஜை ஸ்டாண்டுலயே வந்து கேம்ப் அடிச்சுருச்சுங்கோ.. அந்த கூத்தை அடுத்த பதிவுல சொல்றேன்..

மந்திரோபதேசம் நடந்தது 2000, டிசம்பர் 23 ஆம் தேதி. 20/Sep/2000 => முதல் 20/Mar/2002 வரை சந்திர தசையில ராகு புக்தி நடக்குது. சூரியன் சிவனை, சந்திரன் அவர் மனைவியை குறிக்கும் கிரகங்கள். ரெண்டு பேரும் பரிவர்த்தனம். சந்திரன் லக்னாதிபதியாகி வாக்கில். ராகு பத்தில் அவருக்கு சமசப்தகத்தில் கேது 4 ல் (பூர்வ புண்ணியாதிபதியான செவ்வாயோடு சேர்ந்து )

4ங்கறது வித்யா ஸ்தானம். கேதுங்கறவர் ஞான காரகன். தியானம்,யோகம் மந்திரம் இத்யாதிக்கு காரகர்.ராகுன்னாலும் துர்கை தான். எது எப்படியோ .. 1986 ல ராம நாமத்துல துவங்கின சாதனை 2000 டிசம்பர் 23 ஆம் தேதி ஒரு யு டர்ன் எடுத்து ட்ராக்ல கொண்டு போய் சேர்த்துருச்சு.

ராமா- வுக்கும் ஆத்தாளுக்கும் என்ன தொடர்பு தெரியுமா?

ஹரா என்றால் சிவன். உமா என்றால் ஆத்தா. ஹராவிலான கடைசி எழுத்தையும் ( ரா) உமாவிலான கடைசி எழுத்தையும் ( மா) கொண்டு உருவானதே ராமா எனும் நாமம் ( இதை நாம சொல்லலிங்கண்ணா ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்றாரு.

இன்னொரு விதி என்ன சொல்லுதுன்னா ஒருத்தன் முக்தி பெற (முழு மூச்சா ட்ரை பண்ணால்) 3 பிறவிகள் தேவையாம். ஒரு பிறவி முழுக்க ராம நாமம் சொன்னால் அடுத்த பிறவில பஞ்சாட்சரியை (ஓம் நமசிவாய) ஜெபிக்கிற தகுதி ஏற்படுமாம். ரெண்டாவது பிறவி முழுக்க பஞ்சாட்சரி ஜெபிச்சாத்தேன் சாக்தேயம் சாத்தியப்படுமாம்.

மூன்று பிறவிகள் தேவைப்படும் ஒரு ப்ராசைசை ஒரே பிறவில கம்ப்ளீட் பண்ண (?) வச்சிருக்கான்னா ஆத்தா எம்மாம் பெரிய ஏமாந்த சோனகிரியா இருக்கனும்? கொஞ்சம் போல சின்சியாரிட்டி,கொஞ்சம் நம்பிக்கை, கொஞ்சம் பிடிவாதம், கொஞ்சம் சென்சிட்டிவிடி, கொஞ்சமே கொஞ்சம் நன்றி உணர்விருந்தா போதும் இந்த ரூட்டு சூப்பர் ஹிட்டு..

(தொடரும்)

8 thoughts on “அவன்-அவள்-அது :4

    ( வில்லங்கம் ஈஸ் மை சீக்ரெட் ஆஃப் ஹிட்ஸ்).

    ஒத்துக்கிறேன் .. ஒத்துக்கிறேன் ..
    பலகாலம் பிளாகர் நடத்துறவங்களோட அனுபவம் இப்படித்தான் இருக்கு…

    மக்களை ஈர்க்கின்ற மாதிரியான தலைப்போ அல்லது சொற்றொடரே தேவை என்பதை உணர்கிறேன்.. நல்லது தொடருங்கள் உங்க சீக்ரெட் ஐ..

    ( வில்லங்கம் ஈஸ் சீக்ரெட் ஆஃப் யுவர் எனர்ஜி..)

    kandhan said:
    April 14, 2011 at 2:10 pm

    இந்த மஞ்ச தண்ணி வைகிறது அப்டினா என்ன தல?

    பொதுவா அஞ்ஜ தான மந்திர ஸ்தானம் நு சொல்றாங்க. இல்ல பஞ்ஜமாதிபதி யொட சம்பந்தம் மட்டும் இருந்தா பொதுமா? ஒருதருக்கு எந்த மந்திரம் ஆன்மீக வெற்றியை குடுக்கும் நு எப்பிடி சொல்றது.

    “தினசரி வேப்பிலைய கிள்ளி பையில வச்சுக்கறது, வெள்ளிக்கிழமையான ரெண்டு எலுமிச்சம்பழம் வாங்கி பையில போட்டு வச்சிக்கிறது.” இது எதுக்கு?

      S Murugesan said:
      April 14, 2011 at 4:19 pm

      கந்தன்!
      காதல்லயும்,பக்திலயும் நீங்க என்ன செய்யறிங்கங்கறது முக்கியமில்லை.எந்த உணர்வோட செய்யறிங்கங்கறதுதான் முக்கியம். எந்தளவுக்கு பித்தா இருந்தேங்கறதுக்கு உதாரணமா இந்த மேட்டரை எல்லாம் சொன்னேன்.

      ஒரு பெரியம்மாவை வீட்ல அழைச்சு தங்க வச்சா அவிக தாவத்துக்கு குடிக்க ஒரு செம்பு தண்ணி எடுத்து பக்கத்துல வைக்கமாட்டோமா அந்த மாதிரிதேன். மத்தபடி மஞ்ச தண்ணியே ஏன் வைக்கனும்னா அது கேள்வியறிவுதேன். வேப்பிலை ,எலுமிச்சையெல்லாமும் அப்படித்தேன்

      ஆரு எந்த மந்திரத்தை ஜெபிக்கலாம்னு ஒரு தனிப்பதிவே போட்டிருக்கேனே ..தேடிப்பாருங்க

    அண்ணாச்சி…

    பிறவிகள் பத்தி எங்க சிவயசிவ ( பிளாகர் ) வில் ஒரு கட்டுரை எழுதியிருக்கேன் …

    ” பிறவிப் பெருங்கடலும் மானிடப் பிறவியும் ”

    முடிஞ்சா படிச்சு பாருங்க..

    நீங்களும் தான் தோழர்களே …படிச்சுட்டு சொல்லுங்க…

    பிறவியை அறிய …http://sivaayasivaa.blogspot.com/2011/04/blog-post_09.html

    நன்றி…

      S Murugesan said:
      April 14, 2011 at 4:24 pm

      ஜானகி ராமன் !
      //ஆக ஒரு உயிரானது, கிட்டத்தட்ட எண்பத்தி நான்கு இலட்சம் முறை பிறக்க வேண்டும்,
      அதுபோலவே எண்பத்தி நான்கு இலட்சம் முறை இறக்க வேண்டும்//

      ஏங்க இப்படி பீதிய கிளப்பறிங்க. ஆனா ஒன்னு ஏன் என்ற கேள்வியே இல்லாம வாழ்ந்தா 84 லட்சம் X 84 லட்சம் பிறவி எடுத்தாலும் வேஸ்டுதேன்.. ஆனால் கொஞ்சமே கொஞ்சம் கேள்வியோட வாழ்ந்தா அப்ப புரியும்..

      ஒவ்வொரு எண்ணம் பிறக்கும்போது மன்சன் புச்சா பொறக்கறான். அந்த எண்ணம் அழியும் போது சாகிறான்

    டவுசர் பாண்டி said:
    April 14, 2011 at 5:24 pm

     கத திரில்லிங்கா இருக்குபா. என்க்கு இந்த மாரி மந்திர மேட்டருன்னா ரொம்ப உசுரு. அது வுட்ட கொறயோ வுடாத கொறயோ. அடுத்த பாகத்த படிக்க ஆசயா இருக்கோம்

    வினோத் said:
    April 15, 2011 at 6:15 am

    தல .. அமா டவுசர் பாண்டி சொன்ன மாதிரி அடுத்த பாகத்தை படிக்க ஆசையா இருக்கு..
    பேசாம தினமும் 1 பாகம் போடுறதுக்கு பதில் காலை மதியம் மாலை இரவுன்னு 4 பாகம் போடுங்களேன்..

      S Murugesan said:
      April 15, 2011 at 7:41 am

      வினோத் ஜீ,
      ஒரு பதிவுக்கே நாக்கு தள்ளுது.. ஏதோ ஏப்ரல் 21 வரை ஆன் லைன் ஜோதிட ஆலோசனைக்கு ஹவுஸ் ஃபுல் போர்ட் மாட்டினதால ஒரு பதிவாச்சும் சாத்தியமாகுது. ஹேவ் எ ஹார்ட் பாஸ்!

Leave a reply to வினோத் Cancel reply