அவன்-அவள்-அது :3

Posted on

அண்ணே வணக்கம்ணே,(அப்பாடா சலாம் போட்டாச்சு – என்ன டவுசரு கரீட்டா)

அவள்ங்கற தலைப்புல ஒரு தொடரை ஆரம்பிச்சது ஞா இருக்கலாம். அவள்னா ஆருன்னு கேட்கறிங்கன்னா நீங்க பேட்டைக்கு புதுசுனு அர்த்தம். நீங்க கீழே உள்ள முதல் ரெண்டு அத்யாயங்களை ஒரு ஓட்டு ஒட்டிட்டு வந்துர்ரது பெஸ்ட்..

அவன்-அவள்-அது : 1

அவன்-அவள்-அது :2

என்ன படிச்சாச்சா.. அடங்கோ இது என்னமோ ஏ.பி.நாகராஜன் ஆதிபராசக்தி சினிமால கிளைக்கதை மாதிரி இருக்கேன்னு சப்புனு போயிருச்சா? இதை படிக்கிறதால என்ன லாபம்னு தோணுதா?

அவளை சக்திங்கறது வழக்கு.” சக்தி இருந்தா செய்.. இல்லாட்டி சிவனேன்னு கிட” னுட்டு கேள்விப்பட்டிருப்பிங்க. நீங்க வாழ்க்கையில எதையாவது சாதிக்கனும்னு நினைக்கிற சாதியா இருந்தா சக்தி ஸ்வரூபிணியான அவளை பத்தி தெரிஞ்சுக்கிட்டே ஆகனும். அவளை நினைச்சே ஆகனும். அவளை தெரிஞ்சிக்க தெரிஞ்சிக்க புரிஞ்சிக்க புரிஞ்சிக்க யத் பாவம் தத் பவதிங்கற மாதிரி உங்களுக்குள்ள சக்தி ஊற்றெடுக்கும்.

அந்த சக்தி வெறுமனே செலவாயி எக்ஸாஸ்ட் ஆயிர்ர சக்தியில்லே. உலகத்தையே உங்க பக்கம் ஈர்த்துவிடக்கூடிய ஆகர்ஷண சக்தி.

உலகத்துல உள்ள சக்தியையெல்லாம் ஆராச்சும் அ எதுவாச்சும் ஸ்விட்ச் ஆன் பண்ணா தான் இயங்கும். ஆனால் தன்னை தானே ஸ்விட்ச் ஆன் பண்ணிக்கிட்டு இயங்கற சக்தி அவள் ஒருத்திக்குத்தான் உண்டு.

அவள் எனக்குள் கருக்கொண்டு – உருக்கொண்டு பிறந்து – தளிர் நடை இட்டு – வளர்ந்து பெரியவளாகி – இன்று வேலை கொடு வேலை கொடுன்னு என்னை பிச்சு பிடுங்கறா. பெரிய வேலையா கொடுத்து வச்சிருக்கன். அது எந்தளவு மெட்டீரியலைஸ் ஆகுதுன்னு போக போகத்தான் தெரியும்.

அவள் எப்படி தன்னைஎனக்கு அறிமுகப்படுத்தினா(ள்), எப்படி கருக்கொண்டா(ள்)ங்கற மேட்டரையெல்லாம் ஒளிவு மறைவில்லாம இந்த தொடர்ல வெளிப்படுத்த இருக்கேன். ஆருக்கெல்லாம் அவள் கடன் பட்டிருக்காளோ அவிகளுக்கெல்லாம் இந்த தொடர் தரிசனமளிக்கும். கரிசனமா ஒரு ரூட் மேப்பை கொடுக்கும். இந்த பதிவுல நான் ஒன்னும் சம்பவங்களை,அற்புதங்களை பட்டியலிடப்போறதா இல்லை. வேணம்னா இது ஒரு வித ஸ்ருதி கூட்டல்னு வச்சுக்கங்க.

அவள் அவள்னு பினாத்தறே. அவள் எங்கன இருக்கானு இரண்யன் மாதிரி ஆராச்சும் கேட்கலாம்.

அவளை சந்திரமண்டல வாசினிங்கறாய்ங்க. த பார்ரா அப்ப நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனுக்கு போனச்ச அவளை மீட் பண்ணியிருக்கனுமேனு நக்கலடிப்பாய்ங்க. அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு. ஆகாயத்துல உள்ள சூரிய சந்திரர்கள் நம்ம பாடிலயும் இருக்காய்ங்க. ஆணோட உடல்ல வலது பக்கத்தை சூரியன். இடதுபாகத்துல சந்திரன் ரூல் பண்றதா ஒரு விதி இருக்கு.

சிவசக்தி, சிவசங்கரினு அர்த்தனாரிங்கறாய்ங்களே அதெல்லாம் ஆரோ ஒரு சிவனை குறிக்கிறது மட்டுமில்லை. இந்த சீவர்களையும் குறிக்குது.

நம்முது மேல் சேவனிஸ்ட் சொசைட்டிங்கறதால / சிவனை ஆணா உருவகிச்சதால ஆத்தாள லெஃப்ட்ல ஃபிட் பண்ணிட்டாய்ங்க.இதுவே பெண்ணோட உடல்ல இடது சிவனாவும் ,வலது சக்தியாவும் இருக்கும்ல. அதை ஏன் எக்சிபிட் பண்றதில்லைனா அதான் மேல்சேவனிசம்.

சீன பராம்பரியத்துல யிங் -யாங்னு சொல்றாய்ங்க. எலக்ட்ரானிக்ஸ்ல பாசிட்டிவ் நெகட்டிவ்
ங்கறாய்ங்க.மொத்தத்துல ரெண்டு ஃபேக்டர்ஸ் இருக்கு.நம்முது கடகலக்னமாச்சா அதிபதி சந்திரங்கறதால லெஃப்ட் ரெம்ப எஃபெக்டிவா வேலை செய்துருச்சு போல.

ஒவ்வொரு ஆணிலும்,ஒவ்வொரு பெண்ணிலும் சிவசக்திகள் இருக்காய்ங்க. ஒவ்வொரு ஆணும் சிவன் தான். என்ன இடகலை பிங்கலையில நடக்கிற ஸ்வாசம் சூக்ஷ்ம்ணாவுக்கு பைபாஸ் ஆகனும். குண்டலி விழிக்கனும். இரு புருவங்களுக்கிடையில உள்ள ஆக்னா சக்கரத்துல போய் முட்டிக்கிட்டு நெற்றிக்கண் திறக்கனும். திறந்தா எல்லாரும் சிவம் தான். திறக்கலேன்னா……………சந்தேகமென்ன சவம்தேன்.

ஓஷோ இந்த ஆக்னாவை பத்தி ஒரு மேட்டர் சொல்வாரு. இது ஆக்டிவேட் ஆகாத பார்ட்டி ஏதோ ஒரு மேட்டருக்கு அடிமையாவே இருப்பானாம். எத்தனாம் பெரிய பொசிஷன்ல உள்ள விவிஐபி நிலைமையெல்லாம் கூட இதுதானே.

ஆக்னா ஆக்டிவேட் ஆனா கிடைக்கிற மொதல் பரிசு சுதந்திரம். சரி இந்த பதிவு ரெம்பவே உபதேச மஞ்சரி கணக்கா போயிருச்சு மேட்டருக்கு வந்துர்ரன்.இதை ஒரு முன் கதை சுருக்கம் மாதிரி வச்சுக்கங்க பாஸு!

நாம வாணியம்பாடியில வசிச்ச சமயம் பாய் ஒருத்தர் நம்ம மேல ஜின்னை ( தேவதை) ஏவினது -அது பூட்டின அறைக்குள்ளாற வந்து தட்டி எழுப்பினது ஒரு அத்யாயத்துல ஆரம்பிச்சேன். ( அந்தரத்துல விட்டாச்சு) பாய் என்னமோ அசால்ட்டா ” நீங்க எதுக்கு பிறந்திங்களோ அதை நோக்கின பயணம் ஆரம்பிச்சுரும்”னு சொல்ட்டாரு.

சித்தூர் திரும்பியாச்சு. வேற ஒரு க்ரூப் டச் ஆச்சு. அவிக உலகமெல்லாம் மந்திரங்கள் வியாபிச்சு இருந்தது. நான் கிண்டலா கேட்டேன்.பைசா வர ஒரு மந்திரம் சொல்லுங்கப்பு.

சொன்னாய்ங்க.விவரம் பத்தாத டாக்டர் கண்டமேனிக்கு ப்ரிஸ்க்ரிப்ஷன் எழுதறாப்ல அவிக சொன்ன மந்திரம் வெறுமனே பைசாவுக்கு பதிலா ஆல் இன் ஆல் அழகுராசா கணக்கா அமைஞ்சு போச்சு.பெருசா வேலை வெட்டியில்லாத காரணத்தால ஃபுல் டைமா மந்திர உச்சாடணம்,பார்ட் டைமா ஜோதிடம்னு காலம் ஓட ஆரம்பிச்சது. ( 23/12/2000). அதுக்கப்பாறம் நடந்த விட்டலாசார்யா மேட்டர்லாம் அடுத்த பதிவுகளில் தொடரும்..

6 thoughts on “அவன்-அவள்-அது :3

  ராஜா said:
  April 13, 2011 at 12:59 am

  காலை வணக்கம், அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்கின்றேன்

  //சிவனை ஆணா உருவகிச்சதால ஆத்தாள லெஃப்ட்ல ஃபிட் பண்ணிட்டாய்ங்க.இதுவே பெண்ணோட உடல்ல இடது சிவனாவும் ,வலது சக்தியாவும் இருக்கும்ல. அதை ஏன் எக்சிபிட் பண்றதில்லைனா அதான் மேல்சேவனிசம்.//

  சார் இந்த இடம் சரின்னு எனக்கு தோணலை … உடலுக்குத் தான் ஆண் பெண் என்கிற பேதமே தவிர – உயிருக்கு இல்லை

  //ஆணோட உடல்ல வலது பக்கத்தை சூரியன். இடதுபாகத்துல சந்திரன் ரூல் பண்றதா ஒரு விதி இருக்கு.//

  ஆக சூரிய அம்சமான கடினமான பகுதி வலது பாகமாகவும்,
  சந்திர அம்சமான மென்மையான பகுதி இடது பாகமாகவும்
  கருதப்பட்டது …

  ஆகவேதான் நமது முன்னோர்கள் பெண்களுக்கு இடது பாகம் எனக் குறித்தார்களே தவிர ஆணாதிக்கம் அல்ல என்பது அடியவனுடைய கருத்து.

  ஆமா அண்ணாச்சி நாங்க கேட்டது என்னாச்சு ?

   S Murugesan said:
   April 13, 2011 at 4:32 am

   ஜானகி ராமன் !
   எதையாச்சும் வில்லங்கமா சொன்னாத்தேன் அல்லாரும் என்ன ஏதுன்னு பார்ப்பாய்ங்க ( வில்லங்கம் ஈஸ் மை சீக்ரெட் ஆஃப் ஹிட்ஸ்).

   நீங்க கேட்டது.. பதிவு? லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரும். ஜா.ப.? ஏப்ரல் 21 க்குள்ள வந்தே உடும்.

  kandhan said:
  April 13, 2011 at 7:53 am

  .” சக்தி இருந்தா செய்.. இல்லாட்டி சிவனேன்னு கிட” அருமை.

  ஆர்வத்தை கிளப்பீடீங்க. இணைய தளம் இப்போ ரொம்ப அருமையா இருக்கு.

  டவுசர் பாண்டி said:
  April 14, 2011 at 5:34 pm

   நைனா, ஒன்னோட கதய படிக்கும்போது ஹனுமத்தாசன் ஸ்டோரியும் ப்ளாஸ் ஆகுதுபா. ஆனா அவாள் ரொம்ப பூஜபுனச்காரம்லாம் செய்வாராம். அப்பத்தேன் அவிகளுக்கு ப்ளாஷ் நியூஸ் டிச்ப்லே ஆகுமாம். இன்னாப்பா நீ செப்புத்தகடு பத்தி எதுனாச்சும் சொல்லேன்

   S Murugesan said:
   April 14, 2011 at 6:28 pm

   டவுசர் பாண்டி,
   மக்கள் சேவையே மகேசன் சேவை – நெஞ்சம் ஆலயம் நினைவே தேவதைங்கறது நம்ம ஃபிலாசஃபி மட்டுமில்லை. ஒர்க் அவுட்டும் ஆகியிருக்கில்லை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s