தேர்தல் நாள்: மாறும் ஜோதிட கணிப்பு

Posted on

தேர்தல் 2011, ஏப்ரல் 13 , காலை எட்டுமணிக்கு ஆரம்பம். உயிர் எண் 4 அதிபதி ராகு. அம்மா ஜாதகத்துல ராகு 11 ல கீறாரு. வெஸ்டர்ன் டான்ஸ், சினிமா பெர்ஃபார்மென்ஸுனு தாளிச்சவுக அம்மா. இதுக்கெல்லாம் உதவி ராகுதேன். பிரிச்சு பாருங்க தேதிய கூட்டினாலும் 4 வருது, மாசமும் 4 , வருசமும் 4 . ஆக எண் கணிதப்படி இது ராகுவோட ஆதிக்கத்துல உள்ள நாள். ராகு அம்மாவுக்கு அனுகூலம்.

தாத்தா ஜாதகத்துல ராகு கேது 2,8ல இருக்காய்ங்க. இது மொதல் ஆப்பு.கூட்டு எண் 3 இதுக்கு காரகர் குரு. குரு+ராகு சம்பந்தம் ஏற்பட்ட போது (உயிர் எண் 4 + கூட்டு எண் 3) குரு டம்மியாகி ராகுதான் வீரியத்தோடவேலை செய்வாரு. இந்த குரு தாத்தாவுக்கு 50:50.

நட்சத்திரத்தை பாருங்க: ஆயில்யம். அம்மாவுது மகம். இது அதிமித்ர தாரா.9 ங்கறது தீர்த்தயாத்திரை,க்ஷேத்திராடனம், தூர தேசங்கள், நீண்ட சுற்றுப்பயணங்களை காட்டற இடம், முதல்வர் பதவி கிடைச்சா எங்கெல்லாம் போயி நேர்த்திக்கடன் செலுத்தனுமே தெரியலை. ( நமக்கு ஒரு 25000 காசு ) தாத்தாவுக்கு மிருகசீர்ஷம் . இது 4ஆவது நட்சத்திரம். 4ங்கறது க்ஷேம தாரா . வீட்டை காட்டற நெம்பர்.

இந்த நேரத்துக்கு ரிஷபலக்னம் கடகராசி வருது ( தாத்தாவோட லக்னம் கடகம், ராசி ரிஷபம். ஆக நாம தேர்தல் துவங்கும் நேரத்தை அனலைஸ் பண்றதும் – தாத்தாவோட கோசார பலனை (ரிஷபராசி) அனலைஸ் பண்றதும் ஒன்னுதேன்.

2-8 ல் கேது ராகு:
இதை பாப கத்திரியோகம்னுவாய்ங்க. கைக்கெட்டினது வாய்க்கெட்டாம போச்சுங்கறாய்ங்களே அந்த மாதிரியில்லை. (இது சந்திர காரகம்) ராகுவும் கேதுவும் தட்டிப்பறிச்சுருவாய்ங்க ( எதை? ஆட்சியைத்தேன்) மூன்றாவது இடத்துல சந்திரன் வளர்பிறை சந்திரங்கறதால பேதியாகும். உடன் பிறப்புகளுக்கும் தேன். 9,10 க்கு அதிபதியான சனி அஞ்சுல நின்னாரு. இது யோகம் தேன். ஆனால் சனிங்கறதால யோகம் எட்டுவாரம் கழிச்சோ – எட்டுமாசம் கழிச்சோத்தான் கிடைக்கும் ( அம்மா அதுக்குள்ள மறுபடி அலப்பறைய ஆரம்பிச்சுரமாட்டாய்ங்களா தாத்தாவுக்கு கை நிறைய /வாய் நிறைய வேலை )

மேலும் அஞ்சுங்கறது பேர் புகழை காட்டற இடம் .அங்கன சனி நின்னா அவப்பேர் ,அவமானம் தேன் வரணும். மேலும் இது வாரிசுகளை காட்டற இடம் அவிக காலொடிஞ்ச மாதிரி வீட்டோட இருக்கனும். (குறைஞ்ச பட்சம் ஜூன் 12 வரை அதிகபட்சம் டிசம்பர் 12 வரை – அப்பாறம் அ அதற்குள்ளே அம்மா தன் கச்சேரிய ஆரம்பிச்சிருப்பாய்ங்க – மக்கள் மத்தியில எதிர்ப்பு ஆரம்பிச்சிருக்கும் – தாத்தா அண்ட் கோ தர்ணா அது இதுன்னு ரோட்டுக்கு வரலாம்)

10 ல் சுக்கிரன். சுக்கிரன்னா கலைகள். பத்துல சுக்கிரன் இருக்கிறதால தாத்தா பொஞ்சாதி ,பிள்ளைகளோட டைம் பாஸ் பண்ணனும் . புதுசா ஒரு 6 படத்துக்கு வசனம் எழுதனும் அல்லது மானாட மயிலாட ப்ரோக்ராமுக்கு புதுசா கான்செப்ட் ரெடி பண்ணனும்.

சாதாரணமா லக்னாதிபதி பத்துல நின்னா சூப்பருதேன்.ஆனால் இங்கன சுக்கிரனாச்சே அதான் ரிவர்ஸுல ரிசல்ட்.

லாபஸ்தானத்தை பாருங்க ஹவுஸ்ஃபுல்லா இருக்கு. விவரம் புரியாதவுக அடடா இதைவிட வெற்றிக்கு வேறென்ன தேவைனு நினைச்சுருவாய்ங்க.

இன்னாடா மேட்டருன்னா இங்கன சூரியன் நின்னாரு. இவரு 4 க்கு அதிபதி. 4ன்னா வீடு . வீட்டுக்குள்ளே சூரிய கதிர்கள் விழனும்.(அய்யய்யோ அப்ப செல் கூட கிடையாதா? ஓப்பன் ஏர்ல வெய்ட்டிங்ல போடுவாய்ங்களோ?)

4-11 சம்பந்தப்பட்டா ரெண்டு வீட்லயும் தூக்கம் கெடனும். ஆன்மாவுல விழிப்பு வரனும். ( ஆடிய ஆட்டம் என்ன?னு ரோசிக்க ஆரம்பிச்சாலே ஆன்மாவுல விழிப்பு வரும்ல )

2/5 க்கு அதிபதியான புதன் இங்கன நின்னாரு. பேச்சாலயும், வியூகத்தாலயும் லாபம் நடக்கனும். நடக்குமா? நடக்காது ஏன்னா இங்கன விரயாதிபதியான செவ்வாயும் நின்னாரு

இவர் ரிசபலக்னத்துக்கு 7 க்கு அதிபதி .. அந்த வீடு இந்த வீடு முட்டிக்கிட்டு நின்ன காலம் வேற .இப்ப ரெண்டுமே தாத்தாவை தாங்கி பிடிக்கனும் ( அது எப்ப நடக்கும்? பல்பு வாங்கினாத்தானே).

அதே செவ்வாய்க்கு விரயாதிபத்யமும் இருக்கு. ஆக கிடைக்கும்னு நினைச்சதுல பேர் பாதி விரயமா போயிரப்போகுது.

இதெல்லாம் ஒரு பக்கம்னா தாளி அஷ்டமாதிபத்யம் பெற்ற குருவும் இங்கனயே நின்னாரு.. நம்ம கணக்குல மிஸ்டேக் இருந்து 11 ல இருக்கிற ஏதாவது ஒரு கிரகம் ஏதாவது ஒரு வகையில நல்லதை செய்யற வாய்ப்பிருந்தாலும் அஷ்டமாதிபதியோட சேர்க்கை அந்த வாய்ப்புக்கெல்லாம் காயடிச்சுருது.

ஆக தேர்தல் துவங்கும் நேரமும் கலைஞருக்கு ஆப்பாத்தான் அமைஞ்சிருக்கு.

அம்மாவோட சிம்ம ராசிக்கும் பார்த்துருவம்;

எட்டாமிடம் ஹவுஸ்ஃபுல். சூரிய,செவ்,புத,குரு பெரிய கூட்டணியா போட்டு உட்கார்ந்தாச்சு. ஆண் ஜாதகத்துல எட்டு ஆயுள் ஸ்தானத்தை காட்டும்.பெண் ஜாதகத்துல? அது மாங்கல்ய ஸ்தானம்.

1.ராசியாதிபதியே இங்க உட்கார்ந்ததால கை,கால் எலும்பு ,முதுகெலும்பு எல்லாம் “விட்டு” போயிரனும். கண் மேல இமைய பொட முடியாத அளவுக்கு பிசியாயிரனும்

2. நான்கு, 9க்கு அதிபதியான செவ் இங்கே உட்கார்ந்தாரு. நாலுன்னா வீடு ,சுகஸ்தானம் இவர் எட்டுல மறைஞ்சதால நாயடி படனும் ( முதல்வர் பதவின்னா சொம்மாவா)

3.ரெண்டு,11 க்கு அதிபதியான புதன் 8 ல மறைஞ்சதால கொடுத்த வாக்கை நிறைவேற்ற , சுயலாபம் மறந்து செயல்படற வாய்ப்பு கூட இருக்குங்கோ . உ.பி சகோதிரி கோச்சுக்கிட்டு போயிட்டாலும் போயிரலாம்.

4.அஞ்சுக்கு மற்றும் மாங்கல்ய ஸ்தானத்துக்கு அதிபதியான குரு இங்கனயே ஆட்சி அதனால பூர்வ புண்ணியங்கள் காரணமா அரசு பணத்தை செலவிடக்கூடிய அதிகாரம் கிடைக்கலாம். ( வயிறு ,இதயம் தொடர்பான கோளாறுகள் வரலாம் – ஏற்கெனவே இருந்தா அதிகமாகலாம்)

5.ராசிக்கு ரெண்டுல சனி : பஞ்சப்பாட்டு பாடனும் (அதான் தாத்தா கஜானாவை காலியாக்கி -அரசாங்கத்தையே கடனாளியாக்கிட்டு போயிரப்போறாரே.

6.அஞ்சுல ராகு : கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாம ( பட்ஜெட் எகிறாது?) அவமானப்படனும்

7.ஏழுல சுக்கிரன் : இத்தனை நாள் அனுபவிச்ச ரெஸ்ட் ,சுகம் எல்லாம் ஃபணால்

8.பதினொன்றில் கேது : ஞானம் வரும் .எப்ப வரும்? நெருக்கமானவுகளை பிரிஞ்சா அ அவிக இவிகளுக்கு எதிரா திரும்பினா வரும்

9. பனிரண்டில் சந்திரன்: காகித ஓடம் கடலலை மேலே பொவது போன்ற நிலையில்லாத வாழ்க்கை ( கூட்டணி ஆட்சியாச்சே -அதுவும் விஜயகாந்தை நம்பின்னா கேட்கவே மானாம் – ஏதோ அம்மா ஜாதகத்துல ராகு 11 ல இருக்கிறதால – தேர்தல் நாளே ராகுவோட ஆதிக்கத்துல இருக்கிறதால ஒரு விதவையோட துணையோட ஆட்சி அமைக்க முடிஞ்சா பெட்டரா இருக்கும். பார்ப்போம்.

Advertisements

30 thoughts on “தேர்தல் நாள்: மாறும் ஜோதிட கணிப்பு

  கிருமி said:
  April 11, 2011 at 3:36 pm

  // 2-8 ல் கேது ராகு: இதை பாப கத்திரியோகம்னுவாய்ங்க.//

  அண்ணே, புரியலையே. ஏதாவது ஒரு பாவம் இரு பாப கிரகங்களுக்கு மத்தியில மாட்டினா அந்த பாவத்தின் காரகம் பாதிக்கப்படும், இதான் பாவ‌கத்திரி பத்தி பொதுவா சொல்றது. பாதிக்கப்படற பாவம் ஒரு மறைவு ஸ்தானமா இருந்து அது பாதிக்கப்பட்டா ஒரு மாதிரி பலன் இருக்கும், (கெட்டவன் கெட்டாங்கற மாதிரி) சில சமயங்கள்ள விபரீத யோகம் மாதிரி பாப கத்திரி செயல்படுது. இரண்டு பக்கமும் இருக்கற அசுபர்களின் நிலையும் அந்த பாவத்தை அதுக்கேத்தா மாதிரி பாதிக்குது. ஒரு குறிப்பிட்ட கிரகம் இரண்டு அசுபர்களுக்கு மத்தியில மாட்டினாலும் அந்த கிரகம் குறிப்பிடற காரகத்துவங்கள் பெரும் மாறுதலுக்கு உள்ளாறதை அனுபவத்துல காணலாம். அந்த கிரகம் கத்திரி யோகத்துல மாட்டிருது.

  தாத்தா ஜாதகத்துல பாவகர்த்தாரில மாட்டியிருக்கது மூணாம் பாவம் தானே? இது படி பாத்தா அவர் கண்டிப்பா ஒரு கோழையா இருக்க வாய்ப்பு அதிகம். என்ன பெரிய சூரரு வீரருன்னாலும், உள்ள தொடை நடுங்கியா இருப்பாரு. மூணாம் பாவம் குறிக்கிற, கடிதம் எழுதறது, கதை கவிதை எழுதறது இதயெல்லாம் வச்சி ஊரை ஏமாத்திக்கினு கீறாரு.

   S Murugesan said:
   April 11, 2011 at 4:54 pm

   கிருமி சார்,

   ராகு கேதுக்கு இடையில சிக்கின கிரகமெல்லாம் டம்மியாயிரும்னு ஒரு ரூல் இருக்கு. இதன்பலனா 45 வயசுக்கு மேலதான் முன்னேற்றமே இருக்கும்னு ஒரு விதி. (காலசர்ப்ப தோஷம்) ஆனால் ராகு கேதுக்களுக்கிடையில் சிக்காது ஒரு கிரகம் வெளிப்பட்டிருநதாலும் கா.ச.தோ பங்கமாயிருதுங்கறாய்ங்க.

   இதன் பொருள் என்னன்னா அப்படி வெளிப்பட்ட கிரகத்தோட தசை 45 வயசுக்குள்ள வந்தா ஜாதகர் அந்த தசாகாலத்துல உருப்பட்டுருவார்.

   அந்த விதிப்படி பார்த்தா சனி,குரு,செவ் எல்லாமே டப்பாஸுதேன். பலன்: வேலைக்காரவுக எல்லாம் “ரெம்ப நல்லவுகளா” இருக்காய்ங்க, குரு – நூலாம்படையெல்லாம் கறப்பதை கறந்துக்கிட்டு போய்யா பொங்கின்னுட்டு போயிர்ராய்ங்க – செவ் – அப்பப்போ போலீஸ் இவர் கதையில நுழைஞ்சிருது -போதாக்குறைக்கு விபத்துக்கள்,தாக்குதல்கள் வேற

   ராகு கேது இடையில இருக்கிற கிரகங்கள் எப்படி போனாலும் ராகு கேது மட்டும் ஆப்படிக்கிறது கியாரண்டி. தேர்தல் நாளே ராகுவோட ஆதிக்கத்துல இருக்கிறதை மறந்துராதிங்க

    Name said:
    April 11, 2011 at 6:49 pm

    முருகேசன் சார்,
    ((இதன் பொருள் என்னன்னா அப்படி வெளிப்பட்ட கிரகத்தோட தசை 45 வயசுக்குள்ள வந்தா ஜாதகர் அந்த தசாகாலத்துல உருப்பட்டுருவார்)) – அப்படி வராமல் 45 வயசுக்கு அப்புறம் வந்தால்???

    S Murugesan said:
    April 11, 2011 at 7:25 pm

    நேம் அவர்களே,
    45 வயசுக்கப்பாறம் வந்தா அப்பாறம் உருப்படப்போறாரு அம்புட்டுதேன்.

    kalyan said:
    April 11, 2011 at 7:28 pm

    வழக்கமா பின்னூட்டும் போடும்போது என்னோட பெயர் அதில் இருக்கும், இன்னிக்கி என்னவோ “நேம்” அப்படின்னு வந்திருக்குது. அந்த நேம் வேறே யாரும் இல்லை, நானேதான்…!!!!

    S Murugesan said:
    April 11, 2011 at 7:38 pm

    வாங்க கல்யாண்,
    தங்கள் வரவு நல்வரவாகுக.

  டவுசர் பாண்டி said:
  April 11, 2011 at 5:18 pm

  ஏம்ப்பாமுருகேசு, கொஞ்சம் இங்கன http://www.youtube.com/index?desktop_uri=%2F&gl=US#/watch?xl=xl_blazer&v=CZcQ7dk1Vss வந்துட்டு போப்பா. இன்னாப்பா நடக்குது. மனுசன் பேதியாக வச்சிட்டாரே. ஒன்னத்தான் நம்பிருக்கேன்ப்பு. 

  டவுசர் பாண்டி said:
  April 11, 2011 at 6:22 pm

  படம் ஷோக்கா இருக்கு நைனா. ராகுதேன் மானத்த காப்பாத்துவாரு போல ( சத்தியமா நா படத்ல உள்ள ராகுவ சொல்லலீன்கோ). தமிழ் நாட்டு மானத்த சொன்னேன். யூ டியூப்புல astrologer on jayalalitha victory நு குடுத்தா ஒடன பேதியாக்குதுப்பா. ஶ்ரீரங்கத்ல உல்ல இவ்ரு எழ்துன புக்கு நெரிய படிச்சிருக்கேன்பா. குரிப்பா, மன்சன்க்கு சங்கூதுர சவுண்டு கேக்ற நேரம் பத்ன கட்ரல்லாம் பட்சிருக்கேன். ஒரு வேல தலிவர்ட்ட கிலுமா வான்கிருப்பாரோ. என்னமோப்பா, ஒன்னத்தேன் நம்பிருக்கோம். 

   S Murugesan said:
   April 11, 2011 at 7:34 pm

   டவுசர் பாண்டி,
   இங்க எங்காளுங்க ஏழுமலையானுக்கே வாஸ்து சொல்லி தூள் பண்ணிக்கிட்டிருக்காய்ங்க.” வ்ருத்த வைத்ய பால ஜோதிஷ”ன்னு ஒரு பழமொழி இருக்கு.

   வைத்தியனை தேடினா கிழவாடியா தேடனுமாம். (எக்ஸ்பீரியன்ஸ் இருக்கும்ல) ஜோசியனை தேடினா யூத்தா தேடனுமாம் (அப்பத்தேன் தில்லு துரை கணக்கா உண்மைய கொட்டுவான்)

   நம்ம சொத்தே தில்லுதேன்.. நம்ம தில்லுக்கு பின்னாலே மஸ்தா தில்லாலங்கடிவேலைல்லாம் கீதுபா.. கவலைப்படாதே..

  R.Puratchimani said:
  April 11, 2011 at 6:43 pm

  பாசு நல்ல அலசல். சிலரு ல்கனத்த வச்சிகூட கோச்சாரம் பாக்கலாம் அப்படின்க்ராங்கலே உங்கள் கருத்து.

   S Murugesan said:
   April 11, 2011 at 7:30 pm

   புரட்சிமணி,
   இந்த கேள்விக்கு ஏற்கெனவே ஆருக்கோ பதில் சொன்னாப்ல ஞா. லக்னம் உடம்பை காட்டுது. ராசி மனசை காட்டுது. உடலோட விருபத்துக்கு ஆடறவன் லக்னத்தை பார்க்கனும், மன திருப்திக்காக வேலை செய்யறவன் ராசியை பார்க்கனும்

  டவுசர் பாண்டி said:
  April 11, 2011 at 6:44 pm

  இன்னாப்பா நீ சலாம் (அண்ணே வணக்கம்னே) போடாம எழுதிக்னுக்ற. நீ இப்ப வர வர, புச்சா செந்டமிழ புளிஞ்சி புளிஞ்சி எழிதிக்னுகிறியா, அதேன் கொழம்பிட்டோம். சரி அத்த வுடு. காலசர்ப்பம்னு சொல்லிக்கினு 45 வய்சுனு சொல்லிக்கிற. இன்னாத்துக்கு கேக்குறென்னா, நானும் காலசர்ப்பம் கேசுதேன். செலவுக 35ங்காக. இன்னொருத்தர் இன்னாடான்னா சர்வ அஷ்டவர்க்கத்ல லக்னத்ல உள்ள பரலுங்ராக. கொயப்புரியே நைனா. காலசர்ப்ப கேசுங்களுக்கும் செர்ப்பண்டு பவருக்கும் யேதொ லிங்க் உண்டாமெ.

   S Murugesan said:
   April 11, 2011 at 7:29 pm

   டவுசர் பாண்டி,
   ராகு கேதுவுக்கிடையில சிக்காம ஒரு கிரகம் வெளிப்பட்டாலும் சரி அட்லீஸ்ட் ராகு கேதுக்களோட ஒரு கிரகம் சேர்ந்தாலும் சரி தோஷம் பங்கமாயிரும்.

   அப்படியும் ஒரு அமைப்பு இல்லின்னாலும் கவலைப்படாதே சகோதரா.. ராகுன்னா ரகசியம் -கேதுன்னா யோகி. நீங்க குப்த யோகியா மாறிடுங்க. (சீன் போடாம சீக்ரெட்டா சாதனைய தொடர்ரது) கா.ச தோஷம்லாம் காத தூரம் ஓடிப்போயிரும்.

   இதனோட அசலான எஃபெக்ட் சட்டவிரோத செயல்கள்ள ஈடுபட வைக்கிறது தேன். ராகு -கேது அதுமாதிரி கெட்ட ஆட்டத்துக்கு கூப்டா “மாத்தேன்”னுருங்க. ப்ராப்ளம் சால்வ்டு

  R.Puratchimani said:
  April 11, 2011 at 6:52 pm

  //ஏதோ அம்மா ஜாதகத்துல ராகு 11 ல இருக்கிறதால – தேர்தல் நாளே ராகுவோட ஆதிக்கத்துல இருக்கிறதால ஒரு விதவையோட துணையோட ஆட்சி அமைக்க முடிஞ்சா பெட்டரா இருக்கும். பார்ப்போம்.//

  யு மீன் சோனியாஜி?

   S Murugesan said:
   April 11, 2011 at 7:24 pm

   புரட்சிமணி ..
   உங்க கெஸ்ஸிங் கரீட்டு

  swami said:
  April 12, 2011 at 3:37 am

  பால ஜோசியன், விருத்த வைத்தியன். நல்ல பழமொழி. பாலன் என்று ஏன் சொன்னார்கள் என்றால், மெமரி பவர் இளவயதில் அதிகமாக இருக்கும், ஜோசிய விதிகளை மறக்காமல் இருப்பான்
  என்பதற்காக.எப்படியோ சந்தடி சாக்கில் யூத் ஆயிடீங்க.

  சுவாமி

   S Murugesan said:
   April 12, 2011 at 5:13 am

   ஸ்வாமி,
   நான் சொன்னது கம்பேரிட்டிவ்லி. யு ட்யூப் தாத்தாவோட கம்பேர் பண்ணி சொன்னேன். மெமரி பவரை விட தில்லுதான் அதிகமா தேவை துரை!

   S Murugesan said:
   April 12, 2011 at 5:13 am

   ஸ்வாமி,
   நான் சொன்னது கம்பேரிட்டிவ்லி. யு ட்யூப் தாத்தாவோட கம்பேர் பண்ணி சொன்னேன். மெமரி பவரை விட தில்லுதான் அதிகமா தேவை துரை!

  ராஜா said:
  April 12, 2011 at 5:46 am

  தலைவரே, காலை வணக்கம், வெப்துனியா வெப்சைட்ல ( வித்யதரன்னு நெனைக்றேன் பேரு ) ஒரு ஜோசியர் பலன்கள் சொல்லுவாரு, அவரு உட்டாலக்கடியா இல்ல உண்மையான ஆளா தெரில, http://tamil.webdunia.com/religion/astrology/specialpredictions/1104/11/1110411029_1.htm இந்த லின்க்ல அவரு தேர்தல் தேதிய வெச்சு சொல்லிகீறாரு பலன், ஜோதிட சம்பந்தமான விஷயம்லாம் நமக்கு புரில அந்த பதிவுல, மெயின் மேட்டர் என்னன்னா, அதிமுக வரும், மெஜாரிட்டி கெடைக்காது, முதல்வரா வர ஆளுக்கு நோய் வழக்கு வரும், நடுலையே ஆட்சி மாற்றம் வரும்னு சொல்லிகீறாரு, நீங்க கொஞ்சம் நேரம் கெடைக்குரப்ப பாருங்க

   ராஜா said:
   April 13, 2011 at 12:36 am

   வணக்கம், மேற்கூறிய பதிப்பில் ஒருவர் அம்மா ஆட்சி அமைப்பார், ஆனால் நடுவிலேயே ஆட்சி மாற்றம் வரும் என கூறி இருக்கிறார், அதை பற்றி தங்கள் கருத்தை அறிய ஆவலாக இருக்கிறேன், நன்றி

    S Murugesan said:
    April 13, 2011 at 4:36 am

    என்ன ராசா ! கருத்து தானே.. தெரிவிச்சா போச்சு .. சுதேசில “பொறுக்கி எடுத்தாப்ல போட்ட கணிப்புலயே’ அம்மா தலைமையில் கூட்டணீ ஆட்சி – பை எலக்சனுக்கு போனாலும் போவாய்ங்கனு சொல்லியிருக்கேனே

  தனி காட்டு ராஜா said:
  April 12, 2011 at 6:57 am

  //கேதுன்னா யோகி. நீங்க குப்த யோகியா மாறிடுங்க. (சீன் போடாம சீக்ரெட்டா சாதனைய தொடர்ரது) கா.ச தோஷம்லாம் காத தூரம் ஓடிப்போயிரும்.//

  தல ,
  நீங்க எங்கியோ போய்டீங்க….
  நீங்க சொல்லுவது என் அனுபவத்தில் உண்மை…

   S Murugesan said:
   April 12, 2011 at 8:42 am

   வாங்க த.கா. ராசா,
   தேர்தல்ல மட்டும் மறுபடி தாத்தா வந்து உட்கார்ந்துட்டா நெஜமாலுமே எங்கயோ போகத்தான் போறேன். நீங்க வேற பீதிய கிளப்பிக்கிட்டு.

   (இதெல்லாம் ‘அண்டைவெளியின் அகன்ற பாத்திரத்து அமுதத்திலிருந்து அடித்த சாரல் பாஸ் – என்னை ஏன் பாராட்டறிங்க )

  டவுசர் பாண்டி said:
  April 12, 2011 at 9:43 am

  அய்யா ராசாக்களா, தலிவர ரொம்ப ப்ராண்டாதீங்கப்பா. பொறவு ஏதாவது ஏடாகூடமா சொல்லிட்டாருன்னா என்னோட பாடு சங்குதேன். நா வேற எங்கூர்ல தலய பத்தி பெருமையா சொல்லிருக்கேன். இன்னிக்கி காலைல ஒரு புக்கு கடைல புக்கு வாங்கிக்கினு அப்புடியே கண்ண சொழல வுட்டேன். அங்கன தற்செயலா சுதேசி புக்க பாத்தேன். ஆஹா, நம்மூருலயும் கெடைக்குதென்னு நெனச்சிக்கினு, அரியணையில் அரங்க நாயகியை ஏற்கனவே நெட்டுல படிச்சிக்கினு இருந்தாலும் நேருல படிக்க ஆசைப்பட்டு பத்துரூவா குடுத்து அத வாங்கிக்கினு ஊட்டுக்கு போயி அந்த கட்டுரைய நாலு தட மாறி மாறி ஆச தீர படிச்சிட்டு கடைசில தலிவர் போட்டாவ பாத்து ஒரு தாட்டி ஸ்மைல் பண்ணிட்டு, வூட்டுக்கு பக்கத்துல உள்ள அதிமுக கட்சி ஆபிசுக்கு போயி அங்க உள்ள தலிவர்ட்ட இந்த பொஸ்தத்த காட்டி அரியணை மேட்டர படிக்க சொன்னேன். ஒரு தட படிச்ச ஒடனே அவரு வாய்ல உள்ள அம்புட்டு பல்லும் வெளிய வந்துட்டு. சரி அப்புறம், கெளம்புறேன்நு சொல்லி பொஸ்தத்த கேட்டா நாளைக்கு தர்றேன்னு சொல்லிட்டாரு. எப்டியும் நாமந்தேன். ஸ்ரீரங்கம் பார்ட்டி வேற என் கண்ணுல அம்புட்டு பீதிய உண்டாக்குறார். எப்டியோ, நம்ம நைனா எதையும் சாதாரணமா சொள்ளமாட்டாருன்னு உள்மனசு மெச்செஜ் குடுத்திச்சி. நைனா ஒரு டவுட்டு, நியூமராலஜில அம்புட்டு விசியமும் பாக்கலாமா? எங்கூருல ஒருத்தரு இன்னாடான்னா ப்ரோனாலாஜி ரொம்ப பவர்புல்லுங்குறார். பொம்பள புள்ளைங்களுக்கு மனோன்மணி, ராஜேஸ்வரி, பரமேஸ்வரி,………… இந்த மாறி பேர் வைக்க கூடாதுன்குறார். அம்பளைகளுக்கு ஈஸ்வரன், மனோ, …… இப்புடி பேர் வைக்க கூடாதாம். இன்னாத்துக்குன்னு கேட்டா, மனோன்மநின்னு பேரு வச்சா (மனோன்மணி=மேன்+நோ) இப்புடி வெளக்கம் குடுக்குறாரு. பேருகள பார்ட் பார்ட்டா பிரிச்சி (தசா புத்தி மாறி) பொறவு அதுக்கு கட்டம்லாம் கட்டி ரவுண்டு கட்ராறு. ஆம்பளைகளுக்கு பேருல வார்னு வர்ற மாறி வைக்க கூடாதாம். அப்புடி வச்சா சர்ப்ப தோஷம் உள்ளவுக மாதிரி ஒரே சண்டயாத்தேன் போடுவாகலாம்.

   S Murugesan said:
   April 12, 2011 at 12:02 pm

   டவுசர் பாண்டி,
   ஒங்களுக்கு ஒரு ஹோம் ஒர்க். ராசிச்சக்கரம் வரைஞ்சுக்கங்க. உங்க இனிஷியல்ல மொதல் எழுத்துக்குரிய கிரகம் எது அது எந்த ராசியில உச்சமாகுதுன்னு பார்த்து அந்த கிரகத்தை அங்கன போட்டுருங்க. மத்த எழுத்துக்களுக்குரிய கிரகங்களை வரிசையா போட்டுருங்க. இந்த ஜாதகத்தை வச்சு பலன் என்னவா இருக்கும்னு பாருங்க. உங்க அனுபவத்தை சொல்லுங்க.

   நீங்க சொல்ற “கேஸெல்லாம்” பெருசா ப்ரூவ் ஆன மாதிரி தெரியலை. நம்ம சைட்ல ஒரு ஆயிரம் பேரு மெம்பர்ஸா இருந்து அவிகல்லாம் இந்த மாதிரி கேஸ்ல தங்களோட அனுபவங்களை சொன்னா ஒரு ஐடியா வரும்.. அதுவரைக்கும் அவிக காட்ல மழைதேன்.

   பழுதுன்னு தாண்டவும் முடியாது.பாம்புனு மிதிக்கவும் முடியாது

    டவுசர் பாண்டி said:
    April 12, 2011 at 2:33 pm

    ரொம்ப டேங்சுபா. ஏற்கனவே நெரிய கோம் வொருக்கு செஞ்சி செஞ்சி குண்டி கிழிஞ்சி போயி குந்திக்கினுருக்கேன். ஹோம் வொர்க்குன்குற வார்த்தைய கேட்ட ஒடனே ஒன்னு மண்டைக்குள்ள டிஸ்ப்ளே ஆச்சிபா. பன்னண்டாம் வாய்ப்பாடு படிக்கிற காலத்துல வாய்ப்பாட படிக்காமா வாய் போடுறத சொல்லிக்குடுத்து பக்திப்பழமா இருந்த என்ன முத்துன பழமாக்கின நாதாரிகள் தரிசனம் கிடைச்சது. கடகத்துல பாம்புத்தலையும் மகரத்துல பாம்புக்குண்டியும் இருந்தா அந்த பேமானி எந்த லக்னமாருந்தாலும் குரு இல்லாமயே அல்லாத்தையும் கத்துக்குவான்னு படிச்ச மப்புல க்ளட்ச கூட மிதிக்காம ஓவர் ஸ்பீடுல போயி ஆக்சிடென்ட் ஆகி இப்ப ஐசியூல ஒரு கால தூக்கி சலாம் போடுற மாதிரி கெரகம் என்ன ரெஸ்ட் எடுக்க வச்சிட்டு. நம்ம அடுத்த ப்ராஜெக்ட் கூடு உட்டு கூடு. ஒருத்தரு எம்புட்டு தூரத்துல இருந்தாலும் அவிகளுக்கு மெஸ்சேஜ் (செல்லு மூலமா இல்ல, உள்மனசு மூலமா) அனுப்பி அவுகள வேல செய்ய வக்கிறது. இதுக்கு மொதல்ல வானத்துல நம்ம இயற்கை கோள ஏவி வுட்டா, டவரு தெளிவா கெடிககும். ஒரு பேமானி இன்னாடான்னா குரு ஏழுல இருந்தாலோ, தலைல இருந்தாலோ அந்த பார்ட்டிக்கு குரு எப்பவும் தொணையா இருப்பார்னு சொன்னாரு. குரு ஏன் தொணைக்கு நிக்கணும்? ஆட்டத்தான்! (அதாம்பா கிள்ளி வுட்டுட்டு ஆடறதுக்கு, அவர் பொசிசன பொறுத்து ஆட்டுற வேகம் இருக்கும்). ரொம்ப நன்றி நைனா. நீ சொன்னத செஞ்சி பாக்கேன்.

    S Murugesan said:
    April 12, 2011 at 4:12 pm

    டவுசர் பாண்டி,
    ரெம்ப காலத்துக்கப்பாறம் தாய்குலம் எட்டிப்பார்க்கிற மாதிரி இருக்கு. வொக்காபிலரிய லேசா மாத்திக்கிடுங்க ராசா

  வினோத் said:
  April 12, 2011 at 11:32 am

  அல்லாரும் பாருங்கோ…http://anjjamvakuppu.blogspot.com/2011/04/blog-post_09.html

  லக்னாதிபதி இப்படி செய்வாரா?

   S Murugesan said:
   April 12, 2011 at 7:11 pm

   வினோத் ஜீ,
   இந்த பாய்ண்டுக்கு அவர் சூப்பர் மூனை எல்லாம் கூப்பிட வேண்டிய அவசியமே இல்லை. கடகத்துக்கு ரிஷபம் பாதகஸ்தானம்.லக்னாதிபதி மட்டுமில்லை அவிக தாத்தா வந்து அங்கன நின்னாலும் தீமை செய்தே ஆகனும்.

   நம்ம கிருமி கழிவறை வரை போயிருக்காரு. தாத்தா மேட்டர்ல அதெல்லாம் நடக்காதுனு நம்பறேன்

   ( நடந்தாதானே அதெல்லாம் நடக்கும்)

   ஆனால் நீங்க சுட்டின அதை சுட்டில போய் நான் போட்ட கமெண்ட்ல மனம் – நுரையீரல்-சிறு நீரகம் – தொடர்பான பிரச்சினைகள் வரலாம்னு சொல்லி கமெண்ட் போட்டிருக்கேன்.

  கிருமி said:
  April 12, 2011 at 4:17 pm

  //அல்லாரும் பாருங்கோ…http://anjjamvakuppu.blogspot.com/2011/04/blog-post_09.html
  லக்னாதிபதி இப்படி செய்வாரா? //

  லக்கினாதிபதி கொல்வாரா?

  லக்கினாதிபதி கொல்ல மாட்டார், ஆனால் அதற்கு துணை போவார். கருணாநிதி கக்கூசில் வழுக்கி விழுவார், அதற்கு சந்திரன் துணை புரிவார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s