அழகிரி – ஒரு எண்கணித ஆய்வு

Posted on

அண்ணே வணக்கம்ணே,
ஏற்கெனவே கடந்த பதிவுல சொன்னாப்ல ஆஸ்ட்ரோ – நியூமோ – நேமாலஜி அடிப்படையில இந்த கட்டுரைஎழுதறேன். ( வெறும் எண்கணிதத்தை வச்சு அனலைஸ் பண்றவுக சிண்டை பிச்சுக்கவேணாம்)

முதல்ல பெயர் எண்:

M.K.Alagiri ( 18) பெயர் எண்: 9. இதனோட பலனா ஒரு ஆட்டோமேட்டட் பலனை பார்த்தோம். ( அழகிரியை பிடிக்காதவுக கடா வெட்டி விருந்தே வச்சிருப்பாய்ங்க)

இந்த பதிவுல நம்ம அனலைஸை பார்ப்போம். வெறுமனே 9ன்னு திருப்பதி கணக்கா பார்க்கப்படாது. அண்ணன் மேட்டர்ல 1+8 சேர்ந்ததால 9 ஃபார்ம் ஆச்சு.

1 என்பது சூரியன் – 8 என்பது சனி. இதனால அண்ணனுக்கும் ஏறக்குறைய ஸ்டாலினோட நிலைதான். அவருக்கு 1-4 காம்பினேஷன் ( சூரியன் – ராகு) அழகிரி அண்ணனுக்கு ( வயசுல பெரியவருங்கோ) 1- 8 காம்பினேஷன்.இந்த காம்பினேஷன்ல குழந்தைக பிறந்தா டாடிக்கு நல்லதில்லை. அவிகளுக்கும் டாடியோட நல்ல ரிலேஷன் இருக்காது

ராகுவை விட சனி பவர்ஃபுல்ங்கறதால அண்ணன் மதுரைக்கே போயிட்டாரு. ராகு இருட்டுலக ,நிழல் மனிதர்களை, சட்டவிரோத மனிதர்களை காட்டுபவர். இதனால ஸ்டாலின் மேற்படி மனிதர்களால மட்டும் தேன் அப்பப்போ சிக்கல்ல மாட்டறாரு .

ஆனால் சனி அப்படியில்லை அடுப்பூதி,அன்னக்காவடி, திண்ணைத்தூங்கி ,நத்தம், நாடோடி,புறம்போக்கு, அரைடிக்கெட்டு,கால் டிக்கெட்டு, ஃபோர் ட்வென்டி எல்லாரையும் காட்டற கிரகம். இதனாலதான் பாவம் அழகிரி அண்ணனுக்கு வேண்டாத சகவாசம்லாம் அமைஞ்சு அவரை தர்மசங்கடத்துல மாட்டிவிட்டுருது.

1+8 காம்பினேஷன் காரணமா சூரிய காரகம் எல்லாத்துக்கும் ஆப்பாயிருச்சு. உ.ம் அப்பா வனவாசம், அப்பாவுடனேயே அவ்வப்போது உரசல்கள், அப்பாவோட உசரத்தை எட்டிப்பிடிக்க முடியாத நிலை.

சூரிய காரகங்கள்: (சூரியனே சொல்றாருங்கோ)
மொதல்ல என்னோட காரகத்வங்களை பார்ப்போம்.கிழக்குத்திசை, மாணிக்கக்கல், தானம்-கடிகாரம், ஆத்மா- பகல்ல பிறந்தவுகளுக்கு தந்தை, தந்தையுடன் உறவு, தந்தைவழி உறவு, தன்னம்பிக்கை இதற்கெல்லாம் நானே அதிகாரி. பல், எலும்பு, முதுகெலும்பு, வலதுகண், மலைப் பிரதேசங்கள், தலைமைப் பண்புகள், தன்னம்பிக்கை, ப்ராக்டிக்காலிட்டி, மேற்பார்வை, தரக்கட்டுப்பாடு, தாமரைமலர், விளம்பரங்கள், நாளிதழ்கள்,பயன் கருதா பொது நலப்பணிகள்,
இவை யாவும் என் அதிகாரத்துக்குட்பட்டவையே! பித்தளை, திட்டமிட்ட தொடர்ச் சுற்றுப்பயணங்கள், உள்ளூர், ஊராட்சி, நகராட்சி மன்றங்கள், ஒளிவு மறைவற்ற பேச்சு, ஒல்லியானவர்கள், கோரைப்புல் போன்ற தலை முடியுடையவர்கள், கூரையில்லாத வீடு, ஏகபுத்திரன், ஒற்றைத்தலைவலி, எலும்பு முறிவு, தூக்கமின்மை இவையாவும் என் அதிகாரத்தின் கீழ்வருபவையே.

சூரிய சனி சேர்க்கைகாரணமா மேற்சொன்ன காரகங்கள்ள நல்லதெல்லாம் காலி. கெட்டதெல்லாம் கெட்ட ஆட்டம் போடும்.

இந்த நிலை வர சனி காரகங்கள் காரணமா அமையலாம். சனி காரகத்வம் என்னனு இப்ப பாருங்க (சனியே சொல்றாரு)

ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள், கால்கள், பொறுமை, நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் இன மக்கள், தொழிலாளர்கள், இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், மேற்குத்திசை, கருப்பு நிறம் இவற்றிற்கெல்லாம் நானே அதிபதி. சோம்பல், மந்த புத்தி, நரம்புகள், ஆசனம், மரணத் தொடர்பாய் கிடைக்கும் நிவாரணம் இவையும் என் அதிகாரத்தின் கீழ் வருபவையே. க்ளாஸ், போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள், தாமதம், நீண்ட ஆயுள், பிரிவு, துக்கம், அடிமையாதல், சிறைப்படுதல், மலச்சிக்கல் இவற்றிற்கும் நானே அதிகாரி.
குறிப்பு:
அரிசி,பருப்பு,மசாலா எல்லாத்தையும் தந்திருக்கன். கொஞ்சம் போல பொறுமையும் ஆர்வமுமிருந்தா ஆரு வேணம்னா இன்டர் ப்ரிட்டேட் பண்ணலாம். பலன் எந்த அளவுக்கு கன கச்சிதமா பொருந்துதுன்னு பார்க்கலாம் ஐ மீன் காட்டலாம் ( கமெண்டா போடுங்கண்ணா)

இவருக்கு 4,8,7 டோட்டல் வர்ரது போன்ற வயசுகளில் பின்னடைவு ஏற்படும். உ.ம் 22, 26,25 31,35,34 , 40,44,43,
58 ( அண்டர்லைன்)

க்ளோஸ் அப் ஷாட்டை பார்த்தாச்சு. இப்ப ஏரியல் வ்யூல 9 ங்கற நெமப்ரோட பிரபாவத்தை பார்ப்போம். இதுக்குரிய கிரகம் செவ். இவர் யுத்த காரகன் என்பதால் யுத்தம்னா வெல்லம். செவ்வாய்னா நெருப்பு (தினகரன்? ). சகோதர காரகன். ( ஸ்டாலினோட மோதல்)

இவிக லைஃப் எல்லாம் யுத்தமாவே இருக்கும். இவிக வாழ்க்கைய ஒன்பது ஒன்பது வருசமா பிரிங்க. (ரவுண்ட்ஸ்) இதுல 3,6,9 ,10,11 ஆவது ரவுண்ட்ஸுதான் நல்லாருக்கும்.

அடுத்த வருசம் அறுபதை எட்டிப்பிடிக்கப்போறாரு அண்ணன். 9X6=54 நாற்பத்தைந்து முதல் 54 க்குள் பீக் பீரியட் ஆயிருச்சு. அடுத்தது 7 ஆவது ரவுண்டு மேற்சொன்ன அடுப்பூதி முதலான கிராக்கிகளோட சங்காத்தத்தால நாறனும். இது 63 வயசு வரை கன்டின்யூ ஆகும்ங்கறதுதான் சோகம்.

பிறந்த தேதி; 30 -1-1950
உயிர் எண்: 3
குருவின் காரகம் கொண்ட இந்த மூன்றாம் எண் விசித்திரமான அமைப்பை தரும். பக்தி, அரசியல் செல்வாக்கு எல்லாத்தையும் தந்தாலும் வீண் பழியையும் பெற்றுத்தரும். குருவின் காரகம் கொண்ட விஷயங்கள் எல்லாம் எந்த அளவுக்கு கிடைக்குதோ அந்த அளவுக்கு வீண்பழி பெருகும்.

குருவின் காரகங்கள் வருமாறு (குருவே சொல்றாரு)
நான் தங்கம், பைனான்ஸ், அரசியல், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வடகிழக்குத் திசை அகியவற்றிற்கு அதிகாரி, நானே புத்திரக்காரகன், பௌத்திரக்காரகன் (பேரன்கள்), நீதிமன்றம், கரூவூலம், புஷ்பராகம், பிராமணர், சான்றோர், இதயம், வயிறு, ஞாபகசக்தி, புராணம், வேதம், சேவை நிறுவனங்கள், ஆட்சி மொழி, அரசு தரும் வீட்டு வசதி, காசாளர், கண்டக்டர், முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுதல், இது எல்லாம் என் இலாகாவின் கீழ் வருபவை. தட்சிணாமூர்த்தி, சாயிபாபா, ஸ்ரீராகவேந்திரரர் ஆகியோரும் எனது பிரதி ரூபங்களே!

மேலும் இங்கு 3 ஃபார்ம் ஆனது 30 லருந்துதேன். அதனால கடேசில மிச்சமாகபோறது ..அவிக அப்பா போட்ட “எக்” தான். இதுமட்டுமில்லிங்கண்ணா கூட்டு எண்ணை பாருங்க 1. இதுக்கு அதிபதி சூரியன். அதனால குரு காரகத்வம் எல்லாமே அண்ணனோட ஈகோவால நாசமா போயிரும். அந்த கூட்டு எண் எப்படி ஃபார்ம் ஆச்சு பாருங்க : 1+9 = 10 (இதுலயும் கடேசில பூஜ்ஜியம்) 1 என்றால் சூரியன் 9 என்றால் செவ்.
கோசாரத்துலயே சூரியன் செவ் சேர்க்கை பயங்கர தீவிபத்துக்களை ஏற்படுத்தும்னா பலன் எப்படி இருக்கும்னு ரோசிங்க.

சந்தேகம்:
வழக்கமா நாம போடற கவைக்குதவாத பதிவுக்கெல்லாம் கமெண்டு தூள் பறக்குமே.. ஸ்டாலின் -அழகிரி மேட்டர்ல மட்டும் அது ஏன் ஆப்சென்ட்? ஒரு வேளை உதை வாங்க ஆள் தேடறான்யானு கண்டுக்கிட்டாய்ங்களோ /

Advertisements

16 thoughts on “அழகிரி – ஒரு எண்கணித ஆய்வு

  sugumarje said:
  April 10, 2011 at 8:27 am

  ஒருவேளை எல்லாம் அஞ்சும் நெஞ்சானா மாறிட்டாங்களோ?
  தேர்தல் நேரத்தில எதுக்கு அய்யா வம்பு:)
  படிச்சிட்டு போய்ட்டே இருக்கவேண்டிதான் 🙂

   S Murugesan said:
   April 10, 2011 at 8:28 am

   சுகுமார்ஜீ,
   அப்ப கூட மாட உதை வாங்கி உதவ ஆளில்லேங்கறிங்க..

    sugumarje said:
    April 10, 2011 at 12:35 pm

    அய்யா… இருக்கிற சூழலில் உதை வாங்கித்தரத்தான் ஆளிருக்கு, வாங்க ஆளில்லை 🙂

  கிருமி said:
  April 10, 2011 at 1:40 pm

  எனக்கு இந்த எண் கணிதத்துல, பேரு சோசியத்துல‌ எல்லாம் ஈடுபாடு கிடையாது, எந்த கிரகத்துக்கு எந்த எண் அப்டின்னு கூட தெரியாது.

   S Murugesan said:
   April 10, 2011 at 4:50 pm

   கிருமி சார்,
   எண்களும் -கிரகங்களும் பின் வருமாறு: 1- சூ, 2-சந்தி ,3 -குரு ,4 -ராகு, 5-புதன் , 6 -சுக்கிரன் ,7 -கேது, 8 -சனி , 9 – செவ்.

   நாம ஜோசியத்துல கிரகங்களை மென்ஷன் பண்ணி பலன் சொல்றோம். நியூமராலஜில நெம்பர் . அவ்ளதான் வித்யாசம்

    R.Puratchimani said:
    April 10, 2011 at 6:38 pm

    பாசு இது பத்தி சில குண்டக்க மண்டக்க கேள்விகள் எல்லாம் இருக்கு, அத கேட்ட அது இந்த தொழிலுக்கு எதிராக அமையலாம் அல்லது புது சிந்தனையை தூண்டலாம். அப்படிப்பட்ட கேள்விகளை கேட்கலாமா?

    S Murugesan said:
    April 10, 2011 at 6:43 pm

    ஆர் புரட்சிமணி,
    கேட்பது உங்கள் உரிமை. என் பாக்கியம். எனக்கு தெரியாத மேட்டரை கேட்டாலோ அ அதிக நேரத்தை எடுத்துக்கற பதில் தேவையான கேள்விகளை கேட்டாலோ நான் அம்பேல். மற்றபடி மோஸ்ட் வெல்கம்

  R.Puratchimani said:
  April 10, 2011 at 7:49 pm

  நன்றி பாசு.
  ௧. மாந்திக்கு 0 ஒதுக்கினால் என்ன? ஒதுக்கி பாத்து பலன் வருதான்னு ட்ரை பண்ணுங்க பாஸ்.
  ௨. ஏன் ஆங்கில பிறந்த தேதியை பயன் படுத்துகிறார்கள் தமிழ், தெலுகு பயன்படுத்த கூடாதா? அப்படி பயன் படுத்தும் பொழுது பலன் மாறும் அல்லவா?
  ௩. பெயர் மாற்றம் செய்து யோகம் அல்லது நல்ல மாற்றம் வர வைக்க முடியும் பொழுது, பிறந்த தேதியையும் மாற்றி ஏன் யோகம் வர வைக்க முடியாது அல்லது கூடாது?
  இன்னும் ஒரு கேள்வி உண்டு அதை மின்னஞ்சலில் மற்றொரு நாள் கேட்கிறேன்.

   S Murugesan said:
   April 11, 2011 at 6:47 am

   புரட்சிமணி,
   அப்ப குளிகனுக்கு எந்த எண்ணை ஒதுக்கறது? சைக்கிளை மிதிவண்டிங்கற மாதிரி இதெல்லாம். எண்கணிதத்தை அவிக கண்டுபிடிச்சாய்ங்க. அவிக கொடுத்த கைட் லைன்ஸ ஃபாலோ பண்ணுவம்.

   பெயர் மாற்றம் யோகம் தரும்னு நான் நம்பலை. மாத்தின உடனே அவயோகம் தேன் வேலை செய்யும். நம்ம சொந்த பேரு எஸ்.முருகன் . என் பேரை பாக்யா பத்திரிக்கைல தப்பா போட்டுட்டாய்ங்க. ( எஸ்.முருகேசன்)

   முருகனுக்குண்டான நற்பலன் எல்லாம் கோவிந்தா முருகேசன் என்ற பேருக்குண்டான தீயபலன் மட்டும் கும்மி எடுத்து கும்மியடிச்சுருச்சு.

   அம்மா கூட இன்னொரு ஏ வை சேர்த்து கூத்தடிச்சது ஞா இருக்கா?

    Thirumurugan said:
    April 11, 2011 at 8:53 am

    இப்ப கூட அம்மா ரெண்டு AA பயன்பதுறங்க

    S Murugesan said:
    April 11, 2011 at 12:09 pm

    திருமுருகன்,
    இன்னுமா… டபுள் ஏ நல்லாவே வெளங்கிரும்

    R.Puratchimani said:
    April 11, 2011 at 8:58 am

    தங்களுடைய கருத்துக்கு ரொம்ப நன்றி பாஸ்

  P.A.Kumar said:
  April 11, 2011 at 1:56 am

  யார் திருப்திக்காக இந்த ப்ளாக்?

  உப்பு தின்னவன் தண்ணி குடிச்சிதான் ஆகணும்.

  தாத்தா மற்றும் வாரிசுகள் மட்டுமல்ல, அம்மாவைத்தான் பாத்தச்சே.

  நமக்கு இந்த அரசியலே வேணாம்ப்பா

  வினோத் said:
  April 12, 2011 at 4:39 am

  முதலில் நீங்க தாத்தா இனி ஒன்னுமில்லைன்னு சொல்லும்போது நான் தாத்தா ஜெயித்து பதவி விஷயமா காங் – தாத்தாவுக்குள் மோதல் வரும் வாய்ப்பு உண்டுனு சொன்னேன். ஆனா தேர்தல் கமிஷன் பண்றத பார்த்தா இப்போவே காங்கிரஸ் சட்டம் தன் கடமையை செய்யும்னு சொன்னா மாதிரி இருக்கு… அப்படி செயல் பட்டா ஆளும் கட்சிங்கிரது ரொம்ப தூரம், பலமான எதிர் கட்சியா கூட சட்டசபைக்குள்ள போக காங் விட மாட்டங்க போல…

   S Murugesan said:
   April 12, 2011 at 5:14 am

   வினோத் ஜீ,
   சாதாரணர்கள் நிகழ்காலத்தை வச்சு கெஸ் பண்ணலாம். ஜோதிடன் ஒரே தாவா எதிர்காலத்துக்குள்ள குதிச்சுர்ரான்.( குதிகால் எல்லாம் ஒரே வலி)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s