ஸ்டாலின் – அழகிரி : எதிர்காலம் 2

Posted on

அண்ணே வணக்கம்ணே,
கடந்த பதிவுல மு.க.அழகிரி மற்றும் மு.க.ஸ்டாலினோட பெயர் எண்ணை அடிப்படையா கொண்ட சில பலனை தந்திருந்தேன்.ஆனால் சரக்கு நம்முதில்லைன்னு சொன்னது ஞா இருக்கலாம். சோர்ஸ்:

இப்பம் நம்ம சொந்த சரக்கை அவிழ்த்துவிடறேன். வெறும் எண்கணிதத்தை வச்சு சொல்றது நம்ம மெத்தட் இல்லிங்கண்ணா.

நம்முது புது சப்ஜெக்ட் ஆஸ்ட்ரோ, நியூமோ ,நேமாலஜினு நாமகரணம் செய்திருக்கேன். அதனால எண் கணித நிபுணர்கள் சமிக்கனும்.

மொதல்ல ஸ்டாலின்:
.
M.K.Stalin (23) பெயர் எண் கூட்டுத்தொகை : 23 பெயர் எண்: 5 இதனோட காரக கிரகம் புதன். ரெண்டு சமாசாரத்தை சேர்த்துவைக்கற எல்லா விஷயத்துக்கும் புதன் தான் அதிபதி. முன் பின் அறிமுகமில்லாத ரெண்டு பேருக்கு “பாலமா”இருந்து செயல்படறவுகளுக்கு புத பலம் ரெம்ப தேவை. (அதனாலதான் மஸ்தா பாலம்லாம் கட்டினாரோ என்னமோ?

இது மட்டுமில்லை புதனோட காரகங்கள் எல்லாம் ஓரளவாச்சும் அனுகூலமாய் இருக்கும். புதகாரகங்கள் என்னென்ன புதனே சொல்றாரு பாருங்க:

புதியவர்களைத் தொடர்பு கொள்ளும் திறமை, மனதிலிருப்பதை எதிராளிக்கு விவரிக்கும் திறமை, போஸ்டல், எஸ்.டி.டி. கூரியர், ஜோதிடம், ஏஜென்சி, கன்சல்டன்ஸி துறைகளில் வெற்றி ஆகியவற்றை வழங்குவது நானே. மனிதனின் தோல், ஆண்களுக்கு விரைகள், பெண்களுக்கு சினைப்பைகள் ஆரோக்கியமாக இருக்க உதவுவதும் நானே. கணிதத்திறமை, மருத்துவத்தொழில் வியாபாரத்துக்கும் அதிபதி நானே. முன்பின் அறிமுகமில்லாத இருவரைச் சேர்த்து வைக்கும் எந்த தொழிலும் என் அதிகாரத்துக்குட்பட்டதே. விற்பனை பிரதிநிதிகள், மார்க்கெட்டிங் ஊழியர்கள், திறமையான பேச்சாளர்கள் என் பலத்தில் ஜொலிப்பார்கள். கூட்டுறவு அமைப்புகள், அரசு சார் நிறுவனங்கள், கூட்டு வியாபாரங்கள், பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள் யாவும் என் அளுமைக்குட்பட்டவையே. கருத்தரங்குகள், நாடக அரங்குகள், பூங்காக்கள், கருத்துப்பரிமாற்றத்துக்கு உதவும் தெருமுனைக் கூட்டங்கள் யாவுக்கும் நானே அதிகாரி. ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பஜார் தெருக்கள் என் ஆளுமைக்குட்பட்டிருக்கும். புத்திக்குழப்பம்- த்தப்பிரமையை தருவதும் நானே. தாய்மாமன், மாமனாருக்கும் காரகன் நானே.

இங்கன அஞ்சு எப்படி ஃபார்ம் ஆச்சுங்கறதை பாருங்க 2+3 சந்திரன்+குரு . குரு சந்திரன் சேர்ந்தா லைஃப்ல ஒரு 14 வருசம் வீணா போயிரனும் ( அடடா தாத்தாவோட வனவாசத்துக்கு ஸ்டாலினும் ஒரு காரணம் போல)

குருவோட காரகங்கள் அனைத்திலும் திடீர் தன்மை,எதிர்பாரா தன்மை ,நிலையற்ற தன்மை இருக்கும்.இவற்றிலும் அனுகூல,பிரதி கூல பலன் மாறி மாறி ஏற்படும்.சகோதர வகையில் லாப நஷ்டம் சமமாக இருக்கும்.

குருவோட காரகங்கள் ( குருவே சொல்றாரு பாருங்க)

நான் தங்கம், பைனான்ஸ், அரசியல், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வடகிழக்குத் திசை அகியவற்றிற்கு அதிகாரி, நானே புத்திரக்காரகன், பௌத்திரக்காரகன் (பேரன்கள்), நீதிமன்றம், கரூவூலம், புஷ்பராகம், பிராமணர், சான்றோர், இதயம், வயிறு, ஞாபகசக்தி, புராணம், வேதம், சேவை நிறுவனங்கள், ஆட்சி மொழி, அரசு தரும் வீட்டு வசதி, காசாளர், கண்டக்டர், முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுதல், இது எல்லாம் என் இலாகாவின் கீழ் வருபவை. தட்சிணாமூர்த்தி, சாயிபாபா, ஸ்ரீராகவேந்திரரர் ஆகியோரும் எனது பிரதி ரூபங்களே!

ஆக சந்திர சேர்க்கையால குருவோட மேற்படி காரகங்கள் எல்லாமே நீர் குமிழி மாதிரி எப்பனா வெடிச்சுரும்.

ஆனால் சந்திர காரகங்களை பொருத்தவரை ஸ்டாலினுக்கு பேர் வாங்கி தரும். மக்களோட நெருக்கம் தரும். இந்த மேட்டர்ஸ்ல எல்லாம் ஸ்டாலின் ஃபோர் சைட்டட்னெஸ்ஸோட ஒர்க் அவுட் பண்ணுவாரு.

சந்திர காரகங்கள் ( சந்திரனே சொல்றாரு பாருங்க)

வடமேற்குத் திசை, வெண்முத்து, பிரமுகர்களின் மனைவியர், தாய், தாயுடனான உறவு, தாய்வழி உறவு, நுரையீரல், சிறு நீரகம், மனம், இரவு நேரம், முழுநிலா நாள், சஞ்சலம், தண்ணீர்த் தொடர்பான இடங்கள், தொழில்கள், யார் எவ்வளவு நேரம் இருப்பார்கள் என்று சொல்ல முடியாத இடங்கள் (உம்) நீச்சல் குளம், கல்யாண மண்டபம், காய்கறி மார்க்கெட், பேருந்து, ரயில் நிலையங்கள் முதலியன. படகு, கப்பல் பயணம், 15 நாட்கள் துள்ளல், 15 நாட்கள் துவளல், திடீர்ப் பயணம், கண்டதும் காதல், சீஸனல் வியாபாரங்கள், மக்களுடன் நேரடித் தொடர்புள்ள வேலைகள், நதி, நதிக்கரை, கடற்கரை, தாய் வயது பெண்கள், மதர்லி ஃபிசிக் கொண்ட பெண்கள் இரண்டேகால் நாட்களில் முடிந்து விடக்கூடிய வணிகங்கள், நண்பர்களுடனேயே மோதுதல்,எதிரிகளுடன் நட்பு கொள்ளுதல் இவற்றிற்கெல்லாம் சந்திரனாகிய நானே அதிபதி

( இந்த பலன்களை சூட்சும புத்தியோட படிச்சா நிறைய பாய்ண்ட்ஸ் டேலி ஆறத பார்க்கலாம்)

பிறந்ததேதி: 1 – 3 – 1953 உயிர் எண்: 1 கூட்டு எண்: 22

உயிர் எண் பலன்:
இதுக்கு காரக கிரகம் சூரியன். இவரோட கூட்டு எண் மட்டும் நாலா அமையாம இருந்திருந்தா எங்கனயோ போயிருப்பார். ஆனால் நாலுக்கு காரக கிரகமான ராகு சேர்ந்ததால சூரிய காரகம் எல்லாத்துக்கும் ஆப்பாயிருச்சு. உ.ம் அப்பா வனவாசம், அப்பாவுடனேயே அவ்வப்போது உரசல்கள், அப்பாவோட உசரத்தை எட்டிப்பிடிக்க முடியாத நிலை.

சூரிய காரகங்கள்: (சூரியனே சொல்றாருங்கோ)
மொதல்ல என்னோட காரகத்வங்களை பார்ப்போம்.கிழக்குத்திசை, மாணிக்கக்கல், தானம்-கடிகாரம், ஆத்மா- பகல்ல பிறந்தவுகளுக்கு தந்தை, தந்தையுடன் உறவு, தந்தைவழி உறவு, தன்னம்பிக்கை இதற்கெல்லாம் நானே அதிகாரி. பல், எலும்பு, முதுகெலும்பு, வலதுகண், மலைப் பிரதேசங்கள், தலைமைப் பண்புகள், தன்னம்பிக்கை, ப்ராக்டிக்காலிட்டி, மேற்பார்வை, தரக்கட்டுப்பாடு, தாமரைமலர், விளம்பரங்கள், நாளிதழ்கள்,பயன் கருதா பொது நலப்பணிகள்,
இவை யாவும் என் அதிகாரத்துக்குட்பட்டவையே! பித்தளை, திட்டமிட்ட தொடர்ச் சுற்றுப்பயணங்கள், உள்ளூர், ஊராட்சி, நகராட்சி மன்றங்கள், ஒளிவு மறைவற்ற பேச்சு, ஒல்லியானவர்கள், கோரைப்புல் போன்ற தலை முடியுடையவர்கள், கூரையில்லாத வீடு, ஏகபுத்திரன், ஒற்றைத்தலைவலி, எலும்பு முறிவு, தூக்கமின்மை இவையாவும் என் அதிகாரத்தின் கீழ்வருபவையே.

குறிப்பு:
அரிசி,பருப்பு,மசாலா எல்லாத்தையும் தந்திருக்கன். கொஞ்சம் போல பொறுமையும் ஆர்வமுமிருந்தா ஆரு வேணம்னா இன்டர் ப்ரிட்டேட் பண்ணலாம். பலன் எந்த அளவுக்கு கன கச்சிதமா பொருந்துதுன்னு பார்க்கலாம் ஐ மீன் காட்டலாம் ( கமெண்டா போடுங்கண்ணா)

இவருக்கு 4,8,7 டோட்டல் வர்ரது போன்ற வயசுகளில் பின்னடைவு ஏற்படும். உ.ம் 22, 26,25 31,35,34 , 40,44,43,
58 ( அண்டர்லைன்)

உங்களையும் பார்ட்டிசிப்பேட் பண்ண வைக்கனுங்கற நோக்கத்தோட இந்த ஸ்டைல்ல பதிவு போட்டிருக்கேன். ( கூட உதைவாங்க ஆள் வேணம்ல)

அழகிரியோட எண்கணித பலன் அடுத்த பதிவில்.

Advertisements

6 thoughts on “ஸ்டாலின் – அழகிரி : எதிர்காலம் 2

  ராஜா said:
  April 9, 2011 at 2:34 pm

  தலைவா, நீங்கதான் சவுக்கு.நெட் வெப்சைட்ல ஜோதிடர் அப்டிங்கற பேர்ல கமெண்ட் போடறிங்களா? ஏன்னா, நானும் சவுக்கு தளத்த தொடர்ந்து வாசிச்சுகிட்டு வருபவன், அதனால கேக்குறேன்

   S Murugesan said:
   April 9, 2011 at 5:51 pm

   ராஜா,
   நமக்கு இன்டர் நெட் உலகத்துல ரெண்டே பேருதேன். ஒன்னு ஸ்வாமி7867 இன்னொன்னு சித்தூர் முருகேசன்
   (ஜோதிட ஓஷோ , வலையுலக மாத்ரு பூதம்னெல்லாம் சொல்வாய்ங்க.. அதெல்லாம் அவிக அன்பின் அடையாளம்தானே தவிர நாம அம்பேல்)

    R.Puratchimani said:
    April 10, 2011 at 8:34 am

    எனக்கும் இந்த சந்தேகம் சில நாட்களாக உண்டு.
    பாசு ஜாதகத்த மீறி இந்த எண்கள் எல்லாம் செயல் படுமா?

    S Murugesan said:
    April 10, 2011 at 8:44 am

    புரட்சிமணி,
    ஜாதகத்தை மீறி அல்ல. ஜாதகத்தோட இணைந்து செயல்படும்.

    உ.ம் ஸ்டாலின் மேட்டர்ல 1-4 அழகிரி மேட்டர்ல 1-8 பத்தி விஸ்தாரமா பலன் சொல்லியிருக்கன்.

    அவிக ஜாதகங்கள்ளயும் சூரிய, சனி/ராகுவுக்கு தொடர்பு நிச்சயமா இருக்கும்.

    இது என் அனுபவம்.

  Thirumurugan said:
  April 11, 2011 at 8:56 am

  இதுஎல்லாம் சரி ரெண்டுபேரும் முதல்வர் ஆகும் யோகம் இருக்கிறதா ? but keep in mind u dont have any negative effect in fire, may be tomorrow headlines cud be ur Office burning Images

   S Murugesan said:
   April 11, 2011 at 12:02 pm

   திருமுருகன்,
   ஸ்டாலினுக்கென்னவோ ராஜ கிரகத்தோட எண்ணான சூரியனோட ராகு சேர்ந்திருக்காரு – அழகிரி அண்ணன் மேட்டர்ல சனியே சேர்ந்திருக்காரு. என்னாத்த முதல்வரு என்னாத்த யோகம்? தலைப்பு செய்தில வர்ர யோகம்லாம் நமக்கு இல்லிங்கண்ணா.. இன்னைக்கு சாயந்திரம் அஞ்சுமணிலருந்து இன்னபிற வேலைகள்ள ரெம்ப பிசியா இருப்பாய்ங்கல்ல..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s