சிரித்து வாழவேண்டும் – சுந்தரம் , நங்கை நல்லுர்

Posted on

மகிழ்ச்சியே மானுடம் விரும்பும். எனவே, இந்த கன்னி பதிவின் மூலமாக நானறிந்த நகைச்சுவையை தமிழ் கூறும் நல்லுலகிற்கு நவில்கிறேன். பிழை இருந்தால் பொறுத்தருள்க‌

அன்பார்ந்த சித்தூர் S.முருகேசன் சார், அவர்களுக்கு,தங்கள் வாயிலாக இந்த என் கணணி (கன்னி) பதிவு

ஒரு இளைஞன் ஒருவன் தன் அலுவலகத்துக்கு செல்லும் வழியில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு பிச்சைக்காரனுக்கு தினமும் ஒரு ரூபாய் பிச்சை இடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.சில நாட்களுக்குப் பின் ஐம்பது பைசாக்கள் பிச்சை இட்டான்,சிறிது நாட்கள் சென்றன,இருபத்தைந்நு காசுகளும் பின்னர் ஐந்து காசுகக‌ளும் பிச்சை இட்டான்.இதைக் கண்டு வெறுப்படைந்த பிச்சைக்காரன் நம் இளைஞனிடம் ஏன் ஐயா, நானும் வெகுநாட்களாக தங்களை கவனித்து வருகிறேன்,சிறிது சிறிதாக எனக்கு இடும் பிச்சையை குறைத்துக்

கொண்டே வருகிறேர்களே காரணத்தை விளக்க இயலுமா? என்றான்,அதற்கு இயல்பிலேயே வெகுளியான(frank) அந்த இளைஞன் அப்பா, முதலில் நான் பிரம்மச்சாரியாக இருந்தேன் அப்பொழுது என‌க்கு செலவுகள்

குறைவாக இருந்தது,பின்னர் திருமணம் ஆயீற்று மனைவி வந்தபின் செலவுகள் இருமடங்காகின,அதன்பின்

குழந்தை பிற்ந்தது,அது தற்பொழுது பள்ளி செல்கிறது,என் செலவுகள் பெருகியதே நான் உனக்கு இடும் பிச்சையை குறைக்கக் காரணம், வேறொன்றும் இல்லை என்றான்.அதற்கு அந்த பிச்சைக்காரன் அப்படியானால்,என் காசில் உன் குடும்பம் நடக்கிறது என்று சொல் என்றானே பார்க்கலாம் எப்படி?
இதோடு தமிழக அரசியலை முடிச்சுப் போட்டால் நான் பொறுப்பல்ல.

Advertisements

6 thoughts on “சிரித்து வாழவேண்டும் – சுந்தரம் , நங்கை நல்லுர்

  Mani said:
  April 9, 2011 at 3:07 am

  சூப்பர். போட்டு தாக்கறீங்க. திருடர்களிடம் பிச்சை வாங்கும் பிச்சைகார மக்கள். சரியான சவுக்கடி.

  sundar said:
  April 9, 2011 at 7:44 am

  Thanks a Lot tttttttttttttttttt To Mr.S.Murugesan, for posted my first posting.

   S Murugesan said:
   April 9, 2011 at 9:31 am

   நங்கை நல்லூர் சுந்தரம் அவர்களே,
   நீங்க என்ன வேணம்னா எழுதுங்க ( நல்லா எழுதறிங்க – நல்ல ஃபார்ம் இருக்கு – நல்ல ஸ்டைல் இருக்கு) ஒரு வேண்டு கோள். என்ன எழுதினாலும் அது ஜோதிடம் /ஆன்மீகத்தை தூவிருங்க

    sugumarje said:
    April 10, 2011 at 8:22 am

    அதேதான். தளத்தின் தன்மை மாற்றவேண்டாமே!

    S Murugesan said:
    April 10, 2011 at 8:26 am

    சுகுமார்ஜீ,
    மாறாதது மாற்றம் ஒன்றுதானே.அரசாங்கமே மதுவிற்கும்போது ஜோதிட வெப்சைட்டில் ஜோக் வந்தா தப்பா?

  masanam said:
  April 11, 2011 at 1:19 am

  சூப்பர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s