சுக்லமும் மோக்ஷமும் – T.A.Kandhan

Posted on

பதிவர்; T.A.Kandhan

முன்னுரை:
இது T.A.Kandhan மெயிலில் அனுப்பிய பதிவு . இதை திருத்தவோ எடிட் செய்யவோ இல்லை. அந்த காலத்து இதயம் பேசுகிறது போல ” கந்தன் கருத்து நம் கருத்தல்ல” யாருக்காச்சும் நேரம் இருந்து பிழை திருத்தி மெயில் பண்ணா கோடி புண்ணியம் உண்டு.
– எஸ்.எம்

முருகேசன் அவர்கள் ஏற்கனவே சொன்ன மாதிரி குண்டலினி சக்தியை மூலாதாரத்ல இருந்து சூக்ஷம நாடி வழியா சஹஸ்ரம் வரைக்கும் கொண்டு போறதுதான் குண்டலினி யோகம் . (பிகு- சஹஸ்ரம் தான் இலக்கா நு கேட்டா சில ஞானிகள் இல்லை அப்படிங்கறாங்க. அதை இன்னொரு பதிவா போட்டாதான் பதிலுக்கு முருகேசன் அவர்கள் கிட்ட இருந்து இன்னும் ஏதாவது கறக்கலாம் ).
இப்போ, மூலாதாரம் -சக்தி , சஹஸ்ரம்-சிவன். சக்திய சிவன்ல செக்ரதுதான் சமாதி/மோக்ஷம் /குண்டலினி யோகம். இந்த சேர்கை வெளிய நடந்த சிற்றின்பம், உள்ள நடந்த பேரின்பம். எல்லோரும் அறிந்ததே.

மூலாதாரத்தில் சக்தி சுக்லமா இருக்கு. அது சுவாதிஷ்டானம் வழியா இயங்கி வெளிய வருது (மோகம் ஜாஸ்திநா சுவாதிஷ்டானம் ஜாஸ்தியா திறந்து இருக்குநு கொள்ளலாம்). பெண்களுக்கு மாதம் ஒரு முறை முட்டையாக தோன்றி வெளி வருகிறது. இந்த சுக்லத்தை பிரித்து சூக்ஷம நாடி வழியா சஹ்ஸ்ரதுக்கு கொண்டு போரதுக்குகான ஒரு வழி காயகல்ப் பயிற்சி.

காயகல்ப் பயிற்சி:
காலை மாலை இருவேளை பண்ணலாம். பத்து நிமிஷம் தான் ஆகும். காய்ச்சல், கர்பிணி பெண்கள் மற்றும் தூரமாய் இருக்கும் பொது தவிர்க்கவும்.

கால்களை ஒரு அடி தள்ளி வைத்து கொண்டு நிற்கவும். பாதங்கள் நேராக இருக்கவேண்டும்.

௧. அஸ்வினி முத்ரை: ஆசன வாயை ஒரு வினாடி இறுக்கி மூடி பின் திறக்கவும்(contract and ரிலீஸ்). இதனால் சுக்லம் பிரிகிறது. இது மாதிரி பத்து தடவை செய்யவும்.
கா. ஓஜஸ் மூச்சு: ஆசன வாயை இறுக்கி மூடிகொண்டே நாக்கை உள் நோக்கி மடக்கி வாயின் மேல் பகுதியில் நாக்கின் பின் பகுதி படும்படி வைத்துகொள்ளவும் . அதாவது ழகரம் சொல்லும் பொது நாக்கு எப்படி இருக்கும்? அது மாதிரி. இப்போ மூச்சை வேகமா மூக்கு வழியா இழுக்குவும்(ஒரு வினாடிகுள்). இழுக்கும் போழுது மூலதாரத்தில் இருந்து சக்தி தண்டு வடம் வழியா சஹ்ஸ்ரதுக்கு போறதா கற்பனை பண்ணிக்கொள்ளவும்.

இப்போ சுக்லம் மேல போயாச்சு. ஆரம்பத்ல அதை உடல் முழுக்க பரப்பவும். ஏன்னா மூளைல சர்கியுடேல்லாம் மொதல்ல பலகீனமா இருக்கும். நல்லா பயிற்சி ஆனதுக்கப்புறம் அதை குறிப்பிட்ட வேலைகளுக்கு பயன்படுத்தலாம்.

எப்படி? உள்வாங்கின மூச்சை வாய் வழியாக ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்கிற சத்ததோட வெளியே விடவும். பாம்பு சத்தம் போடுமே அது மாதிரி. இது தான் கோப்ரா ப்ரீத். மூச்சை வெளியே விட்டுக்கொண்டுஇருக்கும் போது சஹ்ஸ்ரதுல இருந்து சக்தி குளிர்ந்த பால் அபிஷேகம் மாதிரி உங்க உடம்பு முழுக்க நனைகிரமாதரி கற்பனை பண்ணிக்குங்க .

இது ஒரு சுற்று. ஒரு சுற்று நல்லா பயிற்சி ஆனதுக்கப்புறம் ஒரு பொசிசனில் இரண்டு தடவை பண்ணலாம்.

இது மாதிரி நின்னுகிட்டு ஒரு தடவை. அப்புறம் வஜ்ராசனத்தில் ஒரு தடவை.

இதை கொஞ்சம் விரிவாக வேதாத்திரி மகரிஷி இயக்கத்துல சொல்லி தராங்க. இபிசாலு தந்தரத்ல இந்த முறைய பத்தி சொல்லியிருக்கு.

கேள்வி: என்னங்க, சும்மா கற்பனை பண்ணா சுக்லம் மேல போயிருமா?
நம்ப வேண்டாம். 10 தடவைக்கு பதிலா அஸ்வினி முத்ரை 30 தடவை பண்ணி பாருங்க. என்ன தலை வலிக்குதா? ஏன் வலிக்குது? 3 -4 மாசம் பண்ணி ஏதும் மாற்றம் தெரியுதான்னு பாருங்க.

கேள்வி: 10 தடவை தான் அஸ்வினி முத்ரை பண்ணினேன். தலை வலிக்குதே?
ஆரம்பத்ல 5 தடவை பண்ணுங்க.

(பிகு- நம்மலுக்கு தமிழ் நீச்சம். கோச்சிகாதீங்க)

Advertisements

8 thoughts on “சுக்லமும் மோக்ஷமும் – T.A.Kandhan

  Sankar G said:
  April 8, 2011 at 12:22 pm

  இத செய்ய ஆரம்பிச்சதும், ஒரே நாள்ல என்னோட பேலன்ஸ் சுத்தமாப் போயிருச்சு. ஒரே வாரத்துல பயித்தியம் மாதிரி ஆய்ட்டேன். இத்தனைக்கும் ஒவ்வொருதரமும் 5 அசுவினிதான் செய்தேன். அதுவே அப்பிடி.

  என்னமாதிரி சிலருக்கு இது ஒத்துக்காது போலன்னுட்டு அதுக்கப்புறம் விட்டாச்சு.

  இப்பிடி சிலருக்கு ரொம்ப ரிஸ்க்குன்னு நினைக்கேன்… ஜாக்கிரதை..

  http://anubhudhi.blogspot.com/

   covaisiva said:
   April 9, 2011 at 7:14 am

   you may have BP or Sugar Complaint. Please do the Ohjas slowly as it may increase BP level.

  கிருமி said:
  April 8, 2011 at 3:30 pm

  அண்ணே,

  கைகளை எப்டி வச்சிக்கறது?
  அசுவினி பத்து தடவை சரி. அந்த ஓஜஸ் எத்தனை தடவை பண்ணணும்? ஒரே தடவையா இல்ல இதுவும் பத்து தடவையா?
  வெறும் வயித்துல தான் பண்ணனுமா என்ன?

  //பிகு- நம்மலுக்கு தமிழ் நீச்சம். கோச்சிகாதீங்க//
  இத நீங்க சொல்லித்தான் தெரியணுமா என்ன?

  kandhan said:
  April 8, 2011 at 3:54 pm

  கிருமி

  கை இடுப்பில். 10 அஸ்வினிக்கு அப்புறம் ஒரு ஓஜஸ்.

  காலை வெறும் வயிதில். மாலை உணவுக்கு 3 மணி நேரம் கழித்து.

  //பிகு- நம்மலுக்கு தமிழ் நீச்சம். கோச்சிகாதீங்க//
  இத நீங்க சொல்லித்தான் தெரியணுமா என்ன?

  🙂 🙂

  சங்கர், குண்டலிணி, ஒரு பாம்பு. பாத்துதான் வெளிய விடணும்.

  R.Puratchimani said:
  April 8, 2011 at 7:54 pm

  வணக்கம் கந்தன் அவர்களே,
  அஸ்வினி முத்திரையின் நோக்கமே வேற….அது மேல ஏத்தறதுக்கு இல்ல கீழ ஏறக்கரதுக்கு (நான் படிச்சது இதத்தான்..அனுபவிச்சத வேணா அப்பறோம் சொல்றேன் அதுவரை நேரம் இருந்தா இத படிங்க http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2011/04/blog-post_07.html)
  நம்ம பாசு ரொம்ப பிசியா இருக்காரு வரட்டும் அப்புறம் வச்சிக்கலாம் கச்சேரிய
  நன்றி…

  Mani said:
  April 9, 2011 at 3:57 am

  கந்தன் பதிவு நல்லாருக்கு. ஆனா வேதாத்திரி மகிரிஷி யோகாவுல தீட்சை பெற்றவங்களுக்கு மட்டும்தான் இதை சொல்லனும்னு சத்ய பிரமாணம் வாங்கறாங்களே அதை நீங்க பொதுவில் எழுதும் முன்பு கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்ன்னு தோணுது. ஏன்னா யாராச்சும் விளையாட்டாக செய்யப் போக பக்க விளைவு எதாச்சும் வந்துட போகுது. நானும் கொஞ்ச நாள் காயகல்ப முறைகளை செய்தேன் பின்னர் உடல் உஷ்ணம் அதிமாக இருந்ததால் தற்காலிகமாக நிறுத்தியுள்ளேன். நமக்கு வயசு இருக்கு கொஞ்ச நாள் அனுபவிச்சிட்டு அப்புறமா முழுசா ஆன்மீகத்துக்கு வந்துறலாம்ன்னு இருக்கேன் பார்ப்போம். இறைவன் கையில் அது இருக்கு.

  Thirumalaisamy said:
  April 9, 2011 at 9:05 am

  அண்ணே வணக்கமுங்க ..
  மணி அண்ணே சொன்னதையும் யோசிங்க ..
  ஆன்மிக அல்லது யோகா ஆர்வத்தை தூண்ட இது ஒரு நல்ல பதிவு ….

  kandhan said:
  April 9, 2011 at 12:39 pm

  புரட்சி மணி

  நீங்க அஸ்வினி முதரை மத்துறும் பத்தி சொல்றிங்க. இதுல ஓஜஸ்சும் கலந்து இருக்கு. எதுல படிசீங்க கொஞ்ஜம் சொல்லுங்க. நான் கேள்விப்பட்டது இதுதான். உங்க பதிவு நல்லா இருக்கு.

  மணி
  விளையாட்டாக எது செஞ்ஜாலும் கொஞ்ஜம் ரிஸ்கு தானெ. அதுனால தான் அசவுகரியமா இருந்தா அளவ கம்மி பன்ன சொல்லி இருகேன். உலக அனுபவமும் ஆன்மீகமும் தனி தனி கிடையாது. 🙂 . ஜனக‌ மஹாராஜா ஒரு பெரிய ப்ரம்ம ஞானி.

  ஏற்கனவெ பொதுவல இருக்குர ஒரு விஷயத்த எப்படி சொந்தம் கொன்டாடலாம்? இதயெ தான் கொஞ்ஜம் வேற விதமா க்ரியா யோகால செய்றாங்க.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s