வினோத் அண்ணே………… நீங்க எங்க கீறீங்க………?

Posted on

பதிவர் : கிருமி

நம்ம வினோத் அண்ணன், அவரு ஜாதகத்தை அனுப்பி, அவர் என்ன தொழில் அமைப்புல இருக்காருன்னு கேட்டிருக்காரு (சவால்?).

ஒங்களுக்கு நல்லா தெரிஞ்ச ஒண்ணை ஜோசியர் கிட்டே கேட்டு ஏன் ஒரு கேள்வியை வீணடிக்கறீங்கன்னு முருகேசன் அண்ணன் ஒரு இடத்துல கேட்டிருப்பாரு.  இது டெஸ்டிங் மாதிரி, எல்லாரும் பண்றீங்க.  ஒங்க சாதகத்த வேற வேல மெனக்கெட்டு அனுப்பியிருக்கீங்க. பரவால்ல.

//ராகு காரகதுவம் இருக்கும் கம்யுனிகேசனா ?//
பிசிக்கல் கம்யூனிகேசனுக்கு புதன்.  கண்ணுக்கு தெரியாத / சூட்சும தகவல் தொடர்புக்கு தான் ராகு.

//ஆயுள் 8 அதிபதி கூடினதால் கொலை செய்வதா?//
ஏங்க இப்டி சாவடிக்கறீங்க?

//சுக்ரனின் இடம்ங்கிரதால் சுக்ரன் சம்ந்தப்டட்டத.. குரு பரிவர்தனை பெற்றதால் குரு சம்னந்தப்பட்டதா? சொல்லுங்க//

சுக்கிரன் பத்தாமதிபதி, பத்தாம் அதிபதியின் சம்பந்தம் இல்லாம தொழில் அமையுமா என்ன?

முதல்ல ராசிக்கட்டத்தை மட்டும் குறிப்பிட்டிருந்தாரு.  நவாம்சம் எல்லாம் அனுப்பலை.

கீழெ உள்ள இது அவருக்கு ராசிக்கட்டத்தை மட்டும் வைத்து சொன்னது.

<<<<உங்கள் ஜீவனோபாய‌ அமைப்பு : பின்னல் அல்லது வலைப்பின்னல் சார்ந்த, துணி அல்லது அணிகலன் சார்ந்த, ஏற்றுமதி, மற்றும் கணக்கு வழக்குகள் சார்ந்ததாக இருக்கலாம். இரண்டாம் நிலை யூகம் : வங்கி, இன்சூரன்ஸ், ஃபைனான்ஸ். >>>>

அப்றமா, மொத்த சாதகத்தையும் அனுப்பி இருந்தாரு. (தேவைப்பட்டா, ராகு columnக்கு போய் பாத்துக்குங்க)

அதுக்குரிய பலன்.
//குரு பரிவர்தனை பெற்றதால் குரு சம்னந்தப்பட்டதா? //
குரு நவாம்சத்துல நீசம், அதனால, இரண்டாம் நிலை யூகம் : வங்கி, இன்சூரன்ஸ், ஃபைனான்ஸ் காலி. கணக்கு வழக்குங்கற பாயின்டும் சரி வராது.

பத்தாம் அதிபதி சுக்கிரன் நவாம்சத்துல ஸ்ட்ராங்கா இருக்காரு.  அதனால சுக்கிரன் சம்பந்தப்பட்ட துறையில ராகு, சூரியனோட ஆதிக்கத்துக்குட்பட்ட தொழில்ல இருப்பாரு.

ராகு சுய சாரத்துல இருக்காரு, ராசியில நீசமான சூரியன், அம்சத்துல புதன் வீட்டுல சமமாயிடறார்.  மேலும் ராசியில புதன் சூரியன் நெருக்கம்.  அதனால (ராகுவின் ஆதிக்கம் கொஞ்சம் குறைந்த) சூரியன் மற்றும் புதன் சம்பந்தப்பட்ட தொழில், இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப, சுருக்கமா சொன்னா டெக்னிக்கல், கம்பூட்டர் தொழில்.  தொழில்னு சொல்றத விட சம்பளம் வாங்கற மாதிரி கம்பூட்டர் வேலை எதுலயாவது இருப்பாருன்னு சொல்லலாம்.

பின்னல் அல்லது வலைப்பின்னல் சார்ந்த, துணி அல்லது அணிகலன் சார்ந்த, ஏற்றுமதி, சார்ந்ததாக இருக்கலாம்.  >>> சுக்கிரனின் ஆளுமை + ராகுவின் ஆளுமை (பிறந்த ஊர் திருப்பூராம், சரியாத்தான் வருது).

(பதவியில் சூரியனின் ஆதிக்கம் இருக்கும், கம்பூட்டர் வேலை எனில் டீம் லீடர் மாதிரி)

தற்போதைய இருப்பிடம் பத்தியெல்லாம் நடப்பு தசை, கோசாரம் வச்சி எதுவும் நான் பாக்கலை.

இதான் நான் சுருக்கமா பண்ணின அலசல்.  வினோத் அண்ணே நீங்க தான் பதில் சொல்லணும்.

ஒரு வேளை, இந்த கணிப்பு மொத்தமும் தவறா இருந்தாக் கூட (வாய்ப்பில்லை), இதுக்கு மேல தயவு செஞ்சி, அலச சொல்லாதீங்க, எனக்கு வேல நெறைய கீது.

Advertisements

22 thoughts on “வினோத் அண்ணே………… நீங்க எங்க கீறீங்க………?

  வினோத் said:
  April 6, 2011 at 8:01 am

  100% சரியா சொன்னீங்க .. கார்மெண்ட் எக்ஸ்போர்ட்டில் கம்ப்யூட்டர் துறையில் ஈ.டி.பீ/ஈ.அர்.பி. டீம் லீடரா இருக்கேன்… நன்றி ..

  ஒரே ஒரு சந்தேகம்…சுக்கிரன் 12ல் இருந்தா மறைவா இல்லையா ?

   கிருமி said:
   April 6, 2011 at 8:24 am

   நன்றி அண்ணே.

   //சுக்கிரன் 12ல் இருந்தா மறைவா இல்லையா ? //
   பொதுவா சொன்னா மறைவு கிடையாது.
   அம்சத்தையும் அவசியம் பாருங்க. சூரியன் (ராசியில) நீசமா இருக்கும் போது நீங்க எப்டி டீம் லீடரானீங்க?

    வினோத் said:
    April 6, 2011 at 10:11 am

    நான் எங்கே ஆனேன்…. நான் சும்மா இருந்தாலும் என்னை அப்படி பண்ணிடராங்க…

    வினோத் said:
    April 6, 2011 at 11:15 am

    கிருமி அண்ணா இன்னொரு சந்தேகம்..
    //..தொழில்னு சொல்றத விட சம்பளம் வாங்கற மாதிரி கம்பூட்டர் வேலை எதுலயாவது இருப்பாருன்னு சொல்லலாம்…//

    தொழிலை விட வேலைன்னு சொல்றிங்களே.. அது ஏப்படி ? சொந்த தொழிலா இல்லை சம்பளம் வாங்கும் வேலையானு எப்படி முடிவு பண்றிங்க…

    கிருமி said:
    April 6, 2011 at 6:58 pm

    தொழிலுக்கு முதல்ல‌ தேவை தைரியம், அது இருந்தா எட்டணா கைல இல்லாட்டியும் முதல் ஆயத்தம் பண்ணிடலாம். ஒங்க நவாம்சத்துல பாருங்க, தைரிய ஸ்தான அதிபதி குரு, காரகர் செவ்வாய் ரெண்டு பேருமே நீசம்.

  syed said:
  April 6, 2011 at 8:37 am

  கிருமி சார் பெரிய கில்லாடிதான்
  வாழ்த்துக்கல்

  PERUMALSHIVAN.S said:
  April 6, 2011 at 9:05 am

  kirumi saarukku goldmedal vaazhtththukkal

  eruthaa kooda eanga bulb vaangiduvomo? endru konjam bayanthingalaa? sir.

  enokkoru doubt athu ean sir? jathagappadi (kocharappadiyumnthaan)kettathu mattum currecta nadakkuthu nallathu appadiyillaiye ? ean sir .pothuvaa eallarukkumthaan.

   S Murugesan said:
   April 6, 2011 at 9:17 am

   பெருமாள் சிவன்,
   (கிருமி சார் பிசிங்கறதாலே நான் பதில் சொல்றேன் – கிருமி சார் மன்னிக்கனும்.)

   இன் ஜெனரல் கேது தசை/ புக்தி / கோசாரம்லாம் யாருக்குமே ஒர்க் அவுட் ஆவதில்லை. காரணம் கேது ஞான காரகன். இவர் ஞானத்தை தான் தருவார். துன்பங்கள் மூலம் தான் ஞானம் பாசிபிள். ஒரு வேளை நீங்கள் ஆராய்ச்சி ,தியானம், சன்னியாசம் இத்யாதி லைன்ல இருந்தாலன்றி கேது உலகியல் ரீதியான நற்பலனை தரமாட்டார்.

   கேது என்ன கொடுத்தாருனு அப்பாறம் நினைச்சுப்பார்க்கும்போது ஒரு வாழ் நாளுக்குண்டான ஞானத்தை கொடுத்தது தெரியவரும்

    R.Puratchimani said:
    April 6, 2011 at 12:57 pm

    பாஸ் இங்கே நான் விதி விலக்குன்னு நினைக்கிறேன். ஏன் என்றால் எனக்கு கேது புக்தியில தான் வருமானத்திற்கு ஒரு வழி ஏற்பட்டது. சனியும் புதனும் செய்யாதது இது. அவன் எனக்கு ஐந்தில் இருப்பதால் நல்லது செய்தானோ.

    R.Puratchimani said:
    April 6, 2011 at 1:06 pm

    என் வேல ஆராய்ச்சி இல்லனாலும் ஆங்கிலத்துல ஆராய்ச்சின்னு தான் வரும், ஒரு வேல இது தான் காரணமோ.

   கிருமி said:
   April 6, 2011 at 9:31 am

   பயம் தானேன்னு கேட்டீங்க. கண்டிப்பா ஓரளவுக்காவது பயம் இருக்கணும். எனக்கும் உண்டு

   நாளைக்கு வேறொருத்தருக்கு இது மாதிரி சொல்றது தவறாயிடலாம். கூடுமானவரை சரியாக சொல்லணும்னா கவனமும் பயமும் அருளும் தேவை. எல்லாத்தையும் விட, தப்பாயிட்டா அத ஏத்துக்கிட்டு, எதுனால தப்பாச்சின்னு ஆராயணும், ஒரு நாளைக்கு புதுசா ஒரு விஷயமாவது கண்டு புடிக்கணும். இல்லன்னா நீங்க சொன்ன மாதிரி பல்பு கிடையாது, சீரியல் பல்பு தான்.

    PERUMALSHIVAN.S said:
    April 7, 2011 at 11:43 am

    naan thappu sollala sir ,
    kandippa oru sinna bayam vhenum. appathaane jeyikkavum mudiyum .

    BAYANTHA NIMMATHIYA VAAZHA MUDIYAATHU !
    BAYAPPADALANA OZHUNGAA VAAZHA MUDIYAATHU !
    ethu ennoda punch eappadi sir erukkuthu.

    கிருமி said:
    April 7, 2011 at 12:33 pm

    இவ்ளோ எழுதறீங்களே, இத அப்டியே எதுனா மொழிமாற்றியில (ட்ரான்ஸ்லிட்டரேட்டர் ‍ சரியா?) அடிச்சி ஒரு மணித்துளி திருத்தினா, தமிழ்ல வந்துருமே? ஏன் முயற்சிக்கலியா நீங்க?

    S Murugesan said:
    April 7, 2011 at 12:56 pm

    பெருமாள் சிவன்,
    //பயந்தா நிம்மதியா வாழமுடியாது//
    கடவுளுக்கு பயந்து வாழ்ந்தா வாழ்வது மட்டுமல்ல -வாழ்விக்கவும் முடியும் பாஸ்
    //பயப்படலைன்னா ஒழுங்கா வாழமுடியாது//
    இது கரீட் . பிற்சேர்க்கை :கடவுளுக்கு

  PERUMALSHIVAN.S said:
  April 6, 2011 at 9:14 am

  yaaravathu konjam (pathil) nalla vaarthai sollungalen.

  guru,santhiran,sooriyan ondrukondru 1,5,9 eathavathu yhogama?

  viruchaga lagnam -guru 3-nril neecham , santhiran 7-yil utcham ,sooriyan 11-nril utchampertra puthanudan with kuligai. and lagnathula saninganna ?

  கிருமி said:
  April 6, 2011 at 9:34 am

  ஆள வுடுங்கப்பா, ரொம்ப வேல கீது.

  Mani said:
  April 6, 2011 at 5:19 pm

  கிருமி சார், சூப்பர் உங்க அலசல் மிக அருமை

  சுக்கிரன் ராசியிலும் அம்சத்திலும் பலம் பெற்றதால் சுக்கிரன் ஆளுமை ஓ.கே. + ராகு ஆளுமையும் சரியாக வருகிறது. புதன் ஆளுமையும் சரி.

  ஆனால் ராசியில் சூரியன் நீசம் மற்றும் அம்சத்தில் புதன் வீட்டில் சமமாகின்றதால் வலிமையில்லை அப்படியிருக்க எப்படி டீம் லீடர் என்று சந்தேகத்துடன் நீங்க சொல்லிவைக்க அது மிகவும் சரியாக போய்விட்டதே கொஞ்சம் இடிக்கிற மாதிரி இருக்கிறதே.

  அப்புறம் வினோத் கேட்ட மாதிரி தொழில் இல்லை வேலைதான் அமையும்ன்னு எப்படி யூகிச்சிங்க கிரகங்கள் பலம் குறைவாக இருந்ததால் தானா இல்லை வேறு ஏதேனும் சிறப்பு விதிகள் உண்டா.

  எப்படியோ இந்த தடவை தப்பிச்சிட்டீங்க. கலக்குங்க.

   கிருமி said:
   April 6, 2011 at 6:47 pm

   //ஆனால் ராசியில் சூரியன் நீசம் மற்றும் அம்சத்தில் புதன் வீட்டில் சமமாகின்றதால் வலிமையில்லை .//

   சூரியனுக்கு வலிமை இல்லைன்னு எப்டி சொல்றீங்க? நீசம் தான் கேன்சலாயிடுச்சே. நீசமா இருந்தாத்தான் வலிமை குறையும், சமமாயிடறதால சுய பலம் வேலை செய்யுமே? அப்றம் புதன் அம்சத்துல பகைல இருக்கார், புதனை விட சூரியன் வலுவா இருக்கறதால, பதவியை நிர்ணயம் பண்றதுல‌ சூரியனே மேலோங்குவார் இல்லியா?

   //எப்படியோ இந்த தடவை தப்பிச்சிட்டீங்க.//

   எல்லா தடவையும் தப்பிக்க முடியுமா என்ன? எல்லாத்தையும் சரியா கணிக்க சோசியருக்கு முடிஞ்சா, இன்சூரன்ஸ் கம்பெனி மாதிரி ஆளுக்கெல்லாம் என்ன வேலை இருக்கும்? அப்றம் கடவுளை யார் நம்புவாங்க?

   கிருமி said:
   April 6, 2011 at 7:03 pm

   அண்ணே,

   ஜோசியம்கிறதே கிரக பலங்களை நிர்ணயிச்சி பலன் யூகிக்கிறது தானே. எந்த சிறப்பு விதியும் பல நிர்ணயத்துக்குள்ளே வரும், இல்லியா?

  கிருமி said:
  April 6, 2011 at 7:14 pm

  நா வரல சாமியோவ்…………. வேணாம், இத்தோட நிறுத்திக்குங்க, இல்ல ஓடிருவேன். (இத எழுதும் போது நடு இரவுக்கு மேல ஆயிருச்சிப்பா.)

   Mani said:
   April 7, 2011 at 6:03 am

   பயப்படாதீங்க கிருமி சும்மா கொஞ்சம் டீடெய்லா கேட்டா ஆட்டத்துக்கே வரலைன்னு ஓடினா எப்படி. சரி சரி நீங்க பாட்டுக்கு தொடர்ந்து கலக்குங்க (எழுதுங்க) நாங்க வேடிக்கை மட்டும் பார்க்கிறோம். சரியா.

    கிருமி said:
    April 7, 2011 at 12:36 pm

    நீங்க எப்டி எடுத்துக்கிட்டாலும் எனக்கு பிரச்சினை இல்ல, எனக்கு கொஞ்சம் வேலை அதிகம், அவ்ளோதான்.

    கன வேகத்துல தட்டச்சிடுவேன், ஆனா பதிவு போடறதுக்கு முன்னாடி திருத்த ரொம்ப நேரம் எடுத்துப்பேன். அனேகமா இன்னும் மூணு / நாலு நாளைக்கு எதுவும் பதிவு இருக்காது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s