ஒரு சிறு விளக்கம்

Posted on

பதிவர் : கிருமி

முருகேசன் அண்ணன் சொன்ன 10 இலாகாகளிலும் சேராத பதிவு. இது என்னைப் பற்றி, அண்ணன் கோவிக்க மாட்டாருன்னு நினைக்கிறேன்.

சமீபத்தில் அண்ணன் சொல்லியிருந்தார். இஸ்லாம் இஸ் தி பெஸ்ட் ரிலிஜன், பட் இஸ்லாமிக்ஸ் ஆர் ஒர்ஸ்ட் பாலோயர்ஸ்னு. இதற்கு நான் 100% உடன் படுகிறேன்.

என் வலைப்பூவை பார்ப்பவர்கள் பலர் எரிச்சல் அடைவார்கள். கிறித்துவர்களையும், முஸ்லீம்களையும், மலையாளிகளையும் கன்னா பின்னாவென்று தாக்கியிருப்பேன். படித்தால், ஏதோ நான் இவர்களைக் கண்டு கொலை வெறியுடன் அலைகிறேன் என்று தோன்றும்.

ஆனால், ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்தாறு முறையாவது நான் உச்சரிக்கும் வார்த்தை, “இன்ஷா அல்லா”. செல்பேசியில் என் காலை அலாரம் ஒலி “அல்லாஹூ அக்பர்”. இதை ரிங்டோனாகவும் சில சமயம் வைப்பதுண்டு. (ஒரு முறை காளஹஸ்தி கோவிலில், இந்த ரிங்டோன் ஒலித்ததும் பல நூறு பேர் அதி்ர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தனர்).

என் நண்பர்களில் ஐம்பது சதம் பேர் மலையாளிகள். என் தொழில் நண்பர்களில் பாதிக்கும் மேல் முஸ்லீம்கள் மற்றும் கிறித்துவர்கள். இவர்கள் எவருடனும் எனக்கு சிறு சலசலப்போ, மனத்தாங்கலோ கூட கிடையாது. காவி ஜிப்பாவில் மசூதிகளுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். திருநள்ளார் சென்றால் நாகூர் தர்கா செல்வதும் என் பழக்கம்.

தொழில் ரீதியில் முஸ்லீம் நண்பர்கள் எவரிடமும் நான் “இன்ஷா அல்லா” சொல்லியதில்லை, இந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் மட்டும் இப்படி சொல்வது என் நெடு நாள் பழக்கம். மேலும் பலர் செல்பேசியில் அழைக்கும் போது சலாம் அலைக்கும் என்று முகமன் சொல்வதும் என் வழக்கம் சில ஆண்டுகள் முன் வளைகுடாவில் பணியாற்றிய போது தொற்றிக் கொண்டவை இவை. ராகுவின் ஆதிக்கம் என் வாழ்வில் அதிகம் உண்டு, அதன் விளைவு தான் இவை போலும். இவை ஒரு பரிகாரம் போன்று செயலாற்றுவதும் அனுபவத்தில் தெரிகிறது.

எந்த மதத்தையும் ஊட்டி வளர்க்க தேவையில்லை, கோட்பாடுகள் சரியாக பின்பற்றப்பட்டால் அவை தானாகவே வளரும். அதே சமயத்தில் நானும் என் மதத்தை விட்டுக் கொடுப்பதில்லை என்ற முடிவில் உள்ளேன். அதன் விளைவுகளே என் மத ரீதியிலான விமர்சனப் பதிவுகள்.

அனுபவசோதிடத்தில் எழுத ஆரம்பித்த பின் என் வலைப்பூவிலும் சில நடமாட்டங்கள் தெரிகிறது, மேலும் செய்யது அண்ணன் வேறு மறுமொழி எழுதியுள்ளார். எனவே இந்த சுய விளக்கம்.  இது யாரையும் காக்கா பிடிக்கவோ, என் நடவடிக்கைகளுக்கு சப்பைக்கட்டு கட்டவோ எழுதப்பட்டதல்ல, இதுவே உண்மை.

பதிவர் : கிருமி

Advertisements

6 thoughts on “ஒரு சிறு விளக்கம்

  வினோத் said:
  April 6, 2011 at 10:27 am

  நண்றி…

  syed said:
  April 6, 2011 at 11:11 am

  கிருமி சார் திரமை எங்க இருன்தாலும் பாராட்டப்படனும்
  நீங்க வினொத்த பத்தி சொன்னது சாதாரனமா எல்லா ஜொதிடர்கலும் சொல்ல முடியாத விசயம் நெஜமாவெ உங்க ஜொதிட கனக்கை வியன்து தான் மரு மொழி போட்டென்

  மேலும் எனக்கு ராகு விர்ச்சிகத்துல உச்சம் லக்கினமும் அதெதான் கூடவெ லக்கினாதிபதி செவ்வாய் ஆட்சி கூடவே புதனும் சூரியனும் எல்லாரும் லக்கினதுலயே, நவாம்சத்துலயும் ராகு மட்டும் வர்கொத்தமம்.

  என்னப்பத்தியும் எதாவது சொல்லுவிங்கன்ர நப்பாசைலதான் உஙக பின்னாடி சுத்தி சுத்தி வர்ரென்

   கிருமி said:
   April 6, 2011 at 12:53 pm

   நன்றி அண்ணே.
   பலன்கள் எல்லா நேரத்துலயும் சரியா அமையறதில்ல‌, இது அனுபவம் சொல்றது.
   கொஞ்சம் டைம் கொடுங்க, அப்றமா சொல்றேன்.

    S Murugesan said:
    April 6, 2011 at 6:05 pm

    கிருமி சார்,
    //இவை ஒரு பரிகாரம் போன்று செயலாற்றுவதும் அனுபவத்தில் தெரிகிறது.//
    என் அனுபவமும் இதுவே.

    இந்த விளக்கததை மொதல் பதிவுலயே சொல்லியிருந்தா இன்னம் பெட்டரா இருந்திருக்குமே. பெட்டர் லேட் தேன் நெவர்.

    கிருமி said:
    April 6, 2011 at 6:37 pm

    அந்த பதிவே எவ்ளோ நீளம் பாருங்க.

  syed said:
  April 6, 2011 at 2:38 pm

  சரிங்க சார் தனுசுல சந்திரனும் சுக்கிரனும் (4இல் குரு )8இல் சனி ஃப்ரீயா இருக்கும்போது பார்து மெதுவா சொல்லுஙக
  குரிப்பா ராகு எப்டி படுத்துவார்னும் சொல்லுங்க
  நன்ரி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s