அனுமனை அண்டினால் சர்வதோஷ பரிகாரம்

Posted on

வழக்கமா ஒவ்வொரு கிரக தோஷம் குறைய ஒவ்வொரு சாமிய கும்பிடச்சொல்லி எங்காளுங்க ( ஜோதிடர்கள்).சொல்வாய்ங்க நம்ம பர்சனல் ப்ரிஸ்க்ரிப்ஷன் கடாசில தந்திருக்கன்.

ஆனால் அனுமனை அண்டி வணங்கினா, அவருக்கு ப்ரீதியான ராம நாமத்தை ஜெபிச்சா சர்வதோஷங்களும் பரிகாரமாவதோடு – ஆன்மீக ரீதியிலான முன்னேற்றமும் உறுதி என்பது என் அனுபவம்.

நான் ஏற்கெனவே பல தடவை சொன்னாப்ல “பலான மேட்டரு” காதல் கத்திரிக்கா காரணமா நம்ம சுயமரியாதைக்கு பங்கம் வர்ரதை ஃபீல் பண்ணி “அதை” செயிக்கத்தேன் அனுமாரை புடிச்சேன். அவருக்கு புடிக்குமேனு ராம நாமத்தை புடிச்சேன்.

இத்தினி நாளு நம்ம ஜாதகத்தை பத்தி பயங்கரமா பீத்தியிருப்பன்.ஆனால் இதுல உள்ள ஒரு பயங்கரத்தை இப்ப ப்ளாஸ்ட் பண்றேன்.

6,8,12 ஸ்தானங்களை பத்தி ஏற்கெனவே சொல்லியிருக்கேன். இவிகளோட “வீர தீர பிரதாபங்களை” மறுபடி சொல்லதேவையில்லைனு நினைக்கிறேன். இந்த 3 ஸ்தானாதிபதிகள் 6,8,12 ஸ்தானங்களுக்குள்ளயே மாறி உட்கார்ந்தா ஜாதகம் சேஃப். ( மாறி உட்காரனும் பாஸ். அதாவது 6 க்கு அதிபதி எட்டுல ,எட்டுக்கதிபதி 12 ல மாதிரி )

இந்தபாவாதிபதிகள் மேற்படி 3 இடங்கள்ள ஏதோ ஒரு இடத்துல சேர்ந்துட்டா அது விபரீதராஜயோகம். . இதெல்லாம் பாசிட்டிவ்.

ஆனால் நம்ம ஜாதகத்துல எக்கு தப்பா இவிக லக்னத்தோட சம்பந்தப்பட்டுட்டாய்ங்க. லக்னம்ங்கறது ஜாதகரை காட்டற இடம். 6ன்னா கடன், நோய்,விரோதம்,வழக்கு – 8ன்னா மரணம் – 12ன்னா வீண் விரயங்கள்.

லக்னத்துலயே 6 க்கு அதிபதி – 12க்கு அதிபதி இருக்க, 6க்கு அதிபதி 9 ல உள்ள அஷ்டமாதிபதியை பார்க்கறாருங்க. இதனோட பலன் என்னானு தந்தில ராசிபலன் படிக்கிற பார்ட்டி கூட கெஸ் பண்ணிரலாம். அதாவது பார்ட்டி டிக்கெட் வாங்கிரனும் – இல்லாட்டி மஞ்ச கடிதாசு கொடுக்கனும் – அல்லது கோர்ட்டுல குடியிருக்கனும்.

சுக்கிர தசை நடக்கிற வரை ( இவரு ரெண்டுல இருக்கிறதால தப்பிச்சேன்) இதெல்லாம் ஒன்னும் டிஸ்டர்ப் பண்ணலை. தாளி சூரியதசை ஆரம்பமாச்சு 6,8,12 அதிபதிகளோட லீலை ஆரம்பமாயிருச்சு. சூரிய தசை 6 வருஷம், ( 20/Apr/1993 முதல் 20/Apr/1999 வரை) சந்திர தசை ( 20/Apr/1999 முதல் 19/Apr/2009 வரை).
மேற்படி டிக்கெட் – மஞ்சகடிதாசு – கோர்ட்டுல குடித்தனம்லாம் கன ஜோரா நடக்கவேண்டிய நேரம். தசா நாதர்களுக்கு 6,8,12 அதிபதிகளுடன் தொடர்பு.

ஆனால் பாருங்க ஆஞ்சனேயர் அருளால மைனஸ் எல்லாம் ப்ளஸ் ஆகி ஒரு சரித்திரமே உருவாகிப்போச்சு. ( உங்கள்ள பலருக்கும் இதெல்லாம் பழங்கதைங்கறதால் ஐ டோன்ட் வான்ட் டு ரிப்பீட்)
ஆஞ்சனேயருக்கும் நமக்கும் ஒரு இன்டிமசியே இருந்தது . (இப்பயும் இருக்கிறதா ஒரு நினைப்பு)

சரி ஆஞ்சனேயரை வணங்கறதால ராம நாமம் சொல்றதால சர்வதோஷங்களும் எப்படி பரிகாரம் ஆகும்னு சொல்றேன்.

1.அவர் சூரியன் கிட்டே படிச்சதால, சூரியனை பழம்னு நினைச்சு பிடிக்க பாய்ஞ்சதால சூரியனுக்கு பரிகாரம்.

2.கடல் தாண்டி இலங்கை போனதால சந்திரனுக்கு பரிகாரம்.

3.யுத்தத்துல துள் பறத்தினதால செவ்வாய்க்கு பரிகாரம்.

4.இலங்கைக்கு போய் “வேவு” பார்த்ததால ராகுவுக்கு பரிகாரம்

5.சீதைங்கற ஆத்மா ராமன் என்ற பரமாத்மாவோட இணக்கமா வாழும்போது பொன்மான் என்ற உலக பொருள் மேல ஆசையால பரமாத்மாவை பிரிஞ்சுருச்சு. இனி பரமாத்மன் வரவே மாட்டானோங்கற குழப்பத்துல (சீதை) தற்கொலைக்கு ட்ரை பண்ணப்போ ” இல்லே கண்ணு .. தலைவன் இருக்கான். வரான். வந்துக்கிட்டே இருக்கான்”னு உபதேசம் பண்ணதால குருவுக்கு பரிகாரம்.

6.ராமனோட அடிமைங்கறதால சனிக்கு பரிகாரம்

7ராம தூதனா ராவணனை டீல் பண்ணதால புதனுக்கு பரிகாரம்

8..கண்ணாலம்,காட்சி எதுவுமில்லாத நித்ய ராம நாம பஜனையில இருக்கிறதால கேதுவுக்கு பரிகாரம்

9.ராமன் களத்ரத்தை ( சீதை) இழந்து தவிச்சப்ப ராமனை சீதையோட சேர்த்துவச்சதால சுக்கிரனுக்கு பரிகாரம்.
//.செக்ஸ் மேட்டர்ல ப்ராக்டிக்கல் அப்ரோச் உள்ள ஒரே மதம் இஸ்லாம் தான், இன்னம் நிறைய பாய்ண்ட்ஸ் இருக்கு. ..// இத பற்றி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க..

எந்தகிரகம் சரியில்லைன்னா எந்த சாமிய கும்பிடனும்?

சூரியன் – காயத்ரி / சூரியன்
சந்திரன்- கன்னியாகுமாரி
செவ்வாய் – முருகன்
ராகு -துர்கை
குரு – தட்சிணா மூர்த்தி / ஷீர்டி பாபா போன்ற குருக்கள்
சனி – வராஹ ஸ்வாமி , வாராஹி
புதன்- கிருஷ்ணர்
கேது – வினாயகர்
சுக்கிரன் -லட்சுமி

Advertisements

15 thoughts on “அனுமனை அண்டினால் சர்வதோஷ பரிகாரம்

  வணக்கம் முருகேசன் சார் …

  ஒரு கிரகம் ஒருவருக்கு சரியில்லை என்றால் அந்த கிரகத்தையோ அல்லது அதன் அதி தெய்வத்தையோ அல்லது அதன் சார்புடைய கோயிலையோ தரிசிக்கக் கூடாது ,,, அப்படி செய்தால் அந்த கிரகத்தின் பலம் கூடி அது தீயகிரகமாக இருக்கும் பட்சத்தில் அது நமக்கு தீமையே செய்யும் என சில சோதிடர்கள் கூறுகிறார்கள் – இது குறித்து விளக்க வேண்டுகிறேன்…

  எடுத்துக்காட்டாக குரு மாரகாதிபதி என்றால் அந்த குரு திசை நடக்கும்போது – தட்சிணா மூர்த்தி யை வழிபடக் கூடாது என்றும் + திரு ஆலங்குடி போன்ற குரு ஸ்தலங்களுக்கு செல்லக் கூடாது என்றும் கூறுகின்றனர் இது குறித்து சொல்லுங்கள் ஐயா ..

  ( ஹி ஹி ஹி… குருவையே சுத்தி வர்ற ரகசியம் தான் உங்களுக்கு தெரியுமே )

   S Murugesan said:
   April 6, 2011 at 9:31 am

   ஜானகி ராமன் சார்,
   அவிக எந்த கணக்குல சொன்னாய்ங்களோ எனக்கு தெரியலை. கிரகம் நோய்னா கிரகஸ்தலம் ஆஸ்பத்திரி மாதிரி. டிபி வந்தப்ப டிபி ஹாஸ்பிட்டல் போகாதேங்கற மாதிரி இருக்கு இது.

   ஆனால் நான் சொல்ற கணக்கு என்னன்னா மேற்படி ஸ்தலங்களுக்கு வர்ரவுகல்லாம் (முக்கியமா திரு நள்ளாறு) குறிப்பிட்ட கிரகம் சரியில்லாமத்தேன் வராய்ங்க. அதுவும் குறிப்பிட்ட நாள் நட்சத்திரத்துல வராய்ங்க.

   அப்போ அந்த ஸ்தலத்தோட வைபரேஷனே மாறிப்போயிரும். ( நெகட்டிவா) வேணம்னா நேரம் கெட்ட நேரத்துல ஐ மீன் விசேஷமல்லாத சாதாரண நாள்ள போய் வர்ரது பெஸ்ட் என்பது என் கருத்து.

  P.A.Kumar said:
  April 6, 2011 at 2:48 am

  //சீதைங்கற ஆத்மா ராமன் என்ற பரமாத்மாவோட இணக்கமா வாழும்போது பொன்மான் என்ற உலக பொருள் மேல ஆசையால பரமாத்மாவை பிரிஞ்சுருச்சு. இனி பரமாத்மன் வரவே மாட்டானோங்கற குழப்பத்துல//

  தல, இது மாயை இல்ல. இராமாயணம் இப்பதான் புரியுது.

  இந்த ‘ராம்’ காப்பத்துமா!

   S Murugesan said:
   April 6, 2011 at 9:27 am

   குமார் சார்,
   ஏசு நாதர் நோயாளிகளை எல்லாம் தொட்டு சொஸ்தப்படுத்திக்கிட்டே போறாரு.அப்ப ஒரு தாய்குலம் ( அவிகளுக்கு கைனகாலஜிகல் ப்ராப்ளம் – நிற்காத ரத்தப்போக்கு) பின்னாடி வந்து ஏசுவோட வஸ்திரத்தை தொட்டுடறாய்ங்க. ஒடனே அவிக பிரச்சினை ஃபணால். அப்போ ஏசு சொல்றாரு

   ” உன் விஸ்வாசம் உன்னை சொஸ்தப்படுத்தியது”

   ராம் காப்பாத்துமோ காப்பாத்தாதோ உங்க விஸ்வாசம் ( நம்பிக்கை) உங்களை நிச்சயம் காப்பாத்தும்.

  Anbarasu said:
  April 6, 2011 at 3:42 am

  Please provide some info on how and when to perform Hanuman Pooja for sarvadosa nivaranam.

   S Murugesan said:
   April 6, 2011 at 9:24 am

   அன்பரசு சார்,
   பெரியவுக சொன்ன கணக்குப்படி சனி அ செவ் கிழமை விசேஷம். ஆனால் நம்ம அனுபவம் தான் சர்வதோஷ பரிகாரம்னு சொல்லுதே. எந்த நாளானாலும் சரி அனுமனை பூசிக்கலாம்.

   மத்த சாமிங்களுக்கும் பாஸுக்கும் என்ன வித்யாசம்னு கூடிய சீக்கிரம் ஒரு தனிப்பதிவே போடறேன்.

    Anbarasu said:
    April 7, 2011 at 5:32 am

    Mikka Nanri

  rajesh said:
  April 6, 2011 at 4:51 am

  ஜானகிராமன் அண்ணா எனக்கு குரு திசை நடக்கிறது என்னுடைய ராசி மகரம் குரு மூன்றாம் வீட்டிற்க்கு வரும் போது நீண்ட நாள் நண்பன் என்னுடைய எதிரியாக மாறினான். நான் ஆலங்குடி கோவில் சென்றபிறகுதான் சண்டை முடிவுக்கு வந்தது ஆனால் இருவரும் பிரிந்துவிட்டோம். என்னுடைய அனுபவம் சாட்சிகாரன் காலில் விலுவதுவிட சண்டைகாரன் காலில் விழுவது மேல். குரு மன்னித்துவிட்டார். முருகேசு அண்ணனின் பதிலையும் பார்க்கலாம்.

  நன்றி ராஜேஷ்… இது பற்றி முழுமையா தெரிஞ்சிக்கிட்டா நாம நாலு பேருக்கு சொல்லலாம் இல்லையா ? அதான் கேட்டேன் . முருகேசன் சார் உங்க பதிலுக்காக நாங்க வெயிட்டிங்

  Thirumurugan MPK said:
  April 6, 2011 at 7:02 am

  Sir, Lets create moment from our bloggers, i am ready to do my best part in this.

  Join Anna Hazare in fast unto death to demand anti-corruption law

  http://indiaagainstcorruption.org/citycontacts.php
  http://www.facebook.com/IndiACor

   S Murugesan said:
   April 6, 2011 at 9:20 am

   திருமுருகன்,
   இன்னைக்கு ஒரு பதிவு வருது.

  ராஜா said:
  April 7, 2011 at 1:41 pm

  வணக்கம், அருமையான பதிவு, ஒரு சிறு விளக்கம் வேண்டுகிறேன், ராம நாமம் என்பது “ராம ராம” என்று மட்டும் சொல்வதா அல்லது வேறு ஏதேனும் உள்ளதா? மேலும் இதை சொல்வதற்கான நேரம்?( அதாவது சாமி கும்பிடும்போது மட்டுமா, அல்லது பிற நேரங்களிலுமா?)

   S Murugesan said:
   April 7, 2011 at 5:17 pm

   ராஜா,
   மாந்த்ரீக முறைய வச்சு சொன்னா “ராம்” ரொட்டீனா ஜபிக்கிறாப்ல இருந்தா “ராமா”
   மூலமந்திரம்னு கேட்டா இருக்கு. ஆனால் அதை ஆடியோ ஃபைலா போடறதுதான் பெட்டர்.(உச்சரிப்பு முக்கியம்)

   இருந்தாலும் உங்க ஊர்ல விவரம் தெரிஞ்சவுக கிட்ட சரி பார்த்துக்கிட்டு ஜெபிக்கிறாப்ல இருந்தா மூலமந்திரம் கீழே.

   ஸ்ரீ ராம ராம ராமேட்டி ரமே ராமே மனோரமே
   சஹஸ்ர நாம தத்துல்யம் ஸ்ரீராம நாம வரானனே

    ராஜா said:
    April 8, 2011 at 4:21 am

    மிக்க நன்றி, மூல மந்திரத்தை தெரிந்தவர்களிடம் உச்சரிப்பை கேட்டு பார்க்க முயற்சி செய்கிறேன்.

  R.SENTHILKUMAR said:
  August 18, 2011 at 11:48 am

  Message : Sir, My Date of Birth is 06.09.1975 at 10.25 a.m in Tirupur/Tamilnadu.
  Still i have not get marriage and a proper bussiness. can you give some parikaram
  to get marriage soon and start a bussiness. if i want to go any temple regularly.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s