ஜோதிடமும் நிறங்களும் – T.A. KANDHAN

Posted on

பதிவரின் மெயில் முகவரி: kandhan.t@gmail.com
ஜோதிடத்தில்  சூரியனுக்கு  7 குதிரைகளை வாகனமாக கூறப்பட்டுள்ளது. ஏன்? அது ஏழாவே இருக்கனும்?1,2,3,4 என்று ஏதேனும் ஒரு எண்ணிக்கையை   காட்டியிருக்கலாமே? 

இதன் சூட்சுமம்  என்னவென்றால் நவீன விஞ்ஞானம் சூரிய ஒளியில் 7 வண்ணங்கள் (vibgyor ) இருப்பதாக கண்டு பிடிதுள்ளது. 

ஜோதிடத்தில் ஒவ்வொரு கொள் மற்றும் ராசிகளுக்கு ஒவ்வொரு நிறம் தரப்பட்டுள்ளது.

சூரியன் – தாமிரம்
சந்திரன் – வெள்ளை
செவ்வாய் – சிவப்பு
புதன் – பச்சை
குரு – மஞ்சள்
சுக்ரன் – வெள்ளை
சனி – கருப்பு
ராகு – கரு நீலம்
கேது – பல வண்ணம் / சாம்பல்

மேஷம்-சிவப்பு
ரிஷபம்-வெள்ளை
மிதுனம்-பச்சை
கடகம்-பல வண்ணம்
சிம்ஹம்-வெளிர் சிவப்பு
கன்னி-பல வண்ணம்
துலாம்-கருப்பு
விருசிகம்-சிவப்பு+பழுப்பு
தனுசு-மஞ்சள்
மகரம்-பல வண்ணம்
கும்பம்-பழுப்பு /ஊதா
மீனம்-கரு பழுப்பு /வானத்தின் நிறம்

சரி. இதுனாலே எனக்கு என்ன பிரயோஜனம்?
 
இருக்கு. நிறத்தை ஆதாரமாக வைத்து நிறைய பரிகாரங்கள் செய்யலாம். 
 
(உ.ம்)
1  எனக்கு குரு நீச்சம். குரு திசை சுமாராதான் இருக்கும். கனக புஷ்பராகம் வாங்கற அளவுக்கு வசதி இல்லை. என்ன பண்ணலாம்?

     ஒரு மஞ்சள் துணியை எப்பொழுதும் உங்க கிட்ட வச்சிக்குங்க.
 
2   பத்துல சுக்ரன் இருந்தும் பிரயோஜனம் இல்லியே?
 
     உத்தியோகத்துக்கு போகும் போது வெள்ளை உடை அணிந்து செல்லவும்.
 
 
3  என் குழந்தையின் படிப்பு சுமாரா இருக்கு.
 
      ஒரு பச்சை வர்ண பாட்டிலில் தண்ணீர் நிரப்பி தங்கள் குழந்தைக்கு கொடுத்தனுப்பவும்.   குழந்தை உறங்கும் அறையில் பச்சை நிற இரவு விளக்கு வைக்கவும்.
 
 
சரி. இந்த ராசி நிறத்தை எப்படி உபயோகிக்கலாம்?
 
கோள் இருக்கும் ராசியின் அதிபதி அதற்கு நண்பனாக இருந்தால் ராசியின் நிறத்தை உபயோகித்து அந்த கோளை முடுக்கி விடலாம்.
 
 (உ-ம்)
சனீஸ்வரன் மிதுன ராசியில் இருந்தால், உங்களிடம் வேலை பார்ப்பவர்களுக்கு பச்சை நிற உடை கொடுக்கவும்.

9 thoughts on “ஜோதிடமும் நிறங்களும் – T.A. KANDHAN

  syed said:
  April 5, 2011 at 10:53 am

  usfull post

  PERUMALSHIVAN.S said:
  April 5, 2011 at 11:21 am

  naan anthantha raasi athipathigalin nirame raasigalukkum varumnu ninaichen .aanaal viththiyasama erukku ok

  Manivannan said:
  April 5, 2011 at 1:49 pm

  தலைவரே, என் ஜாதகத்துல 8-இல் சுக்கிரன்+கேது இருக்காங்க. ஆனா 4-இல் குரு இருந்து 5 -ஆம் பார்வையா எட்டாம் வீட்ட பார்கிரதால சுக்கிரனுடைய நல்ல பலன் அதிகமாவும், கேதுவின் கெட்ட பலன் குறையவும் செய்யுமா? குறிப்பு: 4-இல் குருவுடன் சனியும் சேர்ந்துள்ளது. ஆனால் சனி 8 -ஐப் பார்க்கவில்லை.

   S Murugesan said:
   April 5, 2011 at 2:14 pm

   பாஸ்,
   சுக்கிரனோட கேது சேர்ந்தாலே முடிஞ்சது கதை . இதுல எத்தீனி பார்வை கிடைச்சாலும் ஆப்பு ஆப்புதேன். அது என்னானு சொன்னா ரெம்ப பர்சனலா போகும். ஸோ நான் அம்பேல். டைரக்டா பரிகாரம் சொல்றேன். சூட்சுமத்துல மோட்சம்.

   குரான் ,பைபிள் படிங்க. சர்ச்,தர்கா போங்க (திருமணமாகியிருந்தா தம்பதி சமேதரா). ப்ராப்ளம் சால்வ்டு ( ஏறக்குறைய)

    Manivannan said:
    April 5, 2011 at 5:39 pm

    தலைவா,
    இந்த பரிகாரத்தை, அதாவது மேற்கத்திய அல்லது அந்நிய ஆன்மிகத்தை (freewill and law of attraction) இதையெல்லாம் பற்றி படிக்கிறேன். இவற்றை சுக்கிர, கேது தசா புத்திகளில் செய்ய வேண்டுமா அல்லது இப்பொழுது கூட செய்யலாமா?

    S Murugesan said:
    April 5, 2011 at 7:00 pm

    மணிவண்ணன் சார்,
    உங்க வயசு எத்தனையோ அத்தனை நாள் தொடர்ந்து படிங்க. இது எல்.ஐ.சில பெண்டிங் ப்ரிமியம் கட்டற மாதிரி. அதுக்கப்பாறம் வாரத்துல குரான் ஒரு தினம் பைபிள் ஒரு தினம் படிங்க. உங்க வயசத்தனை நிமிடங்களாச்சும் படிக்கனும்.

    விபத்து நடந்த பிறவா இன்ஷ்யூர் பண்ணுவம்? உடனே பண்ணுங்க. விபத்து காலத்துல சேஃப் ஆயிரலாம்

  நல்ல பதிப்பு – கந்தன் சாருக்கு பாராட்டுக்கள் …

  முருகேசன் சார் நாங்க ஏற்கனவே கேட்டபடி ஒரு கிரகம் ஒரு ஜாதகருக்கு மாரகாதிபதி அல்லது பாதாகதிபதி என்னும்போது அந்ந கிரகத்தின் திசையில் அந்த கிரகத்தின் நிறத்தை பயன்படுத்தலாமா ? கூடாதா ?

   S Murugesan said:
   April 6, 2011 at 9:32 am

   ஜானகி ராமன் சார்,
   இதைப்பத்தி தனிப்பதிவே போட்டாகனும். போட்டுருவம். வெய்ட் ப்ளீஸ்

    kandhan said:
    April 6, 2011 at 9:55 am

    ம்ம்ம். மீனு தூண்டில மாட்டிகிச்சு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s