நீங்க எழுதினா ( தான்) நான் எழுதுவேன்

Posted on

அண்ணே வணக்கம்ணே,
ஆரம்பிச்சு சிலமாதங்களே ஆன அனுபவ ஜோதிடம் டாட் காம் அலெக்ஸால 20 ஆயிரத்துக்கு வந்துருச்சு. ஆனால் ஆரம்பிச்சு 11 வருடங்களான கவிதை07 25 ஆயிரத்துலருந்து 50 ஆயிரத்துக்கு போயிருச்சு. அதுக்காக தினசரி இரண்டுலயும் பதிவு போடற “தேஜஸ்” இப்ப இல்லை. (ஒரு காலத்துல அரைடஜன் பதிவெல்லாம் போட்டிருக்கேன் – ஹும்..அது அந்த காலம்)

இன்னைலருந்து பதிவெழுதறதையே விட்டுட்டு வெறும் ஜாதகபலனே எழுத ஆரம்பிச்சாலும் பெண்டிங்ல உள்ள ஜாதகங்களுக்கெல்லாம் பலன் எழுதி முடிக்க ஒரு மாசம் ஆயிரும்போல இருக்கு.

( ஜோதிட ஆர்வலர்கள் இதை கவனிக்கவும் : 2011 ,ஏப்ரல்,21 வரை யாரும் என் வங்கி கணக்குக்கு ஃபண்ட் ட்ரான்ஸ்ஃபர் செய்ய வேணாம். மீறி செய்தாலும் ஏப்ரல் 21 க்கு அப்பாறம் தான் ஜோதிட பலன் அனுப்பப்படும் ……….ஸ் அப்பாடா! )

ரெண்டுலயும் எழுதமுடியாது. ( அட ஒன்னுல எழுதறதே கஷ்டமா இருக்கு ) இதுக்கெல்லாம் தீர்வு தான் என்ன?

அட.. இப்படி சொல்லிட்டா .. நீங்க எழுதினா ( தான்) நான் எழுதுவேன். ஆமாங்கண்ணா 1,500 பதிவுகளுக்கு மேல எழுதியும் எனக்குள்ள ஒரு கில்ட்டி இருக்கு. எதை எழுதறதுங்கற என் ப்ரியாரிட்டீஸை நானே கவர் பண்ணலை. இந்த அழகுல மத்தவுகளை குறை சொல்லி என்ன பயன்?

என் ப்ரியாரிட்டீஸ் இதுதான்.

1.மனித உயிர்களுக்கு பெருகி வரும் ஆபத்தை சுட்டிக்காட்டும் பதிவுகள், தீர்வுகளை முன் வைக்கும் எழுத்துக்கள்

2.உணவுப்பாதுகாப்புக்கு எழுந்துள்ள சவால்கள் – சத்துக்குறைபாடு, அதனால் எழும் பிரச்சினைகள் – உணவுப்பொருட்களில் கலப்படம் -பதுக்கல் – ஆன் லைன் ட்ரேடிங்- ரேஷன் கடைகளின் கோல்மால்கள் முதல் அரசின் கொள்கை முடிவுகள் வரை

3. நிற்க நிழலில்லாத ஜீவன்கள், பிளாட்பார வாசிகள்,குடிசை வாசிகள்,ஒண்டு குடித்தன வாசிகள், வாடகை வீடுகளில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகள்

4.கல்வி துறையின் மாயாஜாலங்கள் தனியாரின் கொள்ளை – அரசியல் சக்திகளின் தனி/கூட்டு கொள்ளைகள் – கல்வித்தரம்

5.வேலையின்மை, சுய வேலை வாய்ப்பு, சுய தொழில் , குடிசைத்தொழில், சிறு தொழில் அதிபர்களின் பிரச்சினைகள்.

6. காதல் -காமம் -குழந்தை பிறப்பு இத்யாதி தொடர்பான பிரச்சினைகள் -தீர்வுகள்

7.சுற்றுச்சூழல் – பொல்யூஷன் -காரணங்கள் – விளைவுகள்- தீர்வுகள். தனி மனித அக்கறையின்மையிலிருந்து உலகவங்கி வரை எல்லாருக்கும் இதுல பங்கு இருக்கு. இந்த உண்மைய புரிந்த அ புரிய வைக்கிற பதிவுகள்.

8.மக்கள் பிரச்சினைகளை பேசி – தீர்வுகளை முன் வைக்கும் கலை -இலக்கியம்- பண்பாடு – ஹ்யூமன் வேல்யூஸ்

9. மிஸ்டிக் சைன்ஸஸ் – ஜோதிடம் -வாஸ்து -கைரேகை முதல் டெலிபதி வரை

10. ஆன்மீகம் – தியானம் -யோகா

மேற்படி ப்ரியாரிட்டீஸ்ல என் ப்ளாக்ல எழுதுங்க. எனக்கு பிடிச்சா சில்லறையா ரூ.100 எம்.ஓ அனுப்பறேன்னு கூட ஆசை காட்டி பார்த்தேன். ஒண்ணும் பேரலை. ஒரே ஒரு ஆசாமி கூட ஒரு ஜோக் கூட எழுதி அனுப்பலை.

சரி சனத்தோட ஈகோவை சீண்டிட்டோம் போலிருக்குனு அந்த ஆஃபரை அப்படியே விட்டுட்டன். இந்த முறை பரிசு மேட்டரை சைலண்டாக்கிட்டு 1,500 பதிவுகள் போட்டிருக்கிற உரிமையில “கோச்சுக்கிட்டு” சொல்றேன்.

இனி நீங்க எழுதினாத்தான் நான் எழுதுவேன். ஐ மீன் மேற்சொன்ன பத்து சப்ஜெக்டுல ஆரு வேணம்னா எழுதலாம். தொடர்ந்து எழுதறாப்ல இருந்தா தெரிவிங்க. ஆத்தரா இன்வைட் பண்றேன். இல்லாட்டி என் மெயிலுக்கு அனுப்புங்க. நான் பப்ளிஷ் பண்றேன்.

படித்தவர் எல்லாம் எழுதலாம்:

“கேட்டவர் எல்லாம் பாடலாம்”னுட்டு ஒரு பழைய பாட்டு ஆரம்பமாகும். இது நெஜம்தான். கேட்டவுகல்லாம் பாடலாம்.( இதை சனம் காது கொடுத்து கேட்கிறது கேட்காதது அவிகவிக பொறுமைக்கு சம்பந்தப்பட்ட மேட்டர்)

இதை “படித்தவர் எல்லாம் எழுதலாம்” னு லேசா மாத்தி சொன்னா மறுக்கவா முடியும்?

கண்பார்த்தா கை செய்யும். ( நான் நீலப்படத்தை மட்டும் சொல்லலை) . நாலாவது வயசுலருந்து என்னை ஸ்கூலுக்கு அனுப்ப ட்ரை பண்ண எங்கம்மா இதெல்லாம் வேலைக்காகாதுன்னுட்டு வீட்டு சிமெண்ட் தரையையே ப்ளாக் போர்டாக்கி பாடம் நடத்தினாய்ங்க.

அப்ப அவிக சொன்ன பஞ்ச் இன்னும் ஞா இருக்கு “சித்திரமும் கைப்பழக்கம் – செந்தமிழும் நாப்பழக்கம் . இன்னைக்கு சனம் பேசற தமிழை கேட்டா வாழ்க்கையே வெறுத்துப்போகுது.( உங்க தமிழை படிச்சா எங்களுக்கும் அப்படித்தான் இருக்குனு முனுமுனுக்கறது கேட்குது. ( முனுமுனுவுக்கு சின்ன னுவா? பெரிய னுவா? அழகில டைப் பண்றப்ப “அக்கு” ( ஆயுத எழுத்து வர எதை அழுத்தனும்?)

பேச்சு,எழுத்து எல்லாமே புத காரகத்வம். கம்யூனிகேஷன். புதன் பெட்டரா உள்ளவுக எல்லாருமே எழுதலாம். உங்க ஜாதகத்துல புதன் பெட்டரா இருக்காரா இல்லியானு தெரிஞ்சிக்க சில டிப்ஸ்.

1ஸ்கின் ப்ராப்ளம் இருக்காது.
2.தாய்மாமன்,மாமனார் எல்லாம் சவுண்ட் பார்ட்டியா இருப்பாய்ங்க -அவிகளோட உங்களுக்கு நல்ல ரிலேஷன் இருக்கும்.
3.உங்க தொழில் நட்புகளை தாண்டி எல்லா வட்டத்துலயும் ( சதுரத்துல கூட) தொடர்புகள் இருக்கும் (கள்ளத்தொடர்பு இல்லிங்கோ)
4.கீல், அண்டம் தொடர்பான பிரச்சினைகள் இருக்காது.
5.பொருத்தமான இடத்துல பொருத்தமான உவமானம்,உவமேயம்,பழமொழி எல்லாம் கோட் பண்ணி பேசுவிங்க
6.போஸ்டல், கூரியர்,மருத்துவம், ஏஜென்சி,டீலர்ஷிப்,ஸ்டேஷ்னரி,அக்கவுண்ட்ஸ்,ஆடிட்டிங், சாஃப்ட்வேர் மாதிரி துறைகள்ள இருப்பிங்க.
7.கணக்குல புலியா இல்லாட்டாலும் பூனையா இருக்கமாட்டிங்க.

என்ன பாஸ் ! பேச்சுன்னா பேச்சுத்தான். நம்ம கவிதை07ல மேற்படி பத்து ப்ரியாரிட்டீஸ்ல எழுதனும். ( ஜோதிடம் வாஸ்து ஆன்மீகம்னா அனுபவஜோதிடம் டாட் காம்லயே எழுதலாம்) உங்கள்ள யார் ஒரு பதிவை எழுதினாலும் என் பங்குக்கு நான் ஒரு பதிவு எழுதுவேன். பாட்டுக்கு எதிர்பாட்டு மாதிரி. கவர் ஓட்டு மாதிரி.

நீங்க ஆரும் எழுதலைனா நானும் எழுத மாட்டேன். அம்பேல் ..

Advertisements

26 thoughts on “நீங்க எழுதினா ( தான்) நான் எழுதுவேன்

  சார் … என்ன இப்படி திடீர்னு ஒரு முடிவு ? இருந்தாலும் உங்க ஆதங்கம் புரியுது…

  ஓகே இதுவும் நல்லாத்தான் இருக்கு … உங்க மூலமா நிறைய எழுத்தாளர்கள் உருவாகனும் னு ஆண்டவன் நினைக்கிறார் …

  நல்ல யோசனைதான்… அதுமட்டுமில்லே உங்க பிளாக்லே இன்னொருத்தரை எழுதச் சொல்றதே ஒரு பெருந்தன்மை தான் … வாழ்த்துக்கள்…

  நாங்க முயற்சி பண்றோம் ( நாங்க முப்பது பக்க பார்ட்டி தெரியுமிலே ? )
  சைவ சித்தாந்த பயிற்சி ( செமினார் போல ) வகுப்புகளில் 6 மணி நேரம் பேசி
  பேசி – இப்போ எழுத்து கூட நீளுளுளுளுது …

  ஓகே விரைவில் ( அது எப்போனு தெரியலே ) நாங்க ஒரு பதிவை
  ( கிறுக்கலை ) அனுப்பறோம்,,

  இது எதுக்கு தெரியுமா ? உங்ககிட்டேயிருந்து விசய ஞானத்தை நாங்க வாங்கிக்கத்தான் ….

  நன்றி சார்..

   S Murugesan said:
   April 3, 2011 at 3:43 am

   வாங்க ஜா.ராமன் நன்றி. என் நோக்கத்தை புரிஞ்சிக்கிட்டிங்க. தங்கள் பதிவு நான் குறிப்பிட்ட பத்து ப்ரியாரிட்டில இருக்கனும். ஜோதிடம் ,வாஸ்துன்னா இங்கனயே போடலாம். மற்றவற்றை கவிதை07 ல போட்டுக்கலாம். ஓகேவா? உடுங்க ஜூட்

  டவுசர் பாண்டி said:
  April 3, 2011 at 4:23 am

  இன்னாப்பா முர்கேசு, திடீர்னு இப்புடி குண்ட தூக்கி போடுற எனுக்கும் ஏதாச்சி எழுத ஆசதான். ஆனா நம்ம ரைட்டிங் கக்கூசுல கிறுக்குணா மாறி சோக்காருக்கும். ஆராச்சும் சகிச்சிக்கினா பர்வால்ல. குணா கமல் மாரி யோசிக்க வச்சிட்டீயே நைனா. நாங்களும் பட்டைய கெளப்புவோம்ல.

   S Murugesan said:
   April 3, 2011 at 9:09 am

   பாண்டி,
   நீங்கள்ளாம் பட்டைய கிளப்பனும்னுதேன் இந்த ஸ்ட்ரைக்கே! கிளப்புங்க..

  R.Puratchimani said:
  April 3, 2011 at 6:12 am

  ஏன் பாசு ஏன்? எதுக்கு? எதனால இப்படி? (வடிவேலு சொல்ற மாதிரி படிக்கணும்)

  நாங்கல்லாம் எழுதினா அது சுனாமி வர மாதிரி பரவா இல்லையா? பின்னாடி பீல் பண்ணகூடாது.
  முயற்சி பண்ணுவோம்

   S Murugesan said:
   April 3, 2011 at 8:59 am

   புரட்சிமணி,
   பூகம்பம்,சுனாமி சேர்ந்தே வராப்ல கூட எழுதுங்க. பாண்டிக்கு சொன்னதை ஒரு தாட்டி ஓட்டிப்பார்த்துட்டு எழுதுங்க தலை!

  டவுசர் பாண்டி said:
  April 3, 2011 at 8:23 am

  நம்ம கைலயும் சோசியக்காரவுகளுக்கு பேதியாகுற மாரி நெரிய ஸ்டாக் இருக்கு நைனா. அப்பால நீ சென்ஸாரு பன்னமாட்டேன்னு சூடம் யேத்தி சத்தியம் பண்ணாத்தேன் சரக்கு டோர் டெலிவெரி ஆகும். இன்னா நைனா, வஸ்தி எப்டி? டீலா? நோ டீலா?

   S Murugesan said:
   April 3, 2011 at 8:58 am

   பாண்டி,
   நமக்கு வயசு 42. இதுக்கு மேல புதுசா பொயப்ப தேடனும்னா கஸ்டம் தலை. நமக்கு ஆயிரத்தெட்டு வித்தை கைவசம் இருந்தாலும் சனம் சோசியத்தைதான் நல்ல விலை கொடுத்து வாங்கறாய்ங்க. நம்ம பொயப்ப கெடுக்காத வரை நோ சென்சார் – ஐ மீன் மிச்சம் மீதி இருக்கிற தமிழ் வெளி, இண்ட்லில தடை வந்துராத ரேஞ்சுக்கு எழுதினா நோ சென்சார் – அதுக்குனு சோசியத்துக்கு வக்காலத்து வாங்கித்தன் எழுதனும்னு கண்டிஷன் போடலை. கிழிங்க – பிசிறில்லாம – எக்ஸ் பார்ட்டி கூட பாண்டி பாயிண்டாதான் அள்ளிவிடறாருனு ரோசிக்கறாப்ல எழுது வாத்யாரே. நோ சென்சார்

  ஆகமக்கடல் said:
  April 3, 2011 at 10:16 am

  வணக்கம்,
  ஜோதிடம்,ஆன்மீகம் சார்ந்த பதிகள் தான் என்னால் எழுதமுடியும்.அதுவும் வாரம் ஒரு பதிவு தான் போடமுடியும்.ok ன்னா author link அனுப்புங்க.அதுக்கு முன்னால என் பதிவுகள கொஞ்சம் பாத்துக்கோங்க

   S Murugesan said:
   April 3, 2011 at 11:31 am

   ஆகமக்கடல்,
   ஆத்தர் லிங்க் அனுப்பியிருக்கேன். கலக்குங்க. நீங்க ஒன்னுன்னா நான் ஒன்னு (பதிவை சொன்னேன் பாஸ்)

    S Murugesan said:
    April 3, 2011 at 12:27 pm

    என் எழுத்தை இத்தனை காலம் படித்து ஊக்குவித்த சக பதிவர்களே ! வாசகர்களே !
    ஜோதிட ஆர்வலர்களே!

    எழுத்தாளன் எழுத்தாளனாவது அவன் உழைப்புக்கு அடையாளமாக
    கூட இருக்கலாம்.

    ஆனால் வாசகன் வாசகனாகவே நின்றுவிடுவது மட்டும் 100 சதவீதம் வாசகனின் பெருந்தன்மையே.

    ஆனால் வாசகனை வாசகனாகவே தொடரவிடுவது எழுத்தாளனின் சுய நலமோ என்ற ஐயத்தில் தான் இந்த முடிவுக்கு வந்தேன்.

    சீக்கிரமே ஆரம்பிச்சுருங்க..உங்கள் பதிவை படிக்க காத்திருக்கிறேன்.

  Kirumi said:
  April 3, 2011 at 11:20 am

  எழுத்தாளர் சுட்டி அனுப்பவும்.

   S Murugesan said:
   April 3, 2011 at 11:30 am

   கிருமி சார்,
   அனுப்பியிருக்கேன் .பாருங்க.. நீங்க ஒரு பதிவு போட்டா நான் நூறு பதிவு ( அய்யய்யோ ..கிழிஞ்சுரும்பா) சாரி ஒரு பதிவு போடறேன். ஜென்டில் மென் அக்ரீமெண்ட்

    R.Puratchimani said:
    April 3, 2011 at 3:26 pm

    அது என்ன எழுத்தாளர் சுட்டி? அனுப்புங்களேன் பார்ப்போம்.

    S Murugesan said:
    April 3, 2011 at 4:03 pm

    புரட்சிமணி,
    அனுப்பியாச்சு. இன்பாக்ஸ்ல விழுந்திருக்கும்.

  kandhan said:
  April 4, 2011 at 8:33 am

  உங்க ஈமெயில் குடுங்க.

  Ravi said:
  April 4, 2011 at 11:30 am

  I read all your ten points. My God bless you with the true achivement of these.

  Hereby I share some of the thoughts related to employment.

  I personally against working for 8 hours per day. The reasons are:

  1. Above said 8 hour / day created 200+ years back and outdated.
  2. Further the actual productive hours is less than 5 hours per day in private and around 3.5 hours in other.
  3. The people perceive the government jobs are more secured. In the true case it is correct.
  4. In that case Government needs to explore the possibility of providing job for all. How this can be achieved?
  5. All jobs can be of max 4 hours. This itself will double the Indian workforce.
  6. Further this assures minimum salaray which is required for bread and butter to run the families.
  7. In addition govt and private can explore addl. work force of anohter 4 hours. If this is achieved the total employment opportunity available in India will be triple.
  8. Not only that there is no need for you to put leave to current job and go back and forth between govt offices. You will have plenty of time since you do work for only 4 hours.
  9. The govt. should also relax and should allow the people to explore making revenues by other means in the remaining 20 hours.
  10. An agreement should not tie the hands of the people to explore other opportunities.

  Will follow with addl. idotic thoughts… (hope this would not hurt you and ask me to stop writing “dubakoor” ideas…)

   S Murugesan said:
   April 4, 2011 at 12:51 pm

   ரவி சார்,
   ரெம்ப நன்றி. இதே மேட்டரை தமிழ்ல போட்டிருந்தா இன்னம் நிறைய பேரு படிப்பாங்களே..

    Ravi said:
    April 4, 2011 at 2:38 pm

    Ayya..enakku thamizhla type panni ..proof check panni … II proof …, final proofnnu … oru article publish pannanumnaa it will take more time..Kindly bear with me. Within the available time I am able to express few thoughts… This itself a great achievement. (Thangalaipol… paththrikkai thruai serdhavan alla…mattrum idhudhan enadhu mudal muyarchi in the web.).. hope in the future I will try my best to publish my comments in Tamil.

    S Murugesan said:
    April 4, 2011 at 3:55 pm

    ரவி சார்,
    தமிழ்ல டைப் பண்றது ரெம்ப ஈஸி. http://www.tamileditor.org ஓப்பன் பண்ணுங்க. தமிழ் உச்சரிப்புல ஆங்கில எழுத்துக்களை தட்டிக்கிட்டே போங்க உதாரணம். ammaa ,appaa . அடிச்சு முடிச்சு காப்பி பண்ணி மெயில்ல பேஸ்ட் பண்ணிருங்க. நீங்க ப்ரூஃபே பார்க்காதிங்க எனக்கு மெயில் பண்ணுங்க. நான் திருத்தி வெளியடறேன்
    என் மெயில் முகவரி: swamy7867@gmail.com

  தனி காட்டு ராஜா said:
  April 5, 2011 at 8:09 am

  நீங்க எங்கயோ போய்டீங்க தல 🙂

   S Murugesan said:
   April 5, 2011 at 8:51 am

   ராசா,
   நீங்க பதிவோட வரலைன்னா நெஜமாலுமே எங்கயோ போயிருவன் பாஸ்..

  R.Puratchimani said:
  April 6, 2011 at 9:46 am

  ௧.பாஸ் என்னோட பதிவுகள் ரொம்ப சின்னதா இருக்கும் பரவ இல்லையா…
  ௨. நான் புப்ளிஷ் செய்வா அல்லது திராப்ட்ல சிவே செய்வா, இப்ப திராப்ட்ல ஒன்னு இருக்கு அது ஒக்கேவானு பாருங்க

  ஆகமக்கடல் said:
  April 8, 2011 at 4:17 am

  எனக்கு அனுப்பிய user name ,pasword ERROR என்றே வருகிறது.திரும்பவும் புதுசா தாங்க.
  USER NAME-aagamakadal னே குடுங்க.பதிலை aagamakadal@gmail.com க்கு அனுப்புங்கோ

   S Murugesan said:
   April 8, 2011 at 5:05 am

   ஆகமக்கடல்!
   புதுசா அனுப்பியிருக்கேன் பாருங்க.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s