“ஜெ”வுக்கு ஜூன் 9 வரை நித்திய கண்டம்தேன்..

Posted on

இன்னாங்கடா இது நம்ம முருகேசு கூட அரசியல் வாதி மாதிரி பல்டி அடிச்சுட்டாரானு நினைச்சுராதிங்க. லேட்டஸ்டா ஒரு சர்வே வெளியாகியிருக்கு. அதுல அ.தி.முகவுக்கு 128 சீட் வரும்னு சொல்லியிருக்காய்ங்க. ஆனாலும் “ஜெ தலைமையில் கூட்டணி ஆட்சி”ங்கற பேச்சுக்கு இன்னம் கட்டுப்பட்டிருக்கேன். ஆனாலும் “ஜெயலலிதாவுக்கு ஜூன் 9 வரை நித்திய கண்டம்தேன்.”ன்னும் சொல்லி வைக்கிறேன். என்ன? ஏது? எப்படி?.னு தெரிஞ்சிக்க பதிவை தொடர்ந்து படிங்க.

“சரியான பார்ட்டி தப்பான வழில போனாலும் சரியான இடத்தை போய் சேர்ந்துர்ரான். தப்பான பார்ட்டி சரியான வழியில போனாலும் தப்பான இடத்தை போய் சேர்ந்துர்ரான்” – இது ஓஷோவோட பஞ்ச் டயலாக். பெரிய மன்சங்களோட பர்த் டீட்டெய்ல்ஸ் எல்லாம் அவ்ள சீக்கிரமா வெளிய வராது. ஒரு வேளை அவிக டம்மியா இருந்தப்ப அங்கன இங்கன மேட்டர் வெளிய போயிருக்கலாம்.ஜாதகம்னு பார்த்தா எம்.ஜி.ஆர் டஜனுக்கு மேல வச்சிருந்தாராம். வர்ர ஆளுக்கு ஏத்தமாதிரி ஒரு ஜாதகத்தை எடுத்து கொடுப்பாராம். ( ஆர் அனுப்பியிருப்பாய்ங்க என்னனு குன்ஸா கணக்கு போட்டு)

இன்னைக்கு அம்மா ஜாதகம்னு ஆராரு எதை வச்சு கணக்கு போட்டுக்கிட்டிருக்காய்ங்களோ எனக்கு தெரியாது. நாம தான் ரஜினி காந்த மாதிரி தனி வழியில போற பார்ட்டியாச்சே. நம்ம கிட்ட இருக்கிற ஜாதக கணக்குப்படி அம்மாவுக்கு 09/Jun/2011வரை ராகு தசையில சந்திர புக்தி நடக்குது.

டாக்டர்ல ஸ்பெஷலிஸ்ட் மாதிரி ஜோசியர்லயும் ஸ்பெஷலிஸ்டுங்க உண்டு. இதுல நாம மூன் ஸ்பெஷலிஸ்ட். அதாவது சந்திரன் எப்படியெல்லாம் பின்னி பெடலெடுப்பாருனு அக்கு அக்கா தெரியும். ( அனுபவம் அப்படிண்ணே)

சினிமாவுக்கு கதை சொல்லப்போனா நாட்டு கேட்பாய்ங்கல்ல. அப்படி சந்திரனோட நாட்டு எதுனு கேட்டா “திடீர் தன்மை,எதிர்பாரா தன்மை ,நிலையற்ற தன்மை “ன்னு அடிச்சு சொல்லிரலாம்.

சந்திரனோட காரகத்வத்தையும் 09/Dec/2009 முதல் நாளிதுவரை அம்மா லைஃப்ல நடந்துக்கிட்டிருக்கிற சம்பவங்களையும் பொருத்திப் பாருங்க இது 09/Jun/2011வரை தொடரனும்.

பிரமுகர்களின் மனைவியர்:

மொதல்ல விஜயகாந்தோட மனைவிலருந்து தான்பேச்சு வார்த்தை ஆரம்பிச்சதா கேள்வி.

மனம்:
எத்தீனி தபா மாத்திக்கிட்டாய்ங்க சின்னதா கணக்கு போடுங்க

இரவு நேரம்:
மிட் நைட் மேர் கணக்கா ராத்திரி முழுக்க பேச்சு வார்த்தை நடந்தது

யார் எவ்வளவு நேரம் இருப்பார்கள் என்று சொல்ல முடியாத இடங்கள்:
அம்மாவோட கூட்டணியே இந்த செனேரியோக்கு வந்துருச்சு

15 நாட்கள் துள்ளல், 15 நாட்கள் துவளல்:
கூட்டணி பேசி முடிச்சு 15 நாள் ஆகலை . ஆனால் பாருங்க வடிவேல் வெடி வைக்கிறார். விஜயகாந்த் தன் வேட்பாளர் தலையில தானே கை வைக்கிறாரு..

16 ஆவது நாள்ளருந்து பாருங்க ஸ்டாலின் -அழகிரி முட்டல் , பெரிய வீடு -சின்ன வீடு மோதல்னு தூள் பறக்கும்

மக்களுடன் நேரடித் தொடர்புள்ள வேலைகள்:
இதைத்தானே அம்மா செய்யப்போறாய்ங்க. இந்த நேரத்துல கொடைக்கானலை எல்லாம் நினைச்சாவது பார்க்கமுடியுமா?

நண்பர்களுடனேயே மோதுதல்,எதிரிகளுடன் நட்பு கொள்ளுதல் :
விஜய்காந்த் என்ன சித்தப்பா பையனா பெரியப்பா பையனா எதிரி தானே..

அம்மாவுக்கு சந்திர தசை தான் நடக்குதுங்கறதுக்கு இதை விட க்ராஸ் செக் வேற என்ன உண்டு?

அம்மாவோட லக்னம் மிதுனம்ங்கறதால சந்திரன் வாக்குஸ்தானாதிபதி. ராசி சிம்மம்ங்கறதால விக்கிரம ஸ்தானத்துல இருப்பாரு.

இவரு டூ இன் ஒன்னா வேலை செய்வாரு. வளர் பிறையில சுபன், தேய்பிறைல பாவி. ஏப்ரல் 3 ஆம் தேதி அமாவாசை. அதாவது அதுவரை தேய் பிறை. அதுக்கப்பாறம் வளர்பிறை. ஏப்ரல் 3 வரை இருக்கிற நிலை அப்படியே ஒரு யு டர்ன் எடுக்கும். வெய்ட் அண்ட் சீ.

அதுசரிங்கண்ணா வெறும் புக்தி நாதனே எல்லாத்தையும் முடிச்சுருவாரா தசா நாதனோட கதை என்னனு கேப்பிக.சொல்றேன்.

அம்மா ஜாதகத்துல ராகு 11ல நின்னாரு. கேது 5 ல உட்கார்ந்தாரு. ராகு லக்கி,லாட்டரி டிப்ல வந்த கணக்கா அள்ளிக்கொடுக்கனும். கேது தீராப்பழிய,அவ்மானத்தை கொடுக்கனும். ரெண்டுபேரும் பார்ட் ஆஃப் எ ஸ்னேக்.

“நீ பாதி நான் பாதி ஆனோம்”னு பாடறவுக. ரெண்டு பேரும் ஒரே நேரத்துல பலனை தரமுடியாதே. அதனால தசைய ரெண்டா பிரிச்சுக்கறாய்ங்க.

ராகு தசை 30/Jun/1994 ல துவங்கி 29/Jun/2012 வரை நடக்க இருக்குது. இந்த தசை மொத்தம் 18 வருஷம். இதுல மொதல் 9 வருஷம் ஒரு விதமா, அடுத்த 9 வருஷம் இன்னொரு விதமா ஒர்க் அவுட் ஆகும்னு ரூல்.

மொதல் 9 வருஷம் எப்படி இருந்ததுன்னு உங்களுக்கே ( 30/ஜுன்/2003 வரை) தெரியும். அதுக்கு பிற்பாடு செகண்ட் ஆஃப் ஆரம்பம். அது எப்படி இருந்ததுன்னும் உங்களுக்கு தெரியும். இதே நிலை அதாவது 30/ஜுன்/2003 க்கு பிறகான நிலை 29/Jun/2012 வரை தொடரனும். அப்ப தேர்தல்ல புட்டுக்குவாய்ங்களானு உணர்ச்சி வசப்படாதிங்க.

கழுவற தண்ணில நழுவற மீன் மாதிரி கரையேறிருவாய்ங்க. புக்தி நாதனான சந்திரனோட ஸ்பெஷாலிட்டியே எதிரிய நண்பனாக்கிறதுதானே. இப்ப விஜயகாந்த். தேர்தலுக்கு பிறகு? காங்கிரஸ்? அழகிரி?

ஆப்போசிட் போல்ஸ் அட் ராக்ட் ஈச் அதர்ம்பாய்ங்க. அரசியல்ல எதுவேனம்னா நடக்கலாம்னு நீங்க சொல்விங்க. சந்திர புக்தியில எதுவேணம்னா நடக்கும்னு ஜோதிடம் சொல்லுது.

தேர்தலா ஏப்ரல் 13 ஆம் தேதி நடக்குது. ரிசல்டா மே மாசம் தேன். ராகு தசை முடியறதோ 29/Jun/2012 ஆம் தேதிதான். அதுவரை என்ன நடக்கும்?

ராகு தசை சந்திர புக்தி உபயத்தில் ஜூன் 9 வரை இழு பறி. அதுக்கு பிறவு ராகு தசையில செவ்வாய் புக்தி. செவ் 3 ஆமிடத்துல இருக்கிறதால அம்மா நெஞ்சுல வீரம் பொங்கும். ஒரு பிடி பிடிச்சுரனும்னு சீறி எழுவாய்ங்க. ஆனால் சகோதரஸ்தானத்துல நின்ன செவ்வாய்க்கு 6 ஆமிடத்து ஆதிபத்யமும் இருக்கிறதால உடன் பிறவா சகோதரியோ அ அம்மா நம்பின ஆரோ ஒரு சகோதரரோ “டபுள் கேம்” ஆடலாம். அ அவிகளோட அம்மாவுக்கு விரோதம் வந்து கழட்டியும் விடலாம். அப்படி விட்டா அந்த பிரிவு 29/Jun/2012 வரை தொடரும். அ அந்த டபுள் கேமுக்கு அம்மா பலியானாலும் ஆகலாம். இதெல்லாம் தேர்தலுக்கு பிறகு.

தேர்தல் வரை என்ன நடக்கும் அதை சொல்லுப்பானு கேப்பிக. சொல்றேன். அம்மாவுக்கு வாக்குல சனி. அவிக ஆர்பரிக்கிற மாதிரி தனி மெஜாரிட்டி வராம போயிரலாம். செவ்வாய் எட்டுல கீறாரு. எதிரிகள் ஒன்னு சேர்ந்து ஆப்பு வைக்கலாம். அல்லது விபத்து/மின் விபத்து/தீ விபத்து / நோய்னு படுக்கையில கிடக்கவேண்டியும் வரலாம்.

எது எப்படி போனாலும் தாத்தா மட்டும் மறுபடி வரமாட்டாரு. அவர் ராசிக்கு அஞ்சுல சனி. 9,10 க்கு அதிபதியான சனி எந்தளவுக்கு “சொத்து சுகங்களை ” கொடுக்கனுமோ கொடுத்துட்டாரு. இனி அஞ்சுல நின்ன கடமைக்கு மானபங்கத்தை நடத்தனும். ( வேட்டிய உருவினாத்தான் மானபங்கமா? தேர்தல்ல அம்பது அறுவது சீட்டோட நின்னுட்டாலும் மானபங்கம்தேன்) .

அதனாலத்தான் சொல்றேன் ஜெ தலைமையில் கூட்டணி நிச்சயம். அதே சமயம் ஜூன் 9 வரை அம்மாவுக்கு நித்திய கண்டம்தேன்..

Advertisements

29 thoughts on ““ஜெ”வுக்கு ஜூன் 9 வரை நித்திய கண்டம்தேன்..

  Shakthi said:
  April 1, 2011 at 1:48 am

  வணக்கம் தலைவா ,
  தேர்தல் அன்னைக்கு ஐயாவுக்கு பதினொணுல நாலு கிரகம் (புதன் ,செவ்வாய் ,குரு ,சூர்யன் )ஆனா அம்மையாருக்கு அது எட்டாம் இடமாச்சே .கோச்சராமும் முக்கியமாச்சே.அம்மையார் ஜாதகத்துல புதன் மகரத்திலும் ,சனி ,செவ்வாய் கடகத்திலும் இருப்பதாக ஒரு ஜோதிடர் சொல்லியிருக்கிறார் .இது சரியா?

   S Murugesan said:
   April 1, 2011 at 5:16 am

   ஷக்தி!
   அடுத்தவுகளை விடுங்க.. எங்க ஊர்ல ஒரு தாட்டி ஒரு பார்ட்டிக்கு 8 கிரகம் அனுகூலம். இன்னொரு பார்ட்டிக்கு 8 கிரகம் பிரதி கூலம். ஜெயிச்சது ஆருங்கறிங்க?

   11 ஆவது இடம் ஹவுஸ் ஃபுல்லா இருந்தா கொட்டோ கொட்டுனு கொட்டிரும்னு நினைக்கிறிங்களா?
   கீழே பாருங்க:
   1-11 லருந்தா டபுள் ஆக்டு கொடுக்கவேண்டி வரும்
   2-11 லருந்தா மஸ்தா பீசிக்கிட்டே இருப்பாய்ங்க
   3-11 லருந்தா நிறைய ரஸ்க் சாரி ரிஸ்க் எடுக்கவேண்டி இருக்கும்
   4-11 லருந்தா அந்த வீடு இந்த வீடுனு அலைய வேண்டி வரும்
   5-11 லருந்தா பசங்க மேட்டர்ல ஒன்னு டபுளாகும் ( உதாரணமா ஸ்டாலின் மட்டும் தேன் இங்கன இருப்பாரு ..அப்பாவுக்கு “ஒன்னுன்னா” அழகிரியும் வந்துருவாரு
   6-11 லருந்தா கடன், நோய்,விரோதம் அதிகமாகும்
   7-11 லருந்தா மனைவி மார் ஒருத்தருக்கு ரெண்டு பேரா பக்கத்துல இருப்பாய்ங்க
   8-11 லருந்தா பிராணத்துக்கு இம்சை டபுளாகும்
   9-11 லருந்தா தில்லி பயணம் டபுளாகும். ( எந்த அளவுக்கு நிலைம வீக்கானா அந்த அளவுக்கு அலையனும்ல)
   10–11 லருந்தா ரெண்டு வேலை செய்யனும் கதை வசனம்+ சட்டமன்ற பேச்சு ( இதுவரை ஆட்சி எங்கன செய்தாய்ங்க.ஒரே வேலைதேன் சினிமா சினிமா சினிமா)
   11-11 லருந்தா அனுப்பி வச்ச கட்டு கரையாம தேங்கிரும் ( தேர்தல் கமிஷன்)
   12-11 லருந்தா லாபத்துல நஷ்டம் ஏற்படும் ( ஜெயிச்சு வந்த எம்.எல்.ஏ ஆருனா வேலி தாண்டிருவாய்ங்களோ)

    covaisiva said:
    April 2, 2011 at 4:32 am

    ஒரு வேலை கைக்கு எட்டினது வாய்க்கு எட்டதோ.
    வெற்றி நிச்சயம் ஆனா அனுபவிக்க முடியாத வகை
    (வியாதி, கண்டம், அடுத்தவர்க்கு விட்டு கொடுக்க வேண்டிய கட்டாயம்)

    S Murugesan said:
    April 2, 2011 at 11:36 am

    covaisiva,
    கமெண்ட் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் கணக்கா டீல்ல நிக்கிறாப்ல இருக்கு. இப்படி ஒரு நிலையில நீங்க இருக்கிங்கனு கெஸ் பண்ணி பதில் சொல்றேன்.

    இந்த மேட்டர்ல நீங்க சக்ஸஸ் ஆகனும்னா நீங்க வாங்கியிருக்கிற கடன்,கைமாத்து எல்லாத்தையும் பைசல் பண்ணிருங்க. முடியாத பட்சம் அவிகளை நேர்ல சந்திச்சு கன்வின்ஸ் பண்ணிட்டுவாங்க. இந்த மேட்டர் சக்ஸஸ் ஆயிரும்

    covaisiva said:
    April 3, 2011 at 2:10 pm

    தலைவா, நான் சொன்னது எனக்கல்ல. நம்ம தாத்தா ஜாதகம் பற்றி திரு.சக்தி அவர்கள் சொன்னபடி எல்லாம் சாதகமாக இருந்தும் அவர் எப்படி அனுபவிக்க முடியாது என்று கூறுகிறீர்கள்.
    அதற்கு எனது கருத்தாக கூறினேன்
    தங்களின் பதில் என்ன

    S Murugesan said:
    April 3, 2011 at 4:09 pm

    கோவை சிவா,
    ரெண்டு மணி நேரத்துக்கு ஒரே லக்னம் (120 நிமிஷம்) இந்தியால (மட்டும்) நிமிசத்துக்கு 4 குழந்தை பிறக்குதாம். 120 x4 =480 குழந்தை ஒரே ஜாதகத்துல பிறக்குது. ஆனால் ஒரு ரஜினி காந்த் தான் சூப்பர்ஸ்டார். ஒரு அஜீத் தான் தலை.. அவிக பிறந்த அதே நேரத்துல ,லக்னத்துல பிறந்த மத்த குழந்தைகள் அந்த யோகத்தை ஏன் அனுபவிக்க முடியாம போயிருச்சு?

    வெறுமனே கிரக கணக்கு போட்டா எதிர்காலத்தை கணிச்சுர முடியாது பாஸ்! தாத்தா நல்ல நேரத்தோட பலனை எப்பயோ எக்ஸாஸ்ட் பண்ணிட்டாரு.. இனி அறுவடை செய்யவேண்டியது .. சொல்லனுமா?

  “சரியான பார்ட்டி தப்பான வழில போனாலும் சரியான இடத்தை போய் சேர்ந்துர்ரான்.

  தப்பான பார்ட்டி சரியான வழியில போனாலும் தப்பான இடத்தை போய் சேர்ந்துர்ரான்” – இது ஓஷோவோட பஞ்ச் டயலாக்.

  இது நல்லாயிருக்கே ….

   S Murugesan said:
   April 1, 2011 at 5:08 am

   ஜானகி ராமன்,
   ஓஷோவோட இந்த பஞ்ச் அனுபவத்துல பார்க்கறச்ச சரியா கூட இருக்கு.

  டவுசர் பாண்டி said:
  April 1, 2011 at 3:14 am

  வணக்கம் தல,
  என்னப்பா இது. தலைப்ப பாத்த ஒடனே ஷாக்க்காயட்டேம்பா. பொறவு வழக்கமா கொரங்கு தவ்வுற மாதிரி ஒவ்வொரு பேராவா தாண்டாம அல்லாத்தையும் திரும்ப திரும்ப படிசி பாத்தேன். எடைல உள்ள “””””””எது எப்படி போனாலும் தாத்தா மட்டும் மறுபடி வரமாட்டாரு””””” இந்த வார்த்ததாம்பா ஒத்தடம் குடுத்த மாதிரி இருந்தது. ஏப்ரல் ஒண்ணாந்தேதி அதுவுமா இந்த மேட்டரு வந்த ஒடனே பயந்துக்கினேம்பா. ஒன்னயத்தான் கடவுள் மாறி நம்பிருக்கேன். நெலம எக்குத்தப்பா ஆச்சின்நு வையேன், எங்கூர்க்காராணுவ, வூட்டுக்கு வந்து என்ன அப்டியே அலேக்கா சுடுக்காட்டுக்கு தூக்கிக்கினு போயி உசுரோடவே பொதச்சிருவாணுவ. ரொம்ப டேங்சுபா.

   S Murugesan said:
   April 1, 2011 at 5:07 am

   வாங்க பாண்டி,
   சுதேசிங்கற பத்திரிக்கைலருந்து மெயில் பண்ணி ஏற்கெனவே எழுதின “ஜெ தலைமையில் கூட்டணி ஆட்சி”ங்கற கட்டுரைய பிரசுரிக்கப்போறதா சொல்லியிருந்தாய்ங்க.

   நேத்துவேற மார்க் 31 ஆச்சா சரி நம்ம கேல்குலேஷன்ஸை ஒரு தாட்டி வெரிஃபை பண்ணிரலாம்னு போட்ட பதிவு இது. கவலையே படாதீங்க.

   ஆட்சிய பிடிச்சிட்டா போதும்னு அம்மா நினைக்கிறாய்ங்க. நீ பிடி நான் வச்சிக்கிறேனு கிரகங்கள் காத்திருக்கு. பார்ப்போம்

    டவுசர் பாண்டி said:
    April 1, 2011 at 6:17 am

    நைனா, என்கு ஒரு ஆச. இன்னான்னு கேளு. நீ எழுதுன மேட்டரு எதாச்சும் பத்திரிகைல வந்தா எங்ளுக்கும் கொஞ்ச காண்டு காட்டுப்பா. ஒன்னைய விட எங்களுக்குத்தேன் ரொம்ப ஆசயாகீது மாமு.

    S Murugesan said:
    April 1, 2011 at 6:35 am

    பாண்டி,
    உங்களுக்கில்லாததா.. 2000,டிசம்பர் 9 ல அம்மாவுக்கு கூரியர் போட்டு அது நெஜமானபிறகு “சரித்திர நாயகி”ங்கற பத்திரிக்கைல சேதி வந்தது . அதுல கொடுத்த கணிப்புகள் கூட நெஜமாச்சு. அதை பார்த்திங்களா?

    “சுதேசி”ல வரட்டும். ஸ்கேன் பண்ணி அனுப்பறேன்

    டவுசர் பாண்டி said:
    April 1, 2011 at 12:45 pm

    ரொம்ப நன்றி நைனா. இந்த புக்கு எங்க ஸ்டேட்டுல கடிக்குமானு தெர்ல. இருந்தாலும் ஒன்னோட புண்ணியத்துல படிச்சிட்டேம்பா. ஆனா ஒரு பக்கம்தாம்பா http://3.bp.blogspot.com/_vGDcwO9lrek/R6gCBtxOxLI/AAAAAAAAAVM/CaeOeK-Zvxg/s1600-h/jaya+parigaram.JPG இருக்கு. சரி பர்வால்ல. நைனா ஓன் எடத்துல எங்கூரு சோசியக்காரவுக யாராச்சும் இருந்தான்னு வையேன் இந்நேரத்துக்கு சரித்திரநாயகில உள்ள இந்த மேட்டரு, அந்த டேங்சு கார்டு, அல்லாத்தையும் இந்நேரத்துக்கு அவன் வூட்டோட பெரிய சைஸ்ல பிளாக்ஸ் போர்ட வச்சி இந்நேரத்துக்கு பட்டய கெளப்பிக்கிட்டு இருப்பான். நீ இன்னாடான்னா… சரி உடு.

    S Murugesan said:
    April 1, 2011 at 12:51 pm

    டவுசரூ,
    ஆனாலும் இம்புட்டு பொறுமை அநியாயமப்பு.

  டவுசர் பாண்டி said:
  April 1, 2011 at 3:36 am

  //கழுவற தண்ணில நழுவற மீன் மாதிரி கரையேறிருவாய்ங்க. புக்தி நாதனான சந்திரனோட ஸ்பெஷாலிட்டியே எதிரிய நண்பனாக்கிறதுதானே. இப்ப விஜயகாந்த். தேர்தலுக்கு பிறகு? காங்கிரஸ்? அழகிரி? //

  ஆமாப்பா நீ சொல்றமாரிதேன் இப்ப பிரச்சன ஸ்டார்ட் ஆய்ட்டு, சோனியா ஆத்தா வேற பிரச்சாரத்துக்கு வரமாட்டுக்கு. திமுக காரவுக காங்கிரஸ்காரவுகளுக்கு ஒத்துழைக்க மாட்டுக்காக. அழகிரி அண்ணாச்சிக்கு (கலைஞர் குடும்பத்துல இவர மட்டுந்தேன் புடிக்கும். நல்ல மன்சன். ஒரு சின்ன மேட்டருல இவரோட மனிதாபிமானத்த நேர்ல கண்டு ஆச்சர்யப்பட்டேன். அதுக்குத்தேன் இந்த ஜால்ரா) அவரு வூட்டுக்கு பாதுகாப்பு குடுத்த செக்யூரிட்டிகள தேர்தல் கமிசன் நேத்தே டிஸ்போஸ் பண்ணி பீல்டுக்கு கொண்டாந்துட்டாய்ங்க. இதால மன்சன் அப்செட்டாய்ட்டாறு. அப்பால ஒரு அரிய கண்டுபிடிப்பு. நீ சிம்ம ராசி, மகம் நட்சத்ரம், அம்மாவும் சிம்ம ராசி, மகம் நட்சத்ரம். நீ சொன்னா மாதிரி ஜெயலலிதாம்மாவுக்கும் இப்ப ஒடல் நெல சரியில்லாமத்தேன் இருக்கு.

   வினோத் said:
   April 1, 2011 at 5:25 am

   உங்க சாதகம் பற்றி சொல்லுங்க பாண்டி,,

  இராச.புரட்சிமணி said:
  April 1, 2011 at 5:49 am

  வணக்கம் பாசு, உங்க ஆராய்ச்சி நல்லா இருக்கு. பச்சையம்மா மெரூனா மாரிட்டங்கலே கவனிச்சிங்களா? ராகு திசை காரணமா? (சொன்னிங்கனா ப்ளோக்ல கொஞ்சம் கிறுக்குவேன்)
  நீங்க சந்திரன் specialist சொன்னதால கேக்குறேன்..கன்னி லக்னத்துக்கு பதினொன்றாம் அதிபதி சந்திரன் எட்டுல இருந்து திசை நடத்துன எப்படி இருக்கும், எதாவது பரிக்காரம், safety precautions?
  நன்றி பாஸ்.

   S Murugesan said:
   April 1, 2011 at 6:39 am

   புரட்சி மணி,
   மெருன் என்பது செவ்வாய்க்குரியது. தற்சமயம் கோசாரத்துல எட்டுல இருக்காரு. விபத்தை தவிர்க்க இந்த ஆலோசனை தரப்பட்டிருக்கலாம்.

   11-8 : ஒர்ரீஸ் அதிகமாகும். லாபம் நோக்கி செய்யறெதல்லாம் நஷ்டமா போகும்.

   பரிகாரம்: வாட்டர் பெட் . வசதியில்லின்னா வாட்டர் பில்லோ . அதுவும் கஸ்டம்னா ஏர் பில்லோ. பெட் ரூம்ல அக்வேரியம், வெள்ளை நிற உள்ளாடைகள், சின்னதா ஃபவுண்டெய்ன். கேழ்ப்பார் இல்லாத அம்மன் சிலைக்கு ஜலாபிஷேகம். ஒங்க கையாலயே செய்யனும்.

    இராச.புரட்சிமணி said:
    April 1, 2011 at 7:41 am

    உங்கள எனக்கு பதில் சொல்ல வைத்த அவளுக்கு மிக்க நன்றி.
    பாசு ஜாதகனுக்கு சளி தொந்தரவு அடிக்கடி சூரிய திச்யயிலையே இருக்கு. வாட்டர் பெட்ல படுத்த ஜல்பு அதிகமா ஆகுது? சிலரு எட்டுல நிலா இருந்தா மொவனே தண்ணியில கண்டம் அப்படின்க்க்ரிறாங்க, நீங்க அதுமேலே படுக்க சொல்றீங்க? வித்தியாசமான ஆளுதான் நீங்க.
    மண்டையில ஒரே கேள்வியா இருக்கு பாசு…இருந்தாலும் இதோட நிறுத்திக்கிறேன்.

    S Murugesan said:
    April 1, 2011 at 8:15 am

    புரட்சிமணி,

    “உஷ்ண உஷ்ண சீதலஹா. சீதல சீதல உஷ்ணஹா” யுனானியோட தந்தை ஹானிமன் ” நோயும் அதுக்கான மருந்தும் ஒன்றே”னு சொல்லியிருக்காரு. நம்புங்க. நம்பி செய்ங்க.

    இராச.புரட்சிமணி said:
    April 1, 2011 at 8:27 am

    Sure boss. Thanks

  தனி காட்டு ராஜா said:
  April 1, 2011 at 6:17 am

  கருப்பு எம் ஜி ஆர் விஜய காந்த் ஜாதகத்த கொஞ்சம் அலசுங்க தல ….

  பிறந்த தேதி : 25-August-1952 ,கும்ப லக்கணம் .
  பிறந்த டைம் சரியா தெரியல தல …..

  //மொதல்ல விஜயகாந்தோட மனைவிலருந்து தான்பேச்சு வார்த்தை ஆரம்பிச்சதா கேள்வி.//

  சூரியன்.சுக்கிரன் சேர்க்கை ….சுக்கிரன்(4 ,9 அதிபதி ) -மனைவி மூலம் யோகம் ..

  //வேட்பாளர் தலையில் குட்டு //

  செவ்வாய் ,சூரியன் ஆட்சி

  //அதனால் கிடைத்த அவமானம் //

  சனி சந்திர சேர்க்கை

  எப்புடி நம்ம ஆராய்ச்சி 🙂

  கொஞ்சம் விரிவா விஜயகாந்த் பற்றி எழுதுங்க தல ….

   S Murugesan said:
   April 1, 2011 at 6:30 am

   ராசா,
   காசா பணமா எழுதிரலாம். ஆனால் எடுறா வண்டிய விடுறா சித்தூருக்குன்னுட்டா என்னா பண்றது? ஹெல்மெட் போடற பழக்கம் வேற இல்லை பாஸ்

  ராஜா said:
  April 7, 2011 at 1:25 pm

  வணக்கம், நான் ஜோதிட ஞானம் உள்ளவன் அல்ல, சில சொலவடைகளை மட்டுமே கேட்டிருக்கிறேன். சிம்ம ராசி மக நட்சத்திரம் பெண்களுக்கு எப்படி இருக்கும், ஆண்களுக்கு எப்படி இருக்கும் பாஸ்?( பெண்களுக்கு ஒரு உதாரணம் ஜெயலலிதா இருக்காங்க, ஓரளவுக்கு பலன்கள் தெரியுது )

   S Murugesan said:
   April 7, 2011 at 5:23 pm

   ராஜா,
   வெறும் நட்சத்திரத்தை வச்சு சொல்றதெல்லாம் கல்லை மூட்டையா கட்டி மாங்காய் அடிச்ச கதை . அதை விடுங்க

  ராஜா said:
  April 7, 2011 at 1:35 pm

  தலைவா, பரவசிவன் ap அப்டின்னு ஒருத்தரு தட்ஸ்தமிழ் வெப்சைட்ல கருணாநிதியோட கோசாரங்கள் வலுவா இருக்கு, அதனால அவருதான் திரும்ப ஆட்சிய புடிப்பாருன்னு ஒரு கமெண்ட் விட்டு பீதிய கெளப்புறாரு. கொஞ்சம் ஆறுதாலா நாலு வார்த்தை சொல்லுங்க தலைவா, திரும்ப கருணாநிதி ஆட்சி வேணவே வேணாம் தமிழ்நாட்டுக்கு.

   S Murugesan said:
   April 7, 2011 at 5:21 pm

   ராஜா சார்,
   கவலையே படாதிங்க. நாம ரெண்டு பேரோட லைஃபையும் தசாபுக்திகளையும் ரீவைண்ட் பண்ணி கிராஸ் செக் பண்ணி சொல்லியிருக்கோம்.

   வெறுமனே கோசாரத்தை வச்சு சொல்றதெல்லாம் ………………………..கோடிட்ட இடங்களை உசிதம் போல நீங்களே நிரப்பிக்கங்க

    ராஜா said:
    April 8, 2011 at 4:27 am

    நீங்க நல்லா இருப்பிங்க, மிக்க நன்றி, மே 13 க்காக வெய்ட்டிங். முடியல இந்த வாட்டி தாத்தாவோட ஆட்சியில, ரொம்ப ஓவரா போய்ட்டாங்க, இவர விட்டா அவங்க அவங்கள விட்டா இவரு, வேற வழி(விஜயகாந்தும் முடியாது போலருக்கு) இல்லங்க. இப்போதைக்கு தமிழ்நாட்ல, ஏதோ ஜெயலலிதாவா பாத்து நல்லது செஞ்சா வுண்டு. 1991 – 96 ஆட்சியைவிட 2001 – 2006 பரவல்ல, இப்போ அதவிட நல்ல இருக்கும்னு நெனச்சுதான் தமிழ்நாட்டு மக்கள் இந்த தடவ அவங்கள தேர்ந்தெடுக்க போறாங்க, நம்பிக்கைதான வாழ்க்கை

    S Murugesan said:
    April 8, 2011 at 5:04 am

    ராஜா சார்,
    தனி மெஜாரிட்டிகிடைச்சா அம்மாவும் பழைய குருடு கதவை திறடின்னு ஆரம்பிச்சுருவாய்ங்க. என் கணிப்பு பலிச்சி கூட்டணி அரசு அமைஞ்சா தான் பெட்டர். ( தாத்தா இந்த தாட்டி இவ்ளவாச்சும் ‘எம்.ஜி.ஆர் வேலைகள் ”
    செய்ய காரணம் மெஜாரிட்டி இல்லாததுதேன். உபரியா ராம்தாஸ் ஆஃப் அடிக்காமயே வச்ச ஆப்பு.

    அதே ரூட்ல விஜயகாந்த் இருந்தா சனத்துக்கு சேஃப்டி. பார்ப்போம். ஜோதிடன் பலனை சொல்லத்தான் முடியும் . அந்த பலனை தர்ரது கடவுள் தானே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s