அவன் – அவள் -அது:2

Posted on

சிவசங்கரி எழுதின நாவல் ” ஒரு சிங்கம் முயலாகிறது” இதை சினிமாவா எடுத்தாய்ங்க ( சிவகுமார் ஸ்ரீப்ரியா)அந்த படத்தோட டைட்டில் இது. ஆனால் பாருங்க. இதுவும் “அவளை”தான் குறிக்குது. ‘

நம்ம மேட்டர்ல அவளோட லீலைகளை – நமக்கு காட்டின வேலைகளை எழுதினா ” ஹே.. இந்த ஆளு ரெம்பவே ஊத்தறான்யா”ன்னிருவிக. அவளோட சகவாசம்தான் இப்ப இந்த சுகவாசத்தை தந்திருக்குன்னு சப்ஜாடா நம்பறேன்.

அவளோட நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லே. இனி ஒருக்கா அப்படி ஒரு நிலைவந்தா நானே நிப்பேனானு சந்தேகம். அந்த அளவுக்கு ட்ராகுலா கணக்கா உறிஞ்சி எடுத்தாச்சு. ஆனால் அது ப்ளட் ட்ரான்ஸ்மிஷன் மாதிரின்னு இப்பத்தேன் புரியுது.

அவளுடனான என் அனுபவங்களை தமிழ்ல ‘அம்மன் அந்தாதி”ங்கற தலைப்புல கச்சா முச்சான்னு கவிதையா எழுதிக்கிட்டிருந்தேன். ( நம்ம கவிதை வேற ஸ்கூல் -பின்னாடிவருது டீட்டெய்ல்)

ஒரு நாள் அப்போ இருந்த ஏழ்மை காரணமா ” அய்யய்யோ இந்த நிலையில நாம படக்குனு செத்துப்போயிட்டா பொஞ்சாதி சோன்பப்டிக்கு போட்டுருவாளோ” ன்னு சந்தேகம் வர மொத்தத்தையும் மதுரை மீனாட்சியம்மன் கொவில் நிர்வாக அலுவலருக்கு அனுப்பிட்டன். ( நிச்சயமா பழைய பேப்பர் கடைக்குத்தேன் போயிருக்கும்)

இந்த செனேரியோல அதுக்கப்பாறம் எழுதினதுல்லாம் ஸ்க்ரிப்டாவே கிடக்கு. அதை படிக்க நீங்க தயாரா இருந்தாலும் அதை சரிபார்த்து டைப் பண்ற ரேஞ்சு இப்ப நமக்கு இல்லிங்கண்ணா. அதுக்கு ஒரு நேரம் வரும். பார்ப்போம்.

கொசுறு:
இதே போல ஏழுமலையான் பேர்ல எழுதின கவிதை தொகுப்பை மொதல்ல தேவஸ்தானத்துக்கு அனுப்பினேன். அவிக பாவம் சாக்கிரதையா திருப்பி அனுப்பிட்டாய்ங்க. அதை நம்ம விகடன் க்ரூப்புக்கு அனுப்பினேன். அதை அவிக ……… செருகி வச்சுக்கிட்டாய்ங்க. ( கக்கா வராம சாகப்போறானுவ)

“அம்ப பலுக்கு”னுட்டு தெலுங்குல எழுதிக்கிட்டிருந்தன். அதுவும் முக்காவாசி நாசமாப்போச்சு. கால்வாசி இன்னமும் கிடக்கு. ஆடிக்கு ஒன்னு அமாவாசைக்கு ஒன்னுன்னு அடிச்சு போட்டுக்கிட்டிருக்கேன். அதுவே இன்னாமாதிரி கலக்குது தெரீமா?

எடியூரப்பா சூனியம் வச்சிட்டாய்ங்கனு புலம்பறாரே அந்த மாதிரி மன நிலை எனக்கும் ஏற்படறதுண்டு. ( எல்லாம் அவாளோட சங்கல்பம் தேன்) அந்த மாதிரி சந்தர்ப்பத்துல அம்பபலுக்குல இருந்து ஒரு கவிதை எடுத்து அடிச்சா போதும் எவனெல்லாம் நம்மை கலாய்ச்சானோ அவன் டங்குவார் அறுந்துரும். நமக்கு காயகல்பம் சாப்டு அது மேல ஒரு வயாக்ரா போட்ட கணக்கா சுஸ்தாயிரும். எங்கன கர்பாக்கிரப்போறானோன்னு சாணியெறியற கூட்டம் அம்பேல்.

நேரமில்லை நேரமில்லை”ன்னு சொல்லிக்கிற பார்ட்டிக்கு இதையெல்லாம் விலாவாரியா எழுத மட்டும் நேரம் எப்டி கிடைக்குதுனு நினைப்பிங்க.

என் வேலைக்கான எனர்ஜியை ரீஃபில் பண்ணிக்கிற ஃபில்லிங் பாய்ண்டே இப்படி பதிவு எழுதறதுதான். இந்த பதிவுகள் தானே ஆர்வலர்களை ஈர்த்தது.அதனால இப்படி பதிவு போட மட்டும் நாம நேர கணக்கு பார்க்கிறதில்லை.

தெலுங்குல ‘நேரம்”ங்கற வார்த்தைக்கு குற்றம்னு ஒரு அர்த்தம் இருக்கு. பீடியா இருந்த நம்மை பாடியாக்கி, ஆளாக்கி, போர்வாளாக்கி விட்ட ஆத்தாவை பத்தி எழுத நேரம் இல்லேன்னா அது நிச்சயமா
” நேரம்” (தெலுங்கு)

மேலும் “அது எப்படிய்யா இந்தாளு மட்டும் அசால்ட்டா மேட்டரை போட்டு உடைக்கிறான்னுட்டு நம்மளை மானாவாரியா சனம் பாராட்ட முனையும் போது அந்த பாராட்டுக்கான தகுதி நமக்கில்லைனு ஸ்தாபிக்கவேண்டிய அவசியம் ஏற்படுது. அதையெல்லாம் அவளுக்கு சமர்ப்பணம் பண்ணவேண்டிய தேவை ஏற்படுது.

அதுக்கும் இந்த பதிவுகள் தேன் உபயோகப்படுது. குறிப்பா “அவள்’ தொடர் ஏற்கெனவே ஆரம்பிச்சு பாதில விட்ட உருப்படி ( ஆத்தா அனுமதியில்லை போலும்).

நானே சொல்லியிருக்கேன் ஜோதிடம் ஆன்மீகத்தின் முதல்படின்னு. ஆனால் என் ஆன்மீக பயணத்தில் நான் லேண்டான அதி சமீபத்து பாய்ண்ட் ஜோதிடம்.

ஆன்மீக வேட்டையில மொதல்ல கிடைச்ச வேட்டை ஆசுகவிங்கற முயல். அதை அப்படியே என் நினைவுகள்ள சிறை வச்சுட்டன்.

அடுத்ததா கிடைச்ச வேட்டை எதிர்கால ஞானம்ங்கற ஜோதிடம். இது முயல் இல்லே. ராட்சத மான். தாளி கண்ணுக்கு தெரிஞ்ச மாதிரியே இருக்கும். கயிறு தேடறதுக்குள்ள படக்குனு மறைஞ்சுரும். அப்பால அண்ணாவின் அடியொற்றி நடக்கும் கழகங்கள் (?) மாதிரி அதனோட குளம்படிகளை தேடிக்கிட்டு அலையனும். அதான் இன்னை வரைக்கும் உள்ள நிலை.

நம்ம மென்டாலிட்டியே டிஃப்ரண்ட். ஆராச்சும் தாய்க்குலம் ” நைனா.. அப்படியே அருள் வாக்கு மாதிரி சொல்றியே”ன்னு சுதியேத்தினா ‘ த.. இப்படித்தேன் பார்ப்பானுங்களை ஏத்தி விட்டிங்க. அவனுங்க நல்லாவே ஆப்பு வச்சானுங்க – இதெல்லாம் ஜஸ்ட் கணக்கு தேன். வேணம்னா மதியத்துல “பாதா கானி” அடிக்கிறதை விட்டுட்டு வா பத்து நாள்ள கத்து தரேன்”னுருவம்.

இப்ப உள்ள ஆங்க்ரி யங் மென் ஆராச்சும் லட்சங்கள் கொட்டி சீட் வாங்கிட்ட அனுபவத்துல ” ஸ்வாமி கென் யு டீச் அஸ் அஸ்ட்ராலஜி?”ன்னு கேட்டா ” ங்கொய்யால .. இதென்னா கடைசரக்குனு நினைச்சயா.. வாழ்க்கைய தொலைச்சாதேன் ..உசுரை பணயம் வச்சாதேன் கொஞ்சம் போல வாசனையாச்சும் உறைக்கும். வேலைய பார்த்துக்கிட்டு போவியா”ன்னுருவம்.

இன்னைய தேதி வரை இது சைன்ஸா .. மிஸ்டிக் சைன்ஸானு டிசைட் பண்ண முடியலை. அதுவேற விசயம்.

அவள்னு ஆரம்பிச்சு அவன் -அவள்-அதுல வந்து நின்னாச்சு. மல்லாக்க போட்ட கரபபாம்பூச்சு மாதிரி பதுவு சுத்தி சுத்தி வருதேன்னு அலுத்துக்காதிங்கண்ணா. மேட்டருக்கு வந்துர்ரன்.

இன்னைக்கு வரைக்கும் முழு திருப்தியடையாத பார்ட்டிகள் ரெண்டே பேருதேன். மத்தவிகல்லாம் ஃபுல் சேட்டிஸ்ஃபைட். அதுவும் நாம எதிர்காலத்தை கார்ப்பரேஷன் லாரி குப்பையா கொட்டிர்ர கேஸு. இதுக்கும் அவளோட அருள் தான் காரணம்ங்கறது என் முடிவு.

அட நம்ம ஜோதிட ஆர்வமே விட்ட குறை தொட்டகுறையா வந்ததுதேன். அதுவும் ஆஞ்சனேயரோட டீலிங் வச்சுக்கிட்ட பிறவுதான் இந்த மிஷனே ஆரம்பமாச்சு. 1984 டு 1986 காசனோவா ரேஞ்சுல இருந்த நாம – ஜஸ்ட் இந்த பொம்பள மேட்டர்ல / மேட்டரால சுயமரியாதைக்கு பங்கம் வருதுங்கற ஒரே காரணத்தால – தலைய ஐம் சாரி வாலை பிடிக்க வேண்டி வந்தது. இதெல்லாம் கலைஞர் கிட்டே அஞ்சு பத்து கைமாத்து கேட்ட கதைனு போக போகத்தான் புரிஞ்சது.

1986 க்கு முந்தி

குப்பன்…………
வீட்டுக்கு போனான்
சுப்பன் ….
காட்டுக்கு போனான்

கணக்கா புதுக்கவிதை எழுதிக்கிட்டிருந்த நாம ஆசுகவியே பாட ஆரம்பிச்சது ஒரு மிரேக்கிள். (குண்டலி விசுத்திக்கு வந்துருச்சா?)

அதே காலகட்டத்துல எல்.ஏ.டபுள்.யு.பி பெண்களுக்கு லஞ்ச் ஹவர்ல நியூமராலஜி சொல்ல ஆரம்பிச்சேன்
( இன்ஸ்பிரேஷன் : சுஜாதாவின் வசந்த்) நாம அப்ப பீலானு நினைச்சு விட்டதெல்லாம் நெஜமாலுமே மேட்டருன்னு தெரிஞ்சப்ப நெஜமாலுமே டர்ராயிட்டன்.

1989ல முதல் ஜோதிடருடன் சந்திப்பு – 1990 மார்ச் ல ஜோதிடரா அரங்கேற்றம். அந்த சமயத்துல எந்த லக்னத்துக்கு ஆரு பாவினு கூட கன்ஃபார்மா தெரியாது. ( எவனோ பாவி இருக்கான்னு தெரியும் தட்ஸால்) குடும்ப ஜோதிடம் புஸ்தவத்தை புரட்டி அதை பார்த்து எவன் பாவினு நோட் பண்ணிக்கிட்டு பலன் சொல்லுவன்.

அப்படியா கொத்தது இன்னைக்கு இதுவரை ரோசிச்சுக்கூட பார்க்காத மேட்டர் எல்லாம் டாஸ்மாக்ல சரக்கு மாதிரி கொட்டோ கொட்டுனு கொட்டுதுன்னா என்ன சொல்ல ?

ஆத்தாவொட வாசலுக்கு நாம எப்படி வந்து சேர்ந்தோங்கறதுக்கு சின்ன ரூட் மேப்.

வலையுலக வெற்றிக்கு மட்டுமல்ல என் ஆன்மீக வாழ்வுக்கான ஸ்டார்ட் பட்டனும் மன்மதன் தான்.(அவருக்கு உருவமில்லேங்கற கதை அற்புதமான உருவக கதை. உணர்வுகளுக்கு உருவமிருக்காதில்லயா?)

பால்யத்துல சுக்கிர தசை வேற மாட்டிக்கிச்சா செம பேஜாராயிருச்சுப்பா .பார்ட்டி துரத்துன துரத்துல ஜெய் ஹனுமான் சீரியல் தனமா சாதனை ஆரம்பம். கொஞ்சம் நின்னு நிதானிச்சு பார்த்தா நம்ம ஆஞ்சனேயருக்கு ஒரு வீக் பாயிண்ட் இருக்கிறது தெரிய வந்தது. அதாவது ராம நாமம் எங்கே சொல்லப்பட்டா அங்கே இவர் ஆஜராம். ஸோ ராம நாம ஜெபம் ஸ்டார்ட். அதுவும் ஆஞ்சனேயர் ஸ்டைல்ல ” ராம்” ( இதுவே நாமம் இதுவே பீஜம்னு டூ இன் ஒன்னா ஒர்க் அவுட் ஆயிருச்சு)

கான்ஃபிடென்டா இருக்கிறச்ச ராம். ஐசில இருக்கிறச்ச ( இன்ஃபிரியாரிட்டி) , டெப்ரஷன்ல இருக்கிறச்ச ராமா.

ராமாங்கற வார்த்தைல ஒரு சூட்சுமம். இதிலான முதலெழுத்து (ரா) ஹரா என்ற சிவன் பெயரில் கடைசி எழுத்தாகிறது. இதிலான இரண்டாம் எழுத்து (மா) உமா என்ற அம்மன் பெயரில் கடைசி எழுத்தாகிறது. ( கருத்து உபயம் : ராம கிருஷ்ண பரமஹம்சர்)

முக்திக்கான ப்ராசஸ்:
ஒரு பிறவி முழுக்க பஞ்சாக்ஷரி ஜபிச்சா தான் அடுத்த ஜன்மத்துல ராம நாமம் ஜெபிக்க தகுதி ஏற்படும். அந்த ஜன்மம் முழுக்க ராம நாமம் ஜெபிச்சா அடுத்த ஜன்மத்துல ஆத்தாளை அணுகற ஆர்வம் ஏற்படுமாம்.

டபுள் ப்ரமோஷன்:
நம்ம ஜாதகத்துல சூரிய,சந்திரர்கள் பக்கத்து பக்கத்து ராசிகளில் இருப்பதோடு பரிவர்த்தனமும் பெற்றதால் இது சிவசக்தியோகம் என்று சில காலம் பஞ்சாக்ஷரி ஜபித்ததுண்டு. அது ராமா என்று ஜபிக்கும் தகுதியை தந்துருச்சு போல.

ராமா ராமா என்ற என் ஜபம் சிவ சக்திகளை மனம் இளக செய்ய 3 ஜன்மங்களுக்கான ப்ராசஸ் 13 வருடங்களில் முடிந்து ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனின் ஹ்ரீங்கார பீஜத்தை ஜெபிக்கும் அதிர்ஷ்டம் ஏற்பட்டது.

அதுவும் ப்ரணவம், வித்யா பீஜம், லட்சுமி பீஜம் ,சூரிய பீஜம்/ ஹரி பீஜம், மற்றும் காளி பீஜங்களுடன் ஜெபிக்கவே அது எக்குத்தப்பாக ஒர்க் அவுட் ஆகி பாடி பீடி ஆகி ஷீரடி சாய்பாபா கணக்காய் 7 வருடங்களுக்க் பிச்சை எடுக்கவே வைத்துவிட்டது. அதற்கு பின் ப்ளாக் அண்ட் வைட் படமெல்லாம் ஈஸ்ட்மென் கலராகி இப்போ செம கலக்கு கலக்குது.

குண்டலி மூலாதாரம்,ஸ்வாதிஷ்டானம், மணி பூரகம், அனாஹதம், விசுத்தி எல்லாம் தாண்டி ஆக்னா சக்கரத்துல உட்கார்ந்து உட்கார்ந்த இடத்துல கண்டமேனிக்கு காரியம் நடந்துக்கிட்டிருக்கு.

இன்னம் டர்ராக்கும் , விட்டலாச்சாரியா ப்ராண்டு நிகழ்வுகளை , அனுபவங்களை அடுத்தடுத்த பதிவுகள்ள சொல்றேன்.

Advertisements

13 thoughts on “அவன் – அவள் -அது:2

  டவுசர் பாண்டி said:
  March 31, 2011 at 2:50 am

  நல்லாருக்கு நைனா. திரும்ப திரும்ப படிசி பாத்தேன். செல மேட்டருங்க இந்த மரமண்டைக்கு ஏறமாட்டுக்குபா. சரி பர்வால்ல. புச்சா டிக்சனரி வாங்கிக்கினுருக்கேன். அத வச்சி அர்த்தம் படிசிக்கிறேன். இது ஒன்னோட ரைட்டிங் ஸ்டைல். நான் எதுனாச்சும் சொன்னா நம்ம கைல சண்டைக்கு வந்துருவ. நைனா ஒரு டவுட்டு, சூரியனும் சந்திரனும் ஏழுக்கு ஏழுல இருந்து கூட பாம்புகள் இருந்தா எப்டின்னு சொல்லேன். காலசர்ப்பம் பத்தி எதுனாச்சும் எழுதிருக்கியா மாமு.

   வினோத் said:
   March 31, 2011 at 5:00 am

   பாம்புகள் எப்படி இருக்கு ,ராகு எங்கே.. கேது எங்கே ?
   நீங்க கன்னி ராசியா?

    S Murugesan said:
    March 31, 2011 at 5:16 am

    வாங்க வினோத்,
    ஹும்.. திருப்பதிக்கே லட்டு ப்ரிப்பேர் பண்றேங்கறிங்க ( உப்பை அள்ளி கொட்டிராதிங்க பாஸ்!)

    ராகு 10ல கேது 4 ல இருக்காய்ங்க. லக்னம் கடகம். செவ்+கேது காம்பினேஷன். ராசி சிம்மம்

    வினோத் said:
    March 31, 2011 at 5:53 am

    டவுசர் பாண்டி சாதகதையா சொல்றிங்க ?

    S Murugesan said:
    March 31, 2011 at 6:40 am

    வினோத் ஜீ ,
    நீங்க என் சாத கத்தை கேட்டிங்கனு நினைச்சு என்னோடதை சொன்னேன்.

    பாண்டி ஜாதகத்தை சொல்லனும்னா வெத்திலை,மை எல்லாம் வேணமே. நோ ஸ்டாக் பாஸு

   S Murugesan said:
   March 31, 2011 at 5:20 am

   பாண்டி,
   ஷீரடி பாபா தனக்கு பிடிக்காதவுகளை விரட்ட ரவுண்ட் தி க்ளாக் தட்சிணை கேட்டுக்கிட்டே இருப்பாராம்.

   அந்த மாதிரி நாம சில ஒக்காபிலரில்லாம் உபயோகிக்கிறோம். ( ஹி ஹி அந்த ஃப்ளோல குறிப்பிட்ட வார்த்தைகளுக்கான அஃபிஷியல் வோர்டு ஸ்பார்க் ஆறதில்லை. அதுக்காக முக்கினா ஃப்ளோ கட் ஆயிருது தலை.. ஒரு நேரம் வரும். அப்ப எல்லாத்தையும் ரீரைட் பண்ணுவமில்லை)

  உள்ளேன் ஐயா…

  rajesh said:
  March 31, 2011 at 4:37 am

  காலை வணக்கம் அண்ணா. நன்றாக உள்ளது. தொடருங்கள்

  தனி காட்டு ராஜா said:
  March 31, 2011 at 5:27 am

  🙂

  வினோத் said:
  March 31, 2011 at 10:37 am

  எனக்கு சோதிடம் தெரியுமா?
  பார்க்க http://anjjamvakuppu.blogspot.com/2011/03/blog-post_30.html

   S Murugesan said:
   March 31, 2011 at 12:05 pm

   வினோத் ஜீ,
   டீன் ஏஜ்ல ஆண்மனதில் ஏற்படும் பெண் பற்றிய பிம்பம் இது. அவிக பேட்டை வேற நம்ம ராஜ பாட்டை வேற ஆளை விடுங்க. நமக்கு நேரமில்லை சாமி

    வினோத் said:
    March 31, 2011 at 1:02 pm

    சொதிடம் யற்றி சொல்லி தராராமே.. அதான் அது சரியானு பாருங்கனு சொன்னேன்.

    S Murugesan said:
    March 31, 2011 at 3:04 pm

    வினோத் ஜீ,
    சொல்லித்தரேங்கறது தப்பில்லை. 30 நாளில் இந்தி கணக்கா ட்ரை பண்றதுதேன் ஆபத்து.

    சோதிடம் சைன்ஸுதேன். ஆனால் மிஸ்டிக் சைன்ஸ்.

    சாக்கடைங்கற அரசியல்லயே 1+1 சேருந்தா 100 ங்கறது 200 ஆயிருது.
    உ.ம் அதிமுக கூட்டணி .

    சோதிடத்துல இதுக்கு மிஞ்சின ட்விஸ்ட் எல்லாம் இருக்கு.

    நானெல்லாம் தினம் தினம் கத்துக்கிட்டே இருக்கம்.

    இப்பயும் சில பேட்டைக்கெல்லாம் சிங்கிளா போறதில்லை.. பயம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s