பலான மேட்டரில் சில "பிடிகளும் பிடிப்பும்"

Posted on

பிடின்னா பெண் யானைனு அர்த்தம். பேச்சு வழக்குல “பிடி”ன்னா கேட்ச் . பொருளை பிடிங்கறதுக்கும் பிடிதான். ஆளைப்பிடிங்கறதுக்கும் பிடிதான்.

ஆளைப்பிடிச்சு வேலைய முடினு சொல்றதுக்கும் “ஆளைப்பிடி”தான். நிலை தடுமாறிட்டிருக்கிற ‘குடி”மகனை பிடிங்கறதுக்கும் பிடிதான்.

மல் யுத்தத்துல பிடிக்கு வேற அர்த்தம். பலான நேரத்து பிடி வேற. பிடிப்பு வேற. பிடிச்சு விடறது வேற. இதையெல்லாம் விலாவாரியா சொன்னா சைட் உங்க சைட்டுக்கே வராத மாதிரி Ban பண்ணருவாய்ங்க.

எங்கயோ பிடிச்சிருக்குன்னா அது உடல் சாந்த புகார். உன்னை எனக்கு பிடிச்சிருக்குன்னா அது மனம் சார்ந்த நிலை.

பிடிப்புங்கற வார்த்தைக்கும் பல அர்த்தம் இருக்கு.

“என்னமோப்பா வாழ்க்கையில ஒரு பிடிப்பே இல்லாம போயிருச்சு”
“பிடிப்பு போக கைக்கு எவ்ளதான் வருது?”
“பிடிப்பு இல்லாம எப்படிப்பா கடன் கொடுத்தே?”

உணர்வு மொழியாக்கம் செய்யப்படும்போது எப்படியெல்லாம் அர்த்தம் மா ( நா) றிப்போயிடும்ங்கறதுக்கு இதெல்லாம் உதாரணம் ( வினோத்ஜி கவனிக்கனும்)

நம்ம தமிழ் சினிமால ஹீரோக்கள் “உடும்பா பிடிப்பேன்”னு பாட்டு பாடுவாய்ங்க. உடும்பு பிடியெல்லாம் ஜுஜுபி. பிடிச்சா சனியாட்டம் பிடிக்கனும். நாம பிசியற பிசியல்ல நுங்கு வெளிய வரனும்.

அப்படி பிடிச்சாத்தான் மேட்டர் வெளிய வரும். அதை விட்டுட்டு “எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போறாரு”ன்னுட்டு செய்துக்கிட்டிருந்தா எல்லாமே அயோமயமாத்தான் இருக்கும்.

நாம பிடிச்சா சனி கணக்கா பிடிப்போம். நம்ம எழுத்தும் அப்படித்தானே இருக்கும். நான் ஒரு மேட்டரை பத்தி எழுதறேன்னா மத்த இடம்லாம் ப்ளர்ராயிரும். நாம எழுதற மேட்டர் மட்டும் ஃபோக்கஸ் ஆகும்.

உதாரணததுக்கு “பொதுவுடமை ஒரு கனவு தான்”னுட்டு யோகி ஒருததர் போட்ட பதிவுக்கு எதிர்பதிவு போட்டிருக்கேன். அதை இங்கே அழுத்தி படிச்சு பாருங்க

இதுல ஒரு மைனஸும் இருக்கு. நான் விஞ்ஞானத்தை பத்தி பேசினா சனம் விஞ்ஞானத்தையே தூக்கிப்பிடிச்சுக்கிட்டு மத்ததையெல்லாம் தூக்கிப்போட்டு மிதிச்சிர வாய்ப்பிருக்கு.

இப்ப “அவள்”னுட்டு ஆரம்பிச்சேன். ஒடனே அல்லாரும் இந்த ரயில்ல கர்ச்சீஃப் போடக்கூடாது.இயற்கையில நாமெல்லாருமே வேற வேற. ஒரே கருவுல உருவான இரட்டைக்குழந்தைகளுக்கு கூட கைரேகை வேற வேறயா இருக்குமாம்.

ஜோதிடம், ஜாதகம்ங்கறது சொம்மா க்ராஸ் ப்ராஃபிட்டை காட்டற மேட்டர். ஆனாலும் குத்துமதிப்பாவாச்சும் ஒரு கணக்கை சொல்லும். இந்த கு.மதிப்பான கணக்கு கூட இல்லாம காட்டடி அடிக்கிறது வீண் வேலை.

நான் என்னோட அனுபவத்தை சொல்றேன். இதே அனுபவம் எல்லாருக்கும் ஏற்படும்னு கியாரண்டி தரமுடியாது. அதான் சோகம். இந்த அனுபவங்கள் எனக்கே ரிப்பீட் ஆகுமாங்கறதும் சந்தேகம் தேன்.

நான் என்ன சொல்றேன்னா சொம்மா எட்டிப்பாருங்க. என் இலக்கை விட்டுருங்க. என்னோட கமிட்மென்ட், சனிப்பிடி இத்யாதியை கேட்ச் பண்ணுங்க. உங்க இலக்கை அடையற முயற்சில இதையெல்லாம் கொண்டுவாங்க.

எல்லாருக்கும் எல்லாமும் ஒர்க் அவுட் ஆயிராது. உங்க ஜாதகம் மெக்கன்னாஸ் கோல்டுல புதையல் மேப் மாதிரி. புதையல் 5,9 பாவங்கள்ள இருக்கு. 5ஆம் பாவம் தூளா இருந்தா தியானம். 9 ஆம் பாவம் சூப்பரா இருந்தா பூசை,புனஸ்காரம், தீர்த்தாடனம்னு அஜீஸ் பண்ணிக்கனும்.

மேற்படி அஞ்சு,ஒன்பது பாவங்களோட அதிபதியாரு. அவரோட அம்சங்கள் என்ன? அவருக்குரிய தேவதையாருனு தெரிஞ்சிக்கிடனும். அப்பால அந்த தேவதையோட பீஜம், மந்திரத்தை கேட்ச் பண்ணி சான்ட் பண்ணத்துவங்கனும். அஞ்சாமிடம் நல்லாருந்தா அந்த பீஜத்தையே தியானிக்கவும் செய்யலாம்.

இது மேக்ரொ லெவல்ல ஒரு ப்ளூ ப்ரிண்ட்.

ஒரே தேவதைக்கு பல பேர்கள்/வடிவங்கள் இருக்கலாம் . அதுல நீங்க பூசிக்க, தியானிக்க வேண்டிய உருவம் பேரை டிசைட் பண்ணிக்கனும்.

உங்க பெயர்களிலான முதலெழுத்து – நீங்க “ம்” சேர்த்து ஜபிக்க வேண்டிய எழுத்தையும் தந்திருக்கேன். எழுத்துன்னா அந்த ஒரு எழுத்து மட்டும் கிடையாது “க”ன்னா க,கா,கி,கீ முதல் கௌ வரை.

பை தி பை இந்த பீஜம், மந்திரம் மேட்டர்ல எல்லாம் உச்சரிப்பு ரெம்ப முக்கியம். அதனால உச்சரிப்பை ஆங்கிலத்துலயும் தந்திருக்கேன்.

அதுக்கு முந்தி பீஜம்னா என்ன? இது எப்படி ஒர்க் அவுட் ஆகும்னு ரஃபா பார்த்துருவம்.

மூலாதார சக்கரத்துல நித்ராவஸ்தைல இருக்கிற குண்டலி விழிப்பு பெறுது. எப்படி?

வாயும், ஆசனவாயும் ஒரே குழாயோட ஆரம்பமும் முடிவுமா இருக்குது. ஒரு எழுத்தோட “ம்” சேர்த்து ஜெபிக்கும்போது அது பீஜாட்சரமாகுதுனு சொல்றாய்ங்க. நீங்க வாயால “ம்” சேர்த்து ஜெபிக்கும்போது ஒரு குழாயோட வாயை மூடினா அதன் பின் விளைவு மறுவாயையும் பாதிக்குமில்லியா? மேலும் நாம ஜபம்ங்கறது வாய் விட்டு சொல்றதில்லை. அஜபம்ங்கறாய்ங்க. அதாவது ஜபமல்லாத ஜபம். மனசுக்குள்ளாற ஜெபிக்கிறது.

இந்த கண்ணுக்கு தெரியாத அதிர்வுகள் ஆசனத்து சற்று மேல் பாகத்துல இருக்கிற மூலாதார சக்கரத்துல போய் முடியுது. அடி மேலடி அடிச்சா அம்மியும் நகரும்ங்கற மாதிரி இடைவிடாத இந்த அதிர்வுகளால குண்டலி விழிக்குது. ஓட்டுப்போடற சனம் விழிச்சிக்கிட்டாலே புரட்சி ஏற்பட்டுருங்கற போது குண்டலி விழிச்சா என்னென்ன அற்புதங்கள் நடக்கும்னு தெரிஞ்சிக்க இங்கே அழுத்துங்க.

சரி என்னவோ ஒரு எழுத்து அதோட ம் சேர்த்து (பீஜம்) ஜெபிச்சாலே (அஜபம்) இவ்ளோ எஃபெக்டு. சப்போஸ் நீங்க இந்த தியரியெல்லாம் தெரிஞ்சிருந்து போன ஜென்மத்துலயே ஒரு பீஜாட்சரத்தை ஒரு இருபது வருசம் போல ஜெபிச்சிருக்கிங்கனு வைங்க. அந்த பீஜாட்சரம் மட்டும் எதுனு தெரிஞ்சு இந்த ஜென்மத்துல அதையெ கன்டின்யூ பண்ணா எப்படி இருக்கும்?

இந்த எண்ணம் நம்ம ரிஷிகள்,மகரிஷிகளுக்கும் ஏற்பட்டிருக்கு. அதனாலதான் அவிக இதை டீகோட் பண்றதுக்கு ஒரு வழி செய்துவச்சிருக்காய்ங்க. அந்த வழி என்னன்னா இயற்கை மேல கொச்சையா சொன்னா கடவுள் மேல அவருக்கு மனிதர்கள் பால் இருக்கிற கருணைய அடிப்படையா வச்சி ஆராய்ச்சி பண்ணாய்ங்க.

ஒவ்வொரு நட்சத்திர( கூட்டத்)த்தோட அதிர்வுக்கும் சில எழுத்துக்களை உச்சரிக்கிறப்ப ஏற்படற த்வனிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறதை கவனிச்சாய்ங்க. சந்திரன் ஒவ்வொரு நட்சத்திர கூட்டத்தினூடே சஞ்சரிக்கிறப்ப பிறக்கிற குழந்தைகள் ஒவ்வொரு விதமான குணாம்சங்களோட இருக்கிறதை கவனிச்சாய்ங்க.

ஒரு குழந்தை ஏன் குறிப்பிட்ட நட்சத்திரத்துலயே பிறக்கனும். புனரபி மரணம் புனரபி ஜனனம். உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பதை பார்த்தா இந்த பிறப்புகளுக்கு இடையில் ஒரு லிங்க் இருக்கனும். ஒரு நோக்கம் இருக்கனும். அது என்ன? ஒரு இலக்கை நோக்கின பயணம் இது. இந்த பயணம் தடையில்லாம நடக்கனும்னா அதுக்கு சில ஏற்பாடுகள் அவசியம். அதை அவிக செய்தாங்க.

ஒரு குழந்தை ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்துல பிறந்தா அதனோட உடல்,மனம் ஒரு குறிப்பிட்ட எழுத்துக்களோட த்வனியை அதனோட அதிர்வுகளை ஏத்துக்கிட்டு வலுப்படறதை பார்த்துத்தான் இன்ன நட்சத்திரத்துல பிறந்த குழந்தைக்கு இன்ன எழுத்துல துவங்கறாப்ல பேர் வைக்க சொன்னாய்ங்க.இன்ன எழுத்துல துவங்கற பேரை கொண்ட பெண்ணை கண்ணாலம் கட்டனும்னு தீர்மானிச்சாய்ங்க.

அதுமட்டுமில்லிங்கண்ணா இன்ன நட்சத்திரத்துல பிறந்து இன்ன எழுத்துல துவங்கற பேரை கொண்டவன் இன்ன எழுத்தோட “ம்” சேர்த்து (பீஜம்) ஜெபிக்கனும்னும் ஒரு ஏற்பாடு பண்ணாய்ங்க. ஏன்னா அந்த எழுத்தைத்தான் அவன் கடந்த பிறவில ஜெபிச்சிருக்கக்கூடும்னு அவிக ஆராய்ச்சில கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு ரகசிய விஞ்ஞானம்.

எந்த பிராமணரோடவும் எனக்கு வாய்க்கா தகராறு கிடையாது, வரப்பு தகராறும் கிடையாது. இருந்தாலும் நான் பிராமணீயத்தை கச்சா முச்சானு விமர்சிக்கிறேன்னா அதுக்கு காரணம் இந்த மாதிரி ரகசிய விஞ்ஞானங்கள் பலதை அவிக ரகசியம் ரகசியம்னு மூடிவச்சு கடைசில அவிக வாரிசுகளுக்கு கூட கிட்டாம செய்துட்டாய்ங்க. இதான் இதான் என் கடுப்புக்கு காரணம்.

ஓம் நமோ நாராயணாய – இது அஷ்டாட்ஷர மந்திரம். இதை ராமானுஜருக்கு உபதேசிச்ச பார்ட்டி இதை லீக் பண்ணா நீ நாசமாயிருவனு சொன்னாராம்.ஒடனே ராமானுஜர் தாளி நாசமானா நான் ஒருத்தன் தானே நாசமாவேன். ஆனா இந்த அஷ்டாட்ஷர மந்திரம் சனங்களுக்கு கிடைச்சிட்டா பல்லாயிரக்கணக்கான பேர் முக்தியடைவாங்களேனு ரோசிச்சு கோபுரத்து மேல ஏறி நின்னுக்கிட்டு மேற்படி மந்திரத்தை கூவிச் சொன்னாராம். சொல்லிட்டு கோபுரத்து மேல இருந்து குதிக்க நாராயணரே வந்து கேட்ச் பண்ணி காப்பாத்தினாராம்.

இந்த ஸ்பிரிட் எத்தனை ஐயர்மாருக்கு இருந்திருக்கு ? அப்படி இருந்திருந்தா இந்த நிலை ஏன் வரப்போகுது. சரிங்கண்ணா மேட்டருக்கு வந்துர்ரன். ஓகே இதுவரை சொன்ன தியரிய லாஜிக்கலாவோ அல்லது என் பேர்ல இருக்கிற நம்பிக்கையாலயோ ஒரு குன்ஸா ஏத்துக்கிட்டிங்கனு நினைக்கிறேன்.

மந்திரத்தால மனம் அழியும். மனசுக்கு பிரச்சினை வரும்ங்கறது வெஸ்டர்ன் தியரி. மனசே பிரச்சினைங்கறது ஈஸ்டர்ன் தியரி (நன்றி: ஓஷோ).

இப்போ புரியுதா? மனம்னா நினைவுகள். அதுவும் நிகழ் காலத்துல நிக்காம இறந்த காலத்துக்கும்,எதிர்காலத்துக்கும் தாவற நினைவுகள். இந்த நினைவுகள் எந்த வடிவத்துல சேகரிக்கப்பட்டிருக்குன்னா நூத்துக்கு தொன்னுத்தொன்பது சதவீதம் வார்த்தைகளாத்தான் சேகரிக்கப்பட்டிருக்கு.

ஒரு சின்ன டெஸ்ட் முத முதலா நீங்க லவ் லெட்டர் கொடுத்த பெண்ணோட பேரு டக்குனு ஞா வரும்.
( வார்த்தை) ஆனால் அந்த அம்முலுவோ, குந்தளாவோ அவளோட முகத்த்தை நினைவுக்கு கொண்டுவாங்க பார்க்கலாம்.

1
2
3
4
5
அஞ்சு நிமிஷம் முக்கினாலும் ஞா வரலை பார்த்திங்கல்ல. ஆக மனம்ங்கறதே வார்த்தைகள்.

வார்த்தைகளை எப்படி நீக்கறது? ஒரு கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்ல வைரஸ் புகுந்து மொத்த ஃபைலும் கரப்ட் ஆயிருச்சு அதை ஒழுங்கு பண்ணனும்னா என்ன பண்ணனும்? ஃபார்மெட் பண்ணனும். மனசுங்கற ஹார்ட் டிஸ்கை ஃபார்மெட் பண்ண சின்ன ட்ரிக் இருக்கு. ஏதாவது ஒரே எழுத்தை அ ஒரே வார்த்தைய மறுபடி மறுபடி ஜெபிக்கனும்.

பெயர்களிலான முதலெழுத்து – நீங்க “ம்” சேர்த்து ஜபிக்க வேண்டிய எழுத்தையும் தந்திருக்கேன். எழுத்துன்னா அந்த ஒரு எழுத்து மட்டும் கிடையாது “க”ன்னா க,கா,கி,கீ முதல் கௌ வரை.

பை தி பை இந்த பீஜம், மந்திரம் மேட்டர்ல எல்லாம் உச்சரிப்பு ரெம்ப முக்கியம். அதனால உச்சரிப்பை ஆங்கிலத்துலயும் தந்திருக்கேன்.

உங்கள் பெயரில் முதலெழுத்து:
அ, ka,ஹ, த்த (உ.ம் தமிழ்)

நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
pa,ர,ta

உங்கள் பெயரில் முதலெழுத்து:
ஆ,த (உ.ம் தர்மம்), kka

நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
ஐ, tta, ல
உங்கள் பெயரில் முதலெழுத்து:
இ, dha, ga

நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
ஓ,வ, Da

உங்கள் பெயரில் முதலெழுத்து:
ஈ,dhdha, ga
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
ஓ,வ,da
உங்கள் பெயரில் முதலெழுத்து:
ஈ, gga, ந
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
ஔ,ஸ்ய, DDa
உங்கள் பெயரில் முதலெழுத்து:
உ,pa, ஞ
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
அம், ஷ
உங்கள் பெயரில் முதலெழுத்து:
ஊ,ச்ச, pa
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
த்த( தமிழ்) ,ஸ
உங்கள் பெயரில் முதலெழுத்து:
Bha, ஜ
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
அ,ka,ஹ, த்த (தமிழ்)
உங்கள் பெயரில் முதலெழுத்து:
ச்ச,Ba
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
அ, த(தர்மம்), kka
உங்கள் பெயரில் முதலெழுத்து:
ம, ஜ்ஜ
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
இ,dhdha, ga
உங்கள் பெயரில் முதலெழுத்து:

நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
ஈ, GGa, ந
உங்கள் பெயரில் முதலெழுத்து:
ஏ,ர,Ta
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
உ,pa,ஞ
உங்கள் பெயரில் முதலெழுத்து:
ஐ,TTa ,ல
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
உ,ச்ச,ப்ப
உங்கள் பெயரில் முதலெழுத்து:
ஓ,வ,DDa
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
Bha, ja
உங்கள் பெயரில் முதலெழுத்து:
ஔ,ஸ்ய,Da
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
ச்ச, ba
உங்கள் பெயரில் முதலெழுத்து:
அம், ஷ, ண
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:
ம, ஜ்ஜ
உங்கள் பெயரில் முதலெழுத்து:
த்த, ஸ
நீங்க ஜெபிக்க வேண்டிய எழுத்து:

சரி .. நீ இன்னானா சொல்லிக்கபா எனக்கு ஆத்தாவத்தான் பிடிச்சிருக்குன்னு அடம்பிடிக்கிறிங்களா? நோ ப்ராப்ளம்.

உங்க ஜாதகத்துல அஞ்சு ஒன்பது பாவாதிபதிகள்ள ஆரு பவர் ஃபுல்லா இருக்காருனு பாருங்க. அந்த கிரகத்தை பொருத்து நீங்க தியானிக்க/பூசிக்க வேண்டிய “அவள்” வடிவங்கள்.

சூரியன் – காயத்ரி
சந்திரன்- கன்னியாகுமாரி
செவ்வாய் – சண்டி ( சிம்மத்தின் மேல் அம்மன்)
ராகு – துர்கை ( புலி மேல் அம்மன்)
குரு – புவனேஸ்வரி
சனி – வாராஹி
புதன் – நாராயணி
கேது: காவி உடுத்து தவ நிலையில் உள்ள வடிவம்
சுக்கிரன்: லட்சுமி

சனி+ செவ் சேர்ந்திருந்தா உக்ர ரூபத்துல உள்ள அம்மன் (ஒரு டக்கரான குட்டிய பார்த்ததும் நம்ம நாக்குலருந்து ஜொள்ளு ஒழுகற மாதிரி ஆத்தா நாக்குலருந்து ரத்தம் சொட்டனும் ஆமா சொல்ட்டன்)

( ஹய்யோ ஹய்யோ மொக்கையே ஒரு பதிவாயிருச்சு.. பார்ப்பம் அடுத்த பதிவுலன்னா எதுனா பெயருதானு)

Advertisements

43 thoughts on “பலான மேட்டரில் சில "பிடிகளும் பிடிப்பும்"

  டவுசர் பாண்டி said:
  March 30, 2011 at 2:00 am

  பதிவு டக்கருப்பா. இந்த சனியும் செவ்வாயும் வேற வேற வூடுகள்ள குந்திக்கினு, சனி செவ்வாய சைட் அடிச்சிக்கினு, பதிலுக்கு செவ்வாயும் சனிய சைட் அடிச்சிக்கினு இருந்தா எப்டி நைனா. இப்புடி கேள்வி கேட்டுக்கினு இருந்தா நீ ஏசுவன்னு தெரியும். இருந்தாலும் ஒன்ட்ட ஏச்சு வாங்கி ரொம்ப நாலாகுதுப்பா. அதுக்குதேன்.

   S Murugesan said:
   March 30, 2011 at 3:18 am

   வாங்க பாண்டி,
   நான் ஒரு கேணிக்குள்ளான கருவூலம் நீங்க ஒரு பாதாள கொலுசுங்கறது என் தாழ்மையான கருத்து. நீங்க கேட்கிற சனி செவ் மேட்டரை ஏற்கெனவே எழுதி பட்டைய கிளப்பியிருக்கேன். வேணம்னா Google search ல போய் kavithai07+சனி+செவ் என்று தேடுங்கள்.

  சார்,

  கொஞ்சம் சரியா புரியலே ,,,
  இப்போ என் பெயர் ஜா – வில் துவங்குவதால்

  ஜெபிக்க வேண்டிய எழுத்து
  அ,ka,ஹ, த்த (தமிழ்)

  என்கிறீர்கள் ,,, அப்படியானால்,

  அம் – கம் – ஹம் என்று மட்டும் உச்சரிக்க வேண்டுமா ?
  அல்லது …

  புரியவில்லை ,,,

   S Murugesan said:
   March 30, 2011 at 3:13 am

   ஜானகி ராமன்!

   உங்க பேரை பார்க்கிறப்பல்லாம் ” ராமய்ய நா தன்ட்ரி, சீதம்ம நாயம்ம ” கீர்த்தனை ஞா வந்துருது. நன்றி. பீஜம் என்பது கேப்ஸ்யூலில் உள்ள மருந்து மாதிரி . டைரக்டா எடுத்துக்கிட்டாலும் ஓகே. அல்லது பிரணவம், பீஜம், நாமா , நமஹ/ஸ்வாஹா கிரமத்துல ஜெபிச்சாலும் சரி

   தேவதா நிர்ணயம்;
   ஜாதகப்படி உங்களுக்கு அனுகூலமாக இருக்கும் கிரகத்துக்குரிய தேவதை/தேவர்களின் வடிவங்களில் எது அனுகூலம், அந்த வடிவங்களுகுரிய நாமாக்களில் எது மேற்படி எழுத்தில் ஆரம்பமாகிறது என்று பார்த்து ஆரம்பிக்கலாம்.

   சீரியஸா ஆரம்பிச்சு கன்டின்யூ பண்ற மாதிரி இருந்தா சொல்லுங்க இன்னும் சில டிப்ஸ் தரேன்

   நான் இதெல்லாம் ஏதுமில்லாமத்தான் ஆரம்பிச்சேன்னும் சொல்லிர்ரன்.

  சார்,
  அப்புறம் ஒரு முக்கியமான விசயம் ,,,

  மற்ற வலைப்பதிவுகளில் வாசகர்களின் கருத்துரைகளையும் அவரவர் மின்னஞ்சல் முகவரிக்கு FORWARD செய்யும் OPTION இருக்கிறது ,, நமது அனுபவ ஜோதிடத்தில் அந்த வசதி இல்லையா ?

  ஏன் என்றால் எல்லா நேரமும் கம்ப்யூட்டர் முன்னால் இருக்க முடியாதல்லவா ? அப்போது மறுமொழிகளை மொபைலில் ( cellphone ) பார்த்துக் கொள்ள வசதியாக இருக்குமே ?

  தங்கள் வலைப்பூவின் கெஜட்டில் இப்படி ஒரு ஏற்பாடு செய்யலாமே ?
  ( அல்லது செய்திருக்கிறீர்களா – என் பார்வையில் படவில்லையா )

  அப்புறம் இன்னொரு suggestion
  background colour ஐயும் LIGHT GRAY or WHITE COLOUR ல் மாத்தினால் படிக்க எளிமையாக இருக்கும் … அப்புறம் FONT SIZE ம் இன்னும் கொஞ்சம் பெரிசாக்கினா என்னை மாதிரி 36 வயசு தாத்தாக்களும் ஈஸியா படிக்க உதவியா இருக்கும் …

  கண்டுக்கிறியா ராசா ….

   S Murugesan said:
   March 30, 2011 at 3:07 am

   ஜானகி ராமன் !
   இதெல்லாம் நம்ம சிற்றறிவுக்கு எட்டாத விஷயம். இதையெல்லாம் திரு சரண் சார் தான் பார்க்கனும். சொல்லிப்பார்க்கிறேன்.

  அன்புள்ள தோழர் டவுசர் பாண்டி அவர்களே,
  பின்வரும் வலைப்பூவினை பாருங்கள் ( பார்த்திருந்தாலும் நல்லதே )
  http://www.aanmigakkadal.com/2011/03/blog-post_22.html

  ஒரு தகவலுக்காக மட்டுமே, நன்றி ,,,

  ஆமாங்கன்னா அது என்ன டவுசர் பாண்டி ? உங்கள் வருகையை பல பதிவுகளில் பார்த்திருக்கிறேன் ,,,

  நன்றி தோழரே ,, சந்திப்போம்,

  rajesh said:
  March 30, 2011 at 4:45 am

  ஜானகி ராமன் சொன்னதுபோல மாற்றலாம். படிப்பதற்க்கு இந்த Background சரியில்லை. Commends area நன்றாக உள்ளது. மற்றபடி கட்டுரை நன்றாக உள்ளது

   S Murugesan said:
   March 30, 2011 at 11:27 am

   நன்றி ராஜேஷ் அவர்களே!

  அன்புள்ள தோழர்களே…

  இன்றைய
  இந்தியா Vs பாகிஸ்தான்
  கிரிக்கெட் மேட்ச்சில்

  நமது இந்தியா வெற்றி பெற எல்லாம்வல்ல இறைவனை
  மனதார பிரார்த்தனை செய்வோம்..

  ஒரு நிமிடமாவது கண்களை மூடி மனதார வேண்டுவோம்..

  பாரத் மாதா கி ஜே

   வினோத் said:
   March 30, 2011 at 6:37 am

   மன்னிக்கணும் ஜானகிராமன் சார் ,
   நீங்களுமா?
   இந்தியா (?)முதலில் கிரிக்கட் விளையாடுவது இந்த்யா அல்ல BCCI , BCCI அணி இந்திய அணி அல்லனு அவர்களே கோர்டில் வாக்குமூலம் கொடுத்து இருக்காங்க.?…
   அப்படியே இந்தியான்னு நீங்க சொன்னாலும் இந்த மேட்ச் உட்பட எல்லா மேட்சிலும் அந்த அணி தோற்கணும். கிரிக்கட் மோகம் இந்தியாவை விட்டு நீங்கணும்னுகிறது என் நிலை.
   எனவே.. எல்லா மேட்சிலும் தோற்று இந்தியா, பாக்கிஸ்தான், உட்பட எல்லா நாடுகளும் உருப்பட இறைநிலையிடம் வேன்டுகிறேன்.

    S Murugesan said:
    March 30, 2011 at 11:13 am

    வினோத் ஜி,
    உங்க வயசு என்ன ? கரீட்டா 1999ல் நானு இப்படியேத்தான் ரோசிச்சன்

    வினோத் said:
    March 30, 2011 at 11:28 am

    எனக்கு 33 தேதி..13-11-1976
    எப்ரலில் (சம்பளம் வந்தவுடன்) எல்லா தகவல்களையும் அனுப்பிவைக்கரேன்,
    என் ஜாதகததையும் பார்த்து சொல்லுங்க…

    S Murugesan said:
    March 30, 2011 at 3:04 pm

    வினோத் ஜீ,
    வயசை கேட்டது கிரிக்கெட் பற்றிய உங்க கருத்தை படிச்ச அதிர்ச்சியிலதான் ( நாம 1976) மத்தபடி ஜாதகம்லாம் ஏப்ரல் 15க்கு மேல அனுப்புங்க ப்ளீஸ்

   S Murugesan said:
   March 30, 2011 at 11:27 am

   ஜானகி ராமன் சார்,
   கிரிக்கெட் மேட்டர்ல வினோத் கருத்தே என் கருத்தும். சாரி.

  சார்… இதில் எனக்கு உண்மையிலேயே ரொம்ப ஆர்வம் உண்டு..

  அடியேன் ஏற்கனவே சமயம் மற்றும் விசேட தீக்கைகள் வாங்கி ( சிவ தீக்கை ) வீட்டில் நாள்தோறும் சிவபூசை செய்து வருகிறேன் …

  எனது குருநாதர் சென்னை ஒளியகம் ந.ரா. ஆடலரசு ஐயா அவர்கள் ( மறைமலை அடிகளின் மாணவர் ) உபதேசித்த மந்திரங்களை ஜபித்து வருகிறேன்…

  அருள்துறையிலும் ஆண்டவன்பாலும் உள்ள ஈடுபாட்டினாலும்
  சீரியஸா ஆரம்பிச்சு கன்டின்யூ பண்ணனும் னு தான் கேட்கிறேன்…

  டிப்ஸ் சொல்லுங்க கன்டின்யூ பண்றேன், நன்றி ..

  ( இன்னிக்கு ரொம்ப ஓவரா கமெண்ட் ஏரியாவுலே எண்டர் ஆயிட்டேனோ ? )

   S Murugesan said:
   March 30, 2011 at 11:26 am

   ஜானகிராமன்! வாங்க !
   இயற்கையோட அஜெண்டாவுல நீங்க கமெண்ட் போடவே இந்த சைட் ஆரம்பிக்கப்பட்டதோ என்னமோ? தூள் பண்ணுங்க. டிப்ஸ் உங்களுக்கு மட்டுமில்லை. அல்லாருக்கும் சேர்த்து தனிப்பதிவாவே போட்டுர்ரன்

  இராச.புரட்சிமணி said:
  March 30, 2011 at 5:23 am

  பதிவு அருமை வாழ்த்துக்கள்
  ////ஓட்டுப்போடற சனம் விழிச்சிக்கிட்டாலே புரட்சி ஏற்பட்டுருங்கற போது குண்டலி விழிச்சா என்னென்ன அற்புதங்கள் நடக்கும்னு தெரிஞ்சிக்க இங்கே அழுத்துங்க////
  இங்க ஒன்னும் இல்லையே…

  ///நான் இதெல்லாம் ஏதுமில்லாமத்தான் ஆரம்பிச்சேன்னும் சொல்லிர்ரன்.////
  இப்படி இருக்கும் பொழுது நீங்கள் ஏன் இதற்க்கு முக்கியத்துவம் தருகிறீர்கள்?

  சுக்கிலம் பற்றிய என்னுடைய முந்தய பதிவை திருத்தி விட்டேன், நீங்கள் சொன்னதே சரி என்பது சில நம்பிககுரியவர்களின் கருத்தாகவும் உள்ளது. அதில் இன்னும் ஆராய்ச்சி செய்யா தூண்டிய தங்கள் கருத்துக்கு நன்றி.
  இன்று குருவை பற்றி கிறுக்கியுள்ளேன் உங்கள் கருத்தை அறிய ஆவல்.
  http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/

   S Murugesan said:
   March 30, 2011 at 11:24 am

   பாஸ்,
   முன்னோடிகளோட சைக்காலஜி ரெண்டு விதம். நான் கஷ்டப்பட்டு வந்தேன். அதனால நீயும் அப்படியே வா
   -இது ஒரு விதம்.

   அன்னைக்கு எனக்கு சொல்ல ஆருமில்லப்பா. நான் பட்ட கஷ்டத்தை நீயும் படனுமா? மானாம் ராசா.. இதான் ட்ரிக், இதான் டிப்புனு அள்ளித்தர்ரது – இது இன்னொரு விதம்.

   நமக்கு ரெண்டாவது டைப்பு பிடிச்சிருக்கு. ஆரு கரீட்டுங்கறாய்ங்க.. ஆரு தப்புங்கறாய்ங்கனு பார்க்காதிங்க. உள்ளாற போய்ட்டே இருங்க .

   உங்களுக்கே ஸ்பார்க் ஆகும்.

    இராச.புரட்சிமணி said:
    March 30, 2011 at 8:50 pm

    உங்களுடை எண்ணம் பாராட்டுக்குரியது. நீங்கள் செய்ததையே சொல்லி கொடுத்த இன்னும் நல்ல இருக்கும்னு நினைச்சேன்.

    //ஆரு கரீட்டுங்கறாய்ங்க.. ஆரு தப்புங்கறாய்ங்கனு பார்க்காதிங்க. உள்ளாற போய்ட்டே இருங்க .//

    சாரி பாசு, நிதயானந்தா மாறி கயவர்களை பாக்கறதுக்கு முன்பிலிருந்தே
    “உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே” இதான் என்னுடைய பாலிசி.
    இதை பொதுவாக சொன்னேன் தவறாக நினைக்க வேண்டாம்.
    நீங்கள் தேடும் சிழ்யன் நானாக கூட இருக்கலாம்.(எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் சொன்னாரு குரு தான் சிழ்யன தேர்ந்த்தடுப்பர்கலாம்)
    நன்றி பாஸ்

    S Murugesan said:
    March 30, 2011 at 8:54 pm

    புரட்சிமணி அய்யா,
    நான் சாரி கட்டுவதில்லை. சாரி!
    ( நமக்குள்ள எதுக்குங்க இதெல்லாம்)

  டவுசர் பாண்டி said:
  March 30, 2011 at 6:11 am

  ஏம்பா முருகேசு, எங்கூர்ல உள்ள சனங்க சோசியக்காரவுகட்ட சாதகம் பாக்கச்சில சைக்கிள் கேப்புல இந்த கேள்விய கேட்டுப்புடுராக. அது இன்னான்னு கேளேன்.

  “சாமி! இது என்னோட மகன் சாதகம், இந்த புள்ளையாண்டானுக்கு எப்ப கண்ணாலத்த வைக்கலாம்நு கொஞ்சம் பாத்து சொல்லுங்க. அப்புடியே இந்த புள்ளயாண்டான் கூட பொறந்தவுகள பத்தியும் சொல்லுங்க.” ஒடனே சோசியக்காரவுக கண்ணால மேட்டர கூட்டி கழிச்சி பட்டுன்னு சொல்லிருவாக.

  இந்த பேமானி எத்தன பொஞ்சாதிய கட்டிக்கினான், எத்தன புள்ளைகள பெத்துக்கினான்னு சோசியக்காரவுகளுக்கு ஞான திருஷ்டி இருந்துச்சினா பரவால்ல. இல்லாட்டி இன்னா பண்ணுவாரு பாவம். அதேன் அவிகளுக்குள்ள தெரிஞ்சிக்கிற மாறி ஒரு ஷார்ட் ஹேன்ட் எழுதி வச்சிக்கிட்டாக மனுசாளுக்கு தலைல எழுதிருக்குன்னு சொல்லுவாகள்ள அத மாறி இது சுருக்கெழுத்து. தலைஎழுத்த ஆண்டவந்தேன் சொல்லணும். ஆண்டவனால வரமுடியாததால சோசியக்காரவுக சொல்லுவாக.

  ஆனா இந்த சுருக்கெழுத்த சோசியக்காரவுக மட்டுந்தேன் சொல்ல முடியும். அந்த சுருக்கெழுத்த பாக்கனும்பா, ஆசையாகீதுன்னு நெனச்சீங்கன்னா இங்கன அமுக்குநீன்கன்னா அங்கன கொண்டு போயி வுட்டுரும். இதுதேன் அந்த சுருக்கெழுத்து. இதுக்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பேரு வச்சிருப்பாக. அது நமக்கெதுக்கு.

  நான் இங்கிலிபீசுல ஷார்ட் ஹேன்ட் முடிச்சினு இருக்குறதால இத சுருக்கேளுத்துன்னு சொல்றேன். சரி மேட்டருக்கு வர்றேன்.

  இதுல உள்ள சூ அப்டின்னா சூரியன் ஒங்களுக்கு தெரிஞ்சதுதேன். பி அப்டின்னா பிரதமைன்னும் ஒங்களுக்கு தெரியும். சந் அப்டின்னா அம்மாவ குறிக்கிற கெரகம்னு பட்டுன்னு நெத்தில அடிச்ச மாறி (என் நெத்தில இல்ல) சொல்லிருவீக.

  சரி இதுல சூ பி அப்டின்னா அப்பன் ஒன்னு அப்டின்னு ஒங்களுக்கு தெரியுமா? பிரதமைக்கு அடுத்து ரெண்டாவதா வர்ற திதிய அதாவது சூ பி சந் துவி இப்புடி எழுதிக்கினு இருந்திச்சின்னா அப்பன் ஒன்னு ஆத்தா ரெண்டுன்னு அர்த்தம்.

  இப்ப சூ சூ பி அப்டின்னா அப்பனோட அதாவது அந்த சாதகக்காரனோட அப்பனோட அப்பன் ஒண்ணுன்னு அர்த்தம். அத மாறி 11னு நம்பர் எழுதிக்கினு இருந்தா அது மூத்தவுகன்னு பட்டுன்னு சொல்லிருவீக. இப்புடியே நீங்களே படிச்சி பாருங்க. ஒங்களுக்கே கபால்னு ஐடியா கெடைக்கும். நல்லா யோசிங்க. தூள் கெளப்புங்க.

  பெரிய பெரிய சொசியக்காரவுக இத கண்டுக்குட மாட்டாக. டுபாக்கூர் சோசியக்காரவுகளுக்கு இத சொல்லித்தான் வர்ற ஆட்கள அசத்துவாக. நல்ல சோசியக்காரவுக இத படிச்சிட்டு கோச்சுக்க மாட்டாகன்னு ஒங்களுக்கே தெரியும். எடைல நு எழுதிருக்குல்லா அது எந்த தமிழ் வருசத்துல இந்த சாதக்கத்த கடைசியா பாத்துக்கினு இருக்காகன்னு அர்த்தம். இதுல உள்ள ரெண்டாவது பெராகிராப்ப நல்லா படிங்கோ.

  தற்கால கிரகநிலைகளை சக்கரத்தில் கண்டு சொசியக்காரவுகள் பலன் சொல்ல வேண்டும்னு சொல்வாக. அது கெரக நிலைய சொல்றாகளோ இல்ல கூட பொறந்தவுகளோட நிலைய சொல்றகலோன்னு நாம வில்லங்கமா யோசிக்கப்படாது.

  கரீட்டா தற்கால ங்குற மேட்டருக்கு நேராதேன் 1169நு (last updation year) எளுதுவாக. இதமாதிரி பல அஜால் குஜால் மேட்டர் நம்ம கைல நெரிய இருக்கு அப்பப்ப அவுத்து விடுறேன். இத படிச்சிக்கினு யாரும் நம்ம கைல சண்டைக்கு வந்துராதீங்கப்பா. பாழாப்போன கரண்டு அடிக்கடி கட்டாகுதுப்பா. அதனால சட்டுன்னு முச்சிர்றேன்.

   S Murugesan said:
   March 30, 2011 at 11:20 am

   வாங்க பாண்டி,
   நெஜமாலுமே ஹாட் ஸ்டஃப். இன்னம் நிறைய கொடுங்க.

    டவுசர் பாண்டி said:
    March 30, 2011 at 4:45 pm

    ரொம்ப டேங்சுபா.. இத படிச்சிக்கினு எங்கூருகாரவுக யாராச்சும் ஹாட்டாகாம இருந்தா சரிதேன். அத மாரி இதுல இன்னொரு முக்கியமான மேட்டரு, சுக் பிரி அப்டினு எலிதிரிந்தா (ஆம்பள சாதகம்னா) பொஞ்சாதி நடுரோட்டுல உட்டுக்கினு ஓடிட்டுனு அர்த்தம் (அதாம்பா டைவருசு). சுக் நீசம்னு எலிதிருந்தா பொஞ்சாதி உசுரோட இல்லன்னு அர்த்தம். செலரு சுக் 0 அப்டின்னும் எலுதுவாக. அப்டியே வாசிச்சி பழகுனீங்கன்னா ஒங்கலுக்கே (சனங்கல சொல்ரேன்) மைண்டுல கபால்னு ஐடியா கெடச்சிக்கினேருக்கும். இந்த மாரி மேட்டர எதுக்கு இங்கன சொல்ரென்னா தனி பதிவா போட ஆசதேன். நம்ம தல கைல சொல்லிக்கினா “யூ ஆர் அப்பாண்ய்ண்டட்”னு இன்விடேசன் குடுத்துருவாக. அப்பால நா அம்பேல். நா ஆத்தரானா சனங்க கேள்விகல கேட்டு என்னய நல்லா ஆத்து ஆத்துன்னு ஆத்தி டவுசர கல்ட்டிவுட்ருவாக. நம்முது மீனலக்னமாச்சா, அதனால சந்துல சிந்து பாடிட்டு போய்க்கினே இருக்க வேண்டியதுதேன். 

    S Murugesan said:
    March 30, 2011 at 5:56 pm

    பாண்டி!
    ஒரே கிரகஸ்திதில பிறந்த எந்த ரெண்டு பேருக்கும் ஒரே பலன் ஏற்படாது. ஜோதிஷம் ரெண்டாம் வாய்ப்பாடு கடியாது. அல்ஜீப்ரா மாதிரி ” மூளை பாம்பே அல்வா மாதிரி இளகிப்போயிரும்”

   Kirumi said:
   March 31, 2011 at 11:48 am

   இதுக்கு பேரு பரிபாஷை. (குறிப்பு மொழி). இது தெரியாட்டி பல ஊர்கள்ள ஒரு சாதகம் கூட பாத்து பலன் சொல்ல முடியாது, தூன்னு துப்பிருவாங்க, முக்கியமா மதுரைப் பக்கம். தாய்மாமன், கூடப் பொறந்தவங்க எண்ணிக்கைய சரியா சொல்லலேன்னா, டக்குன்னு எந்திரிச்சிருவாங்க. எத்தனை அம்மா, எத்தனை கல்யாணம், எத்தனை குழந்தைங்க, ஆண் எத்தனை பெண் எத்தனைன்னு பரிபாஷையை ஒழுங்கா பாத்து சொல்லலேன்னா பி.வி.ராமனாவே இருந்தாலும் அசிங்கமாயிரும்.

    S Murugesan said:
    March 31, 2011 at 12:02 pm

    கிருமி அவர்களே,
    நான் இந்த செப்படி வித்தைகளில் வித்தகன் அல்லன். ( ஆரம்ப காலத்தில் நுழைந்து பார்த்ததுண்டு -வெற்றிக்கொடியும் நாட்டியதுண்டு – ஆனால் இவற்றால் யாருக்கும் பயனில்லை என்று உணர்ந்து விலகிவிட்டேன்) – இறையருளால் இது போன்ற எதிர்பார்ப்புகளுடன் யாரும் என்னை தொடர்பு கொள்வதில்லை. இறைவனுக்கு நன்றி.

    ramesh said:
    March 31, 2011 at 12:51 pm

    ஓஹோ, இதுதான் விஷயமா? ஜோதிடர்கள் இப்படித்தான் சரியாக சொல்கிறார்களா! குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களை ஜாதகத்தில் காண முடியாதா அண்ணா? இருந்தால் அதையும் சொல்லிக் கொடுங்கள் அண்ணா.

    Kirumi said:
    April 2, 2011 at 12:29 pm

    சில சாதகங்களுக்கு பலன் சொன்னால் சரியாக வராது, தப்பு என்றே சாதகரிடம் இருந்து பதில் வரும். கிராஸ் செக்கிங்கில் கூட எதையும் கண்டு பிடிக்க முடியாது. அது மாதிரி நேரங்களில் இவற்றை பாவிக்க வேண்டும். உதாரணமாக சகோதரகாரகன் செவ்வாய் எவ்வளவு பலத்தில் இருக்கிறார் என்று இதன் மூலம் கண்டு கொள்ள வேண்டும். இதில் ஆண் பெண் எண்ணிக்கையும் குறிக்கப்படும். அவற்றைக் கொண்டு குறிப்பிட்ட கிரகத்தின் பலனையோ அது பலன் தரும் ஸ்டைலையோ அளவிடலாம். உதாரணமாக ஆண் சகோதரர் வெளி நாட்டில் இருப்பார், இது அயல் / வெளி என்று குறிப்பிடப்படும். பெண் சகோதரி உயர்ந்த நிலையில் (அரசு வேலை) இருப்பார் (சாப்ட்வேர் தொழிலைக் கூட பரிபாஷையில் குறிப்பிட ஆரம்பித்து விட்டனர்). இந்த சமயத்தில் அக்கிரகம் முழுதும் சகோதரர்களுக்கு சாதகமாக உள்ளது, இவருக்கு பயனளிக்காது என்ற ரீதியில் அல்லது அது போன்ற‌ கணக்குகளை போட்டு பலன் சொல்ல வேண்டும். இதற்காக உருவாக்கப்பட்ட இம்முறை, இன்று தாய்மாமன், சகோதரர், சக்களத்திகளின் எண்ணிக்கையை சோதிடர்கள் குறிப்பெழுதி, நானும் ரவுடிதான் என்று பறை சாற்ற மட்டுமே உதவுகிறது. மற்றபடி மேற்படி உறுப்பினர்களின் எண்ணிக்கையை எல்லாம் இன்று உள்ள சோதிட அறிவின் மூலம் சரியாக சொல்வதென்பது தெய்வ அருள் படைத்தவர்கள் மட்டும் செய்யக் கூடிய செயல்.

    S Murugesan said:
    April 2, 2011 at 1:30 pm

    கிருமி,
    உங்க பாய்ண்ட் எனக்கு புரியுது. நமக்கு நம்மை ஆருக்கும் ப்ரூவ் பண்ணனுங்கற துடிப்பே கிடையாது. நம்பி வந்தவுகளுக்கு சொல்லவே நேரமில்லை. இதுல புதுசா “கிம்மிக்” எல்லாம் செய்து நம்ப வச்சு .. இதெல்லாம் வீண் வேலை.

    மேலும் நம்ம அடிப்படை சித்தாந்தமே வேற. கடவுள் மன்சனை “ஃப்ரீயா உடுமாமே”ன்னு உட்டுட்டாரு. ஜாதகம்ங்கறது ஃபைனல் கிடையாது. அது ஜஸ்ட் ஒரு ப்ரப்போசல் மாதிரி. நாம நம்ம வில் பவரை வச்சு அதை மறுக்கலாம். கிரகங்கள் மன்சனுக்கு மஸ்தா ஆப்ஷன்ஸ் தருதப்பு. அதுல பெட்டர் சாய்ஸ் எதுனு பார்த்து பொறுக்கிக்கலாம்.

    இப்ப என்ன நிலைமைங்கறத சொல்ல ஜாதகம் தேவையா? ஜோதிடர் தேவையா? இதெல்லாம் ஜாதகருக்கு தெரியுமே.. நாளைக்கு என்னங்கறதை தெரிஞ்சிக்கிட்டும் கிழிக்கப்போறது ஒன்னுமில்லை.

    உன் எதிர்காலம் இப்படி இருக்க வாய்ப்பிருக்குனு சொல்ற வரை தான் இன்றைய ஜோதிடம். அதை எப்படியெல்லாம் வளைக்கலாம் ( ஒரு எல்லை வரை) அனுகூலமா மாத்திக்கலாம்னு சொல்றது நம்ம அனுபவஜோதிடம்.

  டவுசர் பாண்டி said:
  March 30, 2011 at 6:14 am

  ஐயோ சாரிப்பா, மேட்டர எழுதிக்கினு வழிய காட்டாம வுட்டுட்டேன். இங்கன அமுக்குங்க http://img20.imageshack.us/i/kocharam.png/ அங்க போயி வுட்டுரும்.

  டவுசர் பாண்டி said:
  March 30, 2011 at 6:17 am

  சனங்க யாராவது நான் எழுதுன பத்தி கோச்சிக்குனு இருந்தீங்கன்னா இங்க ஒரு தாட்டி http://www.youtube.com/watch?v=V8C0h_d5C78 வந்துட்டு போங்க ப்ளீஸ்.

  வினோத் said:
  March 30, 2011 at 6:26 am

  தல ,
  பழய பதிவு பற்றிய சமாசரம் முதலில்…
  நீங்க சோனிய சாதகம் கணிச்சிருந்தீங்க…டவுசர் பாண்டி லிங்க் படி ..
  =====
  http://www.singaporejunction.com/eserv/ta/pub/astrology/CelebrityHoroscopes.asp
  3 சோனியா காந்தி 09-Dec-1946 at 09:30 P.M.
  [மிலன் – தீர்காம்சம்:9° 10′ E & அட்சாம்சம்:45° 28′ N]
  ====
  ஆனால் நேற்று சுப்பிரமணியம் சாமி, சோனியாவின் பெயர் ஆன்டினியா மைனோ. பர்த் சர்டிபிகட் படி, அவரின் பிறந்த நாள் 9-dec-1944. மேலும் இந்த சமயத்தில் அவரின் தந்தை மைனோ, ரஷ்ய சிறையில் இருந்தார். பின் எப்படி சோனியா அவரின் மகள் என கேட்கிறார்.

  அது எப்படியோ போகட்டும்..
  இந்திய பாராளுமன்றத்துக்கு அவர் கொடுத்த தகவல் படி
  அவர் பிறந்த இடம் கசானோ, டுரின் என்னும் இடத்திற்கு பக்கத்தில் உள்ளது. பிறந்த வருடத்தில் 2 வருடம் வித்தியாசம் உள்ளது.. கொஞ்சம் பாருங்க..
  ராஜிவ் கொலைக்கு சோனியா மற்றும் பலர் காரனம்கிறார் சுவாமி, சுவாமி காரணம்கிரார் வேலு சாமி…பாருங்க…
  பார்க்க ;http://deviyar-illam.blogspot.com/2010/12/blog-post_05.html
  http://vu-point.blogspot.com/2011/02/dr-subramanian-swamy-exposes-sonia-and.html
  ======================================================
  மனிதர்ளை துறத்தும் சம்பவங்கள் பதிவுக்கு ஹிட்லர், பிரிசன்ஸ் டயனா பற்றி லிங்க் கொடுத்தேன் பார்த்தீங்கள?
  மரணம் பற்றிய தொடரை தொடருங்க..கில்மா மாதிரி.. ஒவ்வொறு ராசி லக்னம் , கிரக சேர்க்கைக்கு எப்படி என்ன பரிகாரம் பண்னாலாம்.. இப்படி போடுவிங்க நினைச்சென்..
  நீங்க மரனம் என் ஆசான், முற்பிரவி, ஆசான் 2 ,பிரவி சக்கரம், குண்டலினி, சம்பவங்கள் , அவள் .. னு போய்டிங்க…

  இறைநிலையிடம் வேண்டிகிட்டு தான் எழுதறென். தினமும் உங்களுக்காக வேண்ட முயற்சிபண்றேன்..

  தொடர தொடருங்கோ…….

   S Murugesan said:
   March 30, 2011 at 11:15 am

   வினோத் ஜி,
   மொதல்ல ஹவுஸ் ஃபுல் போர்டை மாட்டினாத்தான் இதையெல்லாம் கவனிக்க முடியும். வரேன்

    வினோத் said:
    March 30, 2011 at 11:42 am

    சோனியா ஜாதக மேட்டரை பார்த்திங்களா ?

  வினோத் said:
  March 30, 2011 at 6:45 am

  //..குண்டலி விழிச்சா என்னென்ன அற்புதங்கள் நடக்கும்னு தெரிஞ்சிக்க இங்கே அழுத்துங்க.//
  இந்த லிங்க் வேலை செய்யலை. பாருங்க…

   S Murugesan said:
   March 30, 2011 at 11:12 am

   வினோத் ஜீ,
   முந்தின பதிவில் மேற்படி மேட்டர் கட் பேஸ்ட் ஆகியிருக்கு. அதனால நோ ப்ராப்ளம்!

  டவுசர் பாண்டி said:
  March 30, 2011 at 11:56 am

  ஏம்பா முர்கேசு,
  இந்த http://jyothishi-pandit.blogspot.com/2008/08/mega-star-chiranjeevi-will-he-be-next.html வெப்சைட்டுல நெரிய பெருந்தலைங்க சாதகம் கொட்டிக்கெடக்குன்னு சொல்லிக்கிறாங்களே. மெய்யாலுமே இருக்குன்னு நேனைக்கிரேன்பா. நீயும் வந்து பாரேன்.

   S Murugesan said:
   March 30, 2011 at 3:02 pm

   பாண்டி வினோத்,
   கடமை கழுத்தை நெறிக்குது. நேரம் இல்லை ப்ளீஸ். புரிஞ்சுக்கோங்க

    டவுசர் பாண்டி said:
    March 30, 2011 at 4:57 pm

    சரிப்பா. ஒன்ட கேள்வியே கேக்க மாட்டோம்பா. ரொம்பத்தான் அலுத்த்துக்கிரியே. ஒருதாட்டி அந்த வெப்பு சைட்ட பாத்தா கொறஞ்சா போயிருவ. 

    S Murugesan said:
    March 30, 2011 at 5:52 pm

    டவுசர் பாண்டி,
    பார்த்ததா பேர் பண்ண ரெம்ப நேரம் பிடிக்காது. ஆனால் பொய் நமக்கு பிடிக்காது. வாழ்க்கையில் நிறையவே சொல்லியாச்சு. கோட்டா தீர்ந்துபோச். ஐம் சாரி பாஸ்!

  kandhan said:
  April 2, 2011 at 7:35 am

  ஒரு பெயரில் இரண்டு பாகம் இருக்கும் பொது சில சமயம் முழு பெயர் சொல்லியும் சில சமயம் இரண்டு பாகத்தில் ஒரு பாகம் மட்டும் சொல்லி அழைப்பாங்க. அப்போ எந்த எழுத்தை எடுத்துக்க வேண்டும்? உதா. முத்து கிருஷ்ணன்.

   S Murugesan said:
   April 2, 2011 at 11:33 am

   கந்தன் அவர்களே,
   நீங்க சொத்தை வாங்கினா எந்த பேர்ல ரெஜிஸ்டர் பண்ணுவிங்களோ அந்த பேரோட மொதல் எழுத்தை எடுங்க.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s