அவள்அவன்-அவள்-அது :1

Posted on

எவளுக்குள்ளயும் ஆணினம் அவளைத்தான் தேடுது. எவளுக்குள்ளும் அவள் தான் இருக்கிறாள்.

அவளைபத்தி சொன்னா பீலா விடறதா தோணும். லாலா போட்டு பினாத்தறதா தெரியும். மோகத்தை உண்டாக்குபவளும் அவளே மோகினி. பின் மோகத்திலிருந்து யோகத்துக்கு இழுத்து செல்பவளும் அவளே. யோகினி.

எல்லா எழுத்தும் அவளையே குறிக்கும். ஒன்னுக்கொண்ணு முரண்பட்ட எல்லா வார்த்தையும் அவளையே குறிக்கும். காலாயை நமஹான்னாலும் அவதான். காலாதீதாயை நமஹான்னாலும் அவள் தான்.

“அனாமிகா”ம்பாய்ங்க ( பேரில்லாதவள்) .அப்பாறம் பார்த்தா சஹஸ்ர நாம அர்ச்சனைம்பாய்ங்க. அவளே ஒரு புதிர். தர்கத்துக்கு எதிர்.

நம்ம ஈகோ ஒரு அல்பம். எதையெடுத்தாலும் லாஜிக் பார்க்கும். லாஜிக் பார்த்துதானே ஓட்டுப்போடறாய்ங்க. பின்ன ஏன் நம்ம ஆட்சியாளர்கள் எல்லாம் இப்படி இழவெடுக்கிறாய்ங்க.

முரண்பாடுகளின் மொத்த உருவம் அவள் .

சூர்ய ப்ரகாசாயை நமஹாம்பாய்ங்க. படக்குனு சந்திரமண்டல வாசினிம்பாய்ங்க. மஹோதர்யைம்பாய்ங்க ( பெரிய வயிறு படைச்சவள் – இல்லாட்டி இத்தீனி ட்ரில்லியன் குட்டிகளை போட்டிருக்கமுடியாதே) டக்குனு நித்ய கன்னிம்பாய்ங்க. சிண்டை பிச்சுக்க வேண்டியதுதேன்.

அவளுக்கு ஷண்மதப்ரியேன்னு ஒரு பேருண்டு . ஷண் என்றால் 6 ன்னு அர்த்தம். ஷண்முகன் – ஆறுமுகன். அதை போல ஆறு மதங்கள் உண்டு. ஆறுமதங்களும் பரஸ்பரம் வெட்டுப்பழி,குத்துப்பழின்னு அலைஞ்சாலும் அந்த ஆறு மதங்களும் கொண்டாடற தெய்வம் அவள். அவளை முன்னிலைப்படுத்தும் மதத்துக்கு சாக்தேயம்னு பேரு.

அவளுடனான , 2000 டிசம்பர் 23 முதலான என் அனுபவங்களை சொல்ல உத்தேசிச்சு ஆரம்பிச்ச தொடரோட முதல் பதிவு இது. நாம எதைத்தான் முழுக்க செய்தோம். எல்லாம் அரை குறைதேன்.

அவள்னா யாருனு கேட்கமாட்டிங்கனு நினைக்கிறேன். அவள் பிக்காசாவோட ஓவியம் மாதிரி . பார்க்கிறவுக எண்ணத்துக்கு ஏத்தாப்ல ஒரு புது அர்த்தத்தை தந்துருவா. வெளிய வந்து நாக்கு வறள வாதாடிக்கிட்டே எக்சிபிஷன் ஹால்ல இருந்து வெளிய வந்து பஸ்ஸை தவற விடவேண்டியதுதேன்.

ஏ.பி நாகராஜன், தேவர் மாதிரி பார்ட்டிங்க எத்தீனி படம் எடுத்திருந்தாலும் 2000 டிசம்பர் 23 வரை நமக்கு சாக்தேயத்துல ஆர்வம் ஏற்படலை.

அவனருளாலே அவன் தாள் வணங்கி கணக்கா ஜோதிஷம் கத்துக்கிட்ட புதுசுல ( 1990) நம்ம ஜாதகத்துல சிவசக்தி யோகம் இருக்கிறதா படிச்சதுல லெட்டர் பேட்,கவர்ல யெல்லாம் சிவ சக்திகள் சைட் ஃபோஸ்ல இருக்கிற படத்தை லோகோ கணக்கா உபயோகிச்சது உண்டு. என்னோட ஆதர்ச தலைமையகத்துக்கு சிவசக்தி நகர்னு பேரை கூட கனவு கண்டதுண்டு. ஆர்ச் தாண்டினதும் ஒரு சிலை . ஒரு ஆணோட கையும், பெண்ணோட கையும் க்ளோபை தூக்கி பிடிச்சிட்டிருக்கும்.

இந்த நகர்ல லேபர் ரூம்ல இருந்து மின் இடுகாடு வரை இருக்கும். இது பழமை+ புதுமையின் பாசிட்டிவ் கலவை. மண் பாணையில சமைப்போம். ஆனால் காட்டை அழிச்சு இல்லை. கியாசோ,சோலார் பவரோ உபயோகிப்போம்.

நாடு /உலக முழுக்க உள்ள உன்னத படைப்பாளிகளை இங்கன இன்வைட் பண்ணி ஒரு வருஷம் தங்க வைச்சு அவிக படைப்புகளை லாஞ்ச் பண்ணுவம்.

பிரபலம்னு இல்லே . மசாலா இருந்தா ஒடனே அட்மிஷன். ஏதோ சிகரட் வரை அனுமதி. மத்த சமாசாரம்னா வெளிய போய் வரலாம். அவிகளுக்கு எல்லா உதவியும் நகர் செய்யும். ( பார்த்துங்கண்ணா ஒடனே சி.வியை அனுப்பிரப்போறிங்க.இதெல்லாம் ஒரு கற்பனை தேன் )

ஆனால் அதெல்லாம் ஜஸ்ட் சினிமா ஸ்லைடு மாதிரி. படம் என்னவோ 2000 டிசம்பர் 23 க்கு அப்பாறம் தான் துவங்குச்சு. அதுக்கு முந்தி சின்ன ட்ரெய்லர்.

வாணியம்பாடில அக்பர் கவுசரோட பத்திரிக்கைல உதவி ஆசியரா குப்பை கொட்டிக்கிட்டிருந்த காலத்துல ஒரு முஸ்லீம் நண்பர் அறிமுகமானார். அவர் தனக்கு மந்திர தந்திரங்கள்ள கமாண்ட் இருக்கிறதா சொல்வாரு. ஆவிகள்,செய்வினை பத்தியெல்லாம் எங்களுக்குள்ளாற நீண்ட விவாதங்கள் நடக்கும் . ஒரு நா நான் அவரை ரெம்ப கடுப்படிச்சிட்டாப்ல இருக்கு. அவர் நீங்க ரூமுக்கு போங்க நான் ஒரு ஐட்டத்தை அனுப்பறேன். அது என்ன பண்ணுச்சுன்னு நாளைக்கு சொல்லுங்கன்னாரு.

நான் ரூமுக்கு வந்துட்டன். மதிய நேரம் தான். அந்த ரூம் கதவுக்கு உள் தாப்பா கிடையாது. பாட் லாக் தான். குறுக்கால ஒரு ஸ்க்ரூ ட்ரைவரை விட்டுட்டு படுத்து படிச்சிக்கிட்டிருந்தேன். திடீர்னு யாரோ தோள்ள தட்டி எழுப்பினாப்ல இருந்தது. விதி விதிர்த்து போச்சு. உள்ளுக்குள்ள டர்ராகிட்டேன்.

இருந்தாலும் பெரியார் எழுத்தையெல்லாம் படிச்ச பார்ட்டி .ராம பக்தன், வீராஞ்சனேயரோ சிஷ்யன் இந்த பிரமைக்கெல்லாம் பயந்துரலாமா அது இதுன்னு என்னை நானே தேத்திக்கிட்டு ராம நாமம்லாம் சொல்லிட்டு இந்த பக்கம் திரும்பி படுத்தேன். மறுபடி யாரோ தோள்ள தட்டி எழுப்பினாப்ல இருந்தது. நம்முது கல்லு குடல்ங்கறதால ஒன்னுமாகலை .இல்லைன்னா நிச்சயம் பேதியாயிருக்கும்.

ஒடனெ எந்திரிச்சு சட்டைய போட்டுக்கிட்டு பாயை தேடிப்போனேன். “இன்னா பாய் நீங்க.. நானேதோ விளையாட்டுக்கு பேசினா இப்படி டர்ராக்கிட்டிங்களே”ன்னு புலம்பினேன்.

அவரு யாரோ “பேயி”ங் கஸ்டை அனுப்பிட்டு ஃபோன்ல கேட்கிறாப்ல ” என்னதான் பண்ணுச்சு சொல்லுங்க”ன்னாரு. நான் மேட்டரை சொன்னேன்.

உ.வசப்பட்டுட்டாரா. அப்படியா தோள்ள தட்டுச்சா தோள்ல தட்டுச்சானு மறுபடி மறுபடி கேள்வி. நான், “அய்யோ விஷயத்தை ஓப்பன் பண்ணுங்க பாய்!”னுட்டு துடிச்சேன்.

அதுக்கு அவரு ” முருகேசன்! நீங்க எந்த பாதையில பயணிக்க பிறந்திங்களோ அதுக்கான பாதை சித்தமாயிருச்சு. நீங்க புறப்பட வேண்டியதுதான்”னாரு.

அவர் சொன்னதைப்போலவே திமிர் காரணமா கவுசருக்கு டாட்டா சொல்லிட்டு ஊர் வந்தேன்.
அதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கையின் முதல் பாகம் ( லலிதா டீச்சர் செய்த வஸ்திராபரணம்ங்கற தலைப்புல கொஞ்சமா சூ காட்டியிருக்கேன் .படிச்சு பாருங்க) அதுக்கு கொய்ட் ஆப்போசிட்டான இரண்டாவது பாகம். ரெண்டுக்கும் உள்ள வித்யாசம் என்னனு அப்ஜெக்டிவ் டைப் ஆன்சராவாச்சும் சொல்லியாகனும்.

முக்கியமா இரண்டாவது பாகத்துல இருந்து ஒரே ஒரு எப்பிசோடை யாச்சும் , சுருக்கமாவாச்சும் சொன்னாத்தான் அந்த வாழ்க்கையோட அவலம் , என் ஜப,தபங்களுக்கான உந்துதல் , என் சாதனையை மெச்சி ஆத்தா கொடுத்திருக்கிற இந்த வாழ்க்கை (ரெண்டுத்துக்கும் உள்ள வித்யாசம்) இதெல்லாம் உங்களுக்கு புரியும்.

மனைவி முழுகாம இருக்கா. நிறை மாசம். ஜூன்ல பிரசவம் நடக்கப்போவுது. மே மாசம் கங்கையம்மன் திருவிழா நடக்குது. அதுக்கு ஒரு வாரம் முன்னே இருந்து பயங்கர நெருக்கடி.

ஷீரடி பாபா ரேஞ்சுல இமேஜ் இருக்கிறதால பீடி சிகரட்டுக்கு பஞ்சமில்லைதான். நாம தன்மான சிங்க மில்லையா. கை மாத்து,கடன் எல்லாத்துக்கும் நமக்கு நாமே ஒரு சீலிங் வச்சிருப்பம். அது தாண்டிட்டா தாளி உயிரே போனாலும் அந்த ஜோலிக்கு போக மாட்டோம். அந்த மாதிரி ஒரு நிலை.

திருவிழா கத்திரிலதான் நடக்கும். ஜோசியத்தொழிலுகு அன் சீசன். ஒரே ஒரு டீக்கடைல சீலிங் முடியலை. அதனால அங்கன போய் ஒரு டீ அடிச்சுட்டு ஒரு கப் பால், ஒரு ப்ரெட் வாங்கிட்டு வந்து பொஞ்சாதிக்கு கொடுத்துட்டு முயற்சிகளை தொடர்ரதும் மதியம் மறுபடி ஒரு டீ அடிச்சுட்டு ஒரு கப் பால், ஒரு ப்ரெட் வாங்கிட்டு வந்து பொஞ்சாதிக்கு கொடுத்துட்டு முயற்சிகளை தொடர்ரதுமா இருந்தன். மறுபடி ராத்திரிக்கும் அதே ப்ராசஸ்.

கர்பமா இருந்தப்போ பொஞ்சாதிக்கு போதுமான நியூட் ரிஷன் இல்லாமத்தான் என் மகள் மண்ணாந்தையாயிட்டாளோன்னும் ஒரு சம்சயம் உண்டு. ( அகடமிக்ல மட்டும்தான் தொத்தல். அவளும் இப்போ அடோப் ஃபோட்டோஷாப்ல புலியாகி என்னைவிட அதிகம் சம்பாதிக்கிறது வேற விஷயம்)

ஒரு வார கொலைப்பட்டினிக்கப்பாறம் தூரத்து சொந்தமான மாமனுக்கு ரத்ததானம் கொடுத்ததும் இதை கேள்விப்பட்டு எங்கப்பன் “அடடே நாம நினைச்ச ரேஞ்சுல நம்ம பையன் அராத்துல்ல போலிருக்கேன்னு வந்து பேட்ச் அப் ஆனதும் வேற கதை.

இந்த ஒரு வார கதைய வச்சு இப்படியேத்தான் வாழ்ந்தாராக்கும் நினைச்சுராதிங்க. நம்முது கடகலக்னமாச்சா ஏறினா ரயில்,இறங்கினா ஜெயிலுன்னு தாளிச்சிக்கிட்டிருந்தமில்லை. உடுப்பில சர்வருக்கு கொடுத்த டிப் பணத்துல சாப்பாட்டை முடிச்சதும் உண்டு. உடுப்பில ஒரு குடும்பம் சாப்பிட்டா ஆகிற பில்லை ஒரு பிச்சைக்காரனுக்கு கொடுத்து ஒரு வாரத்துக்கு பிச்சையெடுக்காதேனு சொன்னதும் உண்டு.

கவுசர் வேலைய நம்பி என் பொஞ்சாதி ஐ நூறு ரூபா வாடகைல வீட்டை பிடிச்சு வச்சிருந்தாளா.. நான் பாட்டுக்கு வேலைய விட்டுட்டு ஊரை பார்க்க வந்துட்டனா .. ஊர்ல இல்லாததால தொழில் வேற படுத்துப்போயிருந்ததா எத்தை தின்னா பித்தம் தெளியும்ங்கற நிலை.

அப்பத்தான் ஒரு க்ரூப் டச் ஆச்சு. அந்த க்ரூப்போட செனேரியோவை விவரிச்சன்னா மூட நம்பிக்கைய பரப்பறான்னு வேட்டியை உருவிருவிங்க. அவிக உலகம் மந்திரத்துல மாங்கா விழற உலகம். ஆவிகள்,தேவதைகள் மார்னிங் வாக் பண்ற உலகம்.

அந்த க்ரூப்ல ஒரு பார்ட்டிய மெல்ல ஓரம் கட்டி ஏம்பா என்னென்னமோ பேசறிங்க. பைசா புரள்ற மாதிரி எதுனா மந்திரம் ஒன்னு சொல்லிகொடுங்களேன்னேன். அந்த ஆளும் எதையோ சொன்னான். எழுதிக்கிட்டேன்.

இதுல ரகசியம் என்ன? அந்த மந்திரம் இதான் :
ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் வஷக் வஷக் வஷக்

நமக்கு ஏற்கெனவே பரிச்சயமான பீஜங்கள் தான். என்.டி.ஆர் வீரபிரம்மேந்திர சுவாமி சரித்ரா படம் எடுத்தாரு. அந்த இன்ஸ்பிரேசன்ல பிரம்மங்காரு தொடர்பான புத்தகங்கள் எல்லாம் நிறைய படிச்சேன் . அவரு ஒரு மூல மந்திரம் உபதேசிச்சிருக்காரு.

அந்த மூலமந்திரம் இதான்:

ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் சிவாய ப்ரம்ஹனே நமஹ

இதை ஏற்கெனவே சில லட்சமாச்சும் ஜெபிச்சிருப்பேன். ( இதெல்லாம் இப்ப எடிட் பண்ணி சொல்லிட்டிருக்கிற விஷயம். அந்த சமயத்துக்கு எடிட்டர் டேபிள் மாதிரி குப்பையா இருந்திருக்கும்)

மந்திரத்தை ஒரு பிடி பிடிச்சேன். அப்பத்துல ஜோசியம் தான் முழு நேரத்தோழில். அதோட டைமிங் ரெம்ப குறைச்சல்.ஊர் ஊரா தேசாந்திரம் போயிட்டு வந்ததால க்ளையண்ட்ஸும் குறைச்சல். அதனால 1986 ல ராம நாமத்தை ஒரு பிடி பிடிச்சாப்ல மேற்படி மந்திரத்தை விடாம ஜெபிச்சிட்டிருந்தேன்.

எப்படியோ மந்திரம் வேலை செய்ய ஆரம்பிச்சுருச்சு. அம்மனுக்கு சம்பந்தப்பட்டு நம்ம லைஃப்ல நடந்த மேட்டர் எல்லாம் மாண்டேஜ் ஷாட்ஸ் கணக்கா மைண்ட்ல மின்ன ஆரம்பிச்சுது.

அந்த ஆளு ஏதும் சாங்கியம் சம்பிரதாயம்லாம் சொல்லலை. நானா சிலது ஏற்படுத்திக்கிட்டேன். சிலது காலப்போக்குல சேர்ந்துக்குச்சு. மந்திரம், மந்திரத்துக்குரிய மகராசி, எல்லா (ரு) மா சேர்ந்து என்னெல்லாம் நடத்தி வச்சாய்ங்கனு வரப்போற பதிவுகள்ள விவரிக்கிறேன். ஒரு ஆன்மீக பயணத்துக்கு தயாராயிருங்க. உடு ஜூட்

Advertisements

26 thoughts on “அவள்அவன்-அவள்-அது :1

  syed said:
  March 28, 2011 at 8:23 pm

  very interesting

   S Murugesan said:
   March 29, 2011 at 10:30 am

   சையத் பாய்,
   நன்றி. இந்த தொடர் சுமாராவாச்சும் தொடர எனக்காக துஆ பண்ணுங்க

  boopal said:
  March 28, 2011 at 8:35 pm

  yen anubavangalai parthu yosika vaithathu.

  டவுசர் பாண்டி said:
  March 29, 2011 at 3:03 am

  நல்லாருக்குப்பா ஒன்னோட கத. ஆனா இந்த மேட்டரு எங்கேயோ நடந்தாமாரி ஒரு பீலிங்கு. செகன் பார்ட்ட சீக்கிரம் போடு மாமு.

  அன்புள்ள ஆசிரியரே,

  தங்களுடைய செம்மையான வாழ்விற்கும் வாக்கிற்கும் ( 2 லே சனி இருந்தா இருந்துட்டு போறாரு ) காரணம் தங்களுடைய அனுபவமே என்பதை
  தெளிவாக சொல்லத் துவங்கியருக்கிறீர்கள் …

  அடுத்த பதிவை ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறோம்….

   S Murugesan said:
   March 29, 2011 at 10:26 am

   ஜானகிராமன்!
   சொம்மா எதிர்பார்த்தா போதாது (அஸ்கு புஸ்கு) அடுத்த பதிவை போடற அளவுக்கு (அதுவும் சொந்த சரக்கை கலக்காம) ஆத்தா ஹெல்பிங்க் தேவை நீங்களும் கொஞ்சம் ரெக்கமண்ட் பண்ணுங்க பாஸ்

    S Murugesan said:
    March 29, 2011 at 10:29 am

    டவுசரு,
    நாமல்லாம் எந்தளவுக்கு ஈகோயிஸ்டுங்கன்னா நமக்கு எது நடந்தாலும் ஒலகத்துல எவனுக்கும் இந்த மாதிரி நடந்திருக்காதுனு நினைச்சுர்ரம்.

    கடவுள் இருக்காரே இவரு பழம்பெரும் எழுத்தாளர் லட்சுமி , ரமணி சந்திரனை விட மோசம். (ஒரே கதைய எழுறதுல)

    உங்களுக்கு நடந்தது எனக்கும், எனக்கு நடந்தது உங்களுக்கும் நடக்க நிறைய சான்ஸ் இருக்கு வாத்யாரே.
    அந்தாளுக்கு கற்பனை வறட்சி அதிகம். உருவிரலாம்னு பார்த்தா “அங்கன” ஒரு டிவிடி ப்ளேயருக்கு கூட வாய்ப்பில்லை போல

  rajesh said:
  March 29, 2011 at 4:05 am

  நன்றாக உள்ளது ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  rajesh said:
  March 29, 2011 at 4:13 am

  இந்த மந்திரத்தை நாங்களும் பயன்படுத்தலாமா?

   S Murugesan said:
   March 29, 2011 at 10:14 am

   ராஜேஷ்,
   பரீட்சார்த்தமா ப.படுத்துங்க. எதுனா எக்கு தப்பா ஆனா நான் பொறுப்பில்லை. அவள் – தொடர் முடியற வரை வெய்ட் பண்ணலாமே

  வினோத் said:
  March 29, 2011 at 4:38 am

  வெரி குட் நல்ல கேள்வி… நாங்க மந்திரத்தை பயன் படுத்தலாம ?

   S Murugesan said:
   March 29, 2011 at 10:10 am

   வினோத் ஜி,
   மந்திரம் என்பது ஒரு மொபைல் ஃபோனோட தர்ர மேன்யுவல் மாதிரி. எத்தீனி பேரு மேன்யுவல் பார்க்கிறாய்ங்க. அதுல எத்தீனி பேரு அதுல உள்ளதை அப்ளை பண்றாய்ங்க. பரீட்சார்த்தமா ட்ரை பண்ணுங்க. ஒர்க் அவுட் ஆனா நல்லது தானே.

  தனி காட்டு ராஜா said:
  March 29, 2011 at 5:21 am

  //ஏதோ சிகரட் வரை அனுமதி//

  நீங்க பீடி சிகரெட் பிடிப்பதாலா தல 🙂

  பீடி சிகரெட் பிடிச்சா மந்திரம் பலிக்காது தல …ஹா ..ஹா 🙂

  //அதுக்கு அவரு ” முருகேசன்! நீங்க எந்த பாதையில பயணிக்க பிறந்திங்களோ அதுக்கான பாதை சித்தமாயிருச்சு. நீங்க புறப்பட வேண்டியதுதான்”னாரு.//

  என் வழி..தனி வழி…:)

   S Murugesan said:
   March 29, 2011 at 10:08 am

   ராசா,

   நான் ஏதோ சந்துல எழுதி வச்சதை கமெண்ட் போட்டு சந்தில நிறுத்திட்டிங்க. தப்பித்தவறி அன்புமணி மறுபடி ம.ம ஆனால் நமக்கு ஆப்புதேன்.

   நெஞ்சுல புகை இருக்கலாம் தலை .. பகை இருக்கக்கூடாது .. ஐம் ஃப்ரெண்ட் ஃபார் ஆல், எனிமி டு நன்.

  இராச.புரட்சிமணி said:
  March 29, 2011 at 6:29 am

  Interesting mela சொல்லுங்க பாஸ்…நீங்க செம ஜித்தன்னு நினைக்கிறேன்

   S Murugesan said:
   March 29, 2011 at 10:05 am

   புரட்சிமணி ,
   மொத எழுத்தை மட்டும் மாத்திருங்க (பி)

    இராச.புரட்சிமணி said:
    March 29, 2011 at 11:22 am

    பாசு உங்களுக்கு காமெடியும் வருதே

    S Murugesan said:
    March 29, 2011 at 1:19 pm

    புரட்சி மணி அவர்களே,
    என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே – ஒரு தாட்டி சீரியசா ஒரு பதிவும், காமெடியா ஒரு பதிவும் போட்டிருந்தேன். ஒரு பார்ட்டி அசால்ட்டா “தலைப்பு மாறிப்போச்சு”ன்னு கமெண்ட் போட நொந்துட்டன்

  Kalyan said:
  March 29, 2011 at 7:46 am

  ஐயா முருகேசன் அவர்களே,

  மந்திரம் ஜெபிச்சா பணம் வரும் அல்லது வருமானம் கூடும்னு சொல்றதெல்லாம் நீங்களும் நம்பறீங்களா? அல்லது அந்த மந்திரத்தை சொல்வதால், நம் உள்மனதுக்கு ஒரு வித concentration கிடைத்து அதனால் மனது ஒருமுகப்படுத்தப்பட்டு தொழிலில் அக்கறை வந்து பணம் சம்பாதிக்க முடியும்னு சொல்றீங்களா? மந்திரத்தால் அனைத்தும் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு சுத்தமா இல்லை. தப்பா எடுத்துக்காதீங்க.

   S Murugesan said:
   March 29, 2011 at 10:04 am

   பாஸ்!
   அல்லாருக்கும் ஒர்க் அவுட் ஆனா சைன்ஸ் ஆயிருமே. அது ஜஸ்ட் ஒரு மிஸ்டிக் சைன்ஸ். நம்முது பர்த் நெம்பர் 7 (கேது) ஜன்ம நட்சத்திரம் மகம் (கேது) பஞ்சமாதிபதியோடயே கேது நின்னாரு (சர்ப்பதோஷமில்லே) , காம்பவுண்ட் நெம்: 2 (லக்னம் கடகம்) லக்னாதிபதியே வாக்கு ஸ்தானத்துல. அவரோட சஞ்சீவினி மந்திரத்தை வச்சிருந்த சுக்கிரன் வேற சேர்ந்திருக்காரு. இன்னம் லக்ன குரு உச்சம், பத்துல ராகு , 9ல சனி வக்ரம். இதெல்லாத்தையும் விட என் நோக்கத்துல சுய நலம் கிடையாது. ( ஆ.இ.2000 ஞா இருக்கில்லை)

   அந்த மந்திரத்தை கத்துக்கொடுத்த பார்ட்டி இன்னம் “அப்படியே” தான் இருக்கு. அதுக்கு என்ன பண்ண?

    kandhan said:
    April 13, 2011 at 11:54 am

    இதுல இவுளவு விஷயம் இருக்கா? இத பத்தி விலாவாரியா சொன்ன நல்லா இருக்கும்.

    S Murugesan said:
    April 13, 2011 at 3:34 pm

    கந்தன் சாரு,
    அதுக்காகத்தானே தொடர்பதிவு ..

    kandhan said:
    April 13, 2011 at 4:36 pm

    சும்மா கந்தன்னெ கூப்டுங்க தல. சாரு வயச ரொம்ப ஏத்து. 🙂

  சார்,
  அப்புறம் ஒரு முக்கியமான விசயம் ,,,

  மற்ற வலைப்பதிவுகளில் வாசகர்களின் கருத்துரைகளையும் அவரவர் மின்னஞ்சல் முகவரிக்கு FORWARD செய்யும் OPTION இருக்கிறது ,, நமது அனுபவ ஜோதிடத்தில் அந்த வசதி இல்லையா ?

  ஏன் என்றால் எல்லா நேரமும் கம்ப்யூட்டர் முன்னால் இருக்க முடியாதல்லவா ? அப்போது மறுமொழிகளை மொபைலில் ( cellphone ) பார்த்துக் கொள்ள வசதியாக இருக்குமே ?

  தங்கள் வலைப்பூவின் கெஜட்டில் இப்படி ஒரு ஏற்பாடு செய்யலாமே ?
  ( அல்லது செய்திருக்கிறீர்களா – என் பார்வையில் படவில்லையா )

  அப்புறம் இன்னொரு suggestion
  background colour ஐயும் LIGHT GRAY or WHITE COLOUR ல் மாத்தினால் படிக்க எளிமையாக இருக்கும் … அப்புறம் FONT SIZE ம் இன்னும் கொஞ்சம் பெரிசாக்கினா என்னை மாதிரி 36 வயசு தாத்தாக்களும் ஈஸியா படிக்க உதவியா இருக்கும் …

  கண்டுக்கிறியா ராசா ….

  ராஜா said:
  April 13, 2011 at 12:48 am

  வணக்கம், தங்களது இந்த பதிவை இப்போதுதான் படிக்கிறேன், தங்கள் கர்ப்பிணி மனைவிக்கு சத்துள்ள உணவு வாங்கி கொடுக்க முடியாமல் இருந்த நிலைமையை நகைச்சுவையுடன் கூறி இருக்கிறீர்கள், ஆனால் அந்த நிலைமையின் அடி நாதமான சோகத்தை உணர்ந்ததன் காரணமாக என் கண்ணில் ஒரு துளி நீர் உண்டானதை தங்களிடம் மறைக்க விரும்பவில்லை, தங்கள் வாழ்வும் தங்கள் குடும்பத்தாரின் வாழ்வும் மென்மேலும் மேம்படும், இது எனது நம்பிக்கை

   S Murugesan said:
   April 13, 2011 at 4:35 am

   ராஜா சாப்,
   மேற்படி சம்பவத்தை பிட்டு படம் மாதிரி சிங்கிளா பார்த்தா கண்ணீர் தான் வரும். இதை இப்ப ஆரம்பமாகியிருக்கிற அவன் அவள் அது தொடர்ல ஒக்கார்த்தி வச்சு காட்டறேன். அப்பம் தெரியும்.. அசலான மேட்டர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s