குண்டலி விழித்தால் – பதில் மரியாதை

Posted on

நம்ம முருகேசன் அண்ணணின் பதிவை போல,

பதில்களும் பயனுள்ளதாக உள்ளது…

ஓஷோ சொல்வார் , அர்சுனன் , கிருஷ்ணரிடம் கேள்வி கேட்காமல் இருந்திருந்தால் கிதை கிடைத்திருக்காது…

அதனால் கிதையின் ஆசிரியன் கண்ணன் என்பதைவிட , அர்சுணன் என்பதே சரி…என்பார்.

அது போல் , பதில்களும் பதிவு போல் நிறைய தகவல்களூடன் உள்ளதால், பதிவை முதலில் படிப்பவர்கள்,

பதில்களை தவறவிடும் வாய்ப்புண்டு , எனவே, பதில்கள் மட்டும் தனிபதிவாக………..

=================================================================================

 

 

டவுசர் பாண்டி March 27, 2011

இன்னா நைனா நான் ஓம்னு சொல்லிக்கினு கீழ சூட்ட கெளப்பிகினு இருந்தேன். நீ ராம்னு சொல்ற. நீ ராம் நா ஓம் எப்புடி செட்டாகுதுன்னு பாரு. பரவல்ல மாமு. எனக்கு ஓம்குற சவுண்டு ரத்தத்துல மிக்சாயிட்டுபா. எப்டின்னு கேளேன். காலங்காத்தால எந்திசிக்கினு சம்திங்கெல்லாம் முடிச்சிக்கினு ரெண்டு காதையும் லைட்டா கொஞ்சம் கேப் வுட்டு மூடிக்கினு இருந்தா ஓ…….ன்னு காத்து சவுண்டு கேக்கும்பா. அத கொஞ்ச நேரம் கண்ண மூடி கேட்டுக்கினு இருப்பேன். பொறவு கைய எடுத்துக்கினு அந்த சவுண்டு என்னோட பாடிக்குள்ள கேக்குரமாரி பீல் பண்ணிக்கினு தூங்காம தூங்கிக்கினு இருப்பேன்பா. சரி அதெல்லாம் இருக்கட்டும். சுக்லம்னு சொல்லுவாங்கல்லா அந்த மேட்டர கனவுலயும் நெனவுளையும், இரவுளையும், பகல்லயும் வெளியேறலநா ஏதும் வில்லங்கம் வருமா மாமு. நமக்கு சுக்கிரன் வேற நீசமா பயமாகீதுபா. அந்த மேட்டர அதாம்பா அந்த சுக்கிலத்த எப்புடி மேல கொண்டு போறது மாமு. ஏதாவது ஐடியா குடேன். மிந்தில்லாம் எனக்கு தன் கையே தனக்குதவிங்குற பழமொழி ரொம்ப புடிச்சிருந்ததுப்பா. இப்ப ரெண்டு வருஷமாதேன் என்னோட கை சாப்புடவும், கழுவவும்தான் (சாப்பிட்ட தட்டதாம்பா) யூஸ் ஆகுது. என்னமோ நடக்குதுப்பா. சரி நைனா, சாதக ரீதியா குண்டலினி பவரு கிண்ணுனு இருக்குறத கண்டுபிக்க எது ஐடியா உண்டா மாமு?

S Murugesan March 27, 2011

வாங்க டவுசர்,

//இன்னா நைனா நான் ஓம்னு சொல்லிக்கினு கீழ சூட்ட கெளப்பிகினு இருந்தேன். நீ ராம்னு சொல்ற. நீ ராம் நா ஓம் எப்புடி செட்டாகுதுன்னு பாரு. பரவல்ல மாமு.//

அல்லா எழுத்தும் ஆத்தாதானு சொல்ட்டேனே தலை ( பஞ்ச தசாட்சர்யை ஸ்வாஹா) . ஆனால் ஒன்னுமா ஓம்ங்கற பிரணவம் நாசகாரி , ஹ்ரீம்ங்கற மாயாபீஜம் தான் பெஸ்ட் சாய்ஸுனு கேள்விப்பட்டிருக்கேன். ஜோதிட உலகத்துல மட்டுமில்லை ஆன்மீகத்துலயும் அவாள் நம்மாளுங்க வளராம இருக்க இப்படி ஒரு ஸ்கெட்ச் பண்ணி வச்சிருக்கிறதா கேள்வி.

என் அனலைஸ் என்னன்னா நாம நம்மை நம்மோட ஈகோவா தான் உணர்ரோம். ஓம் என்ற பிரணவம் அதை அழிச்சு ஈகோவோட அழுத்தத்துல ஏறக்குறைய செத்துக்கிடக்கிற ஆன்மாவை உயிர்ப்பிக்குது.

நான் கூட நம்ம ஜாதகத்துல சூரிய ,சந்திரன் பக்கத்து பக்கத்து ஆத்துல இருக்காய்ங்க இது சிவசக்தியொகம்னு பஞ்சாட்சரிமந்திரத்தை பிரணவத்தோட (ஓம்) ஜெபிச்சிட்டிருந்தேன். அந்த பீரியட்ல வாங்கின பல்பு இருக்கே.. யப்பா………..

நம்ம ஈகோ நாயடி பேயடி வாங்கி இருக்கிற இடமே தெரியாம போயிருச்சு ( இந்த அனுபவத்தை வச்சுத்தேன் சொல்றேன்)

//எனக்கு ஓம்குற சவுண்டு ரத்தத்துல மிக்சாயிட்டுபா. எப்டின்னு கேளேன். காலங்காத்தால எந்திசிக்கினு சம்திங்கெல்லாம் முடிச்சிக்கினு ரெண்டு காதையும் லைட்டா கொஞ்சம் கேப் வுட்டு மூடிக்கினு இருந்தா ஓ…….ன்னு காத்து சவுண்டு கேக்கும்பா. அத கொஞ்ச நேரம் கண்ண மூடி கேட்டுக்கினு இருப்பேன். பொறவு கைய எடுத்துக்கினு அந்த சவுண்டு என்னோட பாடிக்குள்ள கேக்குரமாரி பீல் பண்ணிக்கினு தூங்காம தூங்கிக்கினு இருப்பேன்பா.//

பாஸ்! கை பம்புல செம்பு தண்ணி ஊத்திட்டு அடிப்பாய்ங்களே அந்த மாதிரி தான் இது ஏற்கெனவே ஒலிச்சிட்டிருக்கிற ஓங்காரத்தை நினைவுப்படுத்திக்கத்தான் இந்த ட்ரிக் எல்லாம். அது தானா ஒலிச்சிட்டே இருக்கும் பாஸ். நாம கேட்டாலும், கேட்காட்டியும்.

நம்ம சிந்தனையோட மையம் நாமா இருக்கிற வரை சிந்தனைகள் பூனமல்லி ஹைவேல வாகன ஊர்வலம் மாதிரி தொடர்ந்துக்கிட்டே இருக்கும். சிந்தனையோட ஃபோக்கஸ் டைவர்ட் ஆயிட்டா சிந்தனை குறையும். ரெண்டு “தாட்”டுக்கு மத்தியில வர்ர கேப்பை ஸ்பாட் பண்ண வசதியா இருக்கும். இதைத்தான் தியானம்னு ஓஷோ சொல்றாரு.

//சரி அதெல்லாம் இருக்கட்டும். சுக்லம்னு சொல்லுவாங்கல்லா அந்த மேட்டர கனவுலயும் நெனவுளையும், இரவுளையும், பகல்லயும் வெளியேறலநா ஏதும் வில்லங்கம் வருமா மாமு.//

இது உடலை பொருத்த விஷயம். உடலுக்கும் ஆன்மீக சாதனைக்கும் உள்ள தொடர்பு என்னன்னா ஒரு சுகாசனம், ஒரு பத்மாசனம் போட்டு உட்கார்ர ரேஞ்சுக்கு பாடி கோ ஆப்பரேட் பண்ணா போதும். அந்த ரேஞ்சும் இல்லின்னா சவாசனம் பெஸ்ட் சாய்ஸ்.

மத்தபடி பிரம்மச்சரியத்தால ஞானம் வராது. ஞானத்தால பிரம்மச்சரியம் கை கூடலாம் .

//நமக்கு சுக்கிரன் வேற நீசமா பயமாகீதுபா.//

தீர்ந்து போற நிலையில இருக்கிற பேட்டரில கடைசி பாய்ண்டு படக்குனு எப்படி தீர்ந்து போயிருதோ அப்படி ஒரு நிலை சுக்கிரன் நீசம் கேஸ்ல நடக்கும். இவிக மேட்டர்ல அதீத ஆர்வம் , ஓவர் எக்ஸ்ப்ளாய்டேஷன் இருக்கும். இதெல்லாம் உடலியல் விவகாரங்கள். இதையும் ரெம்ப எளிமையா இயற்கையோட இயைந்து வாழ்ந்து ரெக்கூப் பண்ணிக்கமுடியும். இதுக்கும் ஆன்மீகத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

பிரம்மச்சரியம் இத்யாதி எல்லாம் அவாளோட லாஜிக்கல் சிந்தனைகள். இக்னோர் இட். இன்னம் சொல்லப்போனா விழிப்புணர்வுடன் கூடிய செக்ஸ், அ செக்ஸுக்கு பின்னான வெறுமை ஆன்மீகத்தின் பால் உந்தித்தள்ளும்.

//அந்த மேட்டர அதாம்பா அந்த சுக்கிலத்த எப்புடி மேல கொண்டு போறது மாமு. ஏதாவது ஐடியா
குடேன். //

பாஸ்,, இது அங்கன தேர்தல் நேரம். நீங்க லோக்கல் லீடர் தலைவர் பிரச்சாரத்துக்கு வரேன்னுட்டார். உங்க வேலை என்ன? அதுக்குண்டான ஏற்பாட்டை செய்யனும். நீங்க பண்ற அலப்பறை தலைவர் காதுக்கு போயிருச்சுனு வைங்க அவரோட வாகனம் ஆட்டோமேடிக்கா ஸ்பாட்டுக்கு வந்துரும். அவர் ஆட்டோமேட்டிக்கா மேடையேறிடுவார்.

நீங்க ஆயிரம் தான் ஹெலிபேட், பாரிகேட், சிகப்பு கம்பளம்லாம் போட்டு வச்சிருந்தாலும் கடேசி நிமிசத்துல எல்லாமே எக்குத்தப்பா போயிரும்.

மேலும் சுக்கிலங்கறது ஸ்தூலமான மேட்டர். அதை உந்தி தள்றதெல்லாம் அன்சைன்டிஃபிக். என்னைக்கேட்டா இதை பத்தியெல்லாம் ரோசிக்கிறதே சாதனைக்கு தடை ஆயிரும். நம்மை வறுத்துவது பாவமல்ல. பாவம் குறித்த நினைவு.

அப்படி சுக்கிலம் மேனோக்கி பாஞ்சாதான் ஞானம்னா உங்க சாதனை சரியான பாதையில போற பட்சத்துல பிரம்மச்சரியம் இத்யாதி எல்லாம் ஆட்டோமேட்டிக்கா நடக்கும். டோன்ட் ஒர்ரி.

பிராணயாமம் என்பது நாம் ஸ்தூலமா, மேனிப்புலேட்டடா பண்றதில்லை. தியானத்துல ஆழ செல்லும்போது உங்க மூச்சே பிராணயாமமா மாறனும். அதான் நல்லது.

மழைக்கு முன்னாடி இயற்கையில ஒரு சில சத்தங்கள் வரும். இந்த ரித்தம்ல மந்திரங்களை பிரிப்பேர் பண்ணிக்கிட்டு அந்த சத்தங்களை எழுப்பினா மழை வரும்னு ஒரு கூட்டம் நம்பிட்டாய்ங்க. அவிகளோட அஷ்ட தெலிவிதேன் பிரம்மச்சரியம்,பிராணயாமம்லாம்.

//மிந்தில்லாம் எனக்கு தன் கையே தனக்குதவிங்குற பழமொழி ரொம்ப புடிச்சிருந்ததுப்பா. இப்ப ரெண்டு வருஷமாதேன் என்னோட கை சாப்புடவும், கழுவவும்தான் (சாப்பிட்ட தட்டதாம்பா) யூஸ் ஆகுது. //
இந்த தன்னிச்சை மாற்றத்தை தேன் நான் கடந்த பாராக்களில் மாய்ந்து மாய்ந்து சொன்னேன்.

//என்னமோ நடக்குதுப்பா. //
இதைத்தான் இதைத்தான் உங்க கிட்டே எதிர்பார்த்தேன். அதையெல்லாம் என்ன ஏதுனு விஜாரிக்காம காட்டடி அடிங்க . வெரி குட் கீப் இட் அப்.

//சரி நைனா, சாதக ரீதியா குண்டலினி பவரு கிண்ணுனு இருக்குறத கண்டுபிக்க எது ஐடியா உண்டா மாமு?//

குண்டலி பயணத்துக்கு ஒரு ரூட் மேப்பே போட்டிருக்கேனே. குண்டலி சைதன்யமாதலின் முதல் அடையாளம் பூமி தொடர்பான பொருட்கள் மீதான பிணைப்பு தளர்ந்து பொயிரும். அப்பாறம் மெல்ல மெல்ல அவற்றின் மீது ஒரு கமாண்ட் வரும்.

இராச.புரட்சிமணி March 27, 2011

பாசு…அப்ப சீக்கிரம் கடவுள் தன்மையை அடைவீங்க போல…வாழ்த்துக்கள்.

உங்க பயணதில ஒளி ஏதேனும் தென்பட்டதா?

S Murugesan March 27, 2011

புரட்சிமணி,
அதெல்லாம் போன வருசத்து மழை மாதிரி. அதை நம்பி இப்ப விதைக்கமுடியுமா பாஸ்

இராச.புரட்சிமணி March 27, 2011

பாசு இது சம்பந்தமா இன்னைக்கு கொஞ்சம் கிறுக்கி இருக்கேன், நேரம் ஒரு நிமிடம் முடிந்தால் இத பாருங்க.
http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/

S Murugesan March 27, 2011

புரட்சி மணி அவர்களே,
பதிவை பார்த்தேன். எல்லாம் ஓகே ரெண்டுத்துக்கும் சுக்கிலம் தேவைங்கறிங்களே..இங்கே நான் முரண்படறேன்.

டவுசருக்கு நான் கொடுத்த பதிலை ஒரு ஒட்டு ஓட்டிப்பாருங்க.

உங்க கருத்தை அறிய ஆவல்

இராச.புரட்சிமணி March 27, 2011

வணக்கம் பாசு, மேலே சொன்னத படித்தேன்.
சிற்றின்ப பேரின்ப இணைப்புக்காகத்தன் நான் சுக்கிலத்தை பற்றி எழுதினேன்.
மற்றபடி உடலுக்கு எப்படி இரத்தம் இன்றியமையாததோ அதேபோல் சுக்கிலமும் இன்றியமையாதது.

இன்றியமையாத ஒன்றை தேவை என்று கூறுவது ஒருவிதத்தில் முட்டாள் தனமே. நான் பயன் படுத்திய காரணம் ஒரு “போதைக்காக”.

நாம் தின்னும் ஒவ்வொரு உருண்டை சோறும் இரத்தமாகவும், சுக்கிலமாகவும், கழிவாகவும் பிரிகிறது.
நாம் வேண்டும் என்றாலும் வேண்டாம் என்றாலும் அது நம்மை விட்டு போக போவது இல்லை.
ஆதலால் அது தேவை இல்லை என்று கூறுவதும் சரியல்ல. அதைப்பற்றி கவலைப்பட தேவை இல்லை என்று சொல்லலாம்.

நீங்கள் சொல்வது போல ஞானத்திற்கும் சுக்கிலத்திற்கும் தொடர்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் பேரின்பத்திற்க்கும் அதற்கும் கண்டிப்பாக தொடர்பு உண்டு என்றே எனக்கு தோன்றுகிறது . இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது “ஞானம் வேறு பேரின்பம் வேறு”.

//////மேலும் சுக்கிலங்கறது ஸ்தூலமான மேட்டர். அதை உந்தி தள்றதெல்லாம் அன்சைன்டிஃபிக்/////
இங்கே நான் முற்றிலும் வேறுபடுகின்றேன்.
பெரும்பாலான சாதனைகளில் சுக்கிலம் மேல் நோக்கியே பாய்கிறது.( பாசு சாதனை என்பதே அறிவியல் ரீதியாக சுக்கிலத்தை மேல் நோக்கி தல்றதுக்கு தான் என்று நினைக்கின்றேன் ). குண்டலியின் பிரதானமே சுக்கிலம் தானே. நீங்கள் சொல்லும் ஒவ்வொரு நிலையிலும் அங்கே சுக்கிலம் பாய்ந்து வேறு சக்தியாக மாறியே செயல்படுகிறது.(சாதனை செய்யும் பொழுது முதுகெலும்பு அல்லது முதுகு தானாக நிமிர்வதை கவனித்ததுண்டா பாசு? அது எதுக்கு?)

நீங்கள் சுக்கிலத்தை மேல் நோக்கி தள்ள வேண்டும் என்ற தனி முயற்சியே தேவை இல்லை, நீங்கள் தியானம் செய்யும் பொழுது, சுக்கிலம் தானாக அந்த இடத்தை நோக்கி பாயும்(நாளடைவில்). இங்கே கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் சுக்கிலத்திற்கு நாம் தனியாக முக்கியத்துவம் தர தேவை இல்லை ஏன் எனில் சாதனை செய்யும் பொழுது அது தானாக நிகழும்.(உடற்பயிற்சி செய்யும் பொழுது இரத்தம் பாய்வது போல).

ஆக ரத்தத்திற்கும் ஞானத்திற்கும் என்ன தொடர்பு உண்டோ அல்லது இல்லையோ “அதே தொடர்பு” சுக்கிலத்திற்க்கும் ஞானத்திற்கும் உண்டு அல்லது இல்லை.

ஆனால் பேரின்பத்தை பொறுத்த வரை சுக்கிலம் இன்றியமையாதது(பெரும்பாலான சாதனைகளில். அதன் பங்கு இல்லாத சாதனை இருக்கானு எனக்கு தெரியல) வேணா அத கண்டுக்காம விட்டு விடலாம். அதனால ஒரு இழப்பும் இல்ல.
நீங்க என்ன பாசு சொல்றிங்க?

இராச.புரட்சிமணி March 27, 2011

பாசு உங்களுக்கு விட தெரிஞ்சு இருந்தும் என்ன மேல எழுத வச்சிடீங்கலே பாசு குண்டலி குண்டலினு சொல்றிங்களே அதுக்கும் சுக்கிலத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்குனு நினைக்கிறிங்க? ஒருவேள நாதான் குழம்பீட்னா?

S Murugesan March 27, 2011

புரட்சிமணி ,
மன்னிக்கனும். தங்கள் கருத்திலிருந்து நான் முற்றிலும் முரண்படுகிறேன். ‘தானா நடக்கிறது நல்லபடியா நடக்கும். நாமா ப்ளான் பண்ணா விஸ்வாமித்திரர் கதை தேன் (லேட்டஸ்டா சொல்லப்போனா நித்யானந்தா) ”

சுவாசமாற்றம், முதுகெலும்பு நிமிர்தல் மட்டுமில்லே. எந்த ராம் தேவ்பாபாவும் பக்கத்துல இல்லாம நம்ம பாடியே கபாடி விளையாடும். பெரிய பெரிய யோகா குரு எல்லாம் பிச்சை வாங்கனும்.

மழை வேறு ( ஞானம் – முக்தி) மழைக்கு முன்னாடி வர்ர சத்தங்கள் வேறு ( பிரம்மச்சரியம், அஹிம்சை , கருணை இத்யாதி) வெறுமனே சத்தம் போட்டுட்டு வானம் எத்தீனி தபா அஸ்கு புஸ்குன்னிருது. அப்படித்தேன்.

இராச.புரட்சிமணி March 27, 2011

மன்னிப்புல்லாம் எதற்கு பாசு, உங்கள் கருத்த நீங்க சொன்னிங்க என்னுடையத நான் சொன்னேன் அவ்வளவுதான்.
தானா நடக்கிறதுக்கும் பிளான் பண்ணி நடக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கா பாஸ்? எனக்கென்னவோ எல்லாமே தானா நடக்கிற மாதிரியே தெரியுது.
//விஸ்வாமித்திரர் கதை தேன் (லேட்டஸ்டா சொல்லப்போனா நித்யானந்தா/// இது கூட தானா நடந்தது தாணு நினைச்சேன்.
எது எது தானா நடக்குது எது பிளான் பண்ணி நடக்குதுன்னு எப்படி கண்டுபுடிக்கிறது பாஸ்.

மழை மேட்டர் சூப்பர்.

S Murugesan March 27, 2011

புரட்சி மணி ,
எது நடக்கும்போது “தத்.. இவ்ளதானா? நான் என்னென்னமோ கற்பனை பண்ணி வச்சிருந்தேனேன்னு நினைக்கிறிங்களோ அது தானா நடக்குதுனு அர்த்தம். ( கற்பனை பிறக்கிறது உங்க ஈகோவுல – அது இன்டிவியூஜுவல் மைண்ட் – யூனிவர்சல் மைண்டுக்கு தான் தெரியும் புரட்சிமணிக்கு எது நல்லதுன்னு.

அது உங்களை டர்ராக்கிறத பத்தி யூ.மை.க்கு அக்கறையில்லை

திரு முருகேசன் ,புரட்சி மணி,
உங்க விவாதத்தில் குறுக்கிட்டதற்கு மன்னிக்கணும்..
உங்க விவாதத்தயே தனி பதிவா போடுங்க…
நிறைய பேர் , பதிவை முதலின் படிப்பவங்க பின்னால் கமேன்டில் நடக்கும்
கருத்துள்ள விவாதங்களை தவற விட்டுற்றாங்க…

======
வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலையில், காயகற்ப பயிற்சி இருக்கு அதை
முயற்சி பண்னி பாருங்க… யோக சாதனையின் ஆரம்பததில் இது பயனுள்ளதா இருக்கும்.
சித்தர்கள் இதை கொண்டு தான் பல நூற்றாண்டு வாழ்ந்தார்கள்னு சொல்றாங்க.

சுக்கிலத்தை மேலெற்றி உடல் முழுவதுவம் பரவவிட வழி இருக்கு இதில்.
மேலும் பல தியான பயிற்சிகள் இருக்கு. நான் ஆரம்பித்து பாதியில் விட்டு விட்டு பன்றேன்.

S Murugesan March 28, 2011

வாங்க வினோத்,
தனிப்பதிவா போடறதை நீங்களும் செய்யலாம்ல. சனம் பணம் அனுப்பி 20 -30 நாள் ஆகியும் பலன் அனுப்ப முடியாம முழி பிதுங்கிக்கிட்டிருக்கம்ல.

நாளைக்கு உங்களுக்கு ஒரு அவசியம் வந்தா உங்க ப்ளாக்ல நாங்க பதிவு போடமாட்டமா பாஸ்!

Advertisements

15 thoughts on “குண்டலி விழித்தால் – பதில் மரியாதை

    தனி காட்டு ராஜா said:
    March 28, 2011 at 9:39 am

    //பதில்களை தவறவிடும் வாய்ப்புண்டு , எனவே, பதில்கள் மட்டும் தனிபதிவாக………..//

    அப்ப இந்த பதில் பதிவுக்கு கேள்வி கேட்டால் பதில் கிடைக்குமா …ஹி…ஹி 🙂

    //இவிக மேட்டர்ல அதீத ஆர்வம் , ஓவர் எக்ஸ்ப்ளாய்டேஷன் இருக்கும். இதெல்லாம் உடலியல் விவகாரங்கள். இதையும் ரெம்ப எளிமையா இயற்கையோட இயைந்து வாழ்ந்து ரெக்கூப் பண்ணிக்கமுடியும். இதுக்கும் ஆன்மீகத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது.//

    சுக்கிலத்த பத்தி ஓஷோ சொன்னது நினைவுக்கு வருகிறது. காமம் எண்ணம் அதிகமாகி உள்ள சமயத்தில் எண்ணங்களை சாட்சியாக நின்று கவனித்தால்…முதலில் சுக்கில சக்தி தனது பழக்கமான பாதையில் கிழே நோக்கி பயணிக்கும்.அதை வெளி ஏற்றாமல் சாட்சியாக நின்று கவனித்தால் …சக்தியானது மேல் நோக்கி பாய ஆரம்பிக்கும் என்று சொல்லுகிறார்.

    சுக்கிலம்(கொஞ்சம் நீர் ) வெளியேறும் போது எதோ பெரிய சக்தி இழந்தது போல தோன்றும் .
    அப்படியெனில் குண்டலி எழுவது என்பது சக்தி (ஆற்றல் ) மேல் நோக்கி பாய்வதாகதான் இருக்க வேண்டும் என நெனைக்கிறேன். மாறாக நீர் மேல் நோக்கி பாயுமா என்பது சந்தேகமே….

    காய கல்ப பயிற்சில் கூட சுக்கிலத்தை கெட்டி படுத்ததான் செய்கிறார்கள் என்று நெனைக்கிறேன்…

    காய கல்ப பயிற்சி செய்பவர்கள் இதை பற்றி தங்கள் அனுபவத்தை சொன்னால் நன்றாக இருக்கும் என்று நெனைக்கிறேன்….

    சுகுமார்ஜி(ஓஷோ +வேதாத்திரி மகரிஷி படங்களை அவர் தளத்தில் எப்போதோ பார்த்ததாக ஞாபகம் …) அவர்கள் ஏதாவது அனுபவம் இருப்பின் பகிர்ந்து கொண்டால் நல்லது ….. 🙂

    //சுக்கிலத்தை மேலெற்றி உடல் முழுவதுவம் பரவவிட வழி இருக்கு இதில்.
    மேலும் பல தியான பயிற்சிகள் இருக்கு. நான் ஆரம்பித்து பாதியில் விட்டு விட்டு பன்றேன்.//

    வினோத் அவர்களுக்கு …
    இங்கே சுக்கிலம் மேலே ஏறுமா …அல்லது சக்தி மேலே ஏறுமா தலைவரே

    நாம எல்லோரும் ஓர் நாள் ஞானோதாயம் பெறுவோமே …:) ஹி ..ஹி …அன்று எல்லாம் புரிந்து விடும் என்று நெனைக்கிறேன் …அதுவரை சுக்கிலம் குண்டலி என்பது புரியாத புதிர் தான்…

      S Murugesan said:
      March 28, 2011 at 1:06 pm

      ராசா,
      நீங்கல்லாம் வேணம்னே உண்மைய பார்க்க மறுக்கறாப்ல தோணுது. கூகுல் இமேஜஸ்ல போய் பாருங்க. விந்து பை எங்கன இருக்கு. எங்கன இருந்து எங்கன வந்து எப்படி வெளியேறுது. முதுகெலும்பு எங்கே இருக்கு.. ஒரு தாட்டி பொடி நடையா கூகுல் போய் பாருங்க ராசா.

      பயாலஜியையும் யோகாவையும் எதுக்கு மிக்ஸ் பண்றிங்க. அதனோட ரூட்டு வேற (ஸ்தூலம்) இதனோட ரூட்டு வேற (சூக்குமம்)

      வாய்ல சுரந்து உணவுல கலக்கிற வரை சலைவா. அது ஒவரா சுரந்து துப்பினா எச்சில்.

    Vinoth said:
    March 28, 2011 at 10:30 am

    காயகல்பத்தில் அஸ்வினி முத்திரை செய்யும்போது மூலதாரத்தில் உள்ள சுக்கிலம்/ சுரோனிதம் குலுக்கப்படுகின்றது. தயிரை கடையும்போது வெண்ணை மேலக வருவதுபோல் ஒஜஸ் என்னும் உயிர் காற்று சுக்கிலத்தின் மேலாக வரும் , அதை தண்டுவடத்தில் மேலேற்றி உடல் முழுவதும் பரப்பி, சுக்கிலம் உடல் ஆற்றலை ரீச்சார்ஜ் செய்வதே காயகற்பம்.
    இந்த உத்தியை கொண்டே சித்தர்கள் நூற்றடுகளை கடந்து வாழ்ந்தனர்.

      S Murugesan said:
      March 28, 2011 at 1:01 pm

      வினோத்ஜி,
      புரட்சிமணியோட அணி சேர்ந்துட்டிங்க போல. அஸ்வினி முத்திரைன்னா என்ன தெரியுமா? ஆசன வாயை சுருக்கி விரித்தல்.

      ஒஷோ என்ன சொல்றாரு தெரியுமா? யோக சக்கரங்கள்னு சொல்றோமே அது அல்லாருக்கும் இருக்கனுமுன்னு கட்டாயம் கிடையாதாம். சாதனை காரணமா புதுசா ஐடென்டிஃபை ஆகி,ஆக்டிவேட் ஆகுமாம்.

      நம்ம கம்ப்யுட்டர்ல இன்டர் நெட் வசதி தரும் எல்.ஏ.என் கார்டு போல. ரோசிங்க. பயாலஜி வேறு. யோகம் வேறு. பயாலஜில நடக்கிறது பி.எஸ்.என்.எல் லேண்ட் ஃபோன் மாதிரி. யோகத்துல நடக்கிறதெல்லாம் வயர்லெஸ் மாதிரி. ஒரே தாவு

    sugumarje said:
    March 28, 2011 at 2:04 pm

    அய்யா சாமிகளா? எல்லாம் ஒரே குரூப்பா கிளம்பிட்டாப்புல இருக்கு ?!
    சரி, சரி… எல்லாம் நல்லதுக்குத்தான் 🙂
    தனிக்காட்டுராஜா கேட்டுக்கொண்டதிற்காக ஒரு தனி பதிவு முயற்சிக்கிறேன்… நம்ம முருகேசன் அவர்கள் தனக்குள் பார்க்கும்படிக்கு சூழலை உருவாக்கியுள்ளார்… ஒருவர் மாற்றம் கொண்டாலே இதன் வெற்றி நிரூபிக்கப்படும் 🙂
    வாழ்த்துக்கள் அய்யா 🙂
    இனிமேலாவது அடுத்தவன் காலில் விழுவாதீர்களய்யா… உங்கள் தாய் தந்தை குருவைத்தவிர…
    ______ கண்ட பயலையெல்லாம் சாமியாருன்னுகிட்டு…

    இராச.புரட்சிமணி said:
    March 28, 2011 at 6:02 pm

    அடடா என்ன பதிவு போட்டு பெரிய விவாதமே நடக்குது… மிஸ் பண்ணிட்டேனே…..
    சுக்கிலம் தான் குண்டலினியா கன்வெர்ட் ஆயி வேல செய்துன்னு நான் இத்தன நாளா நினைசிகிட்டு இருக்கேன்…தவறு என்னுடையதா இருக்கவும் வாய்புகள் அதிகம்.
    அருஞ்சொற்பொருள் தெரிஞ்சாதான் இந்த விவாதத்துல அடுத்த கட்டத்துக்க போலான்னு நினைக்கிறேன்…
    இந்த கேப்புல குண்டலினா என்ன, அது எப்படி உற்பத்தி ஆகுது அப்படின்னு டைம் இருந்தா விளக்கம் கொடுங்க பாசு…
    தங்கள் மரியாதைக்கு நன்றி …. நாளை சந்திப்போம் பாசு

      S Murugesan said:
      March 28, 2011 at 6:46 pm

      புரட்சிமணி ,
      தவறு உங்களோடதுல்ல. “மஸ்தா” பேரு இப்படித்தேன் நினைக்கிறாய்ங்க. அப்ப வெறும் அலிகள் அ விபத்தில் சிக்கி ஆண்மை எழுச்சியை இந்தவர்கள் மட்டுமே ஞானம் பெற முடியும். உங்க கான்ஷியஸ்/குண்டலி /செர்ப்பண்ட் பவர் இன உறுப்புலருந்து ஐ மீன் ஸ்வாதிஷ்டானத்துல இருந்து மேல் நோக்கி நகர்ந்துட்டா செக்ஸ் மேல கட்டுப்பாடு வந்துரலாம் ( ஆட்டோமெட்டிக்கா) செக்ஸோட சூட்சுமம் புரிஞ்சு போயிரலாம்.

      அப்ப ஒரு முறை செக்ஸில் ஈடுபட்ட பின் ஒரு வருடம் வரை கூட அதற்கான தேவையே இல்லாம போயிரலாம்.

      அப்ப செக்ஸ்லருந்து உங்க தாட் பைபாஸ் ஆகிரும். குண்டலிங்கறதே ஸ்தூலமான மேட்டர் கிடையாது. எக்ஸ்ரேல தெரியாது, ஸ்கேன்ல தெரியாது. பருப்பொருள் அல்லாத பொருள் /பொருள் அல்லாத பொருள் வேணம்னா செல் டவர்ல இருந்து வர்ர வேவ் மாதிரினு சொல்லலாம். அது புறப்பட்டதும் தெரியாது. மொபைலை வந்து சேர்ந்ததும் தெரியாது.

      ஆனால் “வாய்ஸ்” கேட்கும். ஆமாங்கண்ணா இந்த தேர்தலுக்கு ரஜினியோட வாய்ஸ் கடியாதாமே? சின்ன ரஜினி ..அதாங்க நம்ம விஜயாச்சும் கொடுப்பாரா வாய்ஸு..

        இராச.புரட்சிமணி said:
        March 29, 2011 at 11:46 am

        //அப்ப வெறும் அலிகள் அ விபத்தில் சிக்கி ஆண்மை எழுச்சியை இந்தவர்கள் மட்டுமே ஞானம் பெற முடியும்///

        பாசு சுக்கிலம் வெளியாவதால், உடல் உறவு கொள்வதால் பேரின்பம் அடைய முடியாது என்று சொல்ல முடியாது. பேரின்பத்தில் சுக்கிலத்தின் பங்கும் உண்டு என்பதே என் நினைப்பு அல்லது கருத்து.

        ///உங்க கான்ஷியஸ்/குண்டலி /செர்ப்பண்ட் பவர் இன உறுப்புலருந்து ஐ மீன் ஸ்வாதிஷ்டானத்துல இருந்து மேல் நோக்கி நகர்ந்துட்டா /////
        இந்த இடத்திற்கும் சுக்கிலம் / சுக்கில நாடிக்கும் சம்பந்தமே இல்லையா பாசு?

        ///எக்ஸ்ரேல தெரியாது, ஸ்கேன்ல தெரியாது. பருப்பொருள் அல்லாத பொருள் /பொருள் அல்லாத பொருள் வேணம்னா செல் டவர்ல இருந்து வர்ர வேவ் மாதிரினு சொல்லலாம். அது புறப்பட்டதும் தெரியாது. மொபைலை வந்து சேர்ந்ததும் தெரியாது////

        பாசு கண்ணுக்கு தெரிய வேண்டாம் ஆனா அந்த சக்திக்கும்/ குண்டலிக்கும் ஒரு தோற்றுவாய் இருக்கும் இல்ல அது எது பாஸ்? செல் டவர்ல இருந்து வேவ் வர மாதிரி இது எந்த டவர்ல இருந்து வருது..

        பாசு அதிகமாக கேள்வி கேட்பதால் தவறாக என்ன வேண்டாம்….

        S Murugesan said:
        March 29, 2011 at 1:16 pm

        புரட்சி மணி அவர்களே,
        தங்கள் ஆர்வத்துக்கு நன்றி. இந்த மேட்டரை ஒரு வ்ட்டம்னு வச்சுக்குங்க. வட்டத்துக்கு வெளியவோ, அல்லது வட்டத்துக்குள்ள இருந்தாலும் மையப்புள்ளிக்கு தொலைவாவோ இருக்கும் வரை இப்படிப்பட்ட கேள்விகள் எழும். நிஜமே போல் குழப்பும். ஆனா தொடர்பயணத்துல ஒரு பாய்ண்ட்ல இருந்து மையப்புள்ளி உங்களை இழுக்க ஆரம்பிக்கும். அப்போ இந்த கேள்விகள் எல்லாம் காணாமா போயிரும். சாதனையில இறங்கிருங்க.

        நான் கேட்டேன் புலியின் உறுமல், உணர்ந்தேன் அதன் சிறு நீர் வாசம், எதுக்குண்ணே தெரியாம எல்லாமே பேக் டு தி பெவிலியன் மாதிரி ஆயிருச்சு. அதனால தான் அடிச்சு பேச முடியாம பம்மறேன்.

        நம்முது கடகலக்னமாச்சே.. இன்னொரு செஷன் துவங்கும் . அப்ப விடமாட்டம்ல. அன்னைக்கு அடிச்சு சொல்றேன். அடிச்சு சொல்றேன்

        இராச.புரட்சிமணி said:
        March 29, 2011 at 2:28 pm

        Ok boss

    வினோத் said:
    March 29, 2011 at 4:34 am

    அவருக்கு தான் வரும் கூட்டணி மந்திரி சபையில ஏதோ பொருப்பு கொடுக்க போறங்களாமே ?

      S Murugesan said:
      March 29, 2011 at 10:11 am

      வினோத் ஜீ!
      எவருக்கு ? ஜீயருக்கா? ( ஆசி எல்லாம் வழங்கினாராமே)

        வினோத் said:
        March 29, 2011 at 10:19 am

        //..சின்ன ரஜினி ..அதாங்க நம்ம விஜயாச்சும் கொடுப்பாரா வாய்ஸு..// அவருக்கு தான் பொறுப்பு கொடுக்க போறங்களாம்

    தனி காட்டு ராஜா said:
    March 29, 2011 at 5:30 am

    //தனிக்காட்டுராஜா கேட்டுக்கொண்டதிற்காக ஒரு தனி பதிவு முயற்சிக்கிறேன்… நம்ம முருகேசன் அவர்கள் தனக்குள் பார்க்கும்படிக்கு சூழலை உருவாக்கியுள்ளார்…//

    நன்றி தல 🙂

    விந்துணர்வுக்கு முந்தின உணர்வு

    விந்துணர்வால் சிந்திய உணர்வு

    விந்துணர்வால் சிந்தாவிடில்

    முந்தி முந்தி வந்து வாழ்வு தரும் .

    வாழ்ந்துபார் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s