மனிதர்களை தேடும் "சம்பவங்கள்"

Posted on

“போதுமென்ற மனமே பொன்செய் மருந்து”. “இருக்கிறத விட்டு பறக்கறதுக்கு ஆசை படாதே”, “ஆசையே உலக துன்பங்களுக்கு காரணம்”, பருகெடுதூ பாலு தாகடம் கன்னா கூர்ச்சுனி நீள்ளு தாகடம் மேலு ( ஓடிக்கிட்டே பால் குடிக்கிறத விட உட்கார்ந்துக்கிட்டு தண்ணி குடிக்கிறது மேலுனு அர்த்தம்) (டாஸ் மாக் சரக்கு இல்லிங்கண்ணா)

இதெல்லாம் கையாலாகாதவங்க பேச்சாயிருச்சு. சாமியாருங்க கூட அத்தனைக்கும் ஆசைப்படுனு சொல்ற காலமாகிப்போச்சு.

“ஆசையே உலக துன்பங்களுக்கு காரணம்”னு புத்தர் என்ன டாஸ்மாக் கடைல போதையிலயா சொன்னார்.போதிமரத்து கீழே ஞானம் பெற்றுச்சொன்னார். உன் ஆசையே உன் துன்பங்களுக்கு காரணம்னு சொல்லலே. உன் ஆசையா என் ஆசையானு ஸ்பெஷலைஸ் பண்ணாம மொட்டையா உலக துன்பங்களுக்குன்னு ஆரம்பிக்கிறார்.

இதுல தான் சூட்சுமமிருக்கு. எவன் ஆசைப்பட்டாலும் அந்த ஆசை காத்துல வைரஸ் பரவின மாதிரி பரவுது.எவனாச்சும் நாலணா தலைவன் செத்தா ஜங்சன்ல லாரி டயரை கொளுத்திவிட்டா அட்மாஸ்ஃபியர் பாழாகற மாதிரி எவனுடைய மனசுல ஆசைங்கற பொறி விழுந்து அது கருக ஆரம்பிச்சாலும் நூஸ்ஃபியர் பாழாகுது. ( மனிதர்களின் எண்ணங்களால் உருவாகிற சூழல்)

இயற்கையை உள்ளபடி புரிஞ்சிக்கிட்டா எவனும் எதுக்கும் ஆசைப்படமாட்டான். இயற்கைக்குன்னு ஒரு அஜெண்டா ( நிகழ்ச்சி நிரல்) இருக்கு. அதுல நல்லதும் இருக்கு. கெட்டதும் இருக்கு. அதை எந்த சக்தியாலயும் மாத்த முடியாது.

உயிரில்லாத பொருட்கள்(அப்படினு நாமதான் நினைக்கிறோம்) முழுசாவும், ,ஐந்தறிவுள்ள பிராணிகள் ஓரளவுக்கும் எப்படியோ அந்த அஜெண்டாவை புரிஞ்சிக்கிட்டு அதற்கேற்ப நடந்துக்குதுங்க. இயற்கையோட நிகழ்ச்சி நிரலுக்கு முழு திருப்தியோட ஒத்துழைப்ப கொடுக்குதுங்க.

இந்த விதிப்படி பார்த்தா நாமெல்லாம் மண்ணாந்தைங்க. நாம ஃப்ளாட்டு, வீடு, டி.வி, கம்ப்யூட்டர் மாதிரி பொருட்களை பார்த்து இதை வாங்கிரனும்பா, இத மட்டும் வாங்கிட்டா போதும்னிட்டு நினைக்கிறோம். அங்கே போடு, இங்கே வை. அங்கே நிற்க வைனு (முட்டாள் தனமா) பேசறோம்.

எனக்கென்னமோ இந்த பொருட்கள்தான் அப்படி நினைக்க வைக்குதா? நம்மை கமாண்ட் பண்ணுதானு ஒரு சம்சயம்.

அட ஜாமான் செட்டை விடுங்க. நிகழ்ச்சிகளை எடுத்துக்குவம். அது பர்த்டே பார்ட்டியாகட்டும், விபத்தாகட்டும், கொலையாகட்டும், தற்கொலை ஆகட்டும். ஜாமான் செட்டு எப்படி நம்மை கண்ணடிச்சு கூப்டு எங்கன வந்து உட்காரனும்னு நினைக்குதோ அங்கே உட்கார்ர மாதிரி சம்பவங்களும் மனிதர்களை தேடி வருதானு டர்ரான டவுட்டு வந்திருச்சு.

ஒரு உதாரணத்தோட இதை விளக்க முயற்சி பண்றேன். நீங்க ஒரு காலனில இருக்கிங்க. அங்கே 200 ஃபேமிலி இருக்குனு வைங்க. அங்கே வர்ர 2010, ஜூன் 21 ஆம் தேதி ஒரு குடும்பம் வரவுக்கு மேல செலவு பண்ணி, கொண்டாடிட்டு, பட்ஜெட்ல விழற துண்டை ஈடு கட்ட பொருளாதார குற்றங்கள்ள ஈடுபட்டு போலீஸ்ல மாட்டி தற்கொலை செய்துக்கிடனும்னு இயற்கையோட நிகழ்ச்சி நிரல்லே இருக்குனு வைங்க.

இந்த மெசேஜை பத்து பன்னெண்டு வருஷம் முன்னாடியே கூட அந்த ஜில்லால, அந்த ஸ்டேட்ல சில சமயம் அந்த நாட்ல , சில சமயம் உலகத்துல இருக்கிற எல்லா பொருட்களும் எப்படியோ ரிசீவ் பண்ணிக்கிடுதுங்க.

குறிப்பிட்ட சீக்வென்ஸை க்ரியேட் பண்ண எல்லா பொருட்களும் முயற்சி பண்ணுதுங்க. நான் என்ன நினைக்கிறேன்னா மேற்படி நிகழ்ச்சி நிரல்ல குறிப்பிட்ட காலனில,குறிப்பிட்ட அப்பார்ட்மென்ட், அதுல குறிப்பிட்ட வீடுன்னெல்லாம் இருக்காதுன்னு தான் நினைக்கிறேன் ,

ஒரு அப்பார்ட்மென்ட்ல ஒரு தகாத சம்பவம் நடக்கிறதுக்கு 3 மாசம் முந்தி அந்த அப்பார்ட்மென்டை ஒரு கருமேகம் மாதிரி, கரிய நிற கொசுவலை மாதிரி ஒரு அலை கப்பிக்குது.

குறிப்பிட்ட தகாத சம்பவம் ( கொலை அ தற்கொலை) நடக்கிறதுக்கு முந்தி அந்த 3 மாசத்துல அதே அப்பார்ட்மென்ட்ல பலருக்கு மேற்படி கொலை அ தற்கொலைக்கான சிச்சுவேஷன் வந்திருக்கும்.

மனத்தூய்மையோ , மந்திர பலமோ , தெய்வ பலமோ, கிரக பலமோ , தாயத்தோ அந்த சம்பவம் அவிகளை கூப்டப்ப ” ஊஹூம் நான் மாத்தேன்”னு சொல்ல வச்சிருச்சு.

மேற்படி ஐட்டம்ஸ் எதுவுமில்லாத பார்ட்டி மாட்டிக்கிறான். தொங்கறான். தந்தியில செய்தியா வரான்.

ஏன்னா..நிறைய சம்பவங்கள்ள பார்த்திருப்பிங்க கடைசி செகண்ட்ல கூட டிஸீஸ்ட் (சாகறவன்) மாறிர்ராங்க. ஒரு தடவை கிராஃபிக் ரவிங்கற எல்டர் ஃப்ரெண்டு தன் நண்பர்கள் மூணு பேரோட டூவீலர்ல வெளியூர் போனார். ரெண்டு வண்டில வண்டிக்கு ரெண்டு பேரா புறப்பட்டாங்க. ஒரு இடத்துல யூரின் பாஸ் பண்ண இறங்கினாங்க. காரியத்தை முடிச்சுட்டு மறுபடி ஏர்ரப்ப ரெண்டாவது வண்டில பின்னாடி உட்கார்ந்து ட்ராவல் பண்ண பார்ட்டி அதுவரைக்கும் க்ராஃபிக் ரவி பின்னாடி உட்கார்ந்து ட்ராவல் பண்ண வண்டிக்கு மாறிட்டாரு. அவர் ஏறின வண்டி அடுத்த திருப்பத்துலயே ஒரு லாரியோட மோத ஓட்டினவனுக்கு சின்ன கீறல் கூட இல்லே பின்னால உட்கார்ந்திருந்தவரு மட்டும் காலி. இந்த சம்பவத்துல செத்திருக்க வேண்டியவன் ரவி. ஆனால் அவன் சாகலை.இது மாதிரி நிறைய சம்பவங்கள்.

இதுலருந்து நான் புரிஞ்சிக்கிட்டதென்னன்னா இயற்கையோட அஜெண்டால ஒரு கொலை, ஒரு தற்கொலை,ஒரு விபத்துன்னு மொட்டையா இருக்கே தவிர க்லைஞர், ஜெயலலிதா ,முருகேசன் இப்படி பர்ட்டிகுலரா இருக்கிறதில்லை.

இந்த ஐ.பி ,கொலை, தற்கொலை, விபத்துங்கற இழவெல்லாம் ஒரு மியூசிக்கல் சேர் மாதிரி. எவன் தன் நெஞ்சுல ஆசைங்கற வேக்குவத்தை வச்சிக்கிட்டு வேகமா ஓடறானோ அவனுக்கு ஒரு சேர் கிடைச்சுருது.ஐ.பி ,கொலை, தற்கொலை, விபத்துக்கு இலக்காயிர்ரான். என்னடா விளையாட்டு இது , ஏன் இப்படி இரைக்க இரைக்க ஓடறோம்னு யோசிச்சிக்கிட்டே ஓடறவன் ஆட்டத்துல கோட்டை விட்டுர்ரான்.( அதாவது க்ரேட் எஸ்கேப்)

1982 ல நான் பத்தாம் வகுப்பு . பரீட்சைல 72 % மார்க் கிடைச்சது. இந்த 72 % ஐ நான் தேடிப்போகலை. அதுவா தேடிவந்தது. சுயம்வரம் மாதிரி வச்சிக்கங்களேன். குறிப்பிட்ட 72 சதவீதமோ, விபத்தோ, சாவோ கைல மாலைய வச்சுக்கிட்டு சுயம்வர மண்டபத்தை சுத்தி சுத்தி வருது. தனக்கு பிடிச்சவன் கழுத்துல போட்டுருது. எனக்கு எனக்குன்னு முண்டியடிக்கிறதால ஒரு இழவும் கிடைக்காது.

நான் சொல்லவந்தது என்னன்னா .. சம்பவம்தான் மனுஷனை தேடி வருதே தவிர, தேடிப்போற மனுஷனை சம்பவம் ரெகக்னைஸ் பண்றதில்லை. இதே விதிதான் பல விஷயங்கள்ளயும் வேலை செய்யுது.

1982ல தானா தேடி வந்த 72 சதவீதத்தை கொண்டாடாம பழைய மாதிரியே இருந்திட்டிருந்தா இன்னும் பல சமாச்சாரங்க கூட என் லைஃப்ல என்னை தேடி வந்திருக்கலாம். ஆனால் சனம் உசுப்பேத்தி விட்டதுல மெய் மறந்துட்டன். (மெய் என்ற வார்த்தைக்கு உண்மை, உடம்புன்னு ரெண்டு அர்த்தம் இருக்கு)

தமிழ் சினிமால ரஜினி ,மாதிரி நான் தான் டாப்பு மீதியெல்லாம் டூப்புனு நினைக்க ஆரம்பிச்சுட்டன்.

1982 ல நான் ஸ்கூல் செகண்ட். முதலா வந்த பார்ட்டி கிறிஸ்துவ குடும்பம். சினிமாபார்க்க மாட்டான். பேசமாட்டான். நாக்கை கடிச்சிக்கிட்டு குண்டு குண்டா எழுதிக்கிட்டே இருப்பான். அந்த காலத்து எம்.ஜி.ஆர் தனமான சிகையலங்காரம்(?) முகத்துல எண்ணெய்.

நாம “ஊரை சுத்தின மாதிரியுமிருக்கனும், அண்ணனுக்கு பொண்ணு பார்த்தமாதிரியும் இருக்கனும் டைப்பு. அதுக்கே “முக்கனிகளில் முதல் கனி, இங்கிலீஷ் மாதத்தில் 5 ஆவது மாதம், தமிழ் மாதத்தில் பத்தாவது மாதம்”னு பட்டம் வந்துருச்சி.

அது வந்தப்ப போடாங்கோ என்று விட்டு நான் என் சுதர்மத்தை பின்பற்றியிருந்தா நாறியிருக்கமாட்டேன். எவனை வெறுத்தேனோ அவன் எதையெல்லாம் இழந்து முதலிடத்தை பிடிச்சானோ அவனோட கருமமெல்லாம் என்னை சுத்திக்க ஆரம்பிச்சுருச்சு. அந்த முதலிடம் எல்லா தளத்துலயும், களத்துலயும் கிடைக்கனும்னு ஆசை பட ஆரம்பிச்சேன். நாறிட்டேன்.

அந்த நாளாவது பரவாயில்லை 72 சதவீதத்துக்கே மாமேதை பட்டம்.இப்ப பாருங்க. 99.99%ன்னா இது போதுமா யோசிக்கிறான்.

எந்த அப்பனை பாரு எம்புள்ள ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரனுங்கறான். ,எந்த அம்மாவ பாரு எம்புள்ள ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரனுங்கறா. அப்ப ரெண்டாவது மூணாவது வரதுக்கெல்லாம் ஆள் வேணாமா?

படி படி …இதைவிட்டா பசங்க கிட்டே வேற வார்த்தையே பேசாத பேரன்ட்ஸ் அதிகமாயிட்டாங்க. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்னு படிச்ச நாய்ங்களே பெத்தவுகள நடுத்தெருவுல விடறகாலம்.இதுல ரேங்கு படிப்பு படிக்கிற புள்ளைங்க எங்கே அப்பா அம்மாவ காப்பாத்த போவுது.

நான் படிக்காதிங்கனு சொல்லலே . படிங்க. வேணாங்கல. உங்களை சுத்தி என்ன நடக்குதுனு தெரிஞ்சிக்கிட்டே படிங்க. உங்களுக்கு முன்னாடி படிச்சவன் நிலையெல்லாம் என்னனு தெரிஞ்சிக்கிட்டு படிங்க. உங்க படிப்புக்கு அப்பா அம்மா என்ன செலவு பண்றாங்க? அவிகளுக்கு அந்த பணம் எப்படி வருது? அரசாங்கம் உங்க படிப்புக்காக என்ன செலவு பண்ணுது? அந்த பணம் எப்படி வருது? தெரிஞ்சிக்கிட்டே படிங்க.. படிச்ச பிறகு என்ன பண்ண போறிங்க? அதனால வீட்டுக்கு என்ன லாபம்? நாட்டுக்கு என்ன லாபம்னு தெரிஞ்சிக்கிட்டே படிங்க.

அப்படியா படிக்கிறாய்ங்க? இல்லையே..இவிக படிக்கிற படிப்புக்கும் வாழ்க்கைக்கும் எதுனா சம்பந்தம் இருக்கா? இல்லையே. எத்தனை மேஸ்திரி தேவை, எத்தனை இஞ்சினீர் தேவைனு ஒரு கணக்கு போட்டு பாருங்க. மேஸ்திரிங்க ரேஞ்சுல இஞ்சினீருங்க தயாராகிட்டிருக்காங்க. இவிகளுக்கு என்ன வேலை தரப்போறிங்க. கட்டி முடிக்கிற பாலமெல்லாம் படக் படக்குனு விழுந்துருது.

சரி இஞ்சினீர் ஆனவனெல்லாம் என்ன பண்றான்? லஞ்ச ஒழிப்பு ரெயிட்ல மாட்டறவன்ல நிறைய பேர் இஞ்சினீர்தான்.

மனுஷனுக்கு வர்ர துன்பத்தை விட அது தனக்கு வரக்கூடாத துன்பம்ங்கற அவனோட நினைப்புதான் அவனுக்கு துன்பத்தை தருது.

இந்த படைப்போட பிரம்மாண்டத்தையும் தன்னையும் மனுஷன் ஒப்பிட்டு பார்த்துக்கனும். “இத்தரை கொய்யா பிஞ்சு நாமிதிற் சிற்றெறும்பு”ன்னார் கவிமணி . அது கூட ஜாஸ்திதான். புதுசா கற்பனை பண்ண வேண்டியிருக்கு.

வாத்தியார் ஒரு படத்துல “உலகம் பிறந்தது எனக்காக”ன்னு பாடுவாரு. சனமும் விசிலடிச்சுட்டு மறந்துட்டாங்க. உலகம் நமக்காக பிறந்திருந்தா அது வாஸ்து சாஸ்திரப்படி சதுரமாவோ, செவ்வகமாவோ இருந்திருக்கும்.

உலகம்ங்கற வார்த்தை நாம வாழற இந்த பூமிய மட்டும் குறிக்குதுனு நினைக்கிறேன். விஸ்வம்னா ஓரளவுக்கு இந்த படைப்போட பிரம்மாண்டம் உறைக்கும் போல. அண்ட சராசர பிரபஞ்சங்கள்னும் ஒரு பிரயோகம் உண்டு. இதெல்லாம் நாளுக்கு நாள் ஒரு பக்கம் விரிவடைஞ்சுகிட்டு இன்னொரு பக்கம் சுருங்கிக்கிட்டு வருதாம்.

(ஆமாம் பெண்ணோட முட்டைக்கருவுக்கு கூட அண்டம்னு பேரை வச்சது யாருங்க? ஓகோ ..அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டுங்கறத தாண்டி அண்டமே பிண்டம், பிண்டமே அண்டம்னு கூட தெரிஞ்சு வச்சிருந்தாங்களோ என்னமோ? பெரியாளுங்கப்பா)

இதுல நாம எங்கே கணக்கு எதுல கணக்கு? நான் அனுபவத்துல தெரிஞ்சி,புரிஞ்சி, செரிச்சிக்கிட்டத ரெண்டாம் வாய்ப்பாடு மாதிரி சிம்ப்ளிஃபை பண்ணி சொல்றேன். ஆசையே உலகதுன்பங்களுக்கு காரணம். நீ ஆசைப்படறதால எதுவும் வந்து சேரப்போறதில்லை. சில நேரங்கள்ள ஜஸ்ட் நம்ம வில் பவரால சிலதை சாதிக்க முடியலாம். ஆனால் அது ஹாட் வாட்டர் ஊத்த கழுவி வச்சிருக்கிற ஃப்ளாஸ்க்ல ஊத்தின ஐஸ் வாட்டர் மாதிரி. காலம் தன் ஏற்பாட்டின் படி தன் வேகத்துல ஃப்ளாஸ்கை கவிழ்த்துட்டு தான் ஊத்த நினைச்ச ஹாட் வாட்டரை ஊத்திருது. ஃப்ளாஸ்க் டமாலாயிருது.

நீ தேடிப்போறது கிடைக்காது. கிடைச்சாலும் நாறிப்போயிருவ. தானா வர்ரது கிடைக்காம போகாது. அது கிடைக்காட்டாலும் நஷ்டமில்லே.

உங்களுக்கு இந்த ஸ்தூல உலகத்துல நிறைஞ்சிருக்கிற ஸ்தூலமான ஆபத்துகளே முழுசா தெரியாது. ஆனால் சூக்ஷ்ம உலகம் வேற ஒன்னிருக்கு அதுக்கு ஒரு அஜெண்டா இருக்கு.அதுல கை வச்சி திருத்தற கெப்பாசிட்டி ஒரு கடவுளுக்குதான் உண்டு. கடவுள் ஒன்னும் கலைஞர் இல்லே எவனெவன் பாராட்டு விழாவுக்கு வந்தானு கணக்கு போட்டு ஃபேவர் பண்ண.

ஒருத்தன் பசி,பட்டினி,சொறி,சிரங்குமா அவதிபடறான்னா அதுக்கு பின்னாடி ஆயிரம் இருக்கும். அதுவே அவனுக்கு பெட்டர் சாய்ஸ்.

ஒருத்தன் பெண்டாட்டியால இம்சை பட்டு கோர்ட்டு,போலீஸ் ஸ்டேஷன்னு ஏறியிறங்கறான்னா அதுவே அவனுக்கு பெட்டர் சாய்ஸ்.

இதுக்கெல்லாம் வேர் ஜோதிட சாஸ்திரத்துல இருக்கு. வாழ்க்கைல மனுஷங்களுக்கு வர்ர ஏன்?எதுக்கு? எப்படி?ங்கற கேள்விக்கெல்லாம் இதுல பதில் இருக்கு.

ஜோதிஷம் ஆன்மீக பயணத்தின் முதல் படி
இதன் இறுதி இலக்கு ஆன்மீகம்.

Advertisements

19 thoughts on “மனிதர்களை தேடும் "சம்பவங்கள்"

  Shakthi said:
  March 28, 2011 at 2:41 am

  வணக்கம் தலைவா ,
  இந்த பதிவுல நீங்க குறிப்பிட மாதிரி படிப்புக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பில்ல என்பதில் உடன் படுகிறேன் . ,பாட திட்டத்தில நல்ல மாற்றம் வேணுமுனா,அது எப்பிடி இருக்கணும் என்ற வரையறை தெளிவாக இதுவரைக்கும் யாரும் முன்வைக்கல என்று நினைக்கிறேன் ,எனக்கும் அது எப்பிடின்னு தெரியல நீங்களே அத சொல்லிடுங்களேன் ,தெய்வ நாமங்கள் சொல்ல ஒரு நாளில் எந்த நேரமும் சொல்லலாமா ?

   S Murugesan said:
   March 28, 2011 at 5:54 am

   ஷக்தி,
   அரசாங்கத்துக்கு மட்டும் ஐடியா கொடுக்கிறதில்லைனு ஒரு சங்கல்ப்பம் . தாளி.. பாதிய உருவி அரைகுறையா அப்ளை பண்ணி நாறடிச்சுர்ராய்ங்க. நல்ல காலம் நம்ம பேரை சொல்லாததால பொழச்சம். இல்லாட்டி சனம் வேட்டிய உருவி இருக்கும்.

   திருமலை தேவஸ்தானத்துக்கு சொந்த டிவி ஐடியா கொடுத்தது நான் தேன். என் உத்தேசம் -ப்ளூ ப்ரிண்ட் வேற.

   இப்ப தினசரி பெருமாள் வந்து வார்ன் பண்ணிட்டு போறாரு. இந்த கல்வி மேட்ட்ரை அரசாங்கம் உருவினாலே நாஸ்தி. இதுல ஆருனா கல்வித்தந்தை உருவி கொள்ளையடிக்க ஆரம்பிச்சா அந்த கருமமும் நமக்கு சொந்தம் ஆயிரும்.

   ஊர்பாவம் நமக்கெதுக்கு பாஸ்! ஆத்தாளையும் , புள்ளையையும் ( பிள்ளையார்) பூசிக்கவே நியம நிபந்தனை கிடையாதுனு சொல்றாய்ங்க. அப்ப மத்த “ஜேஜிக்கெல்லாம்” இருக்குன்னு தானே அர்த்தம்.

   நி.நி எல்லாம் ஸ்தூல பூசைக்குத்தேன் . மந்திரம்ங்கறது மனோ பூசை. உடல் மனசை பாதிக்காத ரேஞ்சுக்கு நீங்க வளர்ந்திருந்தா நி.நி எல்லாம் தேவையில்லை. அதுவரை ஃபாலோ பண்றது பெட்டர். உ.ம் ஈர உடையுடன் காயத்ரி, சூ.நமஸ்காரம் கூடாதுங்கறாய்ங்க

   (கல்வி மேட்டரு… ஹி ஹி பார்ப்போம் .. காசா பணமா ஒரு பதிவு தானே போட்டாபோச்சு)

  rajesh said:
  March 28, 2011 at 3:55 am

  //உங்களை சுத்தி என்ன நடக்குதுனு தெரிஞ்சிக்கிட்டே படிங்க. உங்களுக்கு முன்னாடி படிச்சவன் நிலையெல்லாம் என்னனு தெரிஞ்சிக்கிட்டு படிங்க. உங்க படிப்புக்கு அப்பா அம்மா என்ன செலவு பண்றாங்க? அவிகளுக்கு அந்த பணம் எப்படி வருது? அரசாங்கம் உங்க படிப்புக்காக என்ன செலவு பண்ணுது? அந்த பணம் எப்படி வருது? தெரிஞ்சிக்கிட்டே படிங்க.. படிச்ச பிறகு என்ன பண்ண போறிங்க? அதனால வீட்டுக்கு என்ன லாபம்? நாட்டுக்கு என்ன லாபம்னு தெரிஞ்சிக்கிட்டே படிங்க. //

  இதுவரை எந்த வாத்தியாரும் சொல்லி தராத பாடம்.

   S Murugesan said:
   March 28, 2011 at 5:46 am

   ராஜேஷ்,
   இன்னைக்கு உள்ள வாத்தியாரே ஒரு கொத்தடிமை ( தனியார் கல்லூரிகள் கதைய சொல்றேன்) இவன்” பொயப்பை’ பையன் தெரிஞ்சிக்கிட்டா இவன் “பவிசு’ தெரிஞ்சு போயிரும்ல.

   ( ஆனாலும் அ நியாயம் பாஸ்! அட்டெண்டன்ஸ் ஷார்ட்டேஜுக்கு ஒரு பார்ட்டி அதுக்கு ஒரு பார்ட்டி இதுக்கு ஒரு பார்ட்டினு ஆட்டைய போட்டுர்ராய்ங்க – ஹெச்.ஓ.டி. ,வாத்யாரு,பசங்க ஒரே பார்ல ஒரே டேபிள்ள தீர்த்த கச்சேரி வெளுத்து வாங்கறாய்ங்க)

  Rampap said:
  March 28, 2011 at 4:14 am

  Very Informative

  swami said:
  March 28, 2011 at 5:35 am

  Anna, nalukku naaal unga ezhuthu merugu eeri konde pogiradhu. unmaiyaana aanmigam idhuve. padinen siddargalin paripoorna aasigal ungalluku irukkiradhu.

   S Murugesan said:
   March 28, 2011 at 1:14 pm

   நன்றி ஸ்வாமி .ஏன்னே புரியலை நிறைய கமெண்ட்ஸ் ஸ்பம்ல மாட்டிக்குது.

  வினோத் said:
  March 28, 2011 at 6:23 am

  //..இதுலருந்து நான் புரிஞ்சிக்கிட்டதென்னன்னா இயற்கையோட அஜெண்டால ஒரு கொலை, ஒரு தற்கொலை,ஒரு விபத்துன்னு மொட்டையா இருக்கே தவிர க்லைஞர், ஜெயலலிதா ,முருகேசன் இப்படி பர்ட்டிகுலரா இருக்கிறதில்லை…//

  இருக்கே தல… நாஸ்டர்டாம்ஸ் எதிர்காலத்தை கண்டு எழுதி வெச்ச தீர்க்கதரிசனத்தில் இரட்டை கோபுரம் தகர்ப்பு இருக்கு, ராஜிவ் கொலையை பற்றியும் எழுதி இருக்கார்.
  நாசகார கும்பலால் , அரச குடும்பத்தை சேர்ந்த விமானி(royal pilot) கொல்லப்படுவார்.னு எழுதி இருக்கர். 3000 வருடத்தில் நடப்பது பற்றி, சர்சின் அழிவு பற்றி, எழுதி இருக்கரே…

  இன்னொன்னு… நீங்க சொன்ன ரவிக்கு ஆயுர் பாவம் கெட்டியா இருக்கணும். சாகணும்ன அயுள் முடியனும் இல்ல? எதாவது ஒருத்தர் சாக முடியாது இல்ல ?

   S Murugesan said:
   March 28, 2011 at 1:13 pm

   வினோத்ஜி,
   நாஸ்ட்ரோ டாமஸோட வரிகள் ஒரிஜினலா அப்படியே கிடைச்சா கமெண்டா போடுங்க. பார்த்துருவம்.

   என் பார்வையில் எதிர்காலம் என்பதே ஃப்ளெக்சிபிள் அண்ட் நாட் இன் டீட்டெய்ல் அது கொழ கொழனு நழுவி போய்க்கினே இருக்கும் தலை!

   ரசமணி மாதிரி

  ஜோதிடம் ஆன்மீக பயணத்தின் முதல் படி
  இதன் இறுதி இலக்கு ஆன்மீகம்.

  மிகச் சரியாக சொன்னீர்கள் ,,,, அதுதான் உண்மையும் கூட

  அப்புறம் ,,, இப்போ உங்க நடை நல்லாவே மாறியிருக்கு ,,, வெரி குட் … இன்னும் இன்னும் உங்ககிட்டே நிறைய எதிர்பார்க்கிறோம் ( சார் எழுத்து நடையிலே )

  மத்ததிலே நீங்க எக்ஸ்பர்ட் ங்கிறது உங்க கருத்துக்களிலேயே தெரியுதே ,,,

  உங்க எழுத்து எல்லோருக்கும் பயன்படனும் ,, அதான் அடியேனோட ஆசை,

  நன்றி வாழ்த்துக்கள்

   S Murugesan said:
   March 28, 2011 at 1:08 pm

   ஜானகி ராமன் சார்,
   மாற்றத்தை வலிக்காம கொண்டுவரனும். உறுத்தாம கொண்டு வரனும். ஒன் ஸ்டெப் அட் ஒன் மூவ்மெண்ட். தடக்குனு மாறினா தடுக்கிரும் ( ஹி ஹி நமக்கு)

  P.A.Kumar said:
  March 28, 2011 at 2:26 pm

  தலை, நான் உணர்ந்ததை நீங்கள் கூறுவதுபோல் உள்ளது. நம் சம கால மகரிஷி ஒருவர் இதனை வினைப்பதிவு என்றார்.

  பல முறை நான் நிகழ்வுகளின் இடையில் இருக்கும்போது ஒரு உள்ளுணர்ச்சி சொல்லும் இது நீ ஏற்கனவே கண்டது மற்றும் உணர்ந்தது என்று.

  என் நண்பர் இதனை பிறழ்ச்சி என்றும் கூறுவார். நரம்புத்தளர்ச்சி காரணம் என்றும் கூறுவார். இத்தனைக்கும் அவர் அடிக்கடி யோகத்தில் ஆழ்பவர்.

  சில நேரங்களில் நான் சிரிப்பதும் உண்டு, எனக்கிது நிகழ்வது கண்டு.

  தலை நீங்களும் என் கட்டங்களை(kumarpak@gmail.com) பார்த்துவிட்டு இதுபற்றி எதுவும் சொல்லவில்லை, பல ஜோதிடர்களை போல.

  சிரிப்பு வருது.

   S Murugesan said:
   March 28, 2011 at 4:42 pm

   வாங்க குமார்,
   ராமகிருஷ்னர் அடிக்கடி சொல்வதுண்டு.

   “காசை கொடுத்தா அது செல்லுமா செல்லாதானு பார்த்து வாங்கற மாதிரி நான் சொல்றதை கூட செக் பண்ணிட்டு ஸ்டோர் பண்ணிக்க”

   மனித மனம், நினைவு எல்லாமே கரப்டட். காம்ப்ளிகேட்டட். அதனால ஒரு தாட்டிக்கு பன்னென்டு தாட்டி 144 கோணத்துல கிராஸ் செக் பண்ணிட்டு தேன் அதை நாம அங்கீகரிக்கனும்.

   நான் சொல்ல வந்தது வேற . நம்ம கண்ணோட்டத்துல மனிதனுக்கு சம்பவம் “யதேச்சையா” நிகழுது.

   நான் சொல்லவர்ரது “சம்பவம்” பலரை தேடி அவிக ரெஃப்யூஸ் பண்ண பிறகு ஏமாந்தவன் தலையில வந்து விடியுது.

   நீங்க சொல்ல நினைச்சது நினைவுகள் பற்றி ( கடந்த கால நினைவா? கடந்த பிறவிகளின் நினைவா? அ நினைவு பிழையான்னு உங்க சப்ஜெக்ட் போகுது

   கட்டங்களை பார்த்து “எதை” சொல்லலைனு ஸ்பார்க் ஆகல. ஒரு வேளை இந்த ஆன்மீக மேட்டராத்தான் இருக்கும்னு ஒரு குன்ஸுல இப்பம் சொல்லிரலாம்னு தேன் பார்த்தேன்.

   ஆனா எதுக்கு வம்பு .. நீங்க எதைனு மென்ஷன் பண்ணுங்க. நான் பைசல் பண்ணிர்ரன்

   ஏம்பா .. நான் சரியா பேசறனா? (ஏற்கெனவே வாக்குஸ்தானத்துல சனி .. ஹும் நேரம்)

  வினோத் said:
  March 29, 2011 at 3:58 am

  தல… இந்த லிங்கை பாருங்க….
  பார்த்து சொல்லுங்க….
  மிக குறிப்பக சொல்லப்பட்டு இருக்கு…
  http://classroom2007.blogspot.com/search/label/Lessons%2021%20-%2030
  http://www.prophet666.com/2010/03/nostradamus-on-indira-and-rajiv-gandhi.html

   S Murugesan said:
   March 29, 2011 at 10:25 am

   வினோத் ஜீ,
   மொத லின்கை பொருத்தவரை நான் அம்பேல். நாம பெருச்சாளி மாதிரி ( அமாவாசை இருட்ல பெருச்சாளிக்கு போனதே வழிங்கற பழமொழி தெரியும்ல)

   ரெண்டாவது லின்க் :
   தமிழ்ல எழுதப்பட்டத்துக்கே (அதும் கவிதை கணக்கா எழுதினா கேட்கவே மாணாம்) நூறு அர்த்தம் தரலாம். இதெல்லாம் மயிர் பிளக்கும் விவகாரம் நமக்கு வயசு பத்தாதுங்கண்ணா

  வினோத் said:
  March 29, 2011 at 4:18 am

  இளவரசி டயானா, டோடிபயத், இரட்டை கோயுரம் தகர்ப்பு,
  http://www.gzyn.com/cmp/contentReadingActions.do?method=readArticle&id=2699&edition=1&title=True+Predictions+of+Nostradamus+
  http://en.wikipedia.org/wiki/Nostradamus_in_popular_culture

  இந்திரா, ராஜிவ் பற்றி எழுதி இருக்கார் பாருங்க..

  இந்திரா தேர்தலில் தோற்பார், ஜெயிப்பர்,
  67 வயதில் கொலை செய்யப்படுவார்னு சொல்றார்.

  ராஜிவ் பைலட் பதவியை விட்டு அரச பதவியை நிரப்ப போய் ஏழாண்டு கழித்து
  நாசகார ராணுவத்தால் கொல்லப்படுவர் ,

  ஹிட்லரின் வாழ்க்கை பற்றி,
  http://www.spartechsoftware.com/dimensions/mystical/nostradamus.htm
  http://forums.wildbillguarnere.com/index.php?/topic/11360-nostradamus-predictions-of-hitler/

  அவர் காலத்தில் ஞான திருஷ்டியில் இதெல்லம் தொலை காட்சி பார்கிற மாதிரி பார்த்து எழுதி இருக்கர். இவர்களுக்கு பதில் வேறு யாராவது இருக்க முடியுமா?

  உங்க கருத்தை ஆதரத்துடன் மறுக்கிறதுக்கு மன்னிச்சுகோங்க..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s