குண்டலி விழித்தால்

Posted on

இன்னைக்கு திரு சரண் பேசிட்டிருந்தப்ப கோவில், விக்கிரக வழிபாடு பத்தி டாப்பிக் வந்தது. அவர் சொல்ல சொல்ல மனசுல பயங்கர நக்கல்.

அவர் வேற மன்சனுக்கு அறிவு சாஸ்தியாயிருச்சு. அதனால கடவுள் பயம் போயிருச்சுன்னாரா .. கடுப்பாயிட்டன்.

அறியாமையால வர்ர பயம் நிரந்தரமில்லை. அது இன்னொரு அறியாமையால காலியாயிரலாம். அட ஒரு காலணா அறிவால கூட ஃபணால் ஆயிரலாம்.

கடவுள் பயம்னா என்ன? கடவுளை தவிர வேற எந்த ம..ரானுக்கும் பயப்படாத நிலை. ” நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்ங்கற நிலை.

கடவுள் பயம்ங்கறது அறிவுங்கற கோழிய அனுபவ சேவல் மிதிச்சு அது போடற முட்டை தான் சம்சயம். அந்த சம்சயத்தை அறிவுங்கற கோழியும், அனுபவங்கற சேவலும் மாறி மாறி அடைகாக்கனும் அப்படி பொரிஞ்சு வர்ரதுதான் ஞானம். கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். அந்த இறையச்சம் அறியாமையால வந்தா கிரிமினல் வேஸ்டுனு அடிச்சு சொல்றேன். ( கீ பேடைத்தான்)

அதனாலதான் நான் எதையுமே அறிவு ,அனுபவம்ங்கற நெருப்புல புடம் போட்ட பிற்பாடு மட்டுமே சனத்தோட பார்வைக்கு கொண்டுவரேன். இன்னைக்கு குண்டலி சமாசாரத்தை பார்ப்போம். இந்த மாதிரி சப்ஜெக்டையெல்லாம் பேசற தில்லு எப்படி வந்ததுன்னு கேப்பிக சொல்றேன்.

ராம். இதை மேம்போக்காக பார்க்கும்போது இது ஒரு பெயர் மட்டுமே. சரி மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமன் நாராயணின் அவதாரமான ஸ்ரீ ராமனை குறிப்பதாகவே எடுத்துக் கொண்டாலும் வெறுமனே ராம் ராம் என்று ஜபிப்பதால் எப்படி அற்புதங்கள் நிகழ்ந்துவிடும் என்று நீங்கள் கேட்கலாம். விவரமாவே சொல்றேன். வெயிட் ப்ளீஸ்.

நீங்க ராம நாமத்தை தொடர்ந்து ஜபிக்கிறிங்கனு வைங்க. என்ன ஆகும்.இது ஜஸ்ட் ஒரு வார்த்தைதான். இதை திரும்ப திரும்ப சொல்றதால என்ன நடந்துரும்?

ஓஷோ சொல்வாரு மேற்கத்திய விஞ்ஞானம் மனதுக்கு வியாதி வரும்னு சொல்லுது. கிழக்கத்திய ஆன்மீகம் சொல்லுது. மனமே வியாதின்னு.

கோயிலுக்கு போறோம். மனசு என்ன சொல்லுது? இங்கே வந்து என்னடா புண்ணியம். பப்புக்கு போயிருந்தா அயனான குட்டியா ஒன்னை தேத்தியிருக்கலாமே.

பப்புக்கு போறோம். அந்த சங்கீத இரைச்சல், புகை, வள வள பேச்சு சத்தம்லாம் பார்த்துட்டு மனசு என்ன நினைக்குது? தத் இதென்னடா நாய் பிழைப்பு பேசாம அம்மாவோட கோயிலுக்கே போயிருக்கலாம்.

இதுல இருந்து என்ன தெரியுது? நீங்க இருக்கிற இடத்துல மனசு நிக்கறதில்லை. மனசு நிக்காத இடத்துல ப்ளெஷர் இல்லே.

இந்த மனசு (இதே பதிவுல பின்னாடி வர்ர இண்டிவியூஜுவல் மைண்டை சொல்றேன். அதாவது யூனிவர்சல் மைண்ட் + ஈகோ) ரொம்பமுட்டாள் தனமானது. இயற்கைல இருந்து நம்மை வேறுபடுத்துது, மரண பயத்தை தருது. கண்டதையும் பார்த்து மரணத்தை பார்த்தாப்ல பேதியாக்குது.

( தனிமை,இருட்டு,பிரிவு, ஏழ்மை,நிராகரிப்பு இப்படி ஒன்னுல்ல மஸ்தா கீது)

இந்த மனசுங்கறது மிக நீளமான ஆடியோ டேப் மாதிரி. இதுல வர்ஜியா வர்ஜியமில்லாம கண்ட கசடுகள் பதிவாயிருக்கு. எந்த வடிவத்துல பதிவாயிருக்கு? சொல் வடிவத்துல பதிவாயிருக்கு. அந்த கசடுகளை நீக்க என்ன வழி? வேற ஏதாச்சும் பதிவாகனும். மறுபடி கண்டதையும் போட்டு பதிவு பண்ணிட்டா வேஸ்டு. அதுக்கு பதிலா ஒரே சொல்லை, அதுவும் சில விசேஷாம்சம் கொண்ட சொல்லை தொடர்ந்து பதிவு பண்ணிட்டா… பழைய பதிவுகள் எல்லாம் ஃபணாலாயிரும்.

என் மைண்ட்ல நிறைய சினிமா பாட்டுங்க இருந்தது. அதுகளை ஒழிச்சு கட்ட நானா ஒரு டெக்னிக் யூஸ் பண்ணேன்.அது என்னடான்னா பாட்டுகள்ள இருக்கிற வார்த்தைகளை தூக்கிட்டு ராமாங்கற வார்த்தைய மட்டும் போட்டு பாடறது.

ஆச்சரியம் என்னடான்னா அது என்னா ட்யூனா இருந்தாலும் இந்த ராமாங்கற சொல்லு பச்சக்குனு உட்காருது. உ.ம்

“கண்ணோடு காண்பதெல்லாம்”னு துவங்கற பாட்டை ராமாங்கற வார்த்தையை போட்டு நிரவறேன் பாருங்க.

ஸ்ரீராம ராம ஹரே ராமா..
ராம ராம ராம ஹரே..

இப்படி என் மைண்ட்ல இருந்த உதவாக்கரை பாட்டுவரியையெல்லாம் ஒழிச்சுக்கட்டிட்டேன். இது ஒரு வ்யூ.

இப்போ இன்னொரு கோணத்துல பார்க்கலாம். ஸ்ரீமன் நாராயணனே ஆதியந்தமான மெய்ப்பொருள் என்பவர்களும் இருக்கிறார்கள் (வைஷ்ணவர்கள்) மும்மூர்த்திகளில் ஒருவர் என்று அங்கீகரிப்பவர்களும் இருக்கிறார்கள்.

கற்சிலைகள் பேசா , கேளா ,பாரா என்று சொல்பவர்களும் உள்ளனர். (அவர்களை ஓஷோவின் மறைந்து கிடக்கும் உண்மைகள் புத்தகத்தை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்)

எல்லோரும் ஒப்புக்கொள்ளும்படி ஒரு தியரியை முன் வைக்கிறேன். இருப்பதெல்லாம் ஒரே உயிர். (ஸ்ருஷ்டி ஆரம்பத்தில் அன்று அமீபாவில் ஆவிர்பவித்த -தோன்றிய உயிர்) . அந்த ஒரே உயிர் (செல்) தன்னை தான் பிரதியெடுத்து ,பிரதியெடுப்பில் எர்ரர் வந்து புது ஜீவராசிகளாக பரிணமித்துத்தான் இன்றைய சனப்பெருக்கம் நிலை பெற்றுள்ளது.

உயிர்களின் பெருக்கத்தில் – பரிணாம கிரமத்தில் எத்தனையோ ஆச்சரியகர மாற்றங்கள், உச்ச, நீச ஸ்திதிகள் ஏற்பட எத்தனையோ வாய்ப்பிருக்கு. இந்த ப்ராசஸ்ல ஒரு ராமன் தோன்றியிருக்கலாம்.
ஒரு ராமன் என்ன ஓராயிரம் ராமர்கள் தோன்றியிருக்கலாம்.

என்னைப்பொருத்தவரை இந்த உலகம் , இந்த படைப்பு இல்லாத காலமே கிடையாது.
இங்கே,இப்போ, எனக்கு நடக்கிறதெல்லாம் எங்கயோ,எப்பயோ,எவனுக்கோ நடந்ததுதான். இங்கே புதுசா நடக்க ஒரு இழவும் கிடையாது. இதுல சோகம் என்னடான்னா ஒவ்வொருத்தனும், தனக்கு நடக்கிறத இங்கே,இப்போ, தனக்கு மட்டும் முதல் முறையா நடக்கிறதா நினைச்சு கொ(கு)திக்கிறதுதான்.

எகனாமிக்ஸ்ல தி லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யுட்டிலிட்டினு ஒரு விதியிருக்கு. பேரை பார்த்து பயந்துராதிங்க. வலிக்காம விளக்கறேன். பத்து லட்டிருக்கு. முதல் லட்டு சாப்பிட்டப்ப கிடைச்ச திருப்தி அடுத்தடுத்த லட்டை சாப்பிட குறைஞ்சிக்கிட்டே வருதுல்ல அதான் இந்த விதியோட சாராம்சம்.

ஒரே வாழ்க்கைய, பலமுறை வாழறப்ப உணர்வுகள் மரத்து போகனும்.” தாளி .. நான் பார்க்காததா”ன்னு உதறி தள்ளனும். ஆனால் மனுஷனால முடியறதில்லை. இதுக்கு காரணம் என்னடான்னா அவன் ஈகோ. இந்த படைப்புக்கு தன்னை மையமா நினைச்சுக்கிற முட்டாள் தனம்.

இன்டிவீஜுவல் மைண்ட், யூனிவர்சல் மைண்டுனு ரெண்டிருக்கு. (ரெண்டும் தனி தனி உருப்படினு நினைச்சுராதிங்க. ஒரே மூளையோட இரண்டு நிலைதான் இது)

யூனிவர்சல் மைண்டுன்னா அதுல ஈகோ இருக்காது. தன்னை இந்த படைப்புல இருந்து வேறுபடுத்தி பார்க்க தெரியாது . தனக்கும் இந்த படைப்புல உள்ள ஒவ்வொரு ஜீவராசி,புல் பூண்டுக்கும் நடந்தது, நடக்கிறது,நடக்க போறது எல்லாமே தெரியும்.

ஒவ்வொரு குழந்தையும் யூனிவர்சல் மைண்டோடதான் இந்த பூமிக்கு வருது .ஆனால் பெற்றோர், உற்றார் ,உறவினர், ஆசிரியர் எல்லாம் சேர்ந்து அந்த மைண்ட்ல ஈகோவை இஞ்செக்ட் பண்றாங்க. அது மெல்ல தன்னை இந்த படைப்புல இருந்து வேறுபடுத்தி பார்க்க கத்துக்குது. இந்த படைப்புக்கு தன்னையே மையமா நினைச்சு மயங்க ஆரம்பிக்குது. உடனே அதனோட யூனிவர்சல் மைண்ட் இன்டிவீஜுவல் மைண்டா மாறிடுது.

அந்த யூனிவர்சல் மைண்டுக்கு தெரியும் . எத்தனை ராமர்கள் வந்தார்கள். எத்தனை முறை சீதையை ராவணன் சிறை பிடித்தான். எத்தனை முறை ராம ராவண யுத்தம் நடந்ததுன்னு அந்த யூனிவர்சல் மைண்டுக்கு தெரியும்.

ஈகோ இஞ்செக்ட் ஆய்ட்ட இன்டிவீஜுவல் மைண்டுக்கு இதெல்லாம் பை.தனமா இருக்கலாம். அது சகஜம்.

நாம உண்மைன்னு எதை நினைக்கிறோமோ அது உண்மை கிடையாது. கிராமத்து கவிஞனின் கவிதையை உதவாக்கரை உதவி ஆசிரியன் எடிட் பண்ண மாதிரி நம்ப எண்ணத்தை ஈகோ எடிட் பண்ணிருது.அதனாலதான் டீட்டெயில்ஸ் மிஸ் ஆகுது.

ஆக ஒரு ராமன் மட்டுமில்லே கணக்கற்ற ராமர்கள் பிறந்திருக்காங்க. வாழ்ந்திருக்காங்க. அவிக எண்ண அலைகள், பேச்சுக்கள் , சோகப் பெருமூச்சுகள் எல்லாமே எல்லாமே இந்த விசுவத்துக்கப்பால் போக முடியாம ஏதோ ஒரு சூட்சும வடிவத்துல அண்டை வெளில சுத்தி வந்துக்கிட்டே இருக்கு.

இதையே ராவணன் விஷயத்திலயும் பொருத்திப்பாருங்க. ட்யூன் பண்ணப்பட்ட விதத்தை பொருத்து டிவில சேனல்கள் தெரியறாப்ல உங்க மைண்ட் ட்யூனிங்கிற்கு ஏற்ற மாதிரி மேற்படி எண்ண அலைகள், பேச்சுக்கள் , சோகப் பெருமூச்சுகள் எல்லாமே எல்லாமே உங்க மூளைகளோட ட்யூனிங்கிற்கு ஏத்தாப்ல வந்தடையுது.

ஒரொரு வீட்ல காலைல சன் டிவிய வச்சு விட்டுட்டாங்கன்னா நள்ளிரவு வரை அந்த ஒரே சேனல் ஓடிக்கிட்டே கிடக்கும். இதுவாச்சும் பரவால்ல.

கேபிள் கனெக்சன் இல்லாத டிவி மாதிரி வச்சிருக்கிற நம்ம மூளைய நாம ட்யூனிங்கே பண்ணாம ஓட விட்டிருக்கோம். அந்த கால டிவி மாதிரி தப்பி தவறி ஒலியும் ஒளியும் வந்தாலும் ஒலி வந்தா ஒளி வர்ரதில்லை, ஒளி வந்தா ஒலி வர்ரதில்லை. கொஞ்சம் முயற்சிபண்ணா கேபிள் கனெக்சன் வாங்கலாம் .

இதே மூளைய செமர்த்தியா ட்யூன் பண்ணலாம்.புதுசு புதுசா சேனல்ஸ் பார்க்கலாம். ட்யூன்பண்ண ரிமோட் வேணமேங்கறிங்களா உங்க மைண்ட் வாய்ஸ் ரிகக்னிஷன் வசதி கொண்ட டிவிங்கோ.

நீங்க சொம்மா “ராம்””ராம்””ராம்” னு ஜெபிச்சிக்கிட்டிருந்தா போதும். படக்குனு சேனல் தெரிய ஆரம்பிச்சுரும். ஆரம்பத்துல இதை உங்க பக்கத்துல இருக்கிறவர் பார்க்கமுடியாம இருக்கலாம். ஒரு நாளில்லே ஒரு நாள் அவருக்கும் தெரிய ஆரம்பிச்சுரும்.

அன்னையின் (அரவிந்தாஸ்ரம அன்னை இல்லிங்கோ) சதநாமாவளியில் ஒரு நாமம் வருகிறது.
*பஞ்ச தசாக்ஷர்யை ஸ்வாஹா!
ப‌ஞ்ச(5) தசா(10) 5X10=50 அக்ஷரம் என்றால் எழுத்து. அதாவது 50 எழுத்துக்களாக உள்ளவளே என்பது இதன் பொருள்.

சமஸ்கிருதத்தில் உயிர்+மெய் எழுத்துக்கள் 50 தான். அதாவது 50 எழுத்துக்களுமே அம்மனின் வடிவம்தான்.

மேற்படி 50 எழுத்துக்களுடன் “ம்” சேரும்போது அது பீஜமாகிறது. தேவதைகளை தியானிக்கும் போது அவர்களின் பெயர் போன் நெம்பர் மாதிரியும், பெயரின் முதல் எழுத்தோடு “ம்” சேர்ந்து ஒலிக்கும் போது அது எஸ்.டி.டி கோட் போல‌வும் வேலை செய்கின்ற‌ன‌. (உ.ம்) ச‌ர‌ஸ்வ‌தி /இதில் முத‌ல் எழுத்து ச‌/இதோடு “ம்” சேரும்போது அது ச‌ம் எனும் ச‌ர‌ஸ்வ‌தி பீஜ‌மாகிற‌து.

ம‌ற்ற‌ தேவ‌தைக‌ளின் பெய‌ர்க‌ள் வேறாக‌வும், பீஜாக்ஷ‌ர‌ங்க‌ள் வேறாக‌வும் இருக்கும். ஆனால் ராம‌னை பொருத்த‌வ‌ரைஅவ‌ர் பெய‌ரே பீஜாக்ஷ‌ர‌மாக‌ இருக்கிற‌து.(ராம்)

எழுத்தோடு”ம்” சேரும்போது என்ன‌ ந‌ட‌க்கிறது?

வாயும்,ஆச‌ன‌மும் ஒரே குழாயின் ஆர‌ம்ப‌ம் ம‌ற்றும் முடிவாக‌ உள்ள‌ன‌. ஆச‌ன‌த்துக்கு ச‌ற்று மேல் பாக‌த்தில் மூலாதார‌ ச‌க்க‌ர‌ம் இருக்கிற‌து. “ம்” என்று உச்ச‌ரிக்கும் போது குழாயின் ஆர‌ம்ப‌மான‌ வாய் மூடுகிற‌து,இந்த வினைக்கு எதிர்வினை அந்த‌ குழாயின் முடிவான‌ ஆச‌ன‌ ப‌குதியில் நிக‌ழ்கிற‌து. அந்த‌ செய‌லின் விளைவாக‌ ஏற்ப‌டும் ஆழ்ந்த அதிர்வுக‌ள் மூலாதார‌ ச‌க்க‌ர‌த்தை அடைகின்ற‌ன‌.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் ந‌க‌ரும‌ல்லவா? அது போல் மூலாதார சக்கரத்தில் பாம்பு வ‌டிவ‌த்தில் உற‌க்க‌ நிலையில் உள்ள‌தாய் யோக‌ நூல்க‌ள் குறிப்பிடும் குண்டலி எ யோக‌ ச‌க்தியில் அசைவுகள் ஏற்படும். ஜெபத்தை தொடர தொடர மேல் நோக்கி நகர ஆரம்பிக்குது.

குண்ட‌லி மேல் நோக்கி நகர ஆரம்பிதால் என்ன‌ ந‌ட‌க்கும்?

இங்கு குறிப்பிடுவன யாவும் என் அனுபவங்களே..இப்போது இவற்றை மறுபடி நடத்திக் காட்ட முடியாதுதான். ஆனால் ஏற்கெனவே நடந்தவற்றை நிரூபிக்க முடியும்/ தற்போதைய நிலை என்னவென்றால் அஷ்டாங்க யோகங்களில் மிக முக்கியமான ………………………..( ஸ்வாமி இந்த கோடிட்ட இடத்தை நீங்க தேன் நிரப்பனும் – விடுபட்டு மிக சாதாரணனாகி ஏதோ பழைய ” நெனப்புல” என்னெல்லாமோ அள்ளிவிட்டுக்கிட்டிருக்கேன்.

விரைவில் தெய்வத்தின் அருளால் என்னை சுட்டத் தங்கமாக்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

மூலாதாரத்தை விட்டு குண்டலி நகர்ந்தால்

சுய‌ ந‌ல‌ம் எரிந்து போகும். ப‌ஞ்ச‌ பூத‌ங்க‌ளுக்கு நாம் க‌ட்டுப் ப‌ட்டிருப்ப‌து காலாவ‌தியாகி அவை ந‌ம‌க்கு க‌ட்டுப்ப‌ட்டிருக்கும்.

குண்ட‌லி ஸ்வாதிஷ்டான‌த்தை தொட்டால்:
செக்ஸ் மீது க‌ட்டுப்பாடு ஏற்ப‌டும். நாமாக‌ போதும் என்று நினைத்தால‌ன்றி வீரிய‌ம் ந‌ழுவாது. உடலுறவுகளுக்கிடையில் நீண்ட இடைவெளி ஏற்படும்.

குண்ட‌லி ம‌ணிபூர‌க‌த்தை அடைந்தால்:
எல்லையில்லாத‌ ச‌ஞ்ச‌ல‌ம் ஏற்ப‌டும். பந்தாடும்.
அணாஹ‌த‌ ச‌க்க‌ர‌த்தை அடைந்தால்:
அவ‌ர் இவ‌ர் என்ற‌ வேறுபாடு ம‌றைந்து எல்லோர் மீதும் நிப‌ந்த‌னைய‌ற்ற‌ அன்பு ஏற்ப‌டும்.

விஸுத்தி:
வாக் ப‌லித‌ம் ஏற்ப‌டும். பேச்சில் காந்த‌ம் வ‌ரும்.அனைவ‌ரையும் க‌வ‌ரும். பேச்சுக்கு எல்லோரும் கீழ்ப‌டிவ‌ர்.

ஆக்னா:

பேச்சுக்கு அவ‌சிய‌மின்றி வெறும் பார்வையாலேயே ந‌ம் ம‌ன‌தில் உள்ள‌ எண்ண‌ங்க‌ளை ஆணையாக்கி எதிராளியை கீழ்ப‌டிய‌ வைக்க‌லாம்.

ச‌ஹ‌ஸ்ரார‌ம்:
இறைவ‌னுட‌ன் இர‌ண்ட‌ற‌ க‌ல‌க்கலாம்.

(கடைசி ஐட்டம் மட்டும் இன்னும் அனுபவமாகலிங்கண்ணா . இடையில் தான் மேற்சொன்ன தடை-)

மேற்சொன்ன‌ முன்னேற்ற‌த்திற்கு துணை நின்ற‌து ராம‌ நாம‌ம் ஒன்றே என்ப‌தில் என‌க்கு ச‌ந்தேக‌மில்லை. அன்றைய உன்னத நிலையில் இன்று என் மனமில்லாததால் சொல்லவந்ததை முழுதாக சொல்லவில்லையோ என்ற மனக்குறை இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் சம் திங் ஈஸ் பெட்டர் தேன் நத்திங் இல்லையா?

Advertisements

20 thoughts on “குண்டலி விழித்தால்

  டவுசர் பாண்டி said:
  March 27, 2011 at 5:06 am

  இன்னா நைனா நான் ஓம்னு சொல்லிக்கினு கீழ சூட்ட கெளப்பிகினு இருந்தேன். நீ ராம்னு சொல்ற. நீ ராம் நா ஓம் எப்புடி செட்டாகுதுன்னு பாரு. பரவல்ல மாமு. எனக்கு ஓம்குற சவுண்டு ரத்தத்துல மிக்சாயிட்டுபா. எப்டின்னு கேளேன். காலங்காத்தால எந்திசிக்கினு சம்திங்கெல்லாம் முடிச்சிக்கினு ரெண்டு காதையும் லைட்டா கொஞ்சம் கேப் வுட்டு மூடிக்கினு இருந்தா ஓ…….ன்னு காத்து சவுண்டு கேக்கும்பா. அத கொஞ்ச நேரம் கண்ண மூடி கேட்டுக்கினு இருப்பேன். பொறவு கைய எடுத்துக்கினு அந்த சவுண்டு என்னோட பாடிக்குள்ள கேக்குரமாரி பீல் பண்ணிக்கினு தூங்காம தூங்கிக்கினு இருப்பேன்பா. சரி அதெல்லாம் இருக்கட்டும். சுக்லம்னு சொல்லுவாங்கல்லா அந்த மேட்டர கனவுலயும் நெனவுளையும், இரவுளையும், பகல்லயும் வெளியேறலநா ஏதும் வில்லங்கம் வருமா மாமு. நமக்கு சுக்கிரன் வேற நீசமா பயமாகீதுபா. அந்த மேட்டர அதாம்பா அந்த சுக்கிலத்த எப்புடி மேல கொண்டு போறது மாமு. ஏதாவது ஐடியா குடேன். மிந்தில்லாம் எனக்கு தன் கையே தனக்குதவிங்குற பழமொழி ரொம்ப புடிச்சிருந்ததுப்பா. இப்ப ரெண்டு வருஷமாதேன் என்னோட கை சாப்புடவும், கழுவவும்தான் (சாப்பிட்ட தட்டதாம்பா) யூஸ் ஆகுது. என்னமோ நடக்குதுப்பா. சரி நைனா, சாதக ரீதியா குண்டலினி பவரு கிண்ணுனு இருக்குறத கண்டுபிக்க எது ஐடியா உண்டா மாமு?

   S Murugesan said:
   March 27, 2011 at 5:51 am

   வாங்க டவுசர்,

   //இன்னா நைனா நான் ஓம்னு சொல்லிக்கினு கீழ சூட்ட கெளப்பிகினு இருந்தேன். நீ ராம்னு சொல்ற. நீ ராம் நா ஓம் எப்புடி செட்டாகுதுன்னு பாரு. பரவல்ல மாமு.//

   அல்லா எழுத்தும் ஆத்தாதானு சொல்ட்டேனே தலை ( பஞ்ச தசாட்சர்யை ஸ்வாஹா) . ஆனால் ஒன்னுமா ஓம்ங்கற பிரணவம் நாசகாரி , ஹ்ரீம்ங்கற மாயாபீஜம் தான் பெஸ்ட் சாய்ஸுனு கேள்விப்பட்டிருக்கேன். ஜோதிட உலகத்துல மட்டுமில்லை ஆன்மீகத்துலயும் அவாள் நம்மாளுங்க வளராம இருக்க இப்படி ஒரு ஸ்கெட்ச் பண்ணி வச்சிருக்கிறதா கேள்வி.

   என் அனலைஸ் என்னன்னா நாம நம்மை நம்மோட ஈகோவா தான் உணர்ரோம். ஓம் என்ற பிரணவம் அதை அழிச்சு ஈகோவோட அழுத்தத்துல ஏறக்குறைய செத்துக்கிடக்கிற ஆன்மாவை உயிர்ப்பிக்குது.

   நான் கூட நம்ம ஜாதகத்துல சூரிய ,சந்திரன் பக்கத்து பக்கத்து ஆத்துல இருக்காய்ங்க இது சிவசக்தியொகம்னு பஞ்சாட்சரிமந்திரத்தை பிரணவத்தோட (ஓம்) ஜெபிச்சிட்டிருந்தேன். அந்த பீரியட்ல வாங்கின பல்பு இருக்கே.. யப்பா………..

   நம்ம ஈகோ நாயடி பேயடி வாங்கி இருக்கிற இடமே தெரியாம போயிருச்சு ( இந்த அனுபவத்தை வச்சுத்தேன் சொல்றேன்)

   //எனக்கு ஓம்குற சவுண்டு ரத்தத்துல மிக்சாயிட்டுபா. எப்டின்னு கேளேன். காலங்காத்தால எந்திசிக்கினு சம்திங்கெல்லாம் முடிச்சிக்கினு ரெண்டு காதையும் லைட்டா கொஞ்சம் கேப் வுட்டு மூடிக்கினு இருந்தா ஓ…….ன்னு காத்து சவுண்டு கேக்கும்பா. அத கொஞ்ச நேரம் கண்ண மூடி கேட்டுக்கினு இருப்பேன். பொறவு கைய எடுத்துக்கினு அந்த சவுண்டு என்னோட பாடிக்குள்ள கேக்குரமாரி பீல் பண்ணிக்கினு தூங்காம தூங்கிக்கினு இருப்பேன்பா.//

   பாஸ்! கை பம்புல செம்பு தண்ணி ஊத்திட்டு அடிப்பாய்ங்களே அந்த மாதிரி தான் இது ஏற்கெனவே ஒலிச்சிட்டிருக்கிற ஓங்காரத்தை நினைவுப்படுத்திக்கத்தான் இந்த ட்ரிக் எல்லாம். அது தானா ஒலிச்சிட்டே இருக்கும் பாஸ். நாம கேட்டாலும், கேட்காட்டியும்.

   நம்ம சிந்தனையோட மையம் நாமா இருக்கிற வரை சிந்தனைகள் பூனமல்லி ஹைவேல வாகன ஊர்வலம் மாதிரி தொடர்ந்துக்கிட்டே இருக்கும். சிந்தனையோட ஃபோக்கஸ் டைவர்ட் ஆயிட்டா சிந்தனை குறையும். ரெண்டு “தாட்”டுக்கு மத்தியில வர்ர கேப்பை ஸ்பாட் பண்ண வசதியா இருக்கும். இதைத்தான் தியானம்னு ஓஷோ சொல்றாரு.

   //சரி அதெல்லாம் இருக்கட்டும். சுக்லம்னு சொல்லுவாங்கல்லா அந்த மேட்டர கனவுலயும் நெனவுளையும், இரவுளையும், பகல்லயும் வெளியேறலநா ஏதும் வில்லங்கம் வருமா மாமு.//

   இது உடலை பொருத்த விஷயம். உடலுக்கும் ஆன்மீக சாதனைக்கும் உள்ள தொடர்பு என்னன்னா ஒரு சுகாசனம், ஒரு பத்மாசனம் போட்டு உட்கார்ர ரேஞ்சுக்கு பாடி கோ ஆப்பரேட் பண்ணா போதும். அந்த ரேஞ்சும் இல்லின்னா சவாசனம் பெஸ்ட் சாய்ஸ்.

   மத்தபடி பிரம்மச்சரியத்தால ஞானம் வராது. ஞானத்தால பிரம்மச்சரியம் கை கூடலாம் .

   //நமக்கு சுக்கிரன் வேற நீசமா பயமாகீதுபா.//

   தீர்ந்து போற நிலையில இருக்கிற பேட்டரில கடைசி பாய்ண்டு படக்குனு எப்படி தீர்ந்து போயிருதோ அப்படி ஒரு நிலை சுக்கிரன் நீசம் கேஸ்ல நடக்கும். இவிக மேட்டர்ல அதீத ஆர்வம் , ஓவர் எக்ஸ்ப்ளாய்டேஷன் இருக்கும். இதெல்லாம் உடலியல் விவகாரங்கள். இதையும் ரெம்ப எளிமையா இயற்கையோட இயைந்து வாழ்ந்து ரெக்கூப் பண்ணிக்கமுடியும். இதுக்கும் ஆன்மீகத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

   பிரம்மச்சரியம் இத்யாதி எல்லாம் அவாளோட லாஜிக்கல் சிந்தனைகள். இக்னோர் இட். இன்னம் சொல்லப்போனா விழிப்புணர்வுடன் கூடிய செக்ஸ், அ செக்ஸுக்கு பின்னான வெறுமை ஆன்மீகத்தின் பால் உந்தித்தள்ளும்.

   //அந்த மேட்டர அதாம்பா அந்த சுக்கிலத்த எப்புடி மேல கொண்டு போறது மாமு. ஏதாவது ஐடியா
   குடேன். //

   பாஸ்,, இது அங்கன தேர்தல் நேரம். நீங்க லோக்கல் லீடர் தலைவர் பிரச்சாரத்துக்கு வரேன்னுட்டார். உங்க வேலை என்ன? அதுக்குண்டான ஏற்பாட்டை செய்யனும். நீங்க பண்ற அலப்பறை தலைவர் காதுக்கு போயிருச்சுனு வைங்க அவரோட வாகனம் ஆட்டோமேடிக்கா ஸ்பாட்டுக்கு வந்துரும். அவர் ஆட்டோமேட்டிக்கா மேடையேறிடுவார்.

   நீங்க ஆயிரம் தான் ஹெலிபேட், பாரிகேட், சிகப்பு கம்பளம்லாம் போட்டு வச்சிருந்தாலும் கடேசி நிமிசத்துல எல்லாமே எக்குத்தப்பா போயிரும்.

   மேலும் சுக்கிலங்கறது ஸ்தூலமான மேட்டர். அதை உந்தி தள்றதெல்லாம் அன்சைன்டிஃபிக். என்னைக்கேட்டா இதை பத்தியெல்லாம் ரோசிக்கிறதே சாதனைக்கு தடை ஆயிரும். நம்மை வறுத்துவது பாவமல்ல. பாவம் குறித்த நினைவு.

   அப்படி சுக்கிலம் மேனோக்கி பாஞ்சாதான் ஞானம்னா உங்க சாதனை சரியான பாதையில போற பட்சத்துல பிரம்மச்சரியம் இத்யாதி எல்லாம் ஆட்டோமேட்டிக்கா நடக்கும். டோன்ட் ஒர்ரி.

   பிராணயாமம் என்பது நாம் ஸ்தூலமா, மேனிப்புலேட்டடா பண்றதில்லை. தியானத்துல ஆழ செல்லும்போது உங்க மூச்சே பிராணயாமமா மாறனும். அதான் நல்லது.

   மழைக்கு முன்னாடி இயற்கையில ஒரு சில சத்தங்கள் வரும். இந்த ரித்தம்ல மந்திரங்களை பிரிப்பேர் பண்ணிக்கிட்டு அந்த சத்தங்களை எழுப்பினா மழை வரும்னு ஒரு கூட்டம் நம்பிட்டாய்ங்க. அவிகளோட அஷ்ட தெலிவிதேன் பிரம்மச்சரியம்,பிராணயாமம்லாம்.

   //மிந்தில்லாம் எனக்கு தன் கையே தனக்குதவிங்குற பழமொழி ரொம்ப புடிச்சிருந்ததுப்பா. இப்ப ரெண்டு வருஷமாதேன் என்னோட கை சாப்புடவும், கழுவவும்தான் (சாப்பிட்ட தட்டதாம்பா) யூஸ் ஆகுது. //
   இந்த தன்னிச்சை மாற்றத்தை தேன் நான் கடந்த பாராக்களில் மாய்ந்து மாய்ந்து சொன்னேன்.

   //என்னமோ நடக்குதுப்பா. //
   இதைத்தான் இதைத்தான் உங்க கிட்டே எதிர்பார்த்தேன். அதையெல்லாம் என்ன ஏதுனு விஜாரிக்காம காட்டடி அடிங்க . வெரி குட் கீப் இட் அப்.

   //சரி நைனா, சாதக ரீதியா குண்டலினி பவரு கிண்ணுனு இருக்குறத கண்டுபிக்க எது ஐடியா உண்டா மாமு?//

   குண்டலி பயணத்துக்கு ஒரு ரூட் மேப்பே போட்டிருக்கேனே. குண்டலி சைதன்யமாதலின் முதல் அடையாளம் பூமி தொடர்பான பொருட்கள் மீதான பிணைப்பு தளர்ந்து பொயிரும். அப்பாறம் மெல்ல மெல்ல அவற்றின் மீது ஒரு கமாண்ட் வரும்.

  இராச.புரட்சிமணி said:
  March 27, 2011 at 5:43 am

  பாசு…அப்ப சீக்கிரம் கடவுள் தன்மையை அடைவீங்க போல…வாழ்த்துக்கள்.

  உங்க பயணதில ஒளி ஏதேனும் தென்பட்டதா?

   S Murugesan said:
   March 27, 2011 at 8:46 am

   புரட்சிமணி,
   அதெல்லாம் போன வருசத்து மழை மாதிரி. அதை நம்பி இப்ப விதைக்கமுடியுமா பாஸ்

  இராச.புரட்சிமணி said:
  March 27, 2011 at 6:30 am

  பாசு இது சம்பந்தமா இன்னைக்கு கொஞ்சம் கிறுக்கி இருக்கேன், நேரம் ஒரு நிமிடம் முடிந்தால் இத பாருங்க.
  http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/

   S Murugesan said:
   March 27, 2011 at 7:15 am

   புரட்சி மணி அவர்களே,
   பதிவை பார்த்தேன். எல்லாம் ஓகே ரெண்டுத்துக்கும் சுக்கிலம் தேவைங்கறிங்களே..இங்கே நான் முரண்படறேன்.

   டவுசருக்கு நான் கொடுத்த பதிலை ஒரு ஒட்டு ஓட்டிப்பாருங்க.

   உங்க கருத்தை அறிய ஆவல்

    இராச.புரட்சிமணி said:
    March 27, 2011 at 11:28 am

    வணக்கம் பாசு, மேலே சொன்னத படித்தேன்.
    சிற்றின்ப பேரின்ப இணைப்புக்காகத்தன் நான் சுக்கிலத்தை பற்றி எழுதினேன்.
    மற்றபடி உடலுக்கு எப்படி இரத்தம் இன்றியமையாததோ அதேபோல் சுக்கிலமும் இன்றியமையாதது.

    இன்றியமையாத ஒன்றை தேவை என்று கூறுவது ஒருவிதத்தில் முட்டாள் தனமே. நான் பயன் படுத்திய காரணம் ஒரு “போதைக்காக”.

    நாம் தின்னும் ஒவ்வொரு உருண்டை சோறும் இரத்தமாகவும், சுக்கிலமாகவும், கழிவாகவும் பிரிகிறது.
    நாம் வேண்டும் என்றாலும் வேண்டாம் என்றாலும் அது நம்மை விட்டு போக போவது இல்லை.
    ஆதலால் அது தேவை இல்லை என்று கூறுவதும் சரியல்ல. அதைப்பற்றி கவலைப்பட தேவை இல்லை என்று சொல்லலாம்.

    நீங்கள் சொல்வது போல ஞானத்திற்கும் சுக்கிலத்திற்கும் தொடர்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் பேரின்பத்திற்க்கும் அதற்கும் கண்டிப்பாக தொடர்பு உண்டு என்றே எனக்கு தோன்றுகிறது . இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது “ஞானம் வேறு பேரின்பம் வேறு”.

    //////மேலும் சுக்கிலங்கறது ஸ்தூலமான மேட்டர். அதை உந்தி தள்றதெல்லாம் அன்சைன்டிஃபிக்/////
    இங்கே நான் முற்றிலும் வேறுபடுகின்றேன்.
    பெரும்பாலான சாதனைகளில் சுக்கிலம் மேல் நோக்கியே பாய்கிறது.( பாசு சாதனை என்பதே அறிவியல் ரீதியாக சுக்கிலத்தை மேல் நோக்கி தல்றதுக்கு தான் என்று நினைக்கின்றேன் ). குண்டலியின் பிரதானமே சுக்கிலம் தானே. நீங்கள் சொல்லும் ஒவ்வொரு நிலையிலும் அங்கே சுக்கிலம் பாய்ந்து வேறு சக்தியாக மாறியே செயல்படுகிறது.(சாதனை செய்யும் பொழுது முதுகெலும்பு அல்லது முதுகு தானாக நிமிர்வதை கவனித்ததுண்டா பாசு? அது எதுக்கு?)

    நீங்கள் சுக்கிலத்தை மேல் நோக்கி தள்ள வேண்டும் என்ற தனி முயற்சியே தேவை இல்லை, நீங்கள் தியானம் செய்யும் பொழுது, சுக்கிலம் தானாக அந்த இடத்தை நோக்கி பாயும்(நாளடைவில்). இங்கே கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் சுக்கிலத்திற்கு நாம் தனியாக முக்கியத்துவம் தர தேவை இல்லை ஏன் எனில் சாதனை செய்யும் பொழுது அது தானாக நிகழும்.(உடற்பயிற்சி செய்யும் பொழுது இரத்தம் பாய்வது போல).

    ஆக ரத்தத்திற்கும் ஞானத்திற்கும் என்ன தொடர்பு உண்டோ அல்லது இல்லையோ “அதே தொடர்பு” சுக்கிலத்திற்க்கும் ஞானத்திற்கும் உண்டு அல்லது இல்லை.

    ஆனால் பேரின்பத்தை பொறுத்த வரை சுக்கிலம் இன்றியமையாதது(பெரும்பாலான சாதனைகளில். அதன் பங்கு இல்லாத சாதனை இருக்கானு எனக்கு தெரியல) வேணா அத கண்டுக்காம விட்டு விடலாம். அதனால ஒரு இழப்பும் இல்ல.
    நீங்க என்ன பாசு சொல்றிங்க?

    இராச.புரட்சிமணி said:
    March 27, 2011 at 11:46 am

    பாசு உங்களுக்கு விட தெரிஞ்சு இருந்தும் என்ன மேல எழுத வச்சிடீங்கலே பாசு குண்டலி குண்டலினு சொல்றிங்களே அதுக்கும் சுக்கிலத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்குனு நினைக்கிறிங்க? ஒருவேள நாதான் குழம்பீட்னா?

    S Murugesan said:
    March 27, 2011 at 11:49 am

    புரட்சிமணி ,
    மன்னிக்கனும். தங்கள் கருத்திலிருந்து நான் முற்றிலும் முரண்படுகிறேன். ‘தானா நடக்கிறது நல்லபடியா நடக்கும். நாமா ப்ளான் பண்ணா விஸ்வாமித்திரர் கதை தேன் (லேட்டஸ்டா சொல்லப்போனா நித்யானந்தா) ”

    சுவாசமாற்றம், முதுகெலும்பு நிமிர்தல் மட்டுமில்லே. எந்த ராம் தேவ்பாபாவும் பக்கத்துல இல்லாம நம்ம பாடியே கபாடி விளையாடும். பெரிய பெரிய யோகா குரு எல்லாம் பிச்சை வாங்கனும்.

    மழை வேறு ( ஞானம் – முக்தி) மழைக்கு முன்னாடி வர்ர சத்தங்கள் வேறு ( பிரம்மச்சரியம், அஹிம்சை , கருணை இத்யாதி) வெறுமனே சத்தம் போட்டுட்டு வானம் எத்தீனி தபா அஸ்கு புஸ்குன்னிருது. அப்படித்தேன்.

    இராச.புரட்சிமணி said:
    March 27, 2011 at 1:39 pm

    மன்னிப்புல்லாம் எதற்கு பாசு, உங்கள் கருத்த நீங்க சொன்னிங்க என்னுடையத நான் சொன்னேன் அவ்வளவுதான்.
    தானா நடக்கிறதுக்கும் பிளான் பண்ணி நடக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கா பாஸ்? எனக்கென்னவோ எல்லாமே தானா நடக்கிற மாதிரியே தெரியுது.
    //விஸ்வாமித்திரர் கதை தேன் (லேட்டஸ்டா சொல்லப்போனா நித்யானந்தா/// இது கூட தானா நடந்தது தாணு நினைச்சேன்.
    எது எது தானா நடக்குது எது பிளான் பண்ணி நடக்குதுன்னு எப்படி கண்டுபுடிக்கிறது பாஸ்.

    மழை மேட்டர் சூப்பர்.

    S Murugesan said:
    March 27, 2011 at 4:39 pm

    புரட்சி மணி ,
    எது நடக்கும்போது “தத்.. இவ்ளதானா? நான் என்னென்னமோ கற்பனை பண்ணி வச்சிருந்தேனேன்னு நினைக்கிறிங்களோ அது தானா நடக்குதுனு அர்த்தம். ( கற்பனை பிறக்கிறது உங்க ஈகோவுல – அது இன்டிவியூஜுவல் மைண்ட் – யூனிவர்சல் மைண்டுக்கு தான் தெரியும் புரட்சிமணிக்கு எது நல்லதுன்னு.

    அது உங்களை டர்ராக்கிறத பத்தி யூ.மை.க்கு அக்கறையில்லை

  வினோத் said:
  March 28, 2011 at 4:47 am

  திரு முருகேசன் ,புரட்சி மணி,
  உங்க விவாதத்தில் குறுக்கிட்டதற்கு மன்னிக்கணும்..
  உங்க விவாதத்தயே தனி பதிவா போடுங்க…
  நிறைய பேர் , பதிவை முதலின் படிப்பவங்க பின்னால் கமேன்டில் நடக்கும்
  கருத்துள்ள விவாதங்களை தவற விட்டுற்றாங்க…

  ======
  வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலையில், காயகற்ப பயிற்சி இருக்கு அதை
  முயற்சி பண்னி பாருங்க… யோக சாதனையின் ஆரம்பததில் இது பயனுள்ளதா இருக்கும்.
  சித்தர்கள் இதை கொண்டு தான் பல நூற்றாண்டு வாழ்ந்தார்கள்னு சொல்றாங்க.

  சுக்கிலத்தை மேலெற்றி உடல் முழுவதுவம் பரவவிட வழி இருக்கு இதில்.
  மேலும் பல தியான பயிற்சிகள் இருக்கு. நான் ஆரம்பித்து பாதியில் விட்டு விட்டு பன்றேன்.

   S Murugesan said:
   March 28, 2011 at 5:38 am

   வாங்க வினோத்,
   தனிப்பதிவா போடறதை நீங்களும் செய்யலாம்ல. சனம் பணம் அனுப்பி 20 -30 நாள் ஆகியும் பலன் அனுப்ப முடியாம முழி பிதுங்கிக்கிட்டிருக்கம்ல.

   நாளைக்கு உங்களுக்கு ஒரு அவசியம் வந்தா உங்க ப்ளாக்ல நாங்க பதிவு போடமாட்டமா பாஸ்!

   S Murugesan said:
   March 28, 2011 at 5:38 am

   வாங்க வினோத்,
   தனிப்பதிவா போடறதை நீங்களும் செய்யலாம்ல. சனம் பணம் அனுப்பி 20 -30 நாள் ஆகியும் பலன் அனுப்ப முடியாம முழி பிதுங்கிக்கிட்டிருக்கம்ல.

   நாளைக்கு உங்களுக்கு ஒரு அவசியம் வந்தா உங்க ப்ளாக்ல நாங்க பதிவு போடமாட்டமா பாஸ்!

  வினோத் said:
  March 28, 2011 at 7:35 am

  நீங்க சொன்ன சரி…

  kandhan said:
  April 7, 2011 at 3:14 pm

  ஒம் அகத்தை அழிக்கும். சம்சாரிக்கு ஒத்துவராது. சரி.

  ராம் தைரியம் கொடுக்குமா? ஹ்ரீம் என்ன செய்யும்?

   S Murugesan said:
   April 7, 2011 at 5:14 pm

   கந்தன்..!
   ராம் என்ன கொடுக்கும்னு என் அனுபவத்தை வச்சு சொல்றேன். பூமி,பூமி தொடர்பான பொருட்கள் மேல கவர்ச்சி ஃபணாலாயிரும்.ஆனால் அதெல்லாம் தானா தேடி வரும் அதெல்லாம் வந்தாலும் போனாலும் ஒன்னுங்கற மன நிலை வந்துரும், செக்ஸ் மேல கட்டுப்பாடு வரும் – சூட்சுமம் புரியும் – எல்லாரையும் அய்யோ பாவம்னு நினைக்கவைக்கும் ( கலைஞ்ர் உட்பட) – வாக்கு வன்மை – வாக் பலிதம் -ஆசுகவி கைவரும் – ஸ்தூலமா எதையுமே செய்யாம ஜஸ்ட் சங்கல்பத்துல காரியத்தை முடிக்கிற கப்பாசிட்டியை தரும்.

   ஹ்ரீம்ங்கறது ஒரு மல்ட்டி பர்ப்பஸ் ப்ராஜக்டு . இதை ஒரு கமெண்ட்ல அடக்கிர முடியாது.தனிப்பதிவே போடனும்

  kandhan said:
  April 7, 2011 at 5:59 pm

  “தனிப்பதிவே போடனும்”— எழதுங்க.

  ராம்‍ : அஜபா ஜபம் தானெ? இல்ல வாய்விட்டா?

  “சுக்கிலத்தை மேலெற்றி உடல் முழுவதுவம் பரவவிட வழி இருக்கு இதில்.
  மேலும் பல தியான பயிற்சிகள் இருக்கு.”

  காயகல்பம் இதுக்கு நல்ல‌ பயிற்சி. இபிசாலு தந்தரத்ல சொல்லியிருக்கு. Cobra Breath நு சொல்றது.

   kandhan said:
   April 7, 2011 at 6:07 pm

   உச்சரிப்பு விவரம் அனுமார் நூல்ல தந்துடீங்க.

   S Murugesan said:
   April 8, 2011 at 2:43 am

   கந்தன்,
   ஜெப வழியில மனசை செலுத்த அது ஆட்டோ மெட்டிக்கா அஜபை வழிக்கு டைவர்ட் ஆயிரும் பாஸ்.

   ம் …….என் கிட்டே இருக்கிற சாரி எனக்கு தரப்பட்டதை எல்லாம் வாரி இறைக்கிறேன்ல. அதென்ன கோப்ரா ப்ரீத் ? விவரமா ஒரு பதிவை போட்டா என்னாட்டம் “அரைகுறை”யெல்லாம் மேட்டர தெரிஞ்சுக்குவமில்லியா பாஸ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s