உங்கள் ஆன்மீக குரு :3

Posted on

அண்ணே வணக்கம்ணே !
உங்கள் ஆன்மீக குரு என்ற பதிவை ஆரம்பிச்சு பாதியில விட்டு இடையில ராசிச்சக்கரம் வெர்சஸ் பிறவிச்சக்கரம்னு ஒரு பதிவை போட்டு தொலைச்சேன். இது போதாதுன்னு இன்னைக்கு குண்டலி விழித்தால்னு ஒரு பதிவு வேற.

சிம்மம் அறிவு வழி சிந்தனையை தரும். கடகம் உணர்வு வழி சிந்தனையை தரும். நம்முது கடக லக்னம், சிம்மராசி . லக்ன ராசி நாதர்கள் பரிவர்த்தனம். இதனால நாம ஒரு சேர அறிவு வழி + உணர்வு வழி சிந்தனையில இறங்கி உங்களை குழப்பியடிச்சுர்ராப்ல இருக்கு.

புத்தர் சொன்னாப்ல உண்மை அம்முனையிலும் இல்லை . இம்முனையிலும் இல்லை . மத்தியில இருக்கு. நான் எழுதற மேட்டர் எல்லாம் சொம்மா ஒரு குன்ஸுல எனக்கு ஸ்பார்க் ஆன மேட்டருங்க தான். இதுக்கெல்லாம் ஏதும் ஆத்தன்சிட்டி கிடையாது. நம்ம கிட்ட நிரூபணங்களும் கிடையாது,

என் எழுத்தை ஒரு ஆரம்ப புள்ளியா உபயோகிச்சு தொடர்ந்து சிந்திச்சா புண்ணியம் உண்டு. அதைவிட்டுட்டு

” ஹே நீ டுபுக்கு நீ எழுதறதெல்லாம் டுப்புக்கு”ன்னுட்டாலும் , அல்லது நான் எழுதற விசயங்களை கல்வெட்டா நினைச்சு டர்ரானாலும் நான் பொறுப்பில்லை. நஷ்டம் எனக்கில்லை. எப்படியோ ஆன்மீக குரு பதிவை ஆரம்பிச்சாச்சு அதனால இன்னைக்கு முடிச்சுர்ரன்.

இப்போதைக்கு உங்க குரு ஆரு எந்த ஊருனு தெரிஞ்சிக்க இந்தபதிவை தொடர்ந்து படிங்க. ( ஜாதகப்படி 5, 9 பாவங்கள், அதிபதிகள், அதுல மோஸ்ட்லி இன்ஃப்ளுயன்சபிள் கிரகம் எதுனு கேல்குலேட் பண்ணது ஞா இருக்கா? அதை பொருத்து தான் குரு அமைவாரு)

சனி:
குளியல் – சுத்தம் -சுகாதாரம்லாம் எதிர்பார்க்கமுடியாது -கரிய நிறத்தவர் – குப்பை தொட்டி – ட்ரெய்ன் ஏஜ் பக்கமா கூட டேரா போட்டிருக்கலாம் – மூவர் தேவரை விட காவல் தேவதைகளே சீக்கிரம் அருள் தருவர் என்று உபதேசிக்கலாம் – கெட்ட கெட்ட வார்த்தைகளை ,அசூயை தரும் வார்த்தைகளை பேசலாம். உ.ம் குரு பூஜையல்லாததெல்லாம் -குசு பூஜை .சேரி, தொழிலாளர் காலனியை ஒட்டி வசிக்கலாம். சாதியில் தலித்தாகவும் இருக்கலாம். ஊரின் மேற்கு பகுதியில் இருக்கலாம். படுகிழவராக / நொண்டியாக கூட இருக்கலாம். கு.பட்சம் உருவமாவது கிழவாடி கணக்காய் இருக்கலாம்.

புதன்:
ராதா கிருஷ்ணர்கள், சீதா ராமர்கள், சிவ பார்வதி போன்று தம்பதிகளை உபாசிப்பவராக இருக்கலாம். வைசிய லட்சணங்களுடன் இருப்பார் – உங்கள் பண ஆசையை கொல்ல இன்ன உபதேசத்துக்கு இன்ன கட்டணம் என்று கட்டாய கட்டணம் கூட வசூலிக்கலாம். இவருக்கு ஸ்கின் ப்ராப்ளம் அ அண்ட வியாதி இருக்கலாம் – வாத பிரதிவாதங்களை அனுமதிக்கலாம். புத்தக வாசிப்பை வலியுறுத்தலாம். இவரே எழுத்து,பேச்சில் வல்லவராக இருக்கலாம். ஆணானால் பெண்மையுடனும், பெண்ணானால் ஆண்மை தன்மையுடனும் இருக்கலாம். தோட்டம் ,துரவில் தங்கியிருக்கலாம்.

கேது:
பிற மதத்தை சேர்ந்தவராக இருக்கலாம். பூனைக்கண் இருக்கலாம். யோக வழியை வலியுறுத்துவார். சர்வமத சாரத்தை புகட்டலாம். இவர் உடலில் புண்கள் இருக்கலாம். பாம்பு புற்று அ விஷசர்ப்ப நடமாட்டம் உள்ள இடத்தில் தங்கலாம். மாந்திரிக பத்தத்தியை உபதேசிக்கலாம். காவி அணிந்திருக்கலாம்.புராண இதிகாசங்கள் வேதங்களை விமர்சிக்கலாம். உடலின் மேற்பகுதி கீழ் பகுதியை விட சிறுத்திருக்கலாம்.இவர் பயணம் வளைந்து வளைந்து நடக்கலாம். உடலை தன்னிஷ்டம் போல் வளைப்பவராக இருக்கலாம். போதை பொருள் உட்கொள்ப்வராக இருக்கலாம். கூரையிழந்த வினாயகர் கோவில் ,மசூதி,தர்காவை ஒட்டி தங்கலாம்.

சுக்கிரன்:
பெண்ணாக இருக்கலாம் அ ஸ்த்ரி லட்சணங்கள் கொண்ட ஆண். இசை ,சங்கீதம் ,பாட்டுக்கு முக்கியத்துவம் – தீப தூப வாசனாதி திரவியங்கள் , நைவேத்தியங்களுக்கு முக்கியத்துவம். காமத்தை கடந்தாலன்றி கடவுள் இல்லை என்ற கொள்கை – ஊரின் தென் கிழக்கு பகுதியில் வாசம். இனிப்புகள் வழங்க கூறலாம். இவரே ஏதேனும் இசைக்கருவியை இசைப்பவராகவோ , கானமிசைப்பவராகவோ இருக்கலாம். ஓவியராக இருக்கலாம்.

இன்னைக்கு குண்டலி பத்தி போனசா ஒரு பதிவு போட்டிருக்கேன்னு சொன்னேனே. அதை படிக்க இங்கே அழுத்துங்க.

Advertisements

9 thoughts on “உங்கள் ஆன்மீக குரு :3

  Rampap said:
  March 27, 2011 at 2:34 am

  /நம்முது கடக லக்னம், சிம்மராசி . லக்ன ராசி நாதர்கள் பரிவர்த்தனம். இதனால நாம ஒரு சேர அறிவு வழி + உணர்வு வழி சிந்தனையில இறங்கி உங்களை குழப்பியடிச்சுர்ராப்ல இருக்கு/

  Everybody in Tamil Nadu and Andhra knew about you lagnam and Rasi Boss. It was repeated 2000 times. So, please do not repeat again.

   S Murugesan said:
   March 27, 2011 at 5:11 am

   வாங்க Rampap !
   வயசாவுதே.. அதேன் ரிப்பீட்டு. ரிப்பீட்டட் லைன் வந்தா நீங்க உடுங்க அபீட்டு..

  rajesh said:
  March 27, 2011 at 5:15 am

  எனக்கு குரு விரு விரு விருமாண்டி மாதிரி இருக்கிறார் !!!

   S Murugesan said:
   March 27, 2011 at 8:49 am

   ராஜேஷ்,
   பிச்சைக்காரன் கிட்டே பிச்சையெடுக்கிறது வீண் வேலை. அதைவிட அண்ணாந்து பாருங்க. “வெட்ட வெளியில் கொட்டிக்கிடக்கு”

  இராச.புரட்சிமணி said:
  March 27, 2011 at 5:32 am

  வணக்கம் பாசு,
  எல்லோர்க்கும் கண்டிப்பா குரு அமைவாங்களா? எனக்கு சொல்ற மாதிரி யாரும் அமையலையே…..
  யாரோ ஒருத்தரு சொன்னங்க “நான் வாழ்க்கையில் சநதிக்கும் அனைவருமே ஆசான்”. நான் அந்த கேசுன்னு நின்கைக்க்றேன்….(பாசு உங்கள மாதிரியே கொச்ச தமிழ்ல எழுத வச்சிடிங்கலே…)

   S Murugesan said:
   March 27, 2011 at 8:48 am

   புரட்சிமணி,
   குரு முக்கியமில்லை. கத்துக்கனும்னு நினைக்கிற நெனப்புத்தேன் முக்கியம். ஆரை பார்த்தா அந்த நெனப்பு வருதோ அவருதான் குரு. அந்த நெனப்பு ஆரை பார்த்தா வரணும்னு ஜாதகம் முடிவு பண்ணுது

  டவுசர் பாண்டி said:
  March 27, 2011 at 5:45 am

  நைனா, என்க்கு யாரு குருன்னு எப்புடி கண்டுபுடிக்கிறது. கொஞ்சம் கெல்ப் பண்ணேன்.

  http://img716.imageshack.us/i/tavusarjathakam.jpg/

   S Murugesan said:
   March 27, 2011 at 8:45 am

   பாண்டி,
   கேது காரகம் கொண்ட குரு அமைவாரு.

   வினோத் said:
   March 28, 2011 at 7:25 am

   படம் நல்ல இர்க்கே பாண்டி எப்படி பண்ணினிங்க ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s