ராசிச்சக்கரம் Vs பிறவிச்சக்கரம்

Posted on

ராசி சக்கரத்துல 12 ராசிகளை கவனிச்சிருப்பிக. ஒன்னொன்னுத்துக்கு ஒரொரு சிம்பல் கொடுத்திருப்பாக.( இந்த சிம்பல்ஸை சூட்சும புத்தியோட பார்த்தாலே அந்த ராசிக்காரக சரித்திரத்தையே சொல்லிரலாம்) தங்களோட ராசிகளை தெரிஞ்சுக்கிட்டு கிளி ஜோசியர்கிட்டேருந்து இன்டர் நெட் வரை ராசிபலனை தெரிஞ்சிக்க தவிக்காத ஜன்மமே கிடயாது. இங்கே நான் சொல்லப்போறது ராசிபலனில்லே. பிறப்பின் ரகசியம். மறு பிறவிகளின் இருண்மையை. ஸ்ருஷ்டியின் ரகசியத்தை.

ரிஷிகள் ,மகரிஷிகள் காலத்துல டெலஸ்கோப் இல்லே.விண்வெளி ஓடங்கள் இல்லே. இருந்தும் அண்டை வெளியை அவதானித்து ஒவ்வொரு நட்சத்திர கூட்டத்தையும் ஐடன்டிஃபை பண்ணி “ஓ இந்த நட்சத்திர கூட்டம் குதிரை முகத்துல இருக்கு இந்த க்ரூப்புக்கு அஸ்விணினு பேரை வைப்போம் (அஸ்வினி என்றால் குதிரைனு அர்த்தம்) மொத்த 27 நட்சத்திர கூட்டங்கள் இருக்கு. இப்படியாக படிப்படியாக முன்னேறி கிரக சஞ்சாரங்களால் ஏற்படும் கிரகணம்,அமாவாசை,பவுர்ணமி இத்யாதிய துல்லியமா கணக்கிட்டாங்கன்னா அது அண்டை வெளிய ஆராய்ச்சி பண்ணித்தான்னு நான் நம்பலை.

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு. நமக்குள்ள ஒரு பேரண்டம் இருக்கு. நட்சத்திர கூட்டங்களிருக்கு. கிரகங்கள் இருக்கு. கிரக சஞ்சாரம் இருக்கு. அமாவாசை நடக்குது,பவுர்ணமி நடக்குது. ஈகோ என்பது வலுவுறாத காலம். மக்கள் குழுக்களாய்,குழுவின் நலத்தை மட்டும் நாடி வாழ்ந்த காலம் .எனவேதான் அந்த ரிஷிகள் மகரிஷிகள் தமக்குள் இருந்த பேரண்டத்தை வேறொரு அலைவரிசையில் தரிசித்தே ஜோதிஷ சித்தாந்தங்களை உருவாக்கியிருக்க வேண்டும்.

ராசிச்சக்கரம் என்பது வெறுமனே மக்களை 12 மந்தையா பிரிச்சு பலன் சொல்லத்தான்னு நான் நம்பலை. அதுல சூட்சுமம் இருக்கு. அதை ஊன கண்ணால அகங்காரத்தோட, சுய நலத்தோட பார்த்தா ஒர் ல…வும் புரியாது. ஆனால் அதுல அடங்கியிருக்கு சூட்சுமம். அதை தெரிஞ்சிக்கிட்டா அதனோட நோக்கத்தை புரிஞ்ச்சிக்கிட்டா முக்தி தான். அதுல பரிணாம தத்துவம் அடங்கியிருக்கு. ஆன்மீகத்தின் சாரம் இருக்கு.

ராசிச்சக்கரத்தை பத்தி இத்தனை பில்டப் கொடுத்தாலும் செய்தில வருமே நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல் படினு இந்த பதிவை அந்த கேட்டகிரில வச்சிக்கங்க.

நாடி ஜோசியத்துல உங்க முன் பிறவி,பின் பிறவி பத்தியெல்லாம் வருதுனு பேசிக்கிறாங்க. நான் போன சின்ன காஞ்சிவரத்துல பாவம் என் கிட்டே வசமா மாட்டிக்கிட்டு காசை கூட திருப்பிக்கொடுத்துட்டாக.

என்னை பொருத்தவரை படைப்பு,பிறப்பு, வாழ்க்கையெல்லாத்தயுமே ஒரு மெகா தொடரா உணர்ரேன். இதையெல்லாம் சொல்லி எனக்கு வேட்டியோ இல்லே ஆத்துக்காரிக்கு புடவையோ தானம் கேட்க போறதில்லை. ( சுயலாபமில்லேனு சொல்லவரேன்) இந்த மெகா தொடர் இன்றைய தொடர்கள் மாதிரி டி.ஆர்.பி ரேட்டிங்கை பொறுத்து யு டர்ன் எல்லாம் அடிக்காம நூல் பிடிச்ச மாதிரி போவுது. (அதுவும் கோல்டன் த்ரெட் ).

மேஷம்:
இந்த ராசிக்காரவுக ரொம்பவே சுறுசுறுப்பா இருப்பாக. எதிரி யாரு என்னனு பார்க்கமாட்டாக படக்குனு மோதிருவாங்க. ஒரு ப்ளான் இருக்காது. மளமளனு செயல்பட்டுகிட்டே போவாக ஒரு ஸ்டேஜ்ல திக்குதெரியாம நின்னுருவாக. பணம்,குடும்பம்,பேச்சு,வார்த்தை,சரசம்,சல்லாபம்,ரசனை, தீனி, நொறுக்குதீனி இதுக்கெல்லாம் இவிக லைஃப்ல இடமே இருக்காது. சதா தன்னை பத்தி, தன் முயற்சிகளை பத்தி,தன் முன்னேற்றத்தை பத்தியே சிந்தனை இருக்கும். இந்த சோம்பேறி உலகத்துல சுறுசுறுப்பா துடிப்பா இருந்த ஒரே காரணத்தால எதிரிகளை சம்பாதிச்சு லொள்ளுக்குள்ளாகி நாறியிருப்பாக . இவிக அடுத்த பிறவில ரிஷபராசிலதான் பிறக்க நினைப்பாங்க ஏன்னா………

ரிஷபம்:
இவிகளுக்கு பணம்னா உயிரு. இவிக நட்பு,விரோதம் எல்லாத்துக்கும் பணம்தான் காரணமா இருக்கும். கூடப் பிறந்தவுகளை கூட மறந்து குடும்பம் குடும்பம்னு மாடு மாதிரி உழைப்பாங்க. பேச்சுன்னா வெல்லம். நல்ல ரசனை இருக்கும். தீனின்னா முதல்ல நிப்பாங்க. சமையல் பக்குவம்லாம் மாஞ்சு மாஞ்சு சொல்வாங்க. செக்சுல நிறையவே கிழிக்கனும்னு நினைப்பாங்க ஆனா துரித ஸ்கலிதம் மொக்கையாக்கிரும். இதனால கூட கில்ட்டியால பெண்டாட்டி தாசர்களாயிருவாக. இன்செக்யூரிட்டி ஃபீலிங்ஸ் உண்டு. பயம் இருக்கும்.. லேசான மிரட்டல் இருந்தாலே ஒடச்சி திருப்பிக்குவாங்க. ரிஸ்க் எடுக்கமாட்டாங்க. இவிக வாழ்க்கை செக்கு மாடு மாதிரி சுத்தி சுத்தி வருமே தவிர வட்டத்தை விட்டு வெளியே வரமாட்டாங்க. மாற்றத்தை விரும்பாத ராசி இதான்.

இவிக தான் அடுத்த ஜென்மத்துல மிதுன ராசில பிறப்பாங்க. ஏன்னா மிதுன ராசிக்காரவுக பணவிசயத்துல சூதாட்டத்தனமா இருப்பாங்க. சகோதரர்கள்,பயணங்கள் ,செக்ஸ் இதான் முக்கியத்துவம் வகிக்கும். பேச்சு மாறுவாக. குடும்பத்தை விட்டு ஈசியா பிரிவாக. தேவையிருந்தா மானாவரியா பேசுவாக. தேவையில்லன்னா முத்து உதிருமே தவிர பேச்சு வராது. பயங்கர ரிஸ்க் எல்லாம் ஃபேஸ் பண்ணுவாங்க.

இவிக அடுத்த ஜன்மத்துல கடக ராசில பிறப்பாங்க. ஏன்னா கடக ராசிக்காரங்க தாயையே சுத்தி சுத்தி வருவாக.( அன்போ விரோதமோ எதுவா இருந்தாலும் அம்மாக்கிட்டேதான். பெண்டாட்டிய கூட வேலக்காரிதனமாதான் பார்ப்பாங்க. வீடு வீடுனு வீட்டையே கட்டிக்கிட்டு அழுவாங்க. பிடிவாதமிருக்கும். மாற்றத்தை ஆரம்பத்துல எதிர்த்தாலும் பேஷா செட் ஆயிருவாங்க.

இந்த கடக ராசிக்காரங்கதான் அடுத்த பிறவில சிம்மராசில பிறப்பாங்க. ஏன்னா.. சிம்மராசிக்காரன் வீட்டு வேலைய கூட விட்டுட்டு ஊர் வேலைய செய்வான். வீட்ல இருக்கிறவக “அவனா அவன் தண்டத்தீனி தாண்டவராயன்”னுவாங்க. ஊர்ல இருக்கிறவகளோ அந்த தம்பியா நல்ல ஹெல்பிங்க் நேச்சரும்பாங்க. ஆனால் இவிகளுக்கும் செக்ஸ் மேல தணியாத ஆர்வமிருக்கும். அதே சமயத்துல தாய் மேல நல்ல மரியாதை வச்சிருப்பாங்க. தாய் சொல்லை தட்டாத தனயன்னா அது இவிகதான். கடக ராசில பிறந்து அட்ஜஸ்ட் ஆகியே வாழ்ந்த வாழ்க்கைக்கு கொயட் ஆப்போசிட்டா இந்த பிறவில கலகக்காரர்களா இருப்பாங்க. நம்பி வந்துட்டா உசுரை கூட கொடுத்து காப்பாத்துவாக. ஆனால் உலகம் இவங்களோட தன்னம்பிக்கைய ஆணவமாவும், தான குணத்தை திமிராவும், உதவும் தன்மையை இளிச்ச வாய்த்தனமாவும், பொதுவேலைல இறங்கறத உருப்படாத குணமாவும் ட்ரீட் பண்ணி ரொம்பவே நோகடிப்பாங்க. இவிக மனசுல வாரிசுகள் குறித்த அனேக கனவுகள் இருக்கும். ஆனால் இவிகளுக்கு ஆண்வாரிசு இல்லாம போகலாம். ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணேனு குழந்தை பிறக்கும் . அதுவும் நாமர்தாவா மாறி கவலைய குடுக்கும்

இப்படி நொந்து நூடுல்ஸ் ஆன பார்ட்டிகள்தான் அடுத்த பிறவில அண்டினவனை எல்லாம் எக்ஸ்ப்ளாயிட் பண்ற கன்னிராசில பிறப்பாங்க. கன்னிராசிக்காரவுக தங்களோட மித்ர துரோகத்தை நினைச்சு அடுத்த ஜன்மத்துல நட்புக்கு முக்கியத்துவம் தர்ர துலா ராசில பிறப்பாங்க. துலா ராசில பிறந்து நட்பு,காதல்,மனைவினு சுத்தி சுத்திவந்து நொந்து போனபிறகு அடச்சீ இந்த மென்மையான உணர்வுகளே வேணாம்னு ராசிச்சக்கரத்துல அஷ்டம ராசியான விருச்சிகத்துல பிறப்பாங்க.

விருச்சிக ராசியோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா.. இவங்களை சேட்டிஸ்ஃபை பண்ண கடவுளால கூட முடியாது. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லைம்பாங்களே அப்படி சுற்றத்துல குற்றம் பார்க்கிறதும் தேள் கொட்டற மாதிரி அந்த குற்றங்களை பட்டியல் போடறதுமே இவிக வேலையா இருக்கும். இவிகளுக்கு வாழ்க்கை சூடும் சுவையுமா நகரனும்னா எதிரி இருக்கனும்.ஒரு எதிரி இருக்கிறவரை ரெம்ப சுறு சுறுப்பா இருப்பாய்ங்க. எதிரி ஒழிஞ்சதுக்கப்பாறம் ரெம்ப டீலாயிருவாய்ங்க.லைஃப்ல சொம்மாவே இருக்கமாட்டாய்ங்க. ரிஸ்க் எடுக்கிறது ரஸ்கு சாப்பிடற மாதிரி. இப்படியே உடம்பு,மனசு எல்லாத்தையும் ரணமாக்கிக்குவாய்ங்க. இப்படி வாழ்ந்த ஒரு பார்ட்டி சாகறச்ச என்ன நினைக்கும்? தூத்தெரிக்க.. இதெல்லாம் வேஸ்டுப்பா.. அடுத்த சான்ஸுனு ஒன்னு கிடைச்சா படிப்பு,வேலை,வெட்டி, பதவி, சொத்து ,சுகம்னு செட்டில் ஆயிரனும். உப்பு ஊறுகாய்க்கு உதவாத விவகாரத்துல இறங்கவே கூடாதுனு தான் நினைக்கும் ,

இவிகளுக்கு தனுசு ராசியில பிறக்கறது தான் பெஸ்ட் சாய்ஸா தோணும். எதிரியை நினைச்சே வாழ்க்கைய வீணாக்கினவுக இந்த பிறவில எதிர்காலத்தை நினைச்சே நாசமா போவாய்ங்க. கிடைச்சதை வச்சு அனுபவிக்காம முதலீடு பண்றது, சொத்தாக்கிறது, அதுல வில்லங்கம், சேமிக்கிறது அதுல வில்லங்கம்னு அல்லாடற பார்ட்டி யாருன்னு பார்த்தா அது தனுசு ராசியா தான் இருக்கும்.

இப்படி வாழ்ந்து எதையுமே அனுபவிக்காத பார்ட்டி சாகறச்ச என்ன நினைக்கும்? தத்.. இந்த தொலை நோக்கு ,தொலையாத நோக்கெல்லாம் பிராணத்துக்கு இம்சைய கொடுக்கிற ஐட்டமா இருக்கு அடுத்த ஜென்மத்துல தாளி “கருமத்தை செய் பலனை எதிர்பாராதே” ரேஞ்சுல வாழ்ந்துரனும்னு தான் நினைப்பாய்ங்க.. அவிகளுக்கு பெஸ்ட் சாய்ஸ் மகரம்.

ஏன் உழைக்கிறோம் எதுக்கு உழைக்கிறோம் நம்ம உழைப்பின் பலன் ஆருக்கு போகுதுன்னு கூட தெரியாம உழைக்கிறவுக ஆருனு பார்த்தா மகர ராசிக்காரவுகதான். இவிக லாபத்தையே நோக்கமா கொண்ட கும்பராசியில பிறக்கிறதும் – ஒவ்வொரு வேலையிலயும் லாபத்தை எதிர்பார்த்தே நொந்து நூடுல்ஸ் ஆன பார்ட்டி இருக்கிற அழிக்கறதுக்குனு பிறக்கிற மீன ராசியில பிறக்கறதும் தர்க பூர்வம் மட்டுமில்லை . இட்ஸ் கொய்ட் நேச்சுரல்.

இங்கத்திக்கி பிறவிச்சக்கரம் முடியுதுனு கேள்விப்பட்டிருக்கேன்..

பி.கு:
ஆன்மீக குரு யாரின் அடுத்த பார்ட் நாளைக்கு

Advertisements

37 thoughts on “ராசிச்சக்கரம் Vs பிறவிச்சக்கரம்

  Kalyan said:
  March 25, 2011 at 9:26 pm

  ரொம்ப அருமை திரு.முருகேசன் அவர்களே. எல்லா ராசியையும் ஒரு ரவுண்டு கட்டி அடிச்சி, அதுக்குள்ளே இருக்கும் லிங்க் பற்றியெல்லாம் தெளிவா எழுதி இருக்கீங்க. அருமையான பதிவு. இது ராசிக்கு மட்டும் பொருந்துமா அல்லது லக்கினத்துக்கும் பொருந்துமா? ஒருவர் தன்னை உணர்ந்துகொள்ள ராசியை Base -ஆ எடுத்துக்கணுமா, அல்லது ராசி லக்கினம் ரெண்டையும் கவனிக்கணுமா?

   S Murugesan said:
   March 26, 2011 at 5:48 am

   கல்யாண்,
   லக்னம் உடலை, ராசி மனதை காட்டும். நீங்க உடல் பேச்சை கேட்பவரா? மனம் சொல்வதை கேட்பவரா? அதை பொருத்து பேஸ் பண்ணுங்க. பொதுவா சனம் 30 வரை உடல் சொல்றதை கேப்பாய்ங்க .. அப்பாறம் தேன் மனசு.. சிலர் 80 வயசுலயும் பாடி ரேஞ்சுல நின்னுர்ராய்ங்க.

   உடல் மனம் சேர்ந்துதானே நாம. அதனால ரெண்டையும் பாருங்க. லக்னத்தை முன் நோக்கி நகர்த்தினா கடந்த பிறவில உங்க பாடி நேச்சர் தெரியும் ( விட்டகுறைதொட்ட குறையா அந்த அடையாளம் இன்னம் இருக்கும்)

   ராசியை முன் நோக்கி நகர்த்தினா கடந்த பிறவில உங்க கேரக்டர் தெரியும்.
   ( விட்டகுறைதொட்ட குறையா அந்த அடையாளம் இன்னம் இருக்கும்)

    வினோத் said:
    March 26, 2011 at 7:13 am

    //..உடல் மனம் சேர்ந்துதானே நாம. அதனால ரெண்டையும் பாருங்க. லக்னத்தை முன் நோக்கி நகர்த்தினா கடந்த பிறவில உங்க பாடி நேச்சர் தெரியும் ( விட்டகுறைதொட்ட குறையா அந்த அடையாளம் இன்னம் இருக்கும்)..//
    முன்னோக்கியா இல்லை பின் நோக்கியா ?

    S Murugesan said:
    March 26, 2011 at 9:36 am

    vinothji,
    You can move at both directions . By this you can guess your previous and next births.

  ஆகமக்கடல் said:
  March 26, 2011 at 2:20 am

  வழக்கம்போல் சூப்பர்.ஆனால் இந்த கருப்பு பின்னனியை மாற்றவும்.படிக்க கஷ்டமாக உள்ளது.

   வினோத் said:
   March 26, 2011 at 4:54 am

   கருப்பு பின்னனி இல்லையே….
   கிரே கலர் தான் பின்னனியாக உள்ளது …
   1) உங்க கம்பியூட்டரில் பயர்பாக்ஸ் பயன் படுத்தி பர்க்கவும்.
   2) கேட்ச் கிளீயர் பண்ணி பார்க்கவும்.
   3) வேறு கம்ப்யூட்டர் அல்லது பிரவுசிங்க் செண்டரில் பயன்படுத்தி பார்கவும்.
   உங்கள் கம்ப்யூட்டரின் OS என்னவென்று பார்கவும். நான் XP பயன்படுத்துகிரேன். எனக்கு பிரச்சனை இல்லை. சத்தியப்பட்டல் xpக்கு மாறிக்கொள்ளவும்.( பிரவுசிங்/மெயில் மட்டும்
   பயன்படுதினால் பிரச்சனை இல்லை. வேறு பயன்பாடுகள் இருந்தால் அதற்கும் xp சரிவருமா என சரிபார்த்து பின் மாறவும்.)
   4) xp மாற விரும்பவில்லை எனில் உங்கள் கம்ப்யூட்டரை பார்மேட் செய்யவும்.

    S Murugesan said:
    March 26, 2011 at 5:40 am

    வினோத் ஜி,
    தங்கள் ஆர்வத்தையும், அக்கறையையும் எப்படி பாராட்டுவதென்றே புரியவில்லை. உங்களை எக்ஸ்ப்ளாய்ட் பண்றேனு நினைக்கலின்னா ஒரு கேள்வி

    கூகுல் ஃப்ரெண்ட் கனெக்ட்ல மாடரேட் பண்ண முடியல.. நியூஸ் லெட்டர் அனுப்ப முடியலை. எப்ப ட்ரை பண்ணாலும் “we cannot do it pl try later”னு வருது.

    விளக்கம் ப்ளீஸ்

    வினோத் said:
    March 26, 2011 at 7:26 am

    கூகுள் கனெக்டை நான் இதுவரை பயன்படுத்தியதில்லை…
    இன்றைக்கு நீங்க சொன்னவுடன் நான் பயன்படுத்தி பார்த்தேன்..
    எனக்கு வேலை செய்யுது…

    திரும்ப பண்ணி பார்த்து எதுனா பிரச்சனை வந்தா சொல்லுறேன்.

    S Murugesan said:
    March 26, 2011 at 9:35 am

    Vinothji,
    Ok. I am awaiting for your experience with Google connect.

   S Murugesan said:
   March 26, 2011 at 5:45 am

   ஆகமக்கடல்,
   வினோத்ஜீ சொல்றாப்ல செய்து பாருங்க.

  வினோத் said:
  March 26, 2011 at 6:21 am

  தல … வட்டத்க்கு 360 டிகிரி இருக்கு ,
  மனித வாழ் நாள் 120 வருடம் ,
  அதனால் நம்ம ராசிக்கு முந்தய 120 போன பிறவி,
  ராசியில் 120 இந்த பிறவி, அடுத்த 120 அடுத்த பிறவியாய் இருக்கும்னு
  நினைச்சுட்டு இருந்தேன். ஏன்ன ஒரு கர்ப்ப கால செல்லுனு பார்க்கும்பொது,
  சந்திரன் ஒரு நட்சத்திரத்தில் எவ்வளவு தூரம் கடக்குதோ அதை வைத்து கழிக்கறோம்.
  அப்போ அவ்வளவு காலத்தை போன பிறவியிலும் கர்ப்ப காலத்திலும் இருந்ததா தானே
  கணக்கு..

  என நண்பருக்கு ஜோதிடம் தெரியும் அவரிடம் ஒரு ஜாதகத்தை பற்றி பேசும்போது..
  அந்த பையனுக்கு சூரிய தசை முதல் தசைன்னு நினைக்கறென். நல்ல இசை ரசிக தன்மை
  இருந்தது… 2 மாத குழந்தையா இருந்தபோதே.. “அலைபாயுதே கண்ணா .. ” பாட்டை கேட்டால் அப்படியே கூர்ந்து கவனிப்பன். பாட்டு முடிஞ்சவுடன் அழுவான்..
  பாட்டை திரும்ம போட்டால் திரும்பவும் கவனிப்பான் .. பாட்டு கேட்டு தூங்குவான்..

  அவனை பற்றி பேசும்போது.. இப்போ சூரிய தசைன்ன போன பிறவியில் சுக்கிர தசையில்
  ரசனையுடன் வாழ்ந்து அனுபவிச்சது இப்போ தொடருதுன்னுனார்.

  அதனான் இந்த சந்தேகம்..

   S Murugesan said:
   March 26, 2011 at 7:13 am

   வினோத் ஜி,
   நல்ல அவதானிப்பு. இந்த உலகவாழ்க்கை ஒரு ஜெயில். ( இங்கன மாதிரி அண்ணா பிறந்த நாளைக்கெல்லாம் விடுதலை பண்ண மாட்டாய்ங்க . நாழிகை,வினாழிகை உட்பட கருமத்தை அனுபவிச்சே தீரனும் . கர்ப செல்லுங்கறதை பத்தி மட்டும் நீங்க கோட் பண்ணிங்க. கடந்த பிறவில அதுக்கு முந்தின தசைகளை கூட அந்த குழந்தை அனுபவிச்சிருக்கலாம்ல.

   ( ஹய்யா நான் பிறந்தது கேது தசைல அப்போ கடந்த பிறவியின் கடைசி காலகட்டத்துல ஞானகாரகனோட ஆளுமையில இருந்திருப்பேன் போல)

  இராச.புரட்சிமணி said:
  March 26, 2011 at 6:25 am

  நேற்றைய ஒளிவு மறைவற்ற பதிலுக்கு நன்றி.

  அருமை. இதை பலனாக எடுத்துக்கொண்டால் அருமை. நீங்கள் சொல்வது ஒவ்வொரு ராசிக்காரனின் எண்ண ஓட்டத்தை காட்டுகின்றது. ஆனால் இதை வைத்து அடுத்த பிறவி அடுத்த ராசியில் என்பதில் எனக்கு தற்போது உடன் பாடு இல்லை (நாளை வரலாம் வராமலும் போகலாம்).
  ஒருவேளை அடுத்து பிறவி இருப்பவர்களுக்கு நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம்.
  இருந்தாலும் அது நீங்கள் சொல்வது போல் அடுத்த லக்னமாக இருந்து அதே கோள் நிலைகள் இருக்க வாய்ப்புகள் மிக மிக குறைவாகவே தெரிகிறது. ஏன் எனில் ஒருவன் பிறக்கும் பொழுது இருக்கும் கோள் நிலை வர குறைந்தது நான்காயிரம் ஆண்டுகள் ஆகும். இது பற்றி உங்கள் கருத்து?

   இராச.புரட்சிமணி said:
   March 26, 2011 at 6:36 am

   சாரி பாசு ஒருவன் பிறக்கும் பொது இருக்கும் கோள் நிலைகள் மீண்டும் வர கிட்டத்தட்ட ஒரு யுகமே ஆகும் என்பது சிலரின் கணக்கு.

    S Murugesan said:
    March 26, 2011 at 7:03 am

    புரட்சி மணி ,
    இந்த பிறவில குரு கடக லக்னத்துல இருந்து 9 ஆம் ராசியான மீனத்தை பார்க்கிறாருனு வைங்க. அடுத்த பிறவிக்கு இதே கிரக நிலைக்காக காத்திருக்க வேண்டியதில்லை குரு மீனத்துல இருந்து லக்னத்தைபார்த்தாலும் போதுமில்லையா ..

    ஆக்யுரேட்டா அதே கிரக நிலைக்காக வெய்ட் பண்ண வேண்டிய அவசியமில்லை. ஏறக்குறைய /ஆனா அதே என்விரான்மென்டை தரக்கூடிய கிரகஸ்திதி வந்தா போறும்.

    பிறவிங்கறதே ஒரு பயிற்சிக்காக தான். பயிற்சியின் நோக்கம் பற்றற்று ஒரு நாடகமே போல் கருதி வாழ்வதுதான்.

    ஷூட்டிங்ல மானிட்டர் பார்த்துரலாமாங்கறாய்ங்களே அப்படித்தேன்.

    பிரமிட் யோகாவுல இன்னொரு தியரி சொல்றாய்ங்க. ( பி.யோ.ல எனக்கு நம்பிக்கையில்லின்னாலும் அந்த தியரி எனக்கு பிடிச்சிருக்கு)

    ஒவ்வொரு உயிரும் ஒரு கேள்வியோட பூமிக்கு வருதாம் ( உ.ம்; சொந்த குடும்பத்துக்காக ஸ்டேட்டை, நாட்டை அழிச்சா என்னாகும்) அந்த கேள்விக்கு பதில் கிடைக்க எந்த ஒரு உச்சத்துக்கும் போகும்.

    அதன் விளைவுகளை தாங்கிக்கற சக்தியும் அந்த உயிருக்கு இருக்கலாம். தாங்கமுடியாத நிலை வந்தப்ப ஜேஜி கூப்டுக்கும்.

    ( அடங்கொய்யால ஒவ்வொரு கேள்விக்கும் வாழ்ந்து பார்த்துத்தான் பதில் தேடனும்னா எத்தினி கோடி பிறவிகள் எடுக்கனும்? மனித குல வரலாற்றை பார்த்தா, படிச்சா ,கேட்டாலே புரியலை. )

    நம்ம சித்தாந்தம் ஒன்னுதேன். நம்ம ஓருடல் ஓருயிரா மாற துடிக்கிறாய்ங்க என்ற நம் தத்துவப்படி பார்த்தாலும் – சைக்காலஜிப்படி பார்த்தாலும் மன்சன் பண்றது ரெண்டே ரெண்டு வேலை . ஒன்னு கொல்றது ரெண்டு கொல்லப்படறது.

    கொன்னா கருமம் கூடி கருமத்தை தொலைக்க பிறவி எடுக்கனும். கொல்லப்பட்டா கருமம் தொலையும் பிறவி சக்கரத்துலருந்து விடுபடலாம்.

   S Murugesan said:
   March 26, 2011 at 7:09 am

   புரட்சி மணி ,
   உங்க கேள்விக்கு விவரமா பதில் சொல்லியிருக்கேன் பாருங்க. என் நோக்கம் ராசிச்சக்கரப்படி பிறவி அமையும்னு சொல்றது மட்டுமில்ல.

   இது ஒரு பரிணாம தத்துவமாஏன் இருக்கக்கூடாது.( மன வளர்ச்சி) சனம் தம் பிடிச்சு மாற்றத்துக்கு தயாராயிட்டா ஒரே வாழ் நாள்ள 11 ராசி குணங்களையும் கடந்து 12 ஆவது ராசி கேரக்டருக்கு வந்து முக்திக்கு ட்ரை பண்ணலாம்ல.

   என் முக்கிய நோக்கம் இங்கே ஐ மீன் உலகத்துல எல்லாமே ஒரு வட்டத்துக்குள்ள செயல் படுது. எல்லாமே ஒன்றின் தொடர்ச்சியாவே இருக்குனு கோடி காட்டறது தான்.

   பிறவின்னா கொஞ்சம் “பக்’குனு ஆயிரும். அலார்ட்டா படிப்பாய்ங்கல்ல

    இராச.புரட்சிமணி said:
    March 26, 2011 at 12:31 pm

    தங்களுடைய விளக்கத்திற்கு அவனுக்கு நன்றி பாசு.

    ”’கொல்லப்பட்டா கருமம் தொலையும் பிறவி சக்கரத்துலருந்து விடுபடலாம்.//
    அது எப்படி பாசு கொல்லப்படுவது?

    // உலகத்துல எல்லாமே ஒரு வட்டத்துக்குள்ள செயல் படுது. எல்லாமே ஒன்றின் தொடர்ச்சியாவே இருக்குனு கோடி காட்டறது தான்.//
    இது சரி என்று தோன்றுகிறது…

    S Murugesan said:
    March 26, 2011 at 7:39 pm

    புரட்சிமணி அவர்களே,

    //தங்களுடைய விளக்கத்திற்கு அவனுக்கு நன்றி பாசு.//
    எப்படியோ ஒரு வழியா வழிக்கு வந்திட்டிங்க. நன்றி

    //அது எப்படி பாசு கொல்லப்படுவது?//
    ஓஷோ சொன்னாப்ல நாமெல்லாம் நம்மை நம்ம ஈகோவா கருதித்தான் வாழ்ந்துக்கிட்டிருக்கோம். ஈகோவை கொன்னாலே போதும். நாம கொல்லப்பட்ட மாதிரிதான்

  rajesh said:
  March 26, 2011 at 6:29 am

  நன்றாக உள்ளது ராசியை சொன்னவாரு நட்சத்திரங்களைப் பற்றியும் சொல்லுங்கள் அண்ணா.

   S Murugesan said:
   March 26, 2011 at 7:06 am

   யப்பா ராஜேஷூ,
   ஆள விடு. இப்பமே நான் என் ரேஞ்சை தாண்டியாச்சு. இன்னம் தொடர்ந்தா ட்ரிப் ஆயிரும்.

  வினோத் said:
  March 26, 2011 at 7:48 am

  ஓஷொ புத்தரை பற்றி சொல்லும்போது…
  ஒரு அரச குமாரன் துறவு ஏற்றிருப்பான்.
  துறவிகளுடன் பனி வெய்யில், கொசுக்கடின்னு பார்த்து .. துறவு நமக்கு சரிப்படாது ..
  விட்டுட்டு திரும்ப போயிடாலம்னு புத்தரை பார்க்க செல்லும் போது..
  புத்தர் நீ யானையாக இருந்த போது கொண்ட உறுதியை விட்டு விட்டாயே..னு கேட்பார்.
  துறவை விடும் முடிவை துறந்துவிடுவான் அவன்.

  அதை பற்றி சொல்லும்போது … போன பிறவியில் இவன் யானையாக இருந்தான்.
  காடு பற்றி எரிந்தது..முயல் ஒன்று இவனுக்கு கீழ் வந்து பாதுகாப்பாக நின்றது…
  இவன் நினைத்திருந்தால் தப்பித்து போய் இருக்கலாம்.

  தன்னை நம்பி வந்த முயலை விட்டு போக மனம் இல்லாமல் தீயில் கருகி உயிர்விட்டன்.
  இந்த புண்ணியத்தால் இவனுக்கு இந்த பிறவி கிடைத்தது…
  போன பிறவியில் கொண்ட உறுதியை கொசுவுக்காக இப்போது விடுகிறாயே..என்று
  நினைவுபடுத்தினேன்.. போய்விட்டன் என்று புத்தர் சொன்னர்…

  என்கேன்வி…
  1) மிருகங்கள் –> மனிதர்கள் நிலைக்கு பிறவி எடுத்தால் எந்த ராசி முதல் ராசியாக அமையும்.?
  2) மீனம் தான் கடைசி ராசியா?
  3) கேது 12ல் இருந்தல் பிறவி இல்லை என்கிறார்களே..
  ஒருவேளை வேறு ராசியாக இருந்து.. கேது 12 இருந்தால்:? அப்போதும் அதுதான் கடைசி பிறாவியா ?
  4) கடன் வாங்கிட்டு திரும்ப கொட்டுக்காமல் ஏமாற்றுபவர்கள் , மாடாக நாயாக பிறந்து கடன் கொடுத்தவர்களுக்கு உழைத்து கடன் செலுத்த வேண்டும்னு சொல்றாங்களே.. அப்படி அடுத்தது எதாவது மிருகமாக பிறப்போம்னா அதை எப்படி தெரிஞ்சுகிறது ?

  ஒரு குரு இருந்தார் , ஞான திருஷ்டியில் அவர் அடுத்த பிறவியில் பன்றியாக பிறக்கவேண்டும்கிறதை கண்டார், தன் சிஷ்யனை கூப்பிட்டு ,இந்த விஷ்யத்தை சொல்லி இந்த இடத்தில் இப்படி அடையாள்த்துடன் இருக்கும் பன்றியை கொன்றுவிடுன்னர்.

  அவர் இறந்து கொஞ்ச காலத்துக்குபின் சிஷ்யன் அதே இடத்த்க்குபோய்.. அந்த பன்றியை கொல்ல கத்தியோடு போனான். அப்போது அந்த பன்றி பேசியது…
  சிஷ்யா என்னை கொல்லாதே.. அப்போது ஏதோ ஞான மயக்கத்தில் சொல்லிவிட்டேன்..
  இப்பொ, பன்றியாக இருந்தாலும் என் மனைவி குழந்தகள்னு வாழ்கை நல்ல இருக்குனு சொலிச்சுசாம் …

  ஆனால் ஓஷோ.. மிருகம் நிலையில் மனம் இல்லை அதனால் மிருகம் அமைதியக உள்ளது..
  மனம் / choice /தெரிவு வந்தவுடன் அமைதி போய்விடும். இனி மனதை துறந்த். கடவுள் நிலையை அடைந்தால் மட்டுமே நிம்மதி. மிருகத்திலிருந்து மனிதனாவன் திரும்ப மிருகமாக முடியாது , ஒரே வழி கடவுளாவது தான் . அது எப்போது என்பதை நமது செயல் திர்மானிக்கிறது ங்கறார். .. இதில் எது சரி ?

   S Murugesan said:
   March 26, 2011 at 9:34 am

   வினோத் ஜி,
   மொதல்ல நாம ஹேண்ட்ஸ் அப். ஏதோ எனக்கு ஸ்பார்க் ஆனதை பகிர்ந்துக்கிட்டதோட நான் அம்பேல். என்னை ஏதோ ஆத்தன்டிகேட்டட் பர்சனா நினைச்சு கேள்வி மழை பொழிஞ்சா நான் ஷவர்ல நனைஞ்ச பாமரேனியன் கணக்கா ஆயிருவன் பாஸ்!

   இருந்தாலும் ஃப்ரெண்ட்லியா என் கருத்துக்களை சொல்றதுல எனக்கேதும் அப்ஜெக்சன் கிடையாது

   //ஓஷொ புத்தரை பற்றி சொல்லும்போது…
   ஒரு அரச குமாரன் துறவு ஏற்றிருப்பான்.
   துறவிகளுடன் பனி வெய்யில், கொசுக்கடின்னு பார்த்து .. துறவு நமக்கு சரிப்படாது ..
   விட்டுட்டு திரும்ப போயிடாலம்னு புத்தரை பார்க்க செல்லும் போது..
   புத்தர் நீ யானையாக இருந்த போது கொண்ட உறுதியை விட்டு விட்டாயே..னு கேட்பார்.
   துறவை விடும் முடிவை துறந்துவிடுவான் அவன்.

   அதை பற்றி சொல்லும்போது … போன பிறவியில் இவன் யானையாக இருந்தான்.
   காடு பற்றி எரிந்தது..முயல் ஒன்று இவனுக்கு கீழ் வந்து பாதுகாப்பாக நின்றது…
   இவன் நினைத்திருந்தால் தப்பித்து போய் இருக்கலாம்.

   தன்னை நம்பி வந்த முயலை விட்டு போக மனம் இல்லாமல் தீயில் கருகி உயிர்விட்டன்.
   இந்த புண்ணியத்தால் இவனுக்கு இந்த பிறவி கிடைத்தது…
   போன பிறவியில் கொண்ட உறுதியை கொசுவுக்காக இப்போது விடுகிறாயே..என்று
   நினைவுபடுத்தினேன்.. போய்விட்டன் என்று புத்தர் சொன்னர்…//

   இதை நம்ம டார்வின் வேற விதமா சொல்றாரு. அதாவது நாம எந்தெந்த ஜீவராசியிலருந்து பரிணாமம் எய்தி மனிதனானோமோ அந்த மிருகங்களோட கல்யாண குணங்கள்ளாம் நமக்குள்ளயும் இருக்காம்.

   அதே சமயத்துல இந்த க.குணங்கள் எல்லாம் கடந்த பிறவிகளின் யின் எச்சங்கள்னு ஏன் சொல்லக்கூடாது?

   //1) மிருகங்கள் –> மனிதர்கள் நிலைக்கு பிறவி எடுத்தால் எந்த ராசி முதல் ராசியாக அமையும்.?//

   நான் அம்பேல் பாஸ்.. ராசிச்சக்கரத்துல உள்ள உருவங்களையும் பரிணாம சக்கரத்துல உள்ள ஜீவராசிகளையும் ஒப்பிட்டு பார்த்தா மீனம் தான் மொத ராசியா இருக்கனும் ( உயிர்கள் நீரில் தான் முதலில் தோன்றியதுங்கறாய்ங்க) இதையடுத்து கடகம் ( தண்ணிக்கும் தரைக்கும் லிங்க்) இதையடுத்து விருச்சிகத்தை சொல்லலாம் இப்படி ரோசிச்சு பாருங்க.

   அஸ்கு புஸ்கு அப்ப பிறவிச்சக்கரத்துல மீனம் தான் கடைசினு சொன்னிங்களேனு க்ராஸ் பண்ணக்கூடாது. சக்கரம் மீனத்துல ஆரம்பிச்சு மீனத்துலயே ஏன் முடியக்கூடாது.

   2) மீனம் தான் கடைசி ராசியா?
   ராசிச்சக்கரத்தை பொருத்தவரை கன்ஃபார்ம். பிறவிச்சக்கரம்? சந்தேக கேஸ்.. மொத ராசியா கூட இருக்கலாம்.

   3) கேது 12ல் இருந்தல் பிறவி இல்லை என்கிறார்களே..
   ஆமாம்.

   //ஒருவேளை வேறு ராசியாக இருந்து.. கேது 12 இருந்தால்:? அப்போதும் அதுதான் கடைசி பிறாவியா ?//

   பாஸ் .. லைஃப் ரெண்டாம் வாய்ப்பாடு மாதிரி அத்தனை சிம்பிள் இல்லே பாஸ்.. எல்லாமே குழப்பியடிக்கும். ஒழுங்கற்ற தன்மையில ஒரு ஒழுங்கு ஆற்றொழுக்கு மறைஞ்சிருக்கு. அதை டீ கோட் பண்ற முயற்சியில தான் இத்தனை குழப்படி

   //4) கடன் வாங்கிட்டு திரும்ப கொட்டுக்காமல் ஏமாற்றுபவர்கள் , மாடாக நாயாக பிறந்து கடன் கொடுத்தவர்களுக்கு உழைத்து கடன் செலுத்த வேண்டும்னு சொல்றாங்களே.. அப்படி அடுத்தது எதாவது மிருகமாக பிறப்போம்னா அதை எப்படி தெரிஞ்சுகிறது ?//

   வாங்கின கடனை ஒழுங்கா திருப்பி கொடுக்கிறமா இல்லையாங்கற ஃபேக்டரை அனலைஸ் பண்ணா மேட்டர் ஓவர்.

   //ஒரு குரு இருந்தார் , ஞான திருஷ்டியில் அவர் அடுத்த பிறவியில் பன்றியாக பிறக்கவேண்டும்கிறதை கண்டார், தன் சிஷ்யனை கூப்பிட்டு ,இந்த விஷ்யத்தை சொல்லி இந்த இடத்தில் இப்படி அடையாள்த்துடன் இருக்கும் பன்றியை கொன்றுவிடுன்னர்.//

   இந்த அஷ்ட தெலிவில்லாம் பேராதுங்கறது என் கருத்து.

   //அவர் இறந்து கொஞ்ச காலத்துக்குபின் சிஷ்யன் அதே இடத்த்க்குபோய்.. அந்த பன்றியை கொல்ல கத்தியோடு போனான். அப்போது அந்த பன்றி பேசியது…
   சிஷ்யா என்னை கொல்லாதே.. அப்போது ஏதோ ஞான மயக்கத்தில் சொல்லிவிட்டேன்..
   இப்பொ, பன்றியாக இருந்தாலும் என் மனைவி குழந்தகள்னு வாழ்கை நல்ல இருக்குனு சொலிச்சுசாம் …//

   இந்த பாய்ண்டை தான் சிம்பிளா நான் சொல்றது வழக்கம். இந்த வாழ்வு உன் சாய்ஸ். ஆனால் இதை நீ தேர்ந்தெடுத்தப்ப நீ ஆன்ம ரூபத்துல இருந்தே. உன் நோக்கம் முக்தி. இதை இப்ப நீயே வெறுக்கறே,. காரணம் இப்ப உன் நோக்கம் புக்தி.

   //ஆனால் ஓஷோ.. மிருகம் நிலையில் மனம் இல்லை அதனால் மிருகம் அமைதியக உள்ளது..
   மனம் / choice /தெரிவு வந்தவுடன் அமைதி போய்விடும். இனி மனதை துறந்த். கடவுள் நிலையை அடைந்தால் மட்டுமே நிம்மதி. மிருகத்திலிருந்து மனிதனாவன் திரும்ப மிருகமாக முடியாது , ஒரே வழி கடவுளாவது தான் . அது எப்போது என்பதை நமது செயல் திர்மானிக்கிறது ங்கறார். .. இதில் எது சரி ?//

   ஓஷோவே இன்னொரு சந்தர்ப்பத்துல மனிதன் மதில் மேல் பூனை. அந்த பக்கம் குதிச்சா மிருகம். இந்த பக்கம் குதிச்சா இறைவன் என்று ஆரோ சொன்னதை கோட் பண்ணதா ஞா. என் ஓட்டு இந்த கருத்துக்குத்தேன்.

    veera said:
    March 26, 2011 at 10:16 am

    //பாஸ் .. லைஃப் ரெண்டாம் வாய்ப்பாடு மாதிரி அத்தனை சிம்பிள் இல்லே பாஸ்.. எல்லாமே குழப்பியடிக்கும். ஒழுங்கற்ற தன்மையில ஒரு ஒழுங்கு ஆற்றொழுக்கு மறைஞ்சிருக்கு. அதை டீ கோட் பண்ற முயற்சியில தான் இத்தனை குழப்படி//

    சூப்பர் சிந்தனை முருகேசன் சார்.

    S Murugesan said:
    March 26, 2011 at 11:53 am

    வீரா அவர்களே,
    இயலாமையை புரிந்துகொண்டமைக்கு நன்றி

  SaranR said:
  March 26, 2011 at 10:10 am

  சார், எனக்கு நீங்க சொல்ற மாதிரி இந்த ஜென்மத்தில் ஒருத்தன் என்ன ராசியில் பிறந்திருப்பானோ அடுத்த பிறவியில் அதற்க்கு அடுத்த ராசியில் பிறப்பான்ற நம்பிக்கையில்லை.

  அடுத்த பிறவியில் அவன் பிறப்பதற்க்கு, அவன் இப்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் தான் இருக்கும் என்று நம்புகிறேன். அந்த கர்ம அடிப்படையில் அவன் அனுபவிக்க வேண்டிய அனைத்தும் முடிவு செய்யப்பட்டு, அதற்கு தகுந்த ஜாதக அமைப்பு வரும் வரை காத்திருந்தே, அடுத்த பிறவி ஏற்ப்படும் என நம்புகிறேன். மேலுமெ அவ்வாறு அவன் பாவ புண்ணிய பலன்கள் அடுத்த ராசியில் தான் பிறக்கும் போது கிடைக்கும் என சொல்லிவிட முடியாது அல்லவா?.

  எனவே எனக்கு அடுத்தபிறவியை ராசி அடிப்ப்டையில் சொல்வதை ஏற்று கொள்ளமுடியவில்லை.

  உங்கள் கணக்கு படி பார்த்தால், மீன ராசிக்கு அடுத்த பிறவி இல்லையா?. அல்லது அவர்கள் மறுபடியும் மேஷ ராசிக்காரராக பிறப்பாரா? அப்பொழுது எப்பொழுது ஒருவர் பிறவாமல் இருப்பார்.? இதெல்லாம் லாஜிக் பிரச்சனையாக இருப்பது போல் தோன்றுகிறது.

  என்னை பொறுத்தவரை ஒருவரின் பிறவி என்பது முன் ஜென்ம பாவ புண்ணியங்கள், கருமா போன்றவற்றை அடிப்படையில் அமைவது அதற்கு ஏற்றப்போல் பலன் கிடைக்கும் படி கோள்கள் வரும் வரை காத்திருந்து அமைவது தான்.

  ஆதலால் தான், ஒரு பிறவிக்கும் அடுத்த பிறவிக்கும் கால வரையறை ஏதும் நாம் முன்னோர்கள் வகுக்கவில்லை.

  இவை அனைத்தும் என்னுடைய தாழ்மையான கருத்துக்கள். ஏனேனில் இந்த விடயங்களில் என்னுடைய கருத்துதான் சரியான யாராலும் கூற இயலாது. ஏனேனில் இவையனைத்தும் நம்மால் நம்பப்படுபவை அன்றி நீருபிக்க இயலாதவை.

  🙂

   S Murugesan said:
   March 26, 2011 at 12:11 pm

   வாங்க சரண்,

   //சார், எனக்கு நீங்க சொல்ற மாதிரி இந்த ஜென்மத்தில் ஒருத்தன் என்ன ராசியில் பிறந்திருப்பானோ அடுத்த பிறவியில் அதற்க்கு அடுத்த ராசியில் பிறப்பான்ற நம்பிக்கையில்லை.//

   நானும் இப்படித்தான்னு கன்ஃபார்மா சொல்லலிங்க. இப்படி ஒரு சாத்திய கூறு இருக்கேனு தொட்டு காட்டினேன்

   //அடுத்த பிறவியில் அவன் பிறப்பதற்க்கு, அவன் இப்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் தான் இருக்கும் என்று நம்புகிறேன்//

   நானும் தான்

   //அந்த கர்ம அடிப்படையில் அவன் அனுபவிக்க வேண்டிய அனைத்தும் முடிவு செய்யப்பட்டு, அதற்கு தகுந்த ஜாதக அமைப்பு வரும் வரை காத்திருந்தே, அடுத்த பிறவி ஏற்ப்படும் என நம்புகிறேன்.//

   “ஏற்படும்” னு நீங்க சொல்றிங்க.” பிறவி எடுக்கிறோம்”னு நான் சொல்றேன்

   //மேலும் அவ்வாறு அவன் பாவ புண்ணிய பலன்கள் அடுத்த ராசியில் தான் பிறக்கும் போது கிடைக்கும் என சொல்லிவிட முடியாது அல்லவா?.//

   நிஜம் தான். ஆனால் சான்ஸ் அதிகம்னு சுட்டிக்காட்டினேன் தட்ஸால்

   //எனவே எனக்கு அடுத்தபிறவியை ராசி அடிப்ப்டையில் சொல்வதை ஏற்று கொள்ளமுடியவில்லை.//

   ஏற்றுக்கொள்ள சொல்வது என் நோக்கமில்லை.

   //உங்கள் கணக்கு படி பார்த்தால், மீன ராசிக்கு அடுத்த பிறவி இல்லையா?. அல்லது அவர்கள் மறுபடியும் மேஷ ராசிக்காரராக பிறப்பாரா? அப்பொழுது எப்பொழுது ஒருவர் பிறவாமல் இருப்பார்.?//

   பிறவிகளுக்கு பல்வேறு விதிகள், அடிப்படைகள் இருக்கலாம். இல்லேனு நான் சொல்லலை. ராசிச்சக்கரத்துல மீனம் கடைசியா வந்தாலும் பரிணாம தத்துவப்படி பார்க்கும்போது மீனம் மொத ராசியா இருக்கவும் வாய்ப்பிருக்குனு இன்னொரு கமெண்ட்ல சொல்லியிருக்கேன் பாருங்க.

   நம்மாளுங்க டம்மி பீஸுங்க இல்லை. அவிக நிர்ணயித்த பல விஷயங்கள்ள மேட்டர் இருக்கு. மேட்டர்னா ஒங்க ஊரு எங்க ஊரு மேட்டர் இல்லை. பலான பலான மேட்டர்லாம் இருக்கு. அதனால நான் பெரியவுக சொன்னதை ஸ்தூலமா பார்த்துட்டு விட்டுர்ரதில்லை. நோண்டி நுங்கெடுத்துர்ரது வழக்கம்.

   ஒரு விஷயத்துல மட்டும் நான் க்ளியரா இருக்கேன். ஒவ்வொரு உயிரின், ஒவ்வொரு பிறவியின் நோக்கமும் முக்தி. ஆனால் அதை டீல்ல விட்டுர்ரம் தட்ஸால்.

   //இதெல்லாம் லாஜிக் பிரச்சனையாக இருப்பது போல் தோன்றுகிறது.//

   பூரணத்தில் இருந்து பூரணம் வெளிப்பட்டபின்பும் பூரணம் பூரணமாகவே இருக்கும் – இதில் லாஜிக் இருக்கிறதா?

   நம்ம மனசெல்லாம் ஈகோவால் நிரம்பியிருக்கு. லாஜிக் தேடறதுதான் நம்ம வீக் பாய்ண்ட். நான் கூட தெலுங்குல ஒரு கவிதை எழுதினேன்.

   “அம்மா நீ ஸ்ருஷ்டிலோ தர்க்கம் தர்சனமிச்சினப்புடெல்லா
   நா புத்தி விக்கசிஸ்துந்தி

   தர்க்கம் சேதுலெத்தேசினப்புடெல்லா நா ஆத்ம விகசிஸ்துந்தி”

   பொருள்:

   தாயே!
   உன் படைப்பில் தர்கம் தரிசனமளித்த போதெல்லாம் என் புத்தி மலர்கிறது
   தர்கம் கை விரித்த போது என் ஆன்மா மலர்கிறது.

  vinoth said:
  March 26, 2011 at 10:33 am

  இந்த பதிவு சப்ஜக்ட்க்கு சம்பதம் இல்லாத கேள்விதான் ,
  ஆனாலும் முடிஞ்சா சொல்லுங்க தல.
  நாடுகளின் ஜாதகத்தை சுதந்திர தினத்தை வச்சு கணிக்கறீங்க சரி.
  இங்கிலாந்து நாட்டுக்கு எப்படி ஜாதகம் போடுவீங்க , அந்த நாடு அடிமையா இருத்ததே இல்லையே ?
  சுதந்திரத்துக்கு/வெள்ளையர் ஆட்சிக்கு முன்னாலய நீல கண்களை உடைய மிலேச்ச பாசை பேசுபவர்கள் /அன்னியர்கள்
  நாட்டை ஆள்வார்கள் அப்படின்னு கணிச்சு இருக்கங்களே அது எந்த ஜாதகத வாச்சு ?
  ஏன்ன சுதந்திரத்துக்கு முன்னால் நாடு 56 குட்டி நாட்டுகள தான இருந்தது , ஒரு குட்டி நாடு இன்னொன்னை அடிமையாக்கி
  சுரண்டி, இப்படி இருக்குபோது , நம் நாடு மட்டுமல்ல மொத்த உலகுக்கே வெள்ளையர் அட்சி பற்றி கணித்து சொல்லி
  இருகன்களே அது எப்படி ?

   vinoth said:
   March 26, 2011 at 10:53 am

   அதற்கு எந்த ஜாதகத்தை அடிப்படைய வச்சு பார்பாங்க ?

    S Murugesan said:
    March 26, 2011 at 11:47 am

    வினோத் ஜீ !
    //அதற்கு எந்த ஜாதகத்தை அடிப்படைய வச்சு பார்பாங்க ?//

    எதற்கு?

   S Murugesan said:
   March 26, 2011 at 11:53 am

   வினோத் ஜீ,
   ஜாதகம் என்பதே சொம்மா நூல் விட்டு பார்க்கிறதுதேன். எதிர்காலம்ங்கறது மோகினி மாதிரி . நிறையவே ஆட்டங்காட்டும்.

   நாடுகள் மேட்டர்ல அனலைஸ் பண்ண ஏதோ ஒரு பிடிப்பு வேணம்ல அதுக்குத்தேன் சுதந்திரம் பெற்ற லக்னத்தை அடிப்படையா வச்சுக்கறோம்.

   இங்கிலாந்து மேட்டர்ல வரும்போதுஅவிக மொத நாட்டை அடிமையாக்கின முகூர்த்தத்தை அடிப்படையா வச்சு கணிக்கலாம்.

   இதுமட்டுமில்லை பூமி உருண்டையில் தேசத்தின் இருப்பை வைத்து கூட ராசி நிர்ணயிக்கிறாய்ங்க.

   உதாரணம் : ஜப்பான் சிம்ம ராசி (மத்த நாட்டுக்கெல்லாம் என்ன ராசினு கேட்டுராதிங்க. நமக்கு தெரியாது)

  vinoth said:
  March 26, 2011 at 10:51 am

  குருங்கிறது ஞானமடைந்தவரை தானே குறிக்கும் ?
  ஞானமடைந்து நான்கிறது இல்லாம இருக்கிறவங்கள கிரகங்கள் எப்படி கட்டுபடுத்தும் ?
  புத்தர் ஞானமடைந்தவுடன் தேவர்கள் வந்து அவர்க்கு பணிவிடை செய்தனர்..னு சொல்றாங்க…
  மகாவீரர் தியானம் பண்ணும்போது மாடு மேய்ப்பவன் இவரை பைத்தியம்னு நினைச்சு அடிச்சு காதில்
  குச்சிய சொருகிட்டு போறான். அப்போ இந்திரன் வந்து நான் அவனை வஜ்ராயுதத்தால் தாக்கவானு கேட்கறான்
  அதுக்கு மகாவீரர் அவனும் தியானத்துக்கு இடைஞ்சல் பண்ணினான் நீயும் இப்போ அதன் பண்றேன்னர்.

  ஏன் சொல்றேன்ன ஞானம் அடைஞ்சவங்க தேவர்களுடம் பேசும் சக்தி படைத்தவர்களையும்,
  கிரகங்களின் அதிதேவதைகளுடன் பேசும் சக்தி படைத்தவர்களையும் கிரகங்கள் கட்டுபடுத்த முடியுமா ?

   S Murugesan said:
   March 26, 2011 at 11:48 am

   வினோத் ஜீ,
   மத்தவுக கிரகத்துக்கு கட்டுப்படறது சீமான் கைது மாதிரி. ஞானம் பெற்றவுங்க கைதாகிறது கனிமொழி கைது மாதிரி.

   ஆனால் கைது நிச்சயம்.

  sugumarje said:
  March 26, 2011 at 11:10 am

  ரகசியங்களை அப்படியே சொல்லிவிட்டீர்கள் என்று நம்புகிறேன்… மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙂
  ஏகப்பட்ட மோசடி ஜோதிடர்களின் முகமுடி கிழியப்போகிறது… படிக்கும் ஆர்வலர்கள் கொடுத்து வைத்தவர்கள்… சூப்பர் அய்யா…
  ஆமா. யாருகிட்ட பதில் கிடைத்தது? 🙂 வானத்திலிருந்தே உருவிட்டீங்களா? கில்லாடி அய்யா நீங்க 🙂

   S Murugesan said:
   March 26, 2011 at 11:45 am

   அடடே சுகுமார்ஜீயா,
   வாங்க. நீங்க என்னை பாராட்டறது உங்களையே பாராட்டிக்கிற மாதிரி . நான் உங்களை பாராட்டறது என்னையே பாராட்டறாப்ல . என்றாலும் நன்றி. “வெட்ட வெளியில் கொட்டிக்கிடக்குது”ங்கோ.
   நம்ம சனம் தேன் கண்டுக்கிடறதில்லை

  ஆகமக்கடல் said:
  March 27, 2011 at 6:18 am

  கருப்பாக தெரிந்தது,என்னுடைய browsarரில் தான் பிழை.சரி செய்துவிட்டேன்.திரு வினோத்துக்கு என் நன்றிகள்

   வினோத் said:
   March 28, 2011 at 3:58 am

   நானும் தல மாதிரி சொல்றேன்….
   உங்க நன்றிகள் எல்லாம் உரியவர்க்கு சென்று சேரட்டும்…

    S Murugesan said:
    March 28, 2011 at 5:39 am

    Ref: வினோத் – “தல மாதிரி”
    ‘இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணமாக்கிர்ராய்ங்கப்பா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s