ஆன்மீக குரு +பிறவிகள் : 2

Posted on

“ஜடி வானை குரிசானு மீலோ காசிந்த மானவத்வான்னி மொலக்கெத்திஞ்ச லேக போயானு”ன்னுட்டு தெலுங்குல கவிதை எழுதின பார்ட்டி நானு,

பொருள்:
அடை மழையென பொழிந்தேன். உங்களில் கொஞ்சமே கொஞ்சம் மனிதத்தை முளைவிட செய்ய முடியாமல் போனது

ஆனால் பாருங்க. இன்னைக்கு இத்தீனி பேரு படிக்கிறிங்க.. ரோசிக்கிறிங்க. நன்றி பாஸ். ஒகே மேட்டருக்கு வந்துருவம்.

குருவை பத்தி ஓரளவு விளக்கியாச்சு. முற் பிறவியை கண்டுக்க ஒரு குன்ஸ் கொடுத்திருந்தேன்.( சனியை பின் ராசிக்கு நகர்த்தி பார்க்கிறது – அதே சனியை முன் நோக்கி நகர்த்தி பாருங்க இது உங்க அடுத்த பிறவியை பற்றி ஒரு ஐடியாவ தரும் )

இன்னம் சில குன்ஸும் தரேன். லக்னத்தை நகர்த்தி பாருங்க ( பின்னோக்கி). இதான் உங்க முன் பிறவி. இதை முன்னோக்கி நகர்த்தினா இது உங்க அடுத்த பிறவி.

கை ரேகை:
வழக்கமா ஆண்களுக்கு வலது கை,பெண்களுக்கு இடது கை ரேகைய பார்க்கிறாய்ங்க. அப்ப ஆண்களுக்கு இடது கை,பெண்களுக்கு வலது கைரேகைகள் விரயமான்னா இல்லை. இது உங்க கடந்த பிறவியை காட்டுது.

காரக கிரகம்:

ஜாதகத்துல 5 ஆமிடம் தியானத்தை , 9 ஆமிடம் பூசை புனஸ்காரத்தை காட்டுது. இந்த பாவங்களை மோஸ்ட்லி இன்ஃப்ளுயன்ஸ் பண்ற கிரகம் எதுனு ஒர்க் அவுட் பண்ணி வைக்க சொன்னேன். ( ஹோம் ஒர்க் செய்யாதவுகல்லாம் கைய தூக்குங்க) அந்தகிரகத்தை பொருத்து பூசையோ தியானமோ உங்களுக்கு வழிகாட்டக்கூடிய உங்க குருவோட அம்சங்கள்.

சூரியன்:

தேன் நிற விழிகள் – முள்ளம்பன்றிபோன்ற தலை முடி – ஒரு கண்ணுக்கும் மறு கண்ணுக்கும் லேசான வித்யாசம் – ஒல்லியான தேக வாகு – மலை சாதியினராகவோ – மலைபிரதேச வாசியாகவோ இருக்கலாம்- அவர் சூரிய காயத்ரி வழிபாட்டை/தியானத்தை பின்பற்றக்கூடியவராக இருக்கலாம் – நல்ல நிறம் – சுருக்கமான பேச்சு – திறந்தவெளியில் வசிக்கலாம் – மிக குறைந்த நேரமே தூக்கம் – கை கால் வலி கொண்டவராக இருக்கலாம் – தன்னந்தனியாகவே இருப்பவர் – தன்னந்தனியாகவே பயணிப்பார் – பல நாட்களுக்கு குளிக்காமலே இருக்கலாம். உண்ணாவிரத காலத்தில் நீர் கூட அருந்தமாட்டார். ஃபாதர்லி நேச்சர் -பகல் நேர சாதனையை சிபாரிசு செய்வார் – தம் குருவை பெரிதாக வெளிச்சமிடமாட்டார். விதிக்கு எதிராக செல்லும் டெக்னிக் பற்றி பேசலாம்/ அவ்வழிமுறைகளை கற்பிக்கலாம். ஊர் நடுவில் அ கிழக்கு பகுதியில் தங்கலாம். அபேத பாவத்தை வலியுறுத்துவார். வெளிப்புற சுத்தம், சம்பிரதாயங்களை விட ஆன்ம சாட்சியாய் வாழ்வதே சிரேஷ்டம் என்பார்.

சந்திரன்:
சாந்தவடிவில் உள்ள அம்மன் வழிபாட்டில் இருப்பார் – நீர் நிலைகளை ஒட்டி அமைந்த இருப்பிடம் – அடிக்கடி ஸ்னானம் – உண்ணாவிரத காலத்தில் அதிகம் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம் – மதர்லி நேச்சர் – நடுத்தரமான உடல் வாகு – திடீர் புஷ்டி -திடீர் இளைப்பு இருக்கலாம் – இரவு நேர சாதனையை சிபாரிசு செய்வார் – அடிக்கடி தம் குருவை நினைவுப்படுத்திக்கொள்வார் -விதியோடு இயற்கையோடு இயைந்து சாதிக்கவேண்டும் என்பார் – வெள்ளை நிறத்தவராக இருக்கலாம் – இவர் பேச்சில் உவமைகள்,கவித்வ தோரணை இருக்கலாம் -மூச்சுப்பயிற்சிக்கு முக்கியத்துவம் .கமண்டலத்தில் நீர் வைத்திருக்கலாம்.
ஊரின் வாயு மூலையில் தங்கலாம்.கீழ் நிலையில் உள்ள மனிதர்களிடம் அன்பு பாராட்டுவார். மனமே பிரதானம் என்ற கொள்கை கொண்டவர்.

செவ்வாய்:
நெருப்பு அ ஆயுதம் ஒன்றை 24 மணி நேரம் அருகில் வைத்திருக்கலாம். நெருப்போடு விளையாடலாம். நெருப்பு : ஷீர்டி பாபாவின் துனி போல . சிவந்த நிறம் – கோபம் இருக்கும் – உடல் தொடர்பான பயிற்சிகளுக்கும் முக்கியத்துவம் – சீடர்களுக்கு அர்ச்சனை – சமயத்தில் அடி உதையும் பரிசாக கிடைக்கலாம்- புகைப்பவராக இருக்கலாம் ( கஞ்சா அல்ல) – ஊரின் தெற்கு பகுதியில் தங்குவார் – முருகன் வழிபாடு தியானத்தில் ஈடுபட்டவராக இருக்கலாம்- உடலில் தீப்புண் – வெட்டு காயம் இருக்கலாம் – காரம் நிறைந்த உணவை ஏற்கலாம் ( சேஷாத்ரி ஸ்வாமிகள்னு ஞா மிளகாய் அரைத்து உடல் எல்லாம் பூசச்செய்து குளிப்பாராம் – ஜொள்ளு பார்ட்டிகளை கழட்டிவிட) – முன்னாள் காவலர் அ ராணுவ வீரராக இருக்கலாம்- குரூர மிருகங்களோடு விளையாடுபவராக இருக்கலாம்.

ராகு:
மது அருந்தலாம் – கஞ்சா புகைப்பவராக இருக்கலாம் – கரிய நிறத்தவர் – பாம்பு போன்ற விஷ பிராணிகளுடன் விளையாடுபவராக இருக்கலாம். துர்கை போன்ற ராக்கால தேவதைகளை பூசிப்பவராக இருக்கலாம் – உடலில் இடுப்புக்கு கீழ் பாகம் சிறுத்திருக்கலாம் – நடக்கறச்ச கூட வளைந்து வளைந்து நடக்கலாம் – யோகாசனத்தில் பிரவேசம் இருக்கலாம் – ரகசிய சாதனையில் இருக்கலாம் – இதையே சிபாரிசு செய்யலாம் – மிக தீயவராக இருந்து ( கடத்தல் – திருட்டு – கொள்ளை ) மனமாற்றம் பெற்றிருக்கலாம். ” ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற வழியை பின்பற்றுபவர். அனேக மொழிகளை அறிந்திருக்கலாம் – இதர மதத்தை சேர்ந்தவராகவும் இருக்கலாம். ப்ளாக் மேஜிக்கிலும் வல்லவராக இருக்கலாம்.

குரு:
அந்தணர் – சைவர் – வேதம் -சாஸ்திர சம்பிரதாயங்களை வலியுறுத்துபவராக இருக்கலாம் – ராஜ ரிஷினு சொல்வாய்ங்களே அப்படி இல்லறமே நல்லறமாய் இருப்பவரா இருக்கலாம்- அதையே வலியுறுத்தலாம்- தங்க நகைகள் அணிந்திருக்கலாம் – அரசுதுறையில் பணி புரிந்துஓய்வு பெற்றிருக்கலாம் – அரசியல் பின்னணி இருக்கலாம் – திருச்சி திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண மடத்தை ஸ்தாபித்தவர் தமிழக முன்னாள் நிதிமந்திரி சி.சுப்பிரமணியத்தின் அண்ணன் மகன். ஈசான்ய பகுதியில் வசிப்பார் – தருமத்தை வலியுறுத்துபவர் – அருள் வேட்டைக்கு பொருள் தடையல்ல என்பவராக இருப்பார் – விக்கிரக வழிபாட்டை கூட சிபாரிசு செய்யலாம் – இவர் உடலில் பொன்னிற மச்சங்கள் இருக்கும்.

( அடுத்தபதிவில் தொடர்கிறேன்)

Advertisements

10 thoughts on “ஆன்மீக குரு +பிறவிகள் : 2

  Sankar G said:
  March 25, 2011 at 6:53 am

  திரு முருகேசன் அவர்களுக்கு, மிகவும் பயனுள்ள பதிவு.. ஆனாலும் சில சந்தேகங்கள்.

  லக்னத்தை நகர்த்திப்பார்க்கும்போது, மற்ற கிரகங்களை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டுமா? அல்லது சனியை மட்டும் நகர்த்திக் கொள்ளவேண்டுமா?

  குருவின் லட்சணங்களைப்பற்றிக் கூறி உள்ளீர்கள்.. ஆனாலும் நான் அறிந்த வரை சில கிரகங்களின் கூட்டான அமைப்பினாலேதான் அல்லது கூட்டான பலத்தினாலேதான் குரு அமைவதாக அறிகிறேன். ஒரே கிரகத்தின் பூரணமான பலம் இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவே… எனவே தாங்கள் அந்த கிரகங்களின் கூட்டமைப்பினால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் இந்த விஷயத்தில் சற்று தெளிவு படுத்தினால், உபயோகமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

  நன்றி..

  http://anubhudhi.blogspot.com/

   S Murugesan said:
   March 25, 2011 at 9:37 am

   //லக்னத்தை நகர்த்திப்பார்க்கும்போது, மற்ற கிரகங்களை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டுமா? அல்லது சனியை மட்டும் நகர்த்திக் கொள்ளவேண்டுமா?//

   சனியை நகர்த்தி பார்க்கும் டெக்னிக் பழசு. லக்னத்தை நகர்த்தும் டெக்னிக் புதுசு. ரெண்டையும் தனித்தனியே பாருங்க. லக்னத்தை நகர்த்தும்போது கிரகங்களை அப்படியே வச்சுக்கிடுங்க.

   போனஸ்:

   ராசிகள் 12 ம் பிறவிகளின் தொடர்ச்சியை காட்டுவதாக சம்சயம். இது குறித்து நான் போட்ட பதிவு ஒன்றின் தொடுப்பை அடுத்த பதிவில் தருகிறேன்.

   //குருவின் லட்சணங்களைப்பற்றிக் கூறி உள்ளீர்கள்.. ஆனாலும் நான் அறிந்த வரை சில கிரகங்களின் கூட்டான அமைப்பினாலேதான் அல்லது கூட்டான பலத்தினாலேதான் குரு அமைவதாக அறிகிறேன். ஒரே கிரகத்தின் பூரணமான பலம் இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவே… எனவே தாங்கள் அந்த கிரகங்களின் கூட்டமைப்பினால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் இந்த விஷயத்தில் சற்று தெளிவு படுத்தினால், உபயோகமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.//

   பாஸ்! எத்தீனி கிரகம் இருந்தாலும் சூட்சும புத்தியோட ஆராய்ச்சி பண்ணா அதுல ஒரு கிரகம் தேன் தேறும். நல்லா ஆராய்ச்சி பண்ணுங்க. உ.ம் சூரிய புத சேர்க்கையிருந்தா இதுல புதன் பவர்ஃபுல்லா, சூரியன் பவர்ஃபுல்லானு டிசைட் பண்ணனும். மேட்டர் ஓவர்

  rajesh said:
  March 25, 2011 at 6:54 am

  ஜோதிடம் தன்னை வெளிகாட்டவே உங்களை போன்றவர்களை படைக்கின்றது என்று நினைக்கிறேன். கட்டுரை நன்றாக உள்ளது அண்ணா. நேற்று எனக்கு சொன்ன பரிகாரத்திற்க்கு நன்றிகள் பல.

   S Murugesan said:
   March 25, 2011 at 9:29 am

   ராஜேஷ்,
   உங்கள் நன்றி பாராட்டுக்கள் எதற்கும் உரியவன் நானல்லன்.

  இராச.புரட்சிமணி said:
  March 25, 2011 at 7:09 pm

  வணக்கம் பாசு,
  ரொம்ப யோசிக்க வைக்கறீர்களே.
  ////அதே சனியை முன் நோக்கி நகர்த்தி பாருங்க இது உங்க அடுத்த பிறவியை பற்றி ஒரு ஐடியாவ தரும் )
  இன்னம் சில குன்ஸும் தரேன். லக்னத்தை நகர்த்தி பாருங்க ( பின்னோக்கி). இதான் உங்க முன் பிறவி. இதை முன்னோக்கி நகர்த்தினா இது உங்க அடுத்த பிறவி/////

  ஒருவனுக்கு இதுதான் முதல் பிறவி என்பதையும், அல்லது கடைசி பிறவி என்பதயும் நீங்கள் மேல் சொல்ல அமைப்பின் மூலம் அறிய முடியுமா?
  பாசு கொஞ்சம் அதிக பிரசிங்கத்தனமா கூட இருக்கலாம்…..நீங்கள் இங்கே எழுதுவது நீங்கள் எங்கயோ படித்ததா- அப்படி எனில் அதை பற்றியும் சொல்லலாம், கேள்விபட்டதா, உங்களின் சிந்தனையா அல்லது நீங்கள் உணர்ந்ததா(ஒருவேளை நீங்கள் ஞானம் அடைந்து விட்டீர்களோ?…I mean enlightened? )

   S Murugesan said:
   March 25, 2011 at 8:24 pm

   வாங்க புரட்சிமணி ,
   சென்டர்ல குத்திட்டிங்க. என் கருத்துக்கள் எதையுமே என்னுதுன்னு சொந்தம் கொண்டாடற நிலையில நான் இல்லை. நான் ஒரு சித்தனா பித்தனா எனக்கே தெரியாது? ஞானம் கீனம்னெல்லாம் என்னை நோகடிக்காதிங்க.

   நம்முது எல்லாமே ஒரு குன்ஸுல போயிட்டிருக்கு. எதை எங்கன படிச்சேனு ஞா இருந்தா எடுத்து விடலாம். அதுல எனக்கு எந்தவித ஈகோ ப்ராப்ளமும் கிடையாது.

   ஆனால் லைஃப்ல பட்ட நாயடில தலையிலருந்ததெல்லாம் (ஈகோ உட்பட) போயே போச். சனிகர்மகாரகன்ங்கற பாய்ண்ட்டை ஸ்டார் டெல்லர்ல படிச்சதா ஞா. சனியை நகர்த்தி பார்க்கிறது எனக்கா கிடைச்ச இன்ட்யூஷன்.

   இன்னைக்கு ராசிச்சக்கரத்தையே பிறவிச்சக்கரமா பாவிச்சு ஒரு பதிவு போடப்போறேன்.. இது நமக்கே நமக்கு ஞானோதயமானதுதேன் (?)

  நல்ல படைப்பை நல்ல தமிழில் தரமாட்டேன் என்கிறீர்களே என்ற கோபத்தோடும் வருத்தத்தோடும் இந்த பின் ஊட்டத்தை இடுகிறேன்,

  நல்ல பல செய்திகளை சொல்கிறீர்கள் … ஆனால் உங்களது தமிழை படிக்கவும்
  அதை புரிந்துகொள்ளவும் நிறைய பொறுமையும் அவகாசமும் தேவைப்படுவதால் — இந்த வெப்சைட்டை படிக்காமலே இருந்துவிடலாம் எனத் தோன்றுகிறது ,,,

  இந்த அவசர உலகத்தில் எல்லோருக்கும் புரியம்படி அழகான எளிய நடையில் எழுதுவது தங்களது அனுபவ ஜோதிடத்தை மேலும் தரம் உயர்த்தும் …

  தழிழ் வெளியோ தமிழ் மணமோ இந்த வெப்சைட் டை ஏற்றுக்கொள்ளவில்லை என ஒருமுறை குறிப்பிட்டிருந்தீர்கள் என நினைக்கிறேன் …

  இந்த எழுத்து நடையை மாற்றாத வரை …எப்படி ஏற்றுக் கொள்ளும் ? ( இது எனது தனிப்பட்ட கருத்து )

  மொய் தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன், முத்தமிழால்
  வைதாரையும் ஆங்கு வாழ வைப்போன்

  என்பது அருணகிரிநாதர் திருவாக்கு ,,, ஆனால் நீங்களோ தமிழையே புண்படுத்துவது போல் இருக்கிறது ,,,

  எனவே நன்முறையில் எழுதுங்கள் அனைவருக்கும் பயன்படும் …

   S Murugesan said:
   March 26, 2011 at 5:41 am

   ஜானகி ராமன் !
   மெல்ல மெல்ல மாறி வருகிறேன். கவனிக்கவில்லையா?

  syed said:
  March 26, 2011 at 7:57 pm

  lagnathai pinnokki nagarthittu jadagathaiyum left kai regaila pengal thodarbu regaigalaiyum oppitta poruthaathan varudu pona jenmathula neraiya pombalainga kooda overa aatam pottirukkan pola athu inda jenathula pinni edukkuthu

  idappathiyellam yosikkiradukku romba sindanai sakthi venum pola
  illati konam missana mandaiya pichukkura aadiri aayidum

  ungal sindanai sakthi & karuthu aalam ennai viyakka vaikkiradu
  txs
  pls thodarndu eluthungal

   S Murugesan said:
   March 27, 2011 at 5:52 am

   வாங்க சையத்,
   வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s