உங்க ஆன்மீக குரு + முற்பிறவி ரகசியங்கள்

Posted on

நம்ம ஜாதகப்படி நமக்கு குருவா வரக்கூடியவர் யாரா இருக்கக்கூடும்னு முன் கூட்டியே தெரிஞ்சுவச்சுக்கிட்டா எவ்ளோ நல்லாருக்கும். பாடாவதி பத்திரிக்கைகள்ள ஸ்பான்சர்ட் ஃபீச்சர்ஸை பார்த்து விளம்பரங்களை பார்த்து கல்கி கிட்டே போய் போதை ஊசி, நித்யானந்தா கிட்டே போய் “பலான ஆராய்ச்சி”க்கு உதவினு அல்லாடாம அசால்ட்டா ஆன்மீக கடல்ல குதிச்சுரலாமே.

நேத்து மரணம் என் ஆசான்ங்கற பதிவுல இந்த டீட்டெயிலை நாளைக்கு தரேனு சொல்லியிருந்தேன். அதுக்காகத்தேன் இந்த பதிவு.

மொதல்ல ஆன்மீகம்னா என்ன? மனிதனுக்குள்ள உடல், மனம்,புத்தி, ஆழ்மனம் எல்லாத்தையும் தாண்டி இன்னொரு ட்ரைவ் /போர்ட் /நெட் ஒர்க் எதோ இருக்கு. அதை பூட் செய்து ஓப்பன் பண்ணக்கூடிய சாதனை தான் ஆன்மீகம்.

ஆன்மீகத்தோட அவசியம் என்ன?

லௌகீக வாழ்க்கை என்னதான் கலர்ஃபுல்லா இருந்தாலும் பேக் கிரவுண்ட்ல நிலையாமைங்கற வயலின் கிசு கிசுத்துக்கிட்டே இருக்கு. அதை காத்துல விடாம காதுல வாங்கி போட்டுக்கிட்டா ஆன்மீக ரீதியில வளர்ரமோ இல்லியோ லௌகீகத்துல ஹிப்பாக்கிரசி குறையும், குழப்படி குறையும். ஒரு கட் அண்ட் ரைட் தனம் வரும்.

ஐ மீன் என் ஆன்மீக சாதனையை, வளர்ச்சியை மொக்கை பண்ணி ஒரு பிறவியையே வீணாக்கக்கூடிய இந்த மேட்டருக்காக நான் அல்லாடனுமா வந்தா வரட்டும் வராட்டி போவட்டுங்கற மூட்ல ட்ரை பண்ணும்போதுதான் எதுவுமே கைவசமாகும்.

இன்னம் கொஞ்சம் தம் கட்டினா நம்ம பிறப்புக்கு ஆன்மீக லட்சியம் தான் உண்டே தவிர லௌகீகம் ஒரு பொருட்டே இல்லைனு புரிஞ்சிக்கிடலாம். அப்போ லௌகிகமா இன்னம் பெரிய சக்ஸஸை பெறலாம்.

அப்பால இன்னம் கொஞ்சம் முக்கினா அசலான மேட்டர் வெளிய வரும். இந்த ப்ராசஸ் ஹர்ரர் படம் மாதிரி வவுத்தை கலக்கும். செத்துப்போயிருவமோனு தோணும். தப்பு பண்ணிட்டமோன்னு தடுமாறும். அந்த மாதிரி நேரத்துல அட விடு தம்பி.. இது உன் ஒருத்தனுக்கு மட்டுமா நடக்கு? அட இந்த பிறவில மட்டும் தானா நடக்குது.. கொஞ்சம் போல சமாளி. அப்பாறம் தூள் தான்னு சொல்ல ஒரு கிழவாடி தேவை . அதான் குரு.

லௌகீகம்னா என்ன? உடல், மனம்,புத்திய வச்சுக்கிட்டு உலகியல் ரீதியா நாம வாழக்கூடிய வாழ்க்கை லௌகீகம்.

ஒன்னை மாத்தி ஒன்னை பிடிக்க முயற்சி பண்ணி கடைசியில வெறும் கையா கிளம்பிப்போறது தான் வாழ்க்கைன்னு எங்கனயோ படிச்சேன். கரீட்டா இல்லியா?

லௌகீகமா வாழ்வாங்கு வாழ்ந்தாலும் மேட்டர் ஓவருனு தெரிஞ்சதுமே அழுது புலம்பி சுத்தி யிருக்கிறவுகளையும் பேதியாக்கி மொத நாள் ஸ்கூலுக்கு போறச்ச குழந்தை அழுது அழிச்சாட்டியம் பண்றாப்ல சீன் போடவேண்டி வர்ரது லௌகீகத்துல இருக்கிற அவலம்.

ஆனால்.ஆன்மீகத்தோட அரிச்சுவடியை அரைகுறையா மனசுல வாங்கிக்கிட்ட மடையன் கூட மரணத்துக்காக பிலாக்கணம் வைக்கமாட்டான். ஓஹோ ட்ரெய்ன் மாறிப்போகனும் அவ்ளதானேனு பட்டுனு சமாதானமாயிருவான்.

நூறு நாள் சுற்றுப்பயணமா கிளம்பினாலும் சொந்த ஊருக்கு திரும்பித்தானே ஆகனும். அப்படி இந்த உலகம் ஒரு சுற்றுலாத்தலம். நீ ஒரு சுற்றுலாப்பயணி. உனக்குனு ஒரு சொந்த ஊரு இருக்குனு உணரவைக்கிறவன் தான் உண்மையான குரு.

அந்த ஊருக்கு போகனும்னா அவசர அவசரமா சாமான் செட்டையெல்லாம் கக்கத்துல இடுக்கிக்கிட்டு அரக்க பரக்க கிளம்பவேண்டிய அவசியமில்லை. எப்பவேணா பேக் அப் ஆக சித்தமா இருந்தா போதும். நீ இங்கே என்ன பண்றேங்கறதை ஒரு மூணாவது ஆள் மாதிரி வாட்ச் பண்ணிக்கிட்டிருந்தா போதும். சொந்த ஊர் ஞாபகத்தை கணமேனும் அகற்றாம ஒரு விருந்தினன் கணக்கா ஒரு அன்னியன் கணக்கா இங்கே டீல் பண்ணிக்கிட்டிருந்தா போதும்னு “குன்ஸ்” சொல்லிக்கொடுக்கிறவர் தான் குரு.

இந்த வாழ்க்கை நாலணா பத்திரிக்கைகள்ள வர்ர மினி கதை – மின்னல் கதை கிடையாது. இது ஒரு மெகா சீரியல். உங்க கடந்த பிறவிகளோட தொடர்ச்சியை முன் கதை சுருக்கம் கணக்கா உணரவைக்கிறவர் குரு.
உங்க நீண்ட பயணத்தின் அடுத்த கட்டத்தை உணர வைக்கிறவர் குரு.

உங்களுக்கு ஒரு சின்னஹோம் ஒர்க். கரும காரகன் சனி. இந்த பிறவில சனி எந்த பாவத்துல இருக்காரோ அந்த பாவத்துக்கு முந்தின பாவத்துல சனியை கற்பனை பண்ணி பலன் என்னானு பாருங்க. உங்க கடந்த பிறவியோட அடி நாதம் என்னானு தெரிஞ்சுரும்.

எனக்கு 9 ல இருக்காரு. அப்ப கடந்த பிறவில எட்டுல இருந்திருப்பாருனு வைங்க. அப்ப என்ன பலன்? ஐ.பி போட்டிருக்கலாம், ஆயுள் தண்டனை கைதியா இருந்திருக்கலாம், அங்கஹீனம் ஏற்பட்டிருக்கலாம்., சனம் கல்லாலயே அடிச்சு கொன்னிருக்கலாம்.தனிமையில தவிச்சிருக்கலாம், வறுமையில வாடியிருக்கலாம், சனத்தால நிராகரிக்கப்பட்டிருக்கலாம். அட தற்கொலையே செய்திருக்கலாம். இத்தீனி ஆப்ஷன்ஸ் இருக்கு.

இந்த பிறவில என்ன நடக்கும்? மேற்படி சிச்சுவேஷன்ஸ் எல்லாம் விட்டகுறை தொட்ட குறையா டச் ஆகலாம். ஆனால் ஜாதகனோட மனசு மேற்படி மேட்டருக்கெல்லாம் அலர்ஜிட்டிக் ஆகியிருக்கும். மேற்படி சீக்வென்ஸ் வந்தப்பல்லாம் கொதி நீர்ல போட்ட ஆமை மாதிரி துள்ளி வெளிய குதிச்சிருப்பான். ஒரு மெச்சூரிட்டி வந்தபிற்பாடு மேற்படி மேட்டருங்க க்ராஸ் ஆகும்னு தெரிஞ்சா அந்த பக்கமே திரும்பமாட்டான்.

இந்த பிறவில சனி 9 ல இருக்காரு .. இதனோட பலன் என்ன? சொந்த கவலைகளை பின் தள்ளி தூர பிரதேசங்கள், ஏழைகள்,பஹுஜனம்,தொழிலாளர்கள் விஷயமாக யோசித்தல் செயல்படுதல் . 9ங்கறது ஜாதகரோட ஆன்மீக வாழ்வை காட்டக்கூடிய இடம். இங்கன சனி நின்னதால என்.டி.ஆர் சொன்னாப்ல ” சமுதாயமே என் கோவில் – ஏழை மக்களே என் தெய்வங்கள்” ங்கற டோன் வந்துரும். ஒரு களத்துல கமிட்டாயிட்டம் மாட்டிக்கிட்டம்னு தெரிஞ்சா அதுல தொடர்ந்தால் கிடைக்கக்கூடிய வசதி வாய்ப்புகள் எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு ஒரு யு டர்ன் அடிச்சுர்ரது.

இது சின்ன பாய்ண்டு தான், ஆனால் எப்படியா கொத்த ரிலீஃப். இது ஒரு சின்ன டெக்னிக் அவ்ளதான். இன்னம் டீட்டெய்ல்டா டீ கோட் பண்ணனும்னா அதுக்கு சாயா புருஷன்னு ஒரு மெத்தட் இருக்கு. அதையெல்லாம் சொன்னா பெரியார் சீடபிள்ளைகள் மூட நம்பிக்கைய திணிக்கிறாம்பாய்ங்க. அதுனால அம்பேல். கமிங் டு தி பாய்ண்ட்.

அதுக்கு முந்தி இந்த மேட்டர்ல சீரியஸா ஒரு டிப் லௌகீகத்துல ஆன்மீகம் கலக்கலாம். ஆனால் ஆன்மீகத்துல லௌகீகம் மட்டும் கலக்கவே கூடாது. ( சாமியார் பூனை வளர்த்த கதை தெரியும்ல).

ஜூம் பண்ணுங்க:

இப்ப உங்க ஜாதகத்துல 9 ஆம் பாவத்தை ஜூம் பண்ணுங்க. இங்க ஆரிருக்கா? இருந்தா அவரோட ஆரு சேர்ந்தா? அந்த கிரகங்களுக்கு அந்த ராசியில என்ன பலம்? சரி காலியா இருக்கா அப்போ அந்த பாவாதிபதி எங்கன நின்னாரு? ஆரொட சேர்ந்தாரு? இந்த பாவத்தை ஆரெல்லாம் பார்க்கிறா? இப்படி சின்னதா கணக்கு போடுங்க.

இதுல கோணாதிபதிகளே நின்னா தூள் ( 1,5,9 பாவாதிபதிகள்) கேந்திர பாவாதிபதிகள் நின்னா குட்.( 1,4,7,10)
ரெண்டு மூணு கிரகம் சேர்ந்திருந்தா அதுல எந்த கிரகத்துக்கு பவர் அதிகம்னு பார்க்கோனம். அப்படியோ 9 ஆம் பாவத்தை நவகிரகங்கள்ள எந்த கிரகம் ப்ரிடாமினென்டா இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுதுனு ஜட்ஜ் பண்ணுங்க.

பைதி பை எந்த பாவாதிபதி இன்ஃப்ளுயன்ஸ் பண்றாருனு ஜட்ஜ் பண்ணுங்க. அது எந்த கிரகம்னு நோட் பண்ணி வச்சிக்கங்க. உங்க குரு எந்த திசையில இருக்காரு? அவ்ர் என்ன சாதி? உருவம் எப்படி இருக்கும்? பேர் எப்படி அமைஞ்சிருக்கும் மாதிரி தகவல்களை கொத்தா கொட்டறேன் ஹி ஹி அடுத்த பதிவில்

Advertisements

26 thoughts on “உங்க ஆன்மீக குரு + முற்பிறவி ரகசியங்கள்

  rajesh said:
  March 24, 2011 at 4:06 am

  அண்ணா வணக்கம் நேற்றைய எதிர்பார்ப்பு 25 % மட்டுமே நிறைவேறியது மீண்டும் 75 % தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். சனியின் ஒவ்வொரு வீட்டின் முற்பிறவி ரகசியங்களை தாருங்கள். எனக்கு 8 யில் சனி மகரம் லக்கினம் மகர ராசி. பாடாதபாடு பட்டேன். கட்டுரை நன்றாக உள்ளது.

   S Murugesan said:
   March 24, 2011 at 12:24 pm

   ராஜேஷ்,
   லக்னாதிபதியே எட்டில் இருந்தால் அதற்கு சூப்பர் பரிகாரம் கைவசமிருக்கு. மரணம் தொடர்பான தொழிலில் ஈடுபடுங்கள்.

  தனி காட்டு ராஜா said:
  March 24, 2011 at 4:57 am

  //இன்னம் டீட்டெய்ல்டா டீ கோட் பண்ணனும்னா அதுக்கு சாயா புருஷன்னு ஒரு மெத்தட் இருக்கு. அதையெல்லாம் சொன்னா பெரியார் சீடபிள்ளைகள் மூட நம்பிக்கைய திணிக்கிறாம்பாய்ங்க.//

  அதுகள (பெரியார் சீடபிள்ளைகள்) பத்தி நமக்கு என்ன கவலை தல ? நமக்கு அனுபவம் தான் பாடம்….
  முன் முடிவுகள் முட்டாள்களின் சொத்து ….
  ஜோதிடமே மூட நம்பிக்கைனு கத்துற ஆட்டு மந்தை கூட்டம் அது…
  ஆத்திகம் வெள்ளை ஆட்டு மந்தை கூட்டம் என்றால் ….நாத்திகம் கறுப்பு ஆட்டு மந்தை கூட்டம்….
  சொல்ல நினைப்பதை detail ஆக சொல்லவும் தல …

   S Murugesan said:
   March 24, 2011 at 12:22 pm

   நிச்சயமா ராசா.. தொட்டுக்காட்டிர்ரன். ஆருக்கு கொடுத்துவச்சிருந்தா அவிக புகுந்து வரட்டும்

  வினோத் said:
  March 24, 2011 at 5:07 am

  //..சாயா புருஷன்னு ஒரு மெத்தட் இருக்கு. அதையெல்லாம் சொன்னா பெரியார் சீடபிள்ளைகள் மூட நம்பிக்கைய திணிக்கிறாம்பாய்ங்க. அதுனால அம்பேல். கமிங் டு தி பாய்ண்ட்…//

  மொத்த சோதிடத்தையும் தான் மூட நம்பிக்கைபங்க… அது எப்படி உலகின் இருக்கும் கோடிக்கணக்கன மக்களின் வாழ்க்கையை ஒரு டேபில் சேர் போட்டு உட்கார்ந்து சொல்ல முடியும்னு கேட்பாங்க.. பெரியார் சீடர்கள கண்டுக்கதீங்க.

  பொதுவிள் சொன்ன யாராவது தவறா பயன்படுத்தகூடும்னா சொல்ல வேண்டாம்.
  மத்தபடி சொல்லுங்க தல…

  ஒரு சோதனை பதிவூ போட்டேன் பார்த்தீங்களா?

   S Murugesan said:
   March 24, 2011 at 12:21 pm

   வினோத் ஜி,
   ஐ வில் பி பேக் இன் மினிட்ஸ்

  இராச.புரட்சிமணி said:
  March 24, 2011 at 6:58 am

  கலக்குறிங்க பாசு,
  ௧.நிறைய அரசியல் வாதிகளுக்கு லக்னத்தில சனி. உதாரணத்துக்கு ஒபாமா, புட்டோ, இந்திரா, சோனியா(சரியா தெரியல). அப்ப இவங்களுக்கு போன ஜென்மத்துல 12-ல சனி. அதுக்கும் இதுக்கும் அரசியல் ரீதியாய் சம்பந்தம் உண்டா பாசு?
  ௨.முன் ஜென்மம் பற்றி ஒருத்தனுக்கு தெரியனும்ன ஜாதக ரீதியா அதேனும் அமைப்பு சொல்ல முடியுமா?
  ௩. ஒன்பதாம் அதிபதி பன்னிரெண்டில் உட்க்கார “அந்த மேட்டர்” ல குரு கிடைப்பங்கனு சொல்லலாமா அல்லது குருவே கிடைக்கமாட்டார்களா?
  ௪. பத்தாம் பாவம் கர்ம பாவம் இதுக்கும் முன் பிறவிக்கும் ஏதாவது லிங்க் இருக்குமா?

   S Murugesan said:
   March 24, 2011 at 12:17 pm

   புரட்சி மணி அவர்களே,
   தங்கள் கேள்விகளுக்கு பதில் தர தனிப்பதிவே போட்டாகனும். அடுத்த பதிவுல விவரமா பதில் தந்துர்ரன்

  PUDUKAIKARAN said:
  March 24, 2011 at 7:10 am

  good brother

   S Murugesan said:
   March 24, 2011 at 12:16 pm

   PUDUKAIKARAN அவர்களே,
   வருகைக்கும் , மறுமொழிக்கும் நன்றி

  Kalyan said:
  March 24, 2011 at 10:46 am

  முருகேசன் அவர்களே,

  சாய்நாத் என்னும் பெயருக்கும், விஸ்வநாத் (அ) விஸ்வநாதன் என்னும் பெயருக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? அல்லது ரெண்டுமே ஒரே பெயர்தானா?

   S Murugesan said:
   March 24, 2011 at 12:15 pm

   பாஸ்,
   நமக்குத்தெரிஞ்ச நாலணா இந்திப்படி சாயி என்றால் புனிதர்/சாதுனு அர்த்தம் இது ஒரு பொதுப்பெயர் (common noun). ஆனால் சாயி என்ற வார்த்தை ஷீர்டி பாபாவை மட்டுமே குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது.

   விஸ்வ நாத் என்பதும் ஏறக்குறைய பொதுப்பெயர் தான் உலக நாயகன் என்று பொருள். ஆனால் சமஸ்கிருத பண்டிதர்களின் கற்பனை வறட்சி காரணமாக விஸ்வ நாதாய நமஹ என்பது ஏறக்குறைய எல்லா சாமிகளுக்கும் வருகிறது.

   சிறப்பாக சிவனை குறிக்கும் சொல்லாக அறியப்படுகிறது (காசி விஸ்வ நாதர்)

  டவுசர் பாண்டி said:
  March 24, 2011 at 1:20 pm

  டவுசர் பாண்டி கிரக பார்வைகள் வணக்கம்பா, நானும் டெய்லி அல்லாரும் தூங்கிக்கினு இருக்குற நேரத்துல மொட்ட மாடிக்கு போய்க்கினு அங்க நெலாவையும், நச்சதிரத்தையும் ஒரு அரமன்னேரம் கண்ண மூடாம வச்சகன்னு வாங்காம பாத்துக்கினு இருப்பேன். பொறவு, மல்லாக்க படுத்துக்கினு, கண்ண மூடி, மூச்ச நான் விடாம, அதுவே விடட்டும்னு அது போக்குலயே விட்டுக்கினு இருப்பேன். பொறவு, மூச்சு லேசாயிரும். பொறவு, லப்பு தப்பு சவுண்டு தெளிவா கேக்கும். பொறவு, கவனத்த புருவமத்தில வச்சினு, ஒரு டேப்புல நைட்டு சவுண்ட ரெக்காடு பண்ணி கேட்டா எப்புடி சில்லுவண்டு சவுண்டு, கொசு சவுண்டு எல்லாம் துல்லியமா கேக்கும், அந்த மாதிரி நான் என்னோட ஒடம்ப விட்டு வெளிய நின்னுக்கினு கொஞ்ச நேரம் கேப்பேன். பொறவு, வானத்துல இருந்து என்னோட டெட் பாடிய நானே கொஞ்ச நேரம் பாத்துக்கினு இருப்பேன். இப்புடி நெறைய லூசுத்தனமான வேலெல்லாம் நான் செய்வேன் கண்ணு. எனக்கு குருவும் சனியும் கூட்டணி வச்சிக்கினு உசிர எடுக்குதுங்க. அப்பால சந்திரன் வந்து சேக்காலியா கேதுவ சேத்துக்கினு என்ன ரொம்ப இம்ச பண்றாங்கப்பா.

  தல, என்னோட ஒம்போதாம் நம்பர் வூட்டுக்காரர் செவ்வா வந்து நாலாம் நம்பர் வூட்டுக்குள்ள குந்திக்கினு, ஏழாம் நம்பர் வூட்டுக்குள இருக்குற குரு சுக்கிரன் சனி அவங்களையும், அப்பால பதினோராம் நம்பர் வூட்டுக்குள்ள இருக்குற சந்திரன் கேதுவ பாத்துக்கினு இருக்கார். ஆனா ஒம்போதாம் நம்பர் வூட்டுக்காரரான செவ்வாய, ஏழாம் நம்பர் வூட்டுக்குள்ளார கூட்டணியோட இருக்குற கர்மகாரகனான சனி மட்டும் எப்ப பாத்தாலும் பாத்துக்குனே இருக்காரு. நானும் இதுக்கு மிந்தி போன சென்மத்துல ஏதோ வில்லங்கம் பண்ணிதான் இந்த சென்மத்துக்கு வந்துருக்கேன்னு நெனைக்கேன். இன்னும் கூடிய சீக்கரத்துல இந்த ஒடம்ப விட்டு வெளிய ஊர் சுத்த (உசுரோடதேன்) ரெடியாருவேன்னு நெனைக்கேன். அப்பால எங்கெல்லாம் நள்ளிரவுல ஊர் சுத்திக்கினு வந்தேனோ அத என்னோட ஸ்தூல ஒடம்புல ரெக்கார்ட் பண்ணி வைப்பேன். இப்பதாம்பா என்னோட உள்ளுமனசு நான் சொல்றபடி வேலை செய்யுது. நீ இந்த பதிவ போட்ட ஒடனே எனக்கு என்னோட லைப்ப நீ காப்பி அடிச்சி எழிதிட்டேன்னு நெனச்சிட்டேம்ப்பா. சாரி கண்ணு.

   S Murugesan said:
   March 24, 2011 at 4:15 pm

   பாண்டி,
   ‘எனக்காகவே எழுதப்பட்டது’னு நினைக்க வைக்கிறது நல்ல இலக்கியம். அட .. என்னைப்போலவே இந்தாளுக்கும் நடந்திருக்கேனு நினைக்க வைக்கிறது நல்ல அனுபவம் ( ஆன்மீகத்தை சொன்னேன்)

   உங்க ஜாதகத்தை பொருத்தவரை ரன்னிங் காமெண்ட்ரி இல்லாம ஜாதகத்தோட லிங்கை அனுப்புங்க பாஸ்..

    டவுசர் பாண்டி said:
    March 25, 2011 at 12:53 pm

    தல, சதுர்த்தசிக்கும் பவுர்ணமிக்கு எடைல மொளச்சிக்கினேன். பொரக்கச்சிலையே என்கூட அல்லா மொள்ளமாரித்தனமும் கூடவே வந்து ஒட்டிக்கினு. என்னோட சாதகத்துல ஒரு கெரகமும் உச்சம் கடியாது. அல்லா சோசியக்காரவுகளும் என்னோட சாதகத்த பாத்துக்கினு இது தரித்திரம் புடிச்ச சாதகம்னுதேன் சொல்வாக. நீ இன்னா புச்சா ஏதும் சொல்ல போறீயா? தல எனக்கு ஒரு பலான ஆசை. இன்னான்னு கேளு. எனக்கு காளிதேவி அம்மனை நேருல பாக்கணும். அது முடியுமா முடியாதான்னு சொல்லு. இப்ப பிளாஸ் பேக்கு. மிந்தி ஒரு தாட்டி தீவிரமா காளி மந்திர உச்சாடனம் செஞ்சிக்கினு இருந்தேம்ப்பா. எண்ணூர தாண்டி போய்க்கினு இருக்கச்சுல சோன்னு மழை சின்ன இடியோட வந்து தியானத்த கலச்சிட்டுப்பா. இத ஒரு சாமி கைல சொன்னா, அவுரு ஒன்னோட சாதகத்துல மழைக்கு காரகன் சுக்கிரன் நீசம்னு சொல்லிட்டாருப்பா. நீ எதா இருந்த பாத்து சொல்லு கண்ணு.

    S Murugesan said:
    March 25, 2011 at 1:31 pm

    பாண்டி,
    இந்த ஒலகத்துல உதவாத பொருள்னு எதுவுமே கிடையாது. அப்படி எதையாவது மனித குலம் நினைச்சா அதனோட உபயோகம் நமக்கு தெரியலைன்னு அர்த்தம்.

    உதாரணமா குழந்தை பிறப்பின் போது வெளியாகும் ப்ளெசண்டா.

    அதுவும் ஜாதக மேட்டர்ல அப்படி கிடையவே கிடையாது. ஒனக்கென்ன காளியை தரிசிக்கவெல்லாம் முடியாது

    வேணம்னா அந்த மாராஜியை அப்படியே உனக்குள்ள ஆவாஹனம் பண்ணிக்கமுடியும். ஏற்கெனவே ட்ரை பண்ண மந்திரம் எதுனு சொன்னா அந்த போர்லயே ரீபோர் பண்ண வழி சொல்றேன்.

    மேட்டர் பர்சனலா போறதால மெயில் அனுப்பினா போதும்.

  டவுசர் பாண்டி said:
  March 24, 2011 at 1:35 pm

  தல, அப்பால சாந்தர நேரம் நேரம் கெடைக்கும் போது மொட்ட மாடிக்கு ஏறிக்கினு என்னோட நெழல பாத்துக்கினு நெறைய கமென்ட் குடுப்பேன். ஒரு தாட்டி நான் என்னோட நிழல் கூட பேசிக்கினு இருந்தப்ப எங்கப்பா கேப்புல வந்துட்டாரு. பொறவு கைல வேற மொபைல் கெடயாது இருந்தா அத காதுல வச்சிக்கினு பேசுற மாதிரி நடிக்கலாம், அதுக்கும் வழியில்ல. பொறவு எங்கப்பன சமாளிக்கிரதுக்குள்ள டவுசர் கழண்டு போச்சு. அதுலருந்தே வூட்டுல என்னைய ஒரு டைப்பான ஆளுன்னு சீல் குத்திக்கிறாங்க.

   S Murugesan said:
   March 24, 2011 at 4:08 pm

   டவுசர்,
   உங்க கமெண்டை படிச்சு குலுங்கி குலுங்கி சிரிச்சதுல வேட்டி அவுந்துர்ர மாதிரி ஆயிருச்சு. அல்லாருமே மனசுக்குள்ள நிறைய பேசிக்கறோம். சிந்தனைங்கறதே மவுன உரையாடல்தான்.
   இதுவும் ஒரு அவுட்லெட் . ஃப்ரீயா உடு மாமே.

   ( நான் சொல்ல வந்த சாயா புருசன் வேற)

    டவுசர் பாண்டி said:
    March 25, 2011 at 1:04 pm

    இன்னாப்பா நீ, அது வேறன்னு சொல்லிக்கிற. சாயன்னா நெழல்தாந? சரி. அப்புடி பலான மேட்டரா. இன்னா தல புச்சா சச்பென்ஸ் வைக்குற.

    S Murugesan said:
    March 25, 2011 at 1:24 pm

    டவுசர் பாண்டி,
    இது கொஞ்சம் போல சீரியசான மேட்டர். வேணம்னா ட்ரை பண்ணிபாருங்க. ஆழ்ந்த தூக்கத்துக்கு பின்னாடி காலை அ மாலை இதை செய்யனும்.

    உங்களுக்கு கன்வினென்டா இருக்கிற போஸ்சர்ல உட்கார்ந்து கண்ணை மூடி (லேசா) உட்கார்ந்திருக்கனும்.

    மனசை வெத்தா வச்சுக்கனும். நாளடைவுல உங்க எதிர்ல ஒரு டவுசர் பாண்டி உட்கார்ந்திருக்கிறது தெரிய ஆரம்பிக்கும்.

    அதைத்தான் சாயா புருஷன் என்பார்கள். அந்த புருஷனோட உருவத்தை அப்சர்வ் பண்ணி விவரம் சொன்னா மேற்கொண்டு என்ன பண்ணனும்னு நான் சொல்லித்தரேன்.

    டவுசர் பாண்டி said:
    March 26, 2011 at 2:54 am

    இதான் நமக்கு கைவந்த கலையாச்சே நைனா. இத மாரிதேன் கண்ணாடிலையும் என்கூட நான் பேசுவேன். என்னைய பத்தி நானே பிலிம் காட்டிக்கினுருந்தா அது ச்ளைட்ஷோவா மாறிப்பூடும். (ஆஹா தல வாய கெளர்றார். ஏற்கனவே வூட்டாண்ட நம்மள ஒரு டைப்பான ஆள்னு பாத்துக்கினு இருக்காங்க. இப்ப இங்கயுமா. விடு ஜூட். எஸ்கேப்.)

    S Murugesan said:
    March 26, 2011 at 5:44 am

    பாண்டி,
    மெஜாரிட்டி கருத்தை வச்சு நிர்ணயிக்க இதென்னா சன நாயகமா? இங்கன ஆரு என்ன சொன்னாலும் நம்ம ரஜினி மாதிரி போய்க்கினே இருக்கனும். அப்பத்தேன் அவரு சேஃப்டி. நாம ஆன்மீக ரீதியில ஓரளவாச்சும் தேற முடியும்

  syed said:
  March 24, 2011 at 8:12 pm

  இந்த உலகம் ஒரு சுற்றுலாத்தலம். நீ ஒரு சுற்றுலாப்பயணி. உனக்குனு ஒரு சொந்த ஊரு இருக்குனு உணரவைக்கிறவன் தான் உண்மையான குரு.

  supe words
  ellarum itha nambi follow pannal ulagathula pirachanaiye varadunu nenikkiren

  txs

   S Murugesan said:
   March 25, 2011 at 2:21 am

   சையத்,
   நீங்க பாராட்டியிருக்கிற வரிகள் சூரியன் கிழக்கில் உதிக்கும் என்பது போன்ற நிலைத்த உண்மை. இதற்கு என்னை பாராட்டுவது சரியல்ல. மேலும் இதனை எண்ணற்ற புனிதர்கள் தம் பலவேறு உபதேசங்களில் சொல்லியிருக்கின்றனர்.

   இதை தங்கள் பார்வைக்கு கொண்டுவந்தமைக்கு வேண்டுமானால் நன்றி சொல்லலாம்.

  டவுசர் பாண்டி said:
  March 26, 2011 at 3:01 am

  இன்னா நைனா, நீ இந்த சாயா மேட்டர பத்தி ஒரு பதிவு போடு மாமு. செஞ்சி பாக்கோம். அப்டியே இந்த குண்டலினி சக்திய பத்தியும் கொஞ்சம் சொல்லிக்குடு மாமு.

   S Murugesan said:
   March 26, 2011 at 5:42 am

   பாண்டி !
   குண்டலி மேட்டர் இன்னைக்கே வரும். ப்ளீஸ் வெய்ட். சாயா மேட்டர் அவுட்லைன் நான் சொன்னதுதான். முன்னேற்றத்தை பொருத்து அப்பாறம் பார்ப்போம். ( ஹி ஹி நானும் எல் போர்டுதேன்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s