என் சாளரம் வழியே வானம் – 4 by Sugumarje

Posted on

கல்வி அறிவால் கிரகங்களை ஏமாற்றத்துடிக்கும் அறிவாளி மாந்தர்கள்… ஆமாம்… வரிசையான சாளரங்களில், இந்த சாளரத்தை தற்செயலாக திறந்துவிட்டேன். கிடைத்த வானக்காட்சியை பகிர்ந்து கொள்வதுதானே நம்ம ஒப்பந்தம்…

என் நண்பர் கேட்டார்… “எதுக்கய்யா சாளரம், கதவை திறவேன்”
நான் “ என் இல்லத்தில் சாளரம் தவிர வேறெதுமில்லையே”

இந்த உலகத்தில், என்னோடு வாழும் நீங்களும் நன்கு படித்துத்தேர்ந்த பக்குவமனிதர்கள்… எனவே நம்மிடம் கூடுதலாக அறிவு இருக்கிறது என்று மார்தட்டுகிறோம் அல்லது நீங்களும், நானும் படிக்காத முட்டாள் என்று சொல்ல தயங்குகிறோம் என்பதும் உண்மைதானா?

ஒரு படிப்பறிவில்லாதவனிடம், படித்தவனிடமிருக்ககூடிய பணிவும், அன்பும் இருப்பதை அறியலாம்.

ஒரு படித்தவனிடம், படிப்பறிவில்லாதவனிடம் இருப்பதாக கருதும் தான் என்ற அகம்பாவம் இருப்பதை அறியலாம்.

இது என்னய்யா மாயம்? அப்பொழுது படித்த கல்விக்கான பலன் என்ன ஆயிற்று?

கல்வி பெறப்படும் வழி என்ன?

சில படித்த மாந்தர்களிடம் கேட்டால்,  “நானாக விருப்பப்பட்டு படிக்கலை, படிக்கவச்சான்க, படிச்சேன் பாஸ் பண்ணேண்… ” என்ற ரீதியில் சொல்லக்கேட்கலாம்..

இன்னும் சிலர்… “எங்க வீட்டுல வசதியில்ல, ஆனா, யாரோ ஒரு புண்ணியவதி எனக்கு உதவுனாங்க… அவங்க போட்ட பிச்சைலதான் நான் படிச்சேன்” என்பார்கள்

நிறைய பேர்களுக்கு ஆரம்பகல்வியிலும், கல்லூரி முதல் வருடத்தோடும் நிறுத்தங்களாகிருக்கும்.

வேறு சிலர் “படிக்கனும்னு ரொம்ப ஆசை சார்… முடியலை… அப்பா போய்ட்டாரு, செலவு பண்ண யாருமில்ல, படிப்பு கட் ஆய்டுச்சு” என்பார்கள்.

படித்தவனிடம் தற்பெருமை இருப்பதைப்போலவே, படிக்காதவனிடத்தில் தான் படிக்கவில்லையே என்ற குறை, தன்னிரக்கம், தாழ்வு மனப்பான்மை இருப்பதை காணலாம்.

ஜோதிட அறிவியலில் புதன் அறிவுக்கு உதவுகிறார். சூரியன் கற்கும் கல்விக்கு உதவுகிறார். குரு அந்த கல்வியை வழங்கும் சூழலை அமைக்கிறார்.சுக்கிரன் கல்விக்கான தொடர்ச்சியை தருகிறார். ராகு, கேதுவையும் ஞாபகத்தில் வையுங்கள். இவர்கள் புரிதலை தருகிறார்கள். சூரியனும் புதனும் சேர்ந்த சேர்க்கை அவனை கல்விஅறிவுள்ளவனாக்கிறது. தனித்த சூரியன் அவன் கல்வியில் அறிவாளியாக் காட்டுகிறான். தனித்த புதனோ அவனை படிக்காத அறிவாளியாக்குகிறான். இணைந்த புதனும், சுக்கிரனும் கற்கும் கல்வியில் தடையை ஏற்படுத்துகின்றன. (ஆட்சி, உச்சம், நீச்சம் கவனத்திற்குரியது)

ஆனாலும் சராசரி 30 நாள் சுழற்சி சூரியனும், 28 நாட்கள் கொண்ட புதனும், சராசரி 30 நாட்கள் கொண்ட சுக்கிரனும் ஒன்றை ஒன்று துரத்தும் போக்கிலேயே இருப்பதால் உங்களுக்கான பாதையில் கலந்தோ தனித்தோ இருக்கும் வாய்ப்புக்கள் அதிகம். மனோகாரகன் ச்ந்திரனும் அவ்வப்போது உள்ளே கலந்திருப்பதும் நடக்கும்.

இது எல்லாமே தவிர்த்து, தனித்த குரு, அவரின் பார்வையில் இந்த கல்விக்கான வேலையையும் செய்யவிழைகிறார். அது பார்வையையும், இடத்தையும் பொறுத்தது. குரு என்றால் கற்றுக்கொண்ட, கற்பிக்கும் அறிவுதானே…

கல்விக்கான வயதுகளில் தன் சுய அறிவு மனிதருக்கு மழுங்கப்பட்டிருக்கும் என்பதல்ல… அது ஒரு தனித்த அறிவு… எதன் பொருட்டும் கலங்காத, கசங்காத உன்னதமான அறிவு…

ஒரு குழந்தை உன்னைவிட அறிவாளியாக இருப்பதைக் கண்டு நீ வியக்கலாம்… அது உன் குழந்தையாக இல்லாத நிலையில்… அப்பொழுது உன் குழந்தை அறிவிலியா? இல்லை… உனக்கு பிரித்துப்பார்க்க தோணாது. அதுதான் காரணம்.

பொதுவாக சொல்வது போல “நான் மிகுந்த அறிவாளி… கல்வி என்னை பாழ் செய்துவிட்டது” என்ற வாசகங்களில் உண்மை இருப்பதாகவே நான் நம்புகிறேன். அதற்காக கல்வி கற்கவேண்டாமா? நான் அப்படியா சொன்னேன்… இல்லை… கல்வியின் முழு பயன் நாம் கற்கவில்லை என்பதுதான் உண்மை.

படிக்காத மேதை என்று அழைக்கபடும் மனிதருக்கு தனித்த புதன் ஆட்சி அல்லது உச்சத்தில் இருப்பதை அறியலாம். பெருந்த்தலைவர் காமராஜருக்கு இருந்திருக்கலாமோ?

இப்பொதைய காலங்களில் கல்வி கற்ற, கற்றுக்கொண்டிருப்பவர்கள் அதிகம், அதிகம். பொதுவான கல்வி என்னதரும்?

என்ன… வேலைதருமா? அதுசரிதான்… ஆனால் அறிவையும், பண்பையும் அந்தக்கல்வி தருவதில்லையா? அல்லது தருவதே இல்லையா?

ஒரு நூறுபேரில் 90 நபர்கள் படித்தவன் என்றால் அந்த இடம் எவ்வளவு அற்புதமான் நிகழ்வை கொண்டதாக இருகிறது… உணந்திருக்கிறீர்களா? 90 நபர்களுக்கே இப்படியான உன்னதமென்றால் கிட்டதட்ட 80 கோடி படித்தவர்களால்தானே இந்தியா இப்படியான சுபிட்ஷம் பெற்றிருக்க வேண்டும்.

சும்மா… புல்லரிக்குதுல்ல… 🙂

அப்படி நிகழ்கிறதா?

கிரக மறுப்பாளன் கூட அனேகமாக படித்தவனாகவே இருப்பான்… நல்லது… இல்லாத ஒன்றை நம்புவதும், இருப்பதை மறுப்பதுமே படித்தவனின் கொள்கையாக இருக்கிறது. மிக முக்கியமாக ஒருவன் நம்பிக்கையை குலைப்பது. அவநம்பிக்கையை குலைக்க பழகுங்கப்பா… அதாவது உதவும்.

கல்வியை தரும் கிரகங்கள், அந்த கல்விக்குப்பிறகு அவனை கைவிட்டு விடுகிறதா? இல்லவே இல்லை.

கல்விக்குப்பிறகு கிரகங்கள் அவனை தவறாக வழி நடத்துகிறதா? அதுவும் இல்லை.

இப்பொழுதெல்லாம் “நீங்க என்ன படிச்சிருக்கீங்க என்று கேட்டால்…” அடுக்கடுக்கான பட்டங்களும், சான்றிதழ் படிப்புக்களும் தெரிய வருகின்றன. இந்தனை கற்றும் தனக்கோ, வீட்டுக்கோ, நாட்டுக்கோ பலன்?

வேலையும், அதற்குண்டான பணமும் போதுமா? பொதுவான இந்த மனநிலை வருவித்துக்கொள்வது தான்…

பணம் வேண்டுபவனுக்கு ஆயிரமும் போதும், இன்னும் வேண்டும் என்பவனுக்கு எந்த ஆயிரமும் பத்தாது.

உன் ஜாதகம் ஒரு திறந்த புத்தகம். கல்விக்கு முன், கல்விக்குப்பின் கிரகங்கள் அப்படியேதான் இருக்கின்றன… உன் தகுதியும், நிலையும், ஆரம்பமும், நிகழ்வும், முடிவும் கிரகங்கள் முன்பாகவே சொல்லிவிட்டன.

தன்னாலும், பிறராலும் ஒருவனின் வாழ்வில் ஆரம்பகால கல்வி வழிக்காலத்தில் ஒரு சின்ன நிறுத்தம், நிகழ்கிறது… உணர்ந்தவன் உயர்கிறான்… முன்னால செல்லும் ஆட்டுக்கும், பின்னால் தொடரும் ஆட்டிற்கும் நிறைய வித்தியாசமிருப்பது தெரியும்தானே?

எந்த கல்வி, எப்பொழுது உனக்கு முடிந்ததாக் கருதுகிறாயோ… அன்றைக்கு தொடர்கிறது… உனக்கான மறு ஆட்டம்… நீ ஆட்டத்தை எதிர்கொள்ளாமல் தப்பிக்க பார்ப்பது முதல்படி… இப்பொழுதைய ஆட்ட நிலைக்கும் அதுதான் காரணம்… உன் காய்களை வெட்டுக்குத்தா… நீ ஆட்டத்திலிருந்து விலகி விடுவாய்… இல்லையா? மகனே உன் சமர்த்து…

இந்த கட்டுரை மனதில் “ஸ்பார்க்” ஆன செய்தி மட்டுமே… எனவே… கேள்விகள் தொடரட்டும்…

அடுத்த சாளரமும் திறக்கும்…

என்னைப்பற்றி

Advertisements

3 thoughts on “என் சாளரம் வழியே வானம் – 4 by Sugumarje

  Vinoth said:
  March 23, 2011 at 1:19 pm

  சுகுமார்ஜி…
  உஙக கருத்திலிருந்து நான் வேறுபடுறேன்….
  கல்வி ஒரு கருவி அவ்வளவே…
  //..ஒரு நூறுபேரில் 90 நபர்கள் படித்தவன் என்றால் அந்த இடம் எவ்வளவு அற்புதமான் நிகழ்வை கொண்டதாக இருகிறது… உணந்திருக்கிறீர்களா? 90 நபர்களுக்கே இப்படியான உன்னதமென்றால் கிட்டதட்ட 80 கோடி படித்தவர்களால்தானே இந்தியா இப்படியான சுபிட்ஷம் பெற்றிருக்க வேண்டும்…//

  படிப்பவர் கூடினால் நாடு சுபிட்சம் பெறும் ?

  இல்லை ….
  இல்லை
  இல்லவே இல்லை…

  நாட்டுக்கு நன்மை செய்ய படிப்பு வேண்டியதில்லை.. நல்ல மனம்போதும்..

  போன நூற்றண்டில் அவா மட்டும் தான் படித்திருந்தனர்.. என்ன நடந்தது?
  வெள்ளைர் ஆட்சியில் அவா மட்டும் எல்லா உயர் பதவியும் அடைந்தனர்..
  என்ன நல்ல திட்டம் வந்தது? வெள்ளையர் தந்தது ரயில் தந்தி .. போன்றவை..
  அதுவும் அவர்களின் நிர்வாக வசதி+ வணிக வசதி கருதி…

  மற்ற மக்கள் மதம் மாறி, படித்து தனி மனித வாழ்வில் ஒரு வருமானம் தரும் நிரந்தர
  வேலையை அடைவதையே லட்சியமாக்கினர். இதில் நாட்டுகு என்ன நன்மை?

  இந்தியாவில் முதல் குடி நீர் வழங்கும் திட்டம் ஈரோட்டில் பெரியார் செய்தார்.
  5ம் வகுப்பு படித்தவர் அவர்.. தமிழகத்தின் எல்லா வளர்ச்சி திட்டங்களும் அண்ணாவுடன் நின்று போனது… காமராஜர் என்ன படித்தார்?

  அதோல்லாம் விடுங்க… இப்போ கட்டிங், கமிஷன் வாங்கிட்டு மணல் கொள்ளையில் இருந்து, ஆக்ரமிப்பு,ன்னு எதையும்…கண்டுக்காமல் இருக்கும் அதிகாரிகள் எத்தனை ஆயிரம் பேர் ?
  அரசியல் வாதிகள் வேண்டுமானல் படிக்காமலும் இருக்கலாம். அதிகாரிகள் அனைவரும் படித்தவர் தானே… அப்புரம் எப்படி இத்தனை ஊழல் சத்தியம்….

  உண்மை என்னவெண்றால்….

  கல்வி வெறும் கருவி.. கத்தி போல…அதுவும்..கூர்மையான கத்தி…
  நல்லெணம் உள்ள வைத்தியருக்கு கத்தி கிடைத்தால் ,அதனால் உயிரை காக்க போராடுவர்.
  திருடனுக்கு அதே கத்தி கிடைத்தால் .. வழிப்பறி..கொலை செய்வான்…
  தவறு கத்தியில் இல்லை.. மனதில் உள்ளது…

  ஆடிட்டர்கள்…
  இவர்கள் கையெழுத்திட்டால் .. எந்த கேள்வியும் இல்லாமல் அரசு இவர்கள் தரும் கணக்கை ஏற்கும்… இவர்கள் பிஸ் வாங்கிகொண்டு.. வரி ஏய்ப்பது எப்படி என்று பாடம் நடத்துவர்…

  வக்கில்..
  இவர்களையும் உஙகளுக்கு தெரியும்.. நொட்டரி பப்ளிக் கையெழுத்திட்டால் எந்த பத்திரமு செல்லும். .. இவர்கள் செய்வது பற்றி .. சொல்லவேண்டியது இல்லை…

  இப்போ சொல்லுங்க.. இன்னுமா படித்தவர்கள் நல்லது மட்டும் செய்வான்னு நம்புறிங்க?

   S Murugesan said:
   March 23, 2011 at 5:36 pm

   வினோத் ஜீ,
   கல்வி பயில்வதே வெறும் கல்வியால “மனிதன்” வளரவே மாட்டான் என்பதை புரிந்துகொள்ளத்தான். எல்லாரும் கல்வி பெற்றால் எல்லாரும் இந்தமுடிவுக்கு வருவாய்ங்க, உண்மையில வளர என்ன தேவைனு ரோசிக்க ஆரம்பிப்பாய்ங்க

    sugumarje said:
    March 24, 2011 at 12:10 pm

    //இப்போ சொல்லுங்க.. இன்னுமா படித்தவர்கள் நல்லது மட்டும் செய்வான்னு நம்புறிங்க?//
    அய்யா வினோத்… நான் எதிர்மறையாகத்தான் சொல்லியிருந்தேன்…
    ஹ, ஹ்ஹா… தாங்கள் உண்மை என்று நம்பிவிட்டீர்களே… என்னை பொறுத்தவரை கல்வி ஒன்றுமில்லை…ஆம்… நான் சொல்லவந்தது இதுதான்… கல்வியால் மனிதமனம் திருத்தம் என்பது இல்லவே இல்லை…

    //..ஒரு நூறுபேரில் 90 நபர்கள் படித்தவன் என்றால் அந்த இடம் எவ்வளவு அற்புதமான் நிகழ்வை கொண்டதாக இருகிறது… உணந்திருக்கிறீர்களா? 90 நபர்களுக்கே இப்படியான உன்னதமென்றால் கிட்டதட்ட 80 கோடி படித்தவர்களால்தானே இந்தியா இப்படியான சுபிட்ஷம் பெற்றிருக்க வேண்டும்…//
    இதற்கு அடுத்தவரி “ சும்மா… புல்லரிக்குதுல்ல…”
    அப்படியான நிகழ்வு இத்தனைக்காலமாக நடக்கவில்லையே… இனிமேலும் நடக்காது போய்விடுமே என்ற கவலையில்தான் இந்த பதிவே வந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s