மரணம் என் ஆசான்

Posted on

ஜாதகசக்கரத்துல ஒன்பதாவது இடம் அப்பவை மட்டுமில்லை. குருவை கூட காட்டுது. ஐ மீன் எப்படி ஃபிகரை கரெக்ட் பண்றதுனு கத்துக்கொடுத்த குருவை இல்லிங்கண்ணா. குருவை ஆசான் என்றும் சொல்றோம். ஆசான் என்ற இந்தி வார்த்தைக்கு ஈசினு அர்த்தம். கடினமான மேட்டரை எளிமையாக்கி தர்ரவுகளை ஆசான் என்று சொல்வது பொருத்தம் தானே.

நிற்க என் லக்னம் கடகம். அஷ்டமாதிபதி சனி. நமக்கு குருவை காட்டற ஒன்பதாம் இடத்துல சனி தான் உட்கார்ந்தார். அஷ்டமம்னா தெரியுமில்லை. மரணத்தை காட்டற இடம்.மரணத்தை தரவேண்டியவரு குருவை தரவேண்டிய இடத்துல உட்கார்ந்ததாலயோ என்னமோ மரணம் என்னை நல்லாவே மோல்ட் பண்ணுது.

சொந்த மேட்டரில் கூட அக்கறை இல்லாத பார்ட்டிய “எவனோ செத்தான் எனக்கென்ன போச்சுன்னு இருப்பான்யா”னு சனம் காத்துப்பிடுங்குவாய்ங்க. ஆனால் ஆரு செத்தாலும் தாளி நானே செத்தது போல ஒரு உணர்வு எனக்கு வரும்.

ஆறாங்கிளாஸ் படிக்கிறச்ச சலபதினு ஒரு சகபாடி. பெரியார் சீடன். நம்ம ஜாதகம் எப்படின்னா ஜல தத்துவம் (கடகம்) ஆரோட சேர்ந்தா அவிக புத்தி தொத்திக்கும். ( 30 க்குஅப்பாறம் ராசி வேலை செய்ய ஆரம்பிச்ச பிற்பாடு இந்த இழவை விட்டுத்தொலைக்கமுடிஞ்சது) ஞானும் சலபதியும் சேர்ந்து புராண புருடாக்களை பத்தி ஒரு கையேடே தயாரிச்சுட்டம்னு வைங்க.

திடீர்னு ஒரு நாள் அவன் ஸ்கூலுக்கு வரலை, இன்னாடா மேட்டருன்னு கேட்டா ரயில்ல தலைய கொடுத்துட்டாங்கறாய்ங்க. எப்படி இருக்கும்? விவரம் தெரிஞ்ச பிற்பாடு மொதல் சாவு. அதுவும் தற்கொலை. அங்கன இருந்து எத்தனை சாவு?

ஏற்கெனவே டெண்டர் ஹார்ட்டட் ஃபெலோ. சொம்மா புருவத்தை நெறிச்சு “என்னா வந்தே”னுட்டு கேட்டா போதும் தொண்டையெல்லாம் காஞ்சு பொயிரும். கண்,காது எல்லாம் சூடாயிரும். (இதெல்லாம் 1997 வரை கூட இருந்தது – அப்பம் 30 வயசு) . இதுல சாவு மேல சாவு. 1984 ல ஆரம்பமாச்சு. மொதல்ல அம்மா, 1994 ல அப்பா, 2000 த்துல சின்ன அண்ணன், 2007ல பெரிய அண்ணன்.

1984 ல நாம ஏறக்குறைய ரஜினி காந்த் ரேஞ்சுல இருந்தம். (அவிக அம்மா செத்துப்போனப்ப பாடி மேல இருந்த ரோசா பூ ஒன்னை எடுத்து சட்டையில குத்திக்கிட்டு சாவுக்கு வந்தவுக சைக்கிள்ள ஊர் சுத்த போயிட்டாராம்)

நமக்கு ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே”னுட்டு பாடற தினுசுல அஃபெக்சன் எல்லா கடியாது. ஏதோ மார்ல கட்டின்னாய்ங்க. நாளு விசேஷம்னு லேட்டா செக்கப்புக்கு போனாய்ங்க. கேன்சர்னுட்டாய்ங்க. மத்தவுக மாதிரி பில்டப் தர்ர கெப்பாசிட்டி எல்லாம் அப்ப கிடையாது. இப்ப உண்டு. ஆனால் அதை பிரம்மாஸ்திரம் மாதிரி வேற வழியே இல்லைங்கற செகண்ட்ல உபயோகிப்பேன் நிச்சயமா.

எந்த ஒரு பில்டப்பு தராம என்னால முடிஞ்ச அளவுக்கு சர்வ் பண்ணேன். எனக்குள்ள எந்த வித கில்ட்டியும் கிடையாது. மத்தவுகளோட பொய் வேஷத்தை அம்மா செத்துப்போன தினம் தான் பார்த்தேன். “அடங்கோத்தா இதுவும் ஒரு பொழப்பா”ன்னுட்டு ஆயிருச்சு.

“நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்” வேவ் லெங்த்துல இருந்தது என் யோசனை. ஒய் பிக்காஸ் யதார்த்தத்துல இருந்து நான் எஸ்கேப் ஆகலை. ஃபேஸ் பண்ணேன். 17 வயசுக்கு இருக்கக்கூடிய எல்லாவிதமான டைவர்ஷனும் இருந்தாலும் எதுக்குன்னு தெரியாமயே அம்மாவுக்கு அசலான சர்வீஸ் பண்ணேன். நம்பினா நம்புங்க.. சம்பந்தா சம்பந்தமில்லாம அவிகளை வெறுத்தவன்,தூத்தினவன்லாம் குடம் குடமா கண்ணீர் விட நமக்கு மட்டும் ஊஹூம்..

அடுத்த டர்ன் அப்பா, அடுத்தடுத்த டர்ன்ல பாட்டி, சின்ன அண்ணன் ,பெரிய அண்ணன் எல்லாம் காலி. அந்த மரணங்கள் எல்லாமே எனக்கு ஒரு அலாரம் மாதிரி ஒர்க் அவுட் ஆச்சு. ஒட்னே ஞானம் கீனம்னு கணக்கு பண்ணிராதிங்க. உப்பு சப்பில்லாத என் லைஃப்ல தாளி இங்கன எதுவும் நிரந்தரமில்லை. மரணத்துக்கிட்டே எவனும் ஜெயிக்கிறதில்லை. எப்படியா கொத்த ஜூரியும் செத்துத்தான் ஆகனும்.

மரணத்தை ஜெயிக்க என்ன வழி? ஆங்.. பூத உடல் அழிந்தாலும் ங்கொய்யால புகழுடல் சாகக்கூடாதுங்கற மாதிரி குறுக்கு புத்தி வேலை செய்ய ஆரம்பிச்சது.

சாவுங்கற டெட்லைன் நெருக்கமா இருக்கிறாப்லயே ஒரு ஃபீலிங். இதனால நான் நிறைய அவசரப்பட்டேன், அவமானப்பட்டேன்,வாழ்க்கையில அடிப்பட்டேன் ஆனால் மரணத்தை நினைவில் வச்சே வாழற ஒரு கெட்டப்பழக்கம் வந்துருச்சு.

மரணத்தை செயிக்க புகழ்ங்கற ஃபார்முலாவோட தான் புறப்பட்டேன். நம்ம புகழ் வேட்டைக்கு கன்னி வேட்டை பெரிய தடையா இருந்தது. அதை தவிர்க்க பிரம்மச்சரியம்னு பை.தனமா இறங்கினேன். ஆனால் அதுல கொடிகட்டின 6 மாசம்தேன் நம்ம லைஃப்லயே ஒரு தபஸ் மாதிரி.

அந்த தபசோட பலனா தான் 1986லயே ஆப்பரேஷன் இந்தியா2000 த்துக்கான விதை என் மனசுல விழுந்துருச்சு.

உங்க பையனோ பெண்ணோ தப்பு பண்ணிட்டா நீங்க காட்டுக்கத்தலா கத்திக்கிட்டிருக்கிறச்ச அவனோ அவளோ செல்ஃபோனை நோண்டி கிட்டிருப்பாய்ங்களே அப்படி இந்த உலகமும், மக்களும் எதுக்ககாகன்னு தெரியாம வேக வேகமா ஓடிக்கிட்டிருந்தப்ப நான் அவிக ஓட்டத்துக்கான காரணங்களை ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருந்தேன். எனக்குள்ள ஆ.இ உருவாக ஆரம்பிச்சது.

அதான் மரணம் நாலு கால் பாய்ச்சல்ல வேகமா வந்துக்கிட்டிருக்குல்ல அப்பாறம் என்னத்தை நீ ஒடிப்போய் அதை ரிசிவ் பண்ணிக்கிறதுங்கற மாதிரி எண்ணம் நம்முது. புற உலகத்துல என்னதான் நான் ஒரு ப்ரெட் ஹண்டரா இருந்தாலும் ” நான் தாண்டா என் மனசுக்கு ராஜா”ன்னுட்டு வாழ்ந்துக்கிட்டிருந்தேன்.

இந்த உலகத்துலயே வேலை வெட்டியில்லாம இருந்தது ரெண்டே பேரு. ஒருத்தன் நான். இன்னொருத்தரு? .. வேணாங்கண்ணா ஒரே நேரத்துல தி.க காரவுகளும், இறை நம்பிக்கையாளர்களும் ஓரணியில திரண்டு வந்து திட்டி தீர்க்க ஆரம்பிச்சுருவாய்ங்க.

எப்படியோ இந்த உலகத்தால நிராகரிக்கப்பட்ட அ ஹிப்பாக்ரட்டிகல் முக்கியத்துவத்தால கடுப்பான ரெண்டு பார்ட்டிங்க கொஞ்சம் போல நெருங்கி வர ஆரம்பிச்சோம்.ஹாட் லைன்ல பேசிக்கிற அளவுக்கெல்லாம் போயிருச்சு.

அந்தாளு நம்ம மேல ரெம்ப டிப்பெண்ட் ஆக ஆரம்பிச்சுட்டாரு.குழந்தையில்லாத சவுண்ட் பார்ட்டிங்க பக்கத்து வீட்டு குழந்தைகளுக்கு வைரக்கல்லை கூட தூக்கி அவிக கிட்டே கொடுத்து விளையாட சொல்றாப்ல என்னென்னத்தையோ நமக்கு டிஸ்க்ளோஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாரு.ஏறக்குறைய நம்ம நிலைமை கூட அவரை போலவே ஆயிருச்சு. பேரு போச்சு, ஆத்தா,அப்பன் போயிட்டாய்ங்க. சொந்தம் பந்தம்லாம் ஃபணாலாயிருச்சு. சனம் அவருக்கு போற்றி,அகவல் எல்லாம் படிக்கிறாப்ல நமக்கு படிச்சுட்டு எல்லாத்தையும் ச்சூ காட்டிட்டு அவிக சாப்பிட ஆரம்பிச்சுட்டாய்ங்க.

ஹ்யூமன் பாடி .. , பசி பட்டினி ,சொறி சிறங்கு எல்லாம் வந்து போன பாடி , இதுல அட்ட துட்ட சாதனைகள் கண்ல மட்டும் உசுரை வச்சிக்கிட்டு இருந்த கட்டம் ஒன்னிருக்கு, அப்பாறம் என்ன நினைச்சாரோ என்னமோ..

இதையெல்லாம் நான் நாலு பேருக்கு சொல்லனும்னு ஒரு எண்ணமோ என்னமோ .. கொஞ்சமா கழட்டிவிட்டாரு. நானும் வாலை அவுத்துவிட்டேன். அது இன்னாடான்னா கோபுர உயரத்துக்கு நம்மை துக்கிருச்சு…

பழைய ஞா எல்லாம் பஜ்னு ஆயிருச்சுதான். இல்லேங்கலை.ஆனால் ஒரே ஒரு மரணம் போதும். அட ஒரு திரஸ்காரம் போதும்.. ஸ்லீப் மோட்ல இருக்கிற டிஸ்க் பரபரனு சுத்த ஆரம்பிச்சுருது…

அதனாலதான் அடிச்சு சொல்றேன்.. மரணம் என் ஆசான். உங்க ஆசான் யாருனு தெரிஞ்சிக்கனும்னா நாளை வரைக்கும் காத்திருங்க ப்ளீஸ்..

Advertisements

11 thoughts on “மரணம் என் ஆசான்

  தனி காட்டு ராஜா said:
  March 23, 2011 at 5:02 am

  //” நான் தாண்டா என் மனசுக்கு ராஜா”ன்னுட்டு வாழ்ந்துக்கிட்டிருந்தேன்.//

  You mean தனி காட்டு ராஜா 🙂

   S Murugesan said:
   March 23, 2011 at 9:08 am

   வாங்க ராசா,
   அன்னைய தேதிக்கு நம்ம மனசு ஒரு காடுதேன். இப்பம் கொஞ்சம் கொஞ்சமா ஜூவா மாத்திக்கிட்டு வரேன்.

  rajesh said:
  March 23, 2011 at 5:07 am

  நாளைய தினத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

   S Murugesan said:
   March 23, 2011 at 9:14 am

   வாங்க ராஜேஷ்,
   நாளைய தினத்தை நானும் உங்களை போலவே எதிர்பார்க்கிறேன். நாம எழுதப்போறது என்னனு முன் கூட்டி தெரிஞ்சாத்தானே, அதனால எழுதி தொலைச்சது என்னனு உங்களை போலவே நானும் பார்த்து தெரிஞ்சுக்கறேன்

  vinoth said:
  March 23, 2011 at 5:18 am

  i too waiting for tomorrow

  vinoth said:
  March 23, 2011 at 5:19 am

  did u saw my mail on writing in tamil, for posting sir ?

   S Murugesan said:
   March 23, 2011 at 9:04 am

   வாங்க வினோத்,
   மரணத்தை பத்தி எழுதி டர்ராக்குங்கனு சொல்லியிருந்திங்க.

   அததுக்கு கால நேரம் வரமாணாமா? நேத்து வந்தது.

    Vinoth said:
    March 23, 2011 at 10:14 am

    சரிதல… நீங்க எப்ப சொல்றிங்களோ அப்ப நான் எழுதின தமிழில் டைப்பண்றத பதிவுபோடறேண்..

    S Murugesan said:
    March 23, 2011 at 12:10 pm

    வினோத்,
    நான் சொல்றப்ப பதிவு போடவா உங்களை ஆத்தரா இன்வைட் பண்ணது. உங்க விருப்பம் பாஸ்.. எப்பவேணா போடுங்க..

    வாழ்த்துக்கள்

  Vinoth said:
  March 23, 2011 at 10:59 am

  மரணம்…. முடிவு….
  ஒரு கல்யாண விருந்து சாப்பிட போறோம்னா…
  இல்லை ஒரு சைவ/ அசைவ ஓட்டல் புல் மீல்ஸ் சாப்பிட போன….

  நேரத்துக்கு போய்..
  எல்லா அய்ட்டமும் கிடைத்து…
  சப்ளையர் நல்ல சர்விஸ் கொடுத்து…
  திருப்தியா சாப்பிட்டலாம்…
  சாப்பிட பின் நிறைவும் இருக்கும்.

  நேரம் தப்பி போய்..
  தயிர் இருந்த ஊருகாய் இல்லைனு இருந்து..
  கெஞ்சி கூப்பிடா கூட சப்ளையர் நம்ம டேபிள் பக்கம் வரலைன்ன..
  திருப்தியா சாப்பிட்ட..
  சாப்பிட பின் நிறைவு இருக்குமா?

  முடிவு…மரணம் இனிமையாய் இருக்கணும்னா
  வாழ்க்கை இனிமையாய் வாழ்ந்து இருக்கணும்..
  வாழ்க்கை இனிமையாய் இருக்கணும்னா…
  நம் ஜாதகம் நல்லா இருக்கணும்…

  ஆனா ஜாதகம் சரியில்லைனாலும் வாழ்க்கையை இனிமையாக்க முடியும்….
  எ.சி ரூமில்..மெத்தையில் படுப்பவர்கள் எல்லாரும் நிம்மதியாய் தூங்குவதில்லை.
  கிழிந்த பாயில் படுப்பவர் எல்லாரும் தூங்காமலும் இருப்பதில்லை..
  ஆனா தூக்கம் நமது விருப்பம்…

  ஜாதகம் நல்லா இருந்தா எ.சி ரூம் கிடைக்கும்….
  நம் பிறந்த ஜாதகத்தை மாற்ற முடியாது…
  பாய் கிடைத்தாலும் ஏற்றுகொண்டால் நிம்மதியான தூக்கம் நிச்சயம் ….

  இப்படியாக ஏற்றுகொண்டு வாழ்ந்தால் வாழ்கையில்
  எது கிடைத்தாலும் கிடைக்காவிட்டலும்.
  நிம்மதி கிடைக்கும்,வாழ்க்கையில் நிறைவு இருக்கும்
  வாழ்க்கையில் நிறைவு இருந்த …
  சாவிலும் சந்தோஷம் இருக்கும்..
  பயம் இல்லாமல், குறை இல்லாமல் நிறைவான மரணம் …
  அதுவும் புத்தாண்டு வாழ்த்தா ஜென் குரு சொன்ன மாதிரி

  தந்தை சாக,
  மகன் சாக..
  பேரன் சாக..ன்னு சாகனும்..
  அதுவும் உலக மக்கள் எல்லோரும் இப்படி சாகணும்..
  இது பேராசை தான்..
  அனா என்ன பண்ண ஜக்கி குருதேவ் சொல்றாப்போல் அத்தனைக்கும் ஆசைபடுரோம்.

  இதுக்காக தான் உங்களை மரணத்தை பற்றி எழுத சொன்னேன்…
  என் கோரிக்கையை ஏற்று எழுதுவதற்காக உங்களுக்கு …
  உலகின் 700 கோடி இப்போதய மக்கள்
  மற்றும் வரப்போகும் பல்லாயிரம் கோடி மக்கள் சார்பாக
  நன்றி!.. நன்றி!!.. நன்றி!!!…

   S Murugesan said:
   March 23, 2011 at 12:08 pm

   வாங்க வினோத்,
   பிரம்மச்சரியம் – செக்ஸ் , பசி – உணவு ,வாழ்வு -சாவு இதெல்லாம் பரஸ்பர முரண்பாடு கொண்டதா தெரியும். ஆனால் பிரம்மச்சரியம் செக்ஸ் பவரை அதிகரிக்கும் ( நான் சொல்றது இடைவெளிதான் – சுய சித்திரவதை அல்ல)
   பசி உணவு எடுக்கும் திறனை அதிகரிக்கும், சாவு வாழ்வை இனிமையாக்கும்.

   கேவலம் நாலணா தொடர்கதைக்கே பொங்கல் டு பொங்கல் னுட்டு டெட்லைன் வைக்கிறாய்ங்க. ஏன்னா அப்பத்தேன் எழுதறவனுக்கும் ,படிக்கிறவனுக்கும் சுவாரஸ்யமா இருக்கும்.

   சாவை நினைக்கிறவன் சரியா வாழ்வான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s