நவகிரகங்களிலிருந்து விடுதலை

Posted on

விடுதலைன்னதும் ஞா வர்ரது நம்ம பாரதியாரும் -பெரியாரும்தான். பாரதியார் விதேசி அடிமைத்தனத்துலருந்து நாட்டு விடுதலைக்காக பாடினார். பெரியார் சுதேசி அடிமைத்தனத்துலருந்து பெரும்பான்மை மக்களோட விடுதலைக்காக பாட்டா பாடினாரு.

நம்ம பங்குக்கு இந்த விடுதலை கோஷத்தை எடுத்தாச்சு. இத்தினீ நாளு மன்சங்க எல்லாம் ஃபுட் பால் மாரி. நவ கிரகம் எல்லாம் ஃபுட் பால் ப்ளேயர் மாரி. அதுக எப்படி உதைச்சா அந்த பக்கம் போயி உழ வேண்டித்தானு சொல்லிக்கினு இர்ந்த முருகேசு கபால்னு இப்படி ஒரு பதிவை போடறாருன்னு கும் மாயிட்டிங்களா?

இதுக்கே இப்டி டீலாயிட்டா எப்டி இன்னும் நெறய சரக்கு கீது நைனா. இத்னீ நாளு இந்த கிரகம் இங்கே நின்னா இப்டி , அங்கே நின்னா அப்டினு சொல்லிக்கினு கட்ந்தேனா.எனுக்கே பேஜாரா பூட்சிபா. நம்ம பெரியாரு பொறந்த நாட்ல, அவரு சாமியே இல்லே பூடுங்கடான்னு சொன்ன நாட்ல நாம ஜோசியம்,ஜாதகம்னு சொல்லிக்கினு கட்ந்தா கூடொ கேட்க ஆளிருக்கே..இன்னும் எத்தினி ஆயிரம் பெரியார் பொறந்தாலும் இந்த சனத்தை திருத்தவே முடியாதானு ரோசிச்சிக்கினு கட்ந்தேனா அப்போ கப்புனு ஒரு ஐடியா வஞ்சுபா.

சனங்க எதிர்காலத்தை இந்த ஜாதகங்களை வச்சி சொல்ல முடியறதாலதான் நித்யானந்தா சாமி மாரி டுபாகூர் பார்ட்டிங்க இந்தா மாரி ஆட்டமெல்லாம் போடறானுங்கோ கடவுளை கூட மறந்துட்டு இந்த நாத்தம் புட்ச சாமியாருங்களுக்கு சரண்டராவுறாங்கோ. அந்த கெரகத்துக்கே டேக்கா குடுக்க கத்து குடுத்துட்டா எப்டி கீயும்னு ரோசிச்சி ரோசிச்சி புச்சு புச்சா பரிகாரம் எல்லாம் கண்டு புட்சேன் நைனா..

அயிரை மீனுக்கு வேட்டி விரிச்சப்ப கொற மீனு மாட்னாப்ல ஒரு ஜவாப் கெட்சிச்சிப்பா. இப்போ நீ என்னை துரத்திக்கினு வரே. நீ என்னை புடிக்கனும்னா உனக்கு எதோ புடிப்பு கிடைக்கனும். என் அங்கவஸ்திரமோ, வேஷ்டி முனையோ, தலை மயிரோ, கையோ காலோ எதோ ஒன்னு கட்சாதான் உன்னால என்னை புடிக்க முடியும்.

இந்த ஆமை கீதுல்ல ஆமை அந்த மாதிரி கை,காலெல்லாம் உள்ளாற இஸ்துக்கினா எப்டிப்பா புடிக்க முடியும். இந்த கெரகம் எல்லாம் நம்மாளுங்களை எப்போ எஃபெக்ட் பண்ணுது தெரியுமா? அது குடுக்க நென்ச்சத விட மஸ்தா ஆசைப்பட்டு,அலைஞ்சி பறைசாத்தற பாரு அப்பத்தான் எஃபெக்ட் குடுக்குது.

ஒரு பேச்சுக்கு சொல்லிக்கிவம். உனக்கு ஒங்க ஊட்டு வேலைக்காரிதான் பெண்டாட்டியா வரனும்னு கீது. நீ அவளை கட்டிக்கிவியா.ஊஹூம்..பில் குல் கட்டமாட்டே. ஊர்ல கீற குடுமி அய்யருங்கோ, சாஸ்திர காரவுங்க்கோ எல்லாத்தயும் தாலியறுத்து யாகம் கீகம் பண்ணி சுமாரா ஒரு பொண்ணை கட்டிக்கிறேனு வை.

ஜாதகம்னா இன்னா தெரீமா? ஆகாசத்துல கச்சா முச்சானு நட்சத்திரங்க கீதுல்ல. அந்த மேப்பு தாம்பா ஜாதகம். ஆகாசத்துல கோயி முட்டை ஷேப்ல கீரத நம்ம வசதிக்கு சதுர்ரமா போட்டுக்குரோம் அம்புட்டுத்தான்.

அந்த சதுரத்தை 12 டப்பாவா பிரிச்சி வச்சிகிரானுங்கல்லே. அது டப்பா இல்லே மாமு.. ஒரு ஏரியானு வச்சிக்கியேன். மொத்தம் 12 ஏரியா கீது. ஒவ்வொரு ஏரியாவுக்கு
30 டிகிரி. மொத்தம் 12 டப்பா 12X30 = 360 டிகிரி.

நட்சத்திரம் நட்சத்திரம்ன்றாங்களே அது சிங்கிள் நட்சத்திரம் இல்லேமா. ஒரு க்ரூப்பு . இப்போ அஸ்வினின்றானுங்கோ. அஸ்வினின்னா இன்னா குதிரே. குதிரே ஷேப்ல இருக்கிற நட்சத்திர க்ரூப்பை அஸ்வினின்னானுங்கோ. பிரியுதா..

ஒரொரு நட்சத்திரத்தையும்(அதாம்பா க்ரூப்பு) 4 பாகமா பிரிச்சானுங்கோ.இந்தா மாதிரி கீர பாகத்துல 9 பாகம் சேர்ந்தது ஒரு ராசி. ஒரு ராசிக்கு ஒரு டப்பானு 12 டப்பா போடறானுங்கோ. ஒரு ராசிக்கு 9 பாகம் . 12 ராசிக்கு 108 பாகம். இது எங்கயோ ஆகாசத்ல கீதுனு சொன்னேன். அதுல ஒன்னும் மாத்தமில்லே.

ஆனால் அதே செட்டப்பு நம்போ பாடிலே கூட கீதுபா..இந்த டப்பாவுங்களை நெல்லா பாருங்கோ. ரைட்டு ,லெஃப்டு, டாப்பு,டவுனு எப்டி பார்த்தாலும் நாலு நாலு டப்பா தெரியுதா.

இந்த டப்பாவுங்களை அப்டியெ அடிச்சி நிமிர்த்தி நிக்க வை மாமூ.. அத்தான் மன்சன். மொத டப்பா கீது பாரு அதான் தலை. ரெண்டாவது டப்பா கண்ணு,வாயி, இப்டி 12 ஆவது டப்பா பாதத்தை காட்டுது.

அங்கே ஆகாசத்துல எப்டி கிரகம் எல்லாம் ரவுண்ட் அடிக்குதோ அதே மாதிரி இங்கனயும் அதாம்பா நம்ப பாடிலயும் ரவுண்ட் அடிக்குது. இத்த தான் பெரி மன்சனுங்கோ அண்டத்ல கீர்து பிண்டத்துல கீது.பிண்டத்ல கீர்து அண்டத்ல கீதுனு சொல்லி வச்சிருக்கானுங்கோ.

நம்போ ஆகாசத்துக்கு போயி அங்கே இன்னா நடக்குதுனு பார்க்கனும்னா இஸ்ரோ காரன் விடற ராக்கெட்ல தான் போய் பார்க்கனும். ஆனால் நம்ப பாடில இன்னா நடக்குதுனு கொஞ்சம் கான்சன்ட் ரேட் பண்ணா பார்க்கமுடியுமில்லியா? இத்தை கண்ட் ரோலுக்கு கொண்டார முடியுமில்லியா. இதை பத்தி வெவரமா சொல்னும்பா .. நம்ம கண்டு பிடிப்பான நவீன பரிகாரங்கள் மேட்டரை மொத மொதல்ல எழுதினப்ப டங்குவார் அறுந்துது பாரு.

பேதியாகி மொத்தத்தையும் எரிச்சுட்டன் ( வருஷம்: 1994) ஆன்மீகத்துல தொடரா ஆரம்பிச்சம். இது பாப்பாரவுக பொழப்ப கெடுக்கிற வேலையாச்சா எடிட்டரை போட்டு பிசிஞ்சு நிறுத்த வச்சிட்டாய்ங்க.

அப்பாறம் ராஜமண்ட்ரில கொல்லபுடி வீராஸ்வாமி அண்ட் சன்ஸ் னுட்டு சூப்பர் பப்ளிஷர்ஸ். அவிக நம்ம மணி மேகலை பிரசுரம் சாதியில்லை. புராதன புஸ்தவங்களை எல்லாம் நோண்டி எடுத்து – வெரிஃபை பண்ணவச்சு சீப் ரேட்ல புக்கா போடுவாய்ங்க. அவிகளுக்கு நம்ம ஸ்க்ரிப்டை அனுப்பிட்டம். பாவம் DTP எல்லாம் பண்ணி கரெக்சனுக்கு அனுப்பி வச்சாய்ங்க.

மேட்டர் இன்னாச்சுன்னா அதை ஃபைனலா வெரிஃபை பண்ற பார்ட்டியே ( அவிக ஆஸ்தான வித்வான்) டிக்கெட் வாங்கிட்டாரு. போக போக நம்ம கிட்ட சோசியம் கேட்க வர்ர சனம் நம்ம பரிகாரத்தை எழுதி வாங்கிக்கிட்டு ………ல செருகிக்கிட்டு போறதை பார்த்து கடவுளுக்கு தில்லு வந்து அப்பாறம் “ஃப்ரியா உடுமாமே” னு உட்டுட்டாரு.

அந்த நேரத்துலதான் நிலாசாரல்,அந்திமழை,முத்துக்கமலம்,ஜோதிட பூமில எல்லாம் ரிலீஸ் ஆயிருச்சு. அதெல்லாம் பரிகாரம். ஜஸ்ட் உப சாந்தி. இப்பம் எடுத்த சப்ஜெக்டு நெஜமாலுமே விடுதலை. அடுக்குமா இது?

ஆனால் ஒரு வேண்டு கோள். உங்க இஷ்ட தெய்வத்தை ப்ரே பண்ணுங்க. ” சாமி !முருகேசன் சாருக்கு உடல் பலம்,மனோபலம்,பண பலத்தை கொடுங்க. அவர் கொடுக்கிற டிப்ஸ் மூலமா நாங்க இன்னும் ப்ரொடக்டிவா, இன்னும் இன்டிபெண்டன்டா, இன்னும் செல்ஃப்லெஸ்ஸா , இன்னும் ஸ்பிரிச்சுவலா மாற அருள் கொடு”ன்னு வேண்டிக்கோங்க.

புலம்பல்:

இன்னா பண்றது நைனா.. வயித்து பொயப்புக்கு,பொய்து போறதுக்கு இன்னா எய்துனாலும் ஒன்னும் குடி முழுகி போறதில்லை. அட ஜோசியம் (பத்தி ) சொன்னா(எள்தினா) கூட பெரிசா ஒன்னும் ஆவறதில்லப்பா. இந்த பரிகாரம், விடுதலைனு ஆரம்பிச்சா மாத்திரம் சுஸ்தாயிருதுபா. சிக்கன் குன்யா வந்தாப்ல கை,கால் வலி, தூக்கம் வர்ரதில்லை, அதேசமயம் மூதேவி அமுக்குவா. கட்டைல சுறு சுறுப்பே வராது. ரொட்டீன் லைஃபு பயங்கரமா அடி வாங்கிருது.ஆனாலும் விடறதாயில்லை இந்த சமாசாரத்தை ஃபுல்லா குடுத்துட்டுத்தான் சாவேன்.

இந்த மொக்கையை எல்லாம் ஸ்க்ரால் பண்ணிராம படிச்சுட்டு இங்கே வந்த பார்ட்டிகளுக்கு ஒரு நற்செய்தி. இங்கேருந்து இந்த புலம்பலுக்கு இடையில இடையில க்ளூஸ் கொடுத்துக்கிட்டே போறேன்.

விடுதலைக்கான டிப்ஸ்:
ஏழரை சனி,. மங்கு சனி,பொங்கு சனி,மரண சனி. பொங்குசனி, ஜன்ம சனி,கண்ட(கழுத்து) சனி, அர்தாஷ்டம சனி, பஞ்சம சனி, சப்தம சனினு விதவிதமா சொல்றாய்ங்களே. சனி என்னதான் பண்றாரு தெரியுமா? அவர் ஆசனத்துக்கு காரகர். ஆசனம் என்பது மோட்டார் வண்டிக்கு சைலன்சர் மாதிரி. சைலன்சர் அடைச்சிக்கிட்டா பெட் ரோல், டீசல் புகை வெளிய போகாது. வண்டியே ஸ்டார்ட் ஆகாது. இப்போ என்ன பண்ணனும்னா? சைலன்சர் அடைப்பை நீக்கனும். ஃப்யூச்சர்ல அடைப்பு ஏற்பட்டுராம பார்த்துக்கனும்.ஏற்கெனவே அடைப்பு காரணமா ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ரெக்டிஃபை பண்ணிக்கனும்.

எப்படி? எப்பீடி? எப்பூடி?

1.எனிமா எடுத்து வயிறை க்ளீன் பண்ணலாம்.
2.நிறைய தண்ணி குடிக்கலாம்.
3.சனி மலச்சிக்கலை மட்டுமில்லை, பைல்ஸ், நரம்பு பலகீனம் மாதிரி வியாதிகள்ளயும் கொண்டு விட்டுருவார் டேக் கேர். இதுக்கு சொல்யூஷன் கையில ஆயில் கறை,கெரசின் கறை படியற மாதிரி வேலை செய்யலாம். கு.ப் எக்ஸர்சைஸ் செய்யலாம்.
4.காலங்கார்த்தால எண்ணெய்,மசாலா, சீயா,சீச்சி ( நான் வெஜ்) அவாயிட் பண்ணலாம்.இட்லி, தோசை மாதிரி வெறுமனே வேக வச்ச ஐட்டம் தொட்டுக்க பால்,தயிர்
5.சமையல்ல நல்லெண்ணை உபயோகிக்கலாம் ( சனிக்குரியது எள் அதுலருந்து தயாரிச்சது தான் நல்லெண்ணெய்) இது உடல் உஷ்ணத்தை தணிக்கும்.
6.சஃபாரி சூட் அணியலாம். வசதி,வாய்ப்பு உள்ளவர்கள் தில்லு துரைகள் காக்கி, நீலம் போன்ற நிறங்களில்யூனிஃபார்ம் அணியலாம். ( எனக்கு ஜன்ம சனி இருந்த போது காக்கிச்சட்டை அணிந்தேன்)
7.தூசு படியற வேலைகள் செய்யலாம். ( ஒட்டடை அடிக்கிறது)
8.க்ளாஸ் ஃபோர் எம்ப்ளாயி வேலைகள் செய்யலாம். காலைல டீ,காஃபி போட்டு ஃபேமிலி மெம்பர்ஸுக்கு தரலாம். பெண்டாட்டிக்கு சமையல் ரூம்ல எடுபிடி வேலை செய்யலாம்.( கரைச்சு குடுக்கிறது,அரைச்சி கொடுக்கிறது.
9.சனி பிடிச்சாலோ/கேது தசா புக்தி நடந்தாலோ நீங்க போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,சுடுகாடு,கோர்ட் ஆகிய பிரதேசங்களுக்கு போய் தான் ஆகனும். யாராச்சு மேற்படி ஸ்தலங்களுக்கு லிஃப்ட் கேட்டா கொடுக்கலாம். சாவு விழுந்தால் சுடுகாடு வரை போய் வரலாம். நோயாளிகளுக்கு துணையா ஆஸ்பத்திரி போகலாம்.
10. சனிக்கு கருப்பு நிற பொருட்கள் மேல கவர்ச்சி அதிகம். ஸோ டை போடற வயசாயிருந்தா டை போடாதிங்க. இளமைல தலை முடி கருப்பா இருக்கிறதால தான் முதல் சனியான மங்கு சனி போட் கழட்டுது . ரெண்டாவது சனில தலைமுடி வெளுக்க ஆரம்பிச்சிர்ரதால பொங்கு சனி பெட்டர்ங்கறாங்க. மூனாவது சனி பெரிசா எஃபெக்ட் தராதுங்கறதுக்கு காரணம் கூட இதுதான்.

டை போட்டுத்தான் ஆகனும்னா தலைக்கு நீல நிற தொப்பி அணியுங்கள் (இப்போ கோடை வேற கொளுத்துதுல்ல . மேச் ஆயிரும். தொப்பிய லைட் ப்ளூ கலர்ல செலக்ட் பண்ணுங்க ..வெயிலுக்கும் நல்லது)). ஹேண்ட் பை ஹேண்ட் கருப்பு நிற பொருட்களை அவாய்ட் பண்ணுங்க. அதுக்கு பதில் ப்ளூ கலர் திங்க்ஸ் உபயோகியுங்க.

11.சனிக்கு உரிய சுவை கசப்பு. ஸோ அகத்தி கீரை,பாகற்காய் மாதிரி கசப்பு ஐட்டங்களை சாப்பாட்ல சேர்த்துக்கங்க.

இந்தலிஸ்ட் ரொம்ப பெரிசுப்பா.. ச்சொம்மா அப்படி அப்ளை பண்ணி பாருங்க. உங்க அனுபவத்தை எழுதுங்க .இன்னொரு தாட்டி டீட்டெயில்டா மீள் பதிவு போட்ருவம்

புலம்பல் தொடர்கிறது:

நவகிரக,ஜாதக பாதிப்புலருந்து வெளிவர,விடுதலை பெற டிப்ஸை அள்ளி வழங்கற இந்த விஷயத்துல நமக்கு ஸ்ரீராமானுஜர்தான் இன்ஸ்பிரேஷன்.அவர் தனக்கு கிடைச்ச அஷ்டாட்சரி மந்திரத்தை ( ஓம் நமோ நாராயணாய) கோபுர உச்சில ஏறி கூவிட்டு குதிச்சுர்ரார்.( மேற்படி மந்திரத்தை கத்துக்கொடுத்த குரு இதை சூத்திரப்பசங்களுக்கு குடுத்துராதே நரகத்துக்கு போவேனு வார்ன் பண்றார். இவரோ தத் இத்தினி பேரு ஸ்வர்கம் போறதுக்காக நான் ஒருத்தன் நரகத்துக்கு போனா என்னனு மேற்படி காரியத்தை பண்ணிர்ரார்.)

நம்மளுதும் அதேகேஸ்தான். நம்ம ஜாதக மகிமை+ பஞ்சாட்சரி ஜபம்+ராம நாம ஜபம்+ ஹ்ரீங்கார மந்திர ஜபம் + 20 வருச நாயடி பலனா கிடைச்ச இந்த நவ கிரக பாதிப்பிலிருந்து விடுதலை சப்ஜெக்டை இப்படி போட்டு உடைக்கிறதுல நிறைய பார்ட்டிங்களுக்கு அப்ஜெக்சன் இருக்கு.( மூவர்,தேவர்) அதுக்கான சிம்ப்டம்ஸ் எல்லாம் நல்லாவே தெரியுது.

தாளி ..விவேகானந்தரே சொல்லியிருக்காரு.. தன்னை சேர்ந்தவங்க முன்னேற்றத்துக்கு பாடுபடற முயற்சில நம்மளோட ஆன்மீக முன்னேற்றம் லேட் ஆனா கூட டொண்ட் கேர்

இத்தினிக்கும் இந்த மாதிரி தேவ ரகசியத்தை எல்லாம் எள்தறப்ப ஆத்தாள பயங்கரமா கன்வின்ஸ் பண்ணிட்டுத்தான் எள்தறேன்.

ஆத்தா.. ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னாப்ல நீ தாய்புலி, நான் குட்டிப்புலி. நான் உனுக்கு பயந்துகினு கடந்தா அது உனுக்குதானே அகுமானம். ஒன்னோட இதர பிள்ளை,பொண்ணுக எல்லாம் தங்களை ஆட்டுக்குட்டிங்கற நினைப்புல இருக்காக. அவிகளோட என்னைய சேர்த்து கணக்குபோடாதே. எனக்கு கொஞ்சம் சைடு கொடுத்தா அவிக எல்லாரையும் யப்பா யம்மா நீங்களும் புலிங்கதான். ஆட்டுக்குட்டி இல்லப்பானு ருசு பண்ணிர்ரன்.

ஒனக்கு “சர்வ ஸ்வந்த்ராயை நமஹ”ன்னு ஒரு ஸ்துதி கூட கீதுல்லே. சுகந்திரமானவளா இருக்கிற நீ படைச்ச மன்சா மாத்ரம் இப்படி கெரகங்க பிடில சிக்கி தவிக்கிறது நல்லாவா கீது. இம்மாத்தூண்டு விசியம் தெரியாம சனம் இப்பிடி கட்ந்து அல்லாடுதேனு ஒரு ரூட்டு போட்டுக்குடுக்கலாம் பார்த்தா ரொம்பத்தான் அழும்பு பண்றே..

சரி சரி நீ இதுக்கு எதிரா சொல்ல வர்ர பாயிண்டு புரியுது. கெட்டவனுக்கு கெரகம் கெட்டுப்போற நேரம்னு வர்ரப்ப தான் நல்லவங்களுக்கு ரிலீஃப் கிடைக்குது. தர்மத்து மேலயே நம்பிக்கை வருது. நீ பாட்டுக்கு சுப்ரமணிய பாரதி கணக்கா விடுதலை விடுதலை அல்லாத்துக்கும் விடுதலைனு துள்ளி குதிச்சா எப்படின்னு தானே கேழ்க்கற.

ஆத்தா உனக்கு தெரியாதது இன்னா கீது சொல்லு. விதி வழியே மதின்னுவான். அப்பால பார்த்தா மதியால விதிய வெல்லலாம்னுவான். இன்னொரு ஸ்டெப்பு மின்னாலே போய் இன்னாதான் சொல்றபான்னா விதி வழி விட்டு விலகினா மதி வேலை செய்யும்னுவான்.

நான் பாட்டுக்கு ஜாதக பாதிப்புலருந்து விடுதலைன்னிட்டு டைப்படிச்சு ப்ளாக்ல போட்ட மாத்திரத்துல ஒலக மக்க எல்லாம் கெரகங்க பிடிலருந்து ரிலீஸாயிர போறாங்களா. ஒரு ம………..ரும் கிடையாது. மிஞ்சி மிஞ்சி போனா 230 பேர் படிப்பாங்கோ. அதுல பட்டா சூப்பரா கீதுபா இதை எப்டினா ஃபாலோ பண்ணிரனும்னு 23 பேர் நினைப்பாங்கோ. நாலு நாள் கழிச்சு அவிகளை இத்த பத்தி கேட்டா அப்டியா நான் கூட பட்சேன்பா ஆனா மேட்டர் கியாபகம் இல்லேனுவாங்க.

இதுக்கு போயி பயந்துகினு என்னை சுஸ்தாக்கிறியே. இன்னா..து நீ இன்னா வேணா எள்திட்டு போ.. அதை எவனும் ஃபாலோ பண்ணமுடியாம நான் பண்றேங்கறியா. சரி சரி உன்னிஷ்டம். ஒன் ஸ்டெப் அட் ஒன் மூவ்மெண்ட். என்னை மட்டும் பேஸ்தடிக்க வச்சிராத. சனத்துக்கு நம்ம கிட்டே கொஞ்சம் வேலை கீது தாயி. என் மண்டைல கீறதெல்லாம் காயித்துல வச்சி, காய்த்தல கீரதெல்லாம் ப்ளாக்ல வச்சிட்டா அப்பாறம் நீ எப்டி விட்றியோ அப்டி ..ஓகேவா உடு ஜூட்டு
விடுதலைக்கான டிப்ஸ்:
சரிபா விசயத்துக்கு வரேன்.போன தபா(ல்)ல இன்னா சொன்னேன்? கெரகம் ஆகாசத்துல மட்டுமில்லே நம்ப பாடிலயும் கீது. அங்கே கீர சந்திரனை ஒன்னும் பண்ணமுடியாது. ஆனால் இங்கே நம்ப பாடில கீர வாட்டர் கன்டென்டோட கெமிக்கல் காம்பினேஷனை மாத்த முடியும்.இந்த பாடில கீர தண்ணியும், கடலோட தண்ணியும் ஒரே கெமிக்கல் காம்பினேஷன்ல கீதாம்பா. அதனாலதான் பவுர்ணமி அன்னைக்கு சந்திரன் சமுத்திரதண்ணிய ஐஸ்காந்தம் இரும்பு தூளை இசிக்கிறா மாரி இசிக்கிறானாம். பாடில 70% இந்த வாட்டர் கண்டென்ட் தான் கீது.

இந்த கெமிக்கல் காம்பினேஷனை எப்டி மாத்தறது? மாத்திபுட்டா வேற எதுனா பிரச்சினை வருமா?

சரக்கடிக்கறப்போ ஒரு பார்ட்டி மூனு அவுன்ஸுக்கு ஒரு சோடா கலந்துக்கறான். இன்னொரு பார்ட்டி ஆறு அவுன்ஸுக்கு ச்சொம்மா சோடாவ காம்ச்சிட்டு உள்ள தள்ளிர்ரான். ரண்டு பேரும் ஒரே சரக்குதான் அடிக்கிறான். ஆனால் டைல்யூட் பண்ணி அட்சா லிவர் இன்னொரு அஞ்சாறு வருசத்துக்கு தாங்கும். ராவா அட்சா சீக்கிரம் பட்த்துக்கும் அதான் வித்யாசம்.

இதே ஃபார்முலாவ அப்ளை பண்ணா ஹ்யூமன் பாடி வாட்டர் கண்டென்ட்டை கூட டைல்யூட் பண்ண முடியும். நீ எந்தளவுக்கு டைல்யூட் பண்றியோ அந்த அளவுக்கு சந்திரனோட எஃபெக்டை குறைக்க முடியும்.( கடல் நீருக்கு சமமான கெமிக்கல் காம்பினேஷன் மாறிட்டா சந்திரனால நம்ம பாடில இருக்கிற வாட்டர் கண்டென்டை இன்ஃப்ளுயன்ஸ் பண்ண முடியாதுப்பா.

இந்த சந்திரந்தாம்பா நம்ம மனசை கச்சா முச்சானு கலைச்சி உட்டுட்டு டீச்சருக்கு லவ் லெட்டர் குடுக்க வைக்கிறான். ஃபீஸ் கட்டறதுக்கு குட்த பணத்துல லவ்வுக்கு ஃபலூடா வாங்கி குடுக்க வைக்கிறான்.

இந்த ஆள் பிடில இருந்து வெளிய வந்தா போதும் . மன்சாளுக்கு வர்ர பிரச்சினைல முக்கா வாசி ஃபணாலாயாரும். எப்டிங்கறியா சனத்தோட பிரச்சினைல முக்காவாசி சைக்கலாஜிக்கல் தான்.

ஸ்தூலமான பிரச்சினைகளை எல்லாம் தூர தள்ளிட்டு ,ப்ராக்டிக்கல் சொல்யூஷனுக்கு முயற்சி பண்றத விட்டுட்டு சாமியார்ங்க பின்னாடி பூட்றது, கட்சி கொடிய புட்சிக்குனு கோஷம் போடறது,ஆகாச கோட்டை கட்டறது, மனக்கோட்டை கட்டறது இதுக்கெல்லாம் சந்திரன் தான் காரணம்.

அது சரிபா வாட்டர் கன்டெண்டை டைல்யூட் பண்றது எப்படி? முதல் கட்டமா அதுல இருக்கிற சுத்த தண்ணிரோட சதவீதத்தை அதிகரிக்கனும்.அது எப்படி? நிறைய தண்ணி குடிக்கனும். வாட்டர் தெரஃபிங்கறாங்களே அதுமாதிரி. இதே தெரஃபிய உண்ணாவிரதம் இருந்துகிட்டு எடுத்துக்கிட்டா இன்னும் சூப்பர் ரிசல்ட் கிடைக்கும்.
(முதல்ல உங்க ஃபேமிலி டாக்டரை கன்சல்ட் பண்ணீட்டு அப்புறமா இதுல இறங்குங்க நைனா.. ஜாஸ்தி கம்மியாயிர போவுது)

கையோட கையா மறு நாள் காலைல ஒரு செம்பு வென்னீர்ல ரெண்டு டீ ஸ்பூன் சோத்து உப்பை போட்டு கரைய விட்டு வெறும் வயித்துல குடிச்சா அதான் எனிமா . நீங்க அடிஷ்னலா உள்ளாற அனுப்பின உப்பு உடம்புக்குள்ள போய் சேருது. உடம்பு ஏற்கெனவே சேர்த்துவச்சிருக்கிற வித விதமான உப்புகளோட ஸ்டாக் லெவல் அதிகமாகுது. இதை சமப்படுத்த வயித்தை கலக்கி கூடுதலா சேர்ந்த உப்பை வெளியேத்தற முயற்சில இறங்குது. ஒன்னு ரெண்டு தடவை மோஷன் ஆகும். பயபடாதிங்கோ.. என்ன ரத்த மாமிசமா போகுது மஷ்டெல்லாம் கழியுது. கழியட்டும். உடம்பெல்லாம் துவைச்சி போட்ட துணியாட்டம் இருக்கும். இருக்கட்டும். உடனே சுஸ்தா கீது ஆட்டுக்கால் பாயாவோட அரை டஜன் தோசைய உள்ள தள்ளுவோம்னு கிளம்பிராதிங்க. சவாலே சமாளிதான்.

காரம்,மணம்,குணம் நிறைஞ்ச வாட்டர் கண்டென்ட் தான் உங்களை எப்படியெல்லாமோ ஆட்டி வச்சிருது. இந்த உண்ணாவிரதம், வாட்டர் தெரஃபி, எனிமா மூலமா அதுல இருக்கிற காரம்,மணம்,குணம்லாம் ஆட்டோமேட்டிக்கா குறைஞ்சிரும். ஆமா இதெல்லாம் குறைஞ்சு போயிட்டா எதுனா பிரச்சினை வருமானு கேட்கிறிங்க அப்டிதானே.

வராது குரூ..! இந்த உடம்போட நேச்சர் அப்படி. இது சுடாத களி மண் பொம்மை மாதிரி. கொஞ்சம் முயற்சி பண்ணா இதை நம்ம விருப்பப்படி ஷேப் அப் பண்ணிக்கலாம் மறுபடி ஆல்க்கஹாலையே உதாரணத்துக்கு எடுத்துக்குவம். அடிப்படைல ஹ்யூமன் பாடில ஆல்க்கஹால் இருக்கா இல்லியா தெரியலை. (லாஜிக் படி பார்த்தா இருக்கனும்.கு.ப மிக மிக குறைஞ்ச அளவுல. ஏன்னா ஏற்கெனவே இருக்கிற ஐட்டத்தை வெளியயிருந்து அனுப்பினாதான் பாடி ஏத்துக்கும். இல்லனா அலர்ஜிட்டிக் ஆயிரும்)

லாலா பார்ட்டிங்க என்ன பண்றாய்ங்க. வெளியயிருந்து குவார்ட்டர் குவார்ட்டரா உள்ள விடறாங்க. ரத்தத்துல ஆல்க்கஹால் பர்சண்டேஜ் அதிகமாகுது. ஆனால் அது ஸ்திரமா இருக்குதா இல்லே. லிவர்,கிட்னி எல்லாம் ரொம்பவே கஷ்டப்பட்டு ஆல்க்கஹாலை வெளியேத்துதுங்க. ப்ளட்லஆல்க்கஹால் பர்சண்டேஜ் குறைஞ்சதும் பார்ட்டிக்கு மறுபடி குடிக்கனுங்கற எண்ணம் வருது. குடிக்கலன்னா கை கால் எல்லாம் உதறுது,தொண்டையெல்லாம் ட்ரை ஆயிருது. குடி அடிமைகள் விஷயத்துலன்னா இப்ப குடிக்கலன்னா செத்தே போயிருவமோங்கற அளவுக்கு பயம்,திகில் வந்துருது. தன்னை தடுக்கிறவங்க மேல கொலை வெறி வருது. குவார்ட்டர் வாங்க பணம் புரட்ட பெண்டாட்டியையே நாயடி பேயடி அடிக்க வைக்குது.

ஆனால் உண்மை நிலவரம் என்ன? ப்ளட்ல ஆல்க்கஹால் பர்சண்டேஜை அதிகரிச்சது இவன். அதை குறைக்கிறது சரீர தர்மம். மறுபடி அதை அதிகப்படுத்தலன்னா செத்து போயிருவானா ஊஹூம்.

இதே ஃபார்முலாதான் வாட்டர் கன்டென்டோட கெமிக்கல் காம்பினேஷன் விஷயத்துலயும் ஒர்க் அவுட் ஆகுது. அதனோட அடர்த்திய கூட்டினது நீங்க.
போதிய தண்ணீர் குடிக்காம, செரிக்காம, பசிக்காம, காரம்,மணம்,குணம் நிறைஞ்ச உணவுகளை உள்ளாற தள்ளி, மலச்சிக்கல் இத்யாதிய கண்டுக்காம விட்டு வாட்டர் கன்டென்டை நாறடிச்சது நாம. மலச்சிக்கல்ல இருக்கிற சிக்கல் என்னடான்னா. வெளியேற்றப்படாத மலத்துல உள்ள நீர்சத்தை உடம்பு மறுபடி க்ராஸ்ப் பண்ணிக்கிறது.அது என்ன அமுதமாவா இருக்கும்?

அதனாலதான் தகிரியமா சொல்றேன். எந்த பிரச்சினைக்கும் மனமிருந்தால் மார்கமுண்டு. அந்த மனமே பிரச்சினையாயிருந்தா என்ன செய்ய ? அதனால முதல்ல சந்திரனோட இன்ஃப்ளுயன்ஸ்லருந்து வெளிய வரனும்.

என்னையே எடுத்துக்கங்க .

1987 ல சனி என் ராசியான சிம்மராசிக்கு அஞ்சாவது இடத்துக்கு வந்தாரு. அந்த ரெண்டரை வருஷதுல இமேஜுக்கு ஆன டேமேஜை இன்னி வரைக்கும் கூட கம்ப்ளீட்டா பேலன்ஸ் பண்ண முடியலை. ஆனால் இப்ப பாருங்க போன ரெண்டரை வருஷம் ஜன்ம சனி. இப்போ 2009 செப்டம்பர் 16 லருந்து வாக்குல சனி ..சிம்ம ராசியெல்லாம் நாறிக்கிடக்கு. ஆனால் நான் மட்டும் ஜாலாக்கா சைடு கொடுத்துக்கிட்டே காலத்தை கடத்தறேன். இது எப்படி சாத்தியமாச்சுன்னா?

1994 ல அப்பா காலி. என்னதான் இன்டர் காஸ்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டு தனியே அவதி பட்டாலும் ரெண்டாமறம் தெரியாம ஏறத்தள்ளிக்கிட்டிருந்த பார்ட்டி காலியானதுமே பக்கு ஆயிட்டாலும் ,சரி சொத்திருக்கில்லயா பங்கு தராத போயிருவானுகளானு தைரியமா இருந்தேன். பப்பு வேகலை.

மொதல்ல தெரிஞ்சு வச்சிருந்த ஜோதிஷம் உதவியால காலகதி தெரிஞ்சாலும், சம்பவ கண்ணிகளோட முடிவு பெரு வெற்றியில முடியறது புத்திக்கு உறைச்சாலும், என் முயற்சியே, வெற்றியை ஆக்சிஜன் சிலிண்டர் தனமாய் எண்ணி தவிக்கும் தன்மையே வெற்றியை எட்டிப்போக செய்வதை உண்ர முடிஞ்சாலும் ஈகோ ஒப்புத்துக்கலை. தோல்வி வெறியை கிளப்ப அதை ஒப்புத்துக்க ஈகோ முன் வராம யுத்தம், வெற்றி வேல் ,வீர வேல்னு முழங்கி ஜீரோ பேலன்ஸுக்கு வந்துட்டன்.

ஆனால் எந்த குருவும் கத்து தராத வித்தைகளை ஏழ்மை கத்து கொடுத்தது. இந்த படைப்பில் நான் தனியோ தனியானவன் என்ற நிஜம் உறைத்தது. என் சர்வைவலே கேள்வியாயிட்ட க்ஷணத்துல உயிர் வாழும் இச்சை பல ஜாலக்குகளை கற்றுத்தந்தது.

அன்றாட பிரச்சினைகள் காரணமா அசலான பிரச்சினைக்கு லீவு விட்டது, நடக்கவிருந்ததை அனுமதிச்சது 2400 சதுர அடி வீடு இருந்தும் ஓட்டை குடிசைல வாழ்ந்தது. இதெல்லாம் கிரகங்களோட பாதிப்பின் வீரியத்தை வெகுவா குறைச்சிட்டதால அம்பேல் வச்சுட்டு ஆட்டத்துல ஒதுங்கிட்டதால, வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சதால நிறைய புரிஞ்சிக்கிட்டேன்.

1997லருந்து ப்ரேக் ஃபாஸ்டை கட் பண்ணிட்டேன். காரம்,சாரம்,மணம்,குணம் நிறைஞ்ச சமையலுக்கு பேர் போன வன்னியர் குலத்து நங்கையான என் மனைவிக்கு உப்பு ,காரம்,புளிப்பு குறைவா போட்டு சமைக்க கத்துக்கொடுத்தேன். மேல் தீனி, நொறுக்கு தீனி,ஜங்க் ஃபுட், டின் ஃபுட் இதெல்லாம் பக்கத்துல சேர்க்கவிடறதில்லை.

( அன்னைக்கு நான் ஏழை தான்.ஆனால் பத்து நாளைக்கு ஒரு தரமாச்சும் பம்பர் லாட்டரி மாதிரி காசு கொட்டும். ஏக் தின் கா சுல்தான் மாதிரி வாழ்ந்து மறு நாள்ளருந்து மறுபடி பழைய குருடிகதவை திறடிவாழ்க்கைக்கு போயிருக்கலாம். ஆனால் ஒட்டகம் கணக்கா மாறிட்டேன்)

என் ஈகோவுக்கு அடிக்கு மேல அடி. தியாகய்யர் உஞ்ச விருத்தி பண்ண மாதிரி, ஷீர்டி சாயிபாபா பிச்சை எடுத்த மாதிரி ஆயிருச்சு கதை. பசி பட்டினி,சொறி சிரங்கு எல்லாம் பார்த்தாச்சு. ஆனால் உடல் எவ்வளவுக்கெவ்வளவு தேஞ்சதோ அந்த அளவுக்கு மூளை தீட்டப்பட்டுருச்சு. கையில ஜோதிஷ ஞானம் இருந்தது, தர்கத்துக்கு ஒத்துவராத சம்பவங்களா சரமாரியா நடந்தது. ரெண்டையும் பொன் வறுவலா வறுத்து அரைச்சி ஓ சாரி சாரி ரெண்டையும் அப்சர்வ் பண்ணி அனலைஸ் பண்ணினதுல ஒரு சில தேவரகசியங்கள் வெளிப்பட்டுது.
தேவ ரகசியம்:

அது என்னடான்னா காலம்ங்கறது ஒரு பைப் லைன். இதுல நல்லது ,கெட்டது நல்லது ,கெட்டதுனு யாரோ பேக் பண்ணி வச்சிருக்காங்க.. முன்னாடி இருக்கிற கெட்டது வெளிய வந்து விழுந்தாதான் ( நடந்தாதான்) பைப் லைன்ல அடுத்து இருக்கிற நல்லது வெளிய வரும்.(நடக்கும்.)

அதே மாதிரி பைப்லைன்ல முன்னாடி நிக்கிற நல்லது நடந்தாதான் பின்னாடி நிக்கிற கெட்டதும் வெளிய வரும் ( நடக்கும்).

சிம்பிளா சொன்னா ஒரு பாட்டுல முதல் சரணம் சூப்பரா இருக்குனு வைங்க. ஃபாஸ்ட் ஃபார்வோர்ட் பட்டன் வேலை செய்யலை . அப்போ என்ன செய்யனும் ? எடுப்பு, தொகையறா,அனுபல்லவி,பல்லவிகளை சகிச்சிக்கிட்டாதான் முதல் சரணத்தை கேட்க முடியும். அதான் வாழ்க்கை

விடுதலைக்கு முக்கிய டிப்:
கொஞ்சம் சூட்சும புத்தியோட யோசிச்சா சூழ் நிலை நம்மை ஒரு புள்ளிய நோக்கி அழுத்தி தள்றத நம்மால புரிஞ்சிக்க முடியும். அந்த புள்ளிய நோக்கி ஏதோ ஒரு சக்தியால தள்ளப்படறத விட அந்த புள்ளி எதுன்னு ஜட்ஜ் பண்ணி கொஞ்சம் முன் கூட்டியெ நாமே ஒழுங்கு மரியாதையா போயிரலாம். அப்படி போகவும் முடியும். இது இறைவனின் ஆணைக்கு கீழ்படியறதா ஆகுமே தவிர புரட்சி ஒன்னும் கிடையாது. கிரக பாதிப்பிலிருந்து விடுபட முக்கிய டிப் இதுதான்.

சொந்த வியாபாரத்துல நஷ்டத்துக்கு மேல நஷ்டம் வருது, தமிழ்சினிமால ஹீரோவோட அப்பாவுக்கு வர்ர மாதிரி போட் கழட்டுது. இந்த சம்பவங்கள் எந்த புள்ளிய நோக்கி அழுத்தி தள்ளுதுனு சிந்திக்க மூளை கூட தேவையில்லை. கிட்னி போதும்.

இந்த சந்தர்ப்பத்துல என்ன பண்ணனும் ? படக்குனு எல்லாத்தயும் வைண்ட் அப் பண்ணிட்டு ப்ளே கிரவுண்டை விட்டு வெளிய வந்துரனும். வேணம்னா அங்கயே பாப் கார்ன் விக்கலாம். புக்கியாகலாம். அம்பயராகலாம். அட உள்ளாற சமாளிக்க முடியாதுன்னா சைக்கிள் ஸ்டாண்ட் காண்ட் ராக்டரா மாறிடலாம். அதை விட்டுட்டு பேட்ஸ் மேனாதான் இருப்பேன்னா டக் அவுட் ஆக வேண்டியதுதான்.

தானா நடக்கறது நல்லதோ ,கெட்டதோ லாங் ரன்ல நமக்கு நல்லதாவே முடியும். நாமா அலைஞ்சு பறை சாத்தி நடக்க வைக்கிறோமே அதான் ஆப்பா முடியுது.
தோல்வி உறுதிங்கறப்போ எதிரிக்கு தோல்விய பரிசா கொடுத்துர்ரது பெட்டரில்லயா?

Advertisements

32 thoughts on “நவகிரகங்களிலிருந்து விடுதலை

  pichaikaaran said:
  March 21, 2011 at 8:53 pm

  பாராட்ட வார்த்தைகள் இல்லை…

  கடும் உழைப்பு, அனுப்வம் , அறிவு தெரிகிறது

   S Murugesan said:
   March 22, 2011 at 7:38 am

   வாங்க பிச்சைக்காரன்,
   ஆமா என் பேரை எப்படி நீங்க உபயோகிக்கலாம்? அட நாம எல்லாருமே பிச்சைக்காரவுகனு சொல்றிங்களா? இதை உணர்ந்தவன் தான் உண்மையான கோடீஸ்வரன். தங்கள் பாராட்டுக்குரியவன் நானல்லன். மன்னிக்கவும்.

   நான் எழுதறதெல்லாம் எனக்கு ஆரோ ஆகாசத்துலருந்து பிச்சையா போட்டதுதேன்.. பாராட்டனும்னா அவிகளை பாராட்டுங்க.

  veera said:
  March 22, 2011 at 3:24 am

  அட்டகாசமான கட்டுரை முருகேசன் சார். Keep up the good work.

  மொதல் பேரால பெரியார் ரெண்டுதடவ வந்துட்டார் பாருங்க.

  இரா. புரட்சிமணி said:
  March 22, 2011 at 3:28 am

  வணக்கம் பாசு,
  ரொம்ப அருமையான புதிய செய்திகள். நன்றி.

  ஒரு திருத்தம் …”பெரியார் சுதேசி அடிமைத்தனத்துலருந்து பெரும்பான்மை மக்களோட விடுதலைக்காக பாட்டா பாடினாரு.” இது பாரதியார் பெரியார் அல்ல.

  சில சந்தேகம்

  ௧. சனிக்குரிய நல்லெண்ணெய் வேனும் ஆனா கருப்பு நிறம் வேண்டாம் என்கிறீர்கள் அது ஏன்? சனிக்குரிய நிறம் கருப்பா நீலமா?
  ௨. ஒருவனுக்கு ஒரு கோள் யோககாரகனா இருந்தா அவன் தாக்கம் இருந்தாதானே நல்லது?
  ௩. போன பதிவிலே சுபபலம் என்றீர்கள் அது சுப கோள்களினால் வருவதா அல்லது தாங்கள் சுய பலத்தை தான் கூற நினைத்தீர்களா?
  ௪. “கொஞ்சம் சூட்சும புத்தியோட யோசிச்சா சூழ் நிலை நம்மை ஒரு புள்ளிய நோக்கி அழுத்தி தள்றத நம்மால புரிஞ்சிக்க முடியும். அந்த புள்ளிய நோக்கி ஏதோ ஒரு சக்தியால தள்ளப்படறத விட அந்த புள்ளி எதுன்னு ஜட்ஜ் பண்ணி கொஞ்சம் முன் கூட்டியெ நாமே ஒழுங்கு மரியாதையா போயிரலாம். அப்படி போகவும் முடியும். இது இறைவனின் ஆணைக்கு கீழ்படியறதா ஆகுமே தவிர புரட்சி ஒன்னும் கிடையாது. கிரக பாதிப்பிலிருந்து விடுபட முக்கிய டிப் இதுதான்.”

  இது நல்ல இருக்கு ஆனா விடமுயற்சின்னு ஒன்னும் இருக்ககூடாதா? ஒரு நேரத்தில் நான் ஆன்மீகத்தை நோக்கி தள்ளப்பட்டேன், சிறு வயதில் இருந்தே அரசியல் எண்ணம் இருக்கின்றது, நடவுல வயித்து பொழப்பு,பெத்தவங்க இகலோக வாழ்க்கை பற்றிய சிந்தனை வேற …….உள்ளக்குள்ளே ஆன்மிகம் இருந்தாலும்.
  அந்த புல்லிய எப்படி கன்னுபிடிப்பது?.
  இன்று எழுதிய நடையை விட நேற்றைய நடை எளிதாக இருந்தாது.

  தொடராட்டும் உம் எழுத்தும் எம் வாசிப்பும்

   S Murugesan said:
   March 22, 2011 at 6:07 am

   இரா.புரட்சிமணி
   //ரொம்ப அருமையான புதிய செய்திகள். நன்றி.//
   நன்றி எனக்குரியதல்ல.

   //ஒரு திருத்தம் …”பெரியார் சுதேசி அடிமைத்தனத்துலருந்து பெரும்பான்மை மக்களோட விடுதலைக்காக பாட்டா பாடினாரு.” இது பாரதியார் பெரியார் அல்ல.//

   திருத்தத்துக்கு நன்றி

   //௧. சனிக்குரிய நல்லெண்ணெய் வேனும் ஆனா கருப்பு நிறம் வேண்டாம் என்கிறீர்கள் அது ஏன்? சனிக்குரிய நிறம் கருப்பா நீலமா?//
   கருப்பு வருக வருக பேனர் மாதிரி . நீலம் கோ பேக் பேனர் மாதிரி.

   //௨. ஒருவனுக்கு ஒரு கோள் யோககாரகனா இருந்தா அவன் தாக்கம் இருந்தாதானே நல்லது?//
   எல்லா விஷயத்துக்கும் நல்லதில்லை பாஸ். சனி யோககாரகன். அவர் உச்சம்னு வைங்க. மத்த மேட்டர்லாம் நல்லாருக்கும். ஆனால் கொஞ்சம் மந்தத்தன்மை, கொஞ்சம் கஞ்சத்தனம்,கொஞ்சம் ஏழைகளை கசக்கிப்பிழியறதுங்கற கேரக்டரும் வந்துரும்.

   குரு சுபன். அவர் உச்சம்னு வைங்க. மத்த மேட்டர்ல நல்லா இருக்கலாம். ஆனால் கொஞ்சம் போல கோழைத்தனம், கொஞ்சம் போல தரும நியாயத்துக்கு பயப்படறது,கொஞ்சம் போல பொருளாதார பற்றாக்குறை, கொஞ்சம் போல அபாத்திர தானம்லாம் வந்துரும்.

   //௩. போன பதிவிலே சுபபலம் என்றீர்கள் அது சுப கோள்களினால் வருவதா அல்லது தாங்கள் சுய பலத்தை தான் கூற நினைத்தீர்களா?//

   கோள்களின் பலம் தேன்

   //௪. “கொஞ்சம் சூட்சும புத்தியோட யோசிச்சா சூழ் நிலை நம்மை ஒரு புள்ளிய நோக்கி அழுத்தி தள்றத நம்மால புரிஞ்சிக்க முடியும். அந்த புள்ளிய நோக்கி ஏதோ ஒரு சக்தியால தள்ளப்படறத விட அந்த புள்ளி எதுன்னு ஜட்ஜ் பண்ணி கொஞ்சம் முன் கூட்டியெ நாமே ஒழுங்கு மரியாதையா போயிரலாம். அப்படி போகவும் முடியும். இது இறைவனின் ஆணைக்கு கீழ்படியறதா ஆகுமே தவிர புரட்சி ஒன்னும் கிடையாது. கிரக பாதிப்பிலிருந்து விடுபட முக்கிய டிப் இதுதான்.//

   இது நல்ல இருக்கு ஆனா விடமுயற்சின்னு ஒன்னும் இருக்ககூடாதா? ஒரு நேரத்தில் நான் ஆன்மீகத்தை நோக்கி தள்ளப்பட்டேன், சிறு வயதில் இருந்தே அரசியல் எண்ணம் இருக்கின்றது, நடவுல வயித்து பொழப்பு,பெத்தவங்க இகலோக வாழ்க்கை பற்றிய சிந்தனை வேற …….உள்ளக்குள்ளே ஆன்மிகம் இருந்தாலும்.அந்த புல்லிய எப்படி கன்னுபிடிப்பது?.//

   அந்த புள்ளிய கண்டுபிடிக்கிறது ரெம்ப ஈஸி. இதுவரை அதை கனவுல கூட நினைச்சுப்பார்த்திருக்கமாட்டிங்க. அதை நினைச்சாலே உங்க உடம்பெல்லாம் கரப்பான் ஊர்ந்த மாதிரி அருவறுப்பா இருக்கும்.

   //இன்று எழுதிய நடையை விட நேற்றைய நடை எளிதாக இருந்தாது.//
   ஒரு ராஜரகசியம் : இது பழைய பதிவு பாஸ்.. நேரமின்மை காரணமா முன்னுரை மட்டும் கொடுத்து போட்டேன்

   //தொடராட்டும் உம் எழுத்தும் எம் வாசிப்பும்//
   வாசிப்பு வேணம்னா உங்க கையில இருக்கலாம். எழுத்து என் கையிலயா இருக்கு.. ( இன்னைக்கு பெண்டிங்க்ல உள்ள ஜாதகங்களை பைசல் பண்ணனும்னா ஏப்ரல் 7 வரை நான் திங்கற நேரத்தை கூட குறைக்கப்பார்க்கனும். மண்டை காயுது. மறுபடி ஹவுஸ் ஃபுல் போர்டை தூக்கி மாட்டிரவேண்டியதுதேன்

    இரா. புரட்சிமணி said:
    March 22, 2011 at 7:04 am

    தங்களுடைய பதில்கள் அருமை உங்களை எழுதுதவைக்கும் அவனுக்கு நன்றி (இப்ப கரெக்டா பாசு?)
    //அந்த புள்ளிய கண்டுபிடிக்கிறது ரெம்ப ஈஸி. இதுவரை அதை கனவுல கூட நினைச்சுப்பார்த்திருக்கமாட்டிங்க. அதை நினைச்சாலே உங்க உடம்பெல்லாம் கரப்பான் ஊர்ந்த மாதிரி அருவறுப்பா இருக்கும்.// அருவருப்பாவா…அது இன்னா தல ஒன்னும் புரியாலையே?

    //வாசிப்பு வேணம்னா உங்க கையில இருக்கலாம். எழுத்து என் கையிலயா இருக்கு.. ( இன்னைக்கு பெண்டிங்க்ல உள்ள ஜாதகங்களை பைசல் பண்ணனும்னா ஏப்ரல் 7 வரை நான் திங்கற நேரத்தை கூட குறைக்கப்பார்க்கனும். மண்டை காயுது. மறுபடி ஹவுஸ் ஃபுல் போர்டை தூக்கி மாட்டிரவேண்டியதுதேன்//
    எதுவுமே எவன் கையிலயும் இல்ல பாசு… எல்லாம் அவன் செயல்.

    S Murugesan said:
    March 22, 2011 at 7:21 am

    புரட்சிமணி,
    என் வாழ் நாள் எல்லாம் திட்டி தீர்த்த தினசரி தினத்தந்தி. அதுல 2007 ஏப்ரல் 23 முதல் 2009 ஏப்ரல் 7 வரை வேலை செய்தேன்.
    அங்கன கிடைச்ச “இளைப்பாறுதல்’தேன் என் பிற்கால சாதனைகளுக்கெல்லாம் மூலம். இப்படி ரோசிங்க.

    அவனுக்குனு கூட சொல்லக்கூடாதாம். யானே அவன்.அவனே யான்னுட்டு ஒரு பார்ட்டி திருத்தியிருக்கு. அல்லாமே அந்தாளுதானாம்.

    அப்ப கடவுள் ஆரம்ப எழுத்தாளர் மாதிரி தான் எழுதின தானே படிச்சிக்கிட்டு கிடப்பார் போல

  rajesh said:
  March 22, 2011 at 4:19 am

  அண்ணா மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள். உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை ஆத்ம திருப்தியான வாழ்த்துக்கள். நீங்கள் நன்றாக வாழ இறைவனை பிராத்திக்கிறேன். நன்றி அண்ணா

   S Murugesan said:
   March 22, 2011 at 4:56 am

   ராஜேஷ்,
   உங்க பாராட்டெல்லாம் போய் சேரவேண்டியது ‘யாருக்கோ’. மத்தபடி உங்க மோரல் சப்போர்ட், உங்க சங்கல்ப்பம் நிச்சயம் தேவை. வாழ்த்துக்கள்.

  Vinoth said:
  March 22, 2011 at 4:48 am

  நீங்க கமொண்டுல சொன்ன ஆயுர் பாவம் -தன பாவம் பதிவை தேடுபோது கூகுளில் ….
  ====
  அக்கா மகளும் 11 ஆம் பாவமும் « Anubavajothidam.com
  அக்கா மகளும் 11 ஆம் பாவமும். 30 January 2011 • no comments …
  anubavajothidam.com/அக்கா-மகளும்-11-ஆம்-பாவமும்/ – Cached…
  ===
  ஒரு ரிசல்ட் வந்தது.. அதை கிளிக் பண்ணினா மேல
  1) பேஜ் நாட் பவுண்ட் வருது…
  கூகுள் கேட்சுடு பேஜ் கிளிக் பண்ணின
  2)பேஜ் ஒப்பன் ஆகுது..
  ரெண்டையும் உங்க பார்வைக்கு போட்டு இருக்கேன்.
  சைட் முதலில் போட்ட பேஜ் இப்படி பிரச்சனை வருது
  கொஞ்சம் பாருங்க தல

  1)
  ===============================================
  http://anubavajothidam.com/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-11-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/
  Not Found
  Apologies, but no results were found for the requested archive. Perhaps searching will help find a related post.
  =================================================================
  2)
  This is Google’s cache of http://anubavajothidam.com/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-11-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/. It is a snapshot of the page as it appeared on 15 Mar 2011 01:02:08 GMT. The current page could have changed in the meantime. Learn more

  Text-only version
  These search terms are highlighted: ஆயுள் பாவமும் These terms only appear in links pointing to this page: தனபாவமும்

  Skip to content

  Anubavajothidam.com

  gets astrology more closer
  Main Menu

  * Home
  * About Us
  * English
  * இலவச ஜோதிட கேள்வி பதில்
  * తెలుగు

  அக்கா மகளும் 11 ஆம் பாவமும்

  30 January 2011 • no comments • Uncategorized

  அக்காமகள்னதுமே ஒரு ஜிலீர் உணர்ச்சி பரவும். இதுக்கு காரணம் அவள் முறைப்பொண்ணுங்கறதுதான். அக்கா மகளை கட்டனும்னா உங்க ஜாதகத்துல 11 ஆம் பாவம் சுபபலமா இருக்கனும். 11ங்கறது மூத்த சகோதர (சகோதிரி) ஸ்தானம். இந்த இடம் சுபபலமா இருந்தாதான் எல்டர் ப்ரதர்ஸ்,சிஸ்டர்ஸோட சுமுகமான உறவு இருக்கும் அப்பத்தானே அக்கா மகளை கட்டமுடியும்.

  அக்கா மகளை வச்சு பாட்டு எழுதாத கவிஞரே இருக்கமாட்டாருனு நினைக்கிறேன். ஆனால் ஒன்னுங்கண்ணா நம்ம நாட்ல தலை முறைக்கு தலைமுறை உசரம்,ஃபிட்னெஸ், ப்ரெய்ன் பவர் எல்லாம் குறைஞ்சிக்கிட்டே போக காரணம் சாதீயமும்,ஒரே சாதிக்குள்ள கண்ணாலம் கட்டறதும்தேன்.
  ===============================================================

   S Murugesan said:
   March 22, 2011 at 4:54 am

   வினோத்,
   வெப்சைட் வச்ச புதுசுல ஆத்திரம் பிடிச்சு ப்ளாக்ஸ்ல உள்ள சரக்கையெல்லாம் ஒரே மூச்சுல இம்போர்ட் பண்ணிட்டன்.

   அப்பத்தான் பேண்ட் வித் எக்ஸீடட் அது இதுன்னு தலைவலியாயிருச்சு. இதென்னடா இம்சைன்னு பழைய சரக்கையெல்லாம் டெலிட் பண்ணிட்டம்.

   நீங்க அந்தந்த ப்ளாக்லயே தேடுங்களேன்

  Thirumurugan said:
  March 22, 2011 at 5:30 am

  Nice Explanation, really

   S Murugesan said:
   March 22, 2011 at 7:35 am

   வாங்க திருமுருகன்,
   வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி

  Vinoth said:
  March 22, 2011 at 6:40 am

  //..ஒரு பேச்சுக்கு சொல்லிக்கிவம். உனக்கு ஒங்க ஊட்டு வேலைக்காரிதான் பெண்டாட்டியா வரனும்னு கீது. நீ அவளை கட்டிக்கிவியா.ஊஹூம்..பில் குல் கட்டமாட்டே. ஊர்ல கீற குடுமி அய்யருங்கோ, சாஸ்திர காரவுங்க்கோ எல்லாத்தயும் தாலியறுத்து யாகம் கீகம் பண்ணி சுமாரா ஒரு பொண்ணை கட்டிக்கிறேனு வை..

  ஜாதகம்னா இன்னா தெரீமா? ஆகாசத்துல கச்சா முச்சானு நட்சத்திரங்க கீதுல்ல. அந்த மே.//

  கன்டினியூஷன் காணொமே தல.. கட்டினப்புரம் எனா ஆகும் ?

  ( மூவர்,தேவர்) அதுக்கான சிம்ப்டம்ஸ் எல்லாம் நல்லாவே தெரியுது.

  அவங்க யாரு? பிரம்மா சிவன் பெருமாள சொல்றிங்களா?

  //..தோல்வி உறுதிங்கறப்போ எதிரிக்கு தோல்விய பரிசா கொடுத்துர்ரது பெட்டரில்லயா?..//
  புரியல… தோல்வி நமக்கு உறுதின்ன…எதிரிக்கு வெற்றி தனகிடைக்கும்.
  நமக்கே தோல்வி கிடைக்கும்போதி எப்படி எதிரிக்கு தோல்வி பரிசளிப்பது”?
  முதலில் யார் எதிரி.. ? காலம் தன்போக்கில் போகுது.. நாம் வாழ்கிறோம் எதிரி எங்கே?

   S Murugesan said:
   March 22, 2011 at 7:31 am

   //கன்டினியூஷன் காணொமே தல.. கட்டினப்புரம் எனா ஆகும் ?//
   மேட்டர் ரெம்ப பர்சனலா போகும்னு விட்டிருப்பன். ஃபில் அப் தி ப்ளாங்க்ஸ்.. பாஸ் !

   இவன் அவளை வேலைக்காரியா நடத்தப்பார்ப்பான். அவளுது வேலைக்காரி ஜாதகம் இல்லேனு வைங்க. போடாங்கோன்னுட்டு போயிருவா. அய்யா பொஞ்சாதி இல்லாத சோகத்துல வேலைக்காரிய கரெக்ட் பண்ணிருவாரு.

   //( மூவர்,தேவர்) அதுக்கான சிம்ப்டம்ஸ் எல்லாம் நல்லாவே தெரியுது.//

   அவங்க யாரு? பிரம்மா சிவன் பெருமாள சொல்றிங்களா? அந்த நேரம் அப்படி நினைச்சுத்தேன் எழுதினேன்.

   //..தோல்வி உறுதிங்கறப்போ எதிரிக்கு தோல்விய பரிசா கொடுத்துர்ரது பெட்டரில்லயா?..//
   புரியல… தோல்வி நமக்கு உறுதின்ன…எதிரிக்கு வெற்றி தனகிடைக்கும்.
   நமக்கே தோல்வி கிடைக்கும்போதி எப்படி எதிரிக்கு தோல்வி பரிசளிப்பது”?//

   சாரி ..தோல்வியங்கறதுக்கு பதில் வெற்றியனு திருத்தி படிங்க

   //முதலில் யார் எதிரி.. ? காலம் தன்போக்கில் போகுது.. நாம் வாழ்கிறோம் எதிரி எங்கே?//

   பிரபஞ்ச மயக்கத்துலருந்து நம்மை தெளிவிச்சு நம் பிறப்பின் நோக்கத்தை நொக்கி துரத்தறவன் லோகாயதப்படி எதிரி. ஆன்மீக ரீதியில ரோசிச்சா அவன் தான் நண்பேண்.

  rajesh said:
  March 22, 2011 at 6:46 am

  அண்ணா. நம்ம பிரதமர் ஜாதகத்தை கொஞ்சம் கையில் எடுங்களேன் பாடாத பாடு படுகிறர் மனுசன். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்

   S Murugesan said:
   March 22, 2011 at 7:25 am

   ராஜேஷ்,
   பிரதமரோட ஜாதகத்தை எடுக்கிறதை விட சோனியா ஜாதகத்தை எடுக்கிறதுதான் அறிவுடைமை. அவர் பொம்மை (எஸ்.ஆர் பொம்மையில்லே).ஆட்டுவிக்கிறது அம்மாதானே. அம்மா ஜாதகத்தை ஏற்கெனவே தீர்த்தாச்சு. விட்டுத்தள்ளுங்க.

   நமக்கு நான் உத்தமன்னு கமால் காட்டிக்கிட்டு நாட்ல நடக்கிற அநியாயத்தை எல்லாம் கண்டுக்காம இருந்த/இருக்கிற மன்மோகன்,கலாம் மாதிரி ஆட்களை நினைச்சாலே ஞ ஞமங்கும்.

  vinoth said:
  March 22, 2011 at 8:00 am

  மெயில் கிடைச்சதா தல…
  தமிழ் டைப் பத்தி அனுப்பினேன்..பிளாகில் போட…

   S Murugesan said:
   March 22, 2011 at 10:53 am

   வினோத்,
   இப்பத்தான் ஆன்லைன் வந்தேன். போட்டுருவம்

  sugumarje said:
  March 22, 2011 at 12:30 pm

  கலக்குங்க 🙂 அந்தா இந்தான்னு 5 லட்சத்தில் வந்திட்டீங்க:) அட. அலெக்‌ஷா ரேட்டிங்…
  //இவன் அவளை வேலைக்காரியா நடத்தப்பார்ப்பான். அவளுது வேலைக்காரி ஜாதகம் இல்லேனு வைங்க. போடாங்கோன்னுட்டு போயிருவா. அய்யா பொஞ்சாதி இல்லாத சோகத்துல வேலைக்காரிய கரெக்ட் பண்ணிருவாரு.//
  ஆமா… இருப்பதை கடைபிடிக்கலைனா, கடைபிடிக்க வைத்துவிடுவார்கள்… எல்லா பசங்களும் தப்பிக்கவே பார்த்தா முடியுமா… அட அடங்குங்கப்பா 🙂
  இல்லனா. புரிஞ்சுக்கவாவது முயற்சி செய்யனும்…அதும் இல்ல… இன்னமும் சய்ன்ஸ் படி உண்மையான்னு கேக்குறாங்க அய்யா…
  நம்ம ஊர்ல எப்பப்பா சயன்ஸ் வந்திச்சு? எப்பப்பா சோதிடம் வந்திச்சு?
  அய்யோடா… ஒரு பதிவே போட்டுருவேன் போல இருக்கே? எஸ்கேப் 🙂

   S Murugesan said:
   March 22, 2011 at 2:30 pm

   வாங்க சுகுமார்ஜீ,
   நம்ம லோக்கல் நியூஸ் பேப்பரோட சிறப்பிதழ் வேலை நடந்திட்டிருக்கு. அதான் இந்த சுருக்கமான மறுமொழி. பதிவு என்ன ..ஜுஜுபி உங்க ரேஞ்சுக்கு தொடர்பதிவே போடலாம்ல

  sugumarje said:
  March 22, 2011 at 1:33 pm

  //என்னையே எடுத்துக்கங்க //
  ஆமா… எத்தனை தடவை எடுத்துக்கிறது? 🙂

  sugumarje said:
  March 22, 2011 at 1:37 pm

  //தோல்வி உறுதிங்கறப்போ எதிரிக்கு தோல்விய பரிசா கொடுத்துர்ரது பெட்டரில்லயா?//
  இது சூப்பரு 🙂 நெஞ்ச நிமிர்த்திக்கலாம்ல 🙂

  சாமி யார்? said:
  March 22, 2011 at 2:35 pm

  வணக்கம் பிரபல ஜோதிடர் அவர்களே,
  நான் இதற்கு முன்னர் ஒரு வருமானவரி மற்றும் தணிக்கை பற்றி ஒரு ப்ளாக் எழுதினேன். அந்த ப்ளாக்கில் ஒரு கொசு கூட பேருக்கு வந்து உட்காரவில்லை. ஆனால் தங்களது பதிவுகளை ஆர்வத்துடன் படித்து படித்து படித்து மூளை குழம்பியது போல் மற்றவர்களும் அப்படி ஆகவேண்டும் என்ற விபரீத ஆசையில் தங்களது பதிவுகளை சுட்டு ஒரு ப்ளாக் எழுதினேன். இப்ப எனது இன்பாக்ஸ் நிரம்பி வழிகிறது. ஆனால் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல என்னிடம் சரக்கு இல்லை என்பது வேறு விஷயம். இருந்தாலும் தங்கள் வெப்சைட்டுக்குள் நுழையும் நல்ல உள்ளங்களின் கால்தடங்கள் என்னுடைய தலையில் பட்டு தூய்மையுடன் தங்கள் தளத்திற்குள் வர ஆசைப்பட்டேன். இப்ப நெறைய பேரு என்னோட வெப்சைட்டுக்கு வந்து போறாங்க. இது மற்றவர்களை பொறுத்தவரையில் அல்ப மேட்டராக இருக்கலாம். ஆனால் இந்த பாமரனுக்கு பெரிய சந்தோசம். இதற்காக தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தளத்தில் http://www.ilakku.in/index.php?option=com_content&view=article&id=586:2011-03-22-01-23-02&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2#comments என்னுடைய பதினாறாவது கமெண்டை பார்க்கவும். நன்றி.

   S Murugesan said:
   March 22, 2011 at 6:46 pm

   சாமியார்,
   சின்ன விஷயம் இது. ஒரு வகையில விஷயமே கிடையாது. உ.வ படாதிங்க. நாமெல்லாருமே பிச்சைக்காரர்கள். யாரோ தருகிறார்கள். பலர் அவற்றை தமக்கென பதுக்கிக்கொள்ள பார்த்து ஏமாறுகிறார்கள். “சக்தி”எங்கருந்து வருதுனு தெரிஞ்சவன் அதை இழக்கறதே இல்லை (ஓஷோ)

  syed said:
  March 22, 2011 at 7:55 pm

  தானா நடக்கறது நல்லதோ ,கெட்டதோ லாங் ரன்ல நமக்கு நல்லதாவே முடியும். நாமா அலைஞ்சு பறை சாத்தி நடக்க வைக்கிறோமே அதான் ஆப்பா முடியுது.

  ithu enakke sollappatta thathuvam pol irukkiradu

  manadukku migavum aaruthal alikkum veda vaakkaaga ninaikkiren

  thank u verymuch

   S Murugesan said:
   March 22, 2011 at 8:23 pm

   சையத் சார்,
   இங்கன மட்டும் என்ன வாழுதாம் . வீட்டுக்கு வீடு வாசப்படி

  syed said:
  March 22, 2011 at 7:56 pm

  super words

  Name: P. Abirami said:
  April 10, 2011 at 6:53 pm

  Message: I see in your website. It is very good. So please tell me my daughter jathagam deatails. I want to numalogy and namology in my daughter jathagam. In bleow details is my daughter Bio Data for jathagam purpose: Name: G.P. SAHANA. Date of Birth: 09-09-1998. Place: Erode.Time: 03.18 a.m. So please send details in my email ID: kpmabirami@gmail.com. I want to namology, numerology and future details in my daughter jathagam analysis.

  P.A.Kumar said:
  April 11, 2011 at 1:51 am

  எல்லாம் சரிதான்.

  அடிக்கடி விட்டேத்தியா பேசுறது எதுக்கு?

  விரக்தி எதுக்கு?

  ஈகோ போனும்னா என்ன பண்ணலாம், தல.

   S Murugesan said:
   April 11, 2011 at 6:44 am

   P.A.Kumar,
   விட்டேத்தியா பேசறாய்ங்கன்னா லக்னாதிபதி 12 அ 8 ல இருக்காருனு கெஸ் பண்ணலாம். ஒரு வேளை கோசாரத்துல இது நடந்தாலும் இப்படி பேசலாம். கடகமா இருந்தா சந்திராஷ்டமத்துல இப்படி பேசலாம்.

   விரக்தி லக்னாதிபதி எட்டுல இருந்தா வரும். கேது ஜன்மத்துல/எட்டுல இருந்தாலும் வரும். ஈகோ போகனும்னா ” நித்தம் நித்தம் நெல்லுச்சோறு மாதிரி நித்தம் செருப்படி படனும்” அதை வாழ் நாள்ள மறக்கக்கூடாது.

   ( நான் பட்டிருக்கேன் – என்னடான்னா அப்பப்ப மறந்து போயிருது)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s